Resurrection

Status
Not open for further replies.

shridisai

You Are That!
[h=3]Resurrection [/h]


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
இந்த ஆலயத்தை இடிப்பேன்,மூன்றாம்நாள் எழுப்புவேன்
என்று சொன்ன இயேசு கிறிஸ்து, தான் சொல்லியபடியே
மூன்றாம்நாள் கல்லறையில் இருந்து மீண்டும் உயிர்த்தெயுந்து
வந்தார். திருமூலரும் தம் திருமந்திரத்தில்
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே
என்று பாடிஉள்ளார் . அதாவது இப்பூவுலகில் எவர் ஒருவர் தம் தவவலிமையால்
அவர்தம் ஊன் உடம்பை ஆலயமாகவும் , உள்ளே பெரும் கோயிலாகவும் மாற்றி தெள்ளத் தெளிந்த தகுதியில் தம் ஜீவனையே சிவலிங்கமாகவும் ஆக்கும் ஆற்றல் படைத்தவரோ அவரே கூற்றுவனையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவராவர். அவரின் ஐம்புலன்களும் மாணிக்கவிளக்காய் ஒளிரத்தொடுங்கும். அத்தகைய நோற்றலின் ஆற்றல் தலைப்படாதவற்கு கூற்றுவனை எதிர்கொள்ளும் ஆற்றல் இன்றி பிறவிப் பெருங்கடலை நீந்தமுடியமால் கடலில் அகப்பட்ட கட்டை போல் தத்தளித்து கொண்டே இருப்பார்கள்.

சாய்ராம்
 
Status
Not open for further replies.
Back
Top