காலையுணவு முடிந்ததும்
களைப்புத் தீர ஓய்வு வீட்டில்! :couch2:
(ஆணி அடித்தாற்போல
அங்கேயே இருப்பதாக
அளந்தது இதற்குத் தானா?)
"சாப்பாடு போடுகிறார்களா?" :ear:
சிறார்களிடம் அடிக்கடி விசாரிப்பு ....
வீட்டிலிருந்து வெளியில் வராமலேயே.
(பந்திக்கு முந்து என்று சொல்வார்களே!
முத்தோர் வார்த்தை அமிர்தம் அல்லவா?)
பிறகு ஒரு குட்டித் தூக்கம் ஹாயாகப்
போட்டு விட்டுப் போனால் கிடைக்கும்
சூடான புரோட்டா, குருமா இத்யாதிகள்.
வாழ்க்கையில் ஒருமுறை கூட இவர்கள்
ஆயிரம் நாமங்களைப் படிக்காததும் நன்றே.
அல்லது தேவியே மது பிரியா, மாம்சப் பிரியா,
காமகேலி தரங்கிதா என்று அவற்றுக்கும் :scared:
ஏற்பாடு செய்திருப்பார்கள் விஸ்தாரமாக
தினமும் படிப்பவர்களே லஞ்சா என்னும் போது!