• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
காதலர் தினம்


உன்னைப் படைத்தபின் - உன்னிடம்
தன்னைப் படைக்குமாறு
பிரம்மனும் கேட்டிருப்பான்!

குரலோ வெண்பா - மெல்லிய
அங்கங்களோ அடுக்குத்தொடர்
சங்கங்கள் காணா தமிழ் நீ!

பார்வை யாப்பு; படராது மூப்பு - அழகுப்
பாவை மொழி எனது காப்பு;
இலக்கணங்களின் இலக்கணம் நீ!

இடையோ இல்பொருள் உவமை - அவயங்கள்
எடுத்துக்காட்டு உவமை
உவமையில்லா உவமை நீ

பிறிது மொழிதல் வேண்டாம் - பெண்ணே
இடம் பொருள் ஏவல் அறி;
என்னிடம் சேரும் நேரம் குறி.

உன்னை நேர்நேர் காண முடியாததால்
நிரைநேர் அடையவில்லை நான்.
நேர்நிரை செய்வோம் வா!
 
Last edited:
பரமசிவம்



அன்பே சிவம்
ஆக்கலும் சிவம்
இகபர சுகம்
ஈவதும் சிவம்

உலகை யாள்வது சிவம்
ஊழ்வினை தீர்ப்பது சிவம்
எங்கும் எதிலும் சிவம்
ஏகன் அநேகன் சிவம்

ஐயம் தீர்க்கும் சிவம்
ஒப்பில்லா கடவுள் சிவம்
ஓதற்கு அரியவன் சிவம்
ஔஷதம் சிவம்
 
இந்திய நாடு என் வீடு; இந்தியன் என்பது என் &a

இந்திய நாடு என் வீடு; இந்தியன் என்பது என் பேரு



ஒருவேளை உணவுமின்றி
ஒட்டிப்போன வயிறுடன்
ஒடுங்கிக் கிடப்போர்
ஒருபுற மிருக்க
தானியக் கிடங்கிலோ
தானாயழியும் உணவுப்பொருள்!

நாளொன்றுக்கு இரண்டு ரூபாய்
நாணயம் கூட கிட்டாமல்
நாறிக் கிடப்போர் கோடி;
நாடுகளை எல்லாம் சுற்றிவர
நாட்டின் முதற்க் குடிமகளின்
நடப்புச்செலவோ இருநூறு கோடி!

விமான நிலையத்தில்
குளுமை சூழலில்தான்
கூடுதல் நிறுத்தம்.
நபர் நடிகரென்பதால்
நாட்டு ஆட்சியாளர்கள்
நியாயம் கேட்கின்றனர்.

குழாயடி, மருத்துவமனை,
குடிமைப்பொருள் கடைகளில்
அன்றாடம் காத்திருப்போர்
ஆயிரமாயிர முண்டு;
அவர்களுக்கென்று கொஞ்சமும்
அவகாசமில்லை அரசிடம்.

மட்டை விளையாட்டில்
ஓட்டம் எடுத்தவருக்கு
வருமானவரி விலக்கு
சுங்கத்தீர்வை ரத்து;
நாடாளுமன்றத்தில் அந்தஸ்து;
விருதுக்கு சிபாரிசு.

ஒவ்வொரு காரியத்திற்கும்
ஓட்டமாய் ஓடிக்களைத்து
சட்டத்தின் பிடியில்சிக்கி
சக்கையாய்ப் போன
சாமானிய குடிமகனை
சட்டைசெய்யவும் யாருமில்லை!
 
Last edited:
''அவனுக்கு சட்டை போடவும் ஆளில்லை''- என்று முடிக்கத் தோன்றுகிறது...அப்படி ஒரு கவிதைப் பிரளயம் மீண்டும் உங்களிடமிருந்து…நன்றி
 
சூழ்நிலைக் கைதி


இந்த பூமிக்கு நான் வந்த போது
எதுவும் தெரியாமலிருந்தேன்.
தாயின் அரவணைப்பு...
அவள் மார்பில் பால்குடி...
கிலுகிலுப்பைச் சத்தம்...
சிறுது சிறிதாய் தெரியத் தொடங்கியது...
உடனே என்னைக்
குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டனர்.

அழுகை... அவஸ்தை....
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரிச்சயம்.
பிற குழந்தைகளுடன் கூடி
விளையாடி மகிழத் தொடங்கிய நேரம்
என்னைப் பள்ளிக்கு அனுப்பினர்.

கண்டிப்பு... கண்காணிப்பு...
மெல்ல என்னைத் தேற்றிக்கொண்டு
படிப்பில் கவனம் செலுத்தினேன்.
புது நண்பர்கள், புதுப் புரிவு.
நிலைபெறத் தொடங்கிய நேரம்
மேற்படிப்புக்கு அயல்நாடு அனுப்பினர்.

இனம் தெரியாது, கலாச்சாரம் புரியாது;
கலவரப்பட்டு, கஷ்டப்பட்டு
என்னைப் பழக்கிக் கொண்டேன்.
உடனே வேலை, திருமணம்...

மீண்டும் ஒரு சவால்.
மீண்டும் ஒரு மறுதலிப்பு.
மீண்டு வருவதற்குள்
எனக்கே ஒரு குழந்தை.

மழலையின் ஸ்பரிசத்தில்
மகிழ்ந்திருக்க முடியாமல்
பொருளாதாரச் சூழ்நிலை.

எனக்கு நடந்தவைகளை
என் பிள்ளைக்கு நடத்திக்காட்ட....
இப்போதோ
நான் முதியோர் காப்பகத்தில்!

எனக்கென்று வாழ்வு இல்லையா?
எனக்கென்று மனிதர் இல்லையா?
எப்போதுமே நான் சூழ்நிலைக் கைதியா?
 
சூழ்நிலைக் கைதி
''...எனக்கென்று வாழ்வு இல்லையா?
எனக்கென்று மனிதர் இல்லையா?
எப்போதுமே நான் சூழ்நிலைக் கைதியா?...''



வாழ்க்கையின் எதார்த்தங்களை வெகு நேர்த்தியாக சாடியதர்க்கு நன்றி…
 
எனக்கென்று வாழ்வு இல்லையா?
எனக்கென்று மனிதர் இல்லையா?
எப்போதுமே நான் சூழ்நிலைக் கைதியா?

சந்தேகம் தீர்க்க முடியுமா?


'என் தாயே' என்று பெற்றோர் போற்றி,

என் மீது தம் அன்பை முழுதும் கொட்டி,

சிறுமியாக நான் பேசிய மழலைகளே
அருமை என வியந்து, கேட்டு மகிழ்ந்து,

குமரிப் பருவம் வரை மிக நேசம் காட்டி,
குணக் குன்றாகவே என்னை வளர்த்து,

நல்ல கல்விச் செல்வம் மட்டும் அன்றி,
பல்வேறு கலைகளில் சிறக்க வைத்து,

குரு பலன் வந்தது என்று, மணாளனாக
ஒருவனைக் கொணர்ந்து, மணமுடித்து,

என்னை வேறு குடும்பத்துக்கு அளிக்க,
என் ஆசைகளைப் பின்னுக்குத் தள்ளி,

நான் சேர்ந்த குடும்பம் உயர உழைத்து,
நான் பிறந்த குடும்பத்தை நெருங்கவே

அதிக சந்தர்ப்பங்கள் வராது போய்விட,
அந்திக் காலம் வரை வேறாகிப் போன

நான், எந்த விதக் கைதி எனச் சொல்லி,
என் சந்
தேகம் தீர்க்க முடியுமா, நண்பரே?

 
இலக்கியத்தில் ஒரு காட்சி:

அலர் கேட்ட தாய்க்கோ துயிலில்லை
அவள் அஞ்சிய நோய்க்கோ மருந்தில்லை-

பொழுது புலரும்முன்னே ஓடுகிறாள் அவள்
எதிர்ப்பட்ட முகங்களில் எல்லாம் தேடுகிறாள்

என்மகள் இவர்களிடை தென்பட வில்லையே
பின் எங்கு சென்றாளோ - என்றேங்கிய

அவளுக்கு எதிர்ப் பட்டதோர் கானகம்
வாடிய முகத்தினுடே கானகத்தில் தேடிய

அவளுக்கோ வந்துற்றான் ஒரு தவமுனியே
தொழுது பின் அழுது கேட்டாள்

அய்யா என்மகளைப் பார்த்தீரோ- என்றே
உற்றார் கேட்கின்றனர் ஊரார் பழிக்கின்றனர்

எந்த ஆடவனோடு சென்றாளோ இவள்மகலென்றே
எழுந்த அலருக்கு என்பதில் சொல்வேனென்று

அழுது கேட்ட அவளுக்கு உரைத்திட்டான்
அழகுற அருமைத் தமிழ் முனியே-

அவள் துயர் ஆற்றினான்-தேற்றினான்
காட்டில் பிறந்த அகிலும் சந்தனமும்

பிறந்த இடத்திற்கு உதவுமோ பெண்ணே
அது புகுந்த இடத்திலன்றோ சிறக்கும்

பெற்றது மட்டுமே உன் கடமை
அவளைப் பேணிக் காத்தலோ அவன்கடமை

விட்டொழி உன் மடமை அவன்
போற்றிக் காத்திடுவான் உன் மகளை

என்றே கூறித்தன் வழி சென்றான்
தவ முனி அவனும் தானே

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை

-திருக்குறள்
 
Last edited:

அழகாக உரைத்தீர், நண்பர் ஷண்முகம் அவர்களே!

பெண்ணுக்குப் பெருமை அவள்
கண்ணான கணவனின் இடமே! :thumb:
 

சந்தேகம் தீர்க்க முடியுமா?


'என் தாயே' என்று பெற்றோர் போற்றி,

என் மீது தம் அன்பை முழுதும் கொட்டி,

சிறுமியாக நான் பேசிய மழலைகளே
அருமை என வியந்து, கேட்டு மகிழ்ந்து,

குமரிப் பருவம் வரை மிக நேசம் காட்டி,
குணக் குன்றாகவே என்னை வளர்த்து,

நல்ல கல்விச் செல்வம் மட்டும் அன்றி,
பல்வேறு கலைகளில் சிறக்க வைத்து,

குரு பலன் வந்தது என்று, மணாளனாக
ஒருவனைக் கொணர்ந்து, மணமுடித்து,

என்னை வேறு குடும்பத்துக்கு அளிக்க,
என் ஆசைகளைப் பின்னுக்குத் தள்ளி,

நான் சேர்ந்த குடும்பம் உயர உழைத்து,
நான் பிறந்த குடும்பத்தை நெருங்கவே

அதிக சந்தர்ப்பங்கள் வராது போய்விட,
அந்திக் காலம் வரை வேறாகிப் போன

நான், எந்த விதக் கைதி எனச் சொல்லி,
என் சந்
தேகம் தீர்க்க முடியுமா, நண்பரே?

என் சந்தேகம் தீர்க்காமல் :bolt:

இது ஞாயமா,
நண்பரே?
 
என் சந்தேகம் தீர்க்காமல் :bolt:

இது ஞாயமா,
[/B][/B]நண்பரே?

Post no.57 & 58 gave me the impression that your doubt is cleared.

I do not think that the present day married women do not have the freedom to take care of their parents. In fact in many cases, the parents live with them. What you have described might be applicable to the previous generation.
 

Dear Siva Sir,

I wanted to get your reply for my write-up. Of course, I liked the answer that Shanmugam Sir gave!

As you have pointed out, girls' parents have the upper hand now a days.

1. Girls love their parents much more than their parents in-law.

2.
They are well educated, earn and save ALL the money. (in most of the cases)

3. The husband is supposed to take care of all the expenses in the home front. (mostly)

4. Since the number of children in each family is either one or two, many parents have only daughters!

5. Men have become more submissive to their partners, in the present generation.


PS: I know a man in his seventies, threatening his wife that he will file a divorce suit NOW!!

 
I know a man in his seventies, threatening his wife that he will file a divorce suit NOW!!


He might be thinking he is "threatening" his wife while she might actually be relieved! :pout: I pity the women of yester years and I dislike women of current generation. Athi vrushti and anaa vrushti kathai. So, at the end of the day, money decides (strength of) relationship??!!
 
Athi vrushti and anaa vrushti kathai...ஹரிதாச சிவா சார்...
கதை சொல்லுங்க கேட்போம்...
 

athi vrushti or anaa vrushti' means either floods or drought!

தமிழில் 'பெய்ந்தால் பெய்யும்; காய்ந்தால் காயும்' என்கின்றோமே!
 
உன் தாக்கம்; என் ஏக்கம்


எங்கே உன் வாசம் (இருப்பு)
என்பதைக் காட்டும் உன் வாசம் (மணம்);
என்னை நான் மறந்து
வயப்படுவேன் உன் வசம்

புவியீர்ப்பு விசையைப் பொய்யாக்குகிறாய்.
ஏனெனில் நீ அருகிலிருந்தால்
நான் மேலே அல்லவா
செல்வதாய் உணருகிறேன்?

கண்களைத் திறக்கும் முன்
சொல்லிவிட்டுத் திற;
ஒளியின் தாக்கத்தில்
என் கண்கள் கூசுகின்றன!

வார்த்தை பகருமுன்
சைகை செய்து விடு;
இசையின் இனிமையில்
நான் மயங்கிப்போகிறேன்

நீ வரும் திசையை
முன்னறிவுப்பு செய்;
திடீர்ப் புயலால்
நான் திக்குமுக்காடி விடுகிறேன்.

உறக்கத்திலும் நீ;
விழிப்பிலும் நீ;
களிப்பினில் நான்
களைப்பிலும் நான்!
 
அவள் வரும் திசையை அவள் வாசமே காட்டுமே! :spy:
 
மலரினும் மென்மையான நயம்
உங்கள் கவிதை காதலைச் சொல்லிய
விதம்

நன்றி
சிவஷன்முகம்.
 
ஆமாம். எல்லாமாய் சேர்ந்துதான் என்னைப் படுத்துகின்றன!
உங்கள் பதிலைப் படித்த பின் ஒரு தலைப்பு மனதில் தோன்றியது!

அது 'மோசம் செய்த வாசம்' / 'வாசம் செய்த மோசம்'!


இதோ அதற்கு ஒரு smiley கவிதை:

:love: => :hug: => :bolt: => :faint:


 
Hello Siva sir ,wow ,such a wonderful creations .its very touchy ,practical,simple and too good.gud luck keep rocking .3 cheers (its nice to see many persons with more of poetic knowledge Mrs VR ,RR ,BUSHU,,Mr.SHAMUGAN sir .to my knowledge.) Challa baga unndi sir .
 
Thank you Sivashanmugam sir, RR madam and Dr.Narayani madam for your comments. Special thanks to Dr for the 3 cheers and detailed analysis. 'Practical and simple' - that is what I mostly aim for. Meeru raase vithamum chaala baaga unthi.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top