• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
just one more!

நிலவே உன் தோழியாக வருவாளே
நிலவே உன்னை தாலாட்டுவாள்ளே
நிலவே உன் இதய கனவுகளை நினைவுகளாகுவாளே
நிலவே உன் கோமகனுடன் நீ இருக்கும் பொழுது கண் சிமிட்டி, புன் சிரிபால் மகிழவைபாளே.


I had written as a reply to her kavidhai.. she is a very good writer.. thousand times better than me.. :)
 
நான்
புல்லாங்குழலாய்ப்
புறப்பட்டு வந்திருக்கிறேன்.

சங்கீத மேடைகளின்
சப்த ஆரவாரங்களை
நிரகாரித்துவிட்டு வந்திருக்கிறேன்.

உங்கள் உதடுகளில்
ஒய்யார நடனம்புரிய
ஓடோடி வந்திருக்கிறேன்

மூங்கில் துளைகளில்
மூச்சடக்கி வாசிக்க
முன்னே வந்திருக்கிறேன்.

இசை வருவது
என்னிலிருந்துதா னென்றாலும்
இயக்குவது நீங்கள் தான்.

நீங்கள் பயன்படுத்தினால்
நான் கானம் தருவேன்
இல்லையேல் நான் மூங்கில்குழல் தான்.

உங்கள்மனம் அலைபாய்வது
கண்ணன் என்னை இசைத்தால்
என்மனம் அலைபாய்வது நீங்களென்னை இசைத்தால்

நீங்கள் இசைக்க நான் இணங்க
நாம் நடத்துவது சபைக் கச்சேரியல்ல
நம் மனக் கச்சேரி.
 
Last edited:
haridasa,

your post #29 :)

was grinning right through. first time, a love, afair, has been compared to a musical instrument.

i agree, it is but a natural progression, of using that among most sensuous of organs, ie lips, to parrie with the partner, who could be music to our ears and fountain of love to our feelings.

now what next? violin would be too easy. how about mridangam or drums ? how can one be romantic over that?

good stuff. congrats :)
 
K

I did not really mean in the sense you have understood. Anyway, glad that my poem can give many meanings. Thank you for your compliments.

I have used first person singular in my poems on Cock, Lion and Flute just to make an impact. I write poems as a literature lover and not as Siva.

My gothram is also Haridasa. You can address me Siva.
 
Beautiful Siva garu. loved it.. I agree with Mr. Kunjuppu that it can carry many more meanings.. but again, the poem itself is.. what to say.. Pulanguzhal aandha nadai podugiradhu.. Yeah! I am also waiting for more..

As for mine, like I mentioned earlier it was to cheer up a friend of mine who has gone to madras and I had introduced a wonderful gentleman and they both will tie the knot soon and I am so happy for both of them.. they both lost their spouses and I can imagine the love and affection that will enrich this new union.. :)
 
I had two great poetry teachers – mr d.o.perry in high school, and mr. ramamurthi at Loyola college. Both of these, had the gift to commentarize the poetries to such an elegance that these lectures were more interesting and flavourful than some of the poems themselves.

The beauty of poems is in the mind of the reader. I am happy to say, that what I read in siva’s poem is not what he had in mind. Btw what exactly did siva had in mind when he wrote that poem? Maybe the author will enlighten us?

:)
 
it is so true, College professors can make the class interesting or just boring.. you were lucky.. by the way, did you go through the corporation high school road to go to the college.. :)) here goes another kavidhai which I had written as a reply to her kavidhai " Mutham "

முத்தம் பெரும் இதழ்களுக்கு இனிமை
முத்தம் பெரும் இதயத்திற்கு இளமை
முத்தம் பெரும் மேனிக்கு சிலிர்ப்பு
மொத்தத்தில் முத்தம் பெரும் உனக்கு பெருமை
அதனால் வந்த குளுமை
அதை நினைத்து மகிழும் நீ ஒரு அழகான பதுமை

I hope nobody misunderstand me.. it is just an impulse I wrote this.. but I liked it since I answered her and made her blush.. :)
 
என்னவளே, நான் உன்னை

"நிலவே" என்றழைப்பதில்லை
அது மாதமொருமுறை மறைந்து போவதால்.

"அன்பே" என்றழைப்பதில்லை
அது பலர் மீது செலுத்தப்படுவதால்.

பெயர் சொல்லி அழைப்பதில்லை
அது பலருக்குச் சொந்தமானதால்

"மலரே" என்றழைப்பதில்லை
அது வாடிப் போய்விடுவதால்.

"காதலி" என்றே அழைக்கிறேன்.
"காதலி" -இதுவே இனி உன் காதொலி. .
 
Back to Romanticism eh???

என்னவளே, நான் உன்னை

"நிலவே" என்றழைப்பதில்லை
அது மாதமொருமுறை மறைந்து போவதால்.

"அன்பே" என்றழைப்பதில்லை
அது பலர் மீது செலுத்தப்படுவதால்.

பெயர் சொல்லி அழைப்பதில்லை
அது பலருக்குச் சொந்தமானதால்

"மலரே" என்றழைப்பதில்லை
அது வாடிப் போய்விடுவதால்.

"காதலி" என்றே அழைக்கிறேன்.
"காதலி" -இதுவே இனி உன் காதொலி. .
 
உன் பார்வை போதும்
வேறு காட்சி எனக்குத் தேவையில்லை.

உன் வார்த்தை போதும்
வேறு சப்தம் எனக்குத் தேவையில்லை.

உன் நெருக்கம் போதும்
வேறு தொடுதல் எனக்குத் தேவையில்லை.

உன் சுவாசம் போதும்
வேறு நுகர்தல் எனக்குத் தேவையில்லை

உன் இதழ் போதும்
வேறு சுவை எனக்குத் தேவையில்லை

என் ஐம்புலன்களையும் ஆள்கிறாய் நீ
என் ஆறாம் அறிவைத் தொலைக்கிறேன் நான்.
 
Last edited:
[h=1]#3. நஞ்சும், அமுதமும்.[/h]
அழகிய சித்திரம் கண்களுக்கு இன்பம்,
பழகிய மொழியோ செவிகளுக்கு இன்பம்,
நறுமணப் பொருட்கள் நாசிக்கு இன்பம்,
அறுசுவை உணவு நாவுக்கு இன்பம்!

மழலையின் தழுவல் மனத்துக்கு இன்பம்,
முழுமையான இன்பம் தருவது எதுவோ?
மாயையின் சக்தியை மறைத்து வைத்து,
மயக்குகின்ற ஒரு மங்கை மட்டுமே.

அழகிய உருவால் கண்களுக்கு இனிமை,
குழறும் மொழியால் செவிகளுக்கு இனிமை,
ஊறும் தேன் இதழ்களால் நாவுக்கு இனிமை,
நறுமண பூச்சுக்களால் நாசிக்கு இனிமை!

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருவது
ஐயமின்றி அழகிய பெண் ஒருத்தியே!
ஐம்புலன்களையும், ஐம்பொறிகளையும்,
ஐயமின்றி சிறைப் பிடிப்பவள் இவளே!

ஞானத்தை தடுக்கும் பலவித சக்தியுடன்,
மோனத்தைக் குலைக்கும் பலவித யுக்தியுடன்,
ஏன் படைத்தான் இறைவன் இவளை?
நன்மைக்கா அன்றி நம் தீமைக்கா?

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சே;
அளவுடன் கொண்டால், நஞ்சும் அமுதமே!
மோடிக்கு மயங்கும் பாம்பு போல ஆண்கள்
ஆடினால் தேடிவந்தவள் திருமகள் ஆவாளா?

சக்தியின் வடிவம் பெண்ணே! அவளை,
சக்தியாகவே நாம் மதிக்க வேண்டும்.
மேனகையை விரும்பிய கௌசிகன் போல
“மோனத்தைக் குலைத்தாள்” என்று சாடுவதா?

இளையவர், முதியோர், இல்லறம் துறந்தோர்,
இவர்களைப் பேணுதல் இல்லான் கடமை.
இல்லாள் இல்லான் ஏதும் இல்லான்!
இல்லாள் இருப்பது நல்லறம் பேணவே.

பெண் என்பவள் ஓர் அற்புதப் படைப்பு!
பேணிக் காப்போர் அறிவார் உண்மையை.
பெண்ணைக் கண்ணீர்க் கடலில் வீழ்த்தியவர்
மண்ணில் வாழ்ந்ததாய் வரலாறு இல்லை.

பெண் ஒரு போகப் பொருள் அல்லவே அல்ல,
பெண் ஒரு கட்சிப் பொருள் அல்லவே அல்ல,
பெண் என்பவள் ஒரு சுமை தாங்கியும் அல்ல,
பெண் என்பவள் ஒரு இடி தாங்கியும் அல்ல!

மண்ணில் சிறந்த பொருட்களை எல்லாம்
பெண்களாகவே பலர் சித்தரிக்கின்றனர்.
கலைமகள், அலைமகள், மலைமகள் மற்றும்,
கங்கை, காவேரி, கோதாவரி பெண்களே.

“இனியேனும் பெண்மையை போற்றுவோம்”
என்று இன்றேனும் மனம் கனிந்திடுவீர்!
“வாழு, வாழவிடு !” என்பார் பெரியோர்,
வாழ விட்டு வாழ்த்துங்கள் பெண்களை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


 
Dear Mr. Siva,
I take the liberty of posting this poem-since it is also related to the earlier one.
Thanks for giving me space in your thread.
with best wishes and regards,
V.R. mami.



#57. புலன்களும், பொறிகளும்.



புலன் என்பது நல்ல வயல் வெளி.
புலப்படும் பொருட்களை எல்லாம்
வளரச் செய்யும் ஒரு வயல் வெளி;
மலரச் செய்யும் ஒரு மண் வெளி.

“வெளி”யினில் ஒலியை வைத்தான்.
“வளி”யினில் உணர்வை வைத்தான்.
“ஒளி”யினில் வடிவம் வைத்தான்.
ஓடையில் சுவையை வைத்தான்.

மண்ணிலே மணத்தை வைத்தான்.
மனதிலே ஆசைகள் வைத்தான்.
எண்ண எண்ணத் தொலையாத,
இன்பங்கள் உலகில் வைத்தான்.

உணர்வுக்கு உடலை, ஓசைக்கு செவியை,
மணத்திற்கு நாசியை, சுவைக்கு நாவை,
வடிவுக்கு கண்களைத் தந்து, ஆக்கினான்
வடிகட்டிய முட்டாள்களாக நம்மை.

எலியைப் பிடிக்கும் பொறியைப் போல,
எமக்குள் வைத்தான் ஐந்து பொறிகளை.
புலியின் பலம் கொண்டவைகள் அவை;
புரட்டிப் புரட்டிப் போடுகின்றன நம்மை!

ஒளியைக் கண்டு உவந்து வந்து, அந்த
ஒளியிலேயே மடியும் விட்டில் பூச்சி!
இசைக்கு மயங்கி நெருங்கும் மானோ,
இசைக்கும் வேடனுக்கு இசைந்த உணவு!

சுவைக்கு மயங்கி வரும் மீனோ, அதன்
சுவை கண்டவருக்கு உணவாகிவிடும்!
சுகத்தில் மயங்கி வரும் யானையோ
சுதந்திரத்தை இழந்து சிறைப்படும்.

ஒரு பொறியாலே உயிர் போகும் எனில்,
ஐம்பொறி வசப்பட்ட நம் கதி என்ன?
நினைக்க நினைக்க மனம் தான் பதறி,
நனைக்கும் பெருகும் கண்ணீர் அருவி!

கண்ணொரு பக்கம், நாவொரு பக்கம்,
காதொரு பக்கம், உடல் ஒரு பக்கம்,
அறிவொரு பக்கம், மனமொரு பக்கம்,
தறி கெட்டு ஓடும் குதிரைகள் ஆனால்….

ஐம் புலன்கள் இருந்து என்ன பயன்?
ஐம் பொறிகள் இருந்து என்ன பயன்?
எல்லாம் தந்தும், எதுவும் பயனின்றி,
செல்லாக் காசாய் நம்மை ஆக்கி வைத்ததேன்?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
I am not possessive. Any one is welcome here.

Btw, my poem on senses does not indicate whether it is from a man or a woman. Since I am the author, you have perhaps presumed it to be from a man. I have mentioned time and again that my poems are different from me.
 
I believe that women are much more shrewd and DO NOT lose

themselves or their senses completely as a man is supposed

to do - in the proximity of a beautiful woman.


So the poem sounded to be from the lips of a man-

not necessarily from those of Mr. Haridasa Siva!
 
Last edited:
ஒப்பனை இல்லாத எளிமை தான்
என்னிடம் பிடித்ததென்று சொல்லி
உன் காதலை நீ தெரியப்படுத்த
ஒப்பில்லா துணைவன் கிடைத்தானென்று எண்ணினேன்.

இன்றோ உனக்காக
தினம் தினம் ஒரு ஒப்பனையில் நான்
என் நிஜம் கூட விளங்காத
கற்பனையில் நீ...

இரவில் தாமதமாய்ப் படுத்ததால்
காலையில் கண் விழிக்க சிரமம்;
இருந்தும் உனக்கு காப்பி கோப்பை தருவதற்கு
எழுவதில் தொடங்கும் என் ஒப்பனை.

முதல்நாள் கண்ட கனவை
உன்னிடம் பகிர்ந்து கொள்ள வருகையில்
நீயோ அன்றைய செய்தித்தாளின் வரிகளில்...
இதோ இன்னொரு ஒப்பனை.

என் career என்னவானதென்று
ஏங்கி நான் நிற்கும் பொழுதும்
நீ வேலைக்குச் செல்கையில்
வாயிலுக்கு வந்து விடை தரும் ஒப்பனை

கருத்து பரிமாறுவது நல்லதென்று
தொலைபேசியில் நான் அழைக்க
"பேச நேரமில்லை" என்று என் அழைப்பை நீ தவிர்க்க
.ஏமாற்றத்தைத் தவிர்க்க ஒப்பனை

மாலையில் நீ வீடு திரும்பும்போது
மீண்டும் நான் வாயிலில்
அன்றைய வேலையின் களைப்பிலும்
அழகாக உன் கண்ணில் தெரிய ஒப்பனை

உன் வரவுக்காக காத்திருந்து
உதடு திறக்க வரும் நேரம்
"என்ன TV serial -ல் பொழுது களித்தாயா?" என்ற
உன் கேள்விக்கு விடையாய் ஒப்பனை

காலையில் செய்த சிற்றுண்டியை
"நாகரீகமில்லை" என்று நீ மறுக்க
மாலையில் அதை சூடாக்கித் தந்தால்
"மறுபடியுமா?" என்று நீ மறுக்கும்போது

"சரி, விடுங்கள்; என்ன வேண்டும், சொல்லுங்கள்?"
"சப்பாத்தி, பூரி?" என்று சர்வர்போல் நான் அடுக்க
உச் கொட்டும் உன் கேலிச் சிரிப்பைப் பார்த்து
உடம்பெல்லாம் உடுத்தும் ஒப்பனை

பாத்திரம் கழுவி, அடுப்பைத் துடைத்து
மீந்த உணவை fridge -ல் வைக்கும்போது
"இந்த cricket -ல் உனக்கேன் விருப்பமில்லை?" என்று
தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே

குரலை மட்டும் எனக்கு நீ அனுப்ப
பள்ளி நாட்களில் நான் வென்ற கோப்பைகள்
என் கண்முன் அணிவகுக்க
ஏக்கப் பெருமூச்சில் ஒரு ஒப்பனை

படுக்கையறைக்கு வரும் நேரம்
சலிப்பும் வெறுப்பும் நிறைந்தவளாய் நான்
சபலமும் சந்தோசமுமாய் நீ
உன் உணர்ச்சிகளுக்காக என் உள்ளத்தின் ஒப்பனை

காதலிக்கும் வேளையில்
நீ போட்ட ஒப்பனையால்
கல்யாணம் ஆன பின்
நான் போடுகிறேன் ஒப்பனை...
 
பற்றுக பற்றற்றான் பற்றினை

இரைமட்டும் தேடினால் மிருககுணம்
இறையையும் நாடினால் மனிதகுணம்
நரைவந்த பின்தான் நாடவேண்டுமென்று
உரைப்பது உணர்த்துவது உன்மத்தம்.

கறைபடிந்த வாழ்க்கைப் பயணம்
கரைகாண வேண்டு மென்றால்
மறைசொன்ன வழி பற்றி
குறை நிவர்த்தி செய்யவேண்டும்

அரைகூடவல்ல அதனினும் சிறிதளவே
அறைகட்டும் மனது திறக்க
அறைகூவல் விட வேண்டும்
அரங்கத்தான் அருள் கிடைக்க

சிறையில் சிக்கிய தவிப்பு
திரைமூடிய இருள் கிடப்பு
புரையோடிய தீய இருப்பு
சூறையாடும் தூயோன் மாண்பு

நீரைத் தேடிவந்து கானல்
நீரைப் பற்றி ஒழுகும்
நிறையில்லா மன ஏக்கம்
வரைகானும் வானத்தா னருளால்
 
''ஒப்பனை இல்லாத எளிமை தான்
என்னிடம் பிடித்ததென்று சொல்லி
உன் காதலை நீ தெரியப்படுத்த
ஒப்பில்லா துணைவன் கிடைத்தானென்று எண்ணினேன்.

........................................''

சற்று குழப்பமாக இருந்தது ஆரம்பத்தில் படிக்கும்பொழுது.. ...
பின்னர் தெளிவு பிறந்தது...இது ஒரு பெண்ணின் உளக்கிடக்கை என்று...
நன்றாக உள்ளது.
 
அவள் வருவாளா?

மழலையாய் மண்ணில் பிறந்ததும் - தாயின்
மடியில் நிம்மதியாய்க் கிடந்தேன்.
பாலகனாய் வளர்ச்சி பெற்று - புவியில்
பாதம் பதிந்து நடந்தேன்.

மாணவனாய் பள்ளி சென்று - அறிவு
மலர்ந்து மண்ணில் எழுச்சியுற்றேன்.
வாலிப வயதில் மட்டும் - ஒரு
வஞ்சியிடம் காதலுற்று மயக்கமுற்றேன்.

கனவே வருவதில்லை உறக்கத்தில் - ஏனெனில்
கனவுலகில்தான் நாளும் வாழ்கிறேன்.
நினைவு தெளிவா யிருப்பதில்லை - கன்னியின்
நினைவு மட்டுமே ஆக்கிரமித்திருப்பதால்.

என்னையே தொலைத்து விட்டேன் - வாழ்வில்
எதனிலு மீடுபாடு கொள்ளேன்
எப்போது மவள் சிந்தனையில் - மனது
ஏங்கித் தவித்துக் கிடக்கிறேன்.

ஒருமுறை வந்து பார்த்தால் - சற்று
ஒய்வு கிடைக்கும் உளைச்சலிலிருந்து;
பரவசமாகிப் போவேன் நானும் - அவள்
பார்வை என்மீது படும்போது.

உறக்கம் எனக்கும் வரும் - வஞ்சி
இரக்கம் காட்டும் போது;
கலக்கம் தீர்ந்து போகும் - கன்னி
காதலை ஏற்கும் போது.
 
siva,

welcome back. :)

i had a good laugh reading the poem below. just imagine, me an old fogey, waiting for the kanni to put me to sleep. at my age, the kanni is more likely a pretty nurse. that is the best i can hope for :) with a shot of tranquilizers to put me to sleep..haha
 
ஏழையின் சிரிப்பு........
இறைவனைக் காண முடிகிறதா?


ஒருநாள் ஒருபொழுது உண்பவன் யோகியென
ஓதிச் சென்றார்கள் முன்னோர்கள்;
ஒவ்வொரு நாளும் யோகியானேன் - சாலை
ஓரத்தில் ஒதுங்கி வாழ்ந்தாலும்.

நகர்ப்புற குடிசை வாசியாயினும்
நாளொன்றுக்கு 32 ரூபாய் வருமானமென்பதால்
நாட்டின் மன்னரானேன் - அரசால்
நான் செல்வந்தனென பெயர்பெற்றேன்.

உழைக்கும் வர்க்கத்தை
'உற்சாகப்படுத்த' வேண்டுமென்ற
உயர்ந்த எண்ணத்தில் - நாட்டில்
உதித்தது டாஸ்மார்க்.

இலவசங்களை எதிர்நோக்கி
இளித்துக் கொண்டிருந்தாலும்
இடைத்தேர்தல் சமயத்தில்
இனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஈட்டும் வருமானத்தில்
ஈட்டிக்காரனுக்குப் பாதி;
அரசியல்வாதிக்கு ஒரு பகுதி,
குண்டர்களுக்கு ஒரு பகுதி.

அரசு, பொதுமக்கள், குண்டர்கள் மட்டுமல்ல
ஆண்டவன்கூட என் பால் தான்!
அகால மழை பெய்யும்; அநியாய வெயில் தாக்கும்
ஆதாரமில்லாத ஏழையென் வாசத்தலத்தில்.
 
சிவா ஏழைக்கும் சிரிப்பு உண்டா ?

That is a good question. Incidentally, I was commenting to my wife last week about the blacks here who are generally very poor - especially workers in commercial establishments. They keep singing/humming songs almost at all times notwithstanding their poverty. I think it is an art to keep one's mind happy irrespective of one's state of affairs.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top