• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

" Vandhe Bharat Train.."

kk4646

Active member
சரியா 7/2 மணிக்கெல்லாம் சென்னை சென்டிரல் போயிடும் ..அத்திம்பேருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் ..ஸ்டேஷனுக்கு வந்துடுவார்..
நீ இறங்கி அவர தேடவேண்டாம்.. கம்பார்ட்மெண்ட் . சீட் எல்லாத்தயும் அவருக்கு சொல்லியாச்சு..
எதுக்குடா ...அவர கஷ்டப்படுத்தற.. சென்னையில எனக்குப் பயம் ஒண்ணும் இல்லே.. ஓலா ..ஊபர் இருக்கவே இருக்கு..
அப்பிடி இல்லேம்மா .. நீ தனியா போயிடுவேன்னு எனக்கு தெரியும் .. இருந்தாலும் ..எங்களுக்கு ஒரு நிம்மதி இருக்கும் இல்லையா.. சரி சரி ஏறிக்கோ..ட்ரையின்புறப்படப்போறது.. இறங்கின உடனே வாட்ஸ்அப் மெசேஜ் பண்ணிடு ...
மைசூர் சென்னை வந்தே பாரத் சரியா 3 மணிக்கி பெங்களூரில் நான் ... பிள்ளையும் மருமகளும் ஸ்டேஷனுக்கு ... ...ஒணணும் பெரிசா லக்கேஜ் இல்லை.. ஒரு சின்ன ட்ராலி பேக்.. ஒரு ஹாண்ட் பேக்.. Executive class..அதனால ரெண்டு ரெண்டு சீட்டுதான்.. மெதுவா என் சீட்ட தேடி ட்ராலி பேக்க மேலே வெச்சிட்டு.. என் பக்கத்து ஜன்னலோர சீட்ல யாருன்னு ..பார்த்தா.. யாருமில்லே..
வாஷ் ரூமுக்கு போயிட்டு வரும்போது பார்த்தா...அந்த ஜன்னல் ஓர சீட்டில யாரோ ஒருத்தர்.. யாராக இருந்தா நமக்கென்ன..
அந்த மனுஷர் என் பக்கம் திரும்பாமல் ஜன்னல் வழியே வேடிக்கை ...
ஆனால் சைடிலேயும் .. ஹேர் ஸ்டைலையும் பார்க்கும்போது எனக்கு ரொம்ப தெரிஞ்சவர் மாதிரி ...
மேடம் டிக்கெட் ..டி டி ஆர்... மொபைல்லேந்து என் பி என் ஆர் நம்பரை சொன்னபோது ராஜலக்ஷ்மியா மேடம்.. தலையை ஆட்டிட்டு முடிக்கும்போது பக்கத்து சீட் மனுஷர் கட கடன்னு நம்பர் சொன்னதுக்கு ..மீனாட்சிசுந்தரம்.. டி டி ஆர்.கேள்விக்கி இவர் தலை மட்டும் லேசா ஆடித்து.. [ இவர் கையிலே மொபைலோ டிக்கெட்டோ எதுவுமே இல்லை..ஆனால்...]
அப்பத்தான் என் பக்கத்தில் திரும்பினவர் முகத்தை பார்த்தேன்.. என் உடம்பு குப்புன்னு வேர்த்துப் போச்சு..
உலகத்தில ஒரே மாதிரி ஆறு பேர் இருப்பாங்கன்னு படிச்சிருக்கேன்.. ஆனால் இவர் அப்பிடியே ஈ அடிச்சாங் காப்பியா..
முகத்தில் நெத்திக்கி மேலே வலது பக்கம் சின்ன தழும்பு.. அதே நிறம் ..நீள மூக்கு
ஹார்ட் கொஞ்சம் பட படன்னு அடிச்சுக்க ஆரம்பிச்சது.. எப்பிடி அதே பெயர் மீனாட்சிசுந்தரம்ன்னு...
என்னை இவர் திரும்பிப் பார்க்காமல் ஜன்னல் வழியே வேடிக்கை.. எனக்கு என்ன செய்யரதுன்னு தெரியலே.. யார் இந்த மனுஷர் இங்கே எப்பிடி... எதற்க்காக.. மனசில ஆயிரம் கேள்விகள்...
ஏதாவது பேச்சு குடுக்கலாமான்னு மனசிலே யோசனை.. கூடவே இனம் தெரியாத பயம்.. குழப்பம்.. பொதுவாவே நான் மத்தவங்களை விட தைரியசாலின்னு பேர் வாங்கினவ..ஆனால் இப்போ ..அது எல்லாம் காத்தில போயிடுத்து..
எழுந்து போய் ..பிள்ளைய மொபைல்ல கூப்பிட்டு பக்கத் சீட்ல இருக்கறவற பத்தி சொல்லலாமா.... வேண்டாம் சிரிப்பான்...
என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.. இவரா பேச்சு குடுப்பாருன்னு பார்த்தா அதுவும் இல்லை..
நாலு மணிக்கி ஸ்னாக்சும் டீயும் வந்தது.. ஆனால் பக்கத்து சீட்டுக்காரர் எதையுமே வாங்கவில்லை.. டிக்கெட் புக் பண்ணும்போதே வேண்டாம்ன்னு எழுதியிருப்பார் போல.. ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தவில்லை..
எழுந்திருந்து மறுபடியும் வாஷ் ரூம் போயிட்டு வரும்போது... இவர் கையில் டைம் மேகஜின்... இருப்பதையும் ...சின்ன பச்சை கலர் துண்டு பேப்பர் அதிலிருந்து நீட்டிகொண்டு இருப்பதையும் பார்த்ததில் எனக்கு அதிர்ச்சியில் கை கால்கள் எல்லாம் லேசா நடுங்க ஆரம்பித்தது..
டைம் மேகஜின் யார் படிப்பார்கள் அந்த பச்சை கலர் பேப்பர் துண்டு எதற்கு ...எனக்குத் தெரியும்...
கொஞ்சம் கொஞ்சமா எனக்குப் புரிய ஆரம்பித்தது..பக்கத்து சீட்டில் இருப்பது யார் என்று.. ஆனால் என்ன காரணம்.. எதற்கு ...புரியவில்லை..
பயத்தில் நடுங்கி அடங்கி ஒடுங்கி சீட்டில் ஒரு ஓரத்தில் நான்.. எப்படாப்பா சென்னை வரும்ன்னு ....
பெரம்பூர் தாண்டினவுடன் டிரெயின் வேகம் குறைந்தது சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் நுழைய வேண்டி..
அவசர அவசரமா வாஷ் ரூமுக்குப் போய் லேசா முகம் கழுவிட்டு வந்தபோது பார்த்தேன் ..பக்கத்து சீட் மனுஷர் எதிர் திசையில் வெளியே போற கதவுகிட்ட போவதை கையில் டைம் மேகஜினோட..
மாப்பிள்ளை வந்திருந்தார்.. ஸ்டேஷனுக்கு
என்ன மாமி உடம்பு சரியில்லையா.. முகமே சரியில்லையே ஏதோ பேய்அறைஞ்ச மாதிரி இருக்கிங்களே.. மாப்பிள்ளையின் கேள்வி நியாமாத்தான் பட்டது எனக்கு.. என்னத்தைச் சொல்ல.
அதெல்லாம் ஒண்ணும் இல்லே கொஞ்சம் லேசா தலைவலி வீட்டுக்கு போய் காப்பி சாப்பிட்டா சரி ஆகிடும்..
என்னுடன் பக்கத்து சீட்டில் வந்தது..
சரியா ஒரு வருஷத்துக்கு முன்னால்...வீட்டு சோபாவில் உக்கார்ந்து டைம் மேகஜின் படித்துகொண்டிருந்தபோது அப்பிடியே சரிந்து விழுந்து “என்னை விட்டுப் போன” என் “ஹஸ்பெண்ட்” மீனாட்சிசுந்தரம்..
“CARDIAC ARREST” …அவரை கடைசியா பார்த்தது ஐஸ் பெட்டியில் இருந்த உயிர் இல்லாத அவர் உடலையும் Martuary Vanil அவர் முகத்தையும்.. அவரோடவருஷாப்திகம் பிள்ளை வீட்டில் நேற்று ...அதற்குத்தான் நான் வந்திருந்தேன்.. எதற்க்காக அவர் என்னுடன் வந்தே பாரத் டிரைனில் வந்தார்.. தெரியவில்லை..
என் பிள்ளையிடம் ட்ரெயினில் வந்தது யார்ன்னு சொன்னால் நம்பப்போவது இல்லே ..மாப்பிள்ளையும்தான்..
ஏன் நீங்களும்தான்.....
டி வி கே
All reactions:







Comment


Share

0 comments​

 
I too feel the presence of my husband whom I lost last year,almost always. I never get scared that a dead person is with me..Actually while I’m alone at home,almost always I am,I feel his company quite protective.
 
அன்று செவ்வாய் கிழமை ...

நாள் நட்சத்திரம் பார்த்து, மீனம் மேஷம் ...வடக்கே சூலம் போன்றவற்றை சரிபார்த்து ‘வந்தே பாரத்தில்’ டிக்கெட் எடுத்து கொடுத்தான் என் மகன்

பெங்களூரிலிருந்து சென்னை பயணம்

அதிகமாக காரிலியே பயணித்த நான் ஒரு மாறுதலுக்காக வந்தே பாரத்தில் பயணிக்க முடிவெடுத்தேன்

அன்று பெங்களுரில் 7வது நடைமேடையில் மைசூரிலிருந்து வர வேண்டும்

பயணிகளின் கூட்டத்தை விட பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களின் போக்குவரத்து, நடைமேடையில் பயணிகள் நிம்மதியாக நிற்கவிடாமல் துரத்தியது ஒரு வேடிக்கை.

இந்த நடை மேடைதான் எவ்வளவு கூட்டத்தை தாங்கும்?

பெங்களூரில் அவ்வளவு வெயில் இல்லை

கடைசி நிமிடத்தில் அனைவரையும் தள்ளி இடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பதறி வரும் நாகரிக இளசுகளின் அலை ஒரு பக்கம்.

Bluetoothதை காதில் பொருத்திக்கொண்டு, அக்கம் பக்கம் ... சுற்றுப்புறத்தை அறவே மறந்து அளவளாவிக்கொண்டு நடை மேடையை நடந்தே அளந்துகொண்டிருந்தவர்கள் ஒரு பக்கம்

தங்களது coach நிற்கும் இடத்தை சரியாக கண்டறிந்து கடமை உணர்வுடன் அங்கே பையும்,.. கையில் கைபேசியுடன் attention இல் நின்றவர்களும் உண்டு

மணி 2.50 நெருங்கிக்கொண்டிருந்தது

அம்மணி ஒருவர் மைக்கில் அழகாக தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தார்

அனைவரின் பார்வையும் கவனமும் ஒருங்கே train வரும் திசையையே நோக்கியிருந்தது

ஒருசிலர், பொறுமை இழந்து, புலம்பிக்கொண்டிருந்தனர்

அந்த நொடியும் வந்தது

திடீரென அனைவரிடமும் ஒரு சுறுசுறுப்பு ...ஒரு வேகம்....ஒரு களிப்பு ..

வந்தது வந்தே பாரத்!!

இதன் கம்பீரமான அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வேகம்! சுகம்! சாகச ரயில் பயணம்!

இதில் பயணிக்கும் ஆசை இன்று இன்னும் சில நொடிகள் நிறைவேறப்போகிறது

ரயில்வே நிலையத்தில் ஒரே மாதிரியாக Trainகளை பார்த்து பழகிய கண்களுக்கு ஒரு வித்தியாசம் ... மகிழ்ச்சி

வந்தே பாரத் கம்பீரமாக வந்தது .....நிதானமாக ....இன்னும் நிதானமாக ... ஒரு வழியாய் நின்றது

மைசூரிலிருந்து பெங்களூருக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராய் நிதானமாக படியை பார்த்து ...நடைமேடையை பார்த்து மற்றும் Trolly bag, Belongings சரியாக இருக்கிறதா என்று பார்த்து .. மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடன் இறங்க ...

நேரம் ஓடிக்கொண்டிருந்தது

Train நின்றுக்கொண்டிருந்தது

வந்தே பாரத் வந்தும் ஏற முடியவில்லை!!


தொடரும் ..... 
 
தொடர்ச்சி

4.30 மணி நேர பயணம்...எனவே பொழுதை போக்க அதிகமாக ஒன்றும் தயார் செய்யவில்லை

Premium train …Executive class ஆகையால் அவ்வப்பொழுது ஏதாவது சிற்றுண்டி உணவு வகைகள் மற்றும் மசாலா டி, ginger டி .. காபி வழங்கப்பட்டன

வழக்கமாக வழங்கப்படும் நியூஸ் பேப்பர், வாட்டர் பாட்டில் போன்றவை உண்டு

சக பயணிகளுடன் அளவளாவலாம் ..... அவரவர் முகங்களைப் படிக்கலாம் . எவரும் இல்லாதபோது கனவுலகத்தில் உலாவரலாம் தவிர மலரும் இனிய நினைவுகளில் மூழ்கி எழலாம்

என் 82 வயது வாழக்கை பயணத்தில் கடந்து வந்த பாதை, வெற்றி தோல்விகள், சந்தித்த ஏமாற்றங்கள், குடும்ப சுமை,... பொறுப்புகள் அவை யாவும் 'வந்தே பாரத்தை' விட அதி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது

Train காட்பாடியை நெருங்கிக்கொண்டிருந்தது

காட்பாடிக்கு அருகில் உள்ள வேலூர் நினைவுக்கு வந்தது

வேலூர் கோட்டையும், கோட்டையை சுற்றியுள்ள அகழியும், CMC மருத்துவ கல்லூரியும், சேண்பாக்கம் பிள்ளையார் கோவிலும் நினைவுக்கு வந்து மறைந்தன

சென்னையை நினைத்தவுடன் தகிக்கும் வெயில் நினைவுக்கு வந்தது அதன் கொடுமையை பற்றி மூன்று பக்கங்களுக்கு குறைவில்லாமல் எழுதலாம் தகிக்கும் வெயிலில் சிலர் தார் ரோட்டில் முட்டையை உடைத்து ஆம்லெட்போடுவதை YOU TUBEஇல் பார்த்துள்ளேன்

அன்றைய ஆங்கில செய்தித்தாளில் தலைப்பு செய்திகளை முடித்துவிட்டு மடித்து என்னுடைய இருக்கைக்கு முன் சீட்டில் அதை செருகும்போது கவனித்தேன்

அது ஒரு ரேபான் கூலிங் கிளாஸ் எனக்கு முன் இந்த சீட்டில் பயணித்தவருடையதாக இருக்கவேண்டும்

TTR ஐ தேடிப்பிடித்து விஷயத்தை சொல்லி அவரிடம் ஒப்படைத்தேன்

தரும மிகு சென்னையை நோக்கி 'வந்தே பாரத்' கடமை உணர்வுடன் மிக விரைவாக சென்றுக்கொண்டிருந்தது



தொடரும் .....
 
தொடர்ச்சி...

இந்த 'வந்தே பாரத்' ரயில் பயணம், எனக்கு என்னுடைய பழைய ரயில் பயணங்களை நினைவு கூர்ந்தது..... அதில் ஒன்று ....

ரயில் பயணம் என்பது இனிய நினைவுகளை உருவாக்குவது, புதிய பல விஷயங்களில் நம் கவனத்தை ஈர்ப்பது புதிய மனிதர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது நம்முடன் பேச ஆர்வமுள்ள சக பயணிகளுடன் தாராளமாக பேசலாம், சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் .

எனக்கு பல வருடங்களுக்கு முன் டெல்லிக்கு போஸ்டிங் பாதுகாப்பு துறையில் உத்தியோகம்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணித்துக்கொண்டிருந்தேன்

சக பயணியிடம் பேச்சுக்கொடுத்தேன்

அவர் தன்னை ஒரு டெபுடி கலெக்டர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்

அவருடன் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும்போது இடையே தான் தற்போது அரசாங்க தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் முனைப்பாக உள்ளதாகவும், அது சம்பந்தமாக பல சிக்கல்களை சந்தித்ததாகவும் அவற்றை அவர் சாதுர்யமாக கையாண்ட விவரங்களை சுவைபட பகிர்த்துக்கொண்டிருந்தார்

எதற்கும் இருக்கட்டுமே என்று அவருடைய தொலைபேசி என்னை வாங்கிக்கொண்டேன்

நாட்கள் ஓடின

பல வருடங்களுக்கு பிறகு எங்கள் தலைமை அலுவலகத்தில் என் சக ஊழியரிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது நான் சென்னையை அடுத்த கிராமத்தில் வாங்கியுள்ள வீட்டுமனையை அரசாங்கம் கையகப்படுத்தியதை தெரிவித்தார்

விசாரித்ததில் அரசாங்கம் அந்த கிராமத்தையே கையகப்படுத்தியதாக விவரமறிந்தேன்

எனக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று விசாரிக்கும்போது, அவர்கள் எனக்கு அனுப்பிய நோட்டீஸ் அவர்களுக்கே திருப்பிவிட்டதை அறிந்தேன்

காரணம், என்னுடைய அப்போதைய விலாசம் ஒரு அரசினர் குடியிருப்பு

கடல் கரையோரமுள்ள அந்த குடியிருப்பை அரசே பல வேறுதிட்டங்களுக்காக தரைமட்டமாக்க இடித்துத்தள்ளிவிட்டது

பல ஆண்டுகாலமாக அந்த இடம் இன்னும் வெற்றிடமாக உள்ளது அந்த இடத்தில் புதியதாக எந்த திட்டமும் இன்று வரை வந்ததாக தெரியவில்லை.

என்னுடைய விலாசத்திற்குரிய குடியிருப்பே தற்போது இல்லாத காரணத்தினால் நோட்டீஸ் அரசாங்கத்திற்கே திருப்பியனுப்பப்பட்டது

மேலும் விசாரித்ததில் என்னுடன் வீட்டு மனை வாங்கிய மற்றவர்களுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாக அறிந்தேன்

உடனே ரயில் சினேகிதரை தொடர்புகொண்டேன்

விவரத்தை எடுத்துச்சொல்லி அவரை ஆலோசித்தேன்

அவரின் வழிகாட்டுதலில் எனக்கு உரிய இழப்பீட்டு தொகையை விரைவாக வட்டியுடன் பெற்றேன் என்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்

இவையாவும் ரயில் சிநேகத்தினால் எளிய முறையில் எனக்கு உரிய இழப்பீட்டை இன்னல்கள் எதுவும் இன்றி வட்டியுடன் நான் பெற காரணம் என்னுடைய ரயில் சிநேகிதமே!!!

வாழ்க ரயில் …… வளர்க ரயில் பயணமும், இனிய ரயில் சிநேகிதமும்
 

Sleeper Version Of Vande Bharat Express To Debut In March 2024 With 857 Berths​


1696502963894.png


The Indian Railways is set to introduce the sleeper version of the Vande Bharat Express, offering a more comfortable and luxurious travel experience. This sleeper edition of the Vande Bharat Express will feature 857 berths, with 823 reserved for passengers and 34 for staff members. Unlike the previous design, each coach will have three toilets, reducing congestion, and a mini pantry for passengers' convenience.

The prototype of the sleeper Vande Bharat Express is expected to be ready in December 2023, with the first train rolling out of the Integral Coach Factory (ICF) in Chennai by March 2024, according to Union Railway Minister Ashwini Vaishnaw. The design has undergone several changes, including structural modifications to enhance capacity.

Read more at

https://timesproperty.com/news/post...eeper-version-to-debut-in-march-2024-blid5749

---------------------------------------------------




Vande Bharat Dashboard: Unveiling The Sleeper-Edition Of Vande Bharat Express

As part of the continuous effort for transforming the experience of Indian Railways with the expansion of Vande Bharat Express — the network now has 33 operational routes running across several important cities and towns in the country.

Vande Bharat train now runs across 24 states/union territories (UTs), covering more than 12,000 km and connecting an extensive network of close to 160 stations.

Barring a few states where rail track electrification is going on and the UTs Diu, Puducherry, Lakshadweep, Andaman and Nicobar, all states and UTs are being catered to by Vande Bharat services.

The map depicts the comprehensive network of these trains, showcasing the remarkable growth of Vande Bharat.

…………………………………..

Read more at:
https://swarajyamag.com/infrastructure/vande-bharat-dashboard
 

Latest ads

Back
Top