S
swathi25
Guest
26 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு: ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை நிரம்புகிறது; தீவிரமாகத் தயாராகிறது கேரள அரசு
இடுக்கி அணையின் ஒரு பக்க முகப்பு தோற்றம் - படம் உதவி: பேஸ்புக்
--------------------------------------------------------------------------------------------
ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான கேரள மாநிலத்தின் இடுக்கி அணை தனது முழுக் கொள்ளளவை எட்ட இருப்பதால், 26 ஆண்டுகளுக்குப் பின் அணை திறக்கப்பட உள்ளது.
தரைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளையும், அணை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் கேரள அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கட்டப்பட்ட வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரியதாகும். கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது.
இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: https://tamil.thehindu.com/india/article24553844.ece