எண்ண அலைகள்....

அந்தக் குழந்தைகளை
ஐந்தில் வளைப்பதற்கு மாறாக
தாமே ஐம்பதிலும் வளைந்து, குழைந்து
நீட்டி முழக்கி டான்ஸ் ஆடி
அவர்கள் பெற்றோர் பண்ணும் சேட்டை
காணச் சகிக்கவில்லை,
நம் மாமிகளும் பாட்டிகளும் இதில் அடக்கம்!
டெலிவிஷம் என்று சும்மாவா சொன்னார் சத்யசாயி!
 
........ பெற்றோர் பண்ணும் சேட்டை காணச் சகிக்கவில்லை, நம் மாமிகளும் பாட்டிகளும் இதில் அடக்கம்!....
மனம் வருந்த வைக்கும் பல நிகழ்வுகளை நான் காண்கிறேன்! ஒரு திருமணத்தில், குட்டி உழக்கு ஒன்று பாவாடை சட்டை

போட்டிருந்தது! அவள் அணிந்த பா
வாடையை அவளின் அம்மா கீழே இழுத்துவிட்டு, belly button தெரிய செட் செய்ய,

குழந்தையோ அதை மேலே இழுத்துவிட்டு நடந்தது. இது action replay போல, பலமுறை தொடர்ந்தது! :pout:
 
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று

ஆடுமாறு வேண்டினார் பாரதி, மக்களை!

ஆனந்த சுதந்திரம் கிடைக்குமென நம்பி,
ஆனந்தமாய்ப் பாடிய விடுதலைப் பாடல்!

விடுதலை கிடைக்கும் முன்னே, ஆனந்த
விடுதலை வேண்டி அவர் பாடிய பாடல்!

இன்றோ, ஆடுகிறார் டிவி நிகழ்ச்சிகளில்,
தன் குழந்தையின் விரச
ஆட்டங்களுடன்!

அம்மாக்கள் மட்டும் இன்றி, அவர்களின்
அம்மாக்களும் குதித்து, ஆடி மகிழ்கிறார்!

எப்படியோ டிவி-யில் வந்தால் போதுமே!
அப்படியே தம் பெயரும், புகழும் பரவுமே!

இந்த மோகம் தீரும் வரை, நம் நாட்டிற்கு
எந்த விமோசனமும் கிடைப்பது அரிதே!

:peep:
 
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று

ஆடுமாறு வேண்டினார் பாரதி, மக்களை!

ஆனந்த சுதந்திரம் கிடைக்குமென நம்பி,
ஆனந்தமாய்ப் பாடிய விடுதலைப் பாடல்!

விடுதலை கிடைக்கும் முன்னே, ஆனந்த
விடுதலை வேண்டி அவர் பாடிய பாடல்!

இன்றோ, ஆடுகிறார் டிவி நிகழ்ச்சிகளில்,
தன் குழந்தையின் விரச
ஆட்டங்களுடன்!

அம்மாக்கள் மட்டும் இன்றி, அவர்களின்
அம்மாக்களும் குதித்து, ஆடி மகிழ்கிறார்!

எப்படியோ டிவி-யில் வந்தால் போதுமே!
அப்படியே தம் பெயரும், புகழும் பரவுமே!

இந்த மோகம் தீரும் வரை, நம் நாட்டிற்கு
எந்த விமோசனமும் கிடைப்பது அரிதே!

:peep:

Mrs Rajima, Really fantastic. Hats off to you. Keep it up.

Balasubramanian
Ambattur
 
சுற்றும் சுற்றம்!

நம் பெற்றோரும், அதனால் வரும் சுற்றமும்,

நம் கட்டுப்பாட்டில் இல்லை! முற் பிறவியின்

பயனால் வருவது; நம்மால் மாற்ற இயலாதது!
பயன் கருதியே சிலர் நம்முடன் பழகுவார்; நம்

உதவி பெறும் வரை, புகழ்ந்து தள்ளுவார்! பெறும்
உதவி முடிந்ததும், கண்டுகொள்ளாது செல்வார்!

'என் கடன் பணி செய்து கிடப்பதே' என மனதில்
எண்ணி இருந்தால், நமது வாழ்வும் சிறந்திடும்!

ஒரு உதவி செய்து, அதைப் பெற்றவரும் நமக்கு
ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணாது,

பயன் கருதாது உதவும் எண்ணம் வளர்ப்போம்!
பயனுள்ள பிறவியாகவே வாழ்ந்து உயர்வோம்!

:angel: . . . :high5:
 
Raji Garu, Really Superb quote.

While you do your unselfish duty, God will HIS duty to bless you.

Balasubramanian
Ambattur
 
எண்ண அலைகள்: பின்னூட்டம்
துப்பாக்கிக் குறள்! (அஞ்சல் 129)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

நானும் என் நண்பன் ஒருவனும் உயர்நிலைப்பள்ளி நாட்களில் தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களை விரும்பிப் படிப்பதுண்டு. அவற்றின் பின்னணியில் நாங்கள் இந்தக் குறளை இவ்வாறு பொருள்படுத்தினோம்:

துப்பு ஆய்வோர்க்கு துப்பு ஆய (உதவுவது) துப்பாக்கி; (அதுவன்றி) துப்பு ஆய்வோர்க்கு
துப்பு ஆய்வதற்கு உதவும் மழை(யும்).

(மழை பெய்தபின் கால் தடங்கள், கார் டயர் தடங்கள் போன்றன நன்கு பதிவதால் மழை துப்பார்க்கு உதவியது என்றோம்.)

வேடிக்கை ஒருபுறம் இருக்க, இந்த ’துப்பு’ என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதி ஒன்பது வகையான விளக்கங்களைத் தருகிறது:
(ஆதாரம்: Tamil lexicon)

--துப்பு: வலிமை; அறிவு; சாமர்த்தியம்; முயற்சி; உற்சாகம்; பெருமை; நன்மை; பொலிவு; பற்றுக்கோடு; துணை; துணைக்கருவி; ஆயுதம்; தன்மை.
--துப்பு: நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; நெய்.
--துப்பு: தூய்மை.
--துப்பு: பகை (துப்பின் எவனாவர் மற்கொல்--குறள் 165)
--துப்பு: ஆராய்ச்சி; உளவு.
--துப்பு: துரு.
--துப்பு: பவளம்.
--துப்பு: உமிழ்தல்.
--துப்பு: உமிழ்நீர்.

துப்பாக்கி: குறிநோக்கிச் சுடும் கருவி; கதிர்த்தலையைக் கத்தரித்து வீழ்த்தும் நெற்பயிர் நோய்.
துப்பார்: உண்பவர்.
துப்பாள்: உளவறியும் ஆள்.
துப்புக்கூலி: உளவு கண்டுபிடித்தற்கு உதவும் கூலி.

*****
 
எண்ண அலைகள்: பின்னூட்டம்
.................. வேடிக்கை ஒருபுறம் இருக்க, இந்த ’துப்பு’ என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதி ஒன்பது வகையான விளக்கங்களைத் தருகிறது:...........
அஹா! துப்பு என்பதற்கு இத்தனை பொருட்களா?

துப்பு (உணவு) துப்பாக (தூய்மையாக) இல்லையெனத் துப்பில் (ஆராய்ச்சியில்) அறிந்தவர், துப்பை
த் (உணவைத்) துப்புவார் (உமிழ்வார்)!
 
வருவாய் மஹாலக்ஷ்மியே!

ராகம்: ஸ்ரீ. தாளம்: ஆதி.

இயற்றியவர்: ராஜி ராம்

பல்லவி:

வருவாய்
மஹாலக்ஷ்மியே - வரம் அருள

வருவாய் வரலக்ஷ்மியே

அனுபல்லவி:

வருவாய் அருள் மழை பொழிவாய் வரமெலாம்

தருவாய் திருவாய் மலர்வாய் அருள்தர (வருவாய்)

சரணங்கள்:

மணிகள் ஜொலிக்கும் மகுடம் ஒளிர

அணிகலன் கார்முகில் குழலில் மிளிர
வெண்பிறை நுதலில் திலகம் திகழ
தண்மதி வதனத்தில் புன்னகை தவழ (வருவாய்)

வைரைக் குண்டலங்கள் அழகாய் அசைய
வைடூரிய மணி மாலைகள் விளங்க
திருக்கர வளைகளில் ரத்னங்கள் ஒளிர
திருமேனியில் பட்டாடைகள் திகழ (வருவாய்)

பாதச் சிலம்புகள் ஜதியுடன் ஆட
வேத கோஷங்கள் நின் துதி பாட
பலவிதமாய் நாம் பணிந்து கொண்டாட
நலமாய் நம் அனைவரையும் காத்திட (வருவாய்)

குறிப்பு:
'பாக்யாத லக்ஷ்மி பாரம்மா' மெட்டை ஒட்டிப் பாட இயலும்.
அனுபல்லவிக்கு, சரணத்தின் முதல் கடைசி வரிகளின் மெட்டு!

:pray2:
 
பாடல் அமர்க்களம்! நீங்களே பாடகியாதலால், அந்த ’அம்மம்ம/நம்மம்ம’ சேர்த்து இந்தப் பாடலைப் பாடிப் பதிவுசெய்து அந்த mp3 file-ஐ இங்கு சேமிக்கலாமே?
 
Last edited:
எண்ண அலைகள்: பின்னூட்டம்
துப்பாக்கிக் குறள்! (அஞ்சல் 129)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

நானும் என் நண்பன் ஒருவனும் உயர்நிலைப்பள்ளி நாட்களில் தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களை விரும்பிப் படிப்பதுண்டு. அவற்றின் பின்னணியில் நாங்கள் இந்தக் குறளை இவ்வாறு பொருள்படுத்தினோம்:

துப்பு ஆய்வோர்க்கு துப்பு ஆய (உதவுவது) துப்பாக்கி; (அதுவன்றி) துப்பு ஆய்வோர்க்கு
துப்பு ஆய்வதற்கு உதவும் மழை(யும்).

(மழை பெய்தபின் கால் தடங்கள், கார் டயர் தடங்கள் போன்றன நன்கு பதிவதால் மழை துப்பார்க்கு உதவியது என்றோம்.)

வேடிக்கை ஒருபுறம் இருக்க, இந்த ’துப்பு’ என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதி ஒன்பது வகையான விளக்கங்களைத் தருகிறது:
(ஆதாரம்: Tamil lexicon)

--துப்பு: வலிமை; அறிவு; சாமர்த்தியம்; முயற்சி; உற்சாகம்; பெருமை; நன்மை; பொலிவு; பற்றுக்கோடு; துணை; துணைக்கருவி; ஆயுதம்; தன்மை.
--துப்பு: நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; நெய்.
--துப்பு: தூய்மை.
--துப்பு: பகை (துப்பின் எவனாவர் மற்கொல்--குறள் 165)
--துப்பு: ஆராய்ச்சி; உளவு.
--துப்பு: துரு.
--துப்பு: பவளம்.
--துப்பு: உமிழ்தல்.
--துப்பு: உமிழ்நீர்.

துப்பாக்கி: குறிநோக்கிச் சுடும் கருவி; கதிர்த்தலையைக் கத்தரித்து வீழ்த்தும் நெற்பயிர் நோய்.
துப்பார்: உண்பவர்.
துப்பாள்: உளவறியும் ஆள்.
துப்புக்கூலி: உளவு கண்டுபிடித்தற்கு உதவும் கூலி.

*****

Another excellent piece of info.

Balasubramanian
Ambattur
 
இன்று என் பாடலுக்கு நண்பர்கள் அளித்த உற்சாகம்,
ஸ்ரீ
வரலக்ஷ்மியின் அருளால் கிடைத்தது! :angel:

அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்தாகுக!
:)
 
'வெள்ளிக் கிழமை பற்றியும், நைவேத்யங்கள் பற்றியும் எழுதவில்லையே!' என்று நண்பர் வினவியதால்,

இதோ இன்னும் ஒரு சரணத்துடன் முழுப் பாடல்:

வருவாய் மஹாலக்ஷ்மியே!

ராகம்: ஸ்ரீ. தாளம்: ஆதி.

இயற்றியவர்: ராஜி ராம்

பல்லவி:

வருவாய் மஹாலக்ஷ்மியே - வரம் அருள

வருவாய் வரலக்ஷ்மியே

அனுபல்லவி:

வருவாய் அருள் மழை பொழிவாய் வரமெலாம்

தருவாய் திருவாய் மலர்வாய் அருள்தர (வருவாய்)

சரணங்கள்:

மணிகள் ஜொலிக்கும் மகுடம் ஒளிர

அணிகலன் கார்முகில் குழலில் மிளிர
வெண்பிறை நுதலில் திலகம் திகழ
தண்மதி வதனத்தில் புன்னகை தவழ (வருவாய்)

வைரக் குண்டலங்கள் அழகாய் அசைய
வைடூரிய மணி மாலைகள் விளங்க
திருக்கர வளைகளில் ரத்னங்கள் ஒளிர
திருமேனியில் பட்டாடைகள் திகழ (வருவாய்)

பாதச் சிலம்புகள் ஜதியுடன் ஆட
வேத கோஷங்கள் நின் துதி பாட
பலவிதமாய் நாம் பணிந்து கொண்டாட
நலமாய் நம் அனைவரையும் காத்திட (வருவாய்)

ஆவணிப் பௌர்ணமி முன்வரும் வெள்ளியில்
ஆவலாய் மங்கையர் பல
நைவேத்யங்கள்
அக்கறையுடனே செய்து வணங்கிட
அக்கண
ம் வந்து அருள் மழை பொழிந்திட (வருவாய்)

குறிப்பு:

'பாக்யாத லக்ஷ்மி பாரம்மா' மெட்டை ஒட்டிப் பாட இயலும்.
அனுபல்லவிக்கு, சரணத்தின் முதல் கடைசி வரிகளின் மெட்டு!

Last edited:

இறைவன் இறைவியர் வர்ணனை கேசாதி பாதமாகவும், மனிதர்கள் வர்ணனை பாதாதி கேசமாகவும்

இருக்க வேண்டும் என்று படித்த ஞாபகம்! இறைவன் குருவாயூரப்பனின் கேசாதி பாத வர்ணனையைத்

திருமதி P. லீலா அவர்கள் பக்தி ததும்பப் பாடியுள்ளார். மனோன்மணீயத் தலைவியின் பாதாதி கேச

வர்ணனையும் உண்டு.

ஸ்ரீ மகாலக்ஷ்மியின் அலங்கார வர்ணனையாக மட்டும் நினைத்து எழுதியதால், வெள்ளிக் கிழமைக்

குறிப்பை வைக்கவில்லை. இன்று இன்னொரு சரணம் எழுதிய பின், மனம் நிறைந்தது! எழுத ஊக்கம்

தந்த நண்பருக்கு மிக்க நன்றி! :high5:
 
நேற்று......

இந்தப் பாடல் எழுதிய தாளை எடுத்துக்கொள்ளாமல், என்னவரின் சகோதரி வீட்டிற்குச் சென்றேன்!

பூஜை முடிந்துவிட்டதால், 'வருவாய்' என்பதை 'வந்தாள்' என்று மாற்றிப் பாட எண்ணியும், எல்லா

வரிகளும் நினைவுக்கு வரவில்லை. இது ipad காலமல்லவா? அதிகாலையில் நம் இணையதளத்தில்

அஞ்சல் செய்ததை, ipad இல் மருமகன்
எடுத்துத் தர, நான் முதல் முறை பாடிவிட்டேன்! :thumb:
 
Back
Top