• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
'அ' முதல் 'க்ஷ' வரை.



1. அ: = விஷ்ணு, பிரம்மா, சிவன், ஆமை, முற்றம்.

2. அங்க3: = மடி, குறி, ஒன்பது என்னும் எண்ணிக்கை, பக்கம், நாடகத்தின் ஒரு பகுதி, வளைந்த ஆயுதம்.

3. அங்க3ம் = உடல், உடலின் உறுப்பு, பாகம், சொல்லின் மூல உருவம்.

4. அங்க3னா = பெண், அழகி, கன்யா ராசி.

5. அஜ: = பிறப்பற்றவன், விஷ்ணு, சிவன், பிரம்மா, ஆன்மா, செம்மறி ஆட்டுக்கிடா, மேஷ
ராசி, சந்திரன், காமன்.

6, அண்ட3ம் = பீஜம், அண்டகோசம், முட்டை, மானின்
கஸ்தூரி, வீர்யம்.

7. அதி3தி = பூமி, தேவர்களின் தாயார், புனர்வசு நட்சத்திரம்.

8. அத்3ரி = மலை, கல், சூரியன் , மரம், மேகம், மேகக் கூட்டம், எண் ஏழு
 
Last edited:
9. அதி4ஷ்டானம் = அருகில் இருத்தல், ஆதாரம், வசிக்குமிடம், பதவி, துறவியின் சமாதி.

10. அத்4யக்ஷ: = தலைவர், அக்ராசனர், மேற்பார்வையாளர் .

11. அத்4யயனம்= படித்தல், வேதம் ஓதுதல்.

12. அத்4யாய:= பாடம், அத்யாயம்.


13. அனக4 = பாவமற்ற, குற்றமற்ற, சுத்தமான.

14. அனக4: = விஷ்ணு , சிவன், வெள்ளைக் கடுகு.

15. அனங்க3:= உடல் அற்றவன், மன்மதன், காற்று.

16. அனந்தம் =ஆகாயம், வாயுமண்டலம், மோக்ஷம், பரபிரம்மம்.
 
Last edited:
#3.

17. அனந்த: =ஆதிசேஷன், விஷ்ணு, கிருஷ்ணன், பலராமன், சிவன், பாம்பரசன் வாசுகி, மேகம், கதை, ஸ்ரவண நட்சத்திரம்.

18. அனர்த்த2: = பயனற்ற பொருள், கெடுதி, ஆபத்து.

19. அனல: = அக்னி தேவன், நெருப்பு, ஜீரண சக்தி, கிருத்திகை நட்சத்திரம்.

20. அநித்திய =அழிவுள்ள, நிச்சயமற்ற, சஞ்சலமான.

21. அனில: = காற்று, வாயு தேவன், உடலில் உள்ள வாயு, வாத நோய், ஸ்வாதிநட்சத்திரம்.

22. அநிஷ்டம் = துரதிருஷ்டம், விபத்து.

23. அனுப3ந்த4ம் = கட்டுதல், பயன், சேர்த்தல், தொடர்பு.

24. அனுமானம் = ஊகம், உவமை, சம்ஸ்கிருத பாஷையின் ஒரு அலங்கார வகை.
 
25. அனுராக3ம் = அன்பு, பக்தி, பாசம், சிவப்புத் தன்மை.

26. அனுஷ்டானம் = கார்யம் செய்தல், செயல்முறை, மத சம்பந்தமான செயல்கள்.

27. அந்தம் = முடிவு, எல்லை, சாவு, அழிவு, ஒரு சொல்லின் கடைசிப் பகுதி.

28. அபசாரம் =தவறு இழைத்தல், குற்றம்.

29. அபாத்ரம் = தகுதி அற்ற மனிதன், தானம் பெற தகுதி இல்லாதவன்.

30. அபாரம் = கரை இல்லாத, எல்லை இல்லாத, கடக்க முடியாத, மிகவும் அதிகமான.

31. அபூர்வம் = புதிய, வினோதமான, ஒப்பற்ற, இதற்குமுன் கண்டிராத.

32. அபேக்ஷை = விருப்பம், தேவை, அவசியம், ஆலோசனை, தொடர்பு , கவனம்.
 
Hi,

You have presented the words in a nice format. Experience speaks. By the way , I have trouble in presentign the tamil fonts as elegant as u have done here. Can u help me in this regard.

Thanks and Regards

KRR
KANNAN RANGARAJAN
 
Dear Mr. Rajan,

I believe that 'whatever is worth doing, is worth doing well' :)

In G mail you can download 'Rich text- if it NOT there already.

It allows you to type in English and the words will appear in the language you have selected.

It allows the usage of all the Indian languages and also Sanskrit.

You can go on typing the words guessing the spelling. The words will appear on the page. If it is has more than one optionS, you may view them by LEFT clicking on the word.

A SMALL table with all the options will appear and you can click on the word you want. It is actually very easy.

Since we have long and short sounds and also three 'la's, three 'na's and two 'ra's using the options is inevitable-if you want the correct word.

Good luck. Hope to see your next posting in the rich text!

with best wishes,
V.R.
 
Last edited:
Dear Mr. Rajan,

I have not usurped your topic! Mine is different.

I want to give all the Sanskrit words commonly used in the four South Indian Languages, with their correct pronunciation and all the other meanings-besides the one we already know!


The threads may run parallel but they are not overlapping.

with best wishes,
V.R.
 
#5.

33. அபி4ஜன: = குடும்பம், வம்சம், பிறப்பிடம், தாய்நாடு, புகழ்.

34. அபி4ஜித் = விஷ்ணு, ஒரு நட்சத்திரத்தின் பெயர், சோம யாகம்.

35. அபி4நந்த3னம் = மகிழ்ச்சி அடைதல், நமஸ்கரித்தல், வரவேற்றல், விருப்பம்.

36. அபி4நவ = முற்றிலும் புதுமையான, மிகவும் இளமையான.

37. அபி4மானம் =பெருமை(கர்வம் அல்ல), தன்மானம், எண்ணம், பிரியம், நேசம், ஆசை.

38. அபி4லாஷை = விருப்பம், பற்றுதல், காதல்.

39. அபி4வாதனம் = பெரியவர்களை வணங்குதல்.

40.அம்ருதம் = அழிவின்மை, மோக்ஷம், சுவர்க்கம், ஜலம், யாகசேஷம்.
 
41. அம்ப3ரம் =ஆகாயம், துணி, உடை, ஒரு வாசனைப் பொருள்.

42. அம்பு3ஜ: = சந்திரன், ஸாரஸபக்ஷி, சங்கு, கற்பூரம்.

43. அம்பு3ஜம் = தாமரை, வஜ்ராயுதம், இடி.

44. அயனம் = நடத்தல், செல்லுதல், வழி, பாதை, இடம், வீடு.

45. அரி : =பகைவன், சக்கரம், வண்டியின் ஒரு பாகம்.

46. அரிஷ்டம் =துரதிர்ஷ்டம், கெட்ட சகுனம், சௌபாக்கியம், பிரசவ அறை

47. அருண: = சிவப்பு நிறம், அருணன், சூரியன்.

48. அர்க: =ஒளிக்கதிர், சூரியன், நெருப்பு, பளிங்கு, ஸ்படிகம், தாமிரம், இருக்கு, இந்திரன், உணவு, ஞாயிற்றுக் கிழமை.
 
#7.

49. அர்க்4யம் = தேவதைகளுக்கும், பெரியவர்களுக்கும் அளிக்கப்படும் உபசாரம், பழம், புஷ்பம், தேன், அக்ஷதைகளுடன் அளிக்கப்படும் ஜலம்.


50. அர்ஜுன : = வெண்மை நிறம், மருத மரம், அர்ஜுனன், மயில்.

51. அர்த்த2: = குறிக்கோள், காரணம், சொல்லின் பொருள், வஸ்து, செல்வம்,விஷயம், வியாபாரம், காரியம், பயன், உபயோகம்.

52. அலக: = சுருட்டை முடி, நெற்றில் விழும் குழற்கற்றை.

53. அலி: =வண்டு, தேன், காக்கை, குயில், சாராயம், விருச்சிகராசி.

54. அல்ப = அல்பமான, சிறிய, முக்கியமில்லாத, அழிவடையக்கூடிய.

55. அவகாச': = சந்தர்ப்பம், வாய்ப்பு, விடுமுறை, ஓய்வு, இடம், இடைவெளி, இடைவேளை, தொளை, வெடிப்பு.

56. அவபோ3த4 : = விழித்துக் கொள்ளுதல், அறிவு, பார்த்தல், விவேகம், கற்பித்தல், அறிவித்தல்.
 
Last edited:
#8.

57. அவயவ: =உடல் பாகம், அம்சம், உடல், வாதம் செய்ய பயன்படும் ஒரு உ
ருப்பு.

58. அவரோஹ : = இறங்குதல், மரத்தின் மீது சுற்றிக்கொள்ளும் கொடி, சுவர்க்கம், ஆகாயம், ஆலம் விழுது, சங்கீதத்தில் மேல் ஸ்தாயில் இருந்து கீழே இறங்குவது.

59. அவஸர: = சமயம், சந்தர்ப்பம், ஸ்தானம், ஆண்டு, மழை பொழிதல், ரஹசிய ஆலோசனை.

60.அவஸானம் = நிறுத்துதல், முடிவு, வியாதி, எல்லை, இருப்பிடம், இளைப்பு ஆறுமிடம்.

61. அவஸ்தா = நிலை, ஸ்திதி, கால அளவு, உருவம், தோற்றம், அழகு, அளவு, விகிதம்.

62. அவித்3யா = அறியாமை, மாயை, ஆன்மீக அறிவு இன்மை.

63. அவ்யக்த = தெளிவற்ற, கண்ணுக்குப் புலப்படாத, நிச்சயமற்ற, தெரியாத, வளர்ச்சி அடையாத.

64. அசு'ப4ம் = அமங்கலம், கெட்டது, பாவம், விபத்து, ஆபத்து.
 
#9.

65. அசோ'க: = அசோக மரம், விஷ்ணு, அரசன் அசோகன், சந்தோஷம்.

66. அஷ்டகம் = எட்டு பாகங்கள் கொண்டது, எட்டுப் பொருட்களின் சேர்க்கை.

67. அஸத் = இல்லாத, உண்மையற்ற, கெட்ட, தவறான, துஷ்ட, பாவம் நிறைந்த .

68. அஸஹன = பொறுத்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ள முடியாத, பொறுமை இல்லாத.

69. அஸாத்4ய = செய்ய இயலாத, கடினமான, நிரூபிக்க முடியாத, நிவாரணம் இல்லாத.

70. அஹித = வைக்கப்படாத, பொருந்தாத, உசிதம் இல்லாத, விரோதமான.

71. அக்ஷ: = அச்சு, இருசு, வண்டி, சக்கரம், அக்ஷ ரேகை, ருத்ராக்ஷம், நல்ல பாம்பு, கருடன், ஆன்மா, அறிவு, பிறவிக்குருடன்.

72 .அக்ஷரம் = எழுத்து, சப்தம், ப்ரஹ்மம், ஜலம், ஆகாயம், மோக்ஷம், அழிவில்லாதது.
 
# 10.

73. ஆகர்ஷணம் = இழுத்தல், வசீகரித்தல், கடத்திச் செல்லல்.

74. ஆகார: = உருவம், அமைப்பு, தோற்றம், அடையாளம், குறிப்பு.

75. ஆக்ருதி : = உருவம், அமைப்பு, உடல் தோற்றம், மாதிரி, வகை, வர்க்கம்.

76. ஆக்ரமணம் = அடைதல், பிடித்தல், விஸ்தரித்தல், ஆரம்பித்தல்.

77. ஆக்ரோஷணம் = உரக்கக் கூப்பிடுதல், அழுதல், கதறுதல், நிந்தை, சாபம், சபதம்.

78. ஆக்2யானம் = சொல்லுதல், செய்தி, கதை, பதில்.

79. ஆக்3ரஹ : = எடுத்தல், பிடித்தல், ஆக்கிரமித்தல், பிடிவாதம், கோபம், உறுதி.

80. ஆஜீவனம் = பிழைப்பு, தொழில்.
 
Last edited:
#11.

81. ஆட3ம்ப3ர : = கர்வம், வெளிப்பகட்டு , கோபம், ஆவேசம், சந்தோஷம், மேகத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல், யுத்த பேரிகை.

82. ஆதங்க3 : = நோய், பீடை, வேதனை, பயம், மிருதங்க ஓசை.

83. ஆதுர = பீடிக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, பாதிக்கப்பட்ட, நோயுற்ற, பலவீனமான.

84. ஆத்மன் = ஆன்மா, உயிர், தான் என்னும் எண்ணம், பரமாத்மா, ஸாரம், நடத்தை, மனம், புத்தி, சக்தி, வலிமை, உருவம், மகன், சூரியன், அக்னி, வாயு.

85. ஆத3ர : = மரியாதை, பூஜ்யத்தை, உத்சாஹம், கவனம், ஊக்கம், முயற்சி, அன்பு, ஆரம்பம்.

86. ஆதி3த்ய : = அதிதியின் மகன், தேவன், சூரியன், வாமனன், புனர்வசு நக்ஷத்திரம்.

87. ஆதா4ர : = ஆதாரம், பிடிப்பு, உதவி, ரக்ஷணை, பாத்திரம், அணை, கால்வாய்.

88. ஆதி4பத்யம் = எஜமானத்தன்மை, பிரபுத்தன்மை, எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாதாக இருப்பது, அரசனின் கடமைகள்.
 
# 12.

89. ஆதி4பெள3திக = பிராணிகளால் ஏற்படும் (துன்பம் முதலியன), பிராணிகள் தொடர்புடைய, பௌதிக. அடிப்படையான.

90. ஆத்4யாத்மிக = பரமாத்மாவுடன் தொடர்புடைய, ஆன்மீக, பரிசுத்தமான, புனிதமான, மனதுடன் தொடர்புடைய.

91. ஆனனம் = வாய், முகம், ஒரு நூலின் ஒரு பெரிய பகுதி.

92. ஆந்தோ3ளிக = ஊஞ்சல், பல்லக்கு.

93. ஆப்த = கிடைப்பெற்ற, அடையப்பெற்ற, பிடிக்கப்பட்ட, நம்பிக்கைக்குப் பாத்திரமான, கெட்டிக்காரனான, பழகிய.

94. ஆபா4ஸ : = பிரகாசம், பிரதிபிம்பம், ஒற்றுமை, உண்மையற்ற வாதம், தப்பானவாதம்.

95. ஆமந்த்ரணம் = அழைத்தல், வரவேற்றல், விடைபெறுதல், வணக்கம் தெரிவித்தல், அனுமதி, உரையாடல்.

96. ஆயதனம் = இடம், வீடு, வேள்விச்சாலை, மேடை, வேதிகை, வீடு கட்டுமிடம், பரிசுத்தமான இடம்.
 
97. ஆயாஸ: = முயற்சி, சோர்வு, மனவேதனை.

98. ஆரோபணம் = ஒன்றின் மீது வைத்தல், ஸ்தாபித்தல், செடி நடுதல், வில்லின் நாண் ஏற்றுதல்.

99. ஆர்ஜவம் = தெளிவு, நேர்மை, எளிமை.

100. ஆர்யா : = எஜமானன், பூஜிக்கத் தகுந்தவன், நல்ல ஒழுக்கம் உடையவன்.

101. ஆலம்ப3னம் = தாங்கள், ஆதாரம், தூண்.

102. ஆலயம் = இடம், வீடு, இருப்பிடம், ஆசனம்.

103. ஆலஸ்யம் = சோம்பல், மந்தகதி.

1o4. ஆலாபனம் = விஸ்தாரமாகப் பேசுதல், பாடுதல்.
 
# 14.

105. ஆலிங்க3னம் = கட்டிக்கொள்ளுதல், தழுவுதல்.

106. ஆலோகனம் = பார்வை, பார்ப்பது, காந்தி, புலவனின் புகழ்ச்சொல்.

107. ஆவரணம் = மறைத்தல், முடித்தல், வேலி, படுதா, திரை, கேடயம்.

108. ஆவர்த்தனம் = சுற்றுதல், திரும்புதல், கடைதல், உருக்குதல், மனனம் செய்தல், படித்தல், வட்டமான சலனம்.

109. ஆவாஹனம் = கூப்பிடுதல், அழைத்தல், தேவதைகளை வரவழைத்தல்.

110. ஆவிர்ப4வ : = உண்டாக்குதல், அவதரித்தல், அவதாரம் செய்தல்.

111. அசௌ'சம் = தீட்டு, தூய்மை இன்மை.

112. ஆச்'ரயம் = புகலிடம், இளைப்பாருமிடம், கொள்ளுமிடம், பெறுபவன், போஷிப்பவன்.
 
# 15.
113. ஆச்'விநேயௌ = தேவர்களின் இரட்டை வைத்தியர்கள் அச்விநீ குமாரர்கள், நகுல சஹாதேவர்கள்.

114. ஆஸக்த = மிகுந்த பாசம் உடைய, நிச்சயிக்கப்பட்ட, ஈடுபாடு கொண்ட, நிரந்தரமான, தொடர்ந்த.

115. ஆஸங்க : = இணைதல், சேருதல், கூடுதல், உடன் இருத்தல், தொடர்பு, சம்பந்தம்.

116. ஆஹரணம் = அருகில் கொண்டு வருதல், பிடித்துக் கொள்ளல், எடுத்தல், பூர்த்தி செய்தல், வரதக்ஷிணை.

117. ஆஹுதி : = ஒரு தேவதைக் குறித்து யாகத்தின் போது அக்னியில் ஹோமகுண்டத்தில் அர்ப்பணம் செய்யப்படுவது.

118. ஆஹூதி: = கூப்பிடுதல், அழைத்தல்.

119. ஆஹோபுருஷிகா = அதிகமான அஹங்காரம், படை சம்பந்தப் பட்ட தற்பெருமை.

120. ஆக்ஷேப : = எறிதல், வசீகரித்தல், ஆக்ஷேபித்தல், தூஷித்தல், நிந்தித்தல், சந்தேஹம், சங்கேதம், யூகம், அனுமானம், மறுப்பு, எதிர்ப்பு.
 
# 16.

121. இ : = மன்மதன்.

122. இங்கி3தம் = ஜாடை, குறிப்பு, சமிக்ஞை, மனதின் உள் எண்ணம்.

123. இதிஹாஸ : = சரித்திரம், காப்பியம், வீர கதை.

124. இந்தி3ரா = இலக்குமி தேவி.

125. இந்து3 : = சந்திரன், ஒன்று என்னும் எண், கர்ப்பூரம்.

126. இந்து3ஜா = ரேவா என்னும் நர்மதை நதி.

127. இந்து3மௌலி = சிவபிரான்.

128. இந்து3வாஸர: = திங்கட்கிழமை.
 
# 17.

129. இந்த்3ரஜாலம் = கண்கட்டு வித்தை, ஏமாற்று வித்தை.

130. இந்த்3ரத4னுஷ் = வானவில்.

131. இந்த்3ரநீலம் = விலை உயர்ந்த நீல நிற ரத்தினம்.

132. இந்த்3ரியம் = உடல் உறுப்புகள், புலன்கள், வலிமை, சக்தி, ஆண்மை.

133. இஷ்ட = விரும்பப்படும், நேசிக்கப்படும், பூஜிக்கப்படும்,கௌரவிக்கப்படும்.

134. இஷ்டி: = யாகம், பிரார்த்தனை, ஊக்கம், வேகம், ஆணை, அழைப்பு, விருப்பம்.

135.இக்ஷு : = கரும்பு.

136. இக்ஷ்வாகு: = அயோத்தியில் அரசு செய்த சூரிய குல மன்னர்களில் முதல் அரசன்.
 
137. ஈர்ஷா = பொறாமை, குரோதம்.

138.ஈசா'ன : = ஆள்பவன், யஜமானன், சிவன், சூர்யன், விஷ்ணு, திருவாதிரை நக்ஷத்திரம், எண் பதினொன்று.

139. ஈஸ்வர : = எஜமானன், அரசன், அரச குமாரன், கணவன், கனவான், பரம் பொருள், சிவன், மன்மதன்.

140. ஈக்ஷணம் = பார்த்தல், பார்வை, கண்.

141. உக்த2ம் = பழமொழி, வாக்கியம், செய்யுள், துதிப்பாட்டு.

142. உக்3ர : = பயங்கரமான, கொடூரமான, நாகரீகமற்ற, பலமுள்ள, வலிமையான, கடுமையான, கடினமான, தீவிரமான, உஷ்ணமான.

143. உசித : = தகுதி உள்ள, சரியான, உபயோகமான, பழக்கத்தில் உள்ள, பழக்கப்பட்ட.

144. உச்சாரணம் = சொல்லுதல், உச்சரித்தல், எடுத்தல், அறிவிப்பு.
 
145. உச்சி2ஷ்டம் = யாக உணவில் மீதமானது, எச்சில்.

146. உச்ச்2வாஸ: = மூச்சை வெளிவிடுதல், பெரு மூச்சு, தேற்றுதல், சமாதானப் படுத்துதல், உற்சாகப் படுத்துதல்.

147. உஜ்ஜ்ரும்ப4ணம் = கொட்டாவி விடுதல், வாய் திறந்திருத்தல், பரப்புதல், வளர்ச்சி.

148.உஜ்ஜ்வலனம் = எரிதல், பிரகாசித்தல், நெருப்பு.

149. உடு3: = நக்ஷத்திரம், தண்ணீர்.

150. உடு3பதி : = சந்திரன்.

151. உத்கர்ஷணம் = உயரே இழுத்தல், எடுத்துக் கொள்ளல்.

152. உத்தம = மிக நல்ல, மேன்மை பொருந்திய, முக்கிய, மேலான, உயரமான, பெரிய, முதன்மையான.
 
Smt. Visalakshi Ramani,
Very good effort. Thank you! It will many to understand the meaning of many Samskritham terms, particularly when they are given in Tamizh with phonetic symbols to pronounce Samskritham!
 
dear Mr. Kahanam,

Words are the tools used by the writers.

Without being equipped properly, they can't do justice to their job, namely

writing.

Those who do not know all the different meanings of the words may learn them.

The others can brush up their knowledge. It won't harm anyone to spend a few

minutes a day to sharpen our tools (vocabulary).

with warm regards,
V.R.

 
153. உத்தர = வடக்கு திசையில் உள்ள, மேலேயுள்ள, உயரத்தில் உள்ள, முக்கியமான, அதிகமான, உயர்ந்த.

154. உத்தராயணம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் காலம் ( தை மாதப் பிறப்பு முதல் ஆடி மாத பிறப்பு வரை).

155. உத்தான = பரப்பப்பட்ட, விஸ்தரிக்கப்பட்ட, நீட்டிய, நேரான, கபடமற்ற, திறந்த, உண்மையான.

156. உத்தானம் = எழுதல், உதயம் ஆவது, மூலம், ஆரம்பம், உற்பத்தி, புனர் நிர்மாணம், முயற்சி, செயல், சந்தோஷம்.

157. உத்பதனம் = மேலே பறத்தல், மேலே குதித்தல், எழும்புதல், பிறத்தல், உற்பத்தி செய்தல்.

158. உத்பத்தி : = பிறப்பு, மூலம், உற்பத்தி, எழுதல், லாபம், விளைச்சல், வரும்படி.

159. உத்ஸவ : = புண்ய காலம், பண்டிகை, கொண்டாட்டம், ஆனந்தம், மகிழ்ச்சி, ஆசை, விருப்பம்.

160. உத்ஸாஹ : = விடாமுயற்சி, சக்தி, தைரியம், திறமை, வலிமை, ஸந்தோஷம்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top