[h=1]The topic Thamizhth thAy vAzhththu was already discussed in this Forum.[/h][h=1]I would like to reproduce the same here for more information.[/h][h=1]
தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக![/h][h=1]தமிழ் நாட்டில் இப்பொழுது பயன்படுத்தப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்குப் பொருத்தமானதல்ல. ஏற்கனவே இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இதைப் பயபடுத்தாமல் வேறு பாடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது காலப் போக்கில் தமிழர்களிடையே ஒற்றுமைக் குறைவை ஏற்படுத்தும். ஆகவே தமிழ் நாடு அரசு உடனடியாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றவேண்டும். இந்தப் பாடல் பரதக் கண்டம் பற்றிப் பாடுகிறது. ஆனால் இன்றோ தமிழர்கள் உலகம் முழுதும் வாழ்கிறார்கள்
“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்” என்று துவங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடல் பல வகைகளிலும் குறையுடையது. முதலாவது அது உருக்குலைந்த பாடல். பாரத நாட்டின் மாபெரும் செல்வமான சம்ஸ்கிருதத்தைப் பழித்துக் கூறிய வரியை வெட்டிவிட்டுப் பாடுகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் கோவிலில் வைக்க அழகான சிலையைச் செய்துவிட்டு அதன் மூக்கை மட்டும் உடைத்துவிட்டுப் பூஜைக்கு வைத்தது போல இருக்கிறது. மேலும் சம்ஸ்கிருத வெறுப்பில் பிறந்த பாடல்.
சுந்தரனார் சம்ஸ்கிருதம் பற்றிக் கூறிய வரியை அறிஞர் உலகம் ஏற்காததால்தான் அந்த வரியை வெட்டிவிட்டு சிதைந்த பாடலை தமிழ் வாழ்த்தாக்கி இருக்கிறார்கள். சுந்தரம் பிள்ளையோவெனில் அந்த வாழ்த்திலும் சரி, அவரது மனோன்மணீய நாடகத்திலும் சரி பக்கத்துக்கு பக்கம், வரிக்கு வரி சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாண்டிருக்கிறார். சுருங்கச் சொன்னால் சொன்னது ஒன்று, செய்தது வேறு.
பாரதியார் எழுதிய “
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி” பாடல் அற்புதமான பாடல். அந்தக் கவிஞனுக்கு உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி வாக்கினிலும் ஒளி உண்டானதால் அவன் வேண்டியபடியே பராசக்தி அவனுக்கு மந்திரம் போல் சொல்லின்பம் கொடுத்துவிட்டாள்.
பாரதி பெரிய கவியானாலும் தமிழ் வாழ்த்து என்று பார்க்கையில் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் இன்னும் அற்புதமாக அமைந்துவிட்டது. அதில் தமிழ் அன்னையை அலங்கரிக்கும் ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் திருக்குறள், நால்வர், சேக்கிழார், ஆழ்வார் பாடல்கள் ஆகிய அனைத்தும் போற்றப்படுகின்றன.
இதோ பாடலை நீங்களே படித்துப் பாருங்கள். எவ்வளவு பொருள் பொதிந்த பாடல். யாராவது ஒருவர் இதற்கு கவர்ச்சிகரமான இசை அமைத்துவிட்டால் மற்ற பாடல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இது மேடை ஏறும். முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் துணிகர உத்தரவுகளுக்குப் பெயர்போனவர். அவர் நினைத்தால் இதை ஓரிரவில் செய்யலாம். அதுவே நமது வேண்டுகோளும் கூட.
காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
-சுத்தானந்த பாரதியார்[/h][h=1]
Thread link: https://www.tamilbrahmins.com/showthread.php?t=9360[/h][h=1][/h]