• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 349. Why wear white at night!

அமாவசையன்று இரவில் வெள்ளை உடையில் சென்ற
ஒரு ஆசிரியரைப் பார்த்து ஜன்னி வந்துவிட்டது...... ஒருவருக்கு.

காரணம் அந்த ஆசிரியரின் நிறம் மை இருட்டு!

ஆடைகள் மட்டும் நடப்பது போலத் தோன்றி இருக்கிறது!
ஜன்னி வரை இந்தக் காரணம் போதாதா?

இரவில் வெள்ளை உடை அணிவது நல்லது தான்.
அது சிலசமயம் நம் உயிரையும் காக்கும்.

சிக்னலில் இறங்கி நடக்கச் சொல்லுவது,
லெவல் crossing இல் இறங்கி நடக்கச் சொல்லுவது
ரொம்பவும் பிடிக்கும் இவருக்கு! எத்தனை ரிஸ்க் அது!

அன்று சிக்னலில் இறங்கி நடந்து அடுத்த பக்கம்
போய் நிற்கச் சொன்னார் என்னிடம்.

தட தட வென்று யமஹா யமன் போல வந்தது.
தூக்கியடித்து எங்கோ போய் விழப் போகிறேன்!

முருகன் பெயரைச் சொன்னால் மோக்ஷம் கிடைக்கும்.
"முருகா! முருகா!" என்று ஜபம் செய்யத் தொடங்கினேன்.

அவ்வளவு அருகில் வந்து வண்டியை நிறுத்தினான்!
நான் நடந்து வந்ததை அவன் பார்த்து இருக்க முடியாது.

அங்கே அவ்வளவு விரைவாக வரவேண்டிய அவசியம்?

அன்று நான் உடுத்தி இருந்தது வெள்ளை நிற ஆடைகள்
அவையே அன்று என் உயிரைக் காத்தன போலும்.
 
# 350. மறக்க முடியாத ஆன்ட்டீ !

அவர்கள் கிரௌண்ட் ஃப்ளோரில் குடி இருந்தனர்.
அந்த ஆன்ட்டீ தன் மகன்களுடன் தங்கி இருந்தார்.

அவர் பெரிய மகனின் பெண் வயதிலேயே அவருக்கும் ஒரு மகன். அவன் என் மகன்களின் நல்ல நண்பன்.

இவர்களோடு இருப்பான். எங்கள் வீட்டிலே சாப்பிடுவான்.
வேறுபாடு பார்ப்பதில்லை.

அந்த ஆன்ட்டீயின் வயிற்றில் ஒரு நீர்க்கட்டி.

அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வளரத் தொடங்கியது. எவ்வளவு பாரமாக இருந்ததோ?
எவ்வளவு வலித்ததோ தெரியாது. பாவம்!

ஒரு நாள் ஒரு தடவை கூட அலுத்துக் கொண்டதோ
சலித்துக் கொண்டது கிடையாது அதைப் பற்றி.

நடன நிகழ்சிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். என் மாணவிகளின் நடன நிகழ்ச்சி என்றால் அதைத் தவறவிடவே மாட்டார்.

முதல் வரிசையில் அமர்ந்து பார்த்து மகிழ்வார்.

எத்தனையோ பிரச்சனைகள், நோய்கள், வலிகள் வந்தாலும், அதைப் பொறுத்துக் கொள்ளும் அவரது மனோபாவமும், மனோ பலமும் என்னால் என்றுமே மறக்க முடியாது!
 
# 351. "நீயே செக் பண்ணு!"

என் நண்பியின் மாமியார் எது வாங்கினாலும்,
"நீயே செக் பண்ணு!" என்ற அவளிடம் கூறுவார்.

"போணி பண்ணுங்க!" என்று
என்னிடம் சிலர் வருவது உண்டு

வாங்காவிட்டால் விடவே மாட்டார்கள். அதுவும் அவர்கள் சொல்லும் விலைக்கே வாங்க வேண்டும்.

அது ஒரு வகை அன்புத் தொல்லை.
இதுவும் அதோ போன்ற ஒரு அன்புத் தொல்லை
என்றே நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.

மாமியாருக்கு மாட்டுப் பெண்ணிடம் இவ்வளவு அபிமானமா? அன்று காஸ் ஸ்டவ் ரிப்பேர் ஆகி வந்தது.

வழக்கம் போல "நீயே செக் பண்ணு!" என்றார் மாமியார்.

"நீங்களும் செக் பண்ணலாமே மாமி.
அவளே தான் எல்லாம் செய்ய வேண்டுமா?" கேட்டேன்

உடனே உண்மையான பதில் வந்தது!
"ஹும்! அது வெடிச்சு நான் செத்து போனேன்னா??"

என்ன தாராளம்! எவரோ பெற்ற இளம் வயது மகள் போகலாமாம்!
இந்தக் கிழம் மட்டும் சாஸ்வதமாக என்றும் இருக்க வேண்டுமாம்!

"நீயே பண்ணு!" என்று எப்போதும் முன்னுரிமை அளிப்பது
தன்னைக் காத்துக் கொள்ளவே என்று அறியுங்கள் பெண்களே!

கொள்ளிக் கண் குள்ளிக் கிழவிகளிடம் இருந்து - பத்தடி
தள்ளி இருப்பது கள்ளமற்ற பெண்களுக்கு நலம் தரும்!
 
# 352. சிக்கன் குனியா.

சரியான (தவறான???) சமயத்தில் வந்தது
சிக்கன் குனியா எங்கள் இருவருக்கும்.

இளைய மகனின் கல்யாணம் நெருங்குகையில்
கல்யாண வேலைகளை பாதிப்பதற்கென்று!

முதலில் இவருக்கு திடீரென வந்தது.
சில மணி நேரம் கழித்து திடீரென எனக்கு.

உடலைப் பிழிவது போல ஒரு செமை வலி. பிழிந்தால் ஜூஸ் போல வலி வழிந்திருக்குமோ என்னவோ?

ஒரு வேலையும் செய்ய முடியவில்லை.
பற்பசையைக் கூட பிதுக்க முடியவில்லை.

சமய சஞ்சீவியாக அக்கா வந்து தங்கி உதவினார்.

இல்லை என்றால் வீடும், நாங்களும் என்ன ஆகி இருப்போமோ?

பிறகு குடும்பவாத்தியார் நலம் விசாரித்தார்.

அவர் சொன்னார், "நீங்கள் எவ்வளவோ தேவலை.
அங்கே ஒரு மாமி கையைக் கூட இறக்க முடியாமல்
ரொம்பவும் கஷ்டப் படுகிறார் பாவம்!"

நான் கேட்டேன், "மாமியுடன் யார் யார் இருக்கிறார்கள்?"
"மொத்தப் பரிவாரமும், மாட்டுப்பெண் உட்பட!" என

"அவர் கை என்றைக்குமே கீழே வராது!
அதற்கு அவசியமும் இராது!" என்றேன்.

வேலை செய்ய மாட்டுப் பெண் இருந்தால்
வாழ்நாள் முழுவது சிக்கன் குனியாவைப் பற்றி
வாய் கிழியப் பேசியே காலத்தைக் கழித்துவிடலாமே!

வேலை செய்யவும் சொல்லமாட்டார்கள்.
வேலை செய்யவேண்டும் என்று யாரும்
எதிர்பார்க்கவும் மாட்டார்கள்!

ஹாய்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

"kOdalu raagaanE mancham ekkindhi" =

"மாட்டுப் பெண் வந்தவுடனேயே
படுத்த படுக்கை ஆகிவிட்டாள்!"

இப்போது புரிகிறதா எப்போது தப்பாமல்
மாட்டுப் பெண் = மாட்டிய பெண் என்று
நான் ஏன் சொல்கின்றேன் என்று?
 
# 353. உபவாசம் ? !

உபவாசம் என்றால் உண்மையில் என்ன???

இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங் கருதிச் செய்யும் சாதனை.

விரதம் என்னும் சொல் 'உண்ணும் உணவை சுருக்குதல்'
அல்லது 'உணவை விடுத்தல்' என பொருள்படும்.

உபவாசம், நோன்பு என்பன தொடர்புடைய சொற்களாகும்.

உபவாசம் என்னும் சொல் 'இறைவனின் அருகே வசித்தல்' என்ற அழகிய பொருளைத் தரும்.

" மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு,
உணவை விடுத்தெனுஞ் சுருக்கியேனும்
மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும்
கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்."
(ஆறுமுக நாவலர்)

எனக்குத் தெரிந்த சிலர் நன்றாக உண்பதே
உபவாசத்தின்போது மட்டும் தான்!

அடுக்கு நிறைய வெல்லம் போட்ட, பால் விட்ட, பருப்புக் கஞ்சி. அடுக்கடுக்காக வெல்ல தோசைகள்!

ஒரு மாதத்துக்குத் தாக்குப் பிடிக்கும்
அன்று ஒரு நாள் அவர்கள் உண்பது.

இதன் பெயர் உபவாசமா?
 
# 354. நாகுலசதுர்த்தி.

ஆந்திராவில் மிகவும் பிரசித்தம் நகுல சதுர்த்தி.

முட்டை, பால், மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களுடன்
பெண்கள் தேடிச் செல்வர் பாம்புப் புற்றுகளை.

எத்தனையோ முறை அழைத்தும் நான் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டேன்!
நம் தெய்வங்கள் அனைவரிடமும் உள்ளன நாகங்கள்.

விநாயகரின் இடுப்பில் கச்சையாக,
முருகனின் மயில் கால்களில் வளையமாக,

சிவன் கழுத்தில் அழகிய மாலையாக,
விஷ்ணுவின் முதல் முதல் ஃபோம் படுக்கையாக!

இத்தனையையும் விடுத்துப் புற்றைத் தேடித் போவானேன்?

அந்தப் பெண்களிடம் தான் என்ன மன உறுதி.
வருடம் தவறாமல் சென்று வழிபடுவார்கள்.

விரதம் இருப்பார்கள், மயங்கி விழுவார்கள்.
ஆனால் பூஜை செய்வதை நிறுத்த மாட்டார்கள்.
 
When does the S.I.L of a S.I.L becomes very useful / resourceful?

When we disregard the advice of the family doctor and want to have a scan costing 10K done just for the fun of it , the S.I.L of a S.I.L can really help us!

We can 'go round the bend' and have the life's ambition of a 10K investigation done!
 
But that is not the end of the story!
If ( as predicted by the family doctor) nothing is wrong with the scan, the next project is launched.
This will go on until something shows up as wrong even though there is nothing really wrong!
Thes hyperactive and hyper imaginative persons have a hyper name called hypochondriac!
 
# 355. சிவராத்திரி.

சிவராத்திரி கண் விழித்தால் மட்டும் போதாது.
அடுத்த நாள் ராத்திரி வரை தூங்கக் கூடாது.

ஆந்திராவில் கடைப் பிடிப்பார்கள் இதை.
அன்று பகல் பட்டினியுடன் சென்று பெரிய Q வில்நின்று
மயங்கி விழுந்து, எழுந்து, பூஜை செய்து, இராக் கண் விழித்து ...

அன்று விடிய விடிய திரைப் படங்கள்.
எல்லாம் கடவுள்களை பற்றியவை தாம்.

அவர்கள் எல்லோரும் கண் விழித்துப் பார்ப்பார்கள்.
அடுத்த நாள் எப்போதும் போல ஆபீஸ் செல்வார்கள்.

இது என்ன பெரிய அதிசயம்?
அவர்கள் கல்யாண முஹூர்த்தமே நள்ளிரவில் தானே!

சாந்தி முஹூர்த்தத்துக்கு திருமண ஜோடி
அடுத்த நாள் இரவு வரை காத்திருப்பர்களா???

தெரிந்தவர்கள் சொல்லலாமே! :welcome:
 
# 356. ஒரு விரதம் = Rs 5000 /- ?

அவர் உடல் ஒரு சர்க்கரை தொழிற்சாலை.

மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் நாள் தவறாமல்.
அதற்கு முன்பு உணவு உண்ண வேண்டும் வேளை தவறாமல்.

எல்லாம் தெரிந்திருந்தும் குருவாயூர் ஏகாதசி உபவாசம்.
துவாதசி பாரணையும் செய்ய வில்லை.

பலன்.... அரை மயக்கம்!

ஆம்புலன்ஸ் வந்தால் ஏற மறுக்கிறார்!
ஆம்புலன்ஸ் சென்ற பிறகு மறுபடி வரச் சொல்கிறார்.

ஒரு வழியாக நர்சிங்ஹோமில் சேர்த்தினார்கள்.

மூன்று பாட்டில் க்ளுகோசு ஏற்றிவிட்டு அடுத்தநாள் discharge செய்தனர். பில் ஐயாயிரம் ரூபாய் பழுத்தது.

நான் சொன்னேன் அவரிடம்,

"விரதத்துக்குப் பதிலாக இந்தத் தொகையை
குருவாயூர் உண்டியில் போட்டிருந்தால்
எத்தனை நல்ல காரியங்களுக்குப் பயன்படும்!"

ஒரு விரதம் = ரூபாய் ஐயாயிரம்!!!

God is a 'chith chOr' = One who steals our chiththam!

He wants our mind not our vrthams ( when they are forbidden)!

Our pure mind is the fresh butter he loves to eat and relish.

Give HIm your unified and focused mind and He will give you

everything you need - even without being asked for them!
 
How do I this to be true?
It is because Krishna Himself says so!

Chapter 9: The Most Confidential Knowledge
TEXT 22
ananyas cintayanto mam
ye janah paryupasate
tesam nityabhiyuktanam
yoga-ksemam vahamy aham
SYNONYMS
ananyah—no other; cintayantah—concentrating; mam—unto Me; ye—who; janah—persons; paryupasate—properly worship; tesam—their; nitya—always abhiyuktanam—fixed in devotion; yoga-ksemam—requirements; vahami—carry; aham—I.
TRANSLATION
But those who worship Me with devotion, meditating on My transcendental form-to them I carry what they lack and preserve what they have.
 
# 357. ஒரு உண்மைக் கதை.

அவர் பெயர் வித்தியாசமாகத் தோன்றியது
அதன் பின்புலக் கதை நிச்சயம் வித்தியாசமானது.

அவர் அன்னை பூரண கர்பிணி. கர்ப்பத்தில் இருந்தது சாக்ஷாத் நம் கதையின் ஹீரோவே தான்.

அன்று உறங்கும் அவர் தந்தைக்கும், அன்னைக்கும் இடையே படுத்துக் குஷாலாக உறங்கியதாம் ஒரு பெரிய நாகம்!

அடுத்தநாள் எந்தத் தீங்கும் செய்யாமல் அது சென்ற போது அதைப் பார்த்த அவர்கள் அதை வணங்கி வழிபட்டனர்.

அதன் நன்றிக்கு அடையாளமாக அவர்கள்
அவருக்குப் இட்ட பெயர் நாகராஜன்!

பாம்புகள் cold blooded animals அல்லவா???

அதன் குளிர்ச்சியும், இவர்களின் சூடும்
ஒருவர் மற்றவருக்குத் தேவைப்பட்டதா?

பயத்தில் அந்தப் பெண்ணின் கர்ப்பம்
எப்படிக் கலங்காமல் இருந்தது???

கேட்கும் எனக்கே மயிர்க்கூச்செறிந்தது!!!
 
# 358. பூச்சி பொட்டு

பெண்களுக்குத் தொல்லைகள் பல வடிவத்தில் வரும்.

ஆண்கள் செய்யும் சிலவற்றை பெண்களால் செய்ய முடியாது என்பது உண்மையே.

அதன் பலன் அவர்களுக்கு வராத சில,பல பிரச்சனைகள்
பெண்களுக்கு வருவது உண்மை.

வருடம் தவறாமல் செல்வோம் பிக்னிக் விசாகாவில்!
அந்தமுறை ஏதோ காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்தோம்.

குட்டி பயல்களும், பெண்களும் சிறு நீர் பாய்ச்ச
வேறு வேறு மரங்களை நாடினார்கள்.

ஒரு பெண் அங்கே கீழே அமர்ந்தபோது
ஏதோ பூச்சி, பொட்டு கடித்து விட்டது அவளை.

அதன் பின் அவள் முகமே மாறிவிட்டது!
உதடுகள் சாம்பல் நிறம் அடைந்தன.

தோலில் திட்டுத் திட்டாக வெள்ளை நிறம்.
தலை முடி கூட விநோதமாக மாறியது.

என்ன கடித்தது, எங்கு கடித்தது என்றும் தெரியவில்லை.
அதற்குச் செய்த சிகிச்சையும் பலன் தரவில்லை.

அந்து குட்டிப்பெண்ணின் வாழ்கையே மாறிப் போயிற்று!!
எந்தப் பயலுக்காவது இது போல நடக்குமா?!!

Boys/ men can pass urine (standing) from a safe distance from the ground but girls / women have to take the risk by squatting while urinating! How much time does is needed by her to get bitten thus?
 
Why do schemers win every time?

They plan their moves long before the action becomes due.
They prepare the ground and loyal supporters over the years using SAma, dhAna, bEdha, dhaNdam techniques.

Small wonder the win every time unless....
God plans and plays an O' Henry U Turn!!!
 
# 359. பாரதியின் பாட்டு ஏன்???

பாரதியின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்
எங்கள் விசாகா தமிழ் சங்கத்தில்.

அந்த ஆண்டு பாரதியின் பாட்டு ஒன்றை
எல்லோரும் சேர்ந்து பாட முடிவு செய்தோம்.

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்"
என்ற பாடல் மிகவும் கம்பீரமாக இருக்கும்.
பொருளும் மிக அழகாக இருக்கும்.
அதை தேர்வு செய்து practice!

அப்போது ஒருவருக்கு உதித்தது
ஒரு பிரமாண்டமான மூளை அலை(brainwave)

"எதற்குக் கஷ்டப் பட்டு நாம் பாடவேண்டும்?
இதே ரெகார்டையே போட்டுவிடலாமே?"
என்றாரே பார்க்க வேண்டும்!!!

Enjoy this powerful song in the sweet voice of Smt. M.S.S!


Attachments area
Preview YouTube video Nenjukku Neethi
 
அன்றும் இன்றும்....

# 360. தள்ளாத வயதில் சூரிதாரா?

பின்னால் இருந்து பார்த்தால் பயங்கர ஸ்டைல்!
pony tail , சுடிதார், காற்றில் பறக்கும் துப்பட்டா!

ஆனால் மாமி நடக்க எதற்கு கஷ்டப் பட்டாள்?
முன்புறம் பார்த்ததும் விடை தெரிந்தது.

அன்று வியந்தேன் அந்த மாமிக்கு அந்த வயதில்
சுரிதார் அணிய தாளாத ஆசையா என்று!

இன்று உணர்ந்து கொண்டேன் அந்தத் தள்ளாத வயதில்
தள்ளாடும் நடையில் சுரிதார் அணிவது உதவும் என்று!

இன்று 'சாரி - சூரி'யில் ன்னைப் பார்த்து எத்தனை பேர்கள்
அன்று நான் நினைத்ததைப் போல எண்ணுகின்றார்களோ?

சும்மாவா சொன்னார்கள் "தலைவலியும் திருகு வலியும்
தனக்கு வந்தால் தான் தெரியும்" என்று!

விறலுக்கு ஏற்ற வீக்கம் ;
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை;

வலிக்கேற்ற வேஷ, பூஷணங்கள்;
யாரிடம் அனுமதி பெற வேண்டுமாம்?

ஆனாலும் ஒன்று அதுவும் நன்று கூறுவேன்!
அணியும் துணியின் நிறமும் ப்ரின்ட்டும்

நம் நிறத்துக்கும், நம் உருவத்துக்கும்,
நம் பருவத்துக்கும், நம் பருமனுக்கும்

நன்கு பொருந்துவதாக இருந்தால்
பார்ப்பவர்களின் கண்களை உறுத்தாது!

உதாரணம் வேண்டுமா?

மார்கழி மஹோத்ஸவத்தில் சூரிதார் அணிந்து வந்துள்ள
பேரிளம் பெண்களை ஒரு நோட்டம் விடுங்கள்!

( நேரில் அல்ல.... youtube ஒளிபரப்பில்!)
(( தர்மஅடி வாங்க நான் வழி சொல்லுவேனோ? ))
 
I am becoming more and more efficient w.r.to stitching.
Now I am able to stitch two tops (looking very different from each other) to go with the same pyjama and duppatta.
So when I mix and match they become like two dresses from each sari!
Stitching has been very productive and satisfactory this time.
The tough ones are reserved for later.
Two more sari-churis and two silk blouses with lining!!!
How much have I saved in the material and tailoring fees?
I do not know since I never engaged a tailor!
But in all probability I have saved enough for something I have wanted for many years!
Money saved = Money earned! :)
Money earned = Money spent !!! :)
 
Money saved by hard work = Money earned by oneself! :)

Money earned by oneself = Money to be spent on oneself!

Now the meaning is more clear (I hope!)

How else can one realize long cherished dreams?
 
# 361. வைரங்கள் !!!

வைரங்களும் மாமிகளும் இணை பிரியாதவர்கள்.
மாமிகள் மாமியார்கள் ஆகும்போது சுவை இன்னும் கூடும்!

ஒரு பாட்டி தன் பேரனின் கண் நிறைந்த மனைவியை
வரவேற்றாள் ஒரு மிளகு சைஸ் வைர மோதிரம் அணிவித்து!

ஒரு மாமி தன் மருமகளுக்கு அளித்தார் வைர பேசரி.
அவர் மாமியார் அவருக்குத் தந்ததோ தெரியவில்லை!

ஒரு மாமி தன் அருமை மருமகளை வரவேற்றாள்
வைர ஊசிப் பட்டுப் புடவையை அன்புடன் அளித்து!

இது எதுவுமே இல்லாத மாமியாருக்கும் ஆவல்;
தானும் ஏதாவது வைரம் அளிக்கவேண்டும் என்று.

அவர் பங்குக்கு அவர் தந்தது மறக்கவே முடியாத
வைர ஊசி வார்த்தைகளும், உவமைகளும்.

வைர ஊசி வார்த்தைகளும் நன்மையே செய்தன!
வைரம் பாய்ந்த உள்ளத்தைத் தந்து உதவின!!

எந்த ரூபத்தில் இருந்தால் என்ன???
வைரம் வைரம் தான் அல்லவா!!!
 
பழமும் கிழமும் கொண்டுள்ள தொடர்பு!

காய் கனிந்து பழம் ஆகிறது.
மனிதன் பழுத்துக் கிழம் ஆகிறான்.

இதில் தவறு ஒன்றும் இல்லை.

பழுத்த காய் = பழம்
பழுத்த மனிதன் = கிழம்

அவன் a pain-in-the-neck ஆக இருந்தால்
அவன் ஒரு நிஜமான "கிழம்".
 
# 362. சுத்த வீரன் aka மறத் தமிழன் (மடத் தமிழன்??)

அவருக்குத் தோட்டக் கலை பிடிக்கும்.
அந்தத் துறையிலேயே வேலையும் கிடைத்தது.

கொஞ்சம் திக்குவார் பேசும் போது.
அதனால் பேச அவசியம் இல்லாத வேலை

செடி கொடிகளிடம் பேச வேண்டாமே !
அவருக்கு double ஓ.கே.

ஒருநாள் ஒரு பாம்பு கடித்து விட்டது.
கடித்து விட்டு ஓடியும் போயிற்று.

யாராக இருந்தாலுமே முதல் உதவிக்கு முயற்சிப்பார்கள்.
இந்த சுத்த வீரர் செய்தது என்ன தெரியுமா ?

கடிவாயில் வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல்.
பாம்பைத் துரத்திக் கொண்டு ஓடினாராம்.

அது என்ன பாம்பு என்று தெரிய வேண்டுமே!
அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

அதனால் காலை நீட்டி அதன் வாலை மிதித்தார்.
அது தலையை உயர்த்தி வளைந்து மீண்டும் கொத்தியது.

சந்தேகம் இல்லாமல் நாகப் பம்பு தான்.
இப்போது அவருக்குப் பரம சந்தோஷம்.

சரியான antidote கிடைக்குமே!
ஆனால் அதற்குள் விஷம் பரவத் தொடங்கியது.

உயிர் பிழைத்தார் ஆனால் வலது கால் ரத்தக் களரி ஆனது. சர்க்கரை நோய் இருந்ததால் விரைவில் குணமாகவில்லை.

எத்தனையோ மாதங்கள் ரெகுலராக புண்ணுக்கு
daily dressing செய்யவேண்டி இருந்தது.

ஆறு மாதங்களுக்குப் பின் கால்புண் ஆறியது.

Sugar பிரச்சனை இருப்பவர்கள் இதுபோல
சூப்பர் ஸ்டார் stunt எல்லாம் செய்யலாமோ???
 
Can these two girl be the vision of Bharathiyar when he sang chinnanj chiru kiLiyE?

So modest, so classic, so lovely and so very sweet!!!


Attachments area
Preview YouTube video Chinnanchiru Kiliye - Mahakavi Subramanya Bharati - S Aishwarya and S Saundarya
 
I can imagine my two cute grand nieces becoming two talented singers like these two girls in a few more years! :)


Attachments area
Preview YouTube video Krishna Nee Begane - S.Aishwarya & S.Saundarya - Yaman Kalyani
 

Latest ads

Back
Top