'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
2831. வக்த்ரம் = வாய், முகம், அலகு, ஆரம்பம், அம்பின் நுனி.

2832. வக்ர = கோணலான, வளைந்த, நேர்மையற்ற, சுருட்டையான, கொடிய, இரட்டைப் பொருளுள்ள, கோள்களின் பிற்போக்கான சலனம்.

2833. வக்ரதுண்ட3: = விநாயகர், கிளி.

2834. வசனம் = சொல்லுதல், வாக்கியம், படித்தல், உருப்போடுதல், உத்திரவு, வேதத்தின் அல்லது சாஸ்திரத்தின் வாக்கியம்.

2835. வசஸ் = வசனம்,பேச்சு, வாக்கியம், கட்டளை, ஒழுங்குமுறை, சட்டம், புத்திமதி.

2836. வஜ்ர: = வஜ்ரம் = வஜ்ராயுதம், இடி, வைரம், கஞ்சி.

2837. வஜ்ரீன் = வஜ்ரப்4ருத் = இந்திரன்.

2838. வஞ்சக: = ஏமாற்றுபவன், போக்கிரி, நரி, கீரி.

2839. வஞ்சித = மோசம் செய்யப்பட்ட, அபகரிக்கப்பட்ட.


2840. வட: = ஆலமரம், சிப்பி, சோழி, பந்து, கயிறு.
 
2841. வட: = ஆலமரம், சிப்பி, சோழி, பந்து, கயிறு.

2842. வடீ = கயிறு, மாத்திரை, உருண்டை.

2843. வடு:= வடுக: = சிறுவன், பிரம்மச்சாரி.

2844. வணிஜ் = வணிஜ: = வாணிஜ: = வியாபாரி.

2845. வத்ஸ: = கன்று, சிறுவன், சந்ததி, மகன், ஆண்டு.

2846. வத்ஸர: = ஆண்டு, வருடம்.

2847. வத்ஸல = பிரியம் உள்ள, அன்புள்ள.

2848. வத்ஸா = பெண் கன்று.

2849. வத்3 = சொல்ல, பேச, கோஷிக்க, பிரகடனம் செய்ய, வர்ணிக்க,
கூப்பிட, பாட.

2850. வதனம் = வாய், முகம், தோற்றம்,

 
2851. வத3ந்ய = வதா3ன்ய = அதிகம் பேசும், நன்றகப் பேசவல்ல.

2852. வத4 : = கொலை, அழித்தல், அடித்தல், மறைத்தல், கணிதத்தில் கூட்டல்.

2853. வது4: = யௌவன ஸ்த்ரீ, மகனின் மனைவி.

2854. வதூ4: = மணப் பெண், மனைவி, மகனின் மனைவி, ஸ்த்ரீ.

2855. வனம் = காடு, தண்ணீர், கொத்து, புதர், இருப்பிடம்.

2856. வனாந்த: = காட்டின் ஓரம்.

2857. வனசர: = காட்டில் வாழம் மனிதன் அல்லது விலங்கு.

2858. வனஸ்பதி: = மரம், காட்டு மரம்.

2859. வனிதா = பெண், ஸ்த்ரீ, மனைவி.

2860. வந்த்3 = வணங்க, ஆராதிக்க, பூஜிக்க, துதிக்க, நமஸ்காரம் செய்ய.

 
2861. வந்த3னம் = வணங்குதல், துதித்தல்.

2862. வந்த்3ய = வந்த3னீய = வணங்கத் தக்க, பூஜிக்கத் தக்க.

2863. வன்ய = காட்டினுடைய, காட்டிலுண்டான.

2864. வப் = விதைக்க, விதைகளைத் தெளிக்க, நாற்று நட, மொட்டை / சவரம் செய்ய, நெசவு செய்ய.

2865. வபனம் = விதை விதைத்தல், மயிர் வெட்டுதல், சவரம் செய்தல், வீரியம், விதை.

2866. வபா = கொழுப்பு, துளை, குடலின் கீழுள்ள மெல்லிய தோல், எறும்புப்புற்று.

2867. வபுஸ் = உடல், உருவம், தோற்றம், சாரம், இயற்கை, சுபாவம், காந்தி, அழகு.

2868. வப்ர = வப்ரம் = கோட்டின் மதில் சுவர், மலைச் சரிவு, பாரை, பீடபூமி, அஸ்திவாரம், வயல், அகழி, உருண்டையான பொருளின்
சுற்றளவு.

2869. வம: = வமனம் = கக்குதல், துப்புதல், வாந்தி எடுத்தல்.

2870. வயஸ் = வயது, யௌவனம், பறவை.
[TABLE="class: cf gz"]
[TR]
[TD]
cleardot.gif
[/TD]
[/TR]
[/TABLE]

 
2871. வயஸ்ய : = நண்பன், தோழன்.

2872. வர: = மேன்மையான, சிறந்த.

2873. வர:= பொறுக்கி எடுத்தல், வரம் கொடுத்தல், கொடை, வெகுமதி, யாசித்தல், விருப்பம், மணமகன், மாப்பிள்ளை, வேலி, வேண்டுகோள்.

2874. வரணம் = வேண்டுதல், யாசித்தல், மூடுதல், மறைத்தல், காத்தல், பொறுக்கி எடுத்தல்.

2875. வரண: = இந்திரனின் ஒரு பெயர், மதில் சுவர், பாலம், மாவிலிங்க மரம், ஒட்டகம்.

2876. வரம் = அதிக நல்லதான / மேலானதான / சிறந்ததான.

2877. வராஹ: = பன்றி, மேகம், மலை, விஷ்ணுவின் ஓர் அவதாரம்.

2879. வரிஷ்ட = சாலச் சிறந்ததான, மிக முக்கியமான, மிகவும்
பளுவான, மிகவும் அகலமான.

2880. வரீயஸ் = ஒன்றைக் காட்டிலும் மேம்பட்ட, அதிக மேன்மையான/ நல்லதான/ பெரியதான/ அகலமானதான.

 
2881. வருண: = வருண தேவன், மேற்கு திக்பாலகன், சமுத்திரம்.

2882. வரேண்ய = ஆசைப் படத் தக்க, விரும்பத் தக்க, மேலான.

2883. வர்க3: = வகுப்பு, வகை, வர்க்கம், அத்யாயம்,புத்தகத்தின் பாகம்.

2884. வர்சஸ் = பலம், சக்தி, காந்தி, பிரகாசம், உருவம், அமைப்பு, வீர்யம்.

2885. வர்ஜ: = தள்ளிவிடுதல், நீக்கிவிடுதல், விட்டுவிடுதல்.

2886. வர்ஜனம் = தியாகம், துறத்தல், அடித்தல், விட்டுவிடுதல், கொலை செய்தல்.

2887. வர்ஜம் = நீக்கி, விலக்கி, விட்டு விட்டு, தவிர.

2888. வர்ஜித = நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட, இல்லாத.

2889. வர்ண: = நிறம், வர்ணம், இனம், ஜாதி, அழகு, வகை, எழுத்து,
புகழ், உருவம், குணம்.

2890. வர்ணனம் = வர்ணித்தல், புகழ்தல், வர்ணம் தீட்டுதல், எழுதுதல்.

 
2891. வர்த்தமான = தற்சமயத்திய, இருக்கின்ற, வாழ்கின்ற.

2892. வர்த்தி: = வர்த்தீ = விளக்குத் திரி, கண் மை, களிம்பு, பூச்சு, சுருட்டப்பட்ட பொருள்.

2893. வர்துல = உருண்டையான, வட்ட வடிவான.

2894. வர்த்மன் = சாலை, பாதை, வழி, முறை, ஓரம், கண் இமை.

2895. வர்த4: = பெருக்குதல் , அதிகமாக்கு
தல், உயர்த்துதல், வெட்டுதல், பிரித்தல், வகுத்தல்.

2896. வர்த4க: = வர்தி4க: = வர்த4கின் = தச்சன்.

2897. வர்ஷ: = வர்ஷம் = மழை, பொழிவு, தெளித்தல், ஆண்டு, மேகம்,
தேசம்.

2898. வலக்3ன: = வலக்3னம் = இடுப்பு.

2899. வலய : = வளையல், வலயம், வட்டம், பரிதி.

2900. வலி: = வலீ = மடிப்பு, சுருள், சுருக்கம், கூரையின் ஓரப்பகுதி,
 
2901. வல்கல: = வல்கலம் = மரவுரி, மரப்பட்டை .

2902. வால்மீக: = வால்மீகம் = எறும்புப் புற்று, கரையான் புற்று.

2903. வல்லப4: = கணவன், காதலன், அதிகாரி, மேற்பார்வை இடுபவன்.

2904. வல்லரி: = வல்லரீ = வல்லி: = வல்லீ = கொடி, படரும் தாவரம்.

2905. வச' = உட்பட்ட, கட்டுப்பட்ட, கீழ்ப்படிந்த, வசப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட.

2906. வச': = வச'ம் = விருப்பம், ஆசை, சக்தி, திறன், அதிகாரம், தன்வசம், பிறர் வசம்.

2907. வசா' = ஸ்த்ரீ, மனைவி, கணவனின் சஹோதரி, பசு,
பெண் யானை, மலடி.

2908. வச்'ய = கட்டுப்பட்ட, உட்பட்ட, வசம் ஆக்கிக் கொள்ளத் தக்க.

2909. வஸ் = இருக்க, வசிக்க, குடி இருக்க, தங்க, கழிக்க, செலவிட.

2910. வஸதி: = வஸதீ = வீடு, இருப்பிடம், இருத்தல், வசித்தல், இரவு, ஓய்வெடுக்கும்நேரம்.
 
2911. வஸனம் = இருப்பிடம், இருத்தல், வசித்தல், ஆடை, துணி, ஆடை அணிதல்.

2912. வஸந்த: = இளவேனில், மன்மதனின் தோழன், ஒரு ராகத்தின் பெயர்.

2913. வஸா = உடலில் உள்ள கொழுப்பு .

2914. வஸு = செல்வம் , ரத்னம், தண்ணீர், பொருள், தங்கம்.

2915. வஸு: = அஷ்ட வசுக்களில் ஒருவர், எண் எட்டு, சூரியன், ஒளிக்கதிர், அக்னி, நீர் நிலை.

2916. வஸுதா4 = வசுமதி = வஸுந்த4ரா = பூமி.

2917. வஸ்து = பொருள், உண்மை, விஷயம், செல்வம்.

2918. வஸ்த்ரம் = வேஷ்டி, இடையில் அணிந்த உடை.

2919. வஹ் = சுமக்க, தாங்க, முன் செல்ல, தள்ள, கொண்டுவர, முட்டுக் கொடுக்க, நிறுத்த, அனுபவிக்க.

2920. வஹதீ = வஹா = நதி.
 
2921. வஹ்னி: = நெருப்பு, அக்னி, ஜீரண சக்தி, பசி எடுத்தல் .

2922. வக்ஷஸ் = மார்பு.

2923. வா = அல்லது, இல்லாவிட்டாலும், மேலும்.

2924. வாக்யம் = பேச்சு, மொழி, வாக்கியம்.

2925. வாங்மய = சொற்கள் நிறைந்த, நன்கு பேசும்.

2926. வாச் = சப்தம், பேச்சு , சொல், சரஸ்வதி.

2927. வாசக: = படிக்கின்றவன், பேசுகின்றவன்.

2928. வாசஸ்பதி: = ப்ருஹஸ்பதி.

2929.வாசிக = வாய் மொழியாக, சொற்களால் கூறப்படும்.

2930. வாச்ய = சொல்லத்தக்க.
 
2931. வாஜின் = குதிரை, அம்பு.

2932. வாஞ்சா = விருப்பம், ஆசை.

1933. வாடீ = இடம், வீடு, இருப்பிடம், தோட்டம், சாலை.

2934. வாணிஜ்யம் = வியாபாரம்.

2935. வாணீ = சொல், குரல், பேச்சு , மொழி சரஸ்வதி.

2936. வாத: = வாயு: = காற்று, வாயு தேவன், வாத நோய்,
உடலில் உள்ள காற்று.

2937. வாதாத்மஜ: = ஹனுமான்.

2938. வாதாயனம் = ஜன்னல்.

2939. வாத்ஸல்யம் = நேசம், பிரியம்.

2940. வாத3: = சர்ச்சை, விவாதம், பேச்சு, வாதிடுதல், அலசுதல், விவரித்தல், முடிவு.

 
2941. வாதி3ன் = வாதாடுபவன்,பேசுகிறவன், எதிர்க்கட்சிக்காரன், வாதி.

2942. வாத்யம் = இசைக்கருவி.

2943. வாந்தி: = வாந்தி எடுத்தல்.

2944. வாப: = விதை விதைத்தல்.

2945. வாபனம் = தலை மயிர் வெட்டிக் கொள்ளுதல், சவரம்
செய்து கொள்ளல்.

2946. வாபி: = வாபீ = கிணறு.

2947. வாம = இடது, எதிரான, அழகான.

2948. வாமன : = குள்ளன்.

2949. வாயஸ:= காக்கை, அகில், தூபம் போடும் பொருள்.

2950.வார: = மூடி, போர்வை, கூட்டம், குவியல், பரிமாணம், அளவு, கிழமை, காலம், போது, தடவை, வாயில், சிவன்.
 
2951. வாரண: = யானை, போர்க்கவசம்.

2952. வாராணஸீ = காசி.

2953. வாரி = தண்ணீர்.

2954. வாரிஜம் = தாமரைப்பூ.

2955. வாரிஜ: = சங்கு.

2956. வாரிதி4: = வாரிநிதி4: = வாரிராசி': = கடல்.

2957. வாருணீ = மேற்கு, கள், மதுபானம்.

2958. வார்தா = செய்தி, சமாசாரம். தொழில், பிழைப்பு, ரகசியச்
செய்தி.

2959. வார்த்3த4கம்= வார்த்3த4க்யம் = கிழத் தன்மை.

2960. வாலி: = குரங்குகளின் அரசன்.
 
2961. வால்மீக: = வால்மீகி: = ராமாயணத்தை இயற்றிய முனிவர்.

2962. வாஸ: = வாசனை, ஆடை, வீடு, இருப்பிடம், இடம்.

2963. வாஸவ: = இந்திரன்.

2964. வாஸனா = நினைவினால் ஏற்படும் அறிவு, முன்னால் ஏற்பட்ட மனப் பதிவுகளால் எஞ்சி நிற்கும் அறிவு.

2965. வாஸரம் = வாஸர: = கிழமை.

2966. வாஸஸ் = ஆடை, வஸ்திரம்.

2967. வாஸுகி : = பாம்புகளின் அரசன்.

2968. வாஸ்தவ = வாஸ்தவிக =உண்மையான, உள்ளது போன்ற.

2969. வாஸ்து = வீடு, பூமி, மனை, திடல், இடம், வசிக்கும்
இடம்.

2970. வாஹ : = சுமத்தல், சுமப்பவன், குதிரை, எருது, வண்டி, காற்று.
 

2971. வாஹக: = சுமப்பவன், கூலியாள், வண்டி ஓட்டுபவன், தேர்ப்பாகன்.

2972. வாஹனம் = சுமத்தல், வண்டி, வாகனம், ஏறி
ச் செல்லும் விலங்கு.

2973. வாஹிநீ = போர்ப்படை, படையின் பகுதி.

2974. விம்ச'தி = இருபது.

2975. விகர்ஷண : = விகர்ஷ: = அம்பு, இழுத்தல், கோடு கிழித்தல்.

2976. விகல = குறைவான, குழப்பம் அடைந்த, நடுங்கிய, பயந்த, சோர்வடைந்த.

2977. விகல்பம் = சந்தேஹம், ஐயம், உபாயம், யுக்தி, வேறுபாடு, குறை, குற்றம், வகை, அறியாமை.

2978. விகார: = உருவத்தில் மாற்றம், இயற்கை நிலையில் மாற்றம், நோய், பரபரப்பு, உணர்ச்சி.

2979 . விகாஸ: = விகாஸனம் = மலருதல், புஷ்பிதல், விரிவடைதல்.

2980.விக்ருதி = விக்ரியா = மனதின் இயற்கை நிலை / உருவம்/ முறை இவற்றின் மாறுதல், நோய், உணர்ச்சி, கோபம்.
 
2981. விகீர்ண: = பரப்பப்பட்ட, சிதறடிக்கப்பட்ட, நன்கு அறியப்பட்ட, புகழ் அடைந்த.

2982. விக்ரம: = சூரத்தனம், பராக்கிரமம்,திறமை, விஷ்ணு, காலடி, அடிச் சுவடு.

2983. விக்ரிய: = விற்றல், விற்பனை.

2984. விக்யாத = புகழ் பெற்ற, ஒத்துக்கொள்ளப்பட்ட.

2985. விக3த = சென்ற, மறைந்த, பிரிக்கப்பட்ட, காலியான,
இல்லாதுபோன.

2986. விக3லித = கீழே விழுந்த, நழிவி விழுந்த, உருகிய, கரைந்த, வடிந்த, சென்ற, மறைந்த, தளர்ந்த, அவிழ்ந்துபோன.

2987. விக்3ரஹ: = உருவம், உடல், பிரிதல், பரவுதல், விஸ்தரித்தல், கழகம், சண்டை.

2988. விக4டித = பிரிக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, தனித்தனியாக்கப்பட்ட.

2989. விக்ன4: = தடை, கஷ்டம் , கடினம்.

2990. விக்னேச':= விக்னேச்'வர: = கணேசர்.
 
2991. விசக்ஷன = கற்றறிந்த, திறமையுள்ள.

2992. விசார: = விசாரணம் = சிந்தித்தல், ஆலோசித்தல், அலசிப்பார்த்தல், ஆராய்ந்து பார்த்தல், சந்தோஷம், விசாரித்தல்.

2993. விசித்ர = பலவர்ணமுள்ள, பலவிதமான, அழகான, ஆச்சரியம் அளிக்கும்.

2994. விச்சி2தி = வெட்டுதல், உடைத்தல், மறைவு, குறை, நிறுத்தம், நிறுத்துதல், எல்லை, பிரித்தல்.

2995. விஜய: = வெற்றி, அர்ஜுன், ஜெயித்தல்.

2996. விஜித = ஜெயிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட.

2997. விஜ்ரும்ப4ணம் = கொட்டாவி விடுதல்,மொட்டுக் கட்டுதல், மலருதல்,காட்டுதல், தோன்றுதல், திறத்தல்.

2998.
விஞ்ஞாப்தி: = விஞ்ஞாபனா = விஞ்ஞாபனம் = வேண்டுகோள்.

2999. விஞ்ஞானம்= அறிவு, அறிந்து கொள்ளும் சக்தி, திறமை, புத்திசாலித்தனம்.

3000. விட3ம்பனம் = நடிப்பு, வஞ்சனை, துன்புறுத்துதல், பரிஹசித்தல்.
 
3001. விதந்து: = விதவை.

3002. விதரணம் = கொடை, தியாகம், அக்கரை சேருதல், தாண்டிச் செல்லுதல்.

3003. வித்தம் = செல்வம், தனம்.

3004. வித்3 = சொல்ல, அனுபவிக்க, கற்பிக்க, விவரிக்க, காண்பிக்க, வெளிப்படுத்த, நன்கு தெரியும்படிச் செய்ய.

3005. வித3க்3த4 = சாம்பலாக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, சமைக்கப்பட்ட, சேதம் அடைந்த, கெட்டிக்கார, திறமை வாய்ந்த.

3006. விதி3த = புகழ்பெற்ற, அறியப்பட்ட, குறிப்பாகத் தெரிவிக்கப்பட்ட.

3007. விதூ3ஷக: = பரிகாசம் செய்பவன், சிரிக்கச்செய்பவன், கதாநாயகனின் முக்கிய தோழன், கோமாளி, விதூஷகன்.

3008. விதே3ச': = வெளிநாடு.

3009. வித்3யா = கல்வி, அறிவு, படிப்பு.

3010. வித்யா3ர்தி2ன் = மாணவன்.
 
3011. வித்3யலாய: = பள்ளிக்கூடம், கல்விக்கூடம்.

3012. வித்3யுத் = மின்னல், இடி, மேகங்களின் கர்ஜனை.

3013. வித்3ரும: = பவளச் செடி, பவளம்.

3014. வித்வான் = அறிவாளி, கற்றறிந்தவன்.

3015. வித4: = விதா4 = மாதிரி, வகை, அமைப்பு, ரகம், செழுமை, மடிப்பு, யானையின் தீனி.

3016. விதா4த்ரு = செய்பவன், அமைப்பவன், படைப்பவன், பிரமன், தலைவிதி.

3017. விதி4: = செயல், சடங்கு, நடத்தை, முறை, ஒழுங்கு, சட்டம், கட்டளை, பிரமன், அதிர்ஷ்டம், விதி, காலம்.

3018. விதி4த: = விதி4வத் = விதி4பூர்வகம் = முறையான, முறைப்படி, நியமப்படி, குறிக்கப்பட்ட.

3019. விது4: = சந்திரன், விஷ்ணு, கற்பூரம்.

3020. விது4ர: = மனைவியை இழந்தவர். (sounds so similar to widower!)
 
3021. வினய = வினயம், அடக்க ஒடுக்கம், ஒழுக்கம், சிரத்தை, நன்னடத்தை.

3022. வினா = இல்லாமல், தவிர.

3023. வினாடி3: = நாழிகையின்( 1 / 60) பாகம் = 24 நொடிகள்.

3024. விநாயக: = விநாயகர், கருடன், தடை, இடையூறு, தடைகளையும் இடையூறுகளையும் நீக்குபவன்.

3025. விநாச' = கேடு, நஷ்ட
ம், அழிவு, நாசம், மரணம்.

3026. விநிபாத: = வீழ்ச்சி, துன்பம், அவமானம், கேடு.

3027. விநியோக3: = பங்கிடுதல், தனித்தனியாக்குதல்,
உபயோகித்தல், நியமித்தல், விலக்குதல்,

3028. வினீத = விலக்கப்பட்ட, கற்பிக்கப்பட்ட,
நன்னடத்தையுள்ள, அன்புள்ள, அழகிய, மனதை ஈர்க்கும்.

3029. விநேய: = மாணவன், சீடன்.

3030. வினோத3: = விளையாட்டு, சந்தோஷம், மகிழ்ச்சி, பிரியம், ஆசை, ஊக்கம், உற்சாகம்.
 
3031. வின்யாஸ: = ஒழுங்கு படுத்துதல், இட்டு வைத்தல்.

3032. விபஞ்சிகா = விபஞ்சி = வீணை, விளையாட்டு.

3033. விபண: = விற்பனை, வியாபாரம்.

3034. விபணி: = விபணீ = மண்டி, கடை, சந்தை, வியாபாரம்.

3035. விபணின் = வியாபாரி, கடைக்காரன்.

3036. விபத்தி: = விபதா3 = விபத்3 = துன்பம், கஷ்டம், வேதனை, நஷ்டம், அழிவு.

3037. விபரீத = விபரீதமான, மாறான, பொய்யான, எதிர்மறையான.

3038. விபர்யய: = எதிரிடை, பகைமை, மாற்றம், இல்லாமை, கேடு, துன்பம், மறைவு, அழிவு, பிரளயம், தவறு.

3039. விபாக: = சமையல், ஜீரணித்தல், பழுத்த தன்மை, பயன், துக்கம், வேதனை, கஷ்டம்.

3040. விபினம் = காடு.
 
3041. விபுல = பெரிய, அதிகமான, விஸ்தாரமான, நிரம்ப.

3042. விப்ர: = அந்தணன், அறிவாளி.

3043. விப்ரயோக3: = ஒற்றுமையின்மை, பிரிவு, கலகம்.

3044. விபல: = பழம் இல்லாத, பயன் இல்லாத, லாபம் இல்லாத, வீணான.

3045. விபூ3த4: = கற்றறிந்தவன், தேவதை, முனிவன், சந்திரன்.

3046. விப4க்த = பிரிக்கப்பட, தனித் தனியான, பலவிதமான.

3047. விப4க்தி: = பங்கிடுதல், பிரிதல், தனியாக்குதல், பங்கு,
பிரிவு, பெயர்சொற்களின் வேற்றுமை.

3048. விப4வ: = பராக்கிரமம், செல்வம், சக்தி, வல்லமை, பதவி,
மஹத்வம், பெருமை, மோக்ஷம், பேரின்பம்.

3049. விபா4க3: = பாகம், பகுதி, பிரிவு, முன்னோர் சொத்தில் பங்கு, பாகம் பிரித்தல், பங்கு போடுதல்.

3050. விபு4: = காலம், இடம், பிரபு, ஆத்மா, ஆளுபவன், அரசன், ஆகாயம், சிவன், விஷ்ணு, பிரமன்.
 
3051. விபூ4தி: = பராக்கிரமம், செல்வச் செழிப்பு, உயர்வு, கௌரவம், செல்வம், சொத்து, அதிசய சக்தி, சாம்பல், திருநீறு.

3052. விபூ4ஷணம் = விபூ4ஷா = ஆபரணம், அணிகலன், அலங்காரம்.

3053. விப்4ரம: = அலைதல், சுற்றுதல், தவறு, குறை, குழப்பம், மோஹம், அழகு, ஐயம், சந்தேஹம்.

3054. விமர்ச': = விமர்ச'னம் = பரீட்சித்தல், ஆலோசித்தல், விவாதித்தல், விரிவுரை.

3055. விமான: = விமானம் = அவமானம் = அவமதிப்பு, வாஹனம், ஆகாயவிமானம், ஏழு மாடியுள்ள அரண்மனை / மாளிகை.

3056. விமுக்த = விடப்பட, சுதந்திரமான.

3057. விமுக2 = திருப்பிய முகத்துடன், வெறுப்புடன், விரோதமான, எதிரான.

3058. விமோசனம் = விமோக்ஷணம் = விடுதலை, விடுவித்தல்.

3059. வியத் = விண்வெளி, ஆகாயம்.

3060. வியுக்த = பிரிந்த, விலகிய, விடப்பட்ட, இல்லாத.

 
3061. வியோக3: = பிரிவு, இன்மை, நஷ்டம்.

3062. விரசித = எழுதப்பட்ட, இயற்றப்பட்ட, இழைக்கப்பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட, சரி செய்யப்பட்ட.

3063. விரக்தி: = பற்றற்ற நிலை, அதிருப்தி.

3064. விரதி: = ஓய்வு, ஒழிவு, முடிவு, நிறுத்தம், பற்றின்மை.

3065. விரம: = நிறுத்தம், சூரியன் அஸ்தமித்தல்.

3066. விரல = மெல்லிய, மிருதுவான, நெருக்கமில்லாத, அபூர்வமான, அதிசயமான, சிறிதான, கொஞ்சமான.

3067. விராக3: = நிறத்தின் மாறுபாடு, திருப்தியின்மை, பற்றின்மை, வெறுப்பு.

3068. விராம: = முடிவு, தடங்கல், நிறுத்துதல், நிறுத்தம், வாக்கியத்தின் முடிவைக் குறிக்கும் முற்றுப்புள்ளி அல்லது
கோடு.

3069. விராஜ் = அழகு, காந்தி, பிரகாசம், உடல், பிரமனின் முதல் படைப்பு.

3070. விரிஞ்சி: = பிரமன், விஷ்ணு, சிவன்.
 
3071. விருத3: = விருத3ம் = பட்டம், விருது, உரக்கக் கத்துதல், பிரகடனம்.

3072. விருத்3த4 = தடுக்கப்பட்ட தலைகீழான, விரோதமான, எதிரிடையான.

3073. விரூப = இயற்கையிலில்லாத, கெட்ட, அழகற்ற.

3074. விரூபாக்ஷ: = சிவன்.

3075. விரோத4: = பகைமை, கலகம், இடையூறு, ஒவ்வாமை,
தடை.

3076. விரோதி4ன் = எதிரி.

3077. விளம்ப3: = விளம்ப3னம் = தொங்குதல், தாமதம் .

3078. வி
ஸத் = விளையாட்டில் பிரியமுள்ள, பளபளக்கும்,
பிரகாசிக்கும்.

3079. விலஸனம் =
விளையாடுதல், பளபளத்தல், பிரகாசித்தல்

3080. விலக்ஷண = அசாதரணமான, கெட்ட லக்ஷணங்கள் உடைய.
 
Status
Not open for further replies.
Back
Top