• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

த3ச’கம் 100 ( 1 to 5)​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

அக்3ரே பச்’யாமி தேஜோ நிபி3ட3தர
கலாயாவலி லோப4நீயம்
பீயூஷாப்லவிதோஹம் தத3னு தது3த3ரே
தி3வ்ய கைசோ’ர வேஷம் |
தாருண்யாரம்ப4 ரம்யம் பரமஸுக
ரஸாஸ்வாத் ரோமாஞ்சிதாங்கை3:
ஆவீதம் நாரதா3த்4யை விலஸத்3
உபநிஷத் ஸுந்த3ரி மண்ட3லைச்’ச|| ( 100 – 1)


நான் மிகவும் நெருக்கமான காசாம்பூக் கூட்டம் போன்ற அழகான ஒரு தேஜசை என் எதிரில் பார்க்கிறேன். அதனால் நான் அமிர்தத்தில் மூழ்கடிக்கப் பட்டவன் போல ஆகிறேன். அதன் பின் அதன் நடுவில் தெய்வத் தன்மையோடு கூடினதாகவும், யௌவன வயதின் ஆரம்பத்தில் இருப்பதால் மிக அழகானதாகவும் உள்ள, ஒரு குழந்தையின் வடிவைக் காண்கிறேன். பரமானந்த ரசத்தை அனுபவித்து, மயிர்க் கூச்சடைந்த அவயவங்களை உடைய, நாரதர் முதலானவர்களும், சோபிக்கின்ற உபநிஷத்துகள் ஆகிய சுந்தரிகளின் சமூஹங்களும் அதனைச் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறேன்.( 100 – 1)
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

நீலாப4ம் குஞ்சிதாக்3ரம் க4னமமலதரம்
ஸம்யதம் சாரு ப4ங்க்3யா
ரத்னோத்தம் ஸாபி4ராமம் வலயித
முத3யச் சந்த்3ரகை: பிஞ்ச2 ஜாலை: |
மந்தார ஸ்ரங்நிவீதம் தவ
ப்ருது2கபரீபா4ரமாலோகயேஹம்
ஸ்நிக்3த4 ஸ்வேதோர்த்4வ புண்ட்3ராமபி
ச ஸுலலிதாம் பா2ல பா3லேந்து3வீதீ2ம் || ( 100 – 2)


நீலநிறம் உடையதும், நுனியில் வளைந்ததும், அடர்ந்ததும், சுத்தமானதும், அழகான மடிப்புடன் கட்டப்பட்டதும், ரத்தின மயமான நகைகளால் அழகடைந்ததும், விளங்கும் மயில் கண்களால் அழகு பெற்ற மயில் தோகைகளின் வரிசைகளால் சுற்றப்பட்டதும், மந்தார மாலையால் சுற்றப் பட்டதும் ஆகிய தங்களுடைய தலை ரோம பாரத்தையும்; பளபளப்புள்ள, வெண்மையான, ஊர்த்துவ புண்ட்ரத்தையும்; அழகான இளஞ் சந்திரனைப் போன்ற நெற்றித் தடத்தையும்; நான் பார்க்கிறேன். (100 - 2 )
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

ஹ்ருத்3யம் பூர்ணானு கம்பார்ணவ
ம்ருது3லஹரி சஞ்சல ப்4ரூவிலாசை:
ஆநீல ஸ்நிக்3த4 பக்ஷ்மாவலி
பரிலஸிதம் நேத்ர யுக்3மம் விபோ4 தே|
ஸாந்த்3ரச்சாயம் விசா’லாருண
கமலத3லாகர மாமுக்3த4 தாரம்
காருண்யா லோகலீலா சி’சி’ரித
பு4வனம் க்ஷிப்யதாம் மய்யநாதே2 || ( 100 – 3)


ஹே பிரபுவே! நிறைந்த கருணைக் கடலின் மெதுவான பிரவாஹத்தாலும், சலிக்கின்ற புருவங்களின் லீலைகளாலும், மனோஹரமனதும்; மிகவும் கருத்த, பளபளப்பான, இமைமயிர்க் கூட்டத்துடன் விளங்குவதும்; அடர்ந்த, காந்தியையுடைய, அகன்று, சிவந்து, தாமரை இதழ் போன்ற வடிவம் உடையதும்; மிகவும் மனோஹரமான கருவிழிகளை உடையதும்; கருணை கூர்ந்த பார்வையின் லீலையால் உலகங்களைக் குளிர்விப்பதும்; ஆகிய தங்களுடைய இரண்டு கண்களும் அனாதை போன்ற என் மேல் செலுத்தப்பட வேண்டும். ( 100 – 3)
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

உத்துங்கோ3ல்லாஸி நாஸம் ஹரிமணி
முகுர ப்ரோல்லஸத்3 க3ண்ட3பாலீ
வ்யாலோலத்கர்ண பாசா’ஞ்சித
மகரமணி குண்டல த்3வந்த்3வ தீப்ரம் |
உன்மீலத்3 த3ந்த பங்க்தி ஸ்புரத3ருணதரச்
சாய பி3ம்பா3த4ராந்த:
ப்ரீதி ப்ரஸ்யந்தி3 மந்த3ஸ்மித மது4ரதரம்
வக்த்ரமுத்3 பா4ஸதாம் மே || ( 100 – 4)


உயர்ந்து பிரகாசிக்கின்ற மூக்கை உடையதும்; இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடிபோல விளங்குகின்ற கன்னப் பிரதேசங்களில், அசைகின்ற காதுகளில் தரிக்கப்பட்ட ரத்ன மயமான மகர குண்டலங்களால் பிரகாசிக்கின்றதும்; அழகிய பல் வரிசைகளை உடையதும்; மிகச் சிவந்த நிறமுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளின் மத்தியில் பிரீதியைப் பெருக்குகின்ற புன்னகையால் மிகவும் மதுரமானதும்; ஆகிய தங்கள் திருமுகம் எனக்கு நன்கு பிரகாசிக்க வேண்டும். (100-4)
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

பா3ஹு த்3வந்த்3வேன ரத்னோஜ்ஜ்வல
வலயப்4ருதா சோண பாணி ப்ரவாலேன்
உபாத்தம் வேணு நாலீம் ப்ரஸ்ருத
நக2மயூகா2ங்கு3லீ ஸங்க3 ஸார
க்ருத்வா வக்த்ராரவிந்தே3 ஸுமது4ர விகஸத்3
த்3ராகமுத்3பா4வ்யமானை:
ச’ப்த3 ப்ரஹ்மாம்ருதைஸ்த்வம் சி’சி’ரித பு4வனை:
ஸிஞ்ச மே கர்ண வீதீம்|| (100- 5)


ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற வளையல்களை தரித்த; சிவந்த தளிர் போன்ற உள்ளங்கைகளை உடைய; இரண்டு கைகளால் எடுக்கப்பட்டு, எங்கும் பரவிடும் நகங்களின் காந்தியை உடைய விரல்களின் சேர்க்கையால் சித்திர வர்ணம் உடைய புல்லாங்குழலைத் தாமரைத் திருமுகத்தில் வைத்துக் கொண்டு; இனிமையான ராகங்களால் உலகங்களைக் குளிர்விக்கின்ற நாதபிரம்மம் ஆகிய அமிர்தத்தால் என் காதுகள் ஆகிய வீதிகளைத் தாங்கள் நனைக்கவேண்டும். (100-5 )
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

உத்ஸர்பத் கௌஸ்துப4 ஸ்ரீததிபி4ரருணிதம்
கோமலம் கண்ட2 தே3ச’ம்
வக்ஷ: ஸ்ரீ வத்ஸரம்யம் தரலதர
ஸமுத்3 தீ3ப்ர ஹார ப்ரதானம்|
நானவர்ண ப்ரஸூனாவலி கிஸலயிநீம்
வன்யமலாம் விலோல
லோலம்பா3ம் லம்ப3 மானா முரஸி
தவ ததா2 பா4வயே ரத்னமாலாம் || ( 100- 6)


உயரக் கிளம்புகின்ற கௌஸ்துப மணியின் காந்தி சமூஹங்களால் சிவந்த, மிக அழகான கழுத்தையும்; ஸ்ரீ வத்ஸம் என்ற மருவால் மனோஹரம் ஆன, சலிக்கின்ற பிரகாசிக்கின்ற முத்து மாலைகளை உடைய மார்பையும்; பல நிறங்களையுடைய புஷ்ப சமூஹங்களையும், தளிர்களையும் உடையதும், அங்கும் இங்கும் சுற்றித் திரியும் வண்டுகளை உடையதும் ஆகிய வனமாலையையும், அவ்விதமே தங்கள் மார்பில் தொங்குகின்ற ரத்தின மாலையையும் நான் தியானிக்கிறேன். (100 - 6 )
 

த3ச’கம் 100​


கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

அங்கே3 பஞ்சாங்க3ராகை 3: அதிச’ய
விகஸத் சௌரபா4 க்ருஷ்ட லோகம்
லீனானேக த்ரிலோகீ விததிமபி
க்ருசா’ம் பி3ப்4ரதம்மத்3ய வல்லீம் |
ச’க்ராச்’மன்யஸ்த தப்தோஜ்ஜ்வல
கனகநிப4ம் பீத சேலம் த3தா4னம்
த்4யாயாமோ தீப்தரச்’மி ஸ்புட மணிரச’னா
கிங்கிணீ மண்டி3தம் த்வாம் || ( 100 – 7 )


சரீரத்தில் உள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்கள் அதிசயமாக எங்கும் பரப்புகின்ற வாசனையால் ஜனங்களைத் தன்னிடத்தில் ஆகர்ஷிப்பவரும்; அனேக பிரம்மாண்ட சமூகங்கள் தன்னிடத்தில் லயித்திருந்த போதிலும் மிகவும் மெல்லிய இடையை உடையவரும்; இந்திர நீல கல்லில் வைக்கப்பட்ட, உருக்கப் பட்ட, ஜொலிக்கிற தங்கத்தைப் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; பிரகாசிக்கின்ற கிரணங்களால் தெளிவாகத் தெரியும் ரத்தினங்களை உடைய அரைநாணின் கிண்கிணிகளால் அலங்கரிக்கப் பட்டவரும் ஆகிய தங்களைத் தியானிக்கிறேன். ( 100 – 7 )
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

ஊரூ சாரூ தவோரூ க4னமஸ்ருணா ருசௌ
சித்தசோரௌ ராமாயா:
விச்’வ க்ஷோப4ம் விசங்க்ய த்4ருவமணி ச’முபௌ4
பீத சேலா வ்ருதாங்கௌ3 |
ஆனம்ராணாம் புரஸ்தான்னயஸன்
த்3ருத ஸமஸ்தார்த்த2 பாலி ஸமுத்3க3
ச்சா2யம் ஜானுத்3வயஞ்ச க்ரம ப்ருது2ல
மனோக்ஞே சஜங்கே4 நிஷேவே|| ( 100 – 8 )


மனோஹரமான, பெருத்த, அடர்ந்த, மினுப்பான, காந்தியை உடைய, லக்ஷ்மி தேவியின் மனத்தைக் கவர்ந்த, (அவைகளைக் காணும்) ஜனங்களுக்குக் கலக்கம் உண்டாகுமோ என்று அஞ்சி எப்போதும் மஞ்சள் பட்டாடையால் மறைக்கப்பட்ட தங்கள் இரு தொடைகளையும்; தன்னை வணங்குபவர்களுக்கு எதிரில் வைப்பதற்காகவே தரிக்கப்பட்ட, புருஷார்த்தங்களோடு கூடின சம்புடத்துக்கு நிகரான இரு முழங்கால்களையும்; கிரமாகப் பெருத்தவைகளும் அழகானவைகளும் ஆகிய கணுக்கால்களையும் சேவிகின்றேன்.
( 100 – 8 )
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை3ரிவ பத3ப4ஜனம்
ச்’ரேய இத்யாலபந்தம்
பாதா3க்3ரம் ப்4ராந்தி மஜ்ஜத் ப்ரணத
ஜன மனோ ம்ந்த3ரோத்3தா4ரகூர்மம் |
உத்துங்கா3தாப்4ர ராஜன்னகர ஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்’ரிதானாம்
ஸந்தாப த்4வாந்த ஹன்த்ரீம் தாதிமனுகலயே
மங்க3லா மங்கு3லீனாம் || ( 100 – 9)


திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால் உபதேசிக்கும் பாதசரத்தையும்; அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்; உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை ஆசிரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்; மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன். ( 100 – 9 )
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

யோகீ3ந்த்3ராணாம் த்வத3ங்கே3ஷ்வதி4க
ஸுமது4ரம் முக்தி பா4ஜாம் நிவாஸோ
ப4க்தானாம் காமவர்ஷத்யுதரு கிஸலயம்
நாத2 தே பாத3 மூலம் |
நித்யம் சித்தஸ்தி2தம் மே பவனபுரபதே
க்ருஷ்ண காருண்யஸிந்தோ4
ஹ்ருத்வா நிச்’சே’ஷதாபான் ப்ரதி3ச’து
பரமானந்த3 ஸந்தோ3ஹ லக்ஷ்மீம் || ( 100 – 10)

ஹே! நாதா! ஹே குருவாயூரப்பா! ஹே கருணைக் கடலே! ஹே கிருஷ்ணா! யோகீஸ்வரர்களுக்கு உங்கள் அவயவங்களுக்குள் மிக மிக மதுரமானதும்,
மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு வாசஸ்தலம் ஆனதும்;
பக்தர்களுக்கு அபீஷ்டத்தை வர்ஷிப்பதில் கற்பக விருக்ஷத்தின் தளிரைப் போன்றதும்; ஆகிய தங்கள் பாத மூலம் எப்போதும் என் சித்தத்தில் இருந்து கொண்டு சமஸ்த தாபங்களையும் போக்கடித்து மோக்ஷலக்ஷ்மியை கொடுக்க வேண்டும். ( 100 – 10)
 

த3ச’கம் 100​

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

அஞாத்வா தே மஹத்வம் யதி3ஹ நிக3தி3தம்
விச்’வநாத2 க்ஷமேதா2:
ஸ்தோத்ரஞ்சைதத் ஸஹஸ்ரோத்தரம் அதி4கதரம்
த்வத் ப்ராஸாதா3ய பூ4யாத் |
த்3வேதா4 நாராயணீயம் ச்’ருதிஷு ச
ஜனுஷா ஸ்துத்யதா வர்ணனேன
ஸ்பீதம் லீலாவதாரை ரித3மிஹ குருதாம்
ஆயுராரோக்3ய சௌக்யம்|| ( 100 -11)


ஹே ஜகன்நாதா! தங்களுடைய மகிமையை அறியாமல் இப்போது என்னால் எது சொல்லப்பட்டதோ அதைத தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரத் துக்கும் அதிகமான ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம் தங்கள் பிரசாதத்தை அ டைவதற்கு ஒரு ஹேதுவாக ஆகவேண்டும். வேதங்களில் ஜனித்ததாலும், லீலாவதாரங்கள் மூலமாக ஸ்துதிக்கத் தக்க தன்மையை வர்ணிப்பதாலும், ஸ்ரீமன் நாராயணனை உத்தேசித்து ஸ்ரீ நாராயண கவியால் எழுதப்பட்ட “நாராயணீயம் ” என்னும் இந்த ஸ்தோத்திரம், இவ்வுலகில் உள்ளவர்களுக்கு பூரண ஆயுள், நல்ல தேக ஆரோக்கியம், சௌக்கியம் என்னும் அனைத்தையும் அளிக்கட்டும். ( 100 -11)

நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|
நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||
ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||

நாராயண! நாராயண! நாராயண! நாராயண!
நாராயண! நாராயண! நாராயண! நாராயண!
நாராயண! நாராயண! நாராயண! நாராயண!
நாராயண! நாராயண! நாராயண! நாராயண! 🙏
 

பின்புலக் கதை​

இந்தத் தொடரின் பின்புலக் கதை இது!

யோகதர்ஷன் மாஸ்டர் ஸ்ரீமன் நாராயணீயத்தை விளக்கினார்.
ஒவ்வொரு வரியும் ஒரு மினி ரயில் வண்டி போல இருக்கும்.

எங்கே நிறுத்த வேண்டும்? எப்படிப் பிரிக்க வேண்டும்? தெரியாது.
படிப்பதை விடப் பாடுவது எளிதாக இருக்கும் போலத் தோன்றியது.

திருச்சூர் ராமச்சந்திரன் அவர்களின் ஒலிநாடாவை வைத்துக் கொண்டு
மிகவும் சிரமப்பட்டு 100 வேறு ராகங்களில் பாடக் கற்றுக் கொண்டேன்.

ஒவ்வொரு தசகமும் வெவ்வேறு ராகம். இது ஒரு 100 ராக மாலிகை.
அப்போதும் முழு மனத் திருப்தி ஏற்படவில்லை எனக்கு.

வார்த்தைகளின் பொருள் தெரிந்தால் நன்றாக இருக்கும்
என்று முனைப்பாகப் புத்தகத்தைத் தேடத் தொடங்கினேன்.

ஏறக் குறைய நான் பிறந்த போது வெளிவந்த ஒரு புத்தகத்தில்
பதம் பிரித்துச் சொற்களின் பொருளும் அழகாகத் தரப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த புத்தகத்தைக் கடனாகக் கொடுப்பதற்குக் கூட
அதை வைத்திருந்த அவர்கள் சம்மதிக்க வில்லை.
ஏறக் குறைய நம்பிக்கையை இழந்து விட்டேன் அது கிடைக்கும் என்று.

இவருடைய அத்திம்பேரின் தம்பியிடம் அது பற்றி பேசியபோது
அவர் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்,

“உனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியுமா?”
“தெரியும்” என்றேன். அவர் முகம் மலர்ந்து விட்டது.

“நீ தேடும் புத்தகம் என்னிடம் ஒரு காபி உள்ளது.
எத்தனையோ பேர்கள் தரச் சொல்லிக் கேட்டார்கள்.
ஆனால் சம்ஸ்க்ருதம் படிக்கத் தெரிந்தவருக்குத் தான் கொடுப்பது
என்று தீர்மானமாகக் கொடுக்க மறுத்து விட்டேன்.
இனி அந்தப் புத்தகம் உன்னுடையது” என்றார்.

எனக்கு மகிழ்ச்சியில் பேசக் கூட முடியவில்லை.
அவர் புத்தகத்தில் என் பெயர் எழுதியிருந்தது போலும்!

புத்தகத்தை அனுப்பி வைத்தார் சென்னை சென்ற உடனேயே.
இப்போது அது என் இணை பிரியாத் துணை ஆகிவிட்டது!

அந்தப் புத்தகம் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால்
இந்தத் தொடர் பிறந்து இருக்கவே முடியாது நிச்சயமாக!

அந்தத் தாத்தாவுக்கு நன்றி நம் எல்லோர் சார்பிலும்!
ஏதோ பெரிதாக சாதித்தது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது.

“கண்ணன் அருள் எல்லோருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்”
என்று வேண்டிக் கொண்டு இந்தத் தொடரை முடிக்கின்றேன்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை வசிக்கலாம்.
தினப்படியும் வாசிக்கலாம்! கோகுலாஷ்டமிக்கும் வாசிக்கலாம்! 🙏
 

மோஹ முத்கரம்’ (பஜ கோவிந்தம்)​

அத்வைத மார்க்கத்தை நிலை நிறுத்தியவர் ஆதி சங்கரர். அவர் எழுதிய பல பக்தி ஸ்தோதிரங்களிலும் மிகவும் புகழ் வாய்ந்தது ‘மோஹ முத்கரம்’ ( மோஹத்தைத் தகர்க்கும் சம்மட்டி) என்ற பாடல்களின் தொகுதி.

இதன் முதல் பாடல் ‘பஜ கோவிந்தம்’ என்று தொடங்குவதால் இந்நூல் அந்தப் பெயரிலேயே புகழ் பெற்றுவிட்டது.

ஒரு கிழவர் ‘டுக்ருஞ் கரணே’ என்னும் சமஸ்க்ருத இலக்கணச் சொல்லை மனனம் செய்வதைப் பார்த்து மனம் வருந்தி சங்கரர் இந்நூலை இயற்றியதாக வரலாறு உண்டு.

திருக்குறளைப் போன்றே சிறிய உருவம் கொண்டுருந்தாலும், உயர்ந்த உண்மைகளை எளிதில் புரிய வைப்பதாலும், இசையோடு பாடுவதற்கு ஏற்றதாக இருப்பதாலும், இதற்கு ஈடு இணையே இல்லை என்றே கூறிவிடலாம்.

குருசரணாரவிந்தங்களே துணை! 🙏
 

#01. ப4ஜ கோ3விந்த3ம்​

1. கோவிந்தனைத் தொழுவாய்.

ப4ஜ கோ3விந்த3ம் ப4ஜ கோ3விந்த3ம்
கோ3விந்த3ம் ப4ஜ மூட4மதே |
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி ‘டு3க்ருஞ் கரணே’ ||

மூட மனிதா! மன, மொழி, மெய்களால் இறைவனைப் பணியாமல் ‘டுக்ருஞ் கரணே’ போன்ற இலக்கணச் சொற்களை படிப்பதால் என்ன பயன்? அது இறுதிக் காலத்தில் உன்னைக் காப்பாற்றாது. கோவிந்த நாமத்தையே எப்போதும் பஜனை செய்!
 

#02. மூட4! ஜஹீஹி​

2. பொன்னாசையை ஒழி!

மூட4! ஜஹீஹி த4நாக3ம த்ருஷ்ணாம்
கு1ரு ஸத்3புத்3தி4ம் விஷயவித்ருஷ்ணாம் |
யல்லப4ஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேன வினோத3ய சித்தம் ||

ஓ மூடனே! இன்னும் பணம் வேண்டும் என்ற பேராசையை ஒழி. நீ முற்பிறவியில் செய்த நல்ல கர்மங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் செல்வம் கிடைக்கும்.
தானாக வரும் செல்வத்துடன் திருப்தி அடைந்து, மனக் குழப்பத்தை விட்டு விடு!
 

#03. நாரீ ஸ்தனப4ர​

3. பெண்ணாசையை விடு!

நாரீ ஸ்தனப4ர நாபீ4 தே3ச’ம்
த்3ருஷ்ட்வா மாகா3 மோஹாவேச’ம் |
ஏதன் மாம்ஸ வஸாதி3விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம் ||

ஹே மூடனே! ஒரு பெண்ணின் நாபி, ஸ்தனங்களைக் கண்டு மயங்கிவிடாதே. இவையெல்லாம் மாமிசம், ரத்தம், உவர்நீர் போன்றவற்றால் உருவானவை என்று அடிக்கடி நீ நினைவுறுத்திக் கொண்டால், உனக்கு இவற்றின் மீது மோஹம் தோன்றாது.
 

#04. நளினி த3ளக3த​

4. வாழ்க்கையே நிலையற்றது !

நளினி த3ளக3த ஜலமதி தரளம்
தத்3வத் ஜீவித மதி3ச’ய சபலம் |
வித்3தி4 வ்யாத்4யபி4மான க்3ரஸ்தம்
லோகம் சோ’கஹதம் ச ஸமஸ்தம் ||

தாமரை இலைமீது உள்ள நீர்த்துளியைப் போன்றே மனித வாழ்வும் நிலையற்றது. எங்கு நோக்கினும் நோய்களும், கர்வமும் தான் காணப்படுகின்றன. யாருமே தான் இன்பமாக இருப்பதாக நினைப்பது இல்லை. உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே!
 

#05. யாவத்3 வித்தோ​

5. சுற்றத்தினர் சுயநலவாதிகள்.

யாவத்3 வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த: |
பச்’சாஜ்ஜீவதி ஜர்ஜர தே3ஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கே3ஹே ||

பணம் சம்பாதித்துத் தரும் வரையில் மனைவி, மக்கள் அன்புடன் பழகுவர். உடல் தளர்ந்தபின் அவன் வீட்டில் தங்கிவிட்டால், யாரும் அவனுடன் பேசக்கூட மாட்டார்கள். சுற்றத்தினர்களும் சுயநலவாதிகளே என்று உணர்வாய்.
 

#06. யாவத் பவனோ​

6. உறவுகள் உயிர் உள்ளவரையில் தான்!

யாவத் பவனோ நிவஸதி தே3ஹே
தாவத் ப்ருச்சதி குச’லம் கே3ஹே |
க3தவதி வாயௌ தே3ஹாபாயே
பா4ர்யா பி3ப்4யதி தஸ்மின் காயே ||

உடலில் மூச்சுக் காற்றுள்ள வரையே வீட்டில் உள்ளவர்கள் உன் நலத்தை விசாரிப்பார்கள். பிராணன் பிரிந்துவிட்டால், நீ கூடிக் குலாவிய உன் மனைவிகூட உன் உடலைக் கண்டு அஞ்சுகின்றாள்.
 

#07. பா3லஸ்தாவத்​

7. இறைவனை நினைப்பவர் எவர்?

பா3லஸ்தாவத் க்ரீடா3 ஸக்த:
தருணஸ் தாவத் தருணீ ஸக்த: |
வ்ருத்3த4ஸ் தாவத் சிந்தா ஸக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந ஸக்த: ||

பாலப் பருவத்தில் விளையாடுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றான்.
யௌவனப் பருவத்தில் பெண்ணுடன் காலத்தைக் கழிக்கின்றான்.
வயோதிகனோ நோயிலும், மரண பயத்திலும் காலத்தைக் கழிக்கின்றான்.
எவருமே, எந்தப் பருவதிலுமே, இறைவனை நினைப்பது இல்லையே!
 

#08. கா தே காந்தா​

8. நீ யார் என்று சிந்திப்பாய்!

கா தே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோயமதீவ விசித்ர: |
கஸ்ய த்வம் குத ஆயாத:
தத்வம் சிந்தய ததி3த3ம் ப்4ராத: ||

தம்பி! உன் மனைவி யார்? உன் மகன் யார்? நீ எவரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து இந்த விசித்திரமான சம்சாரத்திற்கு வந்து சேர்ந்தாய்? இந்த உண்மைகளைக் கொஞ்சம் சிந்தனை செய்!
 

#09. ஸத்ஸங்க3த்வே​


9. நல்லவருடன் பழகு!

ஸத்ஸங்க3த்வே நிஸ்ஸங்க3த்வம்
நிஸ்ஸங்க3த்வே நிர்மோஹத்வம் |
நிர்மோஹத்வே நிச்’சல தத்வம்
நிச்’சல தத்வே ஜீவன் முக்தி: ||

சான்றோர் சகவாசம் ஏற்பட்டால் மனம் பற்றினை ஒழிக்கும். பற்று அழிந்தால் மன மயக்கங்கள் மறையும். மயக்கங்கள் மறைந்தால் நிலையான உண்மைப் பொருள் வெளிப்படும். நிலையான உண்மைப்பொருளை அறிந்தால் நீ ஜீவன் முக்தி அடைவாய்.
 

#10. வயஸி க3தே​

10. ஆசைகளும் , செல்வமும் அழிந்து போய்விடும்.

வயஸி க3தே க: காமவிகார:
சு’ஷ்கே நீரே க: காஸார: |
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸார: ||

வயது முதிர்ந்தபின் காம விகாரங்கள் ஏற்படாது.
நீர் வறண்டு போனால் நீர் நிலைகள் இரா.
செல்வம் குறைந்துவிட்டால் சுற்றத்தார் இரார்.
உண்மைத் தத்துவத்தை நீ அறியும்போது
உன் சம்சாரத்தளைகள் மறையும்.
 

#11. மாகுரு த4ன ஜன​


# 11. நீயும் பிரம்மமாக ஆகிவிடு.

மாகுரு த4ன ஜன யௌவன க3ர்வம்
ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் |
மாயாமயமித3ம் அகி2லம் ஹித்வா
ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச’ விதி3த்வா ||


“நான் பணக்காரன்” ; “எனக்கு நிறைய சுற்றத்தினர் உள்ளனர்”;
“நான் யௌவனம் நிரம்பியவன்” என்றெல்லாம் கர்வம் கொள்ளாதே.
காலம் நினைத்தால் இவற்றை எல்லாம் ஒரே நிமிடத்தில் கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விடும். உலகமே பொய்க் காட்சி. பிரம்மம் மட்டுமே உண்மையானது
என்று அறிந்து நீயும் பிரம்மமாக ஆகிவிடு.
 

Latest ads

Back
Top