அறிகுறிகள்!
ஒற்றைக் காலிலே நிற்பது, நம்மைச்
சற்றே நிலைகுலைய வைத்தாலும்,
கண்களைத் திறந்தபடிச் செய்யலாம்!
கண்களை மூடிவிட்டால், அதோகதி!
நாற்பதுகளில் கண்களை மூடி, இப்படி
நிற்பது இயலாவிட்டால், அவருடைய
உடலின் வயது அறுபதுகளில் என்பதை
உடற்கூறு நிபுணர்கள் உரைக்கின்றார்!
வயதான அறிகுறிகள் வேறு பல உண்டு!
எளிதான செயலான 'ஸ்டூல்' மீது ஏறுதல்,
பயத்தால் 'அட்ரினலின்' சுரக்க வைக்கும்!
பயணம் செய்யப் பேருந்தில் ஏறும்போது,
அனிச்சைச் செயலாகக் கைப்பிடி தேடும்!
தனியாகச் செல்லப் பயம் தலைதூக்கும்!
படிகளில் ஏறும்போது பெருமூச்சு வரும்;
நொடிகள் நடந்தால் நாவறட்சி வந்திடும்!
வெய்யிலில் சுலபமாய்ச் சுற்றியது மாறி,
வெய்யில் கண்களைக் கூச வைத்திடும்!
பல மணி நேரங்கள் தாங்க முடிந்த பசி,
சில மணி நேரத்திலே வந்து வாட்டிடும்!
இந்த மாற்றங்களால் அஞ்ச வேண்டாம்!
இந்த மாற்றங்கள் இயற்கை என அறிந்து,
காலம் செய்யும் மாற்றங்கள் ஏற்போம்!
ஞாலத்தில் இனிதே வாழ விழைவோம்!
:dance: