கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
அராலமார்கா4க3த (49:7)
brindavan.webp

வளைந்து தூய ஜலத்துடன் ஓடுவதும்; அன்னங்களின் கூவுதலால் நிரம்பிய சாதுர்யமான பேச்சினை

உடையதும்; எப்போதும் புன்னகை பூக்கின்ற தாமரைப் பூக்களாகிய முகத்துடனும் கூடிய; களிந்தன்

பெண்ணாகிய யமுனை நதியைத் தாங்கள் நன்றாகப் பார்த்தீர்கள் அல்லவா?
 
மயூரகேகாச'தலோப4நீயம் (49:8)

மயில்களுடைய அகவல்களால் மனோஹரமானதும்; ரத்தினங்களுடைய கிரணங்களால் பல நிறங்களில்

பொலிவதும்; உயர்ந்த கொடுமுடிகளால் சத்தியலோகத்தைத் தொடுவதும் ஆகிய கோவர்த்தன மலையையும்

தாங்கள் கண்டீர்கள் அல்லவா?
 
ஸமம் ததோகோ3ப குமாரகை (49:9)

பிறகு தாங்கள் பாலகோபர்களுடன் காட்டின் நான்கு புறங்களிலும் எங்கெங்கு சென்றீர்களோ, அங்கெல்லாம்

தங்களிடம் ஆசை கொண்டவள் போல் தனியாகச் சுற்றிவந்து கொண்டிருந்த அந்தக் களிந்தன் பெண்ணாகிய

யமுனையைக் கண்டீர்கள் அல்லவா?
 
ததா2விதே3ஸ்மின் (49:10)

பசுக்களுக்கு ஹிதமான, மேலே வர்ணித்தபடி அமைந்துள்ள அந்த பிருந்தாவனத்தில், கன்றுகளை மேய்ப்பதில்

ஆவல் கொண்டவராக, இடைப் பையன்களுடனும் பலராமனுடனும் கூடிய தாங்கள், என்னை

வியாதிகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
 

Attachments

  • cowherds.webp
    cowherds.webp
    20.2 KB · Views: 62
வத்ஸ ப3காஸுர வத4 வர்ணனம்

தரலமது4க்ருத்3 ப்3ருந்தே3 (50:1)

ஸ்வயம் பிரகாசியாகிய மஹா விஷ்ணுவே! சுற்றித் திரியும் வண்டுக் கூட்டங்களை உடையதும்; மனத்தைக்

கவருவதும் ஆகிய பிருந்தாவனத்தில்;கண்களுக்கு இனிமையான சரீர காந்தியை உடையவரும்;

பலராமனுடன் கூடியவரும் ஆன தாங்கள் கன்றுக் குட்டிகளை மேய்க்க விருப்பம் கொண்டீர். கொம்பு

வாத்தியம், புல்லாங்குழல், பிரம்பு இவற்றை எடுத்துக் கொண்டு கோப பாலர்களுடன் அங்கு சுற்றித்

திரிந்தீர்கள் அல்லவா?
 
விஹிதஜக3தீரக்ஷம் (50:2)

லக்ஷ்மி கந்தா! மிகவும் பரிசுத்தமான பிருந்தாவனத்தில், உலகங்களை ரக்ஷித்ததும், லக்ஷ்மி தேவியின்

தாமரைக் கரங்களால் லாளிக்கப்பட்டதும் ஆகிய இரண்டு திருவடிகளை வைத்தபோது மரங்கள், கொடிகள்,

ஜலம், பூமி, மலை, வயல் முதலிய எது தான் மேன்மை பெற்று விளங்கவில்லை?
 
விலஸது3லபே (50:3)

பச்சைப் புற்களுடன் கூடி விளங்குகின்ற வனத்தின் நடுவிலும், காற்றினால் சீதளமான விசாலமன யமுனை நதிக்

கரையிலும், கோவர்த்தன மலையின் சிகரங்களிலும் தாங்கள் இனிமையாகப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு கன்றுக்

குட்டிகளை மேய்க்கும் போது ஒருநாள் கன்றின் உருவில் வந்திருந்த ஓர் அசுரனைக் கண்டீர்கள் அல்லவா?
 
ரப4ஸவிலஸத் புச்ச2ம் (50:4)

விரைவாக வாலை ஆடிக் கொண்டும், சிறிது கழுத்தைத் திருப்பிக் கொண்டும், தக்க சந்தர்ப்பத்தை

எதிர்பார்த்துக் கொண்டும், சுற்றித் திரிகின்ற அந்த அசுரனைத் தாங்கள் இனம் கண்டு கொண்டீர்கள். உடனே

அவன் கால்களைப் பற்றி, அவனை விரைவாகச் சுழற்றி, உயிர் அற்றவனாகச் செய்து, ஒரு பெரிய மரத்தின்

மீது தூக்கி எறிந்தீர்கள் அல்லவா?
 

Attachments

  • vatsasura.webp
    vatsasura.webp
    12.4 KB · Views: 78
நிபததி மஹாதை3த்யே (50:5)

ஹே கிருஷ்ணா! பிறவியிலேயே துஷ்டனாகிய அந்த அசுரன் விழும்போது உண்டான வேகத்தால் மரங்கள்

பொடிப் பொடியாகி வனம் உருவழிந்தது! அப்போது ஆகாயத்தில் கூட்டமாக நின்றிருந்த தேவர்கள் அதிக

சந்தோஷம் அடைந்து தாங்கள் தலை மேல் புஷ்பங்களை வர்ஷித்தார்கள் அல்லவா?
 
ஸுரபி4லதமா (50:6)

"மிகவும் நறுமணம் வாய்ந்த இந்தப் புஷ்பக் குவியல் தங்கள் தலை மேல் எங்கிருந்து விழுகின்றது?" என்று

கோபாலர்கள் கேட்டபோது, "அசுரனை எறிந்ததால் மரக் கூட்டத்தில் இருந்து விரைவாக உயரச் சென்ற அந்தப்

புஷ்பக் குவியல் மெதுவாகக் கீழே விழுகின்றது என்று நினைக்கின்றேன்!" என்று விளையாட்டாகத் தாங்கள்

பதில் அளித்தீர்கள் அல்லவா?
 
க்வசனதி3வஸே (50:7)

images


பிறகு ஒரு நாள் கடுமையான வெப்பம் இருந்தபோது யமுனா நதி நீரைப் பருகத் தாங்களும், மற்றவர்களும்

சென்றீர்கள். மலைகளின் சிறகுகள் வெட்டப் பட்டபோது மறைக்கப்பட்ட மற்றொரு கைலாச மலையைப்

போலிருக்கும் ஆனால் சிறகுகளை அசைத்துக் கொண்டிருக்கும் அந்த பகாசுரனைக் கண்டீர்கள் அல்லவா?
 
பிப3தி ஸலிலம் (50:8)


bakasura.webp

கோபர்கள் நீர் பருகும் போது அந்த பகாசுரன் தங்களை எதிர்த்து வந்து விழுங்கினான். நெருப்புக்கு ஒப்பான

தங்களை உடனேயே வாந்தியும் எடுத்தான். மறுபடியும் தங்களை அலகின் கூரிய நுனியால் கிழிக்க வந்தான்

அல்லவா? ஆனால் துஷ்ட ஜனங்களைக் கொல்லுவதில் தேர்ச்சி பெற்ற தாங்கள் அவன் இரு அலகுகளையும்

பிடித்து வலித்து அவனை இரண்டாகப் பிளந்துவிட்டீர்கள் அல்லவா?
 
ஸபதி3ஸஹஜாம் (50:9)


images


முதலில் இறந்த தன் சஹோதரியாகிய பூதனையை சீக்கிரம் பார்ப்பதற்கோ, அல்லது முதலில் சென்று

தம்பியாகிய அகாசுரனை வரவேற்பதற்கோ, அந்த பகாசுரன் யமலோகத்தை அடைந்த போது தேவர்கள்

புஷ்பக் குவியலை வாரி இறைக்கும்போது, பிருந்தாவனத்தில் இருந்து தாங்கள் வீட்டுக்குச் சென்றீர்கள்

அல்லவா?
 
லலிதமுரளிநாத3ம் (50:10)

குருவாயூரில் பிரசித்தமாக வாழும் சூரவம்சத்தில் பிறந்த ஹே கிருஷ்ணா! தூரத்தில் இருந்து வரும் தங்கள்

புல்லாங்குழலின் இசையைக் கேட்டு சீக்கிரமாகப் பக்கத்தில் வரும் கோபிகைகளால் மிகவும் ஆனந்தத்துடன்

பார்க்கப் பட்டவரும் யசோதைக்கும் நந்தகோபனுக்கும் ஆனந்தத்தை உண்டு பண்ணியவரும் ஆகிய தாங்கள்

என் ரோகங்களைப் போக்கி அருள வேண்டும்.

 
Dear VR Maam,

Though we will be missing your wonderful thread and contribution to the forums & its educational values, i can understand your discomfort and the pains in continuing to post various information at the same time doing mediating business, countering the taunts and brickbats.. Well i will also join the group which wishes you well in all your future input on various blogs etc. We will knock your doors there. Here is wishing you long & healthy life. Spread cheer all around as you have been doing. Take care Maam.

Cheers.
 
Dear VR Maam,

Though we will be missing your wonderful thread and contribution to the forums & its educational values, i can understand your discomfort and the pains in continuing to post various information at the same time doing mediating business, countering the taunts and brickbats.. Well i will also join the group which wishes you well in all your future input on various blogs etc. We will knock your doors there. Here is wishing you long & healthy life. Spread cheer all around as you have been doing. Take care Maam.

Cheers.

Dear Sir,
Thank you for your message and good wishes.
While the elite writers and readers had been requesting me and advising me to return to the forum
the odd men (man?) out wanted me out permanently!
I had been contemplating for the past four weeks.
Why should I agree to be sacrificed for the unrest between other people and the gang fights?
People enter a thread stealthily or hopping mad but with a common purpose of ruining it!
Let people sort out their differences elsewhere without my intervening in it.
with warm regards and best wishes,
Visalakshi Ramani.
 
கண்ணனைப் பெருவழியில் விடலாமா? :nono:

எண்ணியதை நிறைவேற்ற வேண்டாமா? :high5:

கண்ணனின் கதை தொடரும் விரைவிலேயே!:bump2:

எண்ணியபடி நூறாவது தசகம் வரையில்! :pray2:
 
கண்ணனைப் பெருவழியில் விடலாமா? :nono:

எண்ணியதை நிறைவேற்ற வேண்டாமா? :high5:

கண்ணனின் கதை தொடரும் 19-11-12 முதல்!:bump2:

எண்ணியபடி நூறாவது தசகம் வரையில்! :pray2:
 
நாராயணீயம் தசகம் 51.

அகாசுரவத வர்ணனம்.


krishna.jpg

Courtesy Krishnalilas.com

கதா3சன வ்ரஜசி'சு'பி: (1)

ஸர்வேஸ்வரனே! பால கோபர்களுடன் வனபோஜனம் செய்ய தீர்மானித்த நீங்கள், அதிகாலையில் பற்பல பசு, கன்றுகளின் கூட்டத்துடன், ஊறுகாயும், கட்டுச் சோறும் எடுத்துக்கொண்டு வெளிச் சென்றீர்கள் அல்லவா?

 
pic9.jpg


விநிர்யதஸ்தவ (2)

வெளியே செல்லுகின்ற தங்கள் திருவடித் தாமரைகளில் இருந்து கிளம்பிய, மூவுலகங்களையும் பரிசுத்தம் ஆக்குகின்ற பாததூளியை, மயிர்சிலிர்த்த தேஹங்களுடன் மஹரிஷிகள் அனுபவித்தனர் அல்லவா?
 
நாராயணீயம் தசகம் 51.

அகாசுரவத வர்ணனம்.

images


ப்ரசாரயத்யவிரலசா'த்3வலே (3)

ஸர்வேஸ்வரனே! பாலகோபர்களுடன் தாங்கள் பசும்புல் நிறைந்த இடத்தில் கன்றுகளை மேய்க்கும் போது, அகாசுரன் தங்களுக்குத் தீங்கு இழைப்பதற்கும் (தன்னுடைய பாபங்கள் நசிப்பதற்கும்) பெரிய மலைப் பாம்பின் உருவில் தங்களை வழி மறித்தான் அல்லவா?
 
மஹாசாலப்ரதிமதனோ (4)

images


தாங்கள் சற்று எட்டிச் சென்றதும், கோபச் சிறுவர்கள் காட்டில் விளையாடும் ஆவல் மேலிட்டு, குஹை போன்று அகன்று திறந்திருந்த அகாசுரனின் வாயில் நுழைந்து சென்றனர் அல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top