அழகும், அறிவும்!
பேரழகி ஒருத்திக்கு, வாழ்வில் ஒரு
பேராசை இருந்தது, நன்மக்கள் பெற.
தனக்கு அறிவாற்றல் இல்லாததால்,
தனக்கு அறிவாளிக் கணவன் தேடி,
அறிவும், அழகும் மிகவும் நிறைந்த,
சிறந்த பிள்ளைகள் பெற வேண்டி,
அழகே இல்லாமல் உள்ள ஒருவர்,
அறிவு நிறைந்து இருப்பது அறிந்து,
மிகவும் பணிவுடன் அவரை நாடி,
மிகவும் ஆசையுடன் சொன்னாள்,
'என்னை நீங்கள் மணந்தால், நாம்
என்னைப் போன்ற பேரழகுடனும்,
தங்களைப் போன்ற அறிவுடனும்,
தங்கமான பிள்ளைகள் பெறலாம்!'
அழகில் அறிவு மயங்குமா என்ன?
அழகாக அவரும் பதில் உரைத்தார்,
'என்னைப் போன்ற அழகு பெற்று,
உன்னைப் போன்ற அறிவு பெற்ற
பிள்ளைகள் நமக்குப் பிறந்தால்,
உள்ள சந்தோஷமும் போகுமே!'
:bump2: