பயணக் க(வி)தைகள்...

நிலவைப் போலக் குளிர்க் கிரணங்களை வீசியது ஆதவன்

IMG_4949.JPG
 
புகைப்படங்களுக்குப் பாராட்டுத் தரும் நண்பர் ஷண்முகம் சாருக்கு நன்றி! :)
 
சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 18

மறு நாள் முழுதும் நீண்ட பயணம் செய்து, தலை நகரைச்
சேர வேண்டும்; Pinjore Garden மட்டும் பார்த்து மகிழலாம்!

எட்டு மணி ஆகுமுன் சிம்லாவைக் கடக்க வேண்டுமென
கட்டாய உத்தரவாம் வழிகாட்டிக்கு! எங்களிடம் சொல்லி,

ஏழு மணிக்கே ஏற்பாடு செய்தார் காலைச் சிற்றுண்டிக்கு.
எழுந்து வரும் மேகங்கள் மனதை மயக்கியதால், உடனே

சிரமம் பாராது படிகளில் இறங்கிச் சென்று, காமராவுடன்
சிறந்த படங்களை எடுக்க, மீண்டும் படிகள் ஏறி வந்தேன்!

இரண்டு மாடிப்படிகள் இறங்கி ஏறுவது கடினம்; ஆனாலும்
திரண்டு வந்த வெண் மேகக் கூட்டங்கள் செய்ய வைத்தன!

சிற்றுண்டிக்குப் பின், சிம்லாவுக்கு எங்களது பிரியா விடை.
சுற்றி வளையும் மலைப் பாதைப் பயணமும் தொடர்ந்தது!

பார்வையை மறைத்த பனிப் படலம் நிறைந்து இருந்தும்,
சோர்வை மறந்து வேகப் பயணம் செய்தார் எம் ஓட்டுனர்!

நிறைய இடங்களில் அழகிய மலைக் காட்சிகளினிடையே
நிறைந்து கிடந்த குப்பைக் கழிவுகள் மனத்தை வருத்தின!

ஜனப் பெருக்கம் அதிகம் இருந்தால், இப்படித்தான பற்பல
மனம் வருந்தும் காட்சிகளையும் தப்பாது காண்போமோ?

வழியில் ஓரிடத்தில் பேருந்தை நிறுத்திய பின்பு, எங்கள்
வழிகாட்டிக்குத் தெரிந்த உணவகத்தில் சிறந்த சூடான டீ!

சிறிதாக இருந்தாலும் ஓர் ஒதுங்குமிடம் அங்கு இருந்திட,
பெரிய நிம்மதி வந்தது பெண் பயணிகள் எல்லோருக்கும்!

Pinjore Garden பார்த்து மகிழும் ஆவலுடன் பயணம் செய்து,
Pinjore Garden-ஐச் சேர, ஓர் அழகிய ஒட்டகம் வரவேற்றது!

:welcome:

தொடரும்.......................

எழுந்து வரும் மேகங்கள் மனதை மயக்கியதால், உடனே

சிரமம் பாராது படிகளில் இறங்கிச் சென்று, காமராவுடன்

சிறந்த படங்களை எடுக்க, மீண்டும் படிகள் ஏறி வந்தேன்!

IMG_4959.JPG
 
பார்வையை மறைத்த பனிப் படலம் நிறைந்து இருந்தும்,

சோர்வை மறந்து வேகப் பயணம் செய்தார் எம் ஓட்டுனர்!

IMG_4979.JPG
 
நிறைய இடங்களில் அழகிய மலைக் காட்சிகளினிடையே

நிறைந்து கிடந்த குப்பைக் கழிவுகள் மனத்தை வருத்தின!

IMG_4994.JPG
 
சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 19

தோட்டத்தை அடையுமுன் வழியில் கண்கள் ஆவலுடன்
நோட்டமிட்ட சில காட்சிகளின் விவரங்கள் தருகின்றேன்!

மழை விட்டு விட்டுப் பெய்ந்தபடி இருந்ததால், பாதையை
மழை நீர் நனைத்து வழுக்கிவிடுகின்ற நிலையைத் தந்தன.

பள்ளிக்குத் தயாரான குழந்தைகள், ஸ்வெட்டர் அணிந்தும்,
அள்ளிச் செல்லுகிற புத்தக மூட்டையுடன் குடை பிடித்தும்,

தமது பள்ளிப் பேருந்து வருமா என்ற ஆவலுடன் நோக்கித்
தமது கண்களை அலைபாய விட்டு, அங்கங்கே நின்றனர்.

உடைந்து போன இரு சீருந்துகளை ஓரங்கட்டி வைத்திருக்க,
உடைந்து போனது மனம், எப்படி விபத்து இருந்ததோ என!

வேலி இல்லாத வளைவுப் பாதைகளில் ஆபத்து இருப்பதும்,
நாளில் சில விபத்துக்கள் நடப்பதும் சகஜம்தான் அல்லவா?

மலையை ஒட்டியது போன்று அமைந்த சில வீடுகள் அங்கு;
நிலையாக நிற்குமா அவை என்று வியக்கவே வைத்தன!

தம் சீருந்தை மொட்டை மாடியில் நிறுத்தி, படிகள் வழியே
தம் வீட்டின் அறைகளைச் சென்று அடைகின்றார் மக்கள்!

பாத்திகள் கட்டிப் பயிர் செய்கிற அழகைக் கண்டால், அந்த
நேர்த்தி நம்மை வியக்க வைப்பதும் நிஜமே! பச்சையில்

எத்தனை வித வண்ணங்கள் என்று நம் மனதும் மயங்கும்;
அத்தனை காட்சிகளும் மீண்டும் மீண்டும் கண்களில் படும்.

வீடுகள் கீழே சிதறியது போல பரவிக் கிடக்கும்! மலையில்
ரோடுகள் புழுக்கள் போல வளைந்து, நெளிந்தும் செல்லும்!

வண்ணம் நீலமாகக் காணும் மலைகள், அருகே போனதும்,
வண்ணம் பச்சையாய் மாறுகின்ற விந்தையும் மயக்கும்!

தொடரும் ...............

மழை விட்டு விட்டுப் பெய்ந்தபடி இருந்ததால், பாதையை
மழை நீர் நனைத்து வழுக்கிவிடுகின்ற நிலையைத் தந்தன.

IMG_4984.JPG
 
தமது பள்ளிப் பேருந்து வருமா என்ற ஆவலுடன் நோக்கித்

தமது கண்களை அலைபாய விட்டு, அங்கங்கே நின்றனர்.

IMG_4970.JPG
 
உடைந்து போன இரு சீருந்துகளை ஓரங்கட்டி வைத்திருக்க,

உடைந்து போனது மனம், எப்படி விபத்து இருந்ததோ என!

IMG_4989.JPG

Our bus was speeding when I clicked this scene. Sorry for the blurred image! :photo:
 
மலையை ஒட்டியது போன்று அமைந்த சில வீடுகள் அங்கு;

நிலையாக நிற்குமா அவை என்று வியக்கவே வைத்தன!

IMG_5005.JPG
 
பாத்திகள் கட்டிப் பயிர் செய்கிற அழகைக் கண்டால், அந்த

நேர்த்தி நம்மை வியக்க வைப்பதும் நிஜமே!
பச்சையில்

எத்தனை வித வண்ணங்கள் என்று நம் மனதும் மயங்கும்;
அத்தனை காட்சிகளும் மீண்டும் மீண்டும் கண்களில் படும்.

IMG_5030.JPG

மலையில் ரோடுகள் புழுக்கள் போல வளைந்து, நெளிந்தும் செல்லும்!

IMG_5061.JPG
 
அருகே போனதும், வண்ணம் பச்சையாய் மாறுகின்ற விந்தையும் மயக்கும்!

IMG_5063.JPG
 
Dear Tmt RR

I can't find your reply to what Moorthy Sir referred to as Poetic Puzzle !!!

In that thread I am able to see only Moorthy Sir's and Tmt VR's reverts !!!

Now, it really is a PUZZLE !!!

Yay Yem
 
Back
Top