You Are That!- 81 "source of energy"

shridisai

You Are That!
"சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு". குறள் 27:


சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம் என்பது இக்குறளின்
பொதுப்பொருள்.

வகை: என்பதிற்கு தன்மை என்று பொருள்.
அதாவது ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. பொருளும் அதன் தன்மையும் பிரித்துப் பார்க்க இயலாது. மேலும் எந்தவொரு பொருளும் தனித்தும் நில்லாது, வேறு ஒரு மூலப் பொருளில் அடங்கியே இருக்கும். நெருப்பின் தன்மையாக
உஷ்ணமும், நெருப்பு விறகின் மூலத்தில் அடங்கியுள்ளது போன்று!

இங்கு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் இவ்-ஐந்தின் வகை அல்லது
தன்மைகளும் ஐம்புலங்களோடு தொடர்பு உடையது. ஐம்புலன்களும் பஞ்ச பூதங்கள்
என்னும் மூலத்தில் அடங்கியுள்ளது. பஞ்ச பூதங்களின் மூலம் அறிவித்தாலன்றி அறியவொண்ணாது. அஃது அறிதற்கு அரியது. ஆற்றல் பொருந்தியவரால் அம்மூலம்
அறிவிக்கப்பட்டு அறியப்படுமின், அவ்வறிவுனுள் இப்பிரபஞ்சமே அடங்கியுள்ளதை உணரலாம் என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம்.

"As I alone give light to this body, so I do to the world, As a result the whole world is mine, or alternatively nothing is"- Ashtavakra Gita - Chapter: 2

ஆயினும் இதற்கு மாறாக மனித குலம் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் இவ்-ஐந்தின் வகையறிய உலகியல் பொருட்களில் நாட்டத்தை செலுத்தி, அதனின்று
மீள வகையறியமல் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.

வேதாத்திரிய சிந்தனைகள் : (2)
=============================
ஆதியின் அசைவே பரம அணு,
அவை ஒவ்வோர் அளவில்கூட
வேதம் கூறும் ஐம்பூதம் விண்
முதல் மண்வரை வேறில்லை.

ஒவ்வொரு பொருளும் பரமுதலாய்
அவ்வுரு வரையில் வந்தகதை
செவ்விய சிறுசொல் பரிணாமம்.
சிறப்பை உணர்வாய் நீயுமதே.
-வேதாத்திரி மகரிஷி.

சாய்ராம்
.
 

Attachments

  • images (8).jpeg
    images (8).jpeg
    17.9 KB · Views: 423
Back
Top