Pariharam for Kala Sarpa Dosham | Pariharam in Tamil | Chennai Temple

Status
Not open for further replies.
109-வது ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசம்!

ஸ்ரீயஹ்பதி ஆகிய ஸ்ரீமந் நாராயணன் யார்? அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?


சுருக்கமாக சொன்னால், எம்பெருமான் யார் என்றும், அவனை அடையும் வழி எது என்றும் நமக்கு தெரியப்படுத்தத்தான் ஆழ்வார்களின் அவதாரம் ஆகும். இதை நமக்கு இனிமையான தமிழ் பாசுரங்களாக வடிவமைத்து கொடுத்தார்கள். ஆழ்வார்களின் இந்த ஒட்டு மொத்த பாசுரங்களின் தொகுப்பைத்தான் நாம் திவ்யப்ரபந்தம் அல்லது திராவிடவேதம் என்று கொண்டாடுகிறோம். ஆழ்வார்களின் இந்த திவ்யப்ரபந்தங்கள் எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காது. மேலும், அவை, தெளிவாகவும், எளிதாகவும், நம்மால் கடைபிடிக்க கூடியவைகளாக இருக்கும். இதுவே, ஸமஸ்க்ருத வேதத்திற்க்கும் தமிழ் வேதமாகிய திவ்யப்ரபந்தத்திற்க்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஆகும். ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களைப் பற்றி நமக்கு ஓரளவு தெரியும். மொத்தம் 108 திவ்யதேசங்கள் உள்ளன. அதில், 106 மட்டும்தான் இந்த பூவுலகில் உள்ளன. 107-வது திவ்யதேசம் திருப்பாற்கடல், மற்றும் 108-வது திவ்யதேசம் ஸ்ரீவைகுண்டம் ஆகும். இதில் கவனிக்க வேண்டியது இதுதான். நான் ஒரு திருநாமம் மட்டும் சொன்னால் எனக்கு ஸஹஸ்ரநாமம் சொன்ன பலன் கிட்டுமா? இதற்கு விடை “ஆம்” ராம நாமத்தை சொல்லுங்கள். இப்பொழுது, இந்த கேள்விக்கு என்ன பதில்: நாம் ஏதேனும் ஒரு திவ்யதேசம் மட்டும் சென்று சேவித்தால், நமக்கு 108-திவ்யதேசம் சென்று வந்த பலன் கிடைக்குமா? ஆம், பலன் கிடைக்கும். அதுதான் சென்னையில், வியாசர்பாடி என்னும் இடத்தில் ஸ்ரீ பஞ்சமுக லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் ஸந்நிதி ஆகும் (அட்டை படம் பார்க்கவும்). இந்த ஸந்நிதி தான் 109-வது திவ்யதேசமாக விளங்குகிறது! இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இது உண்மை. இந்த சன்னிதியில் நிறைய பக்தர்கள் வந்து பயனடைந்து வருகிறார்கள். இந்த ஐந்து முக லக்ஷ்மி நரசிம்மருக்கு கேட்கும் முன் தரும் பெருமாள் என திருநாமம். ஐந்து முகங்களாவது இடமிருந்து வலம் முறையே
(1) கருடன்; (2) வராஹர்; (3) நரசிம்மர்; (4) ஹயக்ரீவர்; (5) ஆஞ்சனேயர்.

பஞ்சமுக பரிஹாரம் / நவக்கிரஹ பரிஹாரங்களை ஒரே இடத்தில் செய்யலாம்

இந்த திவ்வதேசத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இங்கு எல்லாவிதமான ப்ரச்சனைகளுக்கும் தீர்வாக பரிகாரங்கள் சொல்லப்படும். இதை மிக சுலபமாக செய்யலாம்.

  1. செவ்வாய் தோஷம் / திருமண தாமதம் (விடைவில் திருமணம் நடைபெற) பரிகாரம்.
  2. பக்க்ஷி தோஷம் / நாக தோஷம் விலகி தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்பட ஆதிஷேஷ பரிகாரம்.
  3. கால சர்ப்ப தோஷம் நீங்க ஆதிஷேஷ பரிகாரம்.
  4. களத்திர தோஷம் / மாங்கல்ய தோஷம் நீங்க பரிஹாரம்.
  5. பித்ரு தோஷம் / திருமண தடை நிவர்த்தி பரிஹாரம்.
  6. வாங்கிய கடனை அடைக்க வழி பிறக்க பரிகாரம் (ருண விமோசனம்).
  7. எதிரிகளின் / சத்ரு தொல்லையில் இருந்து விடுபட பரிஹாரம்.
  8. குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ஞானம், நல்ல கல்வி பெற பரிகாரம் (ஹயக்ரீவர்).
  9. கண் திருஷ்டியினால் ஏற்படும் பிரசனைகளில் இருந்து விடுபட பரிகாரம் (வராஹர்).
  10. தம்பதிகளிடம் நல்லுறவு ஏற்பட பரிகாரம் (ஆஞ்சநேயர்);
  11. ஆயுள் விருத்தி கிடைக்க பரிகாரம் (ஆஞ்சநேயர்).
  12. குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க ஸ்ரீ மஹாசுதர்ஷன ஹோமம்.
  13. குழந்தைகளுக்கு நல்ல உயர் கல்வி கிடைக்க ஹயக்ரீவர் ஹோமம்.
  14. குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஹோமம்.
  15. நில பிரச்சனைகளிருந்து தீர்வு பெற / புதிய வீடு வாங்க ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஹோமம்.
  16. விஷ ஜந்துக்களின் பயம் நீங்க / ஆரோக்கியம் பெற ஸ்ரீ கருடனுக்கு சிறப்பு பூஜை.
  17. கணவன்-மனைவி பிரியாமல் இருக்க சிறப்பு பரிகாரம்.
  18. இது போன்ற எந்தவித கஷ்டங்களுக்கும் இந்த நரசிம்மர் சன்னிதியில் நிச்சய தீர்வு கிடைக்கும்.

நரசிமர் ஜெயந்தி 13-05-2014 அன்று நடைபெற உள்ளது. சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டு நல்வாழ்க்கையை பெறுங்கள் !! (Online Registration செய்யலாம்)[TABLE="width: 794"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
 
Status
Not open for further replies.
Back
Top