எண்ண அலைகள்....

சின்னக் காரணங்கள்!

ஊடல் செய்யும் நேரத்தில், சின்னக் காரணங்களைக் காட்டி, தலைவி பொய்க் கோபம் கொள்ளுகின்றாள்.
அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்! :ranger:




 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 406

சின்னக் கோபங்கள்!


தன் தலைவனுடன் பிணங்கி ஊடல் செய்யும் தலைவி,
தன் மனத்தில் எழும் சில எண்ணங்களைக் கூறுகிறாள்.

தன்னை வாழத்த வேண்டியேனும் அவள் பேசுவாளென
எண்ணிய தலைவன், தும்முகிறானாம். கூறுகின்றாள்,

'அவர் தும்மினால் நான் வாழ்த்துவேன் என்று அறிந்து,
அவர் தும்முகிறார், நான் ஊடலால் பிணங்கிய போது!'

'ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து'. என்கிறாள்.

கிளைகளில் மலர்ந்த பூக்களைக் கட்டி அணிகின்றான்
தலைவன்; உடனே 'யாருக்குக் காட்ட அணிந்தீர்?' என்று

கோபம் கொண்டு ஊடல் செய்கிறாள்; இந்த
ப் பொய்யான
கோபம் வெளிப்படுகிறது, மிக அழகிய இக் குறட்பாவில்.

'கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று'. இது மிகவும் நன்று!

மெய்யான அன்பு பெருகி வருவதால், தன் தலைவனிடம்,
பொய்யான கோபம் கொண்டு, ஊடல் செய்கிறாள் அவள்.

:pout:


 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 407

விந்தையான சிந்தனைகள்!


தலைவனையே அன்புப் பெருக்கால் எண்ணிக் கொண்டு,
தலைவி வாழ்வதால், விந்தையான சிந்தனைகள் உண்டு!

வேறு யாரேனும் தன் தலைவனின் காதலைப் பெறுகின்ற
பேறு பெற்றார்களோ என்ற ஐயம், அவளுக்குள் எழுகிறது!

'யாரையும் விட உன்னிடம் அன்பு கொண்டேன்' எனக் கூற,
'யாரை விட? யாரை விட?' என்று கேட்டபடி ஊடுகின்றாள்!

'யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று'. இது குறட்பா.

எப்பொழுதும் உன்னைப் பிரிய மாட்டேன் எனச் சொல்லவே
எப்பொழுதும் விரும்புவான் அல்லவா தலைவன்? எனவே,

'இந்தப் பிறப்பில் பிரியேன்', என்று சொல்ல, அவள் உடனே
'மறு பிறப்பிலே பிரிவாயோ?' எனக் கண்ணீர் கொண்டாள்!

'இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்', என்கிறான்.

தன்னைத் தன் தலைவன் பிரிவானோ என்று அஞ்சியபடி,
தன் மனத்தில் பல சஞ்சலங்களைக் கொள்கிறாள் அவள்!

:decision: . . . :sad:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 408


வேறு அர்த்தங்கள்!


தலைவனின் சின்னச் சின்னச் செயல்களுக்கும், அவன்
தலைவி, வேறு புதிய அர்த்தங்களைக் கற்பிக்கின்றாள்!

அவன் தும்மியவுடன், வழக்கம்போல நீண்ட ஆயுள் வாழ
அவனை வாழ்த்தி, உடனே தலைவி அழுகின்றாள்! ஏன்?

யாராவது ஒருவர் நினைத்தால்தானே அவர் தும்முவார்?
'யார் நினைத்ததால் தும்மினீர்?' என்று அழுகின்றாளாம்!

'வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று'. இதுவே குறட்பா.

தும்மினால் அழுகிறாள் என்பதைக் கண்டுகொண்ட பின்,
தும்மல் வரும்போது, அவன் அடக்கிவிடுகிறான்! ஆனால்,

அப்படிச் செய்த பொழுதும், அவள் அழுகின்றாள். சந்தேகம்,
'இப்படிச் செய்து, வேறு யாரோ நினைப்பதை மறைத்தீரோ?'

'தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று'. இது குறள்.

தன் தலைவன், யார் நினைவிலும் இருக்கவே கூடாதென்று,
தன் மனத்தில் உறுதியாய் எண்ண விழைகின்றாள் தலைவி!

:decision: . . . :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 409

எதற்கும் கோபம்!


தலைவனின் மனம் முழுதும், தானே இருக்க வேண்டுகிற
தலைவி, பலவாறு அவனிடமே கோபம் கொள்கின்றாள்!

அவள் ஊடலைத் தீர்த்து, அவளிடம் அன்பு காட்டினாலும்,
அவள் அதற்கும் தன் கோபத்தைக் காட்டுகிறாள். 'நீங்கள்

என்னிடம் இவ்வாறு நடந்து கொள்வதைப் போலவே, பிற
பெண்களிடம் நடந்து கொள்வீரோ?' எனக் கேட்கின்றாள்!

'தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று', என்கிறான் தலைவன்.

தலைவியின் ஒப்பில்லா அழகை நினைத்து நோக்கினும்,
தலைவியோ அவனிடம் கோபம் கொண்டு ஊடுகின்றாள்!

'என்னுடைய அழகை யாருடன் ஒப்பிடுகின்றீர்கள்?' என்று
தன்னுடைய சந்தேகத்தை அவனிடமே கேட்கிறாள் அவள்!

'நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று'. கூறுவது தலைவன்!

ஊடலுக்கு எத்தனையோ காரணங்களைக் காட்டி, அவள்
ஊடல் செய்து, காதல் வாழ்வுக்குச் சுவை ஊட்டுகின்றாள்!

:pout: . . . :love:



 

தன் தலைவியின் கோபத்தைத் தீர்க்கத் தலைவன் முனைவதை அழகாகச் சித்தரிக்கிறது,

ஒரு திரை இசைப் பாடல். அந்த இனிய பாடல், திரு P. B. ஸ்ரீநிவாஸ் குரலில்.


NILAVUKKU EN MEL ENNADI KOBAM - YouTube
 
இறுதி அதிகாரம்...

பேரின்பம் தரும் இறைவனின் புகழ் பாடி ஆரம்பிக்கும் வள்ளுவம், சிற்றின்பத்திற்கு இன்பம் சேர்க்கும்

ஊடலின் இன்பத்தோடு முற்றுப் பெறுகிறது, அந்த அதிகாரத்தில், சில குறட்பாக்களைக் காண்போம்!


:ranger:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 410

ஊடலின் இன்பம்.


சின்னச் சின்னக் காரணங்களைக் காட்டிச் செய்திடும்
சின்னச் சின்ன ஊடல்களின் இன்பத்தை அறிவோமே!

தவறே செய்யாத பொழுதும் தலைவனிடம் ஏதேனும்
தவறு கண்டுபிடித்து, ஊடல் செய்திடுவாள் தலைவி!

இருவருக்கு இடையில் இப்படி வருகின்ற ஊடல்தான்,
இருவரின் காதலை வளர்க்கும் என்கிறார் வள்ளுவர்.

'இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கும் ஆறு'. இது குறள்.

ஊடலில் தோன்றும் சிறு துன்பத்தினால், நல்ல அன்பு
காதலில் வீழ்ந்தோருக்கு வாடினாலும், அந்த ஊடலும்

பெருமையான தன்மையுடையதே என்பதை உணர்த்த,
அருமையான ஒரு குறட்பாவை நமக்கு அளிக்கின்றார்!

'ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்', என்று கணிப்பு!

மெல்லிய காதல் உணர்வுகளையும், நன்கு ஆராய்ந்து,
துல்லியமாக நமக்கு விளக்குகின்றார், திருவள்ளுவர்!

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 411

யாருக்கு ஊடல் இன்பம் தரும்?

காதலர் எத்தன்மை உடையவரானால், தோன்றும் ஊடல்
காதலர்க்கு இன்பம் தந்திடும் என்று கூற விழைகின்றார்.

மண்ணில் நீர் விழுந்தால், உடனே அதனுடன் கலக்கும்!
எண்ணத்தில் இவ்வாறு ஒன்றுபட்ட காதலர் இவருக்குக்

கிடைக்கும் ஊடல் இன்பம், தேவர் வாழுகிற உலகிலும்
கிடைக்குமா, என வினவி, அதன் உயர்வைக் கூறுகிறார்!

'புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தோடு
நீரியைந் தன்னார் அகத்து', என்பது அந்த வினா!

தான் தவறே செய்யாத நிலையிலும், தான் விரும்புகின்ற
பெண் ஊடல் செய்வதால், அவள் தோளைச் சேர்ந்திடாது

பிரிந்து இருப்பதிலும், ஓர் இன்பம் உள்ளது என, ஊடலைப்
புரிந்து கொள்ள, நமக்கு வழி காட்டுகிறார் திருவள்ளுவர்!

'தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து'. இது குறள்.

எண்ணங்கள் ஒன்றுபட்டு வாழும் காதலருக்கு, ஊடலும்
எண்ண எண்ண இன்பம் தருவதாகவே அமைந்துவிடும்!

:dance:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 412

இன்பம் தரும் ஊடல்!

ஊடல் செய்கின்ற தலைவியை ரசிக்கின்றான் தலைவன்;
ஊடல் இன்பம் என்னவென அறிந்து, அதை விரும்புகிறான்.

'நல்ல ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த அழகி
மெல்ல ஊடல் புரியட்டும்; அந்தப் பிணக்கைத் தீர்த்துவிட,

இரவெல்லாம் நான் அவளிடம் இரக்க வேண்டும்; எனவே,
இரவுப் பொழுது நீண்டு போகட்டும்', என்கிறான் தலைவன்.

'ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா'. இது அவன் குரல்!

காதலில் ஊடல் மிகவும் உயரிய நிலையில் இருக்கின்றது;
ஆதலால் ஊடல் செய்தல், இன்பமான ஒரு செயலேயாம்!

காதலுக்கு இன்பம் ஊடல்; அந்த ஊடலுக்கு இன்பம் எது?
காதலர் ஊடல் தீர்ந்து கூடி மகிழ்வதே, ஊடலுக்கு இன்பம்!

'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்'. இது இறுதிக் குறள்!

காதல் வாழ்வின் நெளிவு சுளிவுகளை வள்ளுவத்தில் நாடி,
காதல் வாழ்வை செம்மைப் படுத்திட முயலட்டும் உலகம்!

:ranger: . . . :peace:
 


முற்றுப் பெறுகின்றது வள்ளுவம்.

உயிர்களுக்கு பேரின்பம் தரும் இறைவனைப் புகழ, உயிர் எழுத்தில் முதல் எழுத்தான 'அ' வில் முதல் அதிகாரத்தின்

முதல் குறளை ஆரம்பித்து, சிற்றின்ப வாழ்வின் ஊடல் இன்பத்தைக் காட்டும் இறுதி அதிகாரத்தின் இறுதிக் குறளை

மெய்யெழுத்தில் இறுதி எழுத்தான 'ன்' என்ற எழுத்தில் முடித்துள்ளார் திருவள்ளுவர், தம் உலகப் பொதுமறையை!


எல்லாக் குறட்பாக்களையும் பற்றி நான் எழுதவில்லை; சில குறட்பாக்கள் தவிர்க்கப்பட்டன.



ஒரு புறம் இந்தப் போற்றுதல் முடிவுக்கு வருகின்றதே என்று மனம் சஞ்சலப்பட்டாலும், இறையின் அருளால்,

இதுகாறும் எழுதிப் பகிர்ந்துகொள்ளும் இன்பம் கிடைத்ததே என்று மனம் மகிழ்கின்றது.



ஊக்கம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray2:


 
அலைகள் தொடரும்....

எண்ண அலைகள் மோதும்போது இந்த நூலில் அவற்றைப் பதித்திடுவேன்.

அலைகள் தொடரும்................ :typing:
 
சிங்காரச் சென்னை!

அமெரிக்கப் பயணம் ஒரு வழியாக முடித்துவிட்டு,
அமர்க்களமாகத் திரும்பினோம் சிங். சென்னைக்கு!

எளிதில் சோதனைகளை முடித்து, வெளியில் வந்து,
விரைவில் வாடகை வண்டியில் இனிய இல்லத்துக்கு

வந்து சேர்ந்த பின், பிள்ளைகளுக்கு தொலைபேசியில்
வந்து சேர்ந்த விவரம் சொல்ல முயன்றால், இணைப்பு

இல்லவே இல்லை! கைப் பேசியில் சொல்ல விழைய,
இல்லவே இல்லை அதன் தொடர்பும்! மாதம் இரண்டு

முறையேனும் பேசாவிடின், இணைப்பு துண்டிப்பு! இம்
முறை அறியாது, 'சார்ஜ்' செய்ய எடுத்துச் சென்றேன்!

தொலைபேசி இணைப்பு இன்றேல், இன்டர்நெட் ஏது?
தொலைபேச விடியல் வரை காத்திருக்க வேண்டும்!

யாரோ விஷமமாக, பின்கட்டுக் குழாயை அதனுடைய
வேரோடு உடைத்து எடுத்துப் போயிருக்க, மேல் தொட்டி

நீரில்லாது வறண்டு கிடக்க, நல்ல வேளை வாளிகளில்
நீர் பிடித்து வைத்திருந்தார், தம்பியின் அன்பு மனைவி!

உறங்காமல் அந்த இரவு கழிந்திட, சூரியன் காலையில்
உதித்ததும் தம்பியின் இல்லம் சென்று, தொலைபேசி,

வந்த விவரம் சொன்னதும், பிள்ளைகளுக்கும் நிம்மதி.
இந்த அனுபவமும் எங்களுக்கு முதல் முறை ஆனதே!

மாலைக்குள் தொலைபேசி இணைப்பு வந்தது! ஆனால்
வேலை செய்யாது கணினி நின்று போனது; Fan அவுட்!

இதுதான் சிங்காரச் சென்னை வாழ்க்கை! அறிவோமே!
இனிதான் ஒவ்வொன்றாகப் பழுது பார்த்திட வேண்டும்!
 

எளிய சடங்கு, பெரிய செலவு!


இறைவன் இறைவி சன்னதி எதிரில் நின்று,

குறையின்றி வாழ, இருவர் சேரும் சடங்கு!

இரு மனங்கள் இணையும் சிறந்த சம்பவம்;
திருமணம் என்னும் இனிய ஒரு வைபவம்!

சில நெருங்கிய உறவும், நட்பும் அங்கு சூழ,
சில மணித்துளிகளில் பூஜை முடிந்துவிட,

மாங்கல்யதாரணம் குத்துவிளக்கின் எதிரே;
மாலை மாற்றல், வேறு ஒரு மண்டபத்திலே!

பெண்ணின் குடும்ப வேண்டுதலால், இப்படிப்
பெண்ணின் குடும்பம் செய்திட வேண்டியது!

இந்தச் சடங்கு மட்டுமே அந்தக் கோவிலில்;
இந்த மணம் தொடரும் வேறு மண்டபத்தில்.

எல்லோரும் அந்தக் கல்யாண மண்டபத்தில்;
எல்லோரும் இருக்கைகளைத் தேடி அமர்ந்து,

பழகிய வட்டத்துடன் உரையாடி மகிழ்ந்திருக்க,
அழகிய பூ அலங்கார மேடையிலே, தம்பதியர்

பெற்றோர் அளித்த புத்தாடைகளைப் பெற்று,
சற்று நேரத்திலே, அழகாய் உடுத்திக்கொண்டு,

தென்னம் பாளைகள் அலங்காரமாக இருக்க,
மின்னும் குத்து விளக்குகளின் முன் அமர்ந்து,

கல்யாண மோதிரங்களை மாற்றிக் கொள்ள,
கல்யாணம் முடிந்தது, மந்திரங்களே இல்லாது!

இரு வேறு சமூக மக்கள் உறவாகி இணைந்திட,
ஒரு மேளம் கூட இல்லாது, மணம் முடிந்தது!

செலவு இல்லை என்றே நினைக்க வேண்டாம்!
செலவு லட்சங்களிலே ஆகியிருக்கும் நிச்சயம்!


சில நிமிடங்களில் ஓசையின்றி முடிந்து மணம்;
ல லக்ஷங்களில் ஓடிவிட்டது செலவான பணம்!

வண்ணப் பூக்கள் அலங்கரித்த வட்டமான மேடை;
வண்ண விளக்குகள் மின்னின பல வரிசைகளில்.

முப்பத்தி மூன்று அடி நீள கிரேனில் ஒரு காமரா;
முன்னே நின்று மறைக்கும் விடியோக்காரர்கள்.

அவர்கள் மறைக்கும் திருமணத் தம்பதியர்களை,
அவர்களின் கிரேன் காமரா திரையில் காட்டியது!

ஒண்ணேகால் லக்ஷம் பெற்ற பாடகரின் கச்சேரி!
ஒண்ணேகால் மணி நேரம்தான் அந்தக் கச்சேரி!

மூன்று விதப் பாயசங்களுடன் அமர்க்கள விருந்து;
தோன்றியது, அதை உண்டால் தேவையே மருந்து!

ஒன்று மட்டும் புரிந்தது; பணத்திற்கு மதிப்பில்லை!
இன்று என்ன மாறினாலும், செலவு மாறுவதில்லை!

:popcorn:
 
நான் கற்ற பாடம்!

அனுதினம் நமக்கு கற்றுத் தரும் புதுப் பாடம்,

அனுபவம் எனும் ஒரு நிலையான ஆசிரியன்!

நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு பூஜைக்காக,
நாங்கள் பிள்ளைகளுடன் சென்றோம், ஊருக்கு.

நல்ல விதம் பூஜை முடித்த பின்பு, கோவிலில்
நல்ல தரிசனம் பெறத் தயாராகின்ற நேரத்தில்,

பெரிய மழை பிடித்துக் கொள்ள, உடுத்த எடுத்த
எளிய ஜரிகை இட்ட சேலை வேண்டாம் என்று,

என் பையின் பக்கவாட்டு 'ஜிப்'பில் இட்டு மூடி,
என் சாதாரணப் புடவையை உடுத்திச் சென்று,

தரிசனம் முடித்து, வேகமாய் உணவை உண்டு,
சரியான நேரத்தில், ரயில் ஏறி வந்துவிட்டோம்.

அம்மன் கோவில் ஒன்றில், அம்மனுக்கு உடுத்தி,
அம்மன் பிரசாதமாக எனக்கு வந்த புடவை அது!

ஜாலியாக ஊர் வந்து, பெரிய ஜிப்பைத் திறக்க, அது
காலியாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தேன்! ஒரு

'விளக்கு பழுது பார்க்கும் பணியாளன் வந்தானே!
கிளப்பிக் கொண்டு போனானோ புடவையை', என

சஞ்சலப்பட்டு, அந்தப் புடவையை நான் உடுத்தக்
கொஞ்சமும் யோகம் இல்லையே என்று எண்ணி,

சில நிமிடம் சுவாமியை அலங்கரித்த புடவையை,
சில நாட்கள் சென்றதும், மறந்தும் போய்விட்டேன்!

நான்கு ஆண்டுகளுக்குப் பின், அதே பையை எடுத்து,
நன்கு உடைகளை அடுக்கி வைக்கும்போது, சின்ன

உடைகளை நடுவிலே வைக்காது, பக்கவாட்டிலே
அவைகளை வைக்க, ஜிப்பைத் திறக்க, ஆச்சரியம்!

காணமல் போனதென்று நான் எண்ணிய புடவை,
கண்ணில் படுகின்றது, இன்ப அதிர்ச்சி நான் பெற!

இரு புறமும் பெரிய ஜிப்பும், அதில் ஒரு பெரிதுடன்
சிறு ஜிப்பும் உள்ளன; நான் அந்தப் பக்கம் இருக்கும்

சிறிய ஜிப்பை மட்டுமே சோதனை செய்துவிட்டு,
பெரிய ஜிப்பைத் திறக்காமலேயே விட்டுள்ளேன்!

மனம் மிக வருந்தினேன், அந்தப் பணியாளனை
மனத்திலே கள்வனாக எண்ணிய காரணத்தால்!

அவனிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டேன்;
அவனுக்குக் கேட்காவிட்டாலும், எனக்கு ஆறுதல்!

எந்தப் பையையும் பாதுகாப்பாக வைக்கும்போது,
அந்தப் பையைக் கவனமாகக் காலி செய்துவிட்டு,

எல்லாப் பொருட்களையும் எடுக்க வேண்டும், என
நல்ல பாடத்தை நான் கற்றேன், இந்தப் பயணத்தில்!

அன்புடன் யாரேனும் நமக்குப் பரிசு அளித்தால், அது
என்றும் நம்முடனே இருக்கும் என்றும் அறிந்தேன்!

:thumb:
 
நன்றி தெரிவிக்கும் நாள்!

156695_178624362154050_168255023190984_703877_5926770_n.jpg


அமெரிக்காவில்
நவம்பர் மாதம் நான்காவது வியாழன்,

அமர்க்களமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவதே,

நன்றி தெரிவிக்கும் Thanksgiving Day என்னும் விழா; இந்த
நன்றி தெரிவித்தல், ஆண்டவன் அருளிய நலன்களுக்காக.

ஆண்டவனை, தொடர்ந்து நல்வாழ்வு தரவும் வேண்டுவர்.
ஆண்டவனை நம்பாதோர், தனக்கு உதவி செய்வோருக்கு,

நன்றி பாராட்டி, அவர்களை அழைத்துப் பரிசுகள் வழங்கி,
நல்ல விருந்து படைத்து, கூடி உணவை உண்டு மகிழ்வர்.

வான்கோழிகள் தலை தெறிக்க ஓடும்! ஏன் தெரியுமோ?
வான்கோழிகளை வதைத்து உணவுகள் செய்வதால்தான்!

கருப்பு நிறம் லாபத்தைக் குறிக்குமாம்! மறுநாள் வெள்ளி;
விருப்புடன் தள்ளுபடி விற்பனை; அந்நாள் கருப்பு வெள்ளி!

விற்பனை செய்து, நிறைந்த லாபமும் பெற்று சிறந்திடவே
கற்பனை செய்து, குறைந்த விலையில் விற்க முனைவர்!

ஒரு போலீஸ் அதிகாரி, வண்டிகளின் நெரிசலால், இதைக்
கருப்பு வெள்ளி என்று கூறினார் என்றும் சொல்வதுண்டு!

நீண்ட வார விடுமுறையாக வருவதால், பலர் தவறாமல்
நீண்ட பயணம் செய்து, சுற்றம் நட்பைக் கண்டு மகிழ்வர்!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அல்லவா? இந்த நன்நாள்
கூடி மகிழ சந்தர்ப்பம் தருவதால், பொன்நாளே எனலாம்!

:grouphug: . . . :thumb:
 
இறை அருள் காக்கும்!

கெட்ட நேரத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும்,

கெட்ட செயல் நேர்ந்தால், வரும் மனதில் சலனம்!

இறை அருள் இருந்தால், கெடுதலும் குறைந்திடும்;
இறை மீது அதிக நம்பிக்கையும் தொடர்ந்து வரும்!

இந்த வாரம் எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவத்தை,
இங்கு சொல்ல விழைந்ததால் நான் எழுதுகிறேன்!

தொடர் மழை காரணமாகத் தெருக்கள் ஆறுகளாக,
இடர் வந்தது, வீட்டைச் சுற்றி நீர் நின்றுவிட்டதால்!

ஒரு எதிர்பாராத் தருணத்தில், நிலை தடுமாறியது;
மறு நொடி என்னைத் தரையில் விழவும் வைத்தது!

இங்குதான் இறையருள் காத்தது என்கிறேன்! ஆம்;
எங்கும் எலும்பு முறிவு இன்றி அவனருள் காத்தது!

வலி சிலநாள் அனுபவிக்கவே வேண்டும்; ஆனால்,
துளி கட்டிக் கையைக் காக்க வேண்டியது இல்லை!

வேலை செய்யும் என் வேகம் குறைந்தே போனது!
வேலை செய்யும் பொழுது 'சுலோ'ச்சனா இப்போது!

பக்தியுடன் சக்தி வினாயகனையே வேண்டுவேன்;
சக்தி அளித்து அவனருள் காக்குமென நம்புவேன்!

:pray2:

 

விதியின் சதியா?


படித்த பெண்; வேலை சென்னையில்; M D

படிக்கும் டாக்டர் பையனின் ஜாதகம் சேர,

திருமணம் பேசப் பெற்றோரும் முயன்றிட,
ஒரு விஷயம் மட்டும் சரி வரவே இல்லை!

டாக்டர் வசிக்கும் மும்பையின் விடுதியில்,
டாக்டரின் மனைவிக்கு மட்டுமே அனுமதி!

மூன்று ஆண்டுகள் சொந்தங்கள வராததை,
என்று அனுமதிக்கவே இயலாது எனக் கூறி,

சென்னையில் வேலை பார்க்கும் ஒருவன்
செவ்வனே தேடப்பட்டு, கல்யாணம் முடிய,

பிரச்சனை தொடங்கியது, இல்வாழ்விலே!
பிரபலமான கம்பெனியில் சிறந்த வேலை

பெண்ணுக்கு, அவள் செல்ல மறுத்த அதே
பொன்னான மும்பை நகரிலே; அவளோ

வந்த சந்தர்ப்பம் சிறந்தது என்று எண்ணி,
சொந்தங்களை விட்டு மும்பை சென்றிட,

ஒற்றைப் பிள்ளையை மும்பை அனுப்பச்
சற்றும் அவன் அம்மா சம்மதிக்காததால்,

அங்கு வேலை தேடும் படலத்தை, அவன்
அப்போதே விட்டு விட்டான்; ஒருவேளை

பெண்ணுக்குச் சென்னையில் நல்ல பணி
எண்ணும்படிக் கிடைக்காமலே போனால்,

இவர்களின் திருமண வாழ்வு என்னாகும்?
இதுவே விதியின் விளையாட்டு என்பதா?

:noidea:
 

பெயர் பெற்றன!


'பெயர் போனது' என்று சொல்ல வேண்டாம்;

'பெயர் பெற்றது' எனச் சொல்லலாமே என்பர்.

சிங்காரச் சென்னைக்கு வந்து இறங்கியதும்,
சிங்காரப் பெயர்ப் பலகைகள் பல தெரிந்தன.

தெருக்களும், வீதிகளும் 'பளிச்'சாக இல்லை;
தெருக்களும், வீதிகளும் பெயர் பெற்றுள்ளன!

அலுமினியக் குழாயில் அம்பு போலச் செய்து,
அலுங்காமல் நீல நிறப் பலகையும் பொருத்தி,

இரவில் மின்னும் வண்ணம் பெயரை எழுதி,
இங்கு வைத்துள்ளார், சென்னை முழுவதும்!

'அம்மா' ஆட்சி பெயர் பெறுமோ, இல்லையோ;
'அம்மா' தயவில், தெருக்கள் அதைப் பெற்றன!

:thumb:
 

புதிய முயற்சி!


சுவைகளில் பலவிதம் உண்டு! அதில்
சுவை பாரம்பரியமாக இருப்பது அழகு!

புதிய முயற்சி என மாற்ற முயன்றால்,
இனிய சுவையும் மாறிப் போய்விடும்!

வட இந்தியப் பாடல்களை, நம்முடைய
தென்னிந்திய கன ராகங்களிலே பாடிட,

அந்த பக்திச் சுவையும் குன்றியதுடன்,
இந்த கன ராகங்களின் அழகும் குன்றி,

ஏதோ ஒரு இனம் புரியாத இசையாக,
ஏனோ தானோவென்று ஆகிவிட்டது!

வேடிக்கையான ஒரு சின்ன உதாரணம்
வேகமாக எண்ண அலைகளில் வந்தது!

மைதாவில் குலாப் ஜாமுன் செய்யாது,
மையாக அரைத்த உளுந்தில் செய்தால்,

வரும் ரெண்டும் கெட்டான் சுவைபோல
வந்து விழுந்தது என் செவிகளில்! இதை

கைகளைத் தட்டி, ரசித்து, சிலாகித்தது
மெய்யான பாராட்டா? யோசிக்கிறேன்!

:clap2: . . . :noidea:
 
Last edited:

காசேதான் கடவுளடா!


காசேதான் கடவுளடா என்று சொன்னால்,
ஏசலோ இது என்றே நாம் எண்ணுவோம்!

காலத்தின் கோலமே இது! ஆண்டவனின்

கோலத்தைக் காணவும் காசு தேவையே!

இசை விழா காணும் சிங்காரச் சென்னை;

இசை ஆர்வலர் படையெடுக்கும் ஓரிடம்!

கோவில் போலவே மேடையில் அமைப்பு;

கோவில் தீபங்கள் போல நல் அலங்காரம்!

நடுவில் கொலுவிருப்பது இறைவனல்ல;

சடுதியில் விளம்பரம் நாடும் ஒரு கடை!

சிவப்பு வண்ணம் மிளிரும் பெரிய பலகை;

சிறந்த அந்தக் கடையின் பெயர் நடுவில்!

பக்தி வளர்க்கும் இசைக் கச்சேரி; எனினும்

சக்தி பணத்தால் கொடுப்பது அந்தக் கடை!

இப்போது புரிகின்றதா காசேதான் கடவுள்

என்பது! ஆனால், காசு தருவதும் கடவுளே!

:pray:


 

மிகச் சாதுர்யமான பதில்!


ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, அதிலே
ஒரு இசை நிகழ்ச்சியைத் தருவது வழக்கம்!

முப்பெரும் தேவியரைப் பற்றிய நிகழ்ச்சி;
முன் வந்து விழுகின்றது ஒரு சிறு கேள்வி!

எந்த தேவி இசைக் கலைஞருக்குத் தேவை?
இந்தக் கேள்விக்குத் தந்தார்கள் சிறந்த பதில்.

கலைமகள் கடாட்சம் மிகத் தேவை; ஆனால்
அலைமகள் தயை இல்லத்தில் இல்லாவிடில்,

மனம் மகிழ்வு குறைய வாய்ப்பும் உண்டாம்!
மனம் மகிழாவிடில், இசைப்பது எப்படியாம்?

மலைமகள் அருளுகிற சக்தியும், தைரியமும்,
அலைந்து பல இடங்கள் செல்லத் தேவைதான்!

நன்கு யோசித்தால், கலைஞர்களுக்குத் தேவை,
அன்புடன் அருளும், முப்பெரும் தேவியர்களுமே!

:pray2:
 
Back
Top