கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
நாராயணீயம் தசகம் 51.

அகாசுரவத வர்ணனம்.

images


ப்ரமாத3த:ப்ரவிசதி (5)

ஹே பிரபுவே! கோப பாலர்களும், கன்றுகளும், மதியீனத்தால் பாம்பின் வயிற்றில் கடந்து செல்லும் போதே
சரீரம் வெந்து போனார்கள். இதை உணர்ந்த தாங்களும் உடனேயே தோழர்களைக் காப்பாற்ற எண்ணி பாம்பின் வாயில் நுழைந்து உட்சென்றீர்களல்லவா?
 
images

Courtesy iskconrajahmundry.com

க3லோத3ரே விபுலித(6)

கழுத்தின் நடுவே நின்று தாங்கள் தங்கள் சரீரத்தை வளர்த்தீர்கள். அதனால் மூச்சுத் திணறிய அகாசுர மலைப் பாம்பு வலியினால் புரளும் போதே, அதன் கழுதைப் பிளந்து கொண்டு நண்பர்களுடனும், கன்றுகளுடனும் தாங்கள்
வெளிப்பட்டீர்கள் அல்லவா?
 
நாராயணீயம் தசகம் 51.

அகாசுரவத வர்ணனம்.


images

க்ஷணம் தி3வி த்வது3பகமார்த்தம்(7)

அந்த அசுரனிடமிருந்து வெளிப்பட்ட பெரிய ஜோதியானது தாங்கள் வெளிவருவதற்காக ஆகாயத்தில் சிறிது நேரம் காத்து நின்றது. தாங்கள் வெளிப்பட்டதும் தங்களிடம் விரைந்து புகுந்து லயித்தது அல்லவா? அதைக் கண்ட தேவர்கள் ஆடினார், பாடினர், கொண்டாடினர்.
 
ஸவிச்'மையை:கமலப4வாதி3பி: (8)


Krishna_repas-d85ce.jpg


ஆச்சரியம் அடைந்த பிரமன் முதலான தேவர்கள் பின் தொடரவும், தங்கள் நண்பர்களுடன் வேறு இடத்துக்குச் சென்று, உச்சிப் பொழுதில் வன போஜனம் செய்தீர்கள் அல்லவா?
 
கண்ணனின் கதை இது.

அம்மணி
தங்கள் நற்பணி தொடர கண்ணனே அருட்புரிவான் ஐயமில்லை
நலம் கோரும்
அன்பன்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு.
 
கண்ணன் அருள் தான் வெளியேறிய என்னை
மீண்டும் மீண்டும் உள்ளே இழுத்தது போலும்.
நல்லவற்றை மட்டுமே இப்போது எழுதுவதால்
நல்லவர்கள் சகவாசம் மட்டும் தொடருகின்றது.
நன்றியுடனும், வணக்கத்துடனும்,
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.
:pray2:
 
நாராயணீயம் தசகம் 51.

அகாசுரவத வர்ணனம்.

விஷாணிகமபி (9)
கொம்பு, புல்லாங்குழல் இவற்றை இடையில் சொருகிக் கொண்டும் , தாமரை போன்ற கைகளில் ஒரு கவளம் அன்னத்தை வைத்துக் கொண்டும் , இனிய சொற்களால் அனைவரையும் மகிழச் செய்து கொண்டும், தேவ கணங்களால் துதிக்கப் பட்டும் தாங்கள் வனபோஜனம் செய்தீர்கள் அல்லவா?

 

Attachments

  • images.webp
    images.webp
    27.6 KB · Views: 72
Last edited:
ஸுகாச'னம் த்விஹ (10)

குருவாயூரில் குடி கொண்டிருக்கும் கிருஷ்ணா! தேவர்கள் கூட்டத்தில் யாகத்தில் தரப்படும் ஹவிஸ்ஸைப் புசிப்பதைவிடவும், இந்த வனத்தில் கோபர்கள் கூட்டத்தில் புசிக்கும் போஜனமே அதிகப் பிரியமானது என்று தேவர்களும், பெரியவர்களும் எண்ணினார்கள். அப்படிப் பட்ட குருவாயூரப்பா! தாங்கள் தான் என்னை வியாதிகளின் கூட்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

 
நாராயணீயம் தசகம் 52.

வத்ஸாபஹார வர்ணனம்.


images

courtesy harekrsna.de

அன்யாவதார நிகரே ஷு (1)

மற்ற அவதாரங்களில் காணாத தங்களின் ஐஸ்வரியத்தின் மேன்மையை அகாசுர வதத்தில் கண்கூடாகக் கண்ட பிரமன் அதை மறுபடியும் சோதிக்க விரும்பினார். தம் மாயையினால் கன்றுக் கூட்டங்களைக் கண்களுக்குப் புலப்படாத வண்ணம் மறைத்து விட்டார்.

 
Last edited:
வத்ஸானவீக்ஷ்ய (2)


Brahma%27s%20illusion.jpg

courtesy kamadenu.blogspot.com

கன்றுகளைக் காணாமல் கோப பாலர்கள் கலங்கியபோது, அவற்றை மீட்டுக் கொண்டு வரவிரும்பியவர் போலத் தாங்கள் பாதி உண்ட அன்னக் கவளத்துடனேயே விலகிச் சென்றீர்கள். பிரமனின் உள்ளக் கருத்தைத் தாங்கள் அறிந்திருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். அப்போது பிரமன் பாதி உண்டு கொண்டிருந்த கோபச் சிறுவர்களையும் தம் மாயையினால் முற்றிலுமாக மறைத்துவிட்டார் அல்லவா?
 
நாராயணீயம் தசகம் 52.

வத்ஸாபஹார வர்ணனம்.

lunch_cows.jpg


Image Courtesy krishna.org

வத்ஸாயிதஸ்தத3னு (3)

அதன் பிறகு தாங்கள் தங்கள் மாயையினால் அத்தனை கன்றுகளாகவும், அத்தனை கோப பாலர்களாகவும், அவர்களின் உரிகளாகவும், அதில் உள்ள பாத்திரங்களாகவும், மற்றும் அவர்களின் கொம்பு வாத்தியங்களாகவும், அவர்களின் புல்லாங்குழல்களாகவும்,
உருவெடுத்தீர்கள். வழக்கம் போலக் காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு வீட்டுக்குக் கூட்டத்துடன் திரும்பினீர்கள்.
 
த்வாமேவ சி'க்ய க3வலாதி3மயம் (4)


images


Image courtesy
krishnasmercy.blogspot.com

கன்றுகளாகவும், சிறுவர்களாகவும், மற்ற பொருட்களாகவும் உரு மாறி இருந்த தங்களளைக் கண்டு அன்று அத்தனை தாய்மார்களும் அதிக ஆனந்தம் அடைந்தனர் அல்லவா?
 
நாராயணீயம் தசகம் 52.

வத்ஸாபஹார வர்ணனம்.


images


Image courtesy krishna'smercy.wordpress.com

ஜீவம் ஹி கஞ்சித3பி4மான (5)

யாரென்று தெரியாத ஒரு ஜீவனை பிள்ளை என்ற அபிமானம் காரணமாகத் தன்னைச் சார்ந்தவன் என்று எண்ணி அதிக வாத்சல்யம் கொள்கிறான் மனிதன். ஆத்மாவகவே உள்ள தங்களை மகனாகவும், கன்றாகவும் பெற்ற கோபிகைகளும், ஆவினங்களும் அன்று எத்தனை மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்!

 
ஏவம் பிரதிக்ஷண விஜ்ரும்பி4த (6)


images


image courtesy
mridanganet.blogspot.com

வினாடிக்கு வினாடி வளர்ந்து வரும் அன்பின் பெருக்கால் திக்கு முக்காடிய கோபிகைகள் தங்கள் மகன்கள் என்றே கருதித் தங்களின் பல வேறு உருவங்களையும் சீராட்டிப் பாராட்டினார்கள். இந்த ரகசியத்தைத் தங்கள் தமையன் பலராமன் கூட ஒரு வருடம் கடந்த பின்னரே அறிந்துகொண்டார் அல்லவா? பரபிரம்மத்தின் ஸ்வரூபங்களாக நீங்கள் இருவரும் இருந்த போதிலும் உங்கள் இருவரிடையே மகத்தானபேதங்கள் உண்டு.

 
நாராயணீயம் தசகம் 52.

வத்ஸாபஹார வர்ணனம்.


images


Image courtesy hindudevotionalblog.com

வர்ஷாவதௌ4 (7)

வருடத்தின் முடிவில் பிரமன் கண்டது பழைய கோப பாலர்களுடனும், கன்றுகளுடனும், அவர்களைப் போன்ற புதிய கோப பாலகர்களும், கன்றுகளும். இனம் பிரித்து அறியமுடியாமல் மயங்கிய பிரமனுக்குத் தாங்கள் புதிய கோபர்கள், புதிய கன்றுகள் ஒவ்வொருவரையும் நீலநிறம் கொண்டவராகத் தோள்வளை கிரீடம் அணிந்தவராக, நான்கு கரங்கள் உடையவராகக் காட்டினீர்கள் அல்லவா?
 
images


Image courtesy nepalrudraksha.com

ப்ரத்யேகமேவ (8)


ஒவ்வொருவரும் லக்ஷ்மி தேவியால் சீராட்டப்பட்டவராக, சர்ப்ப ராஜன் ஆதிசேடனின் உடலில் படுத்து இருப்பவராக, கண்களுக்கு ஆனந்தம் அளிப்பவராக, யோகநித்திரை செய்பவராக, யோகிகளால் சேவிக்கப்படுகிறவராக பிரமன் கண்டார்.
 
நாராயணீயம் தசகம் 52.

வத்ஸாபஹார வர்ணனம்.


images

image courtesy
allhindugodgoddess.blogspot.com

நாரயணாக்ருதிம் (9)

எண்ணமுடியாத நாராயண மூர்த்திகளை ஏக காலத்தில், எல்லா இடங்களிலும் கண்டு மாயையில் மூழ்கின் அறிவிழந்தான் பிரமன். அதே கணத்தில் பழையபடிக் கையில் பாதி உண்ட கவளத்துடன் தாங்கள் மீண்டும் காட்சி அளித்தீர்கள் அல்லவா?
 
Last edited:
images


image courtesy
allhindugodgoddess.blogspot.com

நச்'யன் மதே3 (10)

ஹே கிருஷ்ண! கர்வம் நசித்த பிரமன், அதன் பிறகு லோகநாதனானத் தங்களை பலமுறை நமஸ்கரித்து எழுந்தான். பலவாறு துதித் துவிட்டு சத்ய லோகம் சென்றான். மிக குதூகலத்துடன் எப்போதும் போ
நண்பர்களுடனும், கன்றுகளுடனும் வீடு திரும்பிய குருவாயூரப்பா! தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காப்பற்றவேண்டும்.
 
நாரயணீயம் தசகம் 53

தேனுகாசுர வத4 வர்ணனம்.

images


image courtesy
iskcondesiretree.net

அதீத்ய பா3ல்யம் (1)

ஹே கிருஷ்ணா! ஐந்து வயது முடிந்து ஆறாவது வயதை அடைந்ததும் கன்றுக் குட்டிகளை மேய்ப்பதை விட்டு விட்டு உற்சாகத்துடன் பசுக்களை மேய்க்கத் தொடங்கினீர்கள் அல்லவா?

 
Last edited:
g64c.jpeg


உபக்ரமஸ்யானுகுணைவ (2)

பூமிப் பசுவைக் காப்பாற்ற அவதரித்த நீங்கள் அந்தச் சிறு வயதிலேயே அதை செய்ய ஆரம்பித்த இந்தப் பிரவிருத்தியானது மிகவும் பொருத்தமானதே!

 
நாரயணீயம் தசகம் 53

தேனுகாசுர வத4 வர்ணனம்.

images

Image courtesy dollsindia.com

கதா3பி ராமேண ஸமம் (3)

ஒரு நாள் பாலராமனுடன் நடுக் காட்டில் அதன் அழகை ரசித்தவாறு சுகமாகத் திரிந்து கொண்டு இருந்தீர்கள். ஸ்ரீ தாமா என்ற நண்பனின் சொற்களைக் கேட்டு சந்தோஷமாக தேனுகாசுரனின் காட்டிற்குச் சென்றீர்கள் அல்லவா?

 
Last edited:
images

image courtesy hariharji.blogspot.com

உத்தாலதா
லி நிவஹே (4)

தங்கள் விருப்பப்படி பலராமன் உயர்ந்த பனை மரக் கூட்டத்தை இரண்டு கரங்களாலும் பலமாகக் குலுக்கினான். பழுத்ததும், பழுக்கததும் ஆக
பனம் பழங்கள் நாலாப் பக்கங்களிலும் விழுந்தன. மர்த்தனம் செய்யப்படவிருந்த தேனுகாசுரனும் கழுதை வேடத்தில் எதிர்த்து வந்தான்.
 
நாரயணீயம் தசகம் 53

தேனுகாசுர வத4 வர்ணனம்.


images

Image courtesy
holylandindia.blogspot.com

ஸமுத்3யதோ தை4னுக பாலநேஹம் (5)

"பசுக்கூட்டத்தைக் காப்பாற்ற முயலும் நான் தேனுகனை எவ்வாறு வதம் செய்வேன்?"என்று ஆலோசித்த தாங்கள் அண்ணன் பாலராமனைக் கொண்டு தேவர்களின் சத்ருவான தேனுகாசுரனைக் கொல்லச் செய்தீர்கள் அல்லவா?

 
ததீய ப்4ருத்யானபி (6)


dhenukasura.jpg

Image courtesy
indianmythologytales.blogspot.com

பகவானே! அப்போது நரி வேடம் அணிந்து கொண்டு நெருங்கி வந்த அவனுடைய வேலையாட்களை, பலராமனும் நீங்களும் சிரமம் இல்லாமல் விளையாட்டுப் போலவே நாவல் பழங்களை வீசுவது போல எடுத்துப் பனை மரங்களின் மீது எறிந்தீர்கள் அல்லவா?

 
நாரயணீயம் தசகம் 53

தேனுகாசுர வத4 வர்ணனம்.

images


Image courtesy columbia23.com

வினிக்4நதி த்வய்யத (7)

தாங்கள் ஜம்புகக் கூட்டத்தைக் (நரிகளின் கூட்டத்தைக்) கொல்லத் துணிந்த போது, அதே பெயரை உடைய வருணன் அஞ்சிக் கலங்கினான் போலும். அதன் காரணமாக அதன் பின் சம்புகன் என்ற தன் பெயரை வேதத்தில்மட்டும் பிரசித்தி பெறச் செய்தான் போலும்.
 
Status
Not open for further replies.
Back
Top