Quotable Quotes Part II

14. காலச் சக்கரம்

14. காலச் சக்கரம் = முடிவில்லாமல் தொடருவதால் காலம் ஒரு சக்கரம் என்று கூறப்படும்.


#740. காலத்தைக் கடக்கலாம்

மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி,
இதுவிட்டு அங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதிவட்டதுள் நின்று பாலிக்கும் மாறும்,
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற்றேனே.


திங்கள் மண்டலத்தில் உள்ளன வியாபினி, வியோமரூபை, அநந்தை, அநாசிருதை, உன்மனி என்ற ஐந்து கலைகள். இவற்றின் இயல்பை ஆராய்ந்து இவற்றை நீக்க வேண்டும். தலையின் மேல் துவாதசாந்தப் பெருவெளியில் அமரவேண்டும். சிவசக்தி அருளும் வகையையும், காலச்சக்தியைக் கடக்கும் நிலையையும் ஆராய வேண்டும்.

விளக்கம்


வியாபினி முதல் உன்மனி வரையில் உள்ள ஐந்து கலைகள் உயிர்களை மேல் நோக்கும் வண்ணம் செய்யும். கீழே குறிப்பிபட்டவண்ணம் உயிர்களை முன்னேறச் செய்யும்.

நிவிர்த்தி கலை => பிரதிட்டை கலை => வித்தியா கலை => சாந்தி கலை => சாந்தியதீதை கலை.


#741. மக்கள் ஏன் அழிகிறார்கள்?


உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்
சுற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறியாது அழிகின்ற வாறே.


ஐம்புலன்களில் ஐம்பொறிகள் பொருந்தி அறிந்து கொள்வது ஐந்து வகை அறிவு ஆகும். இந்த அறிவை அவற்றினின்றும் வேறாக இருந்து அறிந்து கொள்வது ஆறாவது அறிவு ஆகும். பொருட்களின் நன்மை, தீமைகளை ஆராயும் அறிவு ஏழாவது அறிவு ஆகும். கல்வியால் பெறுவது எட்டாவது அறிவு. அனுபவத்தால் பெறுவது ஒன்பதாவது அறிவு. இந்த ஒன்பது அறிவுக்கும் காரணம் ஆனவர் சிவ சக்தியர் என்று அறிந்து கொள்வது பதிஞானம் என்னும் பத்தாவது அறிவு ஆகும். இத்தனை அறிவினையும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடக்காமல் இருப்பதனாலேயே மக்கள் அழிகின்றனர்.


#742. வாழ்க்கையில் நான்கு கண்டங்கள்


அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சும் மூன்றும்.
மொழிகின்ற முப்பத்து மூன்று என்பது ஆகும்
கழிகின்ற கால் அறு பத்திரண்டு என்பது
எழுகின்றது ஈரைம்பது எண் அற்று இருந்ததே.

மனிதனுக்கு வாழ்க்கையில் நான்கு கண்டங்கள் உள்ளன. இருபத்தைந்து முதல் இருபத்தெட்டு வரையில் முதல் கண்டம். முப்பது முதல் முப்பத்து மூன்று வரையில் இரண்டாவது கண்டம். அறுபது முதல் அறுபத்து இரண்டு வரையில் மூன்றாவது கண்டம். நான்காவது கண்டம் நூறு ஆண்டுகளில். இவ்வாறு மனிதனின் வாழ்வில் நான்கு கண்டங்கள் உள்ளன.
 
#743. யோகப்பயிற்சி தொடங்க உகந்த நாள்

திருந்து தினம்அத் தினத்தி னொடு நின்று
இருந்துஅறி நாள்ஒன்று; இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளோடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனைபுக லாமே.


பிறந்த நாள், அதனுடன் பொருந்தி நின்ற பிறவி விண்மீன் கூடிய நாள் ஒன்று, பிறவி விண்மீனுடன் பதினாறு நாட்கள் கூடியப் பதினேழாவது நாளும், ஆறு கூடிய ஏழாவது நாளும் தவிரப் பொருந்திய நாளை ஆராய்ந்து அறிந்து யோகப் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.


#744. சிவம், சக்தி, நாதம், விந்து


மனைபுகு வீரும் அகத்திடை நாடி
எனஇருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து, ஏறட்டு, தற்குறி ஆறு
வினைஅறி ஆறும் விளங்கிய நாலே.


ஞான யோகத்தை விரும்பி அதைச் செய்கின்றவர்களே! இருபத்து ஐந்து தத்துவங்களையும் பன்னிரண்டு ராசிகளில் செல்கின்ற கதிரவனாகிய அறிவினால் அறிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்து நன்கு பக்குவப்பட வேண்டும். சிவபெருமான் விளங்குகின்ற ஆறு ஆதாரங்கள் செயல்படும் வழிகளை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றைக் கடந்து செல்லும்போது சிவம், சக்தி, நாதம் விந்து என்ற நான்கும் நன்கு விளங்கும்.


#745. ஆன்மாவை தரிசிக்க வேண்டும்


நாலும் கடந்தது நால்வரும் நால் அஞ்சு
பாலம் கடந்தது பத்துப்பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்துஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே?


நான்முகன் திருமால் உருத்திரன், மகேசுவரன் என்பவை உருவங்கள் நான்கு ஆகும். விந்து, நாதம், சக்தி, சிவம் என்பவை அருவங்கள் நான்கு ஆகும். இவற்றுடன் அருவுருவம் சேரும் போது ஒன்பது பேதங்கள் உருவாகும். ஒன்பது வடிவங்களாக விளங்குகின்றதும், நெற்றியைக் கடந்து இருபத்து ஐந்து தத்துவங்களால் விளங்குவதும், ஆறு ஆதாரங்களையும் தாண்டுகின்றதும் ஆகிய ஆன்மா என்ற கதிரவனைக் காணவேண்டும்.
 
14. காலச் சக்கரம்

14. காலச் சக்கரம் = முடிவில்லாமல் தொடருவதால் காலம் ஒரு சக்கரம் என்று கூறப்படும்.


#746. நாற்பத்தெட்டு எழுத்துக்கள்

ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சும் மூன்றுக்கும்
தேறும் இரண்டு இருபத்தோடு ஆறு இவை
கூறும் மதிஒன் றினுக்கு இருபத்தேழு
வேறு பதியங்கள் நாள்விதித் தானே.

ஆறு ஆதாரங்களில் நாற்பத்தெட்டு எழுத்துக்கள் கொண்ட ஆறு தாமரைகள் இருப்பதை அறிந்து கொள்வீர். ‘ உ ‘ என்ற எழுத்தால் குறிப்பிடப்படும் கதிரவன் இருபத்தாறாவதாக அமைந்துள்ளது. ‘அ ‘ என்று குறிப்படப்படும் சந்திர வட்டம் என்பது இருபத்தேழாவது ஆக அமைந்துள்ளது.

விளக்கம்


தாமரை இதழ்களின் எண்ணிக்கை:

1. மூலாதாரம் ………………….4
2. ஸ்வாதிஷ்டானம் ……….6
3. மணிபூரகம்…………………10
4. அனாஹதம்………………..12
5. விசுத்தி ……………………….16

இருபதுக்கு ஐயைஞ்சும் மூன்றுக்கும்
{20 + (5x5) + 3} = (20 + 25+ 3 = 48)

உடலில் உள்ளன 25 தத்துவங்கள்.

‘உ’ என்பது கதிரவனைக் குறிக்கும். இது இருபத்தாறாவது ஆகும்

‘அ ‘ என்பது சந்திரனைக் குறிக்கும். இது இருபத்தேழாவது ஆகும்


#747. குருமுகமாகக் கேட்க வேண்டியது.


விதித்த இருபத்தெட்டோடு மூன்று அறையாக
தொகுத்து அறி முப்பத்து மூன்று தொகுமின்;
பதித்துஅறி பத்தெட்டுப்பார் ஆதிகள் நால்
உதித்துஅறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே



#748. மறைபொருளை மறைவாகப் பெற வேண்டும்.


முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறை இறை யார்க்கும் இருக்க அரிது;
மறையது காரணம் மற்றொன்றும் இல்லை
பறைஅறை யாது பணிந்து முடியே.


குருவின் உபதேசப்படி பயிற்சியாளர் முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிடில் இறைவனுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம். உபதேசத்தை இங்கே மறைத்துக் கூறியதன் காரணம் இதுவே! உபதேசத்தை உங்கள் குருவிடம் மறைவாகவும் முறையாகவும் பெற வேண்டும் என்பதே. மறையைப் பெறுவது போல இந்த மறை பொருளையும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்!
 
#749. நிலைத்து வாழும் வழி

முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்;
இடிஞ்சில் இருக்க விளக்கு எரிகொண்டு
கடிந்து அனல் மூளக் கதுவ வல்லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.


உடலை நிலைத்து இருக்கச் செய்யும் வழியை மறைத்து வைத்துள்ளதை அறியாமல் வீணே முயற்சி செய்பவர்கள் முழு மூடர்கள். உடல் நிலைத்து இருக்க விரும்புபவர்கள் மூலாதாரத் தீயை அடக்க வேண்டும். நிலையற்ற உலகில் நிலையாக வாழ அது ஒன்றே வழியாகும்.


#750. ஓவியம் போல நில்லுங்கள்


நண்ணும் சிறுவிரல் நாண்ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்பு இடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.


ஒரு கையில் உள்ள சிறுவிரல், அணி விரல், நடு விரல் என்ற மூன்று விரல்களுடன் மறு கையில் உள்ள மூன்று விரல்களையும் கண்கள் புருவங்களில் நெறித்துப் பிடித்தால் பிராணனும் அபானனும் சமமாக நிற்கும். அதனால் அக்கினி, கதிரவன், சந்திரன் என்னும் மூன்று மண்டலங்களும் ஒத்து நிலை பெறும். அங்கே காணப்படும் ஒளியில் அசையாமல் ஓவியம் போல நில்லுங்கள்.


#751. மூன்று மண்டலங்கள்


ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள்;
பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை;
தீவினையாம் உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

ஓவியம் போல அசையாமல் நிற்பதை அறிந்து கொள்ளுங்கள். பாவிகள் இதன் பயனை அறிந்திட முடியாது. தீவினைகளுக்குக் காரணம் ஆன இந்த உடலில் அக்கினி, கதிரவன், சந்திரன் இந்த மூன்றின் மண்டலங்களும் சுழுமுனையில் பொருந்திச் சஹஸ்ரதளத்தில் விளங்கும்.
 
#752. ஞானிகள் அழிய மாட்டார்கள்.

தண்டுஉடன் ஓடித் தலைப் பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர்; காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.


முதுகுத் தண்டுடன் பிணைந்து மேலே சென்று பிரமரந்திரத்தை அடைவார் ஒரு யோகி. அவர் உடலில் திங்கள், கதிரவன், அக்கினி மண்டலங்கள் மூன்றும் ஒத்துப்போய் உடல் மகிழும்படி அமைந்திருக்கும். இதைக் கண்டறிந்தவர்கள் மெய்ஞானிகள். அவர்கள் அழியவே மாட்டார்கள். இதை அறியாதவர்கள் வினைப் பயனாக விளைந்த உடலை அழிய விட்டு விடுகின்றனர்.


#753. காமச் செயல் வாழ்வைக் கெடுக்கும்


பிணங்கி அழிந்திடும் பேறு அது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குடனே வந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.


உடல் எப்படி அழியும் என்பதையும் கேட்டு அறிந்து கொள்வாய் நீ! கதிரவன் என்னும் அறிவு, குண்டலினி வழியே சென்றுக் காமச் செயல்களைச் செய்யுமானால் உயர்ந்த உன் வாழ்வு தாழ்ந்து போய் விடும். ஒரு நாய் மலம் தின்ன எப்படி அலையுமோ அதுபோலவே உன் அறிவும் காமச் செயலைப் புரிய அலையும்.


#754. கூத்தன் அங்கே தோன்றுவான்


சுழல்கின்ற வாறுஇன் துணைமலர் காணான்
தழல்இடைப் புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல்கண்டு போம்வழி காண வல்லார்க்குக்
குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே.


காம வயப்பட்டு அலையும் மனிதனால் சஹச்ரதளத்துக்கு மேலே விளங்கும் இறைவனின் திருவடிகளை உணர முடியாது. மேலே தன் இடமாகிய அக்கினி மண்டலத்தில் இல்லாமல் கீழே மூலாதாரத்தில் உள்ள தீயினால் மக்கள் அழிந்து படுகின்றனர். இறைவனின் காற் சிலம்போசையைக் கேட்டு, அதை நாடிச் செல்பவருக்குச் சுழுமுனையில் கூத்த பிரானாகிய சிவன் காட்சி தருவான்.
 
#755 to #757

#755. இறைவன் கலந்து நிற்பான்

கூத்தன் குறியில் குணம்பல கண்டவர்கள்
சாத்திரம் தன்னைத் தலைப் பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அலர்ந்திரும் ஒன்றே.


நாதத்தைக் கேட்பதால் சீவனுக்குப் பல பயன்கள் விளையும். அவற்றைக் கண்டு அறிந்தவர்
சாத்திரங்களின் பொருளை உணர்ந்து அதன் வழியே நிற்பார். யோகி சிவனைத் தியானம் செய்து கொண்டு இருந்தால் அவனும் விருப்பம் கொண்டு யோகியுடன் வேறுபடாமல் ஒன்றி இருப்பான்.


#756. குன்றின் மேல் கூத்தன் தோன்றுவான்


ஒன்றில் வளர்ச்சி உலப்பு இலி கேள் இனி
நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும்
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடை பொன்திகழ் கூத்தனும் ஆமே.


இவ்வாறு இறைவனுடன் வேறுபாடு இன்றிப் பொருந்தி இருப்பவரின் வாழ்நாள் வளரும். அவருக்கு அழிவும் இல்லை. நன்மை தரும் என்று எண்ணிப் பூராகம், இரேசகம், கும்பகம் இவற்றைச் செய்தால் வாழ்நாள் குறைந்து விடும். இவற்றை விடுத்து முப்பது நாழிகை சமாதியில் இருந்தால் சஹஸ்ர தளத்தில் உள்ள பொன்னொளியில் கூத்தபிரான் தோன்றுவான்.


#757. நூறாண்டு வாழலாம்


கூத்து அவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே
ஏத்துவர் பத்தினில் எண்திசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து, பதுமரை நோக்கிடில்
சாத்திடும் நூறு தலைப் பெய்ய லாமே.

உடலில் கூத்தை நிகழ்த்துபவன் சிவபெருமான். பிராணன் நுட்பமாக அடங்கும் இடத்தை அறிந்து கொள்ள வேண்டும் அங்கே அகரத்தையும், உகரத்தையும் பொருத்த வேண்டும். அதில் எட்டு இதழ்க் கமலத்தை விளங்கச் செய்ய வேண்டும். அந்தக் கமலத்தில் சிவனைக் கண்டு மகிழ்ந்தால் ஒருவன் எடுத்த உடலில் நூறாண்டு காலம் வாழலாம்.

2 = அகரம் – சந்திர மண்டலம்
8 = உகரம் – கதிரவன் மண்டலம்
2 + 8 = 10
 
#758. பலகாலம் வாழலாம்

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்து உடல் ஆயிரம் கட்டு உறக் காண்பர்கள்
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்து உடன் கோடி யுகம் அது ஆமே


நூறாண்டு காலம் வாழும் முறையை அறிந்தவர் இந்த உடலை ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதபடிக் காத்துக் கொள்ள இயலும் இது போன்று ஆயிரம் ஆண்டுகள் வாழ அறிந்தவர்கள் அறிவால் முதிர்ந்து பல யுகங்கள் வாழ இயலும்.


#759. இரண்டற ஒன்றி விடுவர்


உகம்கோடி கண்டும் ஒசிவு அற நின்று
அகம்கோடி கண்டு உள் அயல் அறக் காண்பர்கள்
சிவம்கோடி விட்டுச் செறிய இருந்து அங்கு
உகம்கோடி கண்டு அங்கு உயர்உறு வாரே.


இங்ஙனம் பல நாட்களைக் கண்டவர் சிறிதும் தளர்ச்சி என்பதே இல்லாமல் இருப்பார். உள்ளத்தால் சிவனை இடைவிடாது தியானிப்பார். சிவம் வேறு தான் வேறு என்னும் சிந்தனையே மறைந்து விடும்படி அவனோடு ஒன்றி விடுவார். சிவனோடு ஒன்றாக உணர்ந்து நீண்ட காலம் வாழ்ந்து உயர்வினை அடைவார்.


# 760. சக்தியை அறியாதவர் ஆவார்


உயர்உறு வார், உலகத்தொடும் கூடிப்
பயன்உறு வார் பலர்தாம் அறியாமல்
செயல்உறு வார் சிலர் சிந்தை இல்லாமல்
கயல்உறு கண்ணியைக் காணகி லாரே.


சிவம் என்ற தன்மையுடன் ஒன்றறக் கலந்தவரே உண்மையில் உயர்வு அடைந்தவர் ஆவார். அவரே உலகத்தோடு கூடிப் பயன் அடைந்தவர் ஆவார். ஆனால் பலர் இந்த உண்மையை அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் மேலும் மேலும் கன்மங்களை ஈட்டுகின்றனர். வேறு சிலர் இதை முற்றிலும் மறந்து விடுவர். இமைக்காத மீன் போன்ற கண்களை உடைய பராசக்தியையும் கூட அறியாதவர்களாக ஆகிவிடுவார்கள்.
 
#761. தொண்டாற்ற என்ன தேவை?

காணகி லாதார் கழிந்து ஓடிப் போவார்கள்;
நாணகி லாதார் நயம் பேசி விடுவார்கள்;
காணகி லாதார் கழிந்த பொருள் எல்லாம்
காணகி லாமல் கழிகின்ற வாறே.


இறையொளியைக் காண இயலாதவர் பிறவிப் பயனை அடைய மாட்டார். வாழ்க்கை வீணாகி விடும். நாணம் இல்லாதவர் நயமாகப் பேசிப் பேசிக் காலத்தை வீணாக்கிச் செல்வார்கள். பராசக்தியின் ஒளியைக் காண இயலாதவர்களால் தத்துவத்தை அறிந்து கொள்ள முடியாது. அதனால் அவர்கள் தொண்டுகள் எதுவும் செய்யாமல் காலத்தைக் கழித்துச் செல்வார்கள். இறையருள் உடையவரே தொண்டுகள் புரிய இயலும்.


#762. எங்கும் நிறைந்தது சிவம்


கழிகின்ற அப்பொருள் காணகிலாதார்
கழிகின்ற அப்பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
கழியாத அப்பொருள் காணலும் ஆமே.


அழிகின்ற உலகப்பொருட்கள் அனைத்தும் நம்மிடம் பிணைப்பை ஏற்படுத்தும். அவற்றைப் புறக் கண்களால் நோக்காதவருக்கு மட்டுமே அவற்றை அகக் கண்களால் நோக்க இயலும். அழியும் அந்தப் பொருட்களின் உள்ளே ஒருமைப் பட்ட மனத்துடன் நோக்கினால், அவை அனைத்திலும் நீங்காது விளங்குகின்ற சிவத்தைக் காணலாம்.


#763. யோகியர் பெறும் பயன்


கண்ணன், பிறப்பு இலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்;
திண் என்று இருக்கும் சிவகதியாய் நிற்கும்
நண்ணும் பதம் இது நாடவல் லார்கட்கே.


சிவபெருமான் முக்கண்ணன்; பிறப்பு அற்றவன்; நந்தியம் பெருமான். அவனை மனத்தில் ஆராய்ந்து அறிய வேண்டும். அப்போது அவன் பத்துத் திசைகளில் இருப்பதும் தெரியும். அதே சமயத்தில் தனித்து ஏகாந்தனாக இருப்பதும் தெரியும். உறுதியான சிவகதியும் கிடைக்கும். ஆராய்ச்சி செய்யும் யோகியர் பெறுகின்ற பெரும் பயன் இதுவே.
 
#764 to #766

#764. அக நோக்கு

நாடவல் லார்க்கு நமன் இல்லை, கேடு இல்லை,

நாடவல் லார்கள் நரபதி யாய் நிற்பர்;
தேடவல் லார்கள் தெரிந்த பொருள் இது
கூடவல் லார்கட்குக் கூறலும் ஆமே.

இப்படி நந்தியம் பெருமானை ஆராய்ந்து அறிபவர்களின் வாழ்நாட்களுக்கு எல்லை இல்லை. அதனால் அழிவும் இல்லை. இவ்வாறு ஆராய்ந்து அறிந்தவர் மக்களின் தலைவர் ஆவார். சிவனைச் சேர வண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களுக்கு இதைக் கூற வேண்டும்.


#765. சிரசில் சிவன் தோன்றுவான்


கூறும் பொருள் இது அகார உகாரங்கள்

தேறும் பொருள் இது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல்வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.

தகுதி உடையவர்களுக்கு உணர்த்த வேண்டியவை அகார உகாரங்கள். இவை இரண்டும் மனதில் நிலை பெற்று விட்டால் அப்போது மகரம் சுழுமுனை நாடி வழியே உயரச் சென்று அங்கு நாதமாகி விடும். அப்போது ஆறு ஆதாரங்களும் ஒன்றாக இணைந்துவிடும். மூலாதாரத்துக்கும் சஹஸ்ர தளத்துக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டு விடும். சிரசில் சிவன் தோன்றுவான்.


#766. சிந்தித்தால் சிவம் ஆகலாம்


அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்

அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள் வார்களுக்கு
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன் இவன் ஆகுமே.

சிவபெருமான் உறையும் இடத்தை எவரும் அறியவில்லை. அந்தப் பெருமான் ஓசையாகவும், ஒளியாகவும் நம் உடலில் உறையும் இடத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டு விட்டால், அதன் பின் சிவன் அவன் உள்ளத்தை விட்டு அகலாமல் இருப்பான். அப்படிக் காண முடிந்த அவனே சிவனாக ஆகி விடுவான்.
 
#767 to #769

#767. ஒலியுள், ஒளியுள் உறைவான் சிவன்

அவன்இவன் ஆகும் பரிசுஅறி வார்இல்லை
அவன்இவன் ஆகும் பரிசு அது கேள் நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்டம் அது ஆகி நின்றானே.

தானே சிவன் ஆகும் இயல்பை அறிந்தவர் யாரும் இல்லை. தானே சிவன் ஆகும் தன்மையினை நீ கேட்பாய்! சிவன் ஆன்மாவின் நுண்ணிய ஒளியிலும், நுண்ணிய ஒளியிலும் பொருந்துவான். சிவன் இவனது வானக் கூற்றில் நன்றாக விளங்குவான்.



#768. இன்பம் இருக்கும் இடம் இதுவே


வட்டங்கள் எழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்துஉள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே.

ஆதாரச் சக்கரங்கள் ஆகிய ஏழு வட்டங்களும் மலர்ந்து நிமிரும் போது, அங்கே மேன்மை உடைய சிவம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வீர். ஓர் உபாயத்தால் சிவனுடன் பொருந்தி இருக்க முடியும். அதை அறிந்து கொண்டால் சர்க்கரைக் கட்டியைப் போல இனிக்கும் சிவன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.


கீழ் நோக்கிய ஆயிரம் இதழ் தாமரையை மேல் நோக்கச் செய்ய வேண்டும்.
நாதம் விந்து இவற்றில் சிவன் வெளிப்படுவதை அறிந்து கொள்வதே அந்த உபாயம்.




#769. உள்ளே உள்ளான் இறைவன்


காணலும் ஆகும் பிரமன் அரி என்று
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனை
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்து உடன் வைத்ததே.

ஆதாரத் தாமரைகளில் நான்முகன், திருமால், நீலகண்டன், சதாசிவன், சக்தி தேவி இவர்களைக் காண இயலும். நம் உடலிலும் உயிரிலும் இறைவன் பொருந்திருப்பதையும் அறிய முடியும்.
 
Be thankful for what you have; you'll end up having more. If you concentrate on what you don't have, you will never, ever have enough.- Oprah Winfrey
 
15. ஆயுட்பரீட்சை

வாழும் காலத்தை அறிவதற்குச் செய்யும் பரீட்சை இது.

#770. அளவான கை

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தம மிக்கிடி லோராறு திங்களாம்
அத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்த லுயிர்கொரு திங்களி லோசையே.

தலை இடத்தில் வைத்த கை பருத்தோ சிறுத்தோ இராமல் அளவாக இருந்தால் நன்மை விளையும். கை பெருத்து இருந்தால் ஆறு மாதங்களில் இறப்பு ஏற்படும். கை இரண்டு பங்கு பருத்து இருந்தால் ஒரே மாதத்தில் இறப்பு வரும்.


#771. நாதாந்தத்தில் ஈசன்


ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ;
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்;
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வுஇது ஆமே.


உள்ளத்தில் உண்டாகும் வாக்குகளின் ஓசையும் ஈசனுக்கு ஒப்பானவை. நாதத்தைக் கடந்து விட்டவர் ஈசனை நினைந்து நாதாந்தத்தில் இருப்பார். அவர்கள் மனதில் ஈசனும் ஓசையால் உணரும் உணர்வாக இருப்பான்.


#772. ஞானம் பெற்றவர் ஞாலத்தின் தலைவர்


ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமேல் உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகின் தலைவனும் ஆமே.


உள் நாக்கின் மேலே உள்ள நான்கு அங்குல அளவு தொழிற் படாததால் பிராண வாயு அழிந்து விடுகிறது. அந்த வாயுவை அழியாமல் உடலில் பொருத்த வேண்டும். அப்படிச் செய்தால் உள் நாக்கின் மேலே அடைந்துள்ள பகுதி திறந்து கொள்ளும். மூச்சுக் காற்று பிரமரந்திரம் நோக்கிப் பாயும். சஹஸ்ர தளம் விரிந்து கொள்ளும். ஞானம் நிலை பெறும். அப்போது யோகியால் ஐம்புலன்களின் துணை இல்லாமலேயே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஞானம் பெற்றவர் ஆவார் ஞாலத்தின் தலைவர்.


#773. நூறாண்டு வாழலாம்

தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை;
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்;
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே.


தலைவன் வாழ்வது இடக்கண் பார்வையில். இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையுடன் பொருத்தும் வகையை அறிந்தவர் இல்லை. இடக் கண்ணால் வலக் கண்ணுக்கு மேல் நோக்கினால் அங்கு சக்தியாகிய ஒளி விளங்குவாள். இதைச் செய்ய வல்லவருக்கு ஐந்து ஞானேந்திரியங்களும் வசப்படும். அவர் நூறாண்டு காலம் வாழ்வார்.
 
Back
Top