தூக்குத்தண்டனை: 5 மீனவர்களையும் இந்திய ச&#3007

Status
Not open for further replies.
தூக்குத்தண்டனை: 5 மீனவர்களையும் இந்திய ச&#3007

தூக்குத்தண்டனை: 5 மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை சம்மதம்!'

5%20fisherman%20200%282%29.jpg




தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக பா.ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொடர்புகொண்டு பேசியதை தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

" நமோ ( மோடி ) ராஜபக்சேவுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை இந்திய சிறைக்கு மாற்றவும், அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவும் ராஜபக்சே சம்மதித்தார்" என அதில் சுவாமி கூறியுள்ளார்.

இதனிடையே ராஜபக்சேவுடன் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதை உறுதிப்படுத்தி உள்ள இலங்கை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நியோமல் பெரேரா, பேச்சுவார்த்தையின் விவரம் தமக்கு தெரியவில்லை என்றும், அதே சமயம் இந்தியா - இலங்கை இடையேயான நல்லுறவு நிலவுவதாகவும், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அக்கறையும், கவலையும் கொண்டுள்ளதாகவும், அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்பதில் இலங்கை நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் இந்திய ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இதனிடையே போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

'??????????????: 5 ????????????? ?????? ???????? ????? ?????? ???????!'
 
Status
Not open for further replies.
Back
Top