'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
2101. பா3லிஷ: = சிறுவன், மூடன்.

2102. பா3ல்யம் = குழந்தைப் பருவம்.

2103. பா3ஷ்ப : = பா3ஷ்பம் = கண்ணீர், நீராவி, இரும்பு .

2104. பா3ஹு: = தோள், மேல் கை.

2105. பா3ஹுக: = குரங்கு, நள மகாராஜா பூண்ட பெயர்.

2106. பா3ஹுல்யம் = அதிகமான, அநேகமான, பலவான.

2107. பாஹ்ய = வெளியில் உள்ள.

2108. பி3டா3ல: = பி3டா3லக: = பூனை.

2109. பி3ந்து3: = துளி, திவலை, சொட்டு, புள்ளி, பூஜ்யம், ஸ்ரீ சக்கரத்தின் மையம், புருவ மத்தி.

2110. பி3ம்ப3: = பி3ம்ப3ம் = நிழல், உருவம், பிரதி பிம்பம், கண்ணாடி.
 
2111. பி3ம்ப3ம் = கோவைப் பழம்.

2112. பி3லம் = துளை, துவாரம், குழி, பள்ளம், வெடிப்பு, குஹை.

2113. பி3ல்வ: = வில்வ மரம்.

2114. பீ3ஜம் = விதை, உயிர் அணு, மந்திரத்தின் முக்கிய எழுத்து, வீர்யம், ஆரம்பம், தொடக்கம்.

2115. பீ3ப4த்ஸ: = வெறுப்பு, நிந்தனை, ஒரு காவியச் சுவை, அர்ஜுனின் ஒரு பெயர்.

2116. பு3க்க: = இருதயம், மார்பு, இரத்தம், ஒரு அரசனின் பெயர்.

2117. பு3த4: = அறிவாளி, புதன் என்னும் க்ரஹம்.

2118. பு3த்3தி4: = அறிவு, விவேகம், பிரக்ஞை, புத்திசாலித்தனம்.

2119. பு3த்3தி4பூர்வம் = பு3த்3தி4பூர்வகம் = புத்தியை உபயோகித்து.

2120. பு3த்3தி4மத = கற்றறிந்த, கெட்டிக்கார, பகுத்தறிவு உடைய.
 
2121. பு3பு4க்ஷா = பசி, உண்ண விருப்பம்.

2122. ப்3ருஹத் = பருத்த, நீண்ட, பெரிய, விசாலமான.

2123. ப்3ருஹஸ்பதி = தேவகுரு.

2124. போ3த4: = அறிவு, சிந்தனை, பிரக்ஞை.

2125. போ3த4க: = உபாத்தியாயர்.

2126. போ3த4னம் = போதித்தல், கற்பித்தல், குறிப்பிடுதல்.

2127. பௌ3த்3த4: = புத்த மதத்தைக் சேர்ந்த.

2128. பௌ3தா4யன : = ஒரு முனிவரின் பெயர்.

2129. ப்3ரஹ்மன் = உருவமற்ற குணமற்ற பரம்பொருள், ஓங்காரம், தவம், மோக்ஷம், பேரின்பம், பிரம்மா, அந்தணன், சூர்யன்.

2130. ப்3ரஹ்மசாரின் = வேதம் பயிலும் மாணவன்.
 
2131. ப்3ரஹ்மவித்3 = பிரம்மத்தை அறிந்தவன், வேதாந்தி.

2132. ப்3ரஹ்மவித்3யா = பரம் பொருளைப் பற்றிய அறிவு.

2133. ப்3ரஹ்மாண்ட3ம் = 14 உலகங்கள், ஹிரண்ய கர்ப்பம்.

2134. ப்3ராஹ்மண: = அந்தணன்.

2135. ப்3ராஹ்மணீ = அந்தணனின் மனைவி, பிரா
ம்மண ஸ்த்ரீ, துர்க்கை.

2136. ப்3ராஹ்மீ = சரஸ்வதி, கதை, பேச்சு, வழக்கம், முறை, ரோஹிணி நக்ஷத்திரம், அந்தணின் மனைவி.

2137. ப்3ரூ = சொல்ல, பேச, கோஷிக்க, பதில் சொல்ல, விசை அளிக்க, கூப்பிட, பெயரிட.

2138. ப4: = சுக்கிரன், குற்றம், குறை, சமானம்.

2139. ப4ம் = நக்ஷத்திரம், ராசி, கோள்.

2140. ப4க்த: = ஆராதிப்பவன், பூஜிப்பவன், தொண்டன், பக்தன்.
 
2141. ப4க்தி: = பங்கு, அம்சம், சிரத்தை, பற்றுதல், பக்தி, நம்பிக்கை, தொண்டு, உபாசித்தல், அலங்கரிப்பு.

2142. ப4க3: = சூரியன், சந்திரன், அதிருஷ்டம், புகழ், அன்பு, அழகு, மேன்மை, சிறப்பு, தர்மம், ஒழுக்கம், முயற்சி, செயல், மோக்ஷம்.

2143. ப4க3வான் = கடவுள், தெய்வம், விஷ்ணு, சிவன்.

2144. ப4கி3னீ = ப4கி3னிகா = சகோதரி.

2145. ப4கி3னீய : = ப4க3நேய : = சகோதரியின் மகன்.

2146. ப4க்3ன = முறிந்த, குறைந்த, அழிந்த,தோற்றுப்போன.

2147. ப4ங்க3: = முறிதல், உடைதல், பிரிவு, பாகம், பங்கு, அழிவு, குறைவு, தீங்கு, வேதனை, தடை, நடை, அசைவு.

2148. ப4ங்கி3: = ப4ங்கீ3 = வெள்ளம், அலை, கபடம், அடி வைத்தல், அடி.

2149. ப4ஜனம் = சேவை, பூஜை, விரதம் பூணுதல், பங்கு பிரிதல்.

2150. ப4ஞ்ஜனம் = உடைதல், தடை செய்தல், துன்பம் விளைவித்தல், அழிதல், சேதம் உண்டாக்குதல், தோற்கடித்தல்.
 
2151. ப4ட: = போர் வீரன், வேலையாள், நாகரீகம் அற்றவன்.

2152. ப4ணதம் = ப4ணிதம் = ப4ணிதி: = பேச்சு, சம்பாஷணை, சொல்லுதல், சொற்பொழிவு.

2153. ப4த்3ரம் = மங்களகரம், ஆனந்தம், மகிழ்ச்சி, நல்அதிருஷ்டம்.

2154. ப4த்3ர: = எருது, ஒரு வகை யானை, சிவனின் பெயர்.

2155. ப4த்3ரா = பசு, கங்கையின் ஒரு பெயர், வளர்பிறை அல்லது தேய்பிறையில் த்
விதீயை, த்வாதசி, சப்தமி திதிகளின் பொதுப் பெயர்.

2156. ப4யம் = பயம், நடுக்கம்.

2157. ப4யங்கர = ப4யானக = பயம் தரும், அச்சமூட்டும்.

2158. ப4யானக: = புலி, ராகுவின் பெயர், ஒரு காவியச் சுவையின் பெயர்.

2159. பரணீ = பரணீ நக்ஷத்திரம்.

2160. ப4ரத்3வாஜ: = வானம் பாடி.
 
2161. ப4ரித = நிரம்பிய, போஷிக்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட.

2162. ப4ர்க3: = சிவன், பிரம்மா, ஒளி.

2163. ப4த்ரு = கணவன், பிரபு, தலைவன், யஜமானன், காப்பவன்.

2164. ப4ர்த்ஸனம் = பயமுறுத்துதல், மிரட்டுதல், நிந்தித்தல், வசை கூறுதல், சாபமிடுதல்.

2165. ப4ல்லுக: = ப4ல்லூக: = கரடி, நாய்.

2166. ப4வ: = பிறப்பு, உண்டாகுதல், மூல காரணம், நலம், சுகம், செல்வம், செழுமை, சிறப்பு, அடைதல், கடவுள், சிவன்.

2167. ப4வான் = தாங்கள் (படர்க்கை, முன்னிலை, ஆண் பால், மரியாதையைக் குறிக்கும் சொல்)

2168. ப4வதி = தாங்கள் ( படர்க்கை, முன்னிலை, பெண் பால், மரியாதையைக் குறிக்கும் சொல்)

2169. ப4வனம் = இருத்தல், உண்டாதல், பிறப்பு, வீடு, மாளிகை, இருப்பிடம்.

2170. ப4வானீ = பார்வதி, பவானீ.
 
2171. ப4வித்ரு = ப4விஷ்ய = எதிர்காலத்தில் வரக்கூடிய.

2172. ப4ஸ்மம் = சாம்பல், விபூதி.

2173. ப4க்ஷணம் = உணவு, சாப்பாடு.

2174. ப4க்ஷ்யம் = சாப்பிடக் கூடியது.

2175. பா4 = காந்தி, ஒளி, பிரகாசம்.

2176. பா4க3 : = பங்கு, பாகம், துண்டு, தலைவிதி, இடம்.

2177. பா4க3தே4யம் = பங்கு, பாகம், நற்காலம், நல் அதிருஷ்டம்.

2178. பா4க3வத: = விஷ்ணு பக்தன்.

2179. பா4க3வதம் = வியாசர் இயற்றிய 18 புராணங்களில் ஒன்று.

2180. பா4கீ3ரதீ = கங்கையின் ஒரு பெயர்.

 
2181. பா4க்3யம் = அதிர்ஷ்டம், தலைவிதி, ஆனந்தம், சுபம், மங்களகரம், செழிப்பு, ஐச்வர்யம், செல்வம்.

2182. பா4ஜ = பங்கு பெறும், அனுபவிக்கும், வைத்திருக்கும், வசிக்கின்ற, செய்யத் தக்க.

2183. பா4ஜனம் = பாத்திரம், அங்கு, இருப்பிடம்.

2184. பா4ஜ்யம் = பாகம், அம்சம், முன்னோர்களின் சொத்தில் பங்கு.

2185. பா4ண்டம் = மட்பாண்டம், பாத்திரம், விலைப் பொருள், பொருள்.

2186. பா4ண்டா3ரம் = பண்டகசாலை.

2187. பா4னு : = சூரியன்,கிரணம், காந்தி, அரசன், நாள்.

2188. பா4மினீ = அழகிய இளம் பெண்.

2189. பா4ர: = சுமை, எடை, பொறுப்பு.

2190. பா4ரதம் = வியாசரின் மஹா பாரதம், பாரத தேசம்.
 
2191. பா4ரத்3வாஜ : = துரோணாச்சாரியார், அகத்தியர், பாரத்வாஜ முனிவர், வானம் பாடி.

2192. பா4ர்யா = மணம் புரிந்துகொண்ட மனைவி.

2193. பா4வ: = இருப்பு, நிலை, உண்மை, எண்ணம், மனம், காதல், ஆசை, பற்று, சிந்தனை, தியானம்.

2194. பா4வித = நினைக்கப்பட்ட, தியானிக்கப்பட்ட, போஷிக்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட, வெளிப்பட்ட.

2195. பா4வுக = உடன் பிறந்தவளின் கணவன்.

2196. பா4ஷணம் = பேசுதல், பேச்சு, சொல்.

2197. பா4ஷா = மொழி, பேச்சு, சரஸ்வதி.

2198. பா4ஷித = சொல்லப்பட்ட, பேசப்பட்ட, உச்சரிக்கப்பட்ட.

2199. பா4ஷ்யம் = விரிவுரை, பேசுதல்.

2200. பா4ஸ : = ஒளி, காந்தி, சேவல், கழுகு, ராஜாளி, மாட்டுக் கொட்டில், ஒரு கவிஞனின் பெயர்.
 
2201. பா4ஸ்வர : = சூரியன், தினம்.

2202. பி4த்தி : = சுவர், துண்டு, அம்சம், பாய்.

2203. பி4தா3 = உடைதல், பிழைப்பு, வகை, முறை, விதம்.

2204. பி4ன்ன: = துண்டாக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, தனியான, விரிந்த, இல்லாதுபோன, பலவிதமான.

2205. பி4ன்னம் = துண்டு, துளி.

2206. பி4ஷஜ் = பிஷக் = வைத்தியன்.

2207. பி4க்ஷா = பிச்சை, யாசித்தல்.

2208. பி4க்ஷு : = பிக்ஷுக: = சாமியார், துறவி , பிச்சைக்காரன்.

2209. பீ4: = பீதி: = பயம், ஐயம், நடுக்கம்.

2210. பீ4த = பயந்த, நடுங்கிய.
 
2211. பீ4ம : = சிவனின் ஒரு பெயர், இரண்டாவது பாண்டவன்.

2212. பீ4ஷ்ம = பீ4ஷண = பயம் உண்டு பண்ணும், பயங்கரமான.

2213. பீ4ஷ்ம: = அரக்கன், பிசாசு, சிவன், சந்தனுவின் மகன்.

2214. பு4க்த = அனுபவிக்கப்பட்ட, சாப்பிடப்பட்ட.

2215. பு4ஜ : = தோள், கையின் மேல்பகுதி, மடிப்பு, வளைவு,
யானையின் துதிக்கை, முக்கோணத்தின் அடிக்கோடு.

2216. பு4ஜக3: = பு4ஜங்க3ம் = நல்ல பாம்பு.

2217. பு4ஜங்க3: = பாம்பு, பிரபு, எஜமானன், கணவன், காதலன்,

2218. பு4வனம் = உலகம், பூமி, சுவர்க்கம், மனித இனம், தண்ணீர், பிராணிகள்.

2219. பு4வனத்ரயம் = சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்றும் சேர்ந்தது.

2220. பு4வர் = பு4வஸ் = ஆகாயம்.
 

2221. பூ4 = இருக்க, உயிர்வாழ, வசிக்க, நிகழ, உதயமாக, உண்டாக, பிறக்க, தங்க, உதவி அளிக்க.

2222. பூ4: = பூமி, உலகம், தரை, நிலம், இடம், நிலச் சொத்து.

2223. பூ4த = உண்டான, இருந்துவரும், உள்ளபடி உண்மையான, சென்ற, கழிந்த, கலந்த.

2224. பூ4தபூர்வ = பழைய, முன்னிருந்த.

2225. பூ4தம் = பிராணி, மனிதன், விலங்கு, தாவரம், பிசாசு, உலகம், பஞ்ச பூதங்கள்.

2226. பூ4தி: =இருப்பு, பிறப்பு, இன்பம், செல்வம், மகிமை, கெளரவம், விபூதி, அலங்காரம், தவ வலிமை.

2227. பூ4திகாம = செல்வச் செழிப்பை விரும்பும்.

2228. பூ4பதி: = பூ4பால: = பூ4மிபதி: = பூ4மிபால: = அரசன்.

2229. பூ4புத்ர: = பூ4ஸுத: = பூ4மிஜ: = பூ4மிஸுத: = செவ்வாய்
கிரஹம்.

2230. பூ4மி: = பூ4மீ = தரை, நிலம், இடம், மண், எல்லை, நாடு.
 
2231. பூ4மிகா = தரை, மண், நிலம், இடம், புத்தகத்தின் முகவுரை.

2232. பூ4யஸ் = அதிகமான, மறுபடியும், மறுபடியும், அடிக்கடி.

2233. பூ4யிஷ்ட = மிக அதிகமான, பலவான, பெரிய, முக்கியமான.

2234. பூ4ஷணம் = ஆபரணம், அலங்கரிப்பு.

2235. பூ4ஷித = அலங்கரிக்கப்பட்ட.

2236. ப்4ருகு3: = ஒரு முனிவரின் பெயர், கிருஷ்ணன், சுக்கிரன், சுக்கிராச்சாரியார்.

2237. ப்4ருங்க3: = கருவண்டு, ஒரு வகைப் பறவை, காமவெறி கொண்டவன்.

2238. ப்4ருத = சுமக்கப்பட்ட, தாங்கப் பட்ட, காப்பற்றப்பட்ட, போஷிக்கப்பட்ட, நிரப்பப்பட்ட.

2239. ப்4ருத்ய = வேலையாள், தொண்டன்.

2240 . ப்4ருச'ம் = அதிகமான, அநேகமான, நல்லதாக, மேன்மையாக.
 
2241. பே4க : = தவளை, மேகம், பயந்த மனிதன்.

2242. பே4ட3 : = செம்மறியாடு, தெப்பம்.

2243. பே4த3 : = வித்தியாசம், உடைத்தல், பிளப்பு, பிளவு, உடைத்தல், தோல்வி, பிரிதல், உபயம், தந்திரம், விகாரம், மாறுபாடு.

2244. பே4ரீ = பேரிகை. போர் முரசு.

2245. பே4ஷஜம் = மருந்து, சிகித்சை.

2246. பை4ரவ : = சிவனின் பயம் தரும் உருவம்.

2247. பை4ரவீ = துர்க்கை, காளி, ஒரு ராகத்தின் பெயர்.

2248. போ4க3: = சுகம் அடைதல், சுகம் அனுபவித்தல், உண்ணுதல்,
நைவேத்யம், பாம்பு, பாம்பின் படம், லாபம், உடல், செல்வம்.

2249. போ4க்3யம் = அனுபவிக்கத் தக்க பொருள், நெல், தானியம், செல்வம்.

2250. போ4ஜனம் = சாப்பிடுதல், உணவு, அனுபவித்தல், உபயோகித்தல்.
 
2251. போ4ஜ்யம் = சாப்பாடு, உணவு.

2252. பௌ4திக: = உயிர் வாழும் பிராணிகளுடன் தொடர்புடைய,
பஞ்ச பூதங்களைச் சார்ந்த.

2253. பௌ4ம = செவ்வாய், தண்ணீர், ஆகாயம், ஒளி, வெளிச்சம், நரகாசுரன்.

2254. ப்4ரம்ச' : = விழுதல், வீழ்ச்சி, அழிவு, குறைவு,

2255. ப்4ரம : = அலைந்து திரிதல், சிக்கல், தன்னைத் தானே சுற்றுதல், சுற்று, சுழல், பிசகு, தவறு, மயக்கம், கலக்கம், பொய்யான காட்சி.

2256. ப்4ரமணம் = தலை சுற்றல், உல்லாச யாத்திரை, மயக்கம், குழப்பம், ஸ்திரமற்ற தன்மை.

2257. ப்4ரமர: = வண்டு, தேன் வண்டு, காதலன், காமம் கொண்டவன், குயவனின் சக்கரம், யுவன்.

2258. ப்4ரமி: = சுற்றுதல், திரிதல், தவறு, குயவனின் சக்கரம், சுழல்.

2259. ப்4ரஷ்ட = வீழ்ச்சியடைந்த, கெட்ட நடத்தையுள்ள, அபகரிக்கப்பட்ட.

2260. ப்4ராத்ரு = உடன் பிறந்தவன்.
 
2261. ப்4ராந்தி: = பிழை, பிரமை, பொய்யான எண்ணம், அல்லது காட்சி, சஞ்சலம், குழப்பம்.

2262. ப்4ருகுடி: = ப்4ருகுடீ = ப்4ரூகுடி: = ப்4ரூகுடீ = புருவங்களை நெரித்தல்.

2263. ப்4ரூ = புருவம்.

2264. ப்4ரூண: = கர்ப்பம், குழந்தை.

2265. மகர : = முதலை, கடல் மீன், மகர ராசி.

2266. மகரகுண்ட3லம் = முதலையின் வடிவில் அமைந்த காதணிகள்.

2267. மகரத்4வஜ: = மன்மதன், படையின் அணிவகுப்பு, ஒரு வித மருந்து.

2268. மகரந்த3: = பூந்தேன், ஒரு வகை மல்லிகை, குயில், வண்டு, ஒரு வாசனை நிறைந்த மரம்.

2269. மகுடம் = கிரீடம், சிகரம்.

2270. மகுர: = கண்ணாடி, மகிழமரம், மொட்டு.
 
2271. மக2: = யாகம்.

2272. மக3த4: = ஒரு பண்டைய ராஜ்ஜியம், துதிப் பாடல்கள்.

2273. மக்3ன = மூழ்கிய.

2274. மக3வ : = மக3வன் = மக3வத் = இந்திரன்.

2275. மகா3 = ஒரு நக்ஷத்திரம் - மகம்.

2276. மங்க3ல = சுபமான, மங்களமான.

2277. மங்க3ளம் = சுபம், அதிருஷ்டம், நல் வாழ்த்து, உத்சவம், சுப காரியம்.

2278. மங்க3ள: = செவ்வாய்.

2279. மச்ச2: = மீன்.

2280. மஜ்ஜா = உடலில் உள்ள கொழுப்பு.
 
2281. மஞ்ச: = கட்டில், ஆசனம்.

2282. மஞ்ஜரி : = மஞ்ஜரீ = முளை, தளிர், பூங்கொத்து, கொடி, முத்து.

2283. மஞ்ஜீர: = மஞ்ஜீரம் = கால் சதங்கை, காலில் பூணும் நகை.

2284. மஞ்ஜு = மஞ்ஜுள = அழகான, பிரியமான, மனத்தை ஈர்க்கும், இனிமையான, இன்பமான.

2285. மஞ்ஜூஷா = பெட்டி, கல்.

2286. மட2: = மடம், துறவிகள் வசிக்கும் இடம்.

2287. மணி: = ரத்தினம், உயர்ந்தது, ரத்தினம் இழைக்கப்பட்ட அணிகலன்கள், காந்தக்கல்.

2288. மண்ட3: = மண்ட3ம் = காஞ்சி, பாலின் ஆடை, நுரை.

2289. மண்ட3: = நகை, அலங்காரம், தவளை, ஆமணக்குக் செடி.

2290. மண்ட3ப: = மண்டபம்.
 
2291. மண்ட3லம் = உருண்டையான பொருள், வட்டம், சக்கரம், கூட்டம், சமுதாயம், பிரதேசம், தொடுவானம்.

2292. மண்டி3த = அலங்கரிக்கப்பட்ட.

2293. மண்டூ3க: = தவளை.

2294. மதம் = எண்ணம், அபிப்பிராயம், நம்பிக்கை, கொள்கை, முடிவு, மதம், அறிவு.

2295. மதங்க: = யானை, மேகம், ஒரு முனிவரின் பெயர்.

2296. மதி: = புத்தி, அறிவு, மனம், கருத்து, எண்ணம், நினைவு.

2297. மத்த = மதம் கொண்ட, பைத்தியம் பிடித்த, கர்வம் கொண்ட, குடி போதையில் உள்ள.

2298. மத்ஸ: = மத்ஸ்ய: = மீன்.

2299. மத்ஸர: = பொறாமை, கோபம், துவேஷம், கர்வம், விரோதம்.

2300. மத2னம் = கடைதல், அழித்தல்.
 
2301. மதி2ன் = மத்து, காற்று, மேகங்களின் கர்ஜனை, இடி, ஆண் குறி.

2302. மத3: = குடி போதை, பைத்தியம், மதம் பிடித்தல், கர்வம், ஆசை, காம வெறி, தேன், அதிக மகிழ்ச்சி, கஸ்தூரி , வீரியம்.

2303. மத3ன: = மன்மதன், காதல், தேன் வண்டு, மகிழ மரம், காம விகாரம், இளவேனில் காலம்.

2304. மதா3ர: = மதம் பிடித்த யானை, பன்றி, காதலன், காமுகன், ஊமைத்தைச் செடி.

2305. மதி3ரா = சாராயம், கள்.

2306. மதீ3ய = என்னுடைய.

2307. மது4 = இனிப்பான, ருசியான.

2308. மது = தேன், மதுபானம், பூந்தேன், சாராயம், சர்க்கரை, தித்திப்பு.

2309. மது4: = வசந்த காலம், ஒரு அரக்கனின் பெயர், ஒரு மாதத்தின் பெயர்.

2310. மது4கர: = மது4லிஹ: = வண்டு.
 
2311. மது4ர = இனிப்பான, இன்ப தரும், ருசியான, பிரியமான.

2312. மது4ரம் = இனிப்பான.

2313. மத்4ய = நடு, மையத்தில் உள்ள, இடையில் உள்ள.

2314. மத்4ய: = மத்4யம் =மையப் பகுதி, கேந்திர ஸ்தானம், இடுப்பு, வயிறு, இடை, இடைவெளி.

2315. மத்4யமா = நடு விரல், திருமண வயது வந்த பெண்.

2316. மத்4யாஹ்ன = நடுப் பகல்.

2317. மத்4யே = நடுவில், இடையில்.

2318. மனனம் = நினைத்தல், ஞாபகம், அறிவு, ஊகம், அனுமானம், தியானம், புரிந்து கொள்ளுதல்.

2319. மனஸ் = மனம், இதயம், எண்ணம், விருப்பம், உணர்வு, அபிப்பிராயம்.

2320. மனஸிஜ: = மனோப4வ: = மன்மதன்.
 
Last edited:
2321. மனோரத2: = ஆசை, விருப்பம்.

2322. மனோஞ= மனோரம = மனோஹர = மனத்தைக் கவரும், அழகான, இனிமையான.

2323. மனஸ்வின் = புத்திசாலியான, கெட்டிக்கார, திட புத்தியுள்ள, தாரள மனமுள்ள, பெருந்தன்மையுள்ள.

2324. மனாக் = கொஞ்சம், மெல்ல, மெல்ல, சிறிது மாத்திரம், தாமதமாக.

2325. மனீஷா = விருப்பம், அறிவு, எண்ணம்.

2326. மனு: = மனிதன், மனித இனம், மனித இனத்தின் முதலவன்,
பூவுலகின் பதினான்கு அதிபதிகளில் ஒருவன்.

2327. மனூஜ: = மனுஷ்ய: = மனிதன்.

2328. மந்த்ர: = மந்திரம், ஆலோசனை, உபதேசம், வேத சம்ஹிதை.

2329. மந்த்ரின் = மந்த்ரி: = அமைச்சன், மந்திரி.

2330. மந்த2ர: =பொக்கிஷம், தலை மயிர், வெண்ணை, மது, கோபம், ஒற்றன், மந்தர மலை, மான், பழம், வைசாக மாதம்.

 
2331. மந்த3 = மந்தமான, தாமதமான, சோம்பேறியான, மூடமான, மிருதுவான, குறைவான.

2332. மந்த3: = சனி கிரகம்.

2333. மந்த3ம் = மந்தமாக. மெள்ள, கிரமமாக, செல்லச் செல்ல.

2334. மந்த3ர: = மந்தர மலை, கண்ணாடி, சுவர்க்கம், மந்தார மரம்.

2335. மந்தா3கினி = கங்கை நதி, ஆகாச கங்கை.

2336. மந்தா3ர: = மந்தார மரம், எருக்கஞ்செடி, சுவர்க்கம், யானை.

2337. மந்தி3ரம் = இருப்பிடம், மாளிகை, பட்டணம், கோயில்.

2338. மன்மத2: = மன்மன : = காமதேவன்.

2339. மன்யு: = கோபம், துன்பம், வேள்வி, அக்னி.

2340. மம = மே = என்னுடைய.

 
2341. மம = மே = என்னுடைய.

2342. மமதா = கர்வம்.

2343. மய: = அசுரர்களின் சிற்பி மயன், ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை.

2344. மயூக2: = ஒளிக் கிரணம், அழகு, ஒளி, காந்தி.

2345. மயூர: = மயில், ஒரு மலர், ஒரு கவியின் பெயர்.

2346. மரகதம் = மரகதக் கல்.

2347. மரணம் = சாவு.

2348. மரால: = அன்னப் பறவை, வாத்து, மேகம், குதிரை, வஞ்சகன், மாதுளைத் தோட்டம்.

2349. மரீசம் = மிளகு.

2350. மரீசி: = ஒளிக் கிரணம்.

 
Status
Not open for further replies.
Back
Top