எண்ண அலைகள்....


தண்டனை கிட்டுமா?

பெண்ணைத் தேவியாக நினைக்கும் நாட்டில்,
பெண்ணை மானபங்கம் செய்யும் கூட்டங்கள்!

ஐம்புலன்களின் கட்டுப்பாடே இல்லாத சிலர்,
ஐந்தறிவு மிருகங்களை விடவும் கேவலமான

இழிந்த குணங்களுடன் வந்து, ஒரு பெண்ணை
அழித்துவிட்டனர்! இது பெரிய கொடுமைதான்!

முன் காலத்தில் 'கழுவில் ஏற்றுவது' என்பதாக,
தண்டனை ஒன்று உண்டு! நெடிய மரம் ஒன்றை

நிறுத்தி, அதன் நுனியைக் கூர்மையாக வெட்டி,
நிறைய எண்ணெய்யை அதன் மேல் தேய்ப்பர்;

குற்றவாளியின் கால்களை மடித்துக் கட்டுவர்;
குற்றவாளியைக் கூரான பகுதியிலே ஏற்றுவர்!

உடல் எடையால் உடல் கீழிறங்க, கூரிய மரம்
உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற, வலியால்

துடித்துக் கதறி இறப்பான்; இறந்தவனின் உடல்
கடித்துக் குதறப்படும் கழுகு போன்றவைகளால்!

மிகக் கொடூரமான தண்டனை என்றாலும், இந்த
மிகக் கொடூர தண்டனையையே குற்றவாளிகள்

இன்று பெற வேண்டும் என்று என் எண்ணத்தில்
இன்று தோன்றுகிறது! இந்த எண்ணம் சரிதானா?


:decision:
 

மார்கழி மழை!


வருண பகவானுக்கு, மழையை வேண்டி
அருமையாய்ப் பூஜை செய்வர்; ஆனால்

நீர் பெருகிட வரும் மழைக்கு இந்திரனும்,
நீர் நிலைகளுக்கு வருணனும் தேவராம்!

பனிக் காலம் வந்தால் மஞ்சுதான் வரும்;
இனி மழை வராது என்றுதான் உரைப்பர்!

சிங்காரச் சென்னை குளுமையாகிவிடப்
பாங்காக வந்தது தூறல் மழை! இப்போது

சை விழாவால் கான மழை பெய்திருக்க,
இசை கேட்க விரும்பி வந்தான் இந்திரன்!

இசை இந்திரன் கேட்பது தவறில்லை; நாம்
இசை கேட்கச் செல்வது தடைபடாதவரை!


:rain: . . . :music:
 

பௌர்ணமியில் ந ன்நாட்கள்!


புத்தாண்டு பிறந்தால் புது மகிழ்ச்சி வரும்;
முத்தான பண்டிகைகள் இனித் தொடரும்!

விசேஷ தினங்கள் வரும் பௌர்ணமியில்;
விசேஷம் துவங்கும் தைப்பூச நன் நாளில்!

அடுத்த பௌணமியில் மாசி மகம்; அதற்கு
அடுத்து வரும் பங்குனி உத்திரத் திருநாள்!

இத்தரை புகழும் சிறப்பான ஒரு நாள்தான்
சித்திரா பௌர்ணமி, சித்திரை மாதத்தில்.

வைகாசி விசாகம்; அரசாளும் ஆனி மூலம்;
வையகம் போற்றுவது ஆவணி அவிட்டம்!

மஹாளய பக்ஷம் துவக்கம் புரட்டாசியில்;
மஹா தீபம் வரும் கார்த்திகை மாதத்தில்!

சத்ய நாராயண பூஜை பௌர்ணமி நாளில்,
சிரத்தையாய்ச் செய்தால் என்றும் நலமே!

ஒளி தர முழு நிலவு வரும் நாளில், அன்பு
ஒளி பரவ வைத்திடுவோம் நமது மனதில்!

:grouphug:
 

புத்தாண்டே வருக!


என்றும் நிற்காது ஓடும் காலச் சக்கரத்தில்,

என்றும் இனிமை தரும் நாளே புத்தாண்டு!

பழையன கழிதல், புதியன புகுதல் உண்டு;

பழைய நாட்காட்டிகள் புதியதாய் மாறும்!

சென்ற ஆண்டின் இன்பங்களை மட்டுமே
அன்று நாம் நினைத்து மகிழ்ந்திடுவோம்!

வந்த துன்பங்கள் ஏதாயினும், இனிமேல்
வந்து சேராது என்று நாம் நம்பிடுவோம்!

சுற்றி வரும் சுற்றத்தை, நட்பைப் பாரட்டி,
மற்றவர் இன்பத்தில் நாம் இன்புறுவோம்!

எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, நம்
வல்லமை வளர்ந்திட உழைத்திடுவோம்!

:thumb:
 

என் எண்ண அலைகளை ஊக்குவிக்கும் அனைத்து


அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



உலகம் உய்ய வேண்டும்,

ராஜி ராம் :pray:
 

மென்மை தேவை!


மேன்மையான இறை அனுபவத்திற்கு,
மென்மையான இசைதான் வேண்டும்

என்று எண்ணுவது என் வழக்கம் ஆகும்.
அன்று இசைக் கலைஞர்கள், கற்பனை

ஸ்வரங்கள் பாட, மின்னல் போல் சில
ஸ்வரக் கோர்வைகள் பாடி அசத்துவர்!

கரகோஷம் வானைப் பிளக்கும்! இன்று
கரகோஷம் வேண்டியே, முழு நேரமும்,

'சற்றே விலகி இரு பிள்ளாய்' என்று
சற்றே ஸ்ருதி விலகுவதும் அறியாது,

மின்னல் வேகத்தில் பாடுவது, பலரின்
தன்னிகரில்லாப் பாணியாக ஆயிற்று!

ஒலி அமைப்பால் நம் காது பிளந்திடும்;
ஒளி அமைப்பால் கலைஞர் வியர்ப்பர்!

அடடா! இது என்ன கொடுமையடா சாமி!
I pod இல் பாட்டுக் கேட்டுக் கேட்டு, நமது

சிங்காரச் சென்னை மக்கள் எல்லோரும்,
செவிப் புலனின் திறனை இழந்தனரோ?

:becky: . . .
:horn:
 
என் காதுகளில் பஞ்சு உருண்டைகளை வைக்காமல் நான் கச்சேரிகளுக்குச் செல்லுவது இல்லை!! :horn:
 
........
இதுபோல் எழுத இனி ஆயிரமாண்டுகள் ( :nono: )

ஆகும் என்று நினைத்தால் ஆச்சரியமே!
..........
:sorry: சரியான வரிகள்:

இன்றைய விசேஷம்! (12 - 12 - 12 )

மாதங்கள் பன்னிரண்டு ஓர் ஆண்டில்;
மாதம், நாள், வருடம் என்ற வடிவில்

எழுதுவதும், நாள், மாதம், ஆண்டு என
எழுதுவதும் உலகிலே வழக்கமாகும்!

எந்த முறையில் எழுதினாலும், அதில்
எந்த மாற்றமும் வராதிருப்பது, நாளும்

மாதமும் ஒரே எண்ணாக இருந்தாலே!
மாதம், நாளுடன், வருடமும் ஒரே எண்;

அதுதான் இன்றைய விசேஷ நாளாகும்!
இதுபோல் எழுதிட இனி நூறு ஆண்டுகள்

ஆகும் என்று நினைத்தால் ஆச்சரியமே!
அதில் இன்று மதியம் பன்னிரண்டு மணி,

பன்னிரண்டு நிமிடம், மேலும் நொடிகள்
பன்னிரண்டு என்பது மிக மிக விசேஷம்!

இந்த விசேஷ நேரத்தினை நாம் தாண்டிய
அந்த மகிழ்வை நினைவில் கொள்வோம்!


:thumb:
 

வயலின் மாமேதை!


அயல் நாட்டின் இசைக் கருவியாக இருந்த

வயலின், சில மேதைகளின் முயற்சியால்

மேன்மையான கர்னாடக இசைக்கும் வந்து
மேன்மையான கலைஞர்களையும் தந்தது!

இந்தியாவின் வட பகுதியிலே ஒரு வகை;
இந்தியாவின் தென் பகுதியில் ஒரு வகை

என்று இருக்கும் இரு இசை வடிவங்களை,
ஒன்று சேர்த்துப் புதிய பரிமாணம் தந்தனர்,

பரூர் சகோதரர்களான திரு. அனந்தராமன்,
திரு. கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவர்!

மின்னல் வேக சங்கதிகள், ஸ்வரங்களோடு
தன்னிகரில்லா கமகங்களையும் சேர்த்து,

ஏழு ஸ்வரங்களின் இனிய சஞ்சாரங்களை,
ஏழு ஸ்தாயி வரை இசைத்த வல்லுனர்கள்!

திரு. M. S. Gநேற்று இறைவனடி சேர்ந்தார்!
ஒரு பெரிய இழப்பு சங்கீத உலகிற்கு, இது!

மிகப் பெரிய ஆறுதல் என்னவெனில், அவர்
மிக அரிய சிஷ்யர்களை உருவாக்கியதே!

அன்னாரின் நல்ல ஆத்மா சாந்தி அடைய,
அனைத்து ரசிகர்களும் பிரார்த்திப்போம்!


:rip: . . . :pray2:
 

நல்ல இலவச இணைப்பு!

என்ன பொருள் வாங்கினாலும், எதையேனும்
சின்ன இலவச இணைப்பாகத் தருவது உண்டு!

என் தந்தை கேலியாகக் கூறுவார், 'காருடனே
சின்ன ஸ்பூனைக் கொடுத்தால், மகிழ்வுடனே

தாய்க் குலம் சென்று காரை வாங்கிடும்', என்று!
தாய்க் குலம் என்றும் இலவசத்துக்கு மயங்கும்!

பிரபலமான மார்கழி இசைவிழா நடக்கும்போது,
பிரபல துணிக்கடை நிறுவனர் ஒருவர் தருகிறார்

கையேட்டுப் புத்தகம் இலவச இணைப்பாக! அது
கைப் பையில் இட்டு, இசைக் கச்சேரிகள் கேட்கச்

செல்லுகிறார் சிங்காரச் சென்னையில் பெண்கள்!
சொல்லுகிறேன் என்ன காரணம் என்று! அதிலே

ஆயிரக் கணக்கில் கர்னாடக இசைப் பாடல்களை
ஆர்வத்துடன் சேகரித்து, அவைகளுக்கெல்லாம்

ராகம், தாளம் மற்றும் இயற்றியவர் பெயர், என்று
வேகமான தேடலுக்கு உதவும் பட்டியல் உண்டு!

'ஆயிரம் பாட்டுக்கு முதல் அடி தெரியும்; ஆனால்,
ஆயிரம் ராகங்களும் நான் அறியேனே!', என்பாள்

என் நண்பி, நான் ராகம் சொல்லுகின்ற சமயத்தில்.
தன் கையேட்டுடன் இந்த இசைவிழாவில், அவள்

பல பாடல்களுக்கு ராகத்தை அறிந்துகொண்டாள்!
சில நல்ல இலவச இணைப்புகளில் இதுவும் ஒன்று!

:clap2:
 

காலம் மாறிவிட்டது!


காலம் தலைகீழானது என்று புலம்புவதை

நேரம் போகச் சிலர் செய்வார்கள், எனினும்

இந்தச் சொற்கள் நிஜமே என்று தோன்றும்,
வந்த பல மாற்றங்களை நாம் பார்த்தால்!

அருகிலில்லாதவருடன் பேச விழைந்தால்,

அருகிலுள்ள தொலைபேசியை நாடுவோம்!

இப்பொழுது, அனைவருமே கைப்பேசியைத்
தப்பாது வைத்துள்ளார் தம்மிடம் எப்போதும்!

தரையில் அமர்ந்து குழவியைச் சுற்றினாலே,
விரைவில் வந்திடும் அரைத்த மாவு! இன்று,

மாவு அரைக்கும் இயந்திரத்தில் காண்போம்,
மாவு அரைக்கும் குழவி சுற்றாத விந்தையை!

புகைப்பட ஆல்பங்களைத் தூக்கிச் செல்லாது,
புகைப்படங்களைக் கணினி வழியே அனுப்பி,

சந்தோஷப் பறிமாற்றங்களை உடனுக்குடன்,
சந்தோஷமாகச் செய்திட வழிகளும் உண்டு!

தொலைதூரம் சென்ற சுற்றம் நட்பினை, நாம்
தொலைதூரம் செல்லாமலேயே காணலாம்!

விஞ்ஞான வளர்ச்சிகள் வேண்டியவைதான்!
நம் ஞாலம் மேன்மையுறச் செய்பவைதான்!

:high5: . . . :thumb:
 

இது ஒரு தோஷம்தான்!


ஆதவன் சுட்டெரிக்கும் சிங்காரச் சென்னையில்,

ஆறுதல் தருவது மார்கழியின் குளிர் மட்டுமே!

இந்தக் காலம்தான் விடுமுறையும் வருவதால்,
எந்த மாதமும் இல்லாத இசை மழை பொழியும்!

இசைக் கலைஞர்கள் அவதிப்படுவர், தங்களை
இசைக்க விடாது தடுக்கும் ஜலதோஷத்தினால்!

சிறு இருமலும், ஒலிபெருக்கி வழியே மிரட்டும்;
சிறு கம்மலும், தொண்டையில் வந்து அரட்டும்!

கம்மலைக் காதுகளிலே அணிந்தால் மின்னும்!
கம்மல் தொண்டையில் வந்தால் என்னவாகும்?

சரீரத்தின் அழகை மேம்படுத்துமளவு, இவர்கள்
சாரீரத்தை கவனிக்க விழையாதது கொடுமை!

எல்லொருக்கும் மின்னல் வேக ஸ்வரங்களை
எல்லாப் பாடல்களிலுமே பாடவும் வேண்டும்.

இப்படி ஆசை ஒன்றினை மனதில் கொண்டால்,
எப்படி அது சாத்தியமாகும், ஜலதோஷத்தோடு!

என் குருநாதரிடம் கற்ற ஒருவர் பாடும் பொழுது,
தன் ஸ்ருதி 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என

அடம் பிடித்து விலகிப் போக, கவலையே இன்றி,
தடம் விலகிப் போன வண்டியைப் போலவே பாடி,

நல்ல மாலை வேளையையே கெடுத்துவிட்டார்!
நல்ல சரீரத்தைச் சீராக வைக்க மறக்கலாமோ?

கம்மல் சரீரத்துடன் மேடை ஏறுவதைத் தடுக்கக்
கட்டாயச் சட்டம் வந்தால் நன்றாய் இருக்குமோ?

:decision:
 
Last edited:

நான் ஓர் இல்லத்தரசி!


நான் ஓர் இல்லத்தரசி! இந்த இல்லம் முழுதும்

என் கட்டுப்பாட்டிலே இருக்கும்; இதுவும் நிஜம்!

இல்லத்தின் தரை எனதே அல்லவா? அதனால்,
இல்லத்தின் தரையச் சுத்தம் செய்திடும் பெண்,

உடல் நலம் இல்லை எனக் கூறி வராவிட்டால்,

உடன் என் வேலையாக அது மாறுவதும் நிஜம்!

துவைக்கும் இயந்திரமும் எனதல்லவா! எனவே,
துவைக்க வேண்டும் துணிகளை, நானே என்றும்!

சமையல் அறை என் சாம்ராஜ்யம்; அதனால் நான்
சமையல் செய்திடச் சலிப்பது நியாயம் ஆகுமோ?

விருந்துக்கு வந்தவரை வேலை வாங்காதிருக்க,
விருந்து தயாரிப்பது என்றுமே நான் ஒருத்திதான்!

இயற்கை அழைப்புகளுக்கு என ஒதுக்கிய இடமும்,
இயல்பாகவே வந்து சேரும் எனது பராமரிப்பிற்கு!

உடன் பிறப்புக்களைக் காணச் செல்ல, என் நாளும்
உடன் கிடைக்காது அனுமதி, தலைவரிடமிருந்து!

எப்படி இருந்தாலும், பெருமையாகச் சொல்லுவேன்
இப்படி: 'நான் ஓர் இல்லத்தரசி'! இது எப்படி இருக்கு?


:ballchain: . . . :roll:
 
பெண்கள் எல்லோரும் அரசிகளே!

கடும் உண்மை சுடும் என்றாலும் நான் :flame:
உண்மை உரைப்பேன் அன்புத் தங்காய்!


நாம் இனிய இல்லத்து அரசிகளே!
நாம் அணிவதோ முள் கிரீடங்கள். :drama:

முள்ளை வைரமாக பாவிக்க வேண்டும்;

முல்லை சிரிப்புக்கு அது ஒன்றே வழி! :becky:


"உனக்கு என்று இனித் தனியாக எதுவும்
உள்ளது என உன்னுவது உன் கற்பனை!"

தினமும் கண்ணாடி முன் நின்று இதனை
மனனம் செய்வது நலம் பயக்கும் உண்மை !!! :pout:
 
deft definitions.

வேலைக்காரி


அழுக்கு (நாற ??) வேலைகளை
அழகாக நம் தலையில் சுமத்திப் :bolt:

பெருக்கி மொழுகி அலுங்காமல்
சிறக்க வாழும் சிங்காரி இவள்! :clap2:



வீட்டுக்காரர்

வீட்டுத் தலைவர் இவர் என்பதால்
வீறாப்புடன் கோலோச்சும் அரசன்! :whip:


வீட்டுக்காரியின் ஜன்ம காரணமே
விழுந்து விழுந்து உழைப்பதற்கு!!


உடல் பொருள் ஆவி மூன்றும்
உண்மையில் சொந்தம் தனதே!!


இத்யாதி கருத்துக்களை மனதில்
வித்தியாசமாகப் பதிததுள்ளவர்!


வீட்டுக்காரி


வீட்டின் ஓர் 'ஆல் இன் ஆல்' இவர்.
வீட்டின் 'பேக்ரௌண்டும்' இவரே!

வீட்டின் 'ஷாக் absorber' இவரே.

வீட்டின் 'பவர்' அற்ற அரசி இவரே! :whoo:
 

புதிய தலைமுறைப் பெண்கள்!


'அடக்கம் அடிமையாய் வைக்கும் அடங்காமை
அரசியாய் உயர்த்தி விடும்'
என்ற எண்ணத்தில், புதிய தலைமுறைப் பெண்கள் மாறிவிட்டார்களோ? :moony:
 
மதுரை சிதம்பரம் வீட்டிலே ஒன்ற
விதவித மாகுமே வாழ்வு.

மதுரை சிதம்பரம் ஒன்றாக ஆகிவிட்டால்
மாமியார் என்னா வது?
 
மதுரை சிதம்பரம் வீட்டிலே ஒன்ற
விதவித மாகுமே வாழ்வு.

மதுரை சிதம்பரம் ஒன்றாக ஆகிவிட்டால்
மாமியார் என்னா வது?
மதுரை சிதம்பரம் ஒன்றாயின் பதுங்கி
விடுதல் மாமியார்க் கழகு. :peep:
 
வீட்டுத் தலைவர் இவர் என்பதால்
வீறாப்புடன் கோலோச்சும் அரசன்! :whip:


வீட்டுக்காரியின் ஜன்ம காரணமே
விழுந்து விழுந்து உழைப்பதற்கு!!


உடல் பொருள் ஆவி மூன்றும்
உண்மையில் சொந்தம் தனதே!!


இத்யாதி கருத்துக்களை மனதில்
வித்தியாசமாகப் பதிததுள்ளவர்!


ஆஹா...ஏன் இந்த ஆதங்கம்...??!!

TVK
 
வீட்டுத் தலைவர் இவர் என்பதால்
வீறாப்புடன் கோலோச்சும் அரசன்! :whip:


வீட்டுக்காரியின் ஜன்ம காரணமே
விழுந்து விழுந்து உழைப்பதற்கு!!


உடல் பொருள் ஆவி மூன்றும்
உண்மையில் சொந்தம் தனதே!!


இத்யாதி கருத்துக்களை மனதில்
வித்தியாசமாகப் பதிததுள்ளவர்!


ஆஹா...ஏன் இந்த ஆதங்கம்...??!!
அனுபவம் பேசுகிறது தவக்கவி அவர்களே! :)
 

தை பிறந்தால்...

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது
மெய் என்று நம்பிப் பெற்றோர் பலரும்,

தம் பிள்ளைகளுக்கு வரன் வேட்டை
மும்மரமாகச் செய்ய வருகிற மாதம்!

செவிக்குணவு தந்த இசை மழை போய்,
நாவுக்குணவு வித விதமாகச் செய்திட,

பொங்கும் பொங்கல் நன் நாளும் வந்து,
பொங்கும் மகிழ்வு இல்லங்கள்தொறும்!

பழையன கழிதலும், புதியன புகுதலும்,
அழகிய வகையில் எங்கும் அரங்கேறும்!

புற அழகை மட்டும் மேம்படுத்தாது, நம்
அக அழகை மேம்படுத்த முனைவோம்!

நீரும், உணவும் உலகிற்குக் கிடைத்திட
சீரும் சிறப்புமாய் உலவும் ஆதவனை,

உலகம் உய்ய மனதாற வேண்டுவோம்!
பழகும் சுற்றம் நட்பையும் சந்திப்போம்!


பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! :pray:
 
Back
Top