உபவாசம் என்று அரைப்பட்டினி அல்லது
முழுப்பட்டினியுடன் பூஜை செய்பவர்களுக்கு;
காலை எழுந்தவுடன் காபி டிபன் இத்யாதி,
இடையிடையே பிரசாதம் கொறிப்பதற்கு,
நடு நடுவே தாகசாந்திக்குத் சில திரவங்கள்,
மதியம் தலை வாழை இலையில் உணவு,
இரவு புரோட்டா, குருமா சாஹிதம் உணவு,
விந்தையாக இருப்பதில் என்ன விந்தை ???
"அர்ச்சனைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"
என்று கேட்டால் அர்ச்சனை நடக்கும் நமக்கும்!