• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
சிவன் சொத்து குல நாசம்!!!

சிவன் சொத்து குல நாசம்!!!



சிவன் சொத்து குல நாசம்...குருவிற்கு செய்த அர்ச்சனை பொருட்களை நமது இல்லத்திற்கு கொண்டுவரலாம்..ஆனால் சிவ அம்சம் தட்சிணாமூர்த்திக்கு செய்த அர்ச்சனை பொருட்களை நாம் இல்லத்திற்கு கொண்டு வரக்கூடாது..சிவன் சொத்து குல நாசம் அல்லவா..


இது உண்மையா? இதன் உண்மையான விளக்கம் இதுதான் :-


சிவனின் சொத்தாக, அவர் அருளிய மூல வித்தாக கருதப்படுவது சித்த மார்க்கம். அத்தகைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள் சித்தர்கள். ஒருவர் சித்தராக வேண்டும் என்றால் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது. நினைப்பவர் எல்லாம் சித்தர் ஆகிவிட முடியாது.

நரை, திரை, முப்பு என்று நம்மிடம் கேட்டுக்கொண்டிருக்காமல் பால்ய, இளமை, முதுமை என மரணத்தை நோக்கி தானாக நகர்ந்து கொண்டிருக்கும் காயத்தை (உடலை) தன்வயப்படுத்தி நிறுத்த வேண்டும். சதா காலமும் சுக்கிலத்தை,... அதாவது நாதவிந்தை கட்ட வேண்டும். ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலத்தை அறுக்க வேண்டும். அனைத்து பந்தங்கள் மீதும் பாசம் வைத்திருக்கும் தன்மையை நீக்க வேண்டும். அத்தகையவனே சித்தி அடைந்தவன்.

இதில் மிகவும் முக்கியமானது, யோக பயிற்சியின் முலம் குண்டலினியை எழச் செய்வதாகும். அதாவது, ஆண் ஆனவன், தனது விந்தை பூமியை நோக்கி விழச் செய்யாமல், அதை பிரம்மச்சரியத்தால் கட்டி, உச்சந்தலையை நோக்கி உயர்த்தி, உள் நாக்கில் அமிர்தத் துளிகளாய் விழ வைக்க வேண்டும். அதன்பின்னரே அவனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும்.

இவ்வாறு விந்துவை ஒருவன் மேல் நோக்கி எழுப்பினால் அவனால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாது. அவனது வம்சம் அவனுடனேயே அழிந்துவிடும்.

இதனால்தான் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்

::WORLD TAMILS WIN ::
 
வழிபாட்டுத் துதிகளின் வகைகள்

வழிபாட்டுத் துதிகளின் வகைகள்

சமஸ்க்ருத மொழியிலமைந்த பக்தி பாக்களை பலவகையாக அழைக்கின்றனர். அவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே:

ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும்.…


  • ஸ்துதி, ஸ்தோத்திரம்: வாயால் சொல்லப்படும் கடவுள் மேல் ஆன பிரார்த்தனைகள், prayer hymns (ச்ருதி =என்பது காதால் மட்டும் கேட்கப்படும் வேதம், மந்திரங்கள் ஆகியவற்றைக்குறிக்கும்; ஸ்ம்ருதி என்பது மனத்தால் நினைக்கப்படுவது). இவை செய்யுளாகவோ உரைநடைகளாகவோ இருக்கலாம், பொதுவாகச் செய்யுள் வடிவில் அமையும்.

  • ஸ்லோகம்: செய்யுள் வடிவில் அமையும் துதி; பல்வேறு [அனுஷ்டுப் சந்தம் போன்ற] சந்த வடிவில் இருக்கும். [Generally has 8 syllables in each foot; has ‘anushtup’ metre]

  • த்யானம், மந்திரம், ந்யாசம், கவசம், ஹ்ருதயம்: இவை இறை வழிபாட்டு முறைகளில் (பூஜா விதிகள்) உள்ள அங்கங்கள்.

  • கவசம்: நினைப்பவரைக் காப்பது மந்திரம் (த்ராயதே இதி மந்த்ர:); கவசம் என்பதை ‘நாராயண இதி கவசம்’ என்று உரைநடையாகவோ அல்லது தனியான செய்யுள் வடிவிலோ (கந்த ஷஷ்டி கவசம்) காணலாம்.

  • தசகம், சதகம்: பத்து/நூறு துதிகள் கொண்ட தொகுப்பு, செய்யுள் வடிவம் உடையவை

  • பஞ்ச ரத்னம்: ஐந்து துதிகள் கொண்ட தொகுப்பு, செய்யுள் வடிவம் உடையவை.

  • ரத்நமாலிகா, நவரத்னமாலிகா: இவை துதிகளைப் பற்றிய வர்ணனைச் சொற்கள். மாலிகா என்பது மாலையைக் குறிக்கும். அழகிய பாமாலையை இங்குக்குறிக்கும். இரத்தினம் போல மிளிரும் ஒன்பது கண்ணிகள் இருப்பது நவரத்ன மாலிகா.

  • பஞ்சசதீ, த்ரிசதீ: ஐந்நூறு துதிகள் கொண்ட தொகுப்பு பஞ்சசதீ, முன்னூறு துதிகள் கொண்டது த்ரிசதீ
    செய்யுள் வடிவம் உடையவை.

  • கத்யம்: உரைநடை (prose composition); எதுகை மோனை சந்தங்கள் போன்றவற்றை திட்டவட்டமாக கொள்ளாமல் உரைநடையாக இருப்பவை.

  • பத்யம்: இலக்கண அமைப்பு படி செய்யுள்கள் (verse comp0sition)

  • புஜங்கம், லஹரி: முறையே, பாம்பு நெளிவது, அலை அடிப்பது போன்ற நடையில் அமைக்கப்பட்ட சந்தச் செய்யுள்கள்.

  • ஸுப்ரபாதம்: இறைவனைப் பள்ளியெழுச்சி பாடும் காலையில் சொல்லப்படும் துதி

  • தண்டகம்: a measured type of prose composition, not metrical ஒருவகை அளவுக் கட்டுப்பாடு கொண்ட உரைநடைத் துதி (தண்டம்= measuring stick)

  • தீபிகா: விளக்க நூல்கள்/உரைகள். வியாக்கியானம்

  • காயத்ரி: காயத்ரி மந்த்ரத்தை உள்ளடக்கியது

  • நாராயணீயம்: ஈயம் என்ற அடைச்சொல் ‘பற்றியது’ என்ற பொருள் தருவது. நாராயணனைப் பற்றிய துதி

  • ஸ்வரார்ணவம், சிவலீலார்ணவம்: ஆர்ணவம் என்பது கடலைக் குறிக்கும். நிறையத் துதிகள்/உரைநடை கொண்ட படைப்பு. ArNavam is a descriptive adage

  • மந்த்ரகோசம்: கோசம் என்றால் (மூங்கில் கூடை போன்ற) கொள்கலத்தை (container) குறிக்கும். நிறைய மந்திரங்கள் கொண்ட துதி மந்த்ரகோசம்.

  • ஸூக்தம்: வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட துதி, Vedic hymn;


[நன்றி பேராசிரியர் திரு V.S. அனந்த நாராயணன்]



??????????? ????????? ?????? | Sangatham
 
திருநங்கைகள் என்பதன் அர்த்தம்

திருநங்கைகள் என்பதன் அர்த்தம்

140726728610517590_1423349397952838_2364393030362060353_n.jpg




திருநங்கைகள் என்பதன் அர்த்தம்...இன்றைய சமுதாய சூழ்நிலையில் அரவாணிகள் (அல்லது) திருநங்கைகள் பற்றி பலவித கருத்துக்கள் உலவுகின்றன..

ரயில்களில்/கடைகளில் பிச்சை கேட்கின்றனர்,உல்லாசத்திற்கு அழைக்கின்றனர் என பல கருத்துக்கள்..சிலவை உண்மையாக இருந்தாலும் இந்த சமுதாயத்தில் அவர்களால் கல்வி , வேலை போன்றவைகளில் வாய்ப்பு இல்லாததால் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.


ஜோதிட ரீதியாக பார்க்கும்போது அரவாணிகளிடம் ஆசிர்வாதம் வாங்குவது அவர்களுக்கு உதவி செய்வது ஒரு ஜாதகருக்கு என்றுமே ஏற்றம் தரக்கூடியது.அரவாணிகள் கண்ணனின் வாரிசுகள் என்பது பலருக்கு தெரியாது..பதினெட்டு நாட்கள் நடந்த பாரத போரில் கண்ணன் துரியோதனனை வெற்றி கொண்டது எப்படி என்று அந்த விளக்கத்தை படித்தால் நாம் கூறும் உண்மை புலப்படும்..


அரவாணிகள் நம்மை ஆசிர்வாதம் செய்யும்போது அது கண்ணனே நம்மை ஆசிர்வாதம் செய்வது போன்றது..பரிகாரம் எதுவுமே பலனளிக்கவில்லை என்ற நிலை இருந்தாலும் ஒரு அரவாணியிடம் ஆசி வாங்குவது உடனே உயர்நிலையை தரக்கூடியது.

அரவாணிகள் புதனின் அம்சம்.பலவித திருஷ்டிகள் விலகுவது அரவாணிகளின் ஆசியில் தான்..சிலர் பரிகாரம் செய்தவுடன் நல்ல பலன் தெரியும் , அதன் உள்காரணத்தை பார்த்தால் அவர்கள் அதை செய்ய பயணம் மேற்கொள்ளும்போது ஏதேனும் அரவாணிகளுக்கு உதவி செய்திருப்பார்கள் , அவர்கள் ஆசி தரும்போது அந்த பரிகாரத்தை மீறிய நற்பலன் கிட்டும்..புத்திர தோஷம் / திருமண தோஷம் / மாங்கல்ய தோஷம்/தீரா கடன் உடையவர்கள் அரவாணிகளிடம் ஆசி வாங்கினால் தோஷம் நீங்குவது உறுதி..



சுயதொழில் செய்வோர்பெரிய நிறுவனங்கள் நடத்துபவர்கள் என்றுமே ஏற்றம் பெற/திருஷ்டி விலக இது போன்ற அரவாணிகளை கூடவே வேலைக்கு வைத்திருப்பது சிறந்தது


::WORLD TAMILS WIN ::
 
சிவபக்தியில் உயர்ந்த கழற்சிங்க நாயனார்

சிவபக்தியில் உயர்ந்த கழற்சிங்க நாயனார்

ஜூன் 09,


3b758031-c171-49ee-b817-ecef9516e8d5_S_secvpf.gif



பல்லவ மன்னர் குல வழி தோன்றல் கழற்சிங்கர். எப்பணி விடுபடினும் சிவ வழிபாட்டை தவறவிடாத அளவுக்கு ஈசனின் மீது பற்று மிகுந்தவர். சிவ அருளின் காரணமாக நாட்டையும் அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களையெல்லாம் வென்று வாகை சூடி பொன்னும், பொருளும் பெற்றார்.

அவற்றையெல்லாம் இறைவனின் ஆலய வழிபாட்டிற்கும், அடியார்களுக்கும் வழங்கி வந்தார். இந்த நிலையில் கழற்சிங்க மன்னருக்கு திருவாரூரில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதற்காக தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு, பரிவாரங்களுடன் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார்.

திருவாரூரில் உள்ள எம்பெருமானின் கோவிலை அடைந்து, ஈசனை மனமுருக வேண்டினார். பின்னர் இறைவனின் அருள்வடிவத்திலே தன்னை மறந்து, கண்ணில் நீர்மல்க, உள்ளத்திலே அன்பு பொங்க பக்தியிலே மூழ்கிப்போனார். அந்த நேரத்தில் கழற்சிங்க நாயனாரின் பட்டத்து அரசியானவர், திருக்கோவிலை வலம் வந்து அங்கிருந்த மண்டபங்களைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருந்தார்.

அவ்வாறு வலம் வரும் வேளையில் மணி மண்டபத்தில் சிலர், இறைவனுக்கு அணிவிப்பதற்காக மலர்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருந்தனர். கண்ணைக் கவரும் வண்ணத்துடனும், கருத்தைக் கவரும் நறுமணத்துடனும் இருந்த அந்த மலர்களை கண்டதும் அரசிக்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமணம் வீசும் மலர்களால் தன்னிலை மறந்தார்.

ஒரு மலரை எடுத்து மூக்கின் அருகே வைத்து முகர்ந்துப் பார்த்தார். மணி மண்டபத்தில் மலர் தொடுத்துக் கொண்டிருந்த அடியார்களில், செருத்துணை நாயனாரும் ஒருவர். அவர் அடியவர்களுக்கும், ஆண்டவனுக்கும் யாராவது அறிந்தோ அறியாமலோ தவறு செய்தால் அதனை உடனே கண்டிப்பார்; இல்லையெனில் தண்டிப்பார்.

அப்படிப்பட்ட செருத்துணை நாயனாருக்கு, அரசியின் செயல் கடும் கோபத்தைத் தந்தது. இறைவனுக்கு அணிவிக்கும் மாலைக்காக, தொடுக்க வைத்திருந்த மலரை முகர்ந்து பிழை செய்தவர், அரசி என்பதைக்கூட அவர் சிந்தனைச் செய்யவில்லை. தவறு என்பதை அறிந்ததும் தான் வைத்திருந்த வாளால், அரசியின் மூக்கை வெட்டினார். பட்டத்தரசி தரையில் சாய்ந்தாள்.

இந்தச் செய்தி, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னருக்கு எட்டியது. அவர் விரைந்து வந்தார். நிலத்தில் துவண்டு விழுந்து துடித்துக் கொண்டிருந்த அரசியாரின் நிலையைக் கண்டு மன்னனின் நெஞ்சம் பதை பதைத்தது. ‘அஞ்சாமல் இந்தக் கொடிய செயலைச் செய்தது யார்?’ என்று கண்களில் கோபம் தெறிக்கக் கேட்டார்.

அந்த அச்சுறுத்தும் குரலோசைக் கேட்டு, ‘மன்னா! இச்செயலை செய்தது நான்தான்’ என்று துணிந்து கூறினார் செருத்துணை நாயனார். உடலில் சிவ சின்னத்துடன், சைவத் திருக்கோலத்தில் நின்றிருந்த செருத்துணை நாயனாரைப் பார்த்ததும் மன்னன் ஒருகணம் சிந்தித்தான். ‘சிவனடியார் தோற்றத்துடன் காணப்படும் இவர், இச்செயலை செய்யும் வகையில் என் மனைவி செய்த பிழைதான் என்னவோ!’ என்று எண்ணியவர்.

அதுபற்றி அந்த அடியவரிடமே கேட்டார். ‘அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார். அதன் காரணமாகவே அவரது மூக்கை நான் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது’ என்றார் செருத்துணை நாயனார். மன்னர் மனம் கலங்கினார். இரு கரம் கூப்பி செருத்துணை நாயனாரை வணங்கியவர், ‘ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை’ என்றபடி தன்னுடைய உடைவாளை கையில் எடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கையில் எடுக்காமல் மலரை எவ்விதம் முகர்ந்து பார்க்க இயலும். முதலில் தவறு செய்த கைக்கு தாங்கள் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே!’ என்று கூறியவர், சட்டென்று அரசியின் கரங்களை வெட்டினார். தன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவ பக்தி கொண்ட மன்னருக்கு தலைவணங்கினார் செருத்துணை நாயனார்.

அப்போது சிவபெருமான், உமா தேவியருடன் இடப வாகனத்தில் எழுந்தருளி, பட்டத்தரசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் மெச்சியவர், அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார். சிவபக்தியுடன், சிவ அடியார்களை பணிந்தும் வாழும் கழற்சிங்க நாயனாரை, அனைவரும் போற்றிப் பணிந்தனர்.

மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. மன்னர் கழற்சிங்க நாயனார் பூவுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். முடிவில் சிவபெருமானின் திருவருளால், சிவலோகம் அடைந்து இன்புற்றார்.

???????????? ??????? ????????? ??????? || shiva devotees worship
 
அட்டதிக்குப் பாலகர்கள் புராணமும் - பூசைய

அட்டதிக்குப் பாலகர்கள் புராணமும் - பூசையும்!

ஜூன் 10,2015


LRG_20150610172514500260.jpg




எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; திருக்கைலாயம் எனச் சொல்லப்படும். அக்கயிலையானது ஐந்து ஆவரண அமைப்புடையது என்பது புராண வழக்கு. இந்த ஆவரணங்களை திருச்சுற்று எனத் தமிழில் வழங்குவர். ஆன்மார்த்த பூசையில்; ஒன்றுக்குள் ஒன்று என்ற ஐந்து கட்ட அமைப்பு உடையதாகக் கருதி; வழிபாடு செய்யப்படும். திருக்கோயில் அமைப்பில்; இருபெருஞ்சுவர்களுக்கு இடையிலுள்ள பகுதியை ஒரு ஆவரணமாகக் கருதி; ஆறு பெருஞ் சுவர்களுக்கு இடையில் (கோட்டை அமைப்பு) ஐந்து ஆவரணங்களை நிறுவி; அப்பகுதியில் மண்டபங்களைக் கட்டி இறைத்திருமேனிகளை எழுந்தருளப் பண்ணி வழிபாடு செய்வர். கும்பாபிஷேகம் முதலிய பெருங்கிரியைகளில் அலங்கரிக்கப்பட்ட கும்பங்களை அவ்வவ் பகுதிகளில் வைத்துப் பூசிப்பர். ஐந்து ஆவரணங்களையும் பஞ்சா வரணங்கள் என்றும் பஞ்சப் பிரகாரங்கள் என்று சொல்லும் வழக்கம் உண்டு.

ஆகம வழக்கில் முதல் ஆவரணத்தை அந்தர் மண்டலம் என்றும்; இரண்டாம் ஆவரணத்தை அந்தர் ஹாரை என்றும்; மூன்றாம் ஆவரணத்தை மத்ய ஹாரை என்றும்; நான்காம் ஆவரணத்தை பாஷ்ய ஹாரை என்றும்; ஐந்தாம் ஆவரணத்தை மர்யாதா என்றும் சொல்வர். முதல் ஆவரணத்தில் பஞ்சப் பிரம மற்றும் அங்கதேவர்கள் பூசிக்கப்படுவர், இரண்டாம் ஆவரணத்தில் அனந்தேஸ்வரர் உள்ளிட்ட அட்ட வித்யேஸ்வரர்கள் பூசைக்கு உள்ளாவர். மூன்றாம் ஆவரணத்தில் கணபதி- அம்பிகை-சண்டர் உள்ளிட்ட இறைவர்களைப் பூசிப்பர். நான்காம் ஆவரணத்தில் அட்டதிக்குப் பாலகர்கள் வழிபடப்படுவர்; ஐந்தாம் ஆவரணத்தில் அவர்களுக்குரிய ஆயுதங்கள் வழிபடப்படும். தமிழகத்தில் திருக்கோயில் எதிலும் ஆவரண தேவர்கள் அனைவரும் இறைத் திருமேனிகளாக எழுந்தருளிவிக்கப்படவில்லை. பூசை வழக்கில் மட்டுமே உளர்.

அதுவும், திருக்கோயில்களில் மூல மூர்த்தியின் பீடத்தில் இவர்கள் அர்ச்சிக்கப்படுவர். ஆன்மார்த்த பூசையில் அவ்வவ் விடங்களில் ஒருமலரிட்டு வழிபடப்படும். கும்பாபிஷேகம் முதலிய பெருங்கிரியைகளில் கலசங்கள் வைத்து வழிபடுவர். ஆன்மார்த்த மற்றும் பரார்த்த பூசைகளில்; அனந்தர் மற்றும் அட்டதிக்குப் பாலகர்கள்; மூலமூர்த்தியை நோக்கியபடி இருகரம் கூப்பித் தொழுத வண்ணம் இருப்பர். கும்பாபிஷேகம் முதலிய கிரியைகளின் போது; நம்மை நோக்கியபடி அபய=வரத-கரங்கள் உடையவராய் நம்மை அருள்பாலித்து இருப்பார்.


அட்டதிக்குப் பாலகர்கள் யார்?

சைவ சித்தாந்த நோக்கில் அட்டதிக்குப் பாலகர்களும் முன்-முன் பிறவிகளில் மனிதர்களாய் இருந்தவர்களே. ஒரு பிறவியில் செய்யும் நல்வினை-தீவினைகளின் அடிப்படையிலேயே வேறு பிறவி கிடைக்கிறது. நல்வினை அதிகமாயிருக்கும் பட்சத்தில் உயர்ந்த பிறவியும்; தீவினை அதிகமாயிருக்கும் பட்சத்தின் தாழ்ந்த பிறவியும் வாய்க்கும். புண்ணிய கருமங்களைச் செய்து நல்வினைப் பயன் பெற்ற மனிதப் பிறவிகளே - தெய்வ நிலை பெற்று இந்திரன் முதலானோர் ஆயினர். சைவ சித்தாந்த பரிபாசையில்-ஆன்மாக்களை (உயிர்); சகலர் - ப்ரளயாகலர் விக்ஞான கலர் என மூவகைப்படுத்துவர். இந்திரன் முதலிய திக்பாலகர்கள் விக்ஞான கலர் ஆவர். பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்-மகேசன்-சதாசிவம்-விந்து-நாதம்-சக்தி-சிவம் என்ற நவபேதத்தில்; விந்து-நாதம்-சக்தி-சிவம் என்ற நான்கும் அருவ நிலையினர்; பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்-மகேசன் என்ற நால்வரும் உருவ நிலையினர்; சதாசிவம் - அருஉருவநிலையினர். இதுவே சிவலிங்க வடிவமாகும். சதாசிவத்தினின்றும் மகேஸ்வரன் தோன்றினார். இருபத்தைந்து மற்றும் அறுபத்து நான்கு வகைப்படும் இறைத்திரு மேனிகள் அனைவரும் மகேசுவர வடிவினர்களே யாவர்.


மகேஸ்வரனுடைய ஆற்றலில்; அயிரத்தொரு கூறாக ருத்ரன் தோற்றுவிக்கப்பட்டார். இதை, ஈஸ்வரஸ்ய ஸஹஸ்ராம்சாத் ருத்ரஸ்ய உத்பவ முச்யதே என்று சுப்ரபேதாகமம் கூறும். மகேஸ்வரனின் கோடியில் ஒரு அம்சமாக விஷ்ணு தோன்றினார். இதை, ஈஸ்வரஸ்யது கோட்யம்சாத் விஷ்ணு ஸ்தத்ரைவ் கீர்த்தித என்று ஆகமம் விளக்கும். விஷ்ணுவின் தொப்புள் கொடியினின்றும் பிரம்மா தோன்றினார். பிரம்மா, ஈஸ்வரனிடம்-சாமீப-சாரூப -நிலயில் இருந்த விஞ்ஞானகல ஆன்மாக்களை அட்டதிக்குப் பாலகர்களாக சிருஷ்டித்தார்.

திசைக் காவலர் ஆயினர்!



பிரம்மா வால் சிருஷ்டிக்கப்பட்ட அட்டதிக்குப் பாலகர்களான இந்திரனை கிழக்குத் திசைக்கும் (இதனை ஆகம வழக்கில் திக்கு என்பர்); அக்கினியை -தென்கிழக்குத் திசைக்கும் (இதனை ஆகம வழக்கில் விதிக் என்பர்); இயமனை-தெற்கிற்கும்; நிருதியை -தென் மேற்கிற்கும்; வருணனை மேற்கிற்றும்; வாயு-வை வட மேற்கிற்கும் குபேர-ண வடக்கிற்கும்; தனது அம்சமான ஈசான -ண வடகிழக்கிற்கும்; காவல் தெய்வங்களாக ஈஸ்வரன் நியமித்தார். அத்தோடு பிரம்மா-வை கிழக்கு மற்றும் வடகிழக்கிற்கு இடைப்பட்ட திசையில் இருந்தும்; விஷ்ணுவை தென்மேற்கு மற்றும் மேற்கிற்கு இடைப்பட்ட திசையில் இருந்தும்; சர்வ லோகங்களையும் காத்தருளுமாறு பணித்தார்! மேலும், பிரம்மாவையும்-விஷ்ணுவையும்; சிருஷ்டி-ஸ்திதி ஆகிய தொழில்களைச் செய்யுமாறும் அருளினார்.

நாம் பூசா வழக்கில்; சமசதுரக் கட்டத்துள்ளும்; சமதளத்திலும் வைத்து வழிபட்டாலும்; அவர்கள் இருந்தருளும் பகுதியானது மேல்-கீழாக அமைந்தது.

சிவனுக்குரிய கயிலங்கிரியினின்றும்; எண்பத்து நான்காயிரம் யோசனைக்குக் கீழே மனோவதீ எனும் பிரம்மனுடைய பட்டிணம் அமைந்துள்ளது. அங்கிருந்தே அவன் சிருஷ்டத் தொழிலைச் செய்கிறான்.


கயிலையின் கீழ்புறம் ஆயிரம் யோஜனை தூரத்திற்குக் கீழே இந்திரனது அமராவதி எனும் நகரம் அமைந்துள்ளது. அங்கிருந்தே அவன் காத்தல் தொழிலைப் புரிகிறான்.

இதன் அடிப்படையிலேயே தமிழகத்துக் திருக்கோயில்களின் ஈஸ்வரனின் கருவறை யினின்றும், ஒவ்வொரு ஆவரணமும் (கட்டிடப் பகுதியும்) ஒன்றுக்கொன்று தாழ்வான பகுதியாக அமைக்கப்பட்டிருத்தலைக் கண்டு இன்புறலாம்!

வழிபாட்டு வழக்கில் பிரம்மனையும் விஷ்ணுவையும் கிழக்கு மற்றும் மேற்கில் வைத்து வழிபட்டாலும், பிரம்மா-ஊர்த்து லோகத்திற்கும்; விஷ்ணு-அதல (பாதாள) லோகத்திற்கும் அதிபதிகளாவர். அவ்வாறு வைத்து வழிபடல் சாத்தியமின்மை கருதி இவ்வாறு வழிபடல் ஆயினர்.

ஈஸ்வரனின் அடிமுடி தேடிய படலத்துள் பிரம்மா அன்னப் பறவையாய் ஆகாயம் நோக்கிப் பறந்ததும்.

விஷ்ணு-வராக உருக்கொண்டு பாதாளம் நோக்கிச் சென்றதும் இத்தத்துவத்தின் பாற்பட்டதே ஆகலாம்!

அட்டதிக்குப் பாலகர் என்ற சொல் வழக்கில் இருந்தாலும் பூசா வழக்கில் தசதிக்குப் பாலகர்களாகவே வழிபடப்படுவர்.

இந்திரன்-அக்கினி-இயமன்-நிருதி-வருணன்- வாயு-குபேரன்-ஈசானன் என்போர் அட்டதிக்குப் பாலகர் ஆவர்.

இவர்களுடிணீஞூ பிரம்மாவும், விஷ்ணுவும் சேர்க்கப்பட்டு தசதிக்குப் பாலகர் ஆகின்றனர்.

இவர்களுடைய ஆயுதங்களான வஜ்ரம்-சக்கரம் முதலிய பத்து ஆயுதங்களும் ஐந்தாவது ஆவரணத்தில் வைத்துப் பூசிக்கப்படும்.

என்றாலும் திருக்கோயில் வழக்கில் ஐந்தாவது ஆவரணத்தில் இவர்களுக்கு என்று தனிப்பகுதி ஒதுக்கப்பட்டு வழிபடும் வழக்கு நடைமுறையிலில்லை. அபூர்வமாக அகோராஸ்த தேவர் மட்டும், திருவெண்காட்டுத் திருக்கோயில் ஐந்தாம் ஆவரணத்தில் உள்ளார். வழிபடப் படுகின்றார்.


ஆயுத தேவர்களுக்கும் திருமேனி உண்டு. தியான சுலோகங்களும் உள்ளது. தேவியர்களும் கூறப்பட்டுள்ளார். இருகரங்களையும் குவித்து ப்ரயோக நிலையில் அதில் ஆயுதம் ஏந்திய நிலையில் இருப்பர். தலைமீது தாங்கி இருப்பதாகவும் ஒரு சிலர் கருஙுவர். ஆனாலும், இவர்களுக்குத் தானே இயங்கும் ஆற்றல் இல்லை பிற தேவர்கள் பிரயோகித்தாலே செய்படுவர். எனவே, இவர்களுக்குத் தனித்துவ வழிபாடும் இல்லை.

ஆன்மார்த்த மற்றும் பரார்த்த பூசையில் ஒரு மலரிட்டு வழிபடப்படுவர். கும்பாபிஷேக நிகழ்வில் திக்பால தேவர்களுடன் சேர்த்தே ஆயுத தேவர்களும் வழிபடப்படுவர். அது முறையே இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை உணர்த்த விரும்புகின்றோம்.

சங்கிரக சங்கற்பம்- (சுருக்கச் சூளுரை) பொது

மமோ பாக்த-சமஸ்த்த-துரித-சயத்வாரா-ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீயர்த்தம்-சமஸ்த்த மங்கள-அவாப்யர்த்தம்-ஆன்மார்த்த/பரார்த்த/ கும்பாபிஷேக) தசதிக்குப் பாலக-இந்த்ர-அக்நி-யம-நிருத-வருண-வாயு-குபேர-ஈசான-பிரம்ம-விஷ்ணு-பூஜா கீரியாயாம்-கரிஸ்யே -


Ashta dhik balagar | ???????????? ????????? ????????? - ????????!






 
பவுர்ணமி குத்துவிளக்கு பூஜை!

பவுர்ணமி குத்துவிளக்கு பூஜை!
ஜூன் 11,2015




பவுர்ணமி தோறும் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

சித்திரை பவுர்ணமி- தானிய விருத்தி

வைகாசி பவுர்ணமி- செல்வ வளம்
ஆனி பவுர்ணமி- விவாகப் பேறு

ஆடி பவுர்ணமி- நீண்ட ஆயுள்

ஆவணி பவுர்ணமி- புத்திரப்பேறு

புரட்டாசி பவுர்ணமி- பசுக்கள் விருத்தி

ஐப்பசி பவுர்ணமி- களஞ்சியம் நிரம்பும்

கார்த்திகை பவுர்ணமி- நற்கதி கிட்டும்

மார்கழி பவுர்ணமி- ஆரோக்ய வாழ்வு

தை பவுர்ணமி- காரிய சித்தி

மாசி பவுர்ணமி- துயர் நீங்கும்

பங்குனி பவுர்ணமி- சுபிட்சம் உண்டாகும்

http://temple.dinamalar.com/news_detail.php?id=44215
 
கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்த&#

கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் வெகுவாகக் குறையும்.


1) காகத்திற்கு உணவிடுதல்.
2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் வைத்தல்.
3) பசுவிற்கு அகத்திகீரை, பச்சரிசி வெல்லம் தருதல்.
4) எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலமிடுதல்.
5) சனிக்கிழமை கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தி தருதல்.
6) மீன்களுக்கு பொரி அளித்தல்.
7) மலை மேல் உள்ள கோவில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் தருதல்.
8) கோயில் விளக்கிற்கு எண்ணை அளித்தல்.
9) ஊனமுற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல்.
10) அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல்.
11) அன்னதானம், நீர்ப்பந்தல் போன்றவற்றிற்கு உதவுதல்

Source:
Jeyanathan Durai
 
கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் &#

கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்ன?

செப்டம்பர் 15,2011

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது.

வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வேண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்பமாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை புஷ்பமாக சமர்ப்பித்து தான் என்ற அகங்காரத்தை அகற்றி இறைவனை வழிபடுகின்றனர்.


http://temple.dinamalar.com/news_detail.php?id=5790
 
அரோகரா என்பது ஏன்?

அரோகரா என்பது ஏன்?

சிவநாமமான ‘ஹர ஹர’ என்பதையே ‘அரோகரோ! வேல் முருகனுக்கு அரோகரா!’ என்று சொல்கிறார்கள். ஏன் தெரியுமா? சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். சிவன் நெற்றிக் கண்ணில் ஆறு தீப்பொறிகளை வெளியிட, அவை சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளானது. அவர்களைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதிதேவி ஒரே உருவமாக்கி ‘கந்தன்’ என்று பெயரிட்டாள்.

தன் சக்தியை ஒன்று திரட்டி வேலாகக் கொடுத்தாள். வேலினால் கந்தன் சூரனை வதம் செய்தார். இதனால் முருகன் ‘அறுமுகச் சிவனார்’ எனப் போற்றப்பட்டார். முருகனுக்கும், ‘ஹர ஹர’ (சிவனே சிவனே) என்ற பதம் உண்டாயிற்று. இதுவே திரிந்து ‘அரோகரா’ ஆயிற்று

http://temple.dinamalar.com/news_detail.php?id=41400
 
தேவர்களாவதும், அசுரர்களாவதும் நம் செயல்&

தேவர்களாவதும், அசுரர்களாவதும் நம் செயல்களில் தான் உள்ளது.

E_1433999777.jpeg


அசுரர்கள், தேவர்கள் இவர்களில் நீங்கள் யார்?' என்ற கேள்வி எழுந்தால், நம் பதில், தேவர்கள் என்பதாக தான் இருக்கும். ஆனால், உண்மையில் நாம் யார் என்பதை, இக்கதையை படித்த பின், முடிவிற்கு வாருங்கள்.

சஹஸ்ர கவசன் எனும் அசுரன், இறைவனை நோக்கி கடுந்தவம் செய்து, வரம் பெற்றான். ஆயிரம் கவசங்களைக் கொண்ட அவன், 'என் ஒரு கவசத்தை எவன் உடைக்கிறானோ அவன் இறக்க வேண்டும்; கடைசி கவசமான ஆயிரமாவது கவசம் உடைந்தால் தான், என்னை மரணம் தழுவ வேண்டும்...' என்று கேட்டு, வரம் பெற்றான்.

இதன்பின், சஹஸ்ர கவசனின் அக்கிரமங்கள் அளவில்லாமல் போனது. அவனை எதிர்த்து, அவன் கவசத்தை உடைத்து இறப்பதற்கு, யாரும் தயாராக இல்லை.

இதனால், அவனது தொல்லைகள் தாளாமல், முனிவர்கள் நர - நாராயணர்களிடம் சென்று முறையிட்டனர்.

'உங்கள் துயரங்களை தீர்ப்போம்...' என்று வாக்களித்தனர் நர - நாராயணர். சஹஸ்ர கவசன் பெற்றுள்ள வரம் அவர்களுக்கு தெரியும். ஆனாலும், முனிவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி, முதலில், நரன் சென்று, சஹஸ்ர கவசனின் ஒரு கவசத்தை உடைத்து விட்டு, இறந்தார். நரனை உயிர்பித்த பின், நாராயணன், சஹஸ்ர கவசனுடன் போரிட்டு ஒரு கவசத்தை உடைத்து, இறந்தார்.

அவரை எழுப்பி, நரன் மறுபடியும் சஹஸ்ர கவசனின் இன்னொரு கவசத்தை உடைத்தார்.
இப்படியே மாறி மாறிக் கவசங்கள் உடைக்கப்பட்டன. கடைசியில், ஒரே ஒரு கவசத்துடன் இருந்த சஹஸ்ர கவசன், பயந்து, சூரிய பகவானிடம் அடைக்கலம் புகுந்து, உயிர் பிழைத்தான்.

ஒற்றைக் கவசத்துடன் இருந்த சஹஸ்ர கவசன் தான், சூரிய பகவானால், குந்திக்குப் குழந்தையாக அளிக்கப்பட்டான். அவன் பெயர், கர்ணன்!

அசுரனான அந்த சஹஸ்ர கவசன் தான் நாம். அவன் கடுமையாக தவம் செய்து வரங்களை பெற்றதைப் போல, நாமும் கடுமையாக உழைத்துப் படிப்பு, பதவி மற்றும் செல்வங்களை பெறுகிறோம். அதன்பின், அந்த அசுரனைப் போல ஆடக்கூடாத ஆட்டமெல்லாம் ஆடி, உழைத்து சேர்த்ததை உளுத்துப் போகச் செய்கிறோம்.

அந்த அசுரனை தண்டித்ததைப் போலவே, இறைவன் நம்மையும் தண்டிக்கிறார். ஆகையால், இதிகாசம் மற்றும் புராணங்கள் நம் சொந்தக் கதைதான்; தேவர்களாவதும், அசுரர்களாவதும் நம் செயல்களில் தான் உள்ளது.

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்றுநாடுவன்
நான் இன்று அறிவது தானே.

கருத்து: சிவபெருமானுடைய திருவடிகளை தலையில் சூடுவேன்; நெஞ்சகத்தின் நடுவில் வைப்பேன்; அடியார்களைப் பிரியாதவன் என்று பாடுவேன்; பல விதமான மலர்களைத் தூவிப் பணிந்து நின்று ஆடுவேன்; ஆடி ஆடி, அமரர்களுக்குத் தலைவன் அவன் என்று நாடுவேன். இன்று நான் அறிவது இவையே!


- மனம், மொழி, மெய் ஆகியவற்றால் இறைவனைத் துதிக்க அறிந்து கொள்ள வேண்டும் என்பது கருத்து.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25475&ncat=2
 
வீட்டுவாசலில் பசு சாணத்தை கரைத்து தெளிப&

வீட்டுவாசலில் பசு சாணத்தை கரைத்து தெளிப்பது ஏன்?

ஜூன் 13



c8751b0d-662b-4bd5-87c7-200ab5a0f921_S_secvpf.gif


வீட்டுவாசலை பெருக்கி, தண்ணீருடன் பசுவின் சாணத்தை கரைத்து தெளிக்கிறோம். இதற்கு காரண காரியம் உண்டு. பசுநீர், பசு சாணத்துக்கு கிருமிநாசினியாக உள்ளது. மேலும் பில்லி, சூனியம், திருஷ்டி, தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்கும் சக்தி உடையது.

இதனால்தான் வீட்டின் முன்வாசலிலும், பின்வாசலிலும் தினமும் பசு சாணத்தை கரைத்து தெளிக்கிறோம். புதிதாக வீட்டுமனை வாங்கும் போதும், வீட்டு கிரகப்பிரவேசத்தின் போதும், தீவினைகள், தீய சக்திகளின் பாதுகாப்புக்கு உள்ளாகாமல் இருக்கவே பசுவின் சாணத்தை தெளிப்பது வழக்கமாக உள்ளது.

http://www.maalaimalar.com/2015/06/13131549/home-cleaning-method.html
 
Sri Vishnu Avatar are nothing but representation of evolution of earth

Sri Vishnu Avatar are nothing but representation of evolution of earth

Sri Vishnu Avatar are nothing but representation of evolution of earth , How life was first created , evolved and various.

1. Matasya Avatar – The first incarnation or avatar ofLord Vishnu was in the form of a fish and is known as ‘Matsya Avatar.’ It has now been confirmed by Science through various experiments that the first life forms evolved underwater.

2. Kurma – The second incarnation of Lord Vishnu was in the form of a tortoise known as ‘Kurma Avatar.’ Tortoise is an amphibious creature capable of living both on land and in water and it indicates the moving of life form from underwater to surface ofEarth.

3. Varaha – The third incarnation of Lord Vishnu is the boar known as ‘Varaha Avatar’. Boar is a complete land animal and in this incarnation, life form has moved out of water and has adapted to land.

4. Narasimha – The fourth incarnation of Lord Vishnu is the half-man half-animal form known as ‘Narasimha Avatar.’ This incarnation starts the transformation from animal to human form.

5. Vaman – The fifth incarnation of Lord Vishnu is the dwarf or pigmy sized human being known as the ‘Vamana avatar.’ A transition from the beastly form to human form and the development of intelligence.

6. Parsuram – The sixth incarnation of Lord Vishnu is the forest dweller known as ‘Parasuram.’ He has developed weapons and axe is his first weapon. Any sharp stone can be transformed into an axe and it also indicates the first settlement of humans in forests.

7. Ram – The seventh incarnation of Lord Vishnu is Lord Ram. He civilized and has developed more superior weapons like the bow and arrows. He has cleared the forests and developed small communities or villages. He is very vigilant and protects his villages and people.

8. Balram – The eight incarnation of Lord Vishnu is Lord Balarama. He is portrayed with the plough – the beginning of full-fledged cultivation. Human civilization has developed agriculture and is no longer depended forest for food. The beginning of agrarian economy.

9. Krishna – The ninth incarnation of Lord Vishnu is Krishna. He represents the advancing human civilization. He is associated with cows, the beginning of domestication of animals and development of economy, which continues to the present day.

10. Kalki – The tenth incarnation of Lord Vishnu is Kalki and is yet to arrive. He is believed to ride on a swift horse Devadatha and destroy the world. A clearindication that human beings will bring an end to life on earth. The numerous natural calamities created by human beings and the numerous nuclear weapons stored illustrates this.

https://competitiveexamtipsandtrick...n-of-earth/?blogsub=confirming#subscribe-blog
 
தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும்

தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும்

சனிக்கிழமை, ஜூன் 13

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் ஒரு தீபமாவது ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.

இதனால் எவ்வளவு பெரிய திருஷ்டியும் நிவர்த்தியாகி அவர்களது நட்சத்திரம் பிரகாசமாகி வாழ்க்கையும் பிரகாசமாக அமையும். வீடுகளில் ஏற்படுகின்ற தீபங்கள் இருளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இடர்பாடுகளை தருகின்ற தீவினைகளையும், தீயசக்திகளையும் பஸ்மம் செய்கிறது. ஆலயங்களில், இல்லங்களில், அலுவலகங்களில் தீபங்களை ஏற்றி ஒளிமயமான வாழ்க்கையையும், பலவித திருஷ்டி தோஷங்களின் நிவர்த்திகளையும் பெறலாம்.

ஒரு வீட்டில் எந்த அளவில் அதிக எண்ணிக்கையிலான தீபங்கள், எவ்வளவு நேரம் ஏற்றி ஒளிர செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு திருஷ்டிகள் விலகி நன்மைகள் உண்டாகும். தீப ஜோதி சுடர்கள் எத்தகைய திருஷ்டி தோஷ கதிர்களையும் இழுத்து பஸ்மம் செய்கிறது. தீபங்களின் சுடர்களை உற்றுநோக்கி குறைந்தது ஒரு நாளைக்கு 5 நிமிடங்களாவது தொடர்ந்து தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் நம்மில் ஏற்பட்டுள்ள பலவித திருஷ்டி தோஷங்கள் கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மனதின் மாசுகள் பஸ்மம் செய்யப்படுகின்றன. மேலும் மனதின் புத்திகூர்மை அதிகரிக்கிறது. முகத்தில் தேஜஸ் உண்டாகிறது. எத்தகைய திருஷ்டி தோஷங்களுக்கும் சரியான, முறையான பலமான பரிகாரம் தீப ஜோதி வழிபாடுதான்.


http://www.maalaimalar.com/2015/06/13132336/deepam-worship-best-for-home.html
 
ருத்ராட்சம் அணிந்தால் இப்படி ஒரு நன்மை!

ருத்ராட்சம் அணிந்தால் இப்படி ஒரு நன்மை!

மார்ச் 05,2015

கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி! தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால், என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளையாடுகிறாயா? ஏழரை ஆண்டு அல்ல! ஏழரை நாழிகை கூட உன்னால் என்னை நெருங்க முடியாது, என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுயரூபம் காட்டிய சிவன்,சனீஸ்வரா! தோற்றுப் போனாயா? என்றார். ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித்தார் சனீஸ்வரர். யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலைநாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத்ராட்சம் அணிந்து சிவநாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப்பட்டார்.


http://temple.dinamalar.com/news_detail.php?id=40576
 
விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்க

விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பது ஏன்?

நவம்பர் 05,2011
TN_111105124322000000.jpg



விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். உபவாசம் என்றால் இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள்.

முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

http://temple.dinamalar.com/news_detail.php?id=6713
 
நாளெல்லாம் நன்மை தரும் வில்வ மரம்!

நாளெல்லாம் நன்மை தரும் வில்வ மரம்!

ஏப்ரல் 20,2015


LRG_20150420161824285831.jpg



வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்வதாக அஷ்டோத்திரமந்திரம் கூறுகிறது. இதற்குஸ்ரீ விருட்சம் என்றும் பெயருண்டு. வில்வ மரப்பலகையில் யந்திரம் வரைந்து லட்சுமியை வழிபடுவது சிறந்த பலன் தரும். வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய உண்டாகும். வில்வ கன்றுகளை பிறருக்கு தானம் அளிப்பதும் புனிதமானதாகும். வீட்டின் முன் புறபகுதியில் வில்வ மரத்தை வளர்ப்பது நல்லது. காலையில் எழுந்ததும் இதனை தரிசித்தால் நாளெல்லாம் நல்லதாக இருக்கும்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=42261
 
சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம் சொல்றதைக&#

சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம் சொல்றதைக் கேளுங்க !

அக்டோபர் 30,2012



தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும்.

மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும். வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும். சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும் ..

http://temple.dinamalar.com/news_detail.php?id=14238
 
எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும&

எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் ?


ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்க்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அனைவரும் தெரிந்து கொள்ள பகிரவும்.

ஞாயிறு --- சூரியன்

கோதுமையினால் ஆன உணவை உண்ணலாம்.
சிம்ம ராசியினருக்கு நலம் உண்டாகும்.

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,

சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,

மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

திங்கள் --- சந்திரன்

பால் சம்மந்தமான உணவு - கடக ராசியினருக்கு நலம் உண்டாகும்.

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,

பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,

தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.


செவ்வாய் --- செவ்வாய்

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,

பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,

தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.

மேஷ, விருச்சிக ராசியினருக்கு நலம் உண்டாகும்.

புதன் --- புதன்

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,

பாவக்காய் கொத்சு, முருங்கைக் காய் சூப்,

பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,

வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

மிதுனம், கன்னி ராசியினருக்கு நலம் உண்டாகும்.

வியாழன் --- குரு

சுக்கு காபி,அல்லது கஷாயாம், சோளம்,

கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,

தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,

சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,

கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,

மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

தனுசு, மீன ராசியினருக்கு நலம் உண்டாகும்.

வெள்ளி --- சுக்கிரன்

பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,

தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,

முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,

கம்பு தோசை,அவியல், தயிர், கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,

நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

ரிஷபம், துலா ராசியினருக்கு நலம் உண்டாகும்.

சனி --- சனி

எள் உருண்டை, ஜிலேபி, அதிரசம்,

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,

புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,

நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம் , முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

மகரம், கும்ப ராசியினருக்கு நலம் உண்டாகும்.


http://www.swasthiktv.com/index.php/traditional-recipes/item/739-2015-06-16-08-46-51
 
சிவ பக்திக்கு அர்த்தம்

சிவ பக்திக்கு அர்த்தம்


டிசம்பர் 17,2013

TN_131217125634000000.jpg




ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. அதற்கு அவள் கணவன், அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.


அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான். அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர். இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.


http://temple.dinamalar.com/news_detail.php?id=25743
 
பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரண&

பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்

மே 05,2011

TN_174454000000.jpg



ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து.

இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.

உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது.

நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்

http://temple.dinamalar.com/news_detail.php?id=3105
 
The only qualification to become dear to the Lord


The only qualification to become dear to the Lord



One day in the sacred shrine of lord Viswanath at Kasi, all the devotees and temple priests were immersed in singing hymns and reciting chants.


All of a sudden, they heard a metallic sound. When they turned their heads in that direction they saw a shining gold plate on the floor of the shrine. It must have fallen through an open space in the center of the hall from the sky leading to the sanctum sanctorum.


All of them gathered round with wonder, while the chief temple priest went close to examine it. He found some letters inscribed on it. "This belongs to my dear devotee". The priest read the inscription loudly. All the temple priests vied with one another to snatch the plate with the feeling, "Who could be a greater devotee than myself. I spend my time, talent and strength only to offer worship to the Lord Viswanath." But the plate changed into an earthen one the moment they touched it one after another. News spread like wild fire about the golden plate. Several scholars, singers, poets and preachers came and tried their luck but in vain. Days, weeks and months rolled on but the plate remained there without a claimant.

One day, a stranger came to the temple. He stood at the entrance and tears gathered in his eyes when he saw beggars, blind, dumb and lame piteously pleading for alms. He felt ashamed of his inability to relieve them of their hunger and agony. He wanted to pray to the Lord and so stepped into the temple. He saw people gathered round and discussing something. He tried to squeeze himself into the crowd to find out why they were standing there. He saw a golden plate in the center of that enclosure. He enquired and was told about the episode of the golden plate. He was rather surprised and sad at the attitude of the people and the priests. Instead of praying to the Lord of the Universe and trying to possess Him, they were eager to possess the golden plate.


Observing his nonchalant attitude, the high priest requested him to try his hand. The stranger replied: "Oh Revered one! I do not care for either gold or silver, what I long for is God's Grace." The priest's esteem for that man increased. So he once again pressed him, "At least to satisfy us, please try your hand." The stranger touched the plate without a trace of attachment. Lo! It shone forth with redoubled effulgence.


All the priests gathered round and queried: "Sir, where do you come from? What are your qualifications? What are the branches of learning you have mastered? How many years did you do penance?" The stranger replied calmly: "I don't belong to any place. I just manage to earn my bread by hard labor. The only sadhana I do is Namasmaran [repeating the name of the Lord]. This has perhaps rendered my heart pure and filled it with love and compassion. It has enabled me to control my mind and the senses. I have not read any book or mastered any science. The only art I know of is chanting the Name Divine. The only act I do is to be kind to the poor."

So, the only qualification to become dear to the Lord is to acquire a compassionate heart and sense control. These two can be acquired through Namasmaran with full faith in the Lord.



http://www.templeadvisor.com/user-articles/195
 
இறைவனை வழிபட இருக்குது 9 எளிய வழி!

இறைவனை வழிபட இருக்குது 9 எளிய வழி!

ஜனவரி 21,2013

TN_130121171145000000.jpg




இறைவனை எப்படி வழிபடலாம் என்பதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. இதில் ஒன்றை பக்தர்கள் பின்பற்றினால் போதும்.


1.சுகபிரம்மரிடம் மனம் ஒன்றி கிருஷ்ணரின் பிரபாவங்களைக் கேட்டார் பரீட்சித்து மன்னர். கடவுளின் மகிமையைக் கேட்பதே வழிபாடு தான்.



2.சுகபிரம்ம முனிவருக்கு, அவரது தந்தை வியாசர் வேதங்கள் குறித்து சொன்னார். அதைக் கேட்டே சுகப்பிரம்மர் உயர்வெய்தினார். கடவுளைப் பற்றி பிறருக்குச் சொல்வதும் வழிபாடு தான்.

3.பிரகலாதன் எந்நேரமும் நாராயணனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தான். நினைப்பதும் கடவுளை வணங்கும் வழிகளில் ஒன்று.

4.பெருமாளின் பாதங்களுக்கு சேவை செய்தாள் லட்சுமி. இறைவனின் திருப்பாதங்களை பார்த்தாலே போதும். பாத சேவையும் இறைவழிபாட்டு முறை தான்.

5.கோயிலிலோ, வீட்டிலோ வழிபடலாம்.

6.எந்த இடத்தில் இருந்தாலும், அங்கிருந்தே பிரார்த்தனை செய்யலாம்.

7.அவரவர் பணி, தொழிலைக் கூட முதலாளிகளுக்குப் பணிந்து அவர்களின் விருப்பம் போல் செய்து முடிப்பதும் வழிபாடே. ராமனின் கட்டளையை அனுமன் ஏற்றது போல.

8.கடவுளை தன் தாயாக, தந்தையாக, நண்பனாக, உறவாக ஏற்பதும் வழிபாடே. அர்ஜுனன் கிருஷ்ணனை நண்பனாக ஏற்றது போல்.

9.இந்த உடலால் செய்யும் ஒவ்வொரு நற்செயலையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கலாம். திருமாலிடம் மகாபலி தன்னையே ஒப்படைத்தது போல.


http://temple.dinamalar.com/news_detail.php?id=16129
 
ஆண்,பெண் எப்படி விழுந்து வணங்க என்பதை தெ&#2992

ஆண்,பெண் எப்படி விழுந்து வணங்க என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அரிய சிற்பம்.



attachment.php


பல ஆண்கள் கொடி மரம் கீழே உடற்பயிற்சி செய்வது போல் விழுந்து எழுவார்கள்.ஆண்,பெண் எப்படி விழுந்து வணங்க என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அரிய சிற்பம்.

தம்பதியர் கோவிலுக்கு சென்றால் இருவரும் சேர்ந்தே விழுந்து வணங்க வேண்டும்.




Source:puradsifm
 

Attachments

  • Namaskaram before Kodimaram.jpg
    Namaskaram before Kodimaram.jpg
    113.2 KB · Views: 115
குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திர&#

குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை

நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் சங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங் காலத்திலிருந்தே சங்கு வடிவத்தை மக்கள் தங்களது அரண்மனை வாசலில் வடிவமைத்து வைத்தனர். பழங்காலத்திலிருந்தே சங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது. பூஜை வழிபாடுகாலங்களில் சங்கு ஒலிக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் அங்கே லட்சுமி கடாட்சம் உண்டாகிறது.
காலையில் எழுந்த உடன் குளித்து முடித்து விட்டு குபேரன் படத்தின் முன்பு நல்ல எண்ணெய்+நெய் சம விகிதத்தில் கலந்து சங்கு முத்திரையை செய்தபடி 16 நிமிடங்கள் குபேர மூலமந்திரத்தை ஊதிப் பழகுங்கள். இப்படி 48 தினங்கள் செய்து வந்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.

அடுத்ததாக ஒரு நாளுக்கு 16 நிமிடங்கள் வீதம் மூன்று வேளைகள் செய்தல் வேண்டும். 3x16=48 நிமிடங்கள் சங்கு முத்திரையின் விகிதப்படி ஒரு நாளுக்கு 48 நிமிடங்களுக்கு மேல் செய்தல் வேண்டாம். மேலும் இதைச் செய்வதால் கூடுதல் பலன்களாக, மணிபூரகச் சக்கரம் வலுவடைந்து குரல் வளம் கூடி திக்குவாய் நீங்கி, சரளமாகப் பேசுகின்ற திறமையும் கூடிவிடும்.

சங் என்ற வடமொழிச் சொல்லுக்கு `நன்மை யைத் தருவது' என்றும், `கு' என்பதற்கு அதிகமாக அருள்வது என்றும் பொருள்.

சங்குமுத்திரை

5a480c18-71af-4634-9ad1-1945c755d98c_S_secvpf.gif




செய்முறை: இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதியும் படி வைத்து வலது விரல்களால் (பெரு விரல் தவிர்த்து) அதை இறுக மூடிக் கொள்ளவும்.

வலது பெருவிரல், இடது கையின் பிற நான்கு விரல்களையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். சங்கு முத்திரை செய்யும் போது "ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி, தந்தோ சங்க: ப்ரசோதயாத்'' என்ற சங்கு காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.


http://www.maalaimalar.com/2012/11/12150954/kubera-like-shankh-mudra.html
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top