'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
2351. மரு: = பாலைவனம், மலை.

2352. மருத் = காற்று, வாயு தேவன், கடவுள், தேவதை, மருதாணிச் செடி.

2353. மர்கட: = குரங்கு, சிலந்தி, விஷம்.

2354. மர்த்ய: = மனிதன், மண்ணுலகு.

2355. மர்மன் = உயிர் நிலைப்பகுதி, மறை பொருள், குறை, ரஹசியமானது,

2356. மர்யாதா3 = எல்லை, ஒழுங்கு, முறை, முடிவு, கெளரவம், மரியாதை.

2357. மல: = அழுக்கு, அசுத்தம், சாணம், மலம்.

2358. மலின =அழுக்கான, அசுத்தமான, தோஷமுள்ள, மட்ட ரகமான.

2359. மலினம் = பாபம், குற்றம், மோர்.

2360. மல்ல: = பலம் உள்ளவன், மல் யுத்தம் செய்பவன், கன்னம், குடிக்கும் பாத்திரம்.
 
2361. மல்லிகா = மல்லிகைப்பூ.

2362.
மஸி: = மஸீ = பேனா மை, கண் மை.

2363. மஷி: = மஷீ = பேனா மை, கண் மை.

2364. மஸுர: = மஸூர: = தலையணை.

2365. மஸ்கரின் = துறவி, சந்திரன்.

2366. மஸ்தக: = மஸ்தகம் = தலை, நெற்றி, உச்சி.

2367. மஹ : = உத்சவம், யாகம், பிரகாசம், எருமை.

2368. மஹத் = பெரிய, பருத்த, அதிகமான, உயர்ந்த,
மேலான, மஹத்வம் உள்ள.

2369. மஹத் = மகிமை வாய்ந்த, பெரியவன், ஒட்டகம், சிவன், மஹத் தத்வம், புத்தி தத்வம்.

2370. மஹதீ = நாரதரின் வீணை, மகிமை.
 
2371. மஹத்வம் = மேன்மை, சக்தி, பெருமை, விஸ்தாரத் தன்மை.

2372. மஹனீய = மரியாதைக்கு உரிய, பூரணமான, புகழுடைய, மேன்மை தாங்கிய.

2373. மஹா = பெரிய.

2374. மஹரிஷி = மஹா முனி = புகழ் வாய்ந்த முனிவர்.

2375. மஹாகவி: = சிறந்த கவிஞன்.

2376. மஹாகாய: = யானை, சிவன், விஷ்ணு, நந்தி.

2377. மஹாஜன: = மக்கள் கூட்டம்.

2378. மஹாத்மன் = மகாத்மா.

2379. மஹாதே3வ : = சிவன்.

2380. மஹாநஸ: = சமையல் அறை.
 
2381. மஹாநுபா4வ : = மரியாதைக்கு உரியவன்.

2382. மஹாபத2: = ராஜவீதி, முக்கிய சாலை.

2383. மஹாபாதகம் = பெரும் பாவம்.

2384. மஹாரத : = பெரிய தேர், 10, 000 வில்லாளிகளுடன் போர் செய்ய வல்லவன்.

2385. மஹித = பூஜிக்கப்பட்ட, கௌரவிக்கத்தக்க.

2386. மஹிஷ : = எருமை.

2387. மஹிஷீ = பெண் எருமை, பட்டத்து ராணி, தாதி.

2388. மஹீ = பூமி, நிலம், மண், ராஜ்ஜியம், தேசம்.

2389. மஹீபதி: = மஹீபால : = அரசன்.

2390. மஹீயஸ் = பெரிய, பலமுள்ள.

 
2391. மஹேந்த்3ர: = இந்திரன், ஒரு மலையின் பெயர்.

2392. மஹேச்'வர: = பிரபு, சிவன்.

2393. மகேஷ்வாஸ : = பெரும் வில்லாளி.

2394. மஹோத3தி4: = பெருங்கடல்.

2395. மக்ஷிக: = மக்ஷிகா = தேனீ, ஈ.

2396. மா = லக்ஷ்மி, தாயார், ஒரு அளவு.

2397. மா = வேண்டாம், இல்லை, இல்லாவிட்டால்.

2398. மாம்ஸ் = மாம்ஸம் = மாமிசம்.

2399. மாக: = மாக மாதம், ஒரு கவியின் பெயர் மாகன்.

2400. மாணவ: = சிறுவன்.
 
2401. மாணவக: = பையன், சிறுவன், மாணாக்கன், முத்து மாலை.

2402. மாதங்க3: = யானை, மலைவாசி.

2403. மாதாமஹ: = தாயின் தந்தை.

2404. மாதாமஹீ = தாயின் தாய்.

2405. மாதுல: = மாமன்.

2406. மாதுலா = மாதுலானி = மாமன் மனைவி.

2407. மாதுலேய: = மாமன் மகன்.

2408. மாத்ரு = தாய், பசு, ஆகாயம், பூமி, லக்ஷ்மி, பார்வதி.

2409. மாத்ர = மாத்திரம், மட்டும், பூராவும்.

2410. மாத்ரம் = அளவு, பரிமாணம், முழு அளவு.

 
2411. மாத்ஸர்யம்= அசூயை, பொறாமை.

2412. மாத4வ: = கிருஷ்ணன், இந்திரன், பரசுராமன், வசந்தகாலம், வைகாசி மாதம், ஒரு எழுத்தாளர்.

2413. மாது4ரீ = இனிமை, இனிப்பு, இனிய சுவை.

2414. மான: = மானம் கெளரவம், கர்வம், மமதை, கோபம்.

2415. மானம் = அளவு, அளவுகோல், பிரமாணம், நிரூபணம், நிரூபிக்கும் சாதனம்.

2416. மான்ய = மானனீய = கௌரவிக்கத்தக்க.

2417. மானவ: = மானுஷ: = மனிதன்.

2418. மானஸ = மானஸிக = மனத்துடன் தொடர்பு உடைய .

2419. மானஸம் = மனம், இதயம், ஆன்மா, மானசரோவர் ஏரி.

2420. மாந்த்ரிக: = மந்திரவாதி.

 
2421. மாயா = கபடம், தந்திரம், ஜாலம், கற்பனை, மாயை.

2422. மார: = கொலை, மன்மதன், அன்பு, காமம், தடை, இடையூறு.

2423. மாரக: = கொலை செய்பவன், மன்மதன், ராஜாளி, கொடிய நோய்.

2424. மாரணம் = அழித்தல், கொலை செய்தல்.

2425. மாருத: = காற்று, வாயு, பிராணன், வாதம்.

2426. மாருதி = மாருதஸூனூ = மாருதாத்மஜ = அனுமன்,
பீமன்.

2427. மார்கண்ட3 = மார்கண்டே3ய = ஒரு முனிவர்.

2428. மார்க3 = சாலை, வழி, வழக்கம், மலத்துவாரம்,
கஸ்தூரி, மார்கழி மாதம், காயத்தின் வடு.

2429. மார்க3சிர: = மார்க3சிரஸ் = மார்க3சீர்ஷ: = மார்கழி மாதம்.

2430. மார்ஜனம் = சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல்.

 
2431. மர்ஜநீ = துடைப்பம்.

2432. மார்ஜர: = மார்ஜால: = பூனை.

2433. மார்ததண்ட3: = மார்த்தாண்ட3: = சூரியன், எருக்கஞ்செடி, எண் பன்னிரண்டு.

2434. மார்த3வம் = மிருதுத் தன்மை.

2435. மாலா = மாலை, வரிசை, கூட்டம்.

2536. மாலிகா = மாலை, வரிசை, மல்லிகை, மகள், மாளிகை, அரண்மனை.

2437. மாஷ : = உளுந்து, 5 அல்லது 10 குந்துமணி எடைத் தங்கம், மூடன்.

2438. மாஹாத்ம்யம் = மகிமை.

2439. மாஸ் = மாஸ: = மாஸம் = மாதம்.

2440. மித = அளவான, கொஞ்சமான, வரம்புக்கு உட்பட்ட, மிதமான.
 
2441. மிதி: = அளவு, எடை, பிரமாணம், அறிவு.

2442. மித்ர: = சூரியன்.

2443. மித்ரம் = நண்பன்.

2444. மிதுனம் = ஜோடி, இரட்டை, கூடுதல், மிதுன ராசி.

2445. மித்யா = பொய்யாக, பலன் இல்லாத.

2446. மிச்'ர = கலந்த, சேர்த்த, பலவிதமான.

2447. மிஷ்ட = நனைந்த, இனிப்பான.

2448. மிஹிர: = சூரியன், சந்திரன், மேகம், காற்று, கிழவன்.

2449. மீன: = மீன், மீன ராசி.

2450. மீமாம்ஸா = ஆராய்ச்சி, ஒரு சாஸ்திரம்.
 
2451. மீலனம் = பூக்கள் மூடிக் கொள்ளுதல், கண்களை மூடிக் கொள்ளுதல்.

2452. முகுந்த3: = விஷ்ணு, பாதரசம், ஒரு ரத்தினம், குபேரனின் ஒரு நிதி.

2453. முகுர: = மொக்கு, மல்லிகைக்கொடி, முகம் பார்க்கும் கண்ணாடி.

2454. முகுல: = மொட்டு.

2455. முகுலம் = மொட்டு.

2456. முகுலித = மொட்டுக்களை உடைய, பாதி மூடப்பட்ட.

2457. முக்த = விடுபட்ட, மோக்ஷம் அடைந்த,விடுதி பெற்ற, கை விடப்பட்ட.

2458. முக்த: = முக்தி அடைந்தவன்.

2459. முக்தா = மௌக்திகம் = முத்து, விலைமாது.

2460.முக்தி: = மோக்ஷம், சுதந்திரம், விடுதலை.

 
2461. முக2ம் = வாய், முகம், முன்பகுதி, ஆரம்பம், ஓரம், விளிம்பு, நுழைவாயில்.

2462. முக்2ய = முக்கியமான, மேலான.

2463. முண்ட3கம் = தலை, இரும்பு.

2464. முண்ட3னம் = தலையைச் சவரம் செய்தல்.

2465. முதா3 = மகிழ்ச்சி, சந்தோஷம்.

2466. முதி3த = மகிழ்ச்சி அடைந்த, சந்தோஷம் அடைந்த.

2467. முத்3க3: = பச்சைப் பயிறு.

2468. முத்3க3ர: = சம்மட்டி, சிறு உலக்கை.

2469. முத்3ரணம் = முதிரை இடுதல், அச்சடித்தல்.

2470. முத்3ரா = முத்திரை, சின்னம், நாணயம், பதக்கம், குறி, முத்திரை மோதிரம்.
 
2471. முத்3ரித = முத்திரை இடப்பட்ட, குறி இடப்பட்ட.

2472. முனி: = முனிவர்.

2473. முரலீ = புல்லாங்குழல்.

2474. முஷ்டி: = முஷ்டி, மூடிய கை அளவு, மூடிய கை.

2475. முஸல: = முஸலம் = தடி, கதை, உலக்கை.

2476. முஹுஸ் = மறுபடியும், அடிக்கடி.

2477. முஹூர்த்தம் = ஒரு காலஅளவு, நல்ல நேரம்.

2478. மூக: = ஊமை.

2479. மூட4: = அறிவிலி, முட்டாள்.

2480. மூத்ரம் = சிறுநீர்.

 

2481. மூர்ச்ச2னம் = மூர்ச்சை அடைதல், மயக்கம் அடைதல், இசையில் ஸ்வரங்களின் ஒரு பிரயோகம்.

2482. மூர்த்தி: = உருவம், உடல், தெய்வங்களின் சிலை.

2483. மூர்த4ன் = நெற்றி, தலை, புருவம், சிகரம், தலைவன், முக்கியமானவன்.

2484. மூலம் = வேர், அடிப் பகுதி, ஆதாரம், ஆரம்பம், மூலம், உற்பத்திப் பகுதி, மூல நட்சத்திரம், மூல தனம், சமீபம்.

2485. மூலிகா= வேர், மூலிகை மருந்து.

2486. மூல்யம்= மௌல்யம் = விலை, சம்பளம், கூலி, லாபம்.

2487. மூஷ: = எலி, சுண்டெலி.

2488. மூஷக: = மூஷிக: = மூஞ்சூறு, எலி, திருடன்.

2489. ம்ருக3: = நாலுகால் பிராணி, மான், கஸ்தூரி, மிருக சீருஷ நட்சத்திரம்.

2490. ம்ருக3யா = வேட்டையாடுதல்.
 

2491. ம்ருக3யு: = வேட்டையாடுபவன்.

2492. ம்ருட3: = சிவன்.

2493. ம்ருடா3 = ம்ருடீ3= ம்ருடா3ணீ = பார்வதி.

2494. ம்ருத = வீணான, இறந்து போன.

2495. ம்ருதீ: = இறப்பு.

2496. ம்ருத்திகா = மண்.

2497. ம்ருத்யு: = யமன்.

2498. ம்ருத3ங்க3: = மிருதங்கம்.

2499. ம்ருது3 = ம்ருது3ல = மிருதுவான, வழவழப்பான.

2500. ம்ருஷா = வீணாக, பொய்யாக.
 
2501. மே = என்னுடைய, எனக்கு, என் பொருட்டு.

2502. மேக: = மேகல: = வெள்ளாடு.

2503. மேகலா = ஒட்டியாணம், மலைச் சரிவு, இடுப்பு, நர்மதை நதி.

2504. மேக4: = மேகம், கூட்டம், சேர்க்கை.

2505. மேட்4ர: = செம்மறியாடு.

2506. மேட்3ரம் = ஆண்குறி.

2507. மேத3ஸ் = உடலின் கொழுப்பு.

2508. மேதி3நீ = பூமி, நிலம், மண்.

2509. மேதா4 = புத்தி, பிரக்ஞை, யாகம்.

2510. மேனகா = ஒரு அப்சரஸ், ஹிமவானின் மனைவி.
 
2511. மேரு: = மேருமலை, மாலையின் நடுமணி.

2512. மேலனம் = சந்திப்பு, சேர்க்கை, கூடுதல், கலப்பு, கலவை.

2513. மேலா = மேளா = சபை, கூட்டம், மை, சங்கீத ஸ்வரக் கட்டு.

2514. மே ஷ: = செம்மறியாடு.

2515. மைத்ரம் = மைத்ரீ = நட்பு, மலக் கழிவு, அனுஷ நக்ஷத்திரம்.

2516. மைதுனம் = புணர்ச்சி, சேர்க்கை, திருமணம்.

2517. மோசனம் = விடுதலை, மோக்ஷம்.

2518. மோத3: = ஆனந்தம், மகிழ்ச்சி.

2519. மோத3க: = மோத3கம் = கொழுக்கட்டை.

2520. மோஹ: = மயக்கம், அறியாமை, ஆச்சரியம், மோஹம்.
 

2521. மோஹனம் = மயக்குதல், மனம் கலங்கச் செய்தல், மோஹிக்கச் செய்தல்.

2522. மோஹினீ = ஒரு அப்சரஸ், விஷ்ணுவின் ஒரு அவதாரம்.

2523. மோக்ஷ: = வீடு பேறு, முக்தி, பேரின்பம், விடுதலை.

2524. மௌஞ்ஜீ = முஞ்ஜீ என்ற புல்லினால் திரிக்கப் பட்ட முப்புரி நூல்.

2525. மௌட்3யம் = முட்டாள்தனம், சிறு பிள்ளைத்தனம்.

2526. மௌனம் = வாய் பேசாது இருத்தல்.

2527. மௌர்வீ = வில்லின் கயிறு.

2528. மௌலி: = கிரீடம், தலை உச்சி மயிர், தலை.


2529. ம்ளான = வாடிய, பட்டுப்போன, மெலிந்த, பலஹீனமான,
நாற்றமடைந்த, களைப்படைந்த.

2530. ம்ளானி: = வாட்டம், களைப்பு, துர்நாற்றம்.
 
2531. ய: = எவன், நடப்பவன், செல்பவன் காற்று, வண்டி, புகழ், ஒரு தானியம் (யவை)

2532. யஜ் = யாகம் செய்ய, பூஜை செய்ய அக்னியில் அர்பணிக்க.

2533. யஜமான : = குடும்பத் தலைவன், யஜமானன் , யாகம் செய்பவன்.

2534. யஜுஸ் = யஜுர் வேதம்.

2535. யக்ஞ : = யாகம், அக்னி தேவன், விஷ்ணுவின் ஒரு பெயர், பூஜை காரியம், யாக காரியம்.

2536. யஜ்வன் = யாகம் செய்பவன்.

2537. யத் = உழைக்க, முயற்சி செய்ய.

2538. யதஸ் = எதிலிருந்து, எதனால், எங்கிருந்து, எதன்
காரணமாக, ஆகையால், அப்படியாக.

2539. யதி: = துறவி.


2540. யதி: = தடை, நிறுத்தம், தங்குதல்.
 
2541. யத்ன : = முயற்சி, ஈடுபாடு, கார்யம், ஊக்கம்.

2542. யாத்ரா = எங்கு, எப்போது, ஏனென்றால்.

2543. யதா2 = முன் சொன்னபடி.

2544. யதா2க்ரமம் = யதாக்ரமேண = முறைப்படி, உசிதமான வழியில்.

2545. யதா2ன்யாயம் = நியாயமான முறைப்படி.

2546. யதா2பூர்வ = யதாபூர்வக = முன்போலவே.

2547. யதா2பா4க3ம் = சரியான பங்கின் படி, சரியான இடத்தின் படி.

2548. யதா2ர்த்தம் = யதார்த்த: = உண்மையாக.

2549. யதா2வகாசம் = இடத்துக்கு ஏற்றபடி.

2550. யதா2வத் = சரியாக, உசிதமான முறையில்.
 
2551. யதா2விதி4 = சட்டப்படி, ஒழுங்கு முறைப்படி.

2552. யதா2ச'க்தி = சக்திக்குத் த்குந்தபடி.

2553. யதா2சுக2ம் = இஷ்டப்படி, சுகத்துடன்.

2254. யதா2ஸ்தானம் = சரியான இடத்தில்.

2555. யதே2ச்சா2 = யதேஷ்டா = யதேஷ்டம் = மனம் போன படி.

2556. யதோ2க்த: = முன் சொன்னபடி.

2557. யத்3 = எவன், எவள், எது.

2558. யதா 3 =எப்போது, எந்த சமயத்தில்.

2559. யதி3 = இருக்குமானால், அப்படியானால்.

2560. யத்3ருச்சா2 = தன் மனம்போல.
 
2561. யத்3ருச்சா2தாஸ்= எதிர்பாராமல்.

2562. யத்3ப4விஷ்ய: = விதிப்படி நடக்கும் என்னும் சோம்பேறி.

2563. யந்த்ரம் = உபகரணம்.

2464. யம: = புலன் அடக்கம்.

2565. யமுனா = யமுனை நதி.

2566. யவ: = யவை என்னும் தானியம்(பார்லி), வேகம்.

2567. யவன: = வெளி நாட்டவன், கிரேக்க நாட்டினன்.

2568. யச'ஸ் = புகழ், கீர்த்தி.

2569. யச'ஸ்வின் = புகழுடைய.

2570. யஷ்டி: = யஷ்டி = கைத்தடி, கதை, தூண், மலை, சரம்.

 
2571. யக்ஷ: = யக்ஷன், குபேரனின் சேவகன்.

2572. யக்ஷ்ம: = யக்ஷ்மன் = க்ஷய ரோகம், காச நோய்.

2573. யா = செல்ல, விட்டுப்போக, பின் வாங்க, யாசிக்க.

2574. யாக; = வேள்வி, யாகம், சடங்கு.

2575. யாச் = வேண்டிட, பிச்சை எடுக்க, தெரிவிக்க, பிரார்த்திக்க.

2576. யாசக: = பிச்சைக்காரன்.

2577. யாசனம் = யாசனா =பிரார்த்தனை, விண்ணப்பம், பிரார்த்தனை.

2578. யாத்ரா = பிரயாணம் , உற்சவம், ஊர்வலம், முறை, வழக்கம், உலக வாழ்க்கை.

2579. யாத்ரிக: = பிரயாணி, யாத்திரிகன்.

2580. யாத்3ருஷ = யாத்3ருக்ஷ = எது போன்ற, எம்மாதிரியான.

 
2581. யானம் = நடத்தல், சவாரி செய்தல், வாஹனம் , வண்டி, படகு, கப்பல், விமானம், பல்லக்கு.

2582. யாம: = அடக்குதல், தன்னடக்கம், ஏழரை நாழிகைப் பொழுது.

2583. யாமி: = யாமீ = இரவு, சஹோதரி.

2584. யுக்த:= கூடிய, சேர்ந்த, தகுதியான, உசிதமான,சரியான, இணைக்கப்பட்ட ,கெட்டிக்கார .

2585. யுக்தி: = உபாயம், தந்திரம், உபயோகம், திறமை, தகுதி, காரணம், கூடுதல்.

2586. யுக3ம் = ஜோடி, இரட்டை, கணவன்-மனைவி, நுகத்தடி, நான்குயுகங்கள்.

2587. யுக3பத்3 = ஒரே சமயத்தில்,எல்லாம் சேர்ந்து.

2588. யுக3ளம் = யுக்மம் = ஜோடி, இரட்டை.

2589. யுஜ் = சேர, ஒட்டிக்கொள்ள, அடுக்க, தயாரிக்க, திடமாக்க, வைக்க, கொடுக்க, சமர்பிக்க.

2590. யுத்4 = சண்டையிட, போர் புரிய, வாக்குவாதம் செய்ய.

 
2591. யுத்3த4ம் = போர், சண்டை.

2592. யுவதி:= யுவதீ = இளம் பெண்.

2593. யுவன் = வாலிபன்.

2594. யுஷ்மத்3 = நீ, நீங்கள்.

2595. யூக: = யூகா = பேன்.

2596. யூதம் = மந்தை.

2597. யோகா3: = இணைப்பு, சேர்க்கை, சேருதல், தொடர்பு, செயல், முயற்சி, விளைவு, தகுதி, பலன்.

2598. யோகி3ன் = யோகம் செய்பவன்.

2599. யோகி3னீ = யோகம் செய்பவள், மந்திரக்காரி, பராசக்தியின் பணிவிடை மாது.

2600.யோக்3ய = தகுதியான, உசிதமான, உபயோகிக்கத் தக்க.
 
Status
Not open for further replies.
Back
Top