• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

2 ( # 11 F). THE DIFFERENT WORLDS.

Bhur loka extends between the Jambu dwipa and the end of the world.

Above the Bhur loka extends the loka of the Sun.

Above the loka of the Sun extends the loka of the Moon.

Above the loka of the Moon extends the loka of the planets.

There are five loka for the Budha, Sukra, Mangal, Guru and Sani.

The saptarishi mandala extends over the loka of these planets.

Dhruva loka extends above the saptarishi mandala.

Bhuvar lokam extends up to the Dhruva loka.

Svar loka extends above the Bhuvar loka.

Mahar loka extends above the Svar loka.

Jana loka extends above the Mahar loka.

Tapa loka extends above the Jana loka.

Sathya loka extends above the Tapa loka.

Brahma loka extends above the Sathya loka.

Vishnu loka extends over the Brahma loka.

Siva loka extends over the Vishnu loka.

All these together constitute an Universe.

Every other universe is similar to this one.
 
Last edited:
2 (# 12. a) சூரனின் சூறாவளிப் பயணம்.

சுக்கிரனை அடிபணிந்த சூரபத்மன்

மிக்க மகிழ்ச்சியுடன் வெளிப் போந்தான்.

படைக் கடலுக்குள் நுழைந்தான் சூரன்

தடைகளைத் தகர்க்கவல்ல தம்பியருடன்.

தாயும் வந்து சேர்ந்தாள் அப்போது;

மாயையின் மகிழ்ச்சிக்கு ஓர் அளவில்லை.

"மேன்மைகள் பெற்றுவிட்டீர்கள் நீங்கள்;

வேண்டியபடி அண்டங்களின் ஆட்சியையும்.

சென்று வாருங்கள் என் செல்வங்களே!

வென்று வாருங்கள் 1008 அண்டங்களை!

என்று மாயைகளின் உதவி தேவையோ

அன்று நினைவு கூர்ந்தால் வந்து உதவுவேன்".

முதல் இலக்கு குபேரனின் அளகாபுரி;

கடல் போன்ற அவுணர் படை நடந்தது.

கதிரவனின் தேரிலும் சிறந்தது ஆகிய

புதிய இந்திர ஞாலத்தில் அமர்ந்தான் சூரன்.

ஒளியும் ஆற்றலும் நிரம்பியது அது.

வெளியில் எங்கும் செல்ல வல்லது.

ஒரு கோடி குதிரைகள் பூட்டப்பட்ட
து!
ஒப்புயர்வற்ற படைக்கலன் நிறைந்தது!

முகிலும் அஞ்சும் வண்ணம் ஒலி எழுப்பி

திகிலை விதைப்பது கண்டவர் நெஞ்சில்!

பூதங்கள், யாளிகள், குதிரைகள் சேர்ந்து

வேகமாக இழுத்தன சிங்கமுகன் தேரை.

ஆனை முகனின் தேரை இழுத்தன -
பத்து
ஆயிரம் சீரிய குதிரைகள் ஒன்று கூடி.

நால் வகைப் படைகளும் நடந்தன - பூமி

நடுங்கும் வண்ணம் ஓசை ஒலிகளுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
2 (# 12 a). THE CONQUESTS BY SOORAN.

Soorapadman paid his respects to his guru Sukra and came out to join his army along with his two brothers.

At that time Maayai also arrived there. She was very happy to learn about Siva's boons. She told them,"You have achieved greatness. Go forth and rule the 1008 universe given to you. Whenever you need the maaya tricks think of me and I will come to your help."


The first target was Kubera's Alagapuri. The army resembled a huge ocean. Sooran sat in his new chariot Indra gnaalam which was superior to the chariot of the Sun God.

It could go anywhere Sooran wished to go. It shone brilliantly and had a good stock of all asthras and sathas. It a drawn by ten million horses. It made a tremendous noise which made the people shudder with fear.


The chariot of Singa mukan was drawn by the demons, yaalis and horses. Ten thousand fine horses drew the chariot of the Taraka asuran. The earth shook under the advancing footsteps of the army.
 
2 (# 12 b). சரணாகதி அடைதல்.

விரைந்து சென்ற தூதர்கள் சூரனின்
வரவைத் தெரிவித்தனர் குபேரனுக்கு;

"சிவன் அருள் பெற்ற சூரபத்மனை

எவன் வெல்ல முடியும்?" என அஞ்சி,

"சரண் அடைந்தால் உயிர் பிழைப்பேன்" என

முரண் படாமல் சென்று தொழுதான் குபேரன்.

"நான் உமக்கு அடிமை!" இது குபேரன்.

"நன்று! இந்நெறி மறவாதே!" இது சூரன்.

அளகாபுரியைக் கொள்ளை அடித்த அவுணர்

அளவில்லாத செல்வத்தை அள்ளிச் சென்றனர்.

அடுத்த இலக்கு அதற்குக் கீழ் திசையினில்.

நடுக்கத்துடன் மறைந்து போனான் இந்திரன்.

ஊரைக் கொளுத்தி நாசம் செய்த பின்னர்,

சூரன் அடைந்தான் அக்னியின் நகரை.

சினம் மிகுந்த அக்னி போர் செய்தான்.

பலம் மிகுந்த அவுணர்கள் வென்றனர்.

ஊழித் தீயாக உருவெடுத்த அக்னிதேவன்

பாழ் செய்யலுற்றான் அவுணர் படையை.

சடசட என்ற ஒலியுடன் பற்றி எரிந்து

படையினர் பலர் அழிந்து போயினர்.

தாரகன் வந்து எதிர்த்தான் அக்கினியை,

வீரத்துடன் அவன் சிவப்படையை எடுக்க,

"சிவப் படைக்கலம் அழித்து ஒழித்துவிடும்,

சினந்து அத்தனை உலகங்களையும்!"

குறுக்கிக் கொண்டான் வடிவினை அக்கினி,

"பொறுப்பீர் நான் செய்த பிழையை!" என்றான்.

அக்கினியைத் தாக்க முயன்றனர் அவுணர்கள்

அக்கினியின் செல்வதைப் பறித்துக் கொண்டனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
2 ( # 12. b) SARANAAGATHI.

The messengers informed Kuberan about the arrival of Soorapadman's
army. Kuberan knew that no one could defeat Sooran who had the protection of lord Siva. He decided to surrender unconditionally and save his skin.

"I am your slave sir!" Kuberan told Sooran.
"Good! never forget that fact!" replied Sooran.


His army looted all the wealth of Alagaapri. Then the army went eastwards. Indra disappeared silently. His city was burned down and the army reached the city of Agni Devan.


Agni fought with valour but the asuras were mightier. Agni took the form of the pralayaagni and started burning down the asura army.


Taarakn took out his Siva banam. It would destroy all the worlds. So agni shrunk his size and surrendered to Sooran. His wealth was looted by the army of asura.
 
2 (# 12 c). சூரனின் திக்விஜயம்.

தொடர்ந்து நடந்த அவுணர் படை
அடுத்து அடைந்தது எமபுரத்தை.

தூதுவர் சென்று செய்தி அறிவிக்க

ஏதும் செய்ய இயலாத எமதர்மன்,

குபேரன், அக்னி தேவன் போலவே

பேரம் இன்றிச் சரண் புகுந்தான்.

அவுணர் படை அள்ளிச் சென்றது

ஆவலுடன் எமபுரியின் செல்வத்தை!

வருணனும், வாயுவும் அஞ்சி ஒளியவே,

பெரும் சேதம் விளைந்தது அந்நகர்களில்!

நாகர் உலகை அடைந்தான் சூரபத்மன்,

போகாமல் நின்று போரிட்டான் சேடன்;

அவுணர்படை
வென்றது ஆதிசேடனை;
அமிர்தத்தைப் பறித்து அருந்தினான் சூரன்;

பல திக்குகள் நடந்து வெற்றி கண்டபின்

பாற்கடலைச் சென்று அடைந்தான் சூரன்.

பாற்கடலைக் கலக்கியது அவுணர் படை;

பயந்த தேவியர் திருமாலைத் தழுவினர்;

உறக்கம் கலைந்து எழுந்த திருமால்

பறக்கும் கருடன் மேல் ஏறி அமர்ந்தார்.

சிதற அடித்தார் அவுணர் படையை!

சிவந்த ஆறானது அவுணர் குருதி.

மாலுடன் போரிட்டான் தாரக அசுரன்,

மாலால் வெல்ல முடியவில்லை அவனை!

ஆழிப் படையை செலுத்தினார் திருமால்.

ஊழித்தீயென விரைந்து சென்றது ஆழி!

அழகிய செம்பொன் பதக்கமாக மாறி,

அழகாக விளங்கியது தாரகன் கழுத்தில்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
2 (# 12c). Sooran's conquests.

Soorapadman's army marched forward. It reached the city of Yama. Yama had no choice but to surrender unconditionally to Sooran. His wealth was looted by the army of asuras.


Varuna and Vayu hid themselves in fear and the army of asura looted and destroyed their cities. The army reached The World of Nagas.

Adhiseshan fought bravely but was defeated by the army. Soorapadman forcefully grabbed and drank the nectar.


The army reached the ocean of milk. The frightened Devis embraced Vishnu. His slumber was disturbed.

He mounted on is Garuda vaahanam and fought the asura army valiantly. Soon a river of blood started flowing there.


Tharaka asuran fought with Vishnu. Vishnu could not defeat him. When Vishnu released his discus on Tarakan, it transformed into a lovely gold pendent and decorated the neck of the asura.
 
2 (# 12.d) சுவர்க்கம் செல்லுதல்.

அடுத்து அடைந்தது சுவர்க்கத்தைத்

தொடர்ந்து நடந்த அவுணர் படை;

வந்தான் சூரன் என்ற செய்தி கேட்டு

நொந்தான் இந்திரன் மனம் உடைந்து;

போரில் வெல்லும் வாய்ப்பே இல்லையே!

கூரிய மதியினால் தப்பிச் சென்றான்.

இந்திராணியுடன் குயில் வடிவெடுத்து

இந்திரன் பறந்து சென்றான் விண்ணில்.

இந்திரன் தப்பிவிட்டான் என்று சினந்து

தொந்தரவு செய்தனர் பிற தேவர்களை.

தொண்டு புரிவதாக வாக்களித்தபின்

மீண்டு சென்றனர் கொள்ளைஅடித்தபின்.

பிரம லோகத்தை அடைந்தான் சூரன்;

பிரமனே வந்து வாழ்த்துரை வழங்கினான்.

"என் மகன் காச்யபன் உன்னுடைய தந்தை;

நான் உனக்குப் பாட்டன் முறை" என்று.

வைகுந்தத்தை அடைந்தது அவுணர் படை,

வைகுந்த நாதனே வந்து வாழ்த்தினான்;

சிவலோகம் சென்றடைந்தது அவுணர்படை;

சிவனை வணங்கி ஆசி பெற்றான் சூரன்;

ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் சென்று

ஆட்சியை நிலை நாட்டினான் சூரபத்மன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
2 (# 12 d) . Sooran's visit to Swarga.

The asura army reached Swarga next. Indra became very annoyed. There was no hope of winning a battle. He escaped with his queen by changing themselves into two cuckoos.


The army was angered by Indra's escape and started punishing the other Devas found there. After they all promised to serve Soorapadman, they were spared of further punishments.


The army reached Brahma lokam. Brahma himself came to greet the Soorapadman claiming to be his paternal grandfather. When they reached Vaikuntham Vishnu himself came out and greeted Soora padman.


In Shivalokam Soorapadman took the blessings of Siva. He established his rule in all the 1008 universes and returned to earth.
 
2 (# 13). எதிர்கொள்ளுதல்.

தேவர்களிடம் அல்லல் பட்ட அவுணர்கள்,
தேவர்கள் படும் தொல்லைகளை ரசித்தனர்.

வெற்றி வாகை சூடி வரும் சூரபத்மனை,

வெற்றி விழாவுடன் வரவேற்க வேண்டுமே!

அசுரேந்திரன் எதிர்கொள்ள விரும்பினான்.

அசுரகுருவிடம் விண்ணப்பித்தான் இதை.

"முன்னே நீர் செல்ல வேண்டும் - சூரனிடம்

என்னை அறிமுகம் செய்ய வேண்டும்!" என.

தாய்வழிப் பாட்டனை அறிமுகம் செய்யத்

தாமதம் இன்றிச் சென்றான் விமானத்தில்.

பாட்டனைத் தொழுது குசலம் விசாரித்துப்

பறந்து சென்றான் சூரன் நிலவுலகினுக்கு.

இந்திரன் முதலாய தேவர்கள் சென்றனர்,

நொந்த உள்ளத்துடன் திருமாலை நாடி.

"சிவனை இகழ்ந்த தக்கன் யாகத்துக்கு

அவனை மதித்துச் சென்றதன் பயன் இது.

சிவன் அருளால் மேன்மைகள் பெற்றவனை

எவனாலும் வெல்ல முடியாது அறிவோம்.

அவனை வாழ்த்துவதே நல்ல முறையாகும்."

அனைவரும்சென்று துதி பாடினர் அவனை.

பதினொரு கோடி ருத்திரர்கள் கண்டான் சூரன்,

"பதில் உரையுங்கள், இவர்கள் யார்?" என்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

.
 
2 (#13). THE RECEPTION.

The asuras who has suffered in the hands of the Devas, enjoyed witnessing the sufferings inflicted on them by Sooran.

Sooran's maternal grandfather Asurenthran wanted to receive Sooran with due honors. He requested Sukracharys to go ahead and introduce him to Sooran as his maternal grandfather.


Sukra flew in his vimaanam and told Sooran about his grandfather. Sooran asked about the welfare of his grandfather and flew back to the earth.

Indra and the other devas went to Vishnu and lay bare their sufferings. Vishnu replied,"It was not right on the part of the devas to have attended the Yaaga performed by Dakshan insulting Siva. Now no one can defeat Sooran. It is better that we all go and pay him our respect."

Sooran was surprised to see the Ekadasa koti Rudras who resembled Lord Siva and wanted to know about their identity.


 
2. (#14). நான்முகனின் ஆணவம்.

படைப்புத் தொழில் செய்து வந்த நான்முகன்

இடையில் மறந்து போனான் சிவபிரானை.

முழுமுதல் பிரானை மறந்து படைத்தபோது
முழுமை பெறவில்லை அவன் படைப்பு.

செருக்கு அழிந்து தவம் செய்த போதிலும்
உருக்கம் கொண்டு சிவன் வரவே இல்லை!

சிந்திய கண்ணீர் துளிகள் உருமாறி
தொந்தரவு செய்யும் பேய்கள் ஆகின.

படைப்புத் தொழிலை முடிக்க உதவிட
பதினோரு ருத்திரர்களைப் படைத்து

பிரமனிடம் அனுப்பினான் சிவபிரான்.
பிரமனுக்கு உதவினர் அந்த ருத்திரர்கள்.

பதினோரு ருத்திரர்கள் படைத்தனர்
பதினோரு கோடி ருத்திரர்களை.

"இருவினைகளுக்கு ஈடாகப் படையுங்கள்!"
பிரமன் விண்ணப்பித்தான் ருத்திரர்களிடம்.

"முன்போலப் படைத்தல் செய்வீர்!" என
பொன்னுலகம் ஏகினர் அந்த ருத்திரர்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
2 (#14). BRAHMA'S PRIDE.

Brahma became proud with his power to create and forgot that lord Siva was the supreme God. His creation became incomplete without the grace of Siva.


Brahma realised his folly. He did penance but Siva did not appear. The tears shed by Brahma in self pity transformed into haunting demons.

Siva took pity and sent eleven Rudras to help Brahma with the creation.

They created eleven crore Rudras very similar to themselves.


Brahma requested the Rudras to create the beings subjected to the good and bad karmas.

The Rudras told Brahma to continue to create as before and returned to the heaven.
 
2 (# 15 a). விஸ்வகர்மா.

"அழகிய ஒரு நகரை விரைந்து
அமைத்துக் கொடுப்பாய் எனக்கு!"

சூரனின் ஆணைப்படித் தச்சன்
சீரிய நகரை அமைக்கலுற்றான்.

நகரை அமைக்க உகந்த இடத்தைப்
பகர்ந்தார் அசுரகுரு சுக்கிராச்சாரியார்.

தென்கடலை அடைந்தான் விரைந்து!
எண்பதாயிரம் யோஜனை பரப்பளவில்,

கடலைத் தூர்த்தான் பெயர்த்த மலைகளால்!
ஆடகப் பொன்னால் அமைத்தான் மதில்களை.

நான்கு வாயில்கள், நான்கு கோபுரங்கள்,
நான்கு திசைகளிலும் பொலிந்து விளங்கின.

தெருக்கள், மாடங்கள், மாளிகைகள்,
அரங்குகள், மண்டபங்கள், சூளிகைகள்,

குன்றங்கள், சோலைகள், குளங்கள்,
மன்றங்கள் அமைந்தன அழகுற.

அந்நகரின் நடுவே அழகிய அரண்மனை,
அந்தப்புரம் , படைக்கலச் சாலைகளுடன்.

வீர மகேந்திரபுரம் என்ற சூரனின் நகரம்
விளங்கியது அகழியாகக் கடல் சூழ்ந்து.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
2 (# 15 a). VISWAKARMA.

"Build me a city worthy of my position!" Soorpadaman commanded Viswakarma. Sukracharya suggested the ideal place to do it.

Viswakarma reached the southern sea. He levelled the sea floor with the plucked mountains and recovered an area of 80,000 joyanas.



The surrounding wall was made of pure gold. There were four entrances and four gopurams.

The streets, multi storied houses, mansions, assembly halls,
mandapam, gardens, ponds and stages were constructed.

In the center of the city stood a palace with a separate quarters for the royal women and a place to store the weapons of warfare.
 
2 (#15 b). பிற நகரங்கள்.

மபுரம், இமயபுரம், இலங்கைபுரம்,
நீலபுரம், சுவேதபுரம், அவுணர்புரம்,

வாமபுரம், பதுமபுரம், என்ற நகர்கள்

அமைந்தன அதன் எட்டு திசைகளிலும்.

அடைத்த இடத்தில் வடகடல் நடுவே

அமைத்தான் ஆசுரம் சிங்கமுகனுக்கு.

கடல்கள் தோறும், தீவுகள் தோறும்,

படைகள், சுற்றங்களுக்கு நகரங்கள்.

பொன்னிற மேருவின் தென் பகுதியில்

நாவலந் தீவின் மகூட மலையில்,

மாயாபுரத்தை அமைத்தான் தச்சன்

மாயையின் மைந்தன் தாரகனுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
2 (# 15.b). THE OTHER CITIES.

Hema puram, Imaiya puram, Ilangai puram, Neela puram, Swetha puram, Avunar puram, Vaama puram, Pathuma puram, were the eight cities constructed in the eight direction of the Veeramahendra puram.


The northern sea was leveled and a grand palace was constructed there for Singa mukhan. Every sea and every island was utilised to build a city for a kin or kith of Soorpadman.

On the southern side of the golden hued mount Meru, in the Jambu dwipa, in the Hemakoota giri, the city Maayaa puram was constructed for Thaaraka asuran.
 
2 # 16. முடி சூடுதல்.

வீரமகேந்திரபுரத்தைக் கண்ட சூரன்,
வியந்து போற்றினான் விஸ்வகர்மனை.

சூரபத்மனுக்கு முடி சூட்டுவதற்குச்

சேர்ந்து வந்தது தேவர்கள் குழாம்.

அமர்த்தினர் சூரனை ஓர் இருக்கையில்.

அனைத்து தீர்த்தங்களால் முழுக்காட்டி,

பொன்னாடைகள் அழகுற அணிவித்து,

புனைந்தனர் பலவகை மலர் மாலைகள்.

அணிகலன்கள் பல அணிவித்தனர்;

அரியணையில், கொண்டு அமர்த்தினர்.

மணிமுடியை எடுத்த நான்முகன்,

அணிவித்தான் அதை சூரபத்மனுக்கு.

தேவர்களும், அவுணர்களும் வாழ்த்திட
,
தேவாதி தேவன் ஆனான் சூரபத்மன்.

இந்திரன் ஏந்தினான் காளஞ்சியை;

ஏந்தினான் குபேரன் அடைப்பையை.

காற்றுக் கடவுள் வீசினான் சாமரம்

கதிரவன், திங்கள் குடை பிடித்தனர்.

இசை பாடினர் கருட கந்தர்வர்கள்,

இசைந்து ஆடினார் தேவ மகளிர்,

அவுணரும், முனிவரும் வாழ்த்துரைக்க,

எமனும், அக்கினியும் பிரம்பை ஏந்தி,

வந்திருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தி,

வரிசைப் படுத்தி ஒழுங்கு செய்தனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

[ காளஞ்சி = spittoon.
அடைப்பை = bag of betel leaves].
 
Last edited:
2 # 16. THE PATTABHISHEKHAM.

Soorapadman was well impressed by the new city Veeramahendra Puram and praised Viswakarma's talents. All the devas came together to crown Soorapadman as their new King.


He was made to sit on a fine seat. The holy waters was poured on him and he was dressed in silk, gold ornaments, flowers and fine jewels. He sat on his throne. Brahman placed the crown on his head.

The devas and asuras praised Sooran. He became the king of devas. Indra held the spittoon and Kubera the bag of betel leaves.

Vaayu waved the saamaram. The sun and the moon held the white umbrellas. Gandarvas and garuda sang and all the apsaraas danced.

The rushis and the asuras blessed Sooran. Yama and Agni controlled and regulated the crowd assembled there.
 
2 (# 17a). அரசாட்சி.

"என் தந்தைக்குப் பாட்டன் முறை நீ!

நான் அழைக்கும்போது விரைந்து வா!"


திருமாலிடம் ஆணை இட்டான் சூரபத்மன்.

தினமும் பஞ்சாங்கம் சொல்வதற்கு பிரமன்;

என்றைக்கும் இளம் வெயிலாகக் கதிரவன்,

என்றைக்கும் முழுக்கலையுடன் சந்திரன்;

நினைத்தபோது வந்து பணிகள் புரிந்து,

அனைவருக்கும் குளிர்ச்சியான அக்கினி;

"எல்லா உயிர்கள் போல் எண்ணிக் கொண்டு

கொல்லக் கூடாது அவுணர்களை, விலங்குகளை!"

எமனிடம் ஆணை இட்டான் சூரபத்மன்;

எத்தனை தேவர்களோ அத்தனை ஆணைகள்,

நகர் பெருக்கி சுத்தம் செய்ய வாயுதேவன்,

நீர் தெளித்துச் சீராக்கிட வருணதேவன்,

குற்றேவல் புரிய வரவேண்டும் தினமும்,

மற்ற தேவர்கள் நாள் தவறாமல் அங்கே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
2 (# 17a). SOORAPADMAN'S RULE.

"You are my great grandfather. You must come to me whenever I call you!"


Soorapadman told Vishnu. Brahma was commissioned to read the panchangam everyday.


The Sun was commanded to keep his rays always gentle and pleasant.

The moon was commanded to be always a full moon and not to wane and wax.


Yama was commanded not to kill the asuras and their animals.


Each deva was given a task to perform. Vayu was ordered to sweep clean the city everyday. Varuna was ordered to sprinkle water to settle the dust.

The remaining devas were ordered to come everyday to perform the other odd jobs and the menial jobs.
 
2 (# 17b). திருமணங்கள்.

பதும கோமளையை, தெய்வத் தச்சன் மகளை,

வதுவை புரிந்துகொண்டான் அசுரன் சூரபத்மன்;

காமக் கிழத்தியர்களாகப் பல இளம்பெண்களை

கந்தருவர் முதலிய தேவ மாதரை மணந்தான்;

சிங்கமுகன் மணந்து கொண்டான் அழகிய

நங்கை விபுதையை, நமனின் மகளை;

தாரக அசுரன் மணந்துகொண்டான்

நிருதியின் மகள் நங்கை சவுரியை.

திருமணம் முடிந்ததும் திரும்பிச் சென்றனர்

அருமையான அவரவர் நகரங்களுக்கு;

படைகளையும் அனுப்பினான் நகர்களுக்கு;

அடைந்த ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு.

எட்டு திசைகளிலும் அமைக்கப் பட்டிருந்த

எட்டு நகர்களுக்கு சூரபத்மன் அனுப்பினான்

யானை முகம், குதிரை முகம், கொண்டவர்களை;

யாளி முகம், கரடி முகம் கொண்டவர்களை,

புலி முகம், பன்றி முகம் கொண்டவர்களை,

அரிமா முகம், மரையின் முகம் கொண்டவர்களை.

துர்குணன், தருமகோபன், சங்கபாலன், மகிஷன்

துர்முகன், சங்கபாலன், வக்கிரபாலன் மந்திரிகள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 

Latest ads

Back
Top