Which celebrates should and should not be celebrated after death of a relative for a year?
உங்களுக்கு இறந்தவர் மேல் அன்பும் மதிப்பும் இருக்குமானால், ஒரு வருடத்திற்காவது, உங்கள் மனம் மகிழும் எந்த வகைக் கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் இருப்பதே சிறப்பு.
நாம் செய்ய நினைக்கும் ஒரு செயலை நம் பெற்றோர்கள் உயிருடன் இருந்தால் அவர் செய்வாரா என்ற கேள்விக்கு “செய்ய மாட்டார்கள்” என்று (அவர் கூடவே இருந்து அவர் கடைபிடிப்பதனை நாம் பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால்) நமக்கே தோன்றுமானால் அதனைச் செய்யக் கூடாது. மனம் மகிழ்ச்சி தரும் செயல்களை, (புத்தாடை அணிதல் விருந்து போன்ற செயல்களை) மட்டுமே விலக்க வேண்டும். உடலை வருத்தி நோம்பு நோற்பதில் தவறில்லை. "தென் புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" என்றபடி அன்றாடம் நீங்கள் செய்ய வேண்டிய நித்திய கடமைகளில் விலக்கில்லை.
நீத்தார் கடன் கழிப்பதில் தடை ஏற்படக் கூடாது என்பதால், அந்த ஒரு வருடத்தில், "கர்த்தா" உயிரிழக்கவோ அல்லது செயலாற்ற முடியாமல் போவதற்கோ வாய்ப்புள்ள (மலையேறுதல், ஆறு குளம் கடல் போன்ற நீர்நிலைகளில் குளித்தல் போன்ற) செயல்களைச் செய்யாமல் இருப்பது நலம்.
ஆலையம் போன்ற பொது இடங்களில் உங்களது வருத்தத்திற்கான காரணம் அறியாத எவரையும் பார்க்க நேரிட்டால் அது இருவருக்கும் ஒரு சங்கடமான நிலையை உண்டாக்கும் என்பதால் ஆலையம் செல்வதுவும் விலக்கப்பட்டது. நம் பெரியோர்கள் ஒரு காரணம் கருதியே பல விதிகளை உண்டாக்கியிருக்கிறார்கள்