#10. வயஸி க3தே
10. ஆசைகளும் , செல்வமும் அழிந்து போய்விடும்.வயஸி க3தே க: காமவிகார:
சு’ஷ்கே நீரே க: காஸார: |
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸார: ||
வயது முதிர்ந்தபின் காம விகாரங்கள் ஏற்படாது.
நீர் வறண்டு போனால் நீர் நிலைகள் இரா.
செல்வம் குறைந்துவிட்டால் சுற்றத்தார் இரார்.
உண்மைத் தத்துவத்தை நீ அறியும்போது
உன் சம்சாரத்தளைகள் மறையும்.