என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
வாழும் முறை




பிறரை எதிரியாய்ப் பார்ப்பதால் அந்த 'எதிரி'க்கு நஷ்டமில்லை
அவர் தரும் 'இன்னல்'களை ஒதுக்குவதால் நமக்கு நஷ்டமில்லை
தீய நினைவுகளைத் தேக்கி வைப்பதால் யாருக்கும் லாபமில்லை
வேண்டாத வாதத்தால் வருவது வீண் தொல்லை.


வந்ததை வரவில் வைப்போம்
சென்றதை செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கு
ஒன்றாய்க் கூடுவோம் -

கவியரசு கண்ணதாசன்.
 
Last edited:
மகாசிவராத்திரி


பாற்கடலில் தோன்றியது நஞ்சும் - அதன்
பாதிப்பு உலகையே மிஞ்சும்
பரமசிவனின் கருணை நெஞ்சம் - அதனால்
பாதுகாக்கப் பட்டதிந்த பிரபஞ்சம்

நன்றி செலுத்த வேண்டி நாமும் - சிவனுக்கு
நயமா யிருப்போம் விரதம்
நமச்சிவாய என்னும் நாமம் - உலகில்
நம்மைக் காக்கும் என்றும்

ஐந்தெழுத்து மந்திரம் போதும் - வாழ்வில்
ஐயங்கள் யாவும் நீங்கும்
ஐங்கரன் தந்தையின் ஆசிவேண்டும் - அதற்கு
ஐம்புல னடக்கம் வேண்டும்

அண்ணா மலையானின் அருள் - அது
அகற்றிவிடும் அறியாமை இருள்
அரஹர சிவசிவ சொல் - அண்ட
அகிலத்திற்கும் அதுவே பொருள்

ஓதற்கு அரியானை ஓதுவோம் - வாழ்வில்
ஒருநாளும் அவன்துதி மறவோம்
ஒப்பில்லா நாயகனைப் பாடி - ஆசைகளை
ஒதுக்கி வைத்து வாழ்வோம்

வாரணாசியில் வாசம் செய்வோனே - எங்கள்
வக்கிரங்களை நாசம் செய்வோனே
வணக்கங்கள் உனக்குச் செய்தோமே - நல்
வளங்களருளும் விபூதி சுந்தரனே

குமரனிடம் கேட்டாய்நீ பாடம் - இச்சிவ
குமார் பணிந்தேனுன் பாதம்
குன்றாத பக்தி போதும் - என்
குறைகள் மறைந்து போகும்



02 -03 -2011 மகாசிவராத்திரி அன்று எழுதியது
 
Last edited:
மனிதனைத் துதி செய்யாது இறைவனைத் துதி செய்தது மிக நன்று!

சந்தேகம்:

அரிஹர என்றால் சிவபெருமானையா குறிக்கும்? அரன் அல்லவா சிவன்?

அல்லது அரி, அரன் இருவரையும் வணங்கச் சொன்னீர்களோ?
 
அன்பே சிவம்

defaultCAPQE1L3 (2).webp

அன்பே சிவம் என்றே நிதம்
ஆதிசிவன் தாள்பணிந்து நீ போற்று.
இருள்நீக்கி ஒளி தந்த அந்த
ஈசன் இணையடி நிழல் போற்று.
உமையொரு பாகன் உமா மகேஸ்வரனை
ஊனக்கண் கொண்டு நோக்காமல் இருக்க-
என்றே ஞானக்கண் தந்த பசுபதிநீயே !
ஏழ்ஓசை எட்டுதிசையாய் ஆன அவனை
ஐயமின்றித் தொழ எம் மனமே-
ஒல்காப்புகழ் நமசிவாயனை நிதம் நீயே
ஓம்கார இசை கொண்டு இசைப்பாயே!

சிவசண்முகம்.
 
Last edited:
அன்பே சிவம்............
...............................
சிவசண்முகம்.
நேயமுடன் ஐந்தெழுத்தனைத் துதிக்க,

தூய தமிழில் கவிதை; மனம் இனிக்க!

வாழ்த்துக்கள்,
ராஜி ராம் :thumb:
 
தூய தமிழில் கவிதை; மனம் இனிக்க!

நேயமுடன் ஐந்தெழுத்தனைத் துதிக்க,

தூய தமிழில் கவிதை; மனம் இனிக்க!

வாழ்த்துக்கள்,
ராஜி ராம் :thumb:


அகமொன்று வைத்துப் புறமொன்று பேசாமல்
அகமகிழ்வுடன் அனுப்பிய வாழ்த்துக் கண்டேன்
அன்பு சகோதரிக்கு நன்றிதனை உரித்தாக்கினேன்.
 
நடராஜன்

ஒரு மனம் நமக்கு, அவனையே நினைக்க;

இரு கரங்கள் நமக்கு, அவனையே வணங்க;

மூன்று கண்கள் அவனுக்கு, தீயவை எரிக்க;

நான்கு கரங்கள் அவனுக்கு, நம்மைக் காக்க;

ஐந்து எழுத்து அவனுக்கு, நாம் தினம் ஜபிக்க;

ஆறுமுகனைப் பெற்றான், தனக்கு குருவாக;

ஏழு பிறவிகளுக்கும், வருவான் துணையாக;

எட்டுத் திசைகளில், புகழ் மணக்கும் நாதனே;

ஒன்பது ரசங்கள் தரும், நடன ராஜன் அவனே!

:pray2:
 
நடராஜன்

ஒரு மனம் நமக்கு, அவனையே நினைக்க;

இரு கரங்கள் நமக்கு, அவனையே வணங்க;

மூன்று கண்கள் அவனுக்கு, தீயவை எரிக்க;

நான்கு கரங்கள் அவனுக்கு, நம்மைக் காக்க;

ஐந்து எழுத்து அவனுக்கு, நாம் தினம் ஜபிக்க;

ஆறுமுகனைப் பெற்றான், தனக்கு குருவாக;

ஏழு பிறவிகளுக்கும், வருவான் துணையாக;

எட்டுத் திசைகளில், புகழ் மணக்கும் நாதனே;

ஒன்பது ரசங்கள் தரும், நடன ராஜன் அவனே!

:pray2:

நன்றாக உள்ளது ..
நன்றி
 
சிவஷன்முகம் மற்றும் ராஜி ராம்,

உங்கள் இருவருக்குமே சிவ பக்தி மட்டுமன்றி நல்ல கவித் திறனும் உள்ளது என்பதை உங்கள் கவிதைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் தமிழ் உயிரெழுத்துகளைக் கொண்டு எழுத, இன்னொருவர் எண்களைக் கொண்டு எழுதி அசத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.
 
..........
இன்னொருவர் எண்களைக் கொண்டு எழுதி அசத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.
என் கணிதம், எண் கணிதமாகி, இறையைப் புகழ உதவினதில், மட்டிலா மகிழ்ச்சி! :dance:
 
நவநடராசன் பாடல் நன்றாக இருக்கிறது!
ஒன்று, இரண்டு,ஏழு என்னும் எண்களுக்கும் அவனையே சொல்லியிருக்கலாம்!
 
நவநடராசன் பாடல் நன்றாக இருக்கிறது!
ஒன்று, இரண்டு,ஏழு என்னும் எண்களுக்கும் அவனையே சொல்லியிருக்கலாம்!
நடராஜன்.

ஒரு பதம் தூக்குவான், நம்மை மகிழ்விக்க;

இரு பதம் காட்டுவான், பற்றுவோரைக் காக்க;

மூன்று கண்கள் அவனுக்கு, தீயவை எரிக்க;

நான்கு கரங்கள் அவனுக்கு, நம்மைக் காக்க;

ஐந்து எழுத்து அவனுக்கு, நாம் தினம் ஜபிக்க;

ஆறுமுகனைப் பெற்றான், தனக்கு குருவாக;

ஏழு ஸ்வரங்களில் மயங்குவான், மிக எளிதாக;

எட்டுத் திசைகளில், புகழ் மணக்கும் நாதனே;

ஒன்பது ரசங்கள் தரும், நடன ராஜன் அவனே!

குறிப்பு:

மேன்மைப்படுத்தக் கருத்தளித்த திரு. Vsk சாருக்கு நன்றி!
 
மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் ராஜி அவர்களே!

ஒருபதம் தூக்குவான் நம்மிடர் நீக்கிட
இருவினை தீர்ப்பான் மலர்க்கரம் காட்டியே
எழுபிறப் பகற்றுவான் அருள்விழிப் பார்வையி்ல்!

:))
 
மதிப்பிற்குரிய ஹரிதாஸ சிவா அவர்களுக்கு ..தங்களிடமிருந்து அடுத்த கவிதை இல்லை ...sunday.. விடுமுறை நாளில் எழுதி அனுப்பவும் ...
sunday.. என்னுடைய இராசேந்திரப் பாண்டியன் கதைப்பாட்டை போஸ்ட் செய்கிறேன் ..ஆதரவு தரவும்
சிவசண்முகம்
 
என்னுடைய தமிழ்க் கவிதைகள்

நடராஜன்.

ஒரு பதம் தூக்குவான், நம்மை மகிழ்விக்க;

இரு பதம் காட்டுவான், பற்றுவோரைக் காக்க;

மூன்று கண்கள் அவனுக்கு, தீயவை எரிக்க;

நான்கு கரங்கள் அவனுக்கு, நம்மைக் காக்க;

ஐந்து எழுத்து அவனுக்கு, நாம் தினம் ஜபிக்க;

ஆறுமுகனைப் பெற்றான், தனக்கு குருவாக;

ஏழு ஸ்வரங்களில் மயங்குவான், மிக எளிதாக;

எட்டுத் திசைகளில், புகழ் மணக்கும் நாதனே;

ஒன்பது ரசங்கள் தரும், நடன ராஜன் அவனே!

குறிப்பு:

மேன்மைப்படுத்தக் கருத்தளித்த திரு. Vsk சாருக்கு நன்றி!

திருமதி ராஜி அவர்களுக்கு,

எவ்வளவு அழகான மரபு கவிதையை புனைந்திருக்கிறீர்கள் .
நல்லாசிகள் ,
பிரஹ் மண்யன்
பெங்களூர்
 
Dear Brahmanyan Sir,

தங்கள் நல்லாசிகளுக்கு நன்றி பாராட்டுகிறேன்.

தங்கள் ஊக்கம் என் ஆக்கம், என்றென்றும்! :thumb:

Regards,
Raji Ram
 
இந்தியப் பொருளாதாரம்


ஜனத்தொகை நூறு கோடி
வறுமைக் கோட்டுக்குக் கீழ் நாற்பது கோடி
வரி ஏய்ப்பு, ஊழல் மற்றும் கறுப்புப் பணம் பல லட்சம் கோடி

பல இலட்சங்களை நூறாலோ நாற்பதாலோ வகுத்தால் விடை பல கோடிகளில்
இருப்பினும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் வாழ்வின் மறு கோடியில்

கணிதம் தவறா அல்லது கணிப்பு தவறா?
பொருளியல் தவறா அல்லது புள்ளியியல் தவறா?
கொள்கை தவறா அல்லது கோட்பாடு தவறா?
சாப்பாடு இல்லாதோரின் கூப்பாடு தவறா?
 
நம்பிக்கை


திராட்சை ரசத்திற்க்குத் தவியாய்த் தவித்து
கூழை இழந்து விடாதே

கோபுரத்தை எண்ணிக் கொண்டு
கூரையை இழந்து விடாதே

நாணயமற்றவர்களின் நடத்தையால்
நம்பிக்கை இழந்து விடாதே

நீ நடந்தால் தான் பாதை
நீ கை அசைத்தால் தான் காற்று
சூரியன் உன் சுட்டு விரல் நுனியில்
பூமியோ உன் காலடியில்

பூகம்பங்களால் உன்னைப் புதைத்து விட முடியாது
எரிமலைகளால் உன்னை எரித்து விட முடியாது

துணிந்து வா; துயரின்றி வா;
தூளியை விட்டு வெளியில் வா

முடிந்தவரை நல்லது செய்
முடியாத போது பிரார்த்தனை செய்

இதயத்தால் சிந்தி
அறிவால் பார்
மனத்தால் கேள்

விரல்கள் பத்தும் உள்ளவரை
விட்டு விடாதே நம்பிக்கை
 
தீ !

இந்தியப் பொருளாதாரம்


கொள்கை தவறா அல்லது கோட்பாடு தவறா?
சாப்பாடு இல்லாதோரின் கூப்பாடு தவறா?

அனல் , நெருப்பு , வெப்பம் , கொதிப்பு , சுவாலை
இவை அத்தனையும் அடக்கி ஒரே வார்த்தை தீ !:flame:
 
Status
Not open for further replies.
Back
Top