• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த நான்காம் அனுபவம் - 10

சாலைகள் அனைத்திலும் பனியை விலக்கும்
வேலைகள் உடனே நடக்கும் இயந்திரத்தால்!

சாலை வரை கார் ஷெட்டிலிருந்து செல்லுகிற
பாதைகளை அவரவர் சுத்தமாக்க வேண்டும்!

அதீதமான பனிப் பொழிவு அடிக்கடி வருவதால்
நவீன Snow blower ஒன்று மகனிடமும் உண்டு!

எனக்குள் பெருகிய Snowman செய்திடும் ஆசை
தனக்கும் இருப்பதாகச் சின்னச் சிட்டு சொல்ல,

இருவரும் தயாரானோம் ஆசை நிறைவேற்ற!
இருவரும் விரைந்தோம் வீட்டு முற்றத்திற்கு!

பெரிய கோளம் ஒன்று; அதன் மீது அமர்த்திடச்
சிறிய கோளம் ஒன்று! இவை முடிந்ததும், சிறு

காரட் ஒன்று மாறியது மூக்காக! இரு கருப்புக்
காயின்கள் இருக்கும் கண்கள் வைக்க - அவை

கிடைக்கவில்லை எனச் சிணுங்கினாள் சிட்டு!
கிடைக்காவிட்டால் உள்ளது என் cooling glass!

எந்தக் கண்ணாடி அணிந்தாலும் அதன் மேலே
அந்தக் குளிர்க் கண்ணாடியைப் பொறுத்தலாம்!

பனி மனிதனை மிக ஸ்டைல் மனிதனாக்கிவிட
இனி cooling glass உதவுமென நான் உரைத்தேன்!

தொடரும் ............. :smow:

 
Snow Woman!! :D

attachment.php
 

Attachments

  • snow woman.JPG
    snow woman.JPG
    105.2 KB · Views: 173
Wednesday (15th February 2017) New York Times crossword Puzzle has a snowman's theme (One of the constructors is Jesse Eisenberg ("The Social Network," "Rio," "Now You See Me," "Batman vs. Superman: Dawn of Justice") . His original aim was to create a vegan diinner option - that got morphed into Snowman)

17 Across Clue: “We used some food to make a snowman. Under his arms we put ___” (Answer: CHERRY PITS)

27 Across Clue: “Then we gave him ___” (Answer: BUTTER FINGERS)

44 Across Clue : “On top we put a ___” (Answer: HEAD OF LETTUCE)

58 Across Clue: “Finally, we stuck in two ___. Yum!” (Answer: EARS OF CORN)
 
Thanks for your reply Prof. Sir. :)

The deck was so cold that even with thermal wear I could not sit for a longer time to decorate the snowman(?)!

So, the little darling gave me a woolen cap to finish the job and it appeared like a snow woman wearing a skirt! :)
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 11

விறைக்க வைத்தது பனியின் தாக்கம்! நடுங்கி
விறைக்க ஆரம்பித்தேன் நான்! உடனே சிட்டு,

தொப்பியை ஒன்றை என்னிடம் தந்து, அந்தத்
தொப்பியை பொம்மைக்கு அணிவித்த பின்பு,

வந்த வரை போதுமென எனை அழைத்ததால்,
அந்தப் பனிப் பொம்மை ஆயிற்று பெண்பால்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த பொழுதும்,
வந்து பொழிந்தது பனி, அக்டோபர் மாதத்தில்!

நமக்குப் பிடித்தவை எப்போது நிகழ்ந்தாலும்,
நமக்குள் ஆனந்தம் எழுவது இயற்கைதானே!

சென்ற முறை பனி மழையில் நனைந்தேன்;
இந்த முறை பொம்மை செய்து மகிழ்ந்தேன்!

Gum boots அணிந்து, துள்ளிக் குதித்துச் சிட்டு,
ஜம்மென வீட்டைச் சுற்றினாள், தந்தையோடு!

அந்தக் காலடிகள் என் காமராவில் பதிந்தன.
சொந்தங்களுடன் அதைப் பகிர விழைந்தேன்!

வசந்த காலம் வந்தால் சிறு பயணம் செய்ய
உகந்த நேரம் வந்துவிடும். கனெக்டிக்கட்டில்

உள்ள என்னவரின் மருமகன் அழைத்தான்;
உள்ளம் மகிழ அந்த நாளை எதிர்பார்த்தேன்!

தொடரும் ............ :)

 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 12

ஏப்ரல் மாதக் கடைசியில் குளிர் குறைந்துவிடும்;
அப்போது முதல் பயணம் செய்திட விழைந்தோம்!

நான்கு நாட்கள் மருமகன் குடும்பத்துடன் இருக்க,
நாங்கள் விரும்பினோம்; மகனும் சரியென்றான்!

பயணம் பேருந்திலும் நன்றாகப் பழகிவிட்டதால்,
பயணச் சீட்டுகள் Peter Pan - ல் பதிவாகிவிட்டன.

நிறுத்தங்கள் இல்லாமல் செல்லும் பயணமெனில்,
நிறைவடையும் பயணம் மூன்று மணி நேரத்தில்!

பெட்டி பெரியதாகும் புடவைகள் அணிவதானால்;
குட்டி பாக்கிங் போதும் சுடிதார் அணிவதானால்.

எங்கள் உடைகள் நிறைந்தன இரு சிறு பைகளில்;
எங்களை மகன் ரயில் நிலையத்தில் சேர்த்தான்!

அங்கிருந்து ஒன்பது நிறுத்தங்கள் தாண்டினால்
அடைவோம் மிகப் பெரிய பேருந்து நிலையத்தை.

இந்த முறை தடங்கல் இல்லாது, காபிக் கடையில்
இரண்டு லா டே வாங்கி வந்தேன் வெற்றியோடு!

தலை முடி கலையாமல், குளு குளுப் பேருந்தில்,
அடைந்தோம் Hartford - ஐ மூன்று மணி நேரத்தில்.

தொடரும்............... :car:

 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 13

இன்முகத்துடன் வரவேற்றான் மருமகன்; அவன்
இனிய இல்லம் ஒரு முதல் மாடி அபார்ட்மென்ட்.

அவனுடன் அலுவலகத்தில் பணி புரியும் பலரும்
அவன் இல்லத்தின் அருகருகே வசிப்பதால், ஒரு

நல்ல பெரிய குடும்பமாகவே அவர்கள் இணைந்து,
நல்ல இனிய வாழ்க்கை வாழ்வது மிகவும் உயர்வு!

வாயிற் கதவில் ஒரு வரவேற்புக் கார்டு இருக்க,
ஆவல் பொங்க அதை நான் விரைந்து எடுத்தேன்!

ராஜி மன்னி என்பதே என் பெயர், குட்டிகளுக்கும்!
'Raji Manni is Awesome! Mama is great! We welcome U!!'

குட்டிப் பெண் எழுதியுள்ளாள், வண்ண மலர்கள்
குவிந்த படத்தை வரைந்து, அவற்றின் நடுவில்!

ஐந்து ஆண்டுகளாகிவிட்டன அவளைப் பார்த்து;
ஐந்து அடி உயரமாகிவிட்டாள், ஒன்பது வயதில்!

நாங்கள் வியக்கும் வண்ணம் தமிழ் பேசினாள்;
நாங்கள் மாலையில் அறிந்தோம் அந்த ரகசியம்!

'டென்ட் கொட்டா' என ஒரு வலைத்தளம். அதில்
அன்லிமிடட் ஆகக் காணலாம் தமிழ்ப் படங்கள்!

மாதம் எட்டு டாலர் செலுத்தினால் போதுமாம்!
மாதம் முழுதும் திரைப் படங்களை ரசிக்கலாம்!

தொடரும் ............. :)
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 14

அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலே வருமாம்
அடிக்கடி ஒரு கரடி; நான் பயத்திலே வியர்த்தேன்!

அது ஒன்றும் செய்யாது; சில பழங்களைத் தின்று
மெதுவாகப் போய்விடும் எனச் சொல்லியும், என்

பயம் குறையவில்லை! பெரிய ஜன்னல் வழியாக,
பயத்தை மறைத்து, கரடி வரவை எதிர்பார்த்தேன்!

பின்னால் உள்ள டெக்கில் பல ரொட்டித் துண்டுகள்.
உண்ண வருமாம் பல குருவிகளும் அணில்களும்!

ஒரு குருவி மிகப் பொல்லாதது! அணில்களையே
ஒரு தயக்கமும் இல்லாமல் விரட்டியடித்தது அது!

சிங்காரச் சென்னையில்தான் குருவிகள் இல்லை!
இங்கு வந்து அதன் சேட்டைகளை மிக ரசித்தேன்!

மருமகனின் மனைவி இந் நாட்டிற்கு வந்த பின்னும்,
ஒரு பழங்கால இல்லத்தரசியாகவே இருக்கின்றாள்!

'வாங்கோ, போங்கோ' எனக் கணவனிடம் பேசுவாள்;
வாங்குவதில்லை அவனிடம் எந்த ஒரு வேலையும்!

சுவையான உணவை அவள் எமக்குப் பரிமாறினாள்.
சுவையான பல விஷயங்களும் பேசினோம். இரவில்

டென்ட் கொட்டாவில் ஒரு திரைப்படமும் பார்த்து,
சென்றோம் நித்திரா தேவியின் அரவணைப்புக்கு!

தொடரும் ...................

 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 15

அடுத்த நாள் என்னவரின் நண்பரின் மகள், எமை
அழைத்தாள் மாலை சிற்றுண்டி வேளையில் வர.

பொதுவாக சனிக் கிழமை பணி புரியச் செல்லாது
மெதுவாகத் துயிலெழுவது பலருக்கு வழக்கமாம்!

ஐக்கியா (ikea) வழியில் இருப்பதால், நான் சில பல
ஐடியாக்களைச் 'சுட' அங்கும் செல்ல விழைந்தேன்!

காலை உணவை முடித்ததும், நாங்கள் ஆவலுடன்
காரில் ஏற, அது விரைந்தது ஐக்கியாவை நோக்கி!

மிகவும் பெரிய கடை! முழுவதும் சுற்றிப் பார்க்கப்
மிகவும் நேரம் ஆகிவிடும். கடையின் அமைப்பை

எளிதில் தெரிந்துகொள்ள வரைபடம் இருந்ததால்
எமக்குத் தேவையானவை மட்டுமே பார்த்தோம்!

தோசை ரோஸ்ட்டை விரும்பாதவர் யார்? எனவே
தோசைக்கல் இரண்டு பெரியதாக வாங்கினேன்!

பல வண்ணப் பிளாஸ்டிக் டம்ளர்கள், ஆப்பிள் பழம்
எளிதாக நறுக்கும் வட்டக் கத்திகள், காய்கறிகளை

அழகாக வெட்டக் கூர்மையான கத்திகள், கிண்ண
மெழுகுவத்திகள், பாட்டரி மெழுகுவத்திகள் என்று

எனக்கும், பரிசளிக்கவும் வாங்கி வெளியிலே வர,
என் கண்களில் பட்டது வித்தியாசமான ஐஸ்க்ரீம்!

தொடரும் ............ :car:
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 16

பெரிய அளவில் பல விளம்பரங்களுடன், அங்கு
தெரிந்தது வெனில்லா ஃப்ரோயோ! இது என்ன?

யோகர்ட்டை வெனில்லா மணம் சேர்த்து, அதை
ஐஸ்க்ரீம் மெஷினில் இட்டுப் பதமாக ஆனதும்,

முறுக்குப் போல் சுற்றிக் கோனில் நிறைத்த பின்
தருகிறார், அனைவரும் சுவைத்து மகிழ்வதற்கு!

'தயிர் ஐஸ்க்ரீம்' என எண்ணி நான் சிரித்தாலும்,
தந்தனர் எனக்கும், பெரிய கோனில் ஃப்ரோயோ!

உன்னதமான சுவை; அதற்கு அடிமையானேன்!
இன்னும் சில முறைகள் சுவைத்திட வேண்டும்!

மதிய உணவுக்காகக் கலந்த சாதங்கள் செய்து,
நிறைய பாக்கெட்டுகள் எடுத்து வந்திருந்தோம்.

காரில் அமர்ந்து உண்டோம்; நண்பர் குடும்பத்தை
நேரில் காணச் செல்ல, இன்னும் நேரம் உள்ளதே!

டாலர் ஷாப் எப்போதுமே என்னைக் கவர்ந்திடும்;
டாலர் ஒன்றே, சின்னச் சின்னப் பொருட்களுக்கு!

கூகிள் இருக்க என்ன கவலை? ஐ ஃபோன் எடுத்து
கூகிள் தேடல் செய்ய, மிகவும் அருகிலேயே ஒரு

மிகப் பெரிய டாலர் ஷாப் இருப்பதைக் கண்டதும்,
மிக ஆவலுடன், உடனே செல்லலாமே என்றேன்!

தொடரும் ................ :car:
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 17

குட்டிக் குழந்தைகள் பலரைத் தெரியுமாதலால்,
குட்டிப் பரிசுப் பொருட்களை வாங்கிட ஆர்வம்!

மணி மாலைகள், சின்ன பொம்மைகள், எளிதில்
கணக்குப் போட கால்குலேட்டர்கள், பேனாக்கள்,

மூளைக்கு வேலை தரும் ஜிக்ஸா புதிர்கள், என
மூலை முடுக்கெல்லாம் சுற்றி எடுத்துவந்தேன்!

இனிய அனுபவம்தான் அந்த ஷாப்பிங்! நண்பரின்
இனிய இல்லம் செல்லும் நேரமும் வந்துவிட்டது.

சாலை மேப்பின் உதவியுடன் அங்கு சென்றதும்,
மாலை வணக்கத்துடன் எங்களுக்கு வரவேற்பு.

தம்பதியர் இருவரும் பணிக்குச் செல்லுவதால்,
தான் சமைப்பது இல்லை என்றாள் பெண்மணி!

இல்லத்தரசன் சென்று, தட்டுத் தடுமாறி, எமக்கு
நல்ல தேனீர் தயார் செய்து தர, பற்பல விதமான

முறுக்கு வகைகளையும், இனிப்புக்களையும், பிற
நொறுக்குத் தீனிகளையும் தட்டுகளிலே அடுக்கி,

அன்புடன் அவள் கொண்டு வந்தாள்; இந்த நாட்டில்
இந்த உபசரிப்பின் உபயம் இந்தியன் ஸ்டோர்கள்!

இந்தப் பெண்ணுக்கும், மருமகனின் மனைவிக்கும்
எந்த விதமான ஒற்றுமையும் இல்லவே இல்லை!

தொடரும் .................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 18

நம்ம ஊர்ப் பெண்கள் இந் நாட்டை விரும்புவது
தம்மைக் கட்டுப்படுத்த யாருமே இல்லாததால்!

வேண்டுமென்றால் சமைக்கலாம்; இல்லையேல்
வேண்டியபடி அனைத்து உணவுகளும் ரெடிமேட்!

சென்ற முறை அமெரிக்க விஜயத்தில், எங்களது
சொந்தக்காரரின் மகனைப் பார்க்கச் சென்றோம்.

அயல் நாட்டுப் பெண்ணை மணந்துள்ள அவனது
சமையல் அறை படு சுத்தமாக மிளிரக் காரணம்,

அவள் சமைப்பதே கிடையாது என்று அறிந்தேன்!
அவ
ள் பணிக்குச் செல்லுவதால், இதுவே எளிது!

சப்வே கடைகளில் மிக
க் குறைந்த விலையிலே
சான்ட்விச் வகைகள் பற்பல கிடைக்கு
ம்! மேலும்

டாகோபெல் சங்கிலி உணவு விடுதிகளில், நல்ல
டாப்பான சப்பாத்தி ரோல் போலவே கிடைக்கும்!

சுதந்திர தேவி இருக்கின்ற நாடல்லவா? அதனால்
சுதந்திரத்திற்குப் பஞ்சமே இல்லை பெண்களுக்கு!

மீண்டும் கதைக்கு வருவோம்! மாலை நேரமானது;
'மீண்டும் முடிந்தால் சந்திப்போம்', என்று உரைத்து,

இனிய இல்லம் நோக்கிப் பயணித்தோம். வழியில்,
மனதை மயக்கியது செந்நிறச் சூரிய அஸ்தமனம்!

தொடரும் ....................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 19

மறு நாள் காலை அரட்டைக் கச்சேரி மட்டுமே!
மாலையில் அருகிலிருந்த நீர்த்தேக்கத்தினைச்

சுற்றி நடந்து வந்தோம்; குட்டிப் பெண்ணோ, பல
சுட்டித்தனமான விடுகதைளைச் சொல்லி, எமை

சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தாள். அதன் பின்,
சிங்காரச் சென்னைக் கொசுக்களைவிடப் பெரிய

ரத்தக் காட்டேரிக் கொசுக்கள் எம்மைத் துரத்திட,
ரன்னிங் ரேஸ் போல ஓடி வந்து, காரில் அமர்ந்து,

இனிய இல்லம் நோக்கித் திரும்பினோம். இரவில்
இன்னும் ஒரு டென்ட் கொட்டா திரைப்படம்தான்!

அடுத்த நாளே Boston - க்குத் திரும்பணும்; மகன்
எடுத்து வந்தான் தனது பெரிய மகிழ்வுந்தை. தன்

செல்லப் பெண்ணையும் அழைத்து வந்திட, அவள்
நல்ல தோழி கிடைத்த மகிழ்வினில் திளைத்தாள்!

இரண்டு குட்டிப் பெண்களும் விளையாடி, ஓய்ந்து,
சுருண்டனர் மதியம், ஓய்வினை வேண்டி. மாலை,

சிற்றுண்டி முடித்த பின், பிரியா விடை பெற்றோம்;
சில மணி நேரங்களில் இனிய இல்லம் சேர்ந்தோம்.

நல்ல விடுமுறை அந்தப் பயணத்தில் கிடைத்தது.
நல்ல நினைவுகள் எமது மனங்களை நிறைத்தன!

தொடரும் .........................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 20

திடீரென்று வரும் அனுபவங்கள் சில நாட்களில்
திகில் அனுபவங்களாக மாறினால்தான், வாழ்வு

சுவையோடு இருக்கும்! அதற்காக ஓர் அனுபவம்!
சுவையான சிற்றுண்டியை முடித்த பின், தினசரி

வழக்கமாக, உடன்பிறப்புகளுடன் உரையாடி, என்
பழக்கமான இணையதளத்தில் நுழைந்த சமயம்,

அலாரம் ஒன்று உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்தது!
அலாரம் ஒன்று அலறும் நீராவி பட்டுவிட்டால்!

குளியல் அறை எதிரில் 'அது' இருக்கும்; அதனால்,
குளிக்க மிக அதிக வென்னீரை எடுக்கவே கூடாது!

கொஞ்ச நேரம் exhaust fan ஐப் போடாவிட்டாலும்,
கொஞ்சம் கூடத் தயங்காது அலறித் தள்ளும்! ஒரு

துணியை வேகமாக அதன் அருகில் சுழற்றினால்,
தணியும் அந்தத் தொட்டாச் சிணுங்கியின் சத்தம்!

இது 'அது' அல்ல; ஹாலில் இருந்து வந்தது சத்தம்!
'அது' போல அல்லாது மிக உயரத்தில் அமைந்தது!

பெண்ணரசியின் தோழி பயமே இல்லாதவள் - தன்
பெண்ணை அழைத்துக்கொண்டு அப்போது வந்திட,

'ஏணியில் நான் ஏறி, ஹாலில் உள்ள அலாரத்தை
துணியைச் சுழற்றி நிறுத்துவேன்!' என்றுரைத்தாள்!

தொடரும் ..................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 21

அலாரம் தொடர்ந்து அலற, சின்னக் குட்டி பயந்து
அலறலை ஆரம்பிக்க, என்னவரை வேண்டினேன்

உடனே அவளை வெளியில் தூக்கிச் செல்ல! அவ-
ளுடனே அவள் தமக்கையும் பயத்தில் ஓடினாள்!

நாங்கள் அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கிட,
எங்கள் 'கெராஜி'லிருந்து ஏணியை எடுத்து வந்து,

அந்த 'வீரலட்சுமி', அதில் ஏறிய பின், பெண்ணரசி
தந்த துணியைச் சுழற்ற, ஒன்றுமே நேரவில்லை!

மிகப் பெரிய ஹால்; எனவே சத்தம் எதிரொலிக்க,
மிகக் குழப்பம் ஆகிவிட்டது ஒன்றும் விளங்காது!

மகனுக்குச் சென்றது S O S அழைப்பு! நிமிடங்களில்
அவனும் வந்து சேர, வந்தது நிம்மதிப் பெருமூச்சு!

நொடியில் அறிந்தான் அலாரத்தின் காரணம்; மறு
நொடியில் நின்றது அந்த உச்ச ஸ்தாயி அலறல்!

அலறியது அங்கே இருந்த Carbon Monoxide Detector!
அவனே பொருத்தியதால் நொடியிலேஅறிந்தான்!

ஒரு மேஜையில் பின் அது ஒளிந்து இருந்ததாலும்,
பெரும் எதிரொலி அலைகளை அது பரப்பியதாலும்,

பெண்கள் அனைவரும் குழம்பிப் போய்விட்டோம்;
இன்று வரை புரியவில்லை அது ஏன் அலறியதென!

தொடரும் .......................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 21

அலாரம் தொடர்ந்து அலற, சின்னக் குட்டி பயந்து
அலறலை ஆரம்பிக்க, என்னவரை வேண்டினேன்

உடனே அவளை வெளியில் தூக்கிச் செல்ல! அவ-
ளுடனே அவள் தமக்கையும் பயத்தில் ஓடினாள்!

நாங்கள் அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கிட,
எங்கள் 'கெராஜி'லிருந்து ஏணியை எடுத்து வந்து,

அந்த 'வீரலட்சுமி', அதில் ஏறிய பின், பெண்ணரசி
தந்த துணியைச் சுழற்ற, ஒன்றுமே நேரவில்லை!

மிகப் பெரிய ஹால்; எனவே சத்தம் எதிரொலிக்க,
மிகக் குழப்பம் ஆகிவிட்டது ஒன்றும் விளங்காது!

மகனுக்குச் சென்றது S O S அழைப்பு! நிமிடங்களில்
அவனும் வந்து சேர, வந்தது நிம்மதிப் பெருமூச்சு!

நொடியில் அறிந்தான் அலாரத்தின் காரணம்; மறு
நொடியில் நின்றது அந்த உச்ச ஸ்தாயி அலறல்!

அலறியது அங்கே இருந்த Carbon Monoxide Detector!
அவனே பொருத்தியதால் நொடியிலேஅறிந்தான்!

ஒரு மேஜையில் பின் அது ஒளிந்து இருந்ததாலும்,
பெரும் எதிரொலி அலைகளை அது பரப்பியதாலும்,

பெண்கள் அனைவரும் குழம்பிப் போய்விட்டோம்;
இன்று வரை புரியவில்லை அது ஏன் அலறியதென!

தொடரும் .......................

இன்று வரை புரியவில்லை அது ஏன் அலறியதென!


hi

this carbon monoxide detector in our house also....if we fry/any other carbon thing happened ..it makes sound....i permenently

removed SMOKE DETECTOR/CARBON MONOXIDE DETECTOR IN OUR KITCHEN....i kept all devices inactivated...
 
Dear TBS Sir,

There is a fireplace in the huge hall and my son fitted a carbon monoxide detector (without telling us!) just for safety,

though the fireplace is not used. The central heating system keeps the whole house warm. No food was burnt in kitchen.

Anyway, after this incident, he felt that the alarm gets triggered without any reason and deactivated it! :cool:

We had to plug our ears with cotton wool, till the shrill sound vanished. :)
 

Latest ads

Back
Top