'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
2601. யோக்3யதா= திறமை, தகுதி, பொருளின் உபயோகத் தன்மை.

2602. யோஜனம் = சேர்த்தல், பிரயோகித்தல், சுமார் எட்டு மைல் தூரம்.

2603. யோத4: = போர் வீரன்.

2604. யோனி: = கர்பப்பை, தோற்றுவாய், பெண் குறி, தோன்றும் இடம், பிறப்பிடம்.

2605. யௌவனம் = இளமைப் பருவம்.

2606. யௌவராஜ்யம் = இளவரசுப் பட்டம்.

2607. ரக்த = சிவப்பான, வர்ணம் தீட்டப்பட்ட, பிரியமான, இனிய, இன்பமான.

2608. ரக்த: = ரக்தவர்ணம்.

2609. ரக்தம் = இரத்தம், தாமிரம், குங்குமம், சிந்தூரம், குங்குமப்பூ.

2610. ரக்தி: = பிரியம், பாசம், அன்பு, வசீகரிப்பு.
 
2611. ரகு4: = சூரிய வம்சத்தின் ஒரு அரசன்.

2612. ரங்க3:= வர்ணம், நாடக சாலை , சபை, போர்க்களம்.

2613. ரசனா = ஒழுங்கு முறை, தயாரிக்க, படைக்க, செய்ய, எழுத, உண்டாக்க, வைக்க, அலங்கரிக்க, திடப் படுத்த.

2614. ரஜக: = வண்ணான்.

2615. ரஜதம் = வெள்ளி, முத்துமாலை, ரத்தம், தந்தம், நக்ஷத்திரக் கூட்டம்.

2616. ரஜநி: = ரஜநீ = இரவு.

2617. ரஜநீகர: = ரஜநீபதி: = சந்திரன்.

2618. ரஜஸ் = புழுதி, தூசு, மகரந்தம், அறியாமை, மன இருள், விளை நிலம்,
பெண்களின் மாதவிடாய்.

2619. ரஜ்ஜு: = கயிறு, தலைப்பின்னல் .

2620. ரஞ்சக: = ஓவியக்காரன், வர்ணம் தீட்டுபவன்.
 

2621. ரஞ்ஜனம் = வர்ணம், வர்ணம் தீட்டுதல், மகிழ்வித்தல், சந்தோஷம் அடைதல்.

2622. ரடனம் = கத்துதல், கூச்சல் இடுதல்.

2623. ரண: = ரணம் = சண்டை, போர்.

2624. ரண்டா3 = விதவை, விலைமகள்.

2625. ரதம் = மகிழ்ச்சி, புணர்ச்சி.

2626. ரதி: = மகிழ்ச்சி, இன்பம், பிரியம், காதல், ஆசை, பெண்குறி, மன்மதனின் மனைவி .

2627. ரத்னம் = சிறந்த வஸ்து, ரத்தினம்,
விலை உயர்ந்தது.

2628. ரத்னாகர: = கடல், அரபிக்கடல்.

2629. ரத்னாவளி = இரத்தின மாலை, ஹர்ஷன் இயற்றிய ஒரு நாடகம்.

2630. ரத்னி : = முழங்கை, ஒரு முழ அளவு.
 
2631. ரத2: = தேர், வண்டி, வாஹனம், உடல், கால், அவயவம், பாதம்.

2632. ரதி2க: = ரதின் = ரதம் ஓட்டுபவன், ரதத்தில் சவாரி செய்பவன், ரதவீரன், ரதம் உடையவன்.

2633. ரத்2யா= ரதங்களின் கூட்டம், வண்டிகள் செல்லும் பாதை, ராஜ வீதி.

2634. ரந்த்4ரம் = துளை, துவாரம், வெடிப்பு, குற்றம், பலஹீனமான பகுதி.

2635. ரப4ஸ: = கொடுமை, வேகம், கோபம், ஆவல், துக்கம், சந்தோஷம், ஆனந்தம்.

2636. ரமண: = காதலன், கணவன், மன்மதன்.

2637. ரமணீய = பிரியமான, மனம் கவரும், அழகான.

2638. ரமா = லக்ஷ்மி, மனைவி, செல்வம்.

2639. ரம்பா4 = வாழை மரம், ஒரு அப்சரஸ்.

2640. ரம்ய = அழகான, மனம் கவர்ந்த, ருசியான, பிரியமான,மகிழ்ச்சி தரும்.
 
2641. ரவ: = அழுகை, கூச்சல், கர்ஜனை, கூவுதல், கலப்பான சத்தம்.

2642. ரவி: = சூரியன்.

2643. ரவிபுத்ர: = ரவிஸூனு: = சனி கிரகம், யமன், வாலி, சுக்ரீவன், கர்ணன்.

2644. ரச'னா = கயிறு, கடிவாளம், லகான், ஒட்டியாணம், இடைப்பட்டிகை.

2645. ரச்'மி = ஒளி, ஒளிக்கிரணம், கடிவாளம், கயிறு, சாட்டை.

2646. ரச்'மிமத் = சூரியன்.

2647. ரஸ: = சாரம், சாறு, திரவம், தண்ணீர், கள், சாராயம், பால், ருசி, இன்பம், விருப்பு, சுவை, வீரியம், பாதரசம், அழகு, விஷம், நாக்கு , அமிர்தம், ஆனந்தம்.

2648. ரஸனா = நாக்கு.

2649. ரஸாதலம் = பூமிக்குக் கீழே உள்ள ஏழு உலகங்களில் ஒன்று.

2650. ரஸால: = மா மரம், கரும்பு.

 
மிகப் பயனுள்ள தொடர்.
அந்தணர்க் குடும்பங்களில் சமஸ்கருதப் பயன்பாடு அருகி வருகிறது. அதைப் பயன்படுத்துபவர்கள் கூட அவற்றின் பொருளைத் தெரிந்து பயன்படுதுகிறார்களா என்பதும் சந்தேஹமே. இந்த நிலையில் இந்தத் தொடர் பலருக்கும் பயன் தரும் என்று நம்புகிறேன்.
தொடருங்கள் அம்மணி.
கிருஷ்ணமுர்த்தி
 
நமஸ்காரம்! நமக்கு ஒரு சொல்லின் ஒரு பொருள் தெரியும்.
ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனை பொருட்கள் உள்ளன! அப்பப்பா!
சிறு குழந்தைகள் எவ்வளவு எளிதாக எத்தனை சொற்களைக் கற்றுக் கொள்கின்றார்கள்.
நாமும் தினமும் பத்து பத்து வார்த்தைகளைக் கற்றுக்கொண்டாலே
எவ்வளவோ முன்னேற்றம் அடைய முடியும். நன்றி. தொடர்ந்து படியுங்கள்..:pray2:


மிகப் பயனுள்ள தொடர்.
அந்தணர்க் குடும்பங்களில் சமஸ்கருதப் பயன்பாடு அருகி வருகிறது. அதைப் பயன்படுத்துபவர்கள் கூட அவற்றின் பொருளைத் தெரிந்து பயன்படுதுகிறார்களா என்பதும் சந்தேஹமே. இந்த நிலையில் இந்தத் தொடர் பலருக்கும் பயன் தரும் என்று நம்புகிறேன்.
தொடருங்கள் அம்மணி.
கிருஷ்ணமுர்த்தி
 

2651. ரஹஸ் = தனிமை, தனித்த இடம், ரகசியம், புணர்ச்சி.

2652. ரஹஸ்யம் = ரகசிய விஷயம் / கொள்கை / பேச்சு.

2653. ரஹித = விலக்கப்பட்ட, இல்லாத, தனியான.

2654. ரக்ஷக: = காவல்காரன், காப்போன்.

2655. ரக்ஷணம் = காப்பாற்றுதல், போஷித்தல்,

2656. ரக்ஷா = தாயத்து, முடிக்கயிறு, விபூதி.

2657. ராகா = பூர்ணிமை, அப்போதே புஷ்பவதியான பெண், சொறி
சிரங்கு.

2658. ராக3: = ராகம், அழகு, கோபம், இன்பம், சந்தோஷம், காதல், பிரியம், சிவப்பு நிறம்.

2659. ராக4வ: = ராமன், பெரிய மீன், ரகு வம்சத்தினன்.

2660. ராஜன் = ராய: = அரசன், இந்திரன், சந்திரன், க்ஷத்திரியன், தலைவன்.
 
2661. ராஜராஜ: = ராஜாதி4ராஜ: = ராஜேந்த்3ர: = சக்கரவர்த்தி.

2662. ராஜகுமார:= ராஜபுத்ர = அரசகுமாரன்.

2663. ராஜதா4னம் = ராஜதா4னீ = தலைநகரம்.

2664. ராஜநீதி: = அரசியல் நீதி.

2665. ராஜபத: = ராஜமார்க3: = முக்கிய வீதி, அரசன் செல்லும் பாதை.

2666. ராஜயோக3: = அரசபதவி கிட்டும் வாய்ப்பு, ஒரு யோகாப்பியாசம்.

2667. ராஜஸ்வம் = அரசுடைமை.

2668. ராஜஹம்ஸ:= மூக்கும், கால்களும் சிவப்பாக உள்ள
அன்னப் பக்ஷி.

2669. ராஜீவ : = ஒரு வகை மான், கொக்கு, யானை.

2670.ராக்ஞீ = ராணி.
 
2671. ராத்ரி: = ராத்ரீ = இரவு.

2672. ராதா4 = நிறைவு, வெற்றி, ஒரு பிரதான கோபிகை, விசாக நக்ஷத்திரம், மின்னல்.

2673. ராம: = ரகுராமன், பரசுராமன், பலராமன்.

2674. ராமா = பெண், ஸ்திரீ, அழகி.

2675. ராவ: = அழுகை, கூச்சல், சத்தம்.

2676. ராவண: = இராவணன்.

2677. ராசி': = குவியல், கூட்டம்,ஜோதிடச் சக்கரத்தில் ஒரு ராசி.

2678. ராஷ்ட்ரம் = ராஜ்ஜியம், தேசம், நாட்டுமக்கள், குடிமக்கள், மண்டலம்,

2679. ராஸ: = ராசக்ரீடை, சத்தம், ஆரவாரம்.

2680. ராஸப4: = கழுதை
 
2681. ராஹு: = ஒரு கிரகம்.

2682. ரிக்த = காலியான, சூனியமான, பிரிக்கப்பட்ட, ஏழ்மையான.

2683. ரிபு: = எதிரி, வைரி.

2684. ரீதி: = முறை, ஒழுங்கு, நடை, ஆறு, பெருக்கு, எல்லை, பழக்கம்.

2685. ருக்ண = வளைந்த , உடைந்த, வீணான, உபயோகம் அற்ற, நோய் வாய்ப்பட்ட.

2686. ருசா = காந்தி, ஒளி, நிறம், அழகு, விருப்பம்.

2687. ருசி: = சுவை, ருசி, பிரகாசம், காந்தி, கிரணம், பசி, ஊக்கம், விருப்பம், தோற்றம், மகிழ்வு, இன்பம்.

2688. ருசிர = ருசியான, ஒளிநிறைந்த, இனிப்பான, அழகான, புஷ்டியான, மகிழ்ச்சி தரும்.

2689. ருஜா = உடைத்தல்,வியாதி, எலும்புமுறிவு, களைத்தல், வியாதி, துன்பம், வலி.

2690. ருத3னம் = ருதி3தம் = ரோத3னம் = அழுகை, அழுதல், கூக்குரல்.

 
2691. ருத்3ர: = ருத்திரன், சிவன், நெருப்பு, என் 11

2692. ருத்3ராக்ஷம் = ருத்திராக்ஷம்.

2693. ருத் 4 = தடுக்க, தேக்கி வைக்க, பிடித்து வைக்க, இடையூறு செய்ய, கட்டி வைக்க, பூட்டிவைக்க.

2694. ருதி4ரம் = இரத்தம், குங்குமப்பூ.

2695. ருஷ் = ருஷா = ரோஷ:= ரௌத்3ரம் = கோபம்.

2696. ரூடி4: = பிறப்பு, வளர்ச்சி, பெருக்கு, எழுச்சி, புகழ், பாரம்பர்யம், கெட்ட பெயர்.

2697. ரூபம் = உருவம், அமைப்பு, அழகு, குணம், லக்ஷணம், ரீதி, வகை, பிரதிபிம்பம்.

2698. ரூபகம் = வர்ணனை, ஒரு சொல்லணி, தோற்றம் , குறி, வகை, விதம், நாடகம், கேளிக்கை.

2699. ரூபக: = ரூப்யம் = ரூபாய்.

2700. ரூபம் = ரௌப்யம் = வெள்ளி.

 
2701. ரூக்ஷ = கரடு முரடான, சொரசொரப்பான, துவர்ப்பான, கலங்கிய, கடுமையான, அழுக்கு அடைந்த, குரூரமான, உலர்ந்துபோன, வறட்சியான.

2702. ரே = ஏய் (விளிக்கும் சொல்)

2703. ரேகா2 = கோடு, கீறல், வரிசை, வகுப்பு, முழுமை, திருப்தி, சித்திரம் வரையும் கோடு, உள்ளங்கை ரேகை.

2704. ரேசக: = மூச்சை வெளிவிடுதல்.

2705. ரேசனம் = காலி செய்தல், குறைவுபடுதல், மலம் கழித்தல், மூச்சை வெளிவிடுதல்.

2706. ரேணு: = தூசி, மகரந்தப்பொடி.

2707. ரேதஸ் = ஆண்மை, சுக்லநீர்.

2208. ரேப2: = அன்பு, கரகரப்பான சப்தம்.

2709. ரேவதீ = ஒரு நக்ஷத்திரத்தின் பெயர், பலராமனின் மனைவி.

2710. ரேவா = நர்மதை நதி.
 
2711. ரோக3: = வியாதி, நோய், பிணி.

2712. ரோசனா = பிரகாசமான, ஆகாயம், கோரோசனை, அழகான ஸ்த்ரீ.

2713. ரோத3ஸ் = ரோத3ஸீ = பூமியும், ஆகாயமும்.

2714. ரோத4ஸ் = கரை, ஓரம், அணை.

2715. ரோப: = நிர்மாணித்தல், அமைத்தல், செடி நடுதல், அம்பு, துளை, வெடிப்பு.

2716. ரோபித = அமைக்கப்பட்ட, நடப்பட, ஏற்றப்பட்ட, ஏறிய, நிர்மாணிக்கப்பட்ட.

2717. ரோமன் = மனிதன், விலங்கிகளின் உடலில் உள்ள சிறு மயிர்.

2718. ரோமாஞ்ச = ரோமஹர்ஷ = மயிர்கூச்சல்.

2719. ரோமாவலி: = ரோமாவலீ = ரோமராஜி = ரோமலதா = தொப்புளுக்கு மேல் வயிற்றுப்
பகுதியில் மேல் நோக்கிச் செல்லும் மயிர் வரிசை.

2720. ரோமந்த: = அசை போடுதல்.

 
2721. ரோமச': = ஆடு, செம்மறியாடு, பன்றி.

2722. ரோஹிணீ = பசு, சிவப்புப் பசு, ஒரு நக்ஷத்திரம், பலராமனின் தாயார், மின்னல், ஒன்பது வயது நிரம்பிய கன்னிப் பெண்.

2723. ரோஹித: = சிவப்பு வர்ணம், ஒரு வகை மீன், ஒரு வகை மான், நரி.

2724. ல: = விருத்தத்தில் குறில் மாத்திரை, இலக்கணத்தில் பத்து காலங்களைக் குறிப்பிடும் குறி.

2725. லகுட: = சிறு உலக்கை, தடி.

2726. லக்3னம் = நல்ல நேரம், நல்ல வேளை, சுபகாரியங்களை ஆரம்பிக்க நல்ல சமயம்.

2727. லகு4 = கனமில்லாத, லேசான, சிறிய, குறைவான, குட்டையான, சுருக்கமான, மட்டரகமான, பலமில்லாத, சுலபமான, மிருதுவான, மெத்தனமான, பிரியமான, அழகான, சுத்தமான, தெளிவான, சுறுசுறுப்புள்ள, ஊக்கமுள்ள, வேகமான, இலகுவான.

2728. லங்கா= ராவணனின் தலைநகரம், வேசி, கிளை.

2729. லங்க4ணம் = தாண்டுதல், கடத்தல், ஏறுதல், தாண்டிச் செல்லல், அவமதித்தல், பட்டினி கிடத்தல், ஆக்கிரமித்தல், தீங்கு செய்தல்.

2730. லஜ்ஜா = வெட்கம், வினயம்.
 
2731. லட்3டு3: = லட்3டு3க: = ஒரு இனிப்புத் தின்பண்டம்.

2732. லதா = கொடி, முத்துமாலை, கஸ்தூரிக் கொடி, ஒல்லியான ஸ்த்ரீ.

2733. லப்4 = அடைய, பெற, எடுத்துக் கொள்ள, வசூலிக்க, அறிந்துகொள்ள, படித்துக் கொள்ள, புரிந்துகொள்ள.

2734. லப்3த4 = அடையப்பட்ட, பெறப்பட்ட, எடுத்துக் கொள்ளப்பட்ட , அறியப்பட்ட.

2735. லப்4ய = பெறத் தக்க, அடையத்தக்க, கண்டு பிடிக்கத் தக்க, உசிதமான.

2736. லம்பட = பேராசைகொண்ட, காமம் உள்ள.

2737. லம்ப3 = தொங்குகின்ற,, நீண்ட, பெரிய, விஸ்தாரமான,
உயர்ந்த.

2738. லம்ப3னம் = தொங்குதல், கரை, ஓரம், கழுத்து மாலை.

2739. லய: = அழிவு, தழுவுதல், ஒட்டிக்கொள்ளல், சேர்க்கை, மறைவு, உலகின் அழிவு, ஆழ்ந்த சிந்தனை, இசையில் தாளம்,
இருப்பிடம், இளைப்பாறுமிடம்.


2740. லல் = விளையாட, கிரீடை செய்ய, இங்கும் அங்கும் ஓட, விரும்ப, சீராட்ட.
 
2741. லல் = விளையாட, கிரீடை செய்ய, இங்கும் அங்கும் ஓட, விரும்ப, சீராட்ட.

2742. லலனா = பெண், ஸ்த்ரீ, நாக்கு.

2743. லலந்திகா = நீண்ட மாலை, பல்லி, ஓணான்.

2744. லலாடம் = நெற்றி.

2745. லலாமம் = நெற்றிச் சுட்டி, நெற்றி ஆபரணம், அலங்காரம், உயர்ந்த வஸ்து, நெற்றிப் பொட்டு அல்லது குறி, வரிசை, கோடு, கொடி, வால், பிடரிமயிர், கெளரவம், அழகு, கொம்பு.

2746. லலித = விளையாட்டில் பிரியமுள்ள, காதல் கேளிக்கையில் பிரியம் உள்ள,
அன்பான, அழகான, மனதைஈர்க்கும், ருசியான, மிருதுவான.

2747. லலிதம் = விளையாட்டு, கேளிக்கை, அழகான நடை, எளிமை, சுலபத்தன்மை, காதல் விளையாட்டு.

2748. லலிதா = பார்வதி, துர்க்கை, ஸ்த்ரீ, கஸ்தூரி.

2749. லவ: = பாகம், துண்டு, பகுதி, சிறு துளி, சொட்டு, கம்பளி, மயிர், நாசம், நஷ்டம், விளையாட்டு, ராமனின் ஒரு மகன் பெயர்.

2750. லவங்க3: = லவங்கச்செடி.

 
2751. லவங்க3ம் = கிராம்பு.

2752. லவணம் = உப்பு.

2753. லவித்ரம் = அரிவாள்.

2754. லசு'ன: = லசு'னம்= வெள்ளைப் பூண்டு.

2755. லசி'த = விளையாடிய , தோன்றிய.

2756. லஹரி: = லஹரீ = அலை, அலை வரிசை.

2757. லக்ஷம் = லக்ஷ்யம் = எண் 1,00,000, அடையாளம், குறி, குறிக்கோள், பாசாங்கு, ஏமாற்றல், பகட்டு.

2758. லக்ஷணம் = இலக்கணை, குறி, அடையாளம், குணம், பெயர், பதவி, உத்தேசம், குறிக்கோள், உருவம், அமைப்பு, தலை, தலைப்பு, உண்மையான வர்ணனை.

2759. லக்ஷித = பார்க்கப்பட்ட, எடுத்துக் காட்டப்பட்ட, குறிப்பால் அறிவிக்கப்பட்ட, உத்தேசிக்கப்பட்ட, ஆழ்ந்து சோதிக்கப்பட்ட.

2760. லக்ஷ்மண: = தசரதனின் மகன்.

 
2761. லக்ஷ்மீ: = லக்ஷ்மீ தேவி, அதிருஷ்டம், செல்வம், செழிப்பு, அழகு, காந்தி, முத்து, மஞ்சள்.

2762. லக்ஷ்மிகாந்த:= விஷ்ணு, அரசன்.

2763. லாக4வம் = லேசான தன்மை, அற்பமான தன்மை, மதிக்க முடியாதது, எண்ணம் இல்லாதது, அவமதிப்பு, வேகம், திறமை.

2764. லாங்க3லம் = வால், ஆண்குறி.

2765.லாங்கூ3லம் = கலப்பை, ஆண்குறி, பனை மரம்,.

2766. லாஜா: = பொரி.

2767. லாஞ்ச2னம் = குறி, பெயர், களங்கம், புள்ளி.

2768. லாப4: = லாபம், வருவாய், சுகபோகம், பெறுதல், அடைதல்.

2769. லாப4கர = லாப4க்ருத் = லாபம் தரும்.

2770. லாலஸ = கொஞ்சப்பட்ட, விரும்பப் பட்ட, ஆசைகொண்ட, லயித்துப்போன.
 
2771. லக்ஷா = சிவப்பு மெழுகு, அரக்கு.

2772. லாலித்யம் = அழகு, வசீகரிக்கும் தன்மை, அன்பு, காதலை வெளிப்படுத்துதல்.

2773. லாவண்யம் = அழகு, உப்புத் தன்மை.

2774. லாஸ்யம் = நடனம், இசையோடு கூடிய நடனம்.

2775. லாஸ்ய: = நடிகன், நடனமாடுபவன்.

2776. லாஸ்யா = நடனமாடுபவள்.

2777. லிக்2 = எழுத, கோடு போட, சித்திரம் எழுத, பிறாண்ட, துருவ, கிழிக்க.

2778. லிகித = எழுதப்பட்ட, கோடு போடப்பட்ட, துருவப்பட்ட, கீறப்பட்ட,
கிழிக்கப்பட்ட.

2779. லிகிதம் = தஸ்தாவேஜு, புத்தகம், எழுதப்பட்டது.

2780. லிங்க3ம்= அடையாளம், குறி, லக்ஷணம், சிவலிங்கம், ஆண்குறி, (ஆண்)பால், (பெண்)பால், வேதாந்தத்தில் சூக்ஷ்ம உடல்.
 
2781. லிபி: = லிபீ = ஒரு மொழியின் எழுத்து வரிசை, எழுதும் கலை, கையெழுத்துப் பிரதி, தஸ்தாவேஜு .

2782. லீ = உருக்க, ஒன்றுசேர, கரைந்துபோக.

2783. லீட 4 = நக்கப்பட்ட, ருசி பார்க்கப்பட்ட, உண்ணப்பட்ட.

2784. லீன = ஒன்று சேர்ந்த, ஒட்டிக் கொண்ட, மறைந்த, மறைக்கப்பட்ட, உருகிய, உருக்கப்பட்ட, கரைந்துபோன, இணைந்த, ஈடுபட்ட, இளைப்பாறும், லயித்துப்போன.

2785. லீலா = விளையாட்டு, கேளிக்கை, மகிழ்ச்சி, காதல் விளையாட்டு, அழகு, தோற்றம்.

2786. லீலாகா3ர: = லீலாகா3ரம்= லீலாக்3ருஹம்= விளையாடும் இடம், மகிழ்ச்சிக்குரிய இடம்.

2787. லுப்த = உடைக்கப்பட்ட, உடைந்த, கொள்ளை அடிக்கப்பட்ட, அபஹரிக்கப்பட்ட, உபயோகமற்ற, மறைந்த.

2788. லுப்த4 = காமவெறியன், பேராசைக்காரன், வேடன்.

2789. லூதா = சிலந்தி, எறும்பு.

2790. லேக: = எழுதும் முறை, எழுதியது, கடிதம், பத்திரம், தஸ்தாவேஜு, தேவன்.
 
2791. லேக2க: = எழுதுபவன், பிரதிஎடுப்பவன், ஓவியன்.

2792. லேக2னம் = எழுதுதல், பிரதி எடுத்தல், இளைத்துப் போதல், தொடுதல், பனை ஓலை.

2793. லேக2நீ = லேகி2நீ = பேனா, நாணல், தட்டையான எழுதுகோல், சிறு கரண்டி.

2794. லேகா2 = எழுதும் முறை, எழுதுதல், கோடு, கீறல், வரிசை, பட்டை, ஓவியம், சித்திரம், இரண்டாம் பிறை.

2795. லேப: = பூசுதல், பூச்சு, களிம்பு, களங்கம், நிந்தனை, பாவம், உணவு.

2796. லேச': = சிறு பகுதி, மிகக் குறைவு, ஒரு சொல்லணி.

2997. லேஹ்யம் = நக்கி உண்ணும் உணவு அல்லது மருந்து.

2798. லோக: = பூவுலகம், ஜனங்கள், பிரஜைகள், கூட்டம்,பார்வை, தோற்றம்.

2799. லோகநாத2: = பிரம்மா, விஷ்ணு, சிவன், அரசன்.

2800.லோகயாத்ரா = உலகவாழ்க்கை.

 
2801. லோகஸங்க்3ரஹ: = ஜகத் முழுவதும், உலகின் நலன்.

2802. லோகஸ்தி2தி: = உலக இருப்பு, உலகநீதி.

2803. லோகாசார: = உலக வழக்கு.

2804. லோகாந்தரம் = பரலோகம், வேறு உலகம்.

2805. லோகபவாத3: = மக்கள் இகழும்.

2806. லோகேச': = அரசன், சக்கரவர்த்தி, பிரமன்.

2807. லோகோக்தி: = பழமொழி.

2808. லோகோத்தர = அசாதாரணமான, அபூர்வமான, மிக மேன்மையான.

2809. லோசனம் = கண், பார்வை, பார்த்தல்.

2810. லோப: = மறைவு, இன்மை, குறை, அபஹரித்தல், கொள்ளை அடித்தல், ஆக்கிரமித்தல், விட்டுவிடுதல், அழிவு.
 
2811. லோப4: = ஆசை, பேராசை, குழப்பம், விருப்பம், புத்தி மயக்கம்.

2812. லோம: = வால், உடலின் மீது உள்ள மயிர்.

2813. லோமச': = ஆடு, செம்மறியாடு, அடர்த்தியான மயிர் உடையவன்,

2814. லோல = ஆடுகின்ற, தொங்குகின்ற, அசைகின்ற, குழப்பமான, திடமற்ற, ஆசையுள்ள, அழிவு உள்ள.

2815. லோலுப= லோலுப4 = ஊக்கம் உள்ள, பேராசை உள்ள.

2816. லோஷ்ட: = லோஷ்டம் = மண்ணாங்கட்டி.

2817. லோஹ: = உலோகம், தாதுப் பொருள், இரும்பு, எஃகு, தாமிரம், தங்கம், ரத்தம்.

2818. லோஹித: = சிவப்பு வர்ணம் உள்ள, செவ்வாய், பாம்பு, ஒரு வகை மான்.

2819. லோஹிதம் = குங்குமப் பூ, தாமிரம், ரத்தம், சண்டை, சிவப்புச் சந்தனம்.

2820. லோஹிதாக்ஷ: = குயில், பாம்பு, விஷ்ணு, சிவப்புப் பசை அல்லது பூச்சு.

 

2821. லௌகிக = சாதாரணமான, இவ்வுலக சம்பந்தமான.

2822. லௌகிகம் = உலக வழக்கு.

2823. லௌகிகா: = சாதாரண உலக மக்கள்.

2824. வ = போல, அது போல.

2825. வ: = வருணன், தோள், கையின் மேற்பகுதி, காற்று, சமாதானம் செய்து கொள்ளுதல், சுபம், கடல், துணி, புலி, வீடு, ராஹூ.

2826. வம்ச': = மூங்கில், குடும்பம், இனம், பரம்பரை, புல்லாங்குழல், தடி, முதுகெலும்பு, கூட்டம், சேர்க்கை, ஒரு அளவு = பத்து முழம்.

2827. வம்சீ' = குழல், புல்லாங்குழல், குழாய், ரத்தக்குழாய், தமனி.

2829. வக்தவ்ய = சொல்லத்தகுந்த, பேசத்தகுந்த, நிந்திக்கத்தக்க, மட்டரகமான.

2830. வக்த்ரு = பேச்சாளன்,பேசுகின்றவன், பேசுவதில் வ
ல்லவன், கற்றறிந்தவன்.
 
Status
Not open for further replies.
Back
Top