எண்ணிக்கைகளைக் கண்டு மலைத்த,
எண்ணங்கள் பறந்தோடி விட்டன!
எண்ணங்களின் தாக்கமே, வெறும்
எண்களைவிட உயர்ந்தது, அறிந்தோம்!
நல்ல விஷயங்களை நவில்வதற்கு
நான்கு, ஐந்து பட்டங்கள் வேண்டாம்!
நல்ல மனமும், பிறர் துன்பங்களை
நன்கு உணரும் இதயமும் போதும்!.
கல்லில் கூட ஈரம் இருக்கும்;
சொல்லில் அது காணவில்லையே!
முள்ளில் கூட நார் உரிக்கலாம்!
உள்ளத்தில் அது முடியவில்லையே!
'நல்லவர்களுக்கு துன்பம் வரும்போது
நான் வருவேன்' என்றான் கண்ணன்.
சொன்ன சொல் தவறவில்லை அவன்.
சொன்னபடியே ஆவிர்பவிக்கின்றான்!
ஆவினம் மேய்ப்பவனாக வரவில்லை;
ஆவிர்பவித்து அவன் வருகின்றான்.
கொடுமைகளைச் சாடும் துணிவைக்
கொடுப்பவனே நமக்கு அவன் தானே!