• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

[Request] PROCEDURE/ CORRECT WAY TO VISIT RAMESWARAM, VARANASI AND GAYA TO OFFER PITRU SRARDHAM

Hello Esteemed Members Namaskaram,

I am Balasubramanian. Myself and my brother are planning to perform pitru SRARDHAM for my father at Varanasi and Gaya. We also plan to go to Prayagraj (Allahabad) for holy dip in triveni sangamam.
Can I get to know the actual sequence for this. We are planning it during Diwali as my father's thithi falls on the day. Further guidance is requested for:
Gaya :
I need details about how to do Vishnu PadaSrardham and its cost , Accomodation and any other guidance that would help mein doing it .

Varanas: I need details about how to do Srardham and its cost , Accomodation and any other guidance that would help me in doing it.

Any information and contacts is welcome
Regards
 
kasi gaya .prayagai, rameswaram details. it is here min old threads.
 

Attachments

  • காசி-கயா-யாத்திரை-விவரம்-Kasi-Gaya-A-post-by-Shree-Gopala-Krishnan-on-Facebook (1) (1).pdf
    1.3 MB · Views: 505
Last edited:
gaya details.

Add bookmark
#2
சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்கு மாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்த வர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி; மாற்றாந்தாய்;
அன்னையின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அன்னையின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி,

அப்பாவின் சகோதரர்கள், சகோதரர்களின் மனைவிகள், புத்ரன்; புத்ரி; அப்பாவின் சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி,

அம்மாவின் சகோதரர்கள் ;சகோதரர்களின் மனைவிகள். பையன், பெண்; அம்மாவின் சகோதரிகள் ; சகோ தரிகளின் கணவர்கள், பையன்; பெண்;

தனது சகோதரர்கள், ,சகோதரர்களின் மனைவிகள், பையன், பெண். தனது சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி.

தனது மனைவி, பெண், பையன். தனது மாமனார், மாமியார்;
தனது குரு; குரு பத்னி; சிஷ்யன்; யஜமானன்; சினேகிதன்; பணியாட்கள்;

தனது வீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள், இஷ்ட ஜந்துக்கள்; தனது வம்சத்தில் தெரியாமல் விட்டுப்போன பித்ருக்கள்; இவர்களுக்கும் பிண்டம் தனிதனியே வைக்க வேண்டும்.

ராமேஸ்வரம், காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.

இந்த நா ன்கில் மூன்று தனக்கு உதவியவர்கள்; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள், நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.

நாங்காவது பிண்டம் தர்ம பிண்டம் -- தர்ம தேவதைக்கும்,பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது.

ஆதலால் மு ன்னதாகவே அம்மாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா ,பெயர் மற்றும் அப்பாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா, பெயர் பட்டியல் தயார் செய்து கொண்டு கயா செல்ல வேண்டும்.

உத்தேசம்ஆக 64 பிண்டங்கள் கயா வில் என்று சொல்லபடுகிறது.காரூணீக பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிண்டம் என்று வைக்கும் போது சிலருக்கு இதற்கு அதிக மும் தேவை படலாம்.அதிகம் தேவை படுபவர்கள் மட்டும் முன்னதாக தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மாத்ரு ஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19 பிண்டங்கள். ஸ்த்ரீ ஷோடசி 19 பிண்டங்கள் சிலர் இடுவர்.ஒரே நாளில் கயா ஸிராத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் இவ்வளவு பிண்டங்கள் செய்து கார்யம் செய்து முடிக்க முடியாது.

கயா விலுள்ள புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் பின்வருமாறு:-- சிராத்த பாரிஜாத் என்ற புத்தகத்தில் உள்ளது. ப்ருஹ்ம குண்டம்; ப்ரேத பர்வதம்; ப்ரேத சிலா; ராம குண்டம்; ராம சிலா; உத்திர மானஸ்; ஸூர்ய குண்டம்; கனக்கல்; தக்ஷிண மானஸ்; பல்குனதி; ஜிஹ்வாலோலம்;

ஸரஸ்வதி தீர்த்தம்; மதங்கவாபி; தர்மாரண்யம்; புத்த கயா; ப்ரஹ்ம ஸரோவர், விஷ்ணுபாதம்; ருத்திர பாதம்; ப்ருஹ்ம பாதம்; கார்த்திகேய பதம்; தக்ஷிணாக்னி பதம்; கார்ஹபத்னியாக்னிபதம் ஆவஹயாக்னிபதம்; ஸூர்ய பதம்; சந்திர பதம்; ஸப்யாக்னிபத, கணேச பதம்; ஸப்யாக்னிபதம்;

ஆவஸ்த்யாக்னி பதம்; மாதங்க பதம்; க்ரெளஞ்சபதம்; இந்திர பதம்; அகஸ்த்ய பதம்; தெளதபதம்; கஸ்யபபதம்; கஜகர்ணம்; ராம பாதம்; ஸீதா குண்டம்; கயா சிரஸ்; கயா கூபம்; முண்டப்ருஷ்டம்; ஆதி கயா; பீம கயா; கோப்ரசார்; கதாலோலம்; வைதரணி; அக்ஷய வடம்;

17 நாட்கள்; 8 நாள். 5 நாள்; 3 நாள் ;ஒரே நாள்; ஆகிய பல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம் செய் முறைகள் பழைய புத்தகங்களி ல் உள்ளது.

இதில் அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள் கூப கயா; மது கயா; பீம கயா; வைதரணி; கோஷ்பதம்; பல்குகங்கா நதி தீரம்; விஷ்ணுபாதம்; அக்ஷய வடம் ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

பஞ்ச கயா சிராத்தம் செய்ய விரும்புவோர் பல்குகங்கா நதி; கயா சிரஸ்; ப்ரஹ்மசிரஸ்; ப்ரேத சிலா; மதங்க வாபி ஆகிய இடங்களில் செய்தல் வேண்டும்.5 நாட்கள் தங்கி தினம் ஒன்றாக செய்ய வேண்டும்.

ஒளபாசன அக்னியில் தான் கயா சிராத்தம் செய்ய வேண்டும். ஆதலால் மனைவியை அவசியம் அழைத்து செல்ல வேண்டும்.

கர்த்தாவின் தாய் உயிருடன் இருந்தால் அம்மா வர்கத்திற்கு வரணம், பிண்டம் இல்லை.
பெற்றோர் உயிருடன் இருப்பவர்களுக்கு கயா சிராத்தம் கிடையாது. பிள்ளை இல்லா விதவை பிள்ளை இருந்தும் வர இயலாத நிலைமையிலும் இருப்போர் ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

தாய் இல்லாத, தகப்பன் மட்டும் ஜீவித்திருக்கும் கர்த்தா அம்மாவிற்கு பார்வண சிராத்தம் மட்டுமே செய்ய முடியும் கயாவில். பல்கு நதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷய வடம் சிராத்த, பிண்ட தானம் செய்ய முடியாது. ஆனால் மற்ற நதீ தீரங்களில் அப்பாவிற்கு யார் பித்ரு தேவதைகளோ அவர்களை உத்தேசித்து கர்த்தா தீர்த்த சிராத்தம் செய்யலாம்.

கயாவிற்கு பிண்ட தானம் செல்லும் வழியில் பாதியில் திரும்ப நேர்ந்தால் ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.யாத்திரை மத்தியில் தீட்டு குறுக்கிட்டால் , நிவ்ருத்தி ஆன பிறகு தொடர வேண்டும். மாத விடாய் குறுக்கிட்டால் ஐந்து நாட்கள் ஆன பிறகு தொடர வேண்டும்.

கயாவில் மங்களா கெளரி கோயில், புத்த கயா, ப்ருஹ்ம யோனி, மாத்ரு யோனி கோவில்கள்
குன்றுக்குள் மிக குறுகலான பாதைகள் உள்ளன, .ஊர்ந்து சென்று மீள இயல்வோர்கு மீண்டும் கருவடையும் கஷ்டம் இருக்காது என்று ஒரு நம்பிக்கை.

புத்த கயாவிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் தர்ம ராஜர் யக்யம் செய்த இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அக்ஷய வடம் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விஷ்ணுபாதம் உள்ளது.

மாலை வேளையில் விஷ்ணு பாதத்தின் மேல் ஒரு வெள்ளை துணி இட்டு நகல் எடுத்து கொடுப்பார்கள். அதை உடனே எதிரில் உள்ள கடையில் கொடுத்தால் அதை அழகு படுத்தி மறு நாள் கொடுப்பர். அதை லேமினேட் செய்து ஊருக்கு எடுத்து வந்து ப்ரேம் போட்டு,

யாத்ரா ஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்து பூஜித்து பூஜை அறையில் வைத்து கொண்டு தாய் தந்தையர் சிராத்தமன்று சந்தன கட்டைக்கு பதிலாக இந்த விஷ்ணு படத்தை விஷ்ணு ப்ரதினிதியாக பயன் படுத்தலாம்.

கயாவில் தங்க வேண்டுமென்றால் பழைய வேஷ்டி, பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட், கொசு வத்தி , ஸ்ப்ரே, மெழுகுவர்த்தி, குடிக்க தேவையான குடி தண்ணீர் கேன் , காசியிலிருந்து எடுத்து வர வேண்டும்.

கயாவில் முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம் செய்ய வேண்டும். வேதங்களில் உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும். சரீரத்தை வருத்திக்கொண்டு கர்மாக்களை செய்வதினால் பாப விமோசனம் கிடைக்க பெற வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்யப்படும் கார்யங்களால் தான் உலகம் உருவாகி இருக்கிறது. சிராத்தம் செய்வதால் தர்மம் நிலை நிறுத்த படுகிறது. சிராத்தம் செய்வதால் யாகம் செய்த பலன் கிடைக்கிறது. மன ஆசைகள் கிடைக்கிறது.


ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்த பலனை முழுவதுமாக பெற பெற்றோர் ஜீவித காலத்தில் அவர்கள் சொல் படி கேட்டு நடத்தல். அவர்கள் இறந்த பின் சிராத்தம் , பித்ரு போஜனம் செய்வித்தல்; கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல்ஆகிய மூன்றும் செய்தல் வேண்டும்.

கயா வில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராக த்யானம் செய்து பிண்ட ப்ரதானம், சிராத்தம் செய்பவன் தனது பரம்பரையில் நூறு தலை முறையை கரை ஏற்றி ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்க செய்கிறான்.

பொது விதியாக சாந்திரமான படி அதிக மாதம், குரு சுக்கிர அஸ்தமன காலங்களில் க்ஷேத்ராடனம் செய்ய கூடாது என்று உளது. வைத்னாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின் படி காசி, கயா, கோதாவரிக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.

கயாவில் செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்கு ஆவாஹனம் கிடையாது. அன்னியரால் பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில் அங்கு கடை பிடிக்கபடும் ஸம்ப்ரதாயங்களே முக்கியம். வெளியூர் ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோக பத்ததிகள், மடி,ஆசாரம், ஜாதிகளின் வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள், குலங்களின் தனித்வம் ஆகிய அனைத்தும் தள்ளுபடி.

அங்குள்ள ஆசார்யன் சொல்வதை கேட்டு அதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கி மன நிறைவு பெற வேண்டும்.

சிராத்த ஆரம்பத்திலும், நடுவில், முடிவில் மூம்மூன்று தடவை பித்ரு மந்திரம் ஜபிக்க வேண்டும். பித்ரு மந்திரம்:---தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்ச ஏவச
நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.

கயா சிராத்தம் , கயாவில் குறைந்த பக்ஷம் மூன்று சிராத்தங்கள் ஒரே நாளில் செய்யபடுகிறது. தான் தங்கி இருக்கும் சாவடியில் ஒன்று. பல்கு நதி கரையில் மண்டபத்தில் இரண்டு. பல்கு நதியில் ஊற்று தோண்ட நீர் எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும்.


பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷயவட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

பல கர்த்தாக்களுக்கு ஒன்று சேர க்ரியைகள் நடக்கும். அந்தந்த கர்தாவிற்கு மண்டபத்திலேயே தனி தனி மண் பானைகள் அவரவர் மனைவிகள் அன்னம் தயாரிக்க வகை செய்ய படுகிறது.
அவற்றில் ஒரு பானை அன்னத்தில் பல்கு தீர்த்த சிராத்தமும், 17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.

மற்றொரு பானை அன்னத்தில் விஷ்ணுபாத சிராத்தத்திற்கும் , 64 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.அன்னம் தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்து கர்த்தாக்கள் சிராத்தம் செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கி வரும் படிகள் மிக செங்குத்தாக இருப்பதால் கவனம் தேவை.

பல்கு நதி 17 பிண்ட ப்ரதானம் முடிந்த வுடன் பிண்டங்களை பல்கு நதி நீரில் கரைக்க வேண்டும்.பசு மாட்டிற்கு வைப்பது இரண்டாம் பக்ஷம். இங்கேயே விஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம் , 64 பிண்டம் வைத்து பிண்ட ப்ரதானம் செய்து இந்த 64 பிண்டங்களை எடுத்து சென்று விஷ்ணு பாதத்தில் கொட்டி வணங்க வேண்டும். தர்பணங்கள் இல்லை.

அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு இந்த 64 பிண்டங்களுடன் திரும்பி சென்று, அங்கே தாக சாந்தி செய்து கொண்டு அக்ஷய வட கயா சிராத்தம் பார்வண முறைப்படி ஹோமத்துடன் செய்ய வேண்டும், குறைந்தது 5 கயா வாலி அந்தணர்களை வரித்து போஜனம் செய்து வைக்க படுகிறது. இதற்காகத்தான் கயா வருகிறோம். அப்பா வர்கம், அம்மா வர்கம், அம்மாவின் அப்பா அம்மா வர்க்கம். விசுவேதேவர், காருண்ய பித்ரு என ஐந்து பேர்.

இந்த கயா வாலீ அந்தணர்களுக்கு ஒவ்வொருவற்கும் குறைந்த பக்ஷமாக வேஷ்டி--அங்கவஸ்திரம், விசிறி, ஆஸனம், தீர்த்த பாத்திரம் ,தக்ஷிணை தர வேண்டும், உங்கள் ஊரிலிருந்து இவைகளை வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். மிக சிறந்த தேன், நெய் உங்கள் ஊரிலிருந்து வாங்கி வந்து இங்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு சாவடியில் ஒரே சமயத்தில் பல கர்த்தாக்கள் சிராத்தம் செய்தாலும் அவரவர்களுக்கு தனி தனியே சிராத்த சமையல் செய்யப்பட வேண்டும்.அவரவர் மனைவியே சமையல் செய்யலாம்.சிப்பந்தி தனியாக ஏற்பாடு செய்தும் செய்யலாம்.

கர்த்தாவின் மனைவியே அன்னம், பாயஸம், பரிமார வேண்டும். ஆபோசனம், உத்திராபோஜனம், கர்த்தாவின் மனைவியே போட வேண்டும்.

பித்ரு போஜனம் முடிந்த உடன் கயா வாலிகட்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு , நைவேத்திய பக்ஷணங்கள், 64 பிண்டங்கள் எடுத்து க்கொண்டு அக்ஷய வட சாயாவிற்கு செல்ல வேண்டும்,. இங்குதான் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.

அக்ஷய வட சாயாவில் ஒரு ப்ராஹ்மண போஜனம் செய்தால் ஒரு கோடி ப்ராஹ்மண போஜனம் செய்த பலன் உண்டு. முன்னோர்களுக்கு ப்ரஹ்மலோக ப்ராப்தி கிடைக்கிறது எங்கிறது கயா மாஹாத்மியம் எனும் புத்தகம்.

பித்ரு போஜனம் சாப்பிட்ட ஒருவர் அக்ஷய வட சாயாவிற்கு வருவார். அவரிடம் த்ருப்தி கேட்டு பெற வேண்டும். ஒரு இலை, ஒரு காய்,ஒரு பழம் ஆகியவற்றை ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த மாட்டோம் என கர்த்தாவும், அவரது மனைவியும் ஸங்கல்பம்

செய்து கொள்ள வேண்டும். இந்த இலை, காய், பழத்தினை கார்த்திகை மாதத்தில் உங்கள் ஊரில் நிறைய தானமாக வழங்க வேண்டும். இந்த காய் ,இலை, பழத்தினை இவர்கள் இறந்த பிறகு வருடா வருடம் வரும் சிராத்தத்தில் உபயோக படுத்த கூடாது.இவர்கள் விடும் காய்,பழம் ப்ரத்யாப்தீக சிராத்தத்தில் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும்.

கயாவில் சிராத்தம் செய்து வைத்த வாத்யாருக்கு அக்ஷய வட சாயாவிலேயே வஸ்த்ர தானம், ஸம்பாவனை போன்றவற்றை கொடுக்க வேண்டும்.கர்த்தாவிடும் காய், பழம் வாங்கி கயா வாத்யாருக்கு கொடுக்க வேண்டும். அல்லது இதற்குண்டான பணம் தர வேண்டும்.

பிறகு கர்த்தா தான் தங்குமிடம் வந்து சாப்பிட வேண்டும். நிச்சயம் 3 மணிக்கு மேலாகிவிடும்.

பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்
 
Kasi gaya contact details
09451372420. sons of late swamimalai visvanatha sastrikal V RAMASESHA SASTRIKAL ANSD KRISHNA MURTHY GANAPADIKAL. B-5 /311 oudghabi (hanuman ghat) VARANASI
PIN:221001. phone( 0542 ) 22310133 ; 2310134; 2275173////cell; 93353 33137 and 94153 36064

irst you must go to RAMESWARAM and then to kasi and again to Rameswaram is the correct proceedure for iyers. So I am also giving the sastrigal's name s in RAMESVARAM. S. RADHA KRISHNA VADHYAR. Sri mathre graham. PHONE; (04573) 221943. cell; 9443508843; 9442461923; For boarding and lodging HOTEL TAMIL NADU IS THERE. KASI MUTT; LODGE PHONE NO; (04573) 223130.

K.R. VENKATARAMA SASTRIGAL. (04573) 223636, 222068. cell; 94866 72258.

SHRI. SWAMINATHA SARMA rameswaram cell; 99433 08217. He is doing THILA HOMAM AT HIS RESIDENCE FOR PITHRU SAPA/DOSHA NIVRUTHY.

In the ramanatha swamy temple daily early morning spatika linga sevai is there at 5 a. m. entry fee rupees fifty only. Sankara mutt is having AC ROOM AND NON AC ROOM . and sri. sundar sastrigal is there in sankara mutt. (sringeri sankara muut),. cell no; 09443321641 .

NAVA BHASHANAM DEVI PATTINAM. SRI. V. JAGANNATHA IYENGAR 1/58 PERUMAL KOIL STREET NABASANAM PIN; 623514. PHONE: (04567) 264501.

THIRUPULLANI; TPR. SRI. LAKSHMANA SASTRI. (04567) 254261 for tila homam.


If the 5th and 10th house lords are ill placed and the running dasa is of the ill placed planets this combines the pithru dosham. after tila homam here you have to do anna dhaanam in sholingur.
Swami malai V.RAMASESHA SASTRIGAL;V KRISHNAMOORTHY GANAPADIGAL. B-5OUDGHARBI ( HANUMAN GHAT) VARANASI. 221001. PHONE NO; (0542) 2310133, 2310134, 2275173.

ARIYUR S. MAHADEVA GANAPADIGAL; B-5/309 HANUMAN GHAT; VARANASI PIN: 221001 PHONE (0542) 2277117; 2275800, 2276244. cell; 93369 11879; 99562 76851.

ARIYUR S. VISWANATHA GANAPADIGAL; B-5/286 AWADHGARBI, HANUMAN GHAT, VARANASI 221001. PHONE; 2277719, MOBILE; 9451372420.

FOR IYERS; RIG/YAJUR/ SAMA VEDAMS. They can take you to allahabad and to gaya and in kasi they can do all rituals. For middle class people viswanatha ganapadigal is the best.

Gaya : Karnatak Bhavan M.N Bacchu Acharya Ram Sagar, Nal Sadak Road, Near Panch Mahalla, Gaya – 823 001 ph : 0631-2435432, 99318 40631, 99340 23514
2. Thambu Shastrigal (Iyengar) - 9956513388
 
rameswaram, prayagai, kasi,gaya travelogue.
 

Attachments

  • காசி-கயா-யாத்திரை-விவரம்-Kasi-Gaya-A-post-by-Shree-Gopala-Krishnan-on-Facebook (1) (1).pdf
    1.3 MB · Views: 149
அலஹாபாத்தில் செய்ய வேண்டியவை:-ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து சங்கல்பம், செய்ய வர வேண்டும்.



1. அனுக்ஞை= பர்மிஷன். சங்கல்பம்.

2.விக்னேஸ்வர பூஜை:-3. ப்ராயஸ்சித்த சங்கல்பம், க்ரஹ ப்ரீதி; க்ருச்சராசரணம்; மஹா சங்கல்பம்.

4.வேணி தானம்; 5. ராமேஸ்வரத்தில் பூஜை செய்து எடுத்து வந்த மணலை கரைத்தல்; வபனம் : 6. த்ரிவேணி சங்கம ஸ்நானம். 7. ஹிரண்ய சிராத்தம்.

8. பிண்ட ப்ரதானம்-க்ஷேத்ர பிண்டம்= (16.) தர்ப்பணம்; ப்ருஹ்ம யஞ்யம்.


9. வேணி மாதவர் தரிசனம்; 10. வட வ்ருக்ஷ தர்சனம்; 11.சுத்தமான கங்கை நீர் பிடித்து வைத்துக்கொள்ளுதல்; 12. ராம் காட் ஹனுமார் தரிசனம்;

13. காஞ்சி காம கோடி கோயில் தரிசனம்; 14. தம்பதி பூஜை.


சென்னையிலிருந்து கங்கா காவேரி எக்ஸ்ப்ரஸ் வாரத்திற்கு இரு முறை செல்கிறது அதில் முன் பதிவு முன் கூட்டியே செய்து கொண்டு 36 மணி நேரம் ரயிலில் சென்றால் அலகாபாத் அடையலாம். வசதி உள்ளவர்கள் 2 டயர், 3 டயர் ஏ.சி கோச்சில் செல்லலாம். ஆகாய விமானத்தில் சென்றால் 2 மணி நேரத்தில் அலகாபாத் செல்லலாம்.



பரிப்ராஜகோபனிஷத் :- யானி கானி ச பாபானி ப்ருஹ்மஹத்யா ஸமானி ச கேசான் ஆஶ்ருத்ய திஷ்டந்தி தஸ்மாத் கேசான் வபாம்யஹம். ப்ரும்ஹ ஹத்தி முதலான பாபங்கள் முடியில் சென்று உறைந்து விடுகின்றன. எனவே ப்ராயஸ்சித்தத்திற்காக கேசத்தை களைந்திடல் அவசியம்.( மன வருத்தம் பாராட்டாமல்). த்ரிவேணி சங்கம ஸ்நானம் செய்வதற்கு முன்னால் , வேணி தானத்திற்கு தயாரன பிறகு கர்த்தா முண்டனம் ( வபனம்) செய்து கொள்ள வேண்டும். கனவனின் நல் வாழ்வை வேண்டி , பத்னியர் தலை முடியை வெட்டி த்ரிவேணிக்கு ஸமர்ப்பிப்பது சோபிதமான செயலாகும்.இரண்டு அங்குலம் வெட்டி வேணிக்கு தானம் செய்வது மூலம் அனைத்து மன விருப்பங்களும் நிறைவடையும்.யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். இதனால் பணம், வம்ச வ்ருத்தி, ஆயுள் வ்ருத்தி, ஸெளபாக்கியம் உண்டாகும்.




சுக்ல பக்ஷத்தில் ஒரு நல்ல திதியில் ஏற்புடுய நல்ல நக்ஷத்திரத்தில் செய்வது நல்லது. இதன் ப்ரகாரம் ப்ரயாண தேதியை தேர்ந்தெ டுக்கலாம் . த்ரிவேணி தேவி, கணவர், ப்ராஹ்மணர்கள், சுமங்கலிகள் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.மடி உடுத்தி கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஆசனத்தில் அமர்ந்து வாத்யார் சொல்கின்றபடி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். திதி வாரம் நக்ஷத்திரம் சொல்லி பிறந்தது முதல் இந்நாள் வரை அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை பட்டியலிட்டு , அவற்றை அழிக்க வேண்டி, தனது ஸெளபாக்கியம், கணவரின் ஆயுள் ஆரோக்கிய அபிவ்ருத்தி புத்ர பெளத்ராதிகளின் நல் வாழ்வையும் வேன்டி, , தன் கணவர் மற்றும் மற்ற அந்தணர்கள் ஸம்மதத்துடன் , வேணி மாதவரின் நல்லாசி வேண்டி, வேணி தானம் செய்கிறேன். இதுவே வேணி தான ஸங்கல்ப மந்திரத்தன் அர்த்தம்.



தலை முடி பிறிந்து விடாமல் முடிந்து வைத்த வண்ணம், , முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவரின் கையை பிடித்தபடி இருவரும் சேர்ந்து த்ரிவேணி ஸங்கம ஸ்நானம் செய்ய வேண்டும். மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்ய வேண்டும். வேணி தானத்திற்கு மனைவி கணவனிடம் அனுமதி பெற வேண்டும்.



ஸுமங்கலிகளுக்கு ரவிக்கை துண்டு, ஸெளபாகிய த்ரவ்யங்கள் கொடுக்க வேண்டும். 9 X 5 வேஷ்டி 5, மற்றும் வாத்யாருக்கு 2; 9 கஜம் புடவை-1.

ஸெளபாகிய சாமான் செட்-2.; காலுக்கு வெள்ளி மெட்டி, திரு மாங்கல்யம், தங்கத்தில். தம்பதி பூஜைக்கு.

தச தானம் := தங்கம், வெள்ளி, பசு , பூமி , வேஷ்டி, உப்பு, எள்ளு; தான்யம், வெல்லம், நெய்; முதலியன. இவற்றிர்க்கு மொத்தமாக பைசா வாக தானம் செய்து விடலாம்.

அலகாபாத்திலிருந்து ரயில்வசதி கயா செல்ல உள்ளது. காசியிலிருந்து மிக குறைவாக உள்ளது. ஆதலால் ஒரே நாளில் இவை எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு ரிசர்வ் முன் கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும். இரவு கயா சென்று கயாவிலும் ஒரே நாளில் எல்லாம் முடித்துகொண்டு அன்று இரவே காசி வந்து விடலாம்.



கயாவில்:- 1. பல்குனி நதி தீர்த்த ஸ்னானம்; மஹா ஸங்கல்பம்; தண்ணிர் இருக்காது. சொம்பில் தண்ணிர் ஊற்றிலிருந்து எடுத்து ப்ரோக்ஷித்து கொள்ளலாம். 2. பல்குனி நதி கரையில் ஹிரண்ய சிராத்தம்; க்ஷேத்ர பிண்டம் 17 எண்ணிக்கை; பசு மாட்டிற்கு இதை கொடுக்க வேண்டும். 3, தில தர்ப்பணம்; 4. விஷ்ணு பாத ஹிரண்ய சிராத்தம்; 5. 64 பிண்டம்-பிண்ட ப்ரதானம்; 6. விஷ்ணு பாதத்தில் க்ஷேத்ர பிண்ட தரிசனம்; 7, மாத்ரு ஷோடசி; 8. அக்ஷய வடம் அன்ன சிராத்தம்-ஹோமம். அல்லது ஹிரண்ய சிராத்தம்; 9. அக்ஷய வட பிண்ட ப்ரதானம்; க்ஷேத்ர பிண்ட தானம்; 10. த்ருப்தி தக்ஷிணை; ஆசார்ய சம்பாவனை; 11. காய்,இலை, பழம் விடுதல்; 12. போதி மர தர்சனம்; 9X5 வேஷ்டி--5 அல்லது 2; 5 கயா வாளிகள் சாப்பிட வேண்டும். தற்காலத்தில் கயா வாளிகள் குறைந்து விட்டார்கள். முன்னதாகவே சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும்.



அலகாபாத்திலோ அல்லது கயா விலோ அல்லது காசியிலோ புது பூணல் அணிய வேண்டும். வசதி உள்ளவர்கள் காசிக்கு சென்று அங்கிருந்து ஒரு நாள் அலகாபாத் காரில் சென்று எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு திரும்ப காரில் காசிக்கு வந்து , திரும்ப கயாவிற்கு காரில் ஒரு நாள் சென்று இரவே காரில் திரும்ப காசி வந்து விடலாம்.ஸ்வாமி நாத சாஸ்திரி; ( சிவகுமார்) ; கே. வெங்கடராமன் சாஸ்த்ரி; காசியில் உள்ளார். B-5/311 OUDGHARBI ( HANUMAN GHAT)

VARANASI- 221001; E MAIL :-rshiv [email protected]; www. Shrikashiyatra.com; phone no; (0542)2276134; 2275173; 2276533; cell:- 91 93369 12058; 93353 33137; 94153 36064;



இவரிடம் எல்லா வசதியும் உள்ளது. இட வசதி, போஜன வசதி. கோவில் தரிசனம்; கார் வசதி; ஹிரண்ய சிராத்தம், அலஹாபாத், கயா சிராத்தமும் இவர்களே பொருப்பேற்று செய்து தருகிறார்கள். ஒரு மாதம் முன் கூட்டியே இவர்களிடம் எழுதி தெரிந்து கொள்ள வேன்டும்.



அடுத்து அரியூர் மஹாதேவ கண பாடிகள்- B-5/309 HNUMAN GHAT;VARANASI-221001; (0542) 2277117; 2275800; MOBILE NOS; 87957 77888; 98949 61599; 96708 04000;

KASI SANKARA MUTT- MANAGER-CHANDRA SEKAR (0542) 9554 66613.; 9415 22872;

2276932; 2276915 ;



காசியில்:- 1. அனுக்ஞை; விக்னேஸ்வர பூஜை; 2. பூர்வாங்க சங்கல்பம்

நவகிரஹ ப்ரீதி தானம்; பூர்வாங்க தச தானம்; நாந்தி சிராத்தம்; வைஷ்ணவ சிராத்தம்; புண்யாஹ வசனம்; மஹா சங்கல்பம்; ப்ராயஸ்சித்த சங்கல்பம்; பல தானம்; மஹத் ஆசீர்வாதம்; உத்தராங்க பசு தானம்;



சக்ர தீர்த்த ஸ்நானம்; மணி கர்ணிகா தீர்த்த ஸ்நானம்; பார்வண விதானமல்லது ஹிரண்ய ரூப சிராத்தம்; ப்ராஹ்மண போஜனம்; அன்ன ரூப தீர்த்த சிராத்தம்; பிண்ட தானம்; க்ஷேத்ர பிண்ட தானம்; தில தர்ப்பணம்; ப்ருஹ்ம யக்யம்;

1 அசி கட்டம்:- ஹரித்வாரில் செய்த பலன் கிடைக்கும்.

2 தச அஸ்வமேத கட்டம்:- ப்ருஹ்மா 10 அஸ்வமேத யாகம் இங்கு செய்ததால் இந்த பெயர்.

3 திரிலோசனா கட்டம், அல்லது வாரணா கட்டம்:-விஷ்ணு பாத உதக தீர்த்தம்.

4 பஞ்ச கங்கா கட்டம்:-கங்கை, யமுனை, ஸரஸ்வதி, கிராணா, தூதப்பா என்ற இவை ஐந்தும் இங்கு சங்கமம். இங்கு பிந்து மாதவர் கோயில் உள்ளது.

பிந்து மாதவர் அவசியம் தரிசிக்க வேண்டும். 250 படி ஏறி பிந்து மாதவரை பார்க்கலாம். அர்ச்சனை செய்யலாம்.

5 மணிகர்ணிகா கட்டம்:- சக்ர புஷ்கர தீர்த்தம்.சிறிது தூரத்தில் பக்கத்தில் ஒரு குளம் உள்ளது. முதலில் அங்கு சென்று ஸ்நானம் செய்துவிட்டு பிறகு மணி கர்ணிகா கட்டத்திலும் ஸ்நானம்.



இந்த ஐந்து கட்டங்களிலும் க்ஷேத்ர பிண்ட தானம். ஒவ்வொன்றிலும் 17 பிண்டம். உதிரி அன்னம் நைவேத்தியத்திற்கு. மனைவி உயிருடன் இல்லாதவர்கள் சென்றால் மனைவிக்காக ஒன்று17+1=18 பிண்டம்.

மோட்டார் படகில் இந்த 5 கட்டங்களுக்கும் செல்ல வேண்டும். படகிற்குள் குமிட்டி அடுப்பு, கரி இருக்கும், அடுப்பு பற்ற வைத்து கங்கை தண்ணீர் அரிசியில் ஊற்றி சாதம் வடித்து 17 பிண்டம் பிடித்து வைக்க வேண்டியது கர்த்தாவின் மனைவியின் வேலை. கர்த்தா பிண்டம் வைத்து முடிந்த பின் பாத்திரத்தை அலம்பி வைக்க வேண்டும். மறு கட்டம் படகு செல்லு முன் மறுபடியும் அரிசியை சாதம் வடித்து பிண்டம் பிடித்து வைக்க வேண்டும். இம்மாதிரி 5 கட்டங்களிலும் செய்ய வேண்டும். மடிசார் புடவை கட்டி கொண்டு வர வேண்டும். மோட்டர் படகிற்கு.



இம்மாதிரி ஒரு படகில் ஒரு நேரத்தில் 5 குடும்பம் சென்று பிண்ட தானம் செய்து திரும்பி வரலாம். படகோட்டிக்கு பணம் இந்த ஐவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

பிண்டத்தை கங்கையில் கரைத்து விடலாம். தர்பைகளை கங்கையில் போட வேண்டாம்.

தில தர்ப்பணம். ப்ருஹ்ம யக்ஞ்யம். கங்கா பூஜை செய்ய வேண்டும்.



கால பைரவர் கோயிலுக்கு சதுர்தசி அன்று செல்வது விஷேசம்.

ப்ருத்வீ லிங்க பூஜை:- ஓம் ஹராய நம: என்று சொல்லி மண் எடுத்து ஓம் மஹேஸ்வராய நம என்று சொல்லி நீர் ஊற்றி பிசைந்து லிங்கமும் பீடமும் செய்க. ஓம் சூல பாணயே நம: என்று சொல்லி ப்ரோக்ஷணம் செய்க.ஓம் பசுபதயே என்று சொல்லி பூஜை செய்க. ஓம் மஹாதேவாய நம: என்று சொல்லி தண்ணீரில் கரைத்து விடவும்.



காசியிலும் தம்பதி பூஜை செய்ய வேண்டும். 9 கஜம் புடவை+ ரவிக்கை-1.

வெள்ளி மெட்டி காலுக்கு-4; தங்க திருமாங்கல்யம்.-1. ஸெளபாக்கிய திரவியங்கள். = கண்ணாடி, சீப்பு, மஞ்சள். குங்குமம். கண்ணாடி வளையல். மெகந்தி, கண் மை; 9x5 வேஷ்டி-1. புஷ்பம், பழம். தாம்பூலம்.தக்ஷிணை. தற்காலத்தில் பண வசதி இல்லாதவர்கள் ஜுவெல்லரி கடையில் விற்கும் ஸ்வாமி படத்திற்கு வைக்கும் தங்கத்தில் பொட்டு கிடைக்கிறது. இதில் ஒன்று ஆயிரம் ரூபாய் விலை ஆகிறது. திருமாங்கல்யத்திற்கு பதில் இதை கொடுக்கவும்.

போஜனம் செய்யும் ஐவருக்கும் 9x5 வேஷ்டி-5. ஒரு நாள் பார்வண விதிப்படி ஹோமம் செய்து சிராத்தம் செய்ய வேண்டும். தினமும் மாலை வேளைகளில் கோயில்களுக்கு சென்று வழி பட வேண்டும்.

காசி விசுவ நாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக கடுமையாக உள்ளது. கையில் எதுவும் எடுத்து செல்ல முடியாது. பெரு மழை காலங்களில் , கங்கையில் வெள்ள பெருக்கு உள்ள நாட்களில் படகுகள் ஓட்ட அரசு தடை விதிதுள்ளது. யாத்திரை செல்ல திட்ட முடுவோர் ஞாபகம் வைத்து கொள்ளவும்.தீபாவளிக்கும் சிவ ராத்ரிக்கும் இடைபட்ட காலம் அதிகமான குளிர் காலம். ஏப்ரல், மே மாதம் அதிக வெய்யல் கோடை காலம். மஹாளய பக்ஷ காலமும் கூட்டம் அதிகம் வரும். தீபாவளியும், மகர சங்கராந்தியும் திரு விழா காலம்.



மார்ச், ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் சென்று வரலாம். தேவி பாகவதம் மற்றும் வாயு புராணம் புத்ரனின் கடமை பற்றி இவ்வாறு கூறுகிறது. பெற்றோர்களின் ஜீவித காலத்தில் அவர்கள் சொற்களை மீறாமலிருத்தல், அவர்கள் அமரர் ஆன பின் அவர்களது திதியில் சிராத்தம் செய்து பித்ரு போஜனம் செய்வித்தல், கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல் ஆகிய இம்மூன்றும் தான் ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்ததின் பூரண பலனை அவனுக்கு ஸித்திக்க வைக்கும். காசியில் சிறு சந்துகள் அதிகம். அதில் செல்லும்போது தடை விதிக்கபட்டிருந்தும் அவ்விடங்களில் டூ வீலர் களில் சவாரி செய்வோர் அதிகம் உள்ளது. கவனம் தேவை. மிகுந்த ப்ரயாசை பட்டு காசிக்கு சென்று விட்டு அங்கு உள்ள எல்லா நாட்களிலும் கங்கையில் சங்கல்ப ஸ்நானம் செய்யாமல் இருக்க வேண்டாம்.



காசிக்கு காலை 8 மணிக்கு சென்றடைந்தால் அந்த நாளை ஆலயங்கள் பார்க்க வைத்து கொள்ளுங்கள். காசிக்கு மாலையில் வந்தால் தசாஸ்வ மேத கட்டத்தில் , மாலை சுமார் 6-30 மணிக்கு ஆரம்பிக்கும் கங்கா ஆரத்தியை போய் பாருங்கள். அல்லது விசுவ நாதர் ஆலயத்தில் மாலை 7-30 மணிக்கு நடக்கும் ஸப்தரிஷி பூஜை தரிசிக்கலாம்.



காசியில் முதல் நாள் காலை தங்கியுள்ள இடத்தில் ஸ்நானம் செய்து சுத்த வஸ்த்ரம் தரித்து பிள்ளையார் பூஜை, கங்கா ஸ்நான சங்கல்பம், கிரஹ ப்ரீதி, க்ருச்சராசரனம், ப்ராயசித்த தானங்கள், செய்து கங்கை ஸ்நானம் செய்துவிட்டு தீர்த்த சிராத்தம், ஹோமம், ப்ராஹ்மண போஜனத்துடன் செய்யவும். பின்னர் பிண்ட ப்ரதானம்:-க்ஷேத்ர பிண்டத்துடன் 17 பிண்டங்கள் வைத்து தர்பணம் செய்ய வேண்டும்.



பிண்டங்களை கங்கையில் கரைக்கலாம், அல்லது பசு மாட்டிற்கும் கொடுக்கலாம். மாலையில் கோயில் தரிசனம்.

இரண்டாம் நாள் காலை ஐந்து கட்ட ஸ்நானம், ஐந்து தீர்த்த ஸ்ராத்தம், பிண்ட ப்ரதானம், கங்கா பூஜை. ஐந்து மணி நேரமாகும். மாலையில் கோயில், ஷாப்பிங்க், இத்யாதி.

மூன்றாவது நாள் தம்பதி பூஜை; முடிந்தவுடன் ஐந்து ப்ராஹ்மணர்கள் வரித்து ஸமாராதனை செய்ய வேண்டும்.



பிற்பகல் வேளைகளில் விசுவனாதர், விசாலாக்ஷி, அன்ன பூரனி, கால பைரவர்,டுண்டி கணபதி, சங்கடமோசன ஆஞ்சனேயர்,காசி மன்னர் அரண்மனை, சாரனாத்,பிந்து மாதவர், தண்ட பானி,பனாரஸ் ஹிண்டு யூனிவர்சிடி, கெளடி மாதா ஆலயம், துர்கா கோவில், முதலியன பார்க்க வேண்டும். அஷ்டமி, சதுர்தசி, ஞாயிறு, செவ்வாய் காலபைரவர் தரிசனம் நல்லது.



கால பைரவர் ஆலயம் செல்லும் போது அங்கு கறுப்பு கலர் ரக்ஷை கயிறுகள் தேவை பட்ட எண்ணிக்கை வாங்கி அவற்றை பூஜாரியிடம் கொடுத்து காலபைரவர் காலடியில் வைத்து புனித மாக்கி வாங்கி வர வேண்டும்.மயில் பீலி தண்டத்தால் கால பைரவர் ஸன்னதியில் பைரவ தன்டனை அவசியம் பெற வேண்டும்.



விசுவ நாதர் ஆலயத்திற்கு அருகாமையில் ஒரு ஆஞ்சனேயர் சன்னதி. அதன் பின்புறம் ஒரு ஆலமரம் உள்ளது. இதன் வேர் அலஹாபாத்தில் உள்ளது. இதன் கிளைகள் கயாவில் உள்ளது. இது மத்திம பாகம்.ப்ரதக்ஷிணம் செய்ய முடியாது. பார்க்கலாம்.



அலஹாபாத்தில் ஒரு நாள், கயாவில் ஒரு நாள், காசியில் மூன்று நாள்.முண்டம், தண்டம், பிண்டம் இம்மூன்று ஊர்களில் இவைகளை முடித்து கொண்டு சென்னை திரும்பலாம்.திரும்பி வருவதற்கும் சென்னையிலேயே ரிசர்வேஷன் டிக்கட் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.



2018ம் வருடம் . அலாஹாபாத்தில் வாத்தியார் தக்ஷிணை3000/ரூபாய். கயாவிலும் தக்ஷிணை 3000/ரூபாய், காசியில் தக்ஷிணை 6000ரூபாய் ஆகிறது. பாக்கேஜ் என்று சொல்லி 40,000 டு 50,000 ரூபாய் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகாரம், தங்குமிட வாடகை, இது தவிர .கோயில்களுக்கு செல்ல வேன் உள்ளது. அதில் அழைத்து போய் எல்லா இடங்களையும் காண்பித்து , திரும்ப கொண்டு வந்து விடுவார்கள். இதற்கு பணம் செல்லும் நீங்கள் எல்லாரும் பகிர்ந்து கொடுக்கலாம்.



கால பைரவர் ஆலயத்தில் பைரவாஷ்டகமும், அன்ன பூரணி கோயிலில் அன்னபூர்ணாஷ்டகமும், விசுவ நாதர் ஆலயத்தில் விசுவ நாதாஷ்டகம் ஒரு முறையாவது பாராயணம் செய்து மன நிறைவு பெறலாம். கையில் இப்புத்தகம் எடுத்து செல்லுங்கள்.



தர்ம ஸாதனங்கள்:- காசி மஹாத்மியம் 136ம் பக்கம்:- ஸத்யத்தை கடைபிடித்தல், மடி ஆசாரமாய் இருத்தல்; அஹிம்சை; சாந்தம்; வள்ளல் தன்மை;கருணை, அடக்கம், களவு எண்ணமின்மை; புலனடக்கம் ஆகியவை அறநெறி பற்றி ஒழுகும் வழிகள்.
 
திரும்ப ராமேஸ்வரம் செல்ல டிக்கட் ரிசர்வ் செய்து கொள்ளவும். இரவு சென்னையில் கிளம்பினால் காலை ராமேஸ்வரம் சென்று லாட்ஜில் ரூம் போட்டுகொண்டு, நேரே ராமனாத ஸ்வாமி கோவிலுக்கு செல்லலாம். அங்கு எல்லா கிணற்றிலும் குளிக்க 25 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கி கொண்டு, முதலில் கடலில் குளித்து விட்டு எல்லா கிணற்றிலிருந்தும் குளித்துவிட்டு, ராம நாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய டிக்கட் வாங்கி கொண்டு அபிஷேகம் செய்து விட்டு வந்து விடலாம். கோவிலில் உங்கள் கங்கா தீர்த்தம் கன்டைய்னெர் திருப்பி தர மாட்டார்கள்.



அன்று இரவே கிளம்பி திரும்ப வந்து விடலாம்.







வாராணாசியில் 5 கட்ட தீர்த்த சிராத்த முடிவில் , தர்பணத்திற்கு பிறகு படகிலேயே அல்லது கங்கை கரையில் கங்கா பூஜை செய்ய படுகின்றது. தனது வீட்டிற்கு வந்த பிறகு யாத்ரா பூர்த்தி ஸமாராதனை செய்யும் போது, பல தெய்வங்கள், கங்கா தேவியையும்



பூஜிக்க வேண்டும்.திரிவேணி ஸங்கமத்திலிருந்து வாங்கி வந்த சுத்த கங்கா ஜலம் சொம்பு அனைத்தையும் ஸமாராதனை பூஜையில் வைத்து , காசி கயிரும் வைத்து பூஜிக்க வேண்டும். இதன் பிறகு கங்கை சொம்புகளை எல்லோருக்கும் கொடுக்கலாம். கங்கா தேவி படம் இருந்தாலும் அதை வைத்தும் பூஜிக்கலாம்.

காசியில் செய்ய வேண்டிய கங்கா பூஜை :-



ஆசமனம்;, சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.

ப்ராணாயாமம்:-

சங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரித்ய க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் , ருண த்ரய விமோசனார்த்தம், கங்கா பாகிரதி ப்ரஸாத ஸித்தியர்த்தம் கங்கா பூஜாம் அஹம் கரிஷ்யே.

கலச பூஜை:- ஆத்ம பூஜை, பீடம் பூஜை , செய்து ப்ராண ப்ரதிஷ்டை செய்யவும்.

கங்கா தேவி த்யானம்:-சதுர்புஜாம், த்ரி நயநாம் சுத்த ஸ்படிக ஸன்னிபாம். த்யாயேன் அஹம், மகராரூடாம் ஶுப்ர வஸ்த்ராம் ஶுசிஸ்மிதாம். அஸ்மின் கலசே அல்லது அஸ்யாம் ப்ரதிமாயாம் ஸ்ரீ கங்கா பாகிரதீம் த்யாயாமி.



விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதே விஶ்வ நாத ஶிர: ஸ்திதே.. ஆவாஹயாமி கங்கே த்வாம் பக்தாபீஷ்ட பலப்ரதே. ஸ்ரீ கங்கா பாகீரதீம் ஆவாஹயாமி.

முக்தா ரத்ன ஸுவர்ணாதி சுசிதம். ஸுந்தரம் சுபம்.

ஸிம்ஹாஸனம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண மகராஸணே. ஆஸனம் சமர்ப்பயாமி.

ஸிந்த்வாதி ஸரிதுத் பூதம் கந்த புஷ்ப ஸமன்விதம், பாத்யம் ததாம்யஹம் தேவி ப்ரஸீத பரமேஸ்வரி.--பாத்யம் ஸமர்ப்பயாமி.

ப்ருஹ்ம கமண்டலு ஸம்பூதே கங்கே த்ரிபத காமினி. க்ருஹாணார்க்கியம் ப்ரதாஸ்யாமி ஜஹ்னுகன்யே நமோஸ்துதே.--அர்க்கியம் ஸமர்ப்பயாமி.



ஸ்வர்ண கலசாநீதம் நானா கந்த ஸுவாசிதம். ஆசம்யதாம் மயா தத்தம், க்ருஹாண அம்ருத வர்ஷிணி. ஆசமனீயம் ஸமர்ப்பயாமி..



பயோ ததி க்ருதம், க்ஷெளத்ரம் ரம்பாபலம் ஸமன்விதம். பஞ்சாமிருதம் இதம் தேவி ஸ்வீக்ருஷ்வ மஹேஸ்வரி. பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பாயாமி.



நர்மதா, யமுனா, ஸிந்து கோதாவரி. ஆஹ்ருதைர் ஜலை: ஸ்நாபயாமி ஶிவே பக்த்யா பாகீரதி நமோஸ்துதே. ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி.



வைடூர்ய பத்ம ராகாதி சுசிதம் மேகலான் வ்ருதம் ஸுவர்ண ஸூத்ர ஸம்யுக்தம் க்ஷெளமம் தாஸ்யாமி க்ருஹ்யதாம். வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.

மலயாசல ஸம்பூதம் கஸ்தூரி குங்குமான் விதம் கர்பூர மிஶ்ரிதம் கந்தம் க்ருஹாண பரமேஸ்வரி. கந்தம் ஸமர்ப்பயாமி. ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி.



அக்ஷதான் ஶாலி சம்பூதான் ஹரித்ரா குங்குமான் விதான் பூஜார்த்தம் ஸங்க்ருஹாணேமான் அக்ஷய்ய பலதாயினி. அக்ஷதான் ஸமர்ப்பயாமி.



வஜ்ர வைடூர்ய மாணிக்ய பத்மராகாதி நிர்மிதம். கங்கணம் கரஶோபார்த்தம் காமிதார்த்த பலப்ரதே. ஆபரணம் ஸமர்ப்பயாமி.



கேதகீ துளஸி பில்வ மல்லிகா கமலாதிபி: புந்நாகை: அர்ச்சயாமி த்வாம் க்ருஹாண அமர வந்திதே. புஷ்ப மாலாம் சமர்ப்பயாமி.



அங்க பூஜை;_

பாப பர்வத நாசின்யை நம: பாதெள பூஜயாமி; பக்த வத்ஸலாயை நம: குல்பெள பூஜயாமி; ஜகத்தாத்ர்யை நம: ஜங்கே பூஜயாமி; ஜாஹ்ணவியை நம: ஜாநுனி பூஜயாமி; ஶைல ஸுதாயை நம: ஊரு பூஜயாமி; ஸமுத்ர காமின்யை நம: கடீம் பூஜயாமி; மகராரூடாயை நம: குஹ்யம் பூஜயாமி; ஆநந்த வர்தின்யை நம: ஜகனம் பூஜயாமி;



கங்காயை நம: நாபீம் பூஜயாமி; ஜகத் குக்ஷ்யை நம: உதரம் பூஜயாமி;

விஶால வக்ஷஸே நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி; ஹ்லாதின்யை நம: ஹ்ருதயம் பூஜயாமி; ஸுஸ்தந்யை நம: ஸ்த னெள பூஜயாமி.

தரங்கின்யை நம: பார்ஶ்வெள பூஜயாமி; உன்னத கண்ட்யை நம: கண்டம் பூஜயாமி; த்ரைலோக்கிய ஸுந்தர்யை நம: ஸ்கந்தெள பூஜயாமி;



அம்ருத கலச ஹஸ்தாயை நம: ஹஸ்தான் பூஜயாமி; லீலா ஸுக தாரிண்யை நம: பாஹூன் பூஜயாமி; வித்யா ப்ரகாசின்யை நம: முகம் பூஜயாமி. த்ரைலோக்கிய வாஸின்யை நம: லலாடம் பூஜயாமி;

ஸு நாஸிகாயை நம: நாஸிகாம் பூஜயாமி; மகர குண்டல தாரிண்யை நம: ஶ்ரோத்ரே பூஜயாமி; பிம்போஷ்டியை நம: ஓஷ்டெள [பூஜயாமி; அனாத ரக்ஷிண்யை நம: அதரம் பூஜயாமி; சஞ்சல கத்யை நம: ஜிஹ்வாம் பூஜயாமி. அளக நந்தாயை நம: கண்டஸ்தலம் பூஜயாமி.



திலக தாரிண்யை நம: பாலம் பூஜயாமி; ஜ்ஞான ரூபிண்யை நம: சுபுகம் பூஜயாமி; அம்ருத பிம்பாயை நம: அளகாந் பூஜயாமி; பீமஸ்த்யை நம: ஶிர: பூஜயாமி; பாகீரத்யை நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி.



கங்கா அஷ்டோத்திர சத நாமாவளி:-

த்யானம்:- ஸிதம கர நிஷண்ணாம் ஶுப்ரவர்ணாம் த்ரி நேத்ராம் கர த்ருத கலஶோத்யத் ஸோத் பலாபீதி அபீஷ்டாம் விதி ஹரி ஹர ரூபாம் ஸேந்து கோடீர ஜூடாம் கலிதஸித துகூலாம் ஜாஹ்ணவீம் த்வாம் நமாமி;

ஓம் கங்காயை நம: ஓம் விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதாயை நம: ஓம் ஹர வல்லபாயை நம: ஓம் ஹிமாசலேந்த்ர தனயாயை நம: ஓம் கிரி மண்டல காமிண்யை நம: ஓம் தாரகாராதி ஜனன்யை நம: ஓம் ஸாகராத்மஜ தாரிகாயை நம: ஓம் ஸரஸ்வதி ஸமாயுக்தாயை நம:



ஓம் ஸுகோஷாயை நம: ஓம் ஸிந்து காமின்யை நம: ஓம் பாகீரத்யை நம: ஓம் பாக்கிய வத்யை நம: ஓம் பாகிரத ரத அனுகாயை நம: ஓம் த்ரிவிக்கிரம பத உத்பூதாயை நம: ஓம் த்ரிலோக பத காமின்யை நம:

ஓம் க்ஷீர ஸுப்ராயை நம: ஓம் பஹு க்ஷீராயை நம: ஓம் வ்ருக்ஷ ஸமாகுலாயை நம: ஓம் த்ரிலோசன ஜடா வாஸின்யை நம: ஓம் ருண த்ரய விமோசின்யை நம: ஓம் த்ரிபுராரி ஶிரஶ் சூடாயை நம: ஓம் ஜாஹ்ணவ்யை நம: ஓம் நத பீதி ஹ்ருதே நம: ஓம் அவ்யயாயை நம:



ஓம் நயந ஆ நந்த தாயின்யை நம: ஓம் நகபுத்ரிகாயை நம: ஓம் நிரஞ்சனாயை நம: ஓம் நித்ய ஸுத்தாயை நம: ஓம் நீரஜாதி பரிஷ்க்ருதாயை நம: ஓம் ஸாவித்ரியை நம: ஓம் ஸலில வாஸாயை நம: ஓம் ஸா காராம்பு ஸமேதின்யை நம: ஓம் ரம்யாயை நம:



ஓம் பிந்து ஸரஸே நம: ஓம் அவ்யக்தாயை நம: ஓம் வ்ருந்தாரக ஸமாஶ்ரிதாயை நம: ஓம் உமா ஸபத்ன்யை நம: ஓம் ஸுப்ராங்காயை நம: ஓம் ஸ்ரீ மத்யை நம: ஓம் தவளாபராயை நம:



ஓம் அகண்ட லவண வாஸாயை நம: ஓம் கண்டேந்து க்ருத ஶேகராயை நம: ஓம் அம்ருதாகார ஸலிலாயை நம: ஓம் லீலாங்கித பர்வதாயை நம: ஓம் விரிஞ்சி கலஶா வாஸாயை நம: ஓம் த்ரிவேண்யை நம:



ஓம் த்ரிகுணாத்மிகாயை நம: ஓம் ஸங்கத அகெலக ஶமன்யை நம: ஓம் ஶங்க துந்துபி நிஶ்வனாயை நம: ஓம் பீதி ஹர்த்ரே நம: ஓம் பாக்கிய ஜநன்யை நம: ஓம் பின்ன ப்ரஹ்மாண்ட தர்பிண்யை நம: ஓம் நந்தின்யை நம: ஓம் ஶீக்ர காயை நம: ஓம் ஸித்தாயை நம:



ஓம் ஶரண்யாயை நம: ஓம் ஶஶி ஸேகராயை நம: ஓம் ஶாங்கர்யை நம;

ஓம் சபரீ பூர்ணாயை நம: ஓம் பர்கமர்க்னி க்ருதாலயாயை நம: ஓம் பவ ப்ரியாயை நம: ஓம் ஸத்ய ஸந்த ப்ரியாயை நம: ஓம் ஹம்ஸ ஸ்வரூபிண்யை நம: ஓம் பகீரதாம்ருதாயை நம: ஓம் அனந்தாயை நம:



ஓம் ஶரஸ் சந்திர நிபானனாயை நம: ஓம் ஓங்கார ரூபிண்யை நம: ஓம் அதுலாயை நம: ஓம் க்ரீடா கல்லோல காரிண்யை நம:ஓம் ஸ்வர்க்க ஸோபாண ஸரண்யை நம: ஓம் ஸர்வ தேவ ஸ்வரூபிண்யை நம: ஓம் அம்ப:ப்ரதாயை நம: ஓம் துக்க ஹந்த்ர்யை நம: ஓம் ஶாந்தி ஸந்தான



காரிண்யை நம: ஓம் தாரித்ர்ய ஹந்த்ர்யை நம: ஓம் ஶாந்தி ஸந்தான காரிண்யை நம: ஓம் தாரித்ர்ய ஹந்த்ர்யை நம: ஓம் ஶிவ தாயை நம: ஓம் ஸம்ஸார விஷ நாசின்யை நம: ஓம் ப்ரயாக நிலயாயை நம:



ஓம் ஸீதாயை நம: ஓம் தாபத்ரய விமோசின்யை நம: ஓம் ஶரணாகத தீனார்தி பரித்ராணாயை நம: ஓம் ஸு முக்திதாயை நம: ஓம் ஸித்தி யோக நிஷேவிதாயை நம: ஓம் பாபஹந்த்ர்யை நம: ஓம் பாவ நாங்காயை நம: ஓம் பரப்ருஹ்ம ஸ்வரூபிண்யை நம: ஓம் பூர்ணாயை



நம: ஓம் புராதனாயை நம: ஓம் புண்யாயை நம: ஓம் புண்ய தாயை நம: ஓம் புண்ய வாஹிண்யை நம: ஓம் புலோம சார்ஜிதாயை நம: ஓம் பூதாயை நம: ஓம் பூத த்ரிபுவனாயை நம: ஓம் ஜயாயை நம:



ஓம் ஜங்கமாயை நம: ஓம் ஜங்கம ஆதாராயை நம: ஓம் ஜல ரூபாயை நம: ஓம் ஜகத் ஹிதாயை நம: ஓம் ஜஹ்நு புத்ர்யை நம: ஓம் ஜகன் மாத்ரே நம: ஓம் ஜம்பூ த்வீப விஹாரிண்யை நம: ஓம் பவ பத்ந்யை நம:



ஓம் பீஷ்ம மாத்ரே நம: ஓம் ஸித்தாயை நம: ஓம் ரம்யரூப த்ருதாயை நம: ஓம் உமா கரகமல ஸஞ்சாதாயை நம: ஓம் அஞ்ஜான திமிர பானவே நம: நா நா வித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.



தூபம்:- சந்தன அகரு கஸ்தூரி க்ருத குக்லூ ஸம்யுதம் தசாங்க த்ரவ்ய ஸம்யுக்தம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம். தூபம் ஆக்ராபயாமி.

தீபம்:- ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயா. க்ருஹான மங்களம் தீபம் த்ரைலோக்கிய திமிராபஹம். தீபம் தர்சயாமி.

நைவேத்யம்:- ஶால்யன்னம் வ்யஞ்சனைர்யுக்தம் ஸுபாபூப க்ருதான்விதம் க்ஷீரான்னம் லட்டுகோபேதம் புஜ்யதாம் அம்ருதாஶினி- நைவேத்யம் ஸமர்ப்பயாமி.

தாம்பூலம்:- பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லிர் தலைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம்.தாம்பூலம் ஸமர்ப்பயாமி.



கற்பூரம்:- தேஜ: புஞ்சஸ்வரூபே தே தேஜஸா பாஸிதம் ஜகத். நீராஜயாமி கங்கே த்வாம் பக்தாபீஷ்ட பலப்ரதே. கற்பூர நீராஞ்சனம் ஸந்தர்ஶயாமி.

கங்கே த்ரிபதகே திவ்யே ஜாஹ் நவி த்ரிதி வஸ்திதே. ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரணதா கெளக நாஶினி. ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி.



ப்ராலேயாசல ஸம்பூதே ப்ராசீ நாப்தி ஸமாகமே. ப்ராணீ நாம் பவரோகக்னி பூஜாம் ஸம்பூர்ணதாம் குரு. புத்ர பெளத்ர தன தான்ய பசு புண்ய பலோதயம் தேஹி மே தேவி பக்திம் தே த்வத் பாத கமலே ஸதா. ப்ரார்த்தனை செய்யவும்.



அர்க்கிய ப்ரதானம்:- ஸங்கல்பம்:- அத்ய பூர்வோக்த---------ப்ரீத்யர்த்தம் , கங்கா பாகீரதி பூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதானம் கரிஷ்யே.

ப்ருஹ்ம கமண்டலு ஸம்பூதே கங்கே த்ரிபத காமினி த்ரிலோக்ய வந்திதே தேவி க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. கங்காயை நம: இதமர்க்கியம்

இதமர்க்கியம் இதமர்க்கியம்.

தப நஸ்ய ஸுதே தேவி யமஜ்யேஷ்டே யஶஸ்வினி ஶுத்தானாம் ஶுத்திதே தேவி க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. யமு நாயை நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.



விருஞ்சி தநயே தேவி ப்ரஹ்மரந்த்ர நிவாஸினி ஸரஸ்வதி ஜகன்மாத: க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. ஸரஸ்வத்யை இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.



கங்கா யமுனையோர் மத்யே யத்ர குப்த ஸரஸ்வதி த்ரைலோக்கிய வந்திதே தேவி த்ரைவேண்யார்க்கியம் நமோஸ்துதே. த்ரிவேண்யை நம:

இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.



ஏகார்ணவே மஹா கல்பே ஸுஷூப்தி மாதவ ப்ரபோ. பர்யங்க வட ராஜ த்வம் க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. வட ராஜாயை நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.

வேணி மாதவ ஸர்வக்ஞ்ய பக்தேப்ஸித பலப்ரதே. ஸபலாம் குரு மே யாத்ராம் வேணி மாதவ நமோஸ்துதே. தீர்த்த ராஜாய நம: இதமர்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.

த்ரிவேணீ த்ரியம்பிகே தேவி த்ரிவித அக வினாசினி த்ரிமார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணீ சரணாகதம்.



இனி உங்கள் வீட்டில் செய்ய வேண்டிய சமாராதனை:-
 
சிருஷ்டியில் பரமனிடமிருந்து ஆகாசம், அதிலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து ஜலம், ஜலத்திலிருந்து பூமி என்ற முறையில் உலகம் உண்டாகிறது.

மறுபடியும் உலகம் பரமனிடத்தில் லயிக்கும் போது பூமி ஜலத்திலும், ஜலம் அக்னியிலும், அக்னி வாயுவிலும், வாயு ஆகாசத்திலும் ஆகாசம் பரமனிடத்தில் லயிக்கிறது. காசியை தவிர மற்ற எல்லாம் அழிந்து விடும்.

காசியில் எல்லாம் லயமாவதால் காசியை மஹா ஸ்மசானம் எங்கிறோம்.

அலகாபாத்தில்= (ப்ரயாகையில்) பூமியின் அம்சமான மணலை ஜலத்தில் விடுவதன் மூலம் நமக்கும் உலகத்திற்க்கும் லயமுண்டு. எல்லோரும் போய் சேர்ந்து நாம ரூபங்களை இழக்கும் இடம் இது என்ற லய தத்துவமும், ஜலமே முதலில் படைக்கப்பட்டது ஜலத்திலிருந்து பூமி என்ற சிருஷ்டி க்ரமத்தயும், அனுசரித்து ப்ரயாகையிலிருந்து கங்கை ஜலம் எடுத்து வந்து ராமனாதனுக்கு அபிஷேகம் செய்து நல்ல ஜன்மம் எடுக்கலாம். மண்ணாலாகிய உன்னுடலை காசியில் விடு. பரமனிடம் சேர்ந்து மறு பிறவியில்லாமல் இருப்பாய் என்பதயும் உணர்த்துகிறது.ஹரியும் ஹரனும் ஒன்று என்பதையும் காண்பிக்கிறது.



எந்த இடமாக இருந்தாலும், ஸமுத்திரத்திற்கு முதலில் நமஸ்காரம், கல் அல்லது மணல் அல்லது வாழைபழம் போடுவது, ஸமுத்திரத்திற்கு அர்க்கியம், ப்ரார்த்தனை செய்து விட்டு ஸ்நானம் செய்ய அனுமதி பெற வேண்டும். (அனுக்ஞை).

ஒவ்வொரு ஸ்நானமும் ஒரு அப்த க்ருச்சர பலனை தருவதால் நமது எல்லா பாவங்களும் நீங்க 36 ஸ்நானம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 12 ஸ்நானம் வீதம் மூன்று நாட்கள் ஆகும். ஒவ்வொரு ஸ்நானத்திற்கும் அங்கமாக ஸங்கல்பம், ஸ்நானாங்க தர்ப்பணம், , காய்ந்த மடி வஸ்த்ரம் அணிந்து நெற்றிக்கு இட்டு கொண்டு காயத்ரீ ஜபமும் செய்ய வேண்டும்.ஸ்நானாங்க தர்ப்பணத்தை தவிர ஸுக்ரீவன், நளன்


ஸமந்தன், ஸீதா, லக்ஷ்மணன், ஸ்ரீ ராமசந்திரன் முதலியவர்களை த்யானம் செய்து, பிப்பலாதர் முதல் ஸீதை வரை எல்லோருக்கும் 3 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும். கோடிக்கரையில் ஹிரண்ய சிராத்தம் செய்து, அரிசி, எள்ளு இவைகளால் க்ஷேத்ர பிண்ட தானம் செய்ய வேண்டும். பிறகு ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்த ஸ்நானம் செய்து

அந்த தீர்த்தத்தை எடுத்து வந்து பூஜித்து ப்ராஹ்மண ஸமாராதனை செய்து வாத்தியார் ஸம்பானை செய்து யாத்திரை பூர்த்தி செய்ய வேண்டும்.



உடனே காசி யாத்திரை செல்வதானால் தனுஷ்கோடி மணலில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என மூன்றாக பாவித்து பூஜை செய்து வேணி மாதவராக கருதி பூஜை செய்த மணலை எடுத்து கொண்டு அலகாபாத் செல்ல வேண்டும்.



ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்யும் போது ஒன்று அல்லது ஏழு சிறிய கற்கள் அல்லது மணலையாவது எடுத்து பிப்பலாத ஸமுத்பன்னே க்ருத்யே லோக பயங்கரி ஸைகதம் தே ப்ரதாஸ்யாமி ஆஹாரார்த்தம் ப்ரகல்பிதம் என்ற மந்திரத்தை கூறி ஸமுத்ர ஜலத்தில் போட வேண்டும்.தற்போது வாழை பழம் வாங்கி போடுகிறார்கள்.



ராமர் ராவணனை கொன்ற பிறகு பகவான் கடலில் கட்டிய பாலத்தை தனுசின் நுனியால் உடைத்த இடம், ஆதலால் தனுஷ் கோடி எனப்பெயர். இது மஹோ நதியும் ரத்னாகரமும் சேருமிடம்.

அந்த காலத்தில் 64 தீர்த்தங்கள் இருந்தன. தற்போது அது மிகவும் குறைந்து விட்டது.



ராமேஸ்வரம், அலகாபாத், காசி, கயா கான்டேக்ட் விவரம்.

Kasi gaya contact details
09451372420. sons of late swamimalai visvanatha sastrikal V RAMASESHA SASTRIKAL ANSD KRISHNA MURTHY GANAPADIKAL. B-5 /311 oudghabi (hanuman ghat) VARANASI
PIN:221001. phone( 0542 ) 22310133 ; 2310134; 2275173////cell; 93353 33137 and 94153 36064

irst you must go to RAMESWARAM and then to kasi and again to Rameswaram is the correct proceedure for iyers. So I am also giving the sastrigal's name s in RAMESVARAM. S. RADHA KRISHNA VADHYAR. Sri mathre graham. PHONE; (04573) 221943. cell; 9443508843; 9442461923; For boarding and lodging HOTEL TAMIL NADU IS THERE. KASI MUTT; LODGE PHONE NO; (04573) 223130.

K.R. VENKATARAMA SASTRIGAL. (04573) 223636, 222068. cell; 94866 72258.

SHRI. SWAMINATHA SARMA rameswaram cell; 99433 08217. He is doing THILA HOMAM AT HIS RESIDENCE FOR PITHRU SAPA/DOSHA NIVRUTHY.

In the ramanatha swamy temple daily early morning spatika linga sevai is there at 5 a. m. entry fee rupees fifty only. Sankara mutt is having AC ROOM AND NON AC ROOM . and sri. sundar sastrigal is there in sankara mutt. (sringeri sankara muut),. cell no; 09443321641 . சுந்தர சாஸ்திரிகளும் தில ஹோமமும், தீர்த்த சிராத்தமும் செய்து வைக்கிறார். தில ஹோமத்திற்கு 12000 ஆவர்த்தி ஹோமம்; ஜபம், சாப்பாடு உள்பட 25,000 /= ரூபாய்; 6 பேர் தீர்த்த சிராத்தம் பார்வண விதி படி. எட்டாயிரம் ரூபாய். மிக சிறப்பாக செய்து வைக்கிறார். 2014ம் ஆண்டு இந்த ரூபாய் இருந்தது. ராமேஸ்வரம் கோவில் கிணறுகளில் ஸ் நானம் செய்ய இருபத்து ஐந்து ரூபாய் டிக்கட் வாங்கி எல்லா கிணறுகளிலும் குளிக்கலாம். ஐ நூறு ரூபாய் கொடுத்தால் எல்லா கிண்றுகளிலும் அதிக தண்ணிரில் குளிக்கலாம்.இதுவும் 2014 ஆண்டு இருந்த ரேட்.



NAVA BHASHANAM DEVI PATTINAM. SRI. V. JAGANNATHA IYENGAR 1/58 PERUMAL KOIL STREET NABASANAM PIN; 623514. PHONE: (04567) 264501.

THIRUPULLANI; TPR. SRI. LAKSHMANA SASTRI. (04567) 254261 for tila homam.


If the 5th and 10th house lords are ill placed and the running dasa is of the ill placed planets this combines the pithru dosham. after tila homam here you have to do anna dhaanam in sholingur.
Swami malai V.RAMASESHA SASTRIGAL;V KRISHNAMOORTHY GANAPADIGAL. B-5 OUDGHARBI ( HANUMAN GHAT) VARANASI. 221001. PHONE NO; (0542) 2310133, 2310134, 2275173.

ARIYUR S. MAHADEVA GANAPADIGAL; B-5/309 HANUMAN GHAT; VARANASI PIN: 221001 PHONE (0542) 2277117; 2275800, 2276244. cell; 93369 11879; 99562 76851.

ARIYUR S. VISWANATHA GANAPADIGAL; B-5/286 AWADHGARBI, HANUMAN GHAT, VARANASI 221001. PHONE; 2277719, MOBILE; 9451372420.

FOR IYERS; RIG/YAJUR/ SAMA VEDAMS. They can take you to allahabad and to gaya and in kasi they can do all rituals.

Gaya : Karnatak Bhavan M.N Bacchu Acharya Ram Sagar, Nal Sadak Road, Near Panch Mahalla, Gaya – 823 001 ph : 0631-2435432, 99318 40631, 99340 23514
2. Thambu Shastrigal (Iyengar) – 9956513388



sri kasi nattukottai nagara satram godovilia varanasi phone.no-0542 2451804. fax no. 0542-2452404. Back side of susil cinema theatre. Godovilia tanga stand. U.P.

Manager sankara mutt-No.B-4/7A hanuman ghat-varanasi-221001. O542-2277932.



Sri kanchi kamakoti sankar mandir. Ahalya bai vishnupada road; gaya -bihar.

Sri adhi sankara vimana mandap. Beni bundi road daragung allahabad 211006.

Room in varanasi-98681 36243 jaya sri-Ravindrapuri near shivala ghat.


நகரத்தார் விடுதிகள்;- வாரானாசி0542 2451804; 089534 79419;

:- அலஹாபாத் 0532 2591265;

கயா; 0631 222648 ராமேஸ்வரம்- 04573 221157; 944224 85293.

அயோத்தி:-05278 232703; நாசிக்:-0253 2620878.



Contact

S. Nandini
Shubha Phala Yathra Services,
B.4/7 Hanuman Ghat ,
Varanasi 221001 (UP) India

Phone No : 9962005936
email-id :[email protected]
web: www.subhaphalayatra.com/



வெங்கட் ராம ஐயர், 34 B , G2 ,கல்யாண வசந்தம் பிலாட்ஸ்; 2ஆவது மெயின் ரோடு புருஷோத்தமன் நகர் க்ரோம்பேட்டை சென்னை-600044.



R, jaya raman; B-4/20 poora Nand Mutt Hanuman ghat-varanasi-221001. U.P state. E mail-vaara 1289 @gmail.com



Rameswaram;_ contact 76391 08725.for arrange ments to sraththam and thila homam. Mr. Ravi. 94865 73075.



ராமேஸ்வரத்திற்கு சென்னையிலிருந்து மாலை 5-50 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 22661. காலை 4-30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இதில் சென்றால் அன்று காலையே அவசரபடாமல் அமைதியாக கார்யங்கள் செய்யலாம்.



தங்குமிடத்திலேயே ஸ்நானம் செய்து சுத்த பாரம்பரிய உடை உடுத்தி பிறகு ஸங்கல்ப ஸ்நானம் செய்ய செல்ல வேண்டும்.



ஸமஸ்த பாபங்களும் அகன்றால் சுத்தமான பரமனின் திருவடியை நாம் அடைய முடியும்.ஆதலால் பாபம் நீக்கி புண்யம் தேட ஸேது யாத்திரை செய்வது பர லோக பலனை அளிக்கும்.தனுஷ் கோடியில் மணல் எடுத்து மூன்றாக பிரித்து இரண்டை ஸேது மாதவர் பிந்து மாதவர் என பூஜித்து அலகாபாத் சென்று அங்குள்ள வேணி மாதவரை பூஜிக்கவும், கங்கா ஸ்நானம் செய்யவும் உத்தரவு பெற வேண்டும்.



ஸேது மாதவர், பிந்து மாதவர் என எண்ணி பூஜித்த மணலை அங்கேயே விட்டு விடவும். மூன்றாவது பாகமான வேணி மாதவரை பூஜித்து இந்த மணலை அலகாபாத் எடுத்து செல்ல வேண்டும். அலகாபாத்தில் இந்த மணலை வேணி மாதவராக இங்கும் பூஜித்து இந்த மணலை த்ரிவேணி ஸங்கமத்தில் போட வேண்டும்.



மாதவன்= மா=லக்ஷ்மி; தவன்=புருஷன்; மாதவன் எனில் லக்ஷ்மி புருஷன் எனப்படும்.பன்னக சாயீயாக இருப்பது பாற்கடலில். பாற்கடலில் உதித்த லக்ஷ்மியை மார்பில் வைத்திருக்கிறார். ஆதலால் விஷ்ணுவிற்கு மூல ஸ்தானம் கடல். மூல ஸ்தானத்திலிருந்து பற்பல இடங்களில் மூர்த்தியுடன் எழுந்து அருளி யுள்ளார்.



விஷ்ணு, ப்ரயாகை, ராமேஸ்வரம் காசி ஆகிய இடங்களில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என்ற மூன்று இடங்களிலும் பஸித்தமாக் அமர்ந்திருக்கிறார். மணல் கெட்டியாகி கல் வடிவமாகுவது இயர்க்கை. மணலை பிடித்து பகவானாக பாவித்து பூஜை செய்தவுடன் , பக்தனது பக்தியாலும், மந்திரத்தாலும், பூஜையாலும் மணல் விரைவாக கல் ஆகும்.



இது ஸாலகிராம வடிவமாகவும், சிலா வடிவமாகவும் மாறும். த்ரிவேணி பூஜை செய்வோர் ஸேது மணலாக வந்த வேணி மாதவருக்கும் பூஜை செய்ததாகும். இதே போல் காசியிலிருந்து தான் எங்கும் லிங்கம் அமைக்க பட்டுள்ளது. காசி சிவனுக்கு மூல ஸ்தானம். தனது மூல ஸ்தானமான காசியிலிருந்து , தனது எட்டு உடலில் ஒன்றானதும் தனக்கு மிக ப்ரியதுமான கங்கா ஜலத்தால் அபிஷேகம் செய்தால் பரம சந்தோஷம் அடைந்து பக்தனுக்கு அருள் பாலிக்கிறார். கங்கையை தலையில் தரித்து கங்காதரன் என பெயர் பெற்றவர். தனி சுத்த கங்கை அலகாபாத்தில் தான் உள்ளது. காசியில் மற்ற நதிகளுடன் கலக்கிறது.



ஸபிண்டிகரணம், ஆப்தீகம் முதலியவைகளில் ப்ராஹ்மணார்த்தம் சாப்பிடுவது அறியாமல் பூனை முதலியவற்றை கொல்வது, அக்ஞானத்தினால் ஸந்தியா வந்தனம் முதலிய வற்றை விட்டது, ஜெயிலில் வசித்தது, பலாத்காரமாக அன்ய தேசம், அன்ய மதம் சென்றது, முதலிய பாபங்களுக்கு ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள முன்னர் பலர் தனுஷ்கோடி செல்வர்.அங்கு கோ தானம், க்ருச்சரம், ஹோமம் முதலியன செய்வர்.

ப்ரதக்ஷிண வகையில் வட தேச யாத்திரை:- சென்னயிலிருந்து துங்கபத்ரா, குருட்வாடி, பண்ட்ராபுரம்,பாம்பே, நாசிக், இடார்ஸி,அலகாபாத், காசி, கயா, கல்கத்தா ,பூரி, கோதாவரி, பெஜவாடா , சென்னை வர வேண்டும்.



இனி உங்கள் வீட்டில் ஸமாராதனை பூஜை:-

ஆசமனம். அனுக்ஞை;- வினேஸ்வர பூஜை;- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே.

ப்ராணாயாமம். ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மான கர்மண: நிர்விக்னேன பரி ஸமாப்தியர்த்தம் ஆதெள மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே.



பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் போடவும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் மஹா கணபதிம் த்யாயாமி. ஆவாஹயாமி, ஆஸநம் ஸமர்ப்பயாமி; பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி. ஹஸ்தயோ: அர்க்கியம்

ஸமர்ப்பயாமி; ஆசமணியம் ஸமர்ப்பயாமி; மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி; பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி; ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி; ஸ்நானாந்திரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி; உபவீதார்தம்

அக்ஷதான் ஸமர்ப்பயாமி; ஆபராணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. கந்தாந்தாரயாமி; கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி; அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி; புஷ்பானி பூஜயாமி.



ஓம் ஸுமுகாய நம: ஓம் ஏக தந்தாயை நம: கபிலாய நம; கஜ கர்ணகாய நம;லம்போதரய நம: விகடாய நம: விக்ன ராஜாய நம:வி நாயகாய நம: தூம கேதுவே நம: கணாத்யக்ஷாய நம: பால சந்திராய நம: கஜானனாய நம: வக்ர துண்டாய நம:



ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம: மஹா கணபதயே நம: நா நா வித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி; தூப தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.

நிவேதனம்:- ஓம் பூர்புவஸ்ஸுவ: ------தேவ ஸவி தப்ரஸவீ: ஸத்யம் த்வர்த்தேண பரிஷஞ்சயாமி; அம்ருதோபஸ் தரண மஸி. ப்ராணாயஸ்ஸுவா: அபானாயஸ்ஸுவா: வ்யானாயஸ்ஸுவாஹா; உதானாயஸ்ஸுவா: ஸமாணாயஸ்ஸுவா:



ப்ருஹ்மணேஸ்ஸுவாஹா ;கணபதயே நம: கதலி பலம் நிவேதயாமி. அம்ருதாபிதா நமஸி. பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லிர் தலைர்யுதம் கற்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். தாம்பூலம் ஸமர்ப்பயாமி; கற்பூர நீராஞ்சனம் ; மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸுவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி.



வக்ர துண்ட மஹா காய ஸூர்ய கோடி ஸம ப்ரப அவிக்னம்குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.



ப்ரதான பூஜா ஸங்கல்பம்:-

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம். மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷ்த்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶுபே ஶோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஶ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே , அஷ்டாவிம்சதி தமே



கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீ பே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பர்ஶுவே , ஶாலி வாஹன சகாப்தே, அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே-------- நாம ஸம்வத்ஸரே



------------அயனே-----------ருதெள-----------மாஸே---------பக்ஷே---------- திதெள------ ஸுப திதெள --------- வாஸர:------- நக்ஷத்ர யுக்தாயாம்--------யோக--------- கரண ஏவம் குண ஸகல விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ------- சுப திதெள



ஸ்ரீ பர்வத வர்த்தனி ஸமேத ஸ்ரீ ராம நாத ஸ்வாமி ப்ரஸாத சித்தியர்த்தம்,, ஸ்ரீ டுண்டி கணபதி , காலபைரவாதி பரிவார ஸஹித , விசாலாக்ஷி அன்னபூர்ணி ஸமேத ஸ்ரீ காசி விஸ்வேஸ்வர ஸ்வாமி ப்ரஸாத ஸித்யர்த்தம், ஸ்ரீ கங்கா பாகிரதீ ப்ரஸாத



சித்தியர்த்தம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஸமேத ஸ்ரீ ஸேது மாதவ பிந்து மாதவ வேணி மாதவ , ஸ்ரீ ஆதி கதாதர ப்ரஸாத ஸித்தியர்த்தம், தேவைக்கு ஏற்ப இங்கு சேர்த்து கொள்ளலாம் இம்மாதிரி ---- ஸ்ரீ அலர்மேலு ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர



ஸ்வாமி ப்ரஸாத ஸித்தியர்த்தம், ஸ்ரீ வள்ளி தேவ ஸேனா ஸமேத ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஸன்னிதெள ;ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத ஸ்ரீ ஹரி ஹர புத்ர ஸ்வாமி ஸன்னிதெள , இத்யாதி.



அஸ்மாகம் ஸக குடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யானாம் ஸேது ராமேஸ்வர த்ரிவேணி காசி கயா யாத்ரா ஸம்பூர்ண பல ஸித்தியர்த்தம் , ஸகல தைவானுகிரஹ ஸித்தியர்த்தம், ஸ்ரீ ராம நாதாதி ஸகல தேவதா பூஜாம் கரிஷ்யே. அப உபஸ் ஸ்பர்சியா.



விக்னேஸ்வர யதாஸ்தானம்:- கணா நாந்த்வா---------- ஸாதனம். ஸ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸ்ஸுவரோம். அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஸுமுகம் ஸ்ரீ விக்னேஸ்வரம் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி. ஶோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.



கலச பூஜை:- பஞ்ச பாத்திர உத்ரணி பாத்திரத்தில் நாங்கு பாகமும் சந்தனம் குங்கும இடவும். உள்ளே அக்ஷதை புஷ்பம் போடவும். வலது கையால் பாத்திரத்தை மூடிக்கொண்டு சொல்லவும்.

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர ஸமாஶ்ரிதா: மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா ஸ்ம்ருதா: குக்ஷெள து ஸாகரா ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா . ருக்வேதோ அத யஜுர் வேத: ஸாம வேதோ அப்யதர்வண: அங்கைஸ்ச ஸஹிதா: ஸர்வே கலஶாம்பு ஸமாஶ்ருதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் குரு தக்ஷய காரகா: கங்கே ச யமுணே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து கவேரி ஜலேஸ்மின் ஸன்னதிம் குரு.



கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜா த்ரவ்யங்களையும், தன்னையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க. மணி அடிக்கவும். ஆகமார்த்தம் து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம். கண்டாரவம் கரோம் யாதெள தேவதாஹ்வான காரணம்.

ஆவாஹனங்கள்:- அலங்கரித்து வைத்துள்ள படங்கள், பொருள்கள் ஆகிவற்றில் அந்தந்த தேவதைகளுக்கு , அந்தந்த தேவதை களின் த்யான ஸ்லோகம் சொல்லி ஆவாஹனம் செய்து அர்சிக்க வேண்டும்.



ஆவாஹனாதி முத்திரைகள்;- ஆவாஹிதோ பவ; ஸ்தாபிதோ பவ; ஸ்ன்னிஹிதோ பவ; ஸன்னிருத்தோ அபவ; அவகுண்டிதோ பவ; ஸுப்ரீதோ பவ; ஸுப்ரஸன்னோ பவ: ஸு முகோ பவ; வரதோ பவ; ப்ரஸீத ப்ரஸீத.



16 உபசார பூஜை புருஷ ஸூக்த விதானப்படியோ, அல்லது ஸ்ரீ ருத்ர விதானப்படியோ செய்யலாம்.

அலஹாபாத்=ப்ரயாகையிலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை சொம்பில் கங்கா தேவியையும், காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட காசி ரக்ஷை கயிறுகளில் கால பைரவரையும், க்ருஷ்ணர் படம் ஒன்றில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி



மாதவர் களையும், கயா விலிருந்து கொண்டு வரப்பட்ட விஷ்ணு பாதத்தில் மஹா விஷ்ணுவையும், காசி யிலிருந்து வாங்கி வந்த அன்னபூரணி விக்ரஹத்தில் அன்ன பூரணியையும் , ஆவாஹனம் செய்து பூஜித்தல் வேண்டும். சிலர் குல தெய்வம் ஆவாஹனம் பூஜை யும் சேர்த்து செய்கின்றனர்.

முற்றும்.
 
kasi,gaya travel.
ராமேஸ்வரம்,,ப்ரயாகை,காசி,கயா யாத்திரைவிவரம்.
முதலில்தேவையானவைகளை தயார்படுத்திக்கொள்ளு
தல்.
எந்தஎந்த காலங்களில் காசி யாத்திரைசெய்யக்கூடாது.என்பதைஅறிந்து கொள்ளவேண்டும்.


தன்வீட்டிற்கு புது மருமகள்கல்யாணம் செய்துகொண்டு வந்தஒரு வருடம்;தான் கல்யாணம்செய்து கொண்ட ஒரு வருஷம்;தான் கன்னிகாதானம்செய்து கொடுத்த ஒரு வருஷம்;
தன்நெருங்கிய உறவினர்களுகுஇறுதி க்ரியை செய்த ஒரு வருஷம்,வேறுவகையான சூதகங்கள்//தீட்டுகள்ஏற்பட்டுள்ள காலங்களிலும்தீர்த்த யாத்திரை செய்யக்கூடாது.


பெண்கள்மாதவிடாய் ஆன ஐந்தாவது நாள்முதல் தேவ ,பித்ரு கார்யங்களில்கலந்து கொள்ளலாம் .யாத்திரைதொடங்கிய பின்னர் தீட்டுதெரிந்தால் தீட்டு முடியும் வரை சென்ற இடத்திலேயே தங்கிவிட்டு தீட்டு போன பின்னர் யாத்திரை தொடர வேண்டும்.


மனைவிகர்பமாக இருக்கும்போது தீர்த்தயாத்திரை செல்லக்கூடாது.செல்லும்படிநேர்ந்தால் முண்டனம் (வபனம்)முடி நீக்கல்செய்யக்கூடாது.கர்ப காலம் ஏழுமாதத்திற்கு மேல் ஆகியிருந்தால்தீர்த்த சிராத்தமும்செய்யக்கூடாது.




தீர்த்தயாத்திரையின் போது பொய்சொல்லக்கூடாது.உடலுறவு கொள்ளக்கூடாது.ஒரு கால சாப்பாடேஉட்கொள்ள வேண்டும்.


அசைக்கமுடியாத நம்பிகையும்,பக்தியும்,சுத்தமும்முக்யமானது.தீர்த்த வாஸிகளைதூஷிக்ககூடாது.
தன்சக்திக்கு அதிகமாகவும்குறைவாகவும் இல்லாமல் தானங்கள்தீர்த்த கரையில் செய்ய வேண்டும்.


செய்யும்கர்மாவிற்கு உரிய பலன் கிடைக்கவேண்டும் அல்லவா.ஆதலால் எவ்விதகுறையுமில்லாமல் வைதீககர்மங்களை எவ்விதம் செய்யவேண்டும் என்பதை முதலில்தெரிந்து கொள்ளவும்.
தான்செய்த தான தர்மங்க
ளை புகழ்ச்சியாகயாரிடமும் சொல்ல வேண்டாம்.அகம்பாவம்,ஆணவம்,ஆடம்பரம் வேண்டாம்..அறிந்தோ அறியாமலோசெய்த பாபங்களுக்கு பஸ்சாதாபத்துடன்பரிஹாரம் செய்து கொள்ளவும்.


செய்யும்கர்மாக்களை ப்ரஹ்மார்பணமாகசெய்ய வேண்டும்.தீர்த்த யாத்திரையின்போது தான் பிறரிடம் தானம்எதுவும் பெற்றுக்கொள்ளக்கூடாது.
தேவிபாகவதத்தில் எல்லா ஆஸ்ரமத்தாரும்,எல்லா வர்ணத்தாரும்,பெண்களும்ருத்ராக்ஷம் அணியலாம் என்றுசொல்லபட்டிருக்கிறது.


பாத்ரூம் செல்லும்போதும் தூங்கும்போதும் ருத்ராக்ஷம் அணியவேண்டாம்.ஐந்து முகருத்ராக்ஷம் அணிந்து யாத்திரைசெல்லலாம்.
யாத்ராதானம் செய்து விட்டு தீர்த்தயாத்திரைக்கு தேவையானவைகளைசேகரித்து கொண்டு சுவாமிக்குஅஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்ப வேன்டும்.
அடுத்துசெல்ல உள்ள க்ஷேத்திரத்திற்குமட்டும் ஸங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்,அங்கு சென்றுமுடிந்த பிறகு அங்கிருந்துஅடுத்த க்ஷேத்திர த்திற்கு

செல்லும் போது அடுத்தக்ஷேத்திறத்திற்கு மட்டும்ஸங்கல்பம்
செய்துகொண்டு செல்ல வேண்டும்.ராமேஸ்வரம்,அலஹாபாத்,காசி,கயா என்று எல்லாஊர்களுக்கும் மொத்தமாகஸங்கல்பம் செய்து கொள்ளக்கூடாதுஎன்கிறது த்ரிஸ்தலி யாத்ராவிதானம் புத்தகம்.


பயணம்செல்லும் வழியில் உங்கள்உறவினர்களோ நண்பர்களோ இருந்தால்சாப்பாட்டிற்கு அவர்கள்உதவியை நாடலாம்.இல்லாதவர்கள்கையில் வேண்டியதை தயார் செய்துவைத்துகொண்டு எடுத்து செல்லவேண்டும்..ரயிலில் கொடுக்கும்உணவு உங்கள் உடலுக்குஒத்துக்கொள்ளாமல் ஆகிவிட்டால்அதனால் பேதி,வயிற்றுவலி வந்துவிட்டால் நாம் செல்லும்நோக்கம் நிறைவேறாது.


இங்குகிடைக்கும் வெற்றிலை வடமாநிலங்களில் கிடைக்காது.நீங்கள்வெற்றிலை எடுத்து செல்லவிரும்பினால் கிளம்பும் நாள்அண்று வெற்றிலை வாங்கி தண்ணிரில்நனைத்து ஒவ்வொன்றாக எடுத்துஇரு பக்கமும்
துடைத்துஅடுக்கி ஈர துணியில் சுற்றிஅதன் மேல் அடிக்கடி தண்ணீர்தெளித்து காற்று புகாத ஜிப்லாக்கவரில் போட்டு வைத்துகொள்ளவேண்டும்.


வாடிய,அழுகும் நிலையில்உள்ள வெற்றிலைகளை பார்த்துமுதலில் உபயோகிக்க வேண்டும்.பாக்கு,சுன்னாம்புஏலக்காய்,கிராம்பு தேவையானவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.


பித்ருக்களுக்குதீர்த்த சிராத்தம் ராமேஸ்வரம்,அலஹாபாத்,காசி.கயா என்ற நான்குஊர்களிலும் செய்ய பட வேண்டும்.,அதில் பெறப்படும்ஆசீர்வாத அக்ஷதைகளை நம்குழந்தைகளுக்கும்,,பேரன் பேத்திகளுக்கும்,மற்றும்
உறவினர்களுக்கும்எடுத்து செல்ல வசதியாகப்லாஸ்டிக் கவர் பெயர் எழுதிவைத்து கொள்ளவும்.ஆசிர்வாத அக்ஷதைகளைஅதில் போட்டு விட்டு ஜிப்போட்டு மூடி பையில் பத்திரமாகவைத்து கொள்ள வேண்டிய ஏற்பாடு
செய்துகொள்ளவும்.

மார்க்கர் பேனா.எடுத்து செல்லவும்,அந்தந்த கவரில்அந்தந்த ஊர்களில் பெயர் எழுதிபோட்டு வை
Tags: None
 
http://www.***********.com/forums/forum/iyer-iyengar-rituals/19758-
 

Attachments

  • காசி-கயா-யாத்தி&...pdf
    1.3 MB · Views: 103
  • காசி-கயா-யாத்தி&...pdf
    1.3 MB · Views: 86

Latest ads

Back
Top