# 371. காந்தாரி.
காந்தாரி நல்ல பதிவிரதை தான் ஐயமில்லை.
தன் கணவன் காணாத காட்சிகளைத் தானும் காண விரும்பாமல் காலம் எல்லாம் துணியால் கண்களைக்
கட்டிக் கொண்டு இருந்திருக்கிறாள்.
ஆனால் இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் அவள் அறிவாளியும் கூட.
"என் கண்களாக இருந்து கொண்டு நீ காண்பதை எல்லாம் எனக்குச் சொல்லு!" என்று கணவன் கேட்டிருந்தால் அவள் கதி....???
வாழ்நாள் முழுக்க ரன்னிங் கமெண்டரி கொடுப்பதிலேயே கழிந்திருக்கும்.
சஞ்சயன் பாடு தேவலை.
பாரதப் போர் நடந்த பதினெட்டு நாட்களுக்கு மட்டுமே ரன்னிங் கமெண்டரி செய்தார்.
இதையே extrapolate செய்தால்....
காது கேட்காதவரின் மனைவி
காதை plug செய்து கொள்ள வேண்டும்!
அவர் கத்துவதையும் கேட்க வேண்டாம்.
தான் கத்த வேண்டி இருப்பதையும் தான்!
வீட்டில் உள்ள பிற gadgets அலறுவதையும் கேட்க வேண்டாம். :
மூக்கு, நாக்கு, தொண்டைகளில் அவ்வளவு பிரச்சனைகள் வருவதிலையோ பிழைத்தோமோ!