Jokes in Thamizh

Status
Not open for further replies.
ஹீரோயின்க்கு எதிர்ப்பதம் என்ன?
ஹீரோ.
இல்ல, ஹீரோஅவுட்.

எங்க ஸ்கூல் வாத்தியாரப்பற்றி சின்னதா ஒரு நாவல் எழுதி வெச்சிருக்கேன்.
குரு நாவல்னு சொல்லு!

டாக்டர் சாதம் சாப்பிட்டா வெயிட் போடுமா?
இல்லையே, வெயிட் போட்டாத்தானே சாதம் சாப்பிடமுடியும்?
என்ன சொல்றீங்க?
நான் குக்கர்ல போடர வெயிட்டைச் சொன்னேன்.

அந்தக்கப்பல் எங்க சொந்தக்காரருடையது.
அப்போ ரிலேஷன்-ஷிப்னு சொல்லுங்க!

டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐநூறு ரூபாய் ஆகுது.
டாக்டரோட செலவைப்போய் நீங்க ஏன் பண்றீங்க?

திறுடனுக்க்ப் பிடிச்ச ராகம் எடு?
சுருட்டி!

செருப்பைத் திருடினவன் மாட்டிக்கிட்டான்.
எங்கே?
கால்ல!

உங்கள் ஊரில் பெரியமனிதர்கள் யாராவது பிறந்திருக்கார்களா?
இல்லை, குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.

போஸ்ட்மேனுக்குக் கல்தடுக்கினா எப்பாடி விழுவார் தெரியுமா?
எப்படி?
தபால்னு விழுவார்!

குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தெரியலையே?
குன்னக்குடி வயலனிஸ்ட், காந்திஜி நான்-வயலனிஸ்ட்!
 
ராஜிராம்..அவர்களே... இது அழகியில் எழுதியதுதான்...


எனக்கு அழகி எப்போதும் ஆதரவுதான்...


நட்புடன்,


டிவிகே

அழகியோடு பழகும்போது ஜாக்கிரதை. பாம்போடு பழகுவது போல. நாகப் பாம்பும் அழகு தானே:eyebrows:
 
ராஜிராம்..அவர்களே... இது அழகியில் எழுதியதுதான்... எனக்கு அழகி எப்போதும் ஆதரவுதான்.........
இதுவல்லவோ முழு ஆதரவு!! :dance:
 
ஒரு பொருட்காட்சியில் ஆரஞ்சு ஜூஸ் பிழியும் முறை காட்டப்பட்டது. ஒரு பேங்க் அதிகாரி 4 அவுன்ஸ் ஆரஞ்சிலிருந்து 2 அவுன்ஸ் ஜூஸ் பிழிந்தார். ஒரு எஞ்சினீர் 4 அவுன்ஸ் ஆரஞ்சிலிருந்து 3 அவுன்ஸ் ஜூஸ் பிழிந்தார். அதன் பிறகு ஒரு வருமான வரி அதிகாரி வந்து 4 அவுன்ஸ் ஆரஞ்சிலிருந்து ஐந்து (5 ) அவுன்ஸ் ஜூஸ் பிழிந்தார். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்!
 
ஒரு கல்லறையில் ஒரு தலைக்கல்லில் காணப்பட்ட வாசகம்:


இங்கே புதைக்கப்பட்டிருப்பது ஒரு சிறந்த அரசியல்வாதி, ஒரு நாணயமான மனிதர், அதோடு கூட மனிதாபிமானரும் ஆகும்.


இது ஒரு விசித்திரம், ஏனெனில் ஒரே கல்லறையில் மூன்று பேர்களைப் புதைப்பது வழக்கமல்ல.
 
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது
 
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கனும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..
********
 
(வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்ற போர்டைப் பர்த்துவிட்டு ஒருவர்)
கான்ஸ்டபிள் நான் இந்த ரோடுல போகலாமா?
வாகனங்கள்தான் போகக்கூடாது, நீங்கள் போகலாமே?
என் பெயர் மயில்வாகனன் சார்!

நம்ம மக்கு ஒரு கேள்வி கேட்டான்பாரு, அப்படியே ஆடிப்போய்ட்டேன்!
அவனுக்கு ஒண்ணும் தெரியாதேப்பா, என்ன கேட்டான் அப்படி?
எல்லா பேங்க் ஏ.டீ.ம்.களையும் பார்த்திருக்கேன், ரிசர்வ் பேங்க் ஏ.டீ.ம். எங்க இருக்குன்னான்!

காலைல தூங்கி எழுந்ததும் நான் என் மனைவி முகத்தைப் பார்ப்பேன்.
அவ்வளவு பாசமா?
அதெல்லாமில்லை, நரி முகத்துல விழிச்சா நல்லதுங்கற நம்பிக்கைதான்!

ஸ்டார்ட், ஆக்ஷன்னு சொன்னதும் நீங்க மலை உச்சி அருவியிலிருந்து கீழே குதிக்கிறீங்க!
அப்புறம்?
நாங்க பேக்-அப் பண்ணிட்டு சென்னைக்குப்போயிடுவோம்.

அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்க யாரும் கிடையாது.
ஏன்?
எல்லாருக்கும் அவர்தான் ஆபரேஷன் பண்ணினாரு.

அந்தப் பணக்காரர் வீட்டில் மூணு நீச்சல்குளம் இருக்கு. ஒண்ணுல சுடுதண்ணீர், இன்னொண்ணுல பச்சைத்தண்ணீர்...
மூணாவதுல?
அது காலியாக இருக்கும். அது தண்ணீர்னா பயப்படுகிறவர்களுக்கு.

என் பெண்டாட்டிய என்னதான் செய்யறது?
ஏன் என்ன பண்றாங்க?
நான் எது செஞ்சாலும் என் பெண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டிப் பாரேன்...

பாடம் எல்லாம் முடிஞ்சிபோச்சு. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.
சார் உங்க பொண்ணு பேர் என்ன சார்?

(ஒரு இன்டர்வியூவில்)
தேர்வாளர்: டேபிள்மேல அஞ்சு ஈ இருந்தது. ஒண்ணை நான் அடிச்சதும் மீதி எத்தனை இருக்கும்?
வந்தவர்: ஒண்ணு.
தேர்வாளர்: ஒண்ணா, எப்படி?
வந்தவர்: நீங்க அடிச்சுப்போட்ட ஈ மேஜைமேலதானே இருக்கும்.

சினிமாவுக்குப்போக டிக்கட் வாங்கிவந்திருக்கேன்.
இன்னும் அரைமணிதானே இருக்கு, சரிங்க, நான்போய் டிரஸ்பண்ணிட்டு வந்திடறேன். கொஞ்சம் லேட்டான என்னங்க பண்ணறது?
ஒண்ணும் பிரச்சினை இல்லை. டிக்கட் நாளைக்குத்தான் வங்கிவந்திருக்கேன்!
 
post50#
dear TVK sir !
when i am typing tamil letter in word2010 with azhaki and use copy &paste i get matter as given by SMT.Raji ram madam .kindly explain tamil how to use azhaki. i too want azhaki!!
guruvayurappan
 
[FONT=&quot]ஒரு புத்தகம் விறுவிறுவென்று விற்றுக்கொண்டிருந்தது. அதன் தலைப்பு, "ஹௌ to வூ" (How

to Woo). 10
[/FONT]
நிமிஷத்தில் எல்லா புத்தகங்களும் தீர்ந்துவிட்டன. சிறிது நேரத்தில் டெலிபோன்


[FONT=&quot][/FONT]
[FONT=&quot][/FONT]
[FONT=&quot]அடித்துக்கொண்டிருந்தது. கூப்பிட்டவர்கள் எல்லோரும் ஒருமுகமாக கடைக்காரரைத்

திட்டினர் "எங்களை
[/FONT]
ஏமாற்றிவிட்டீரே" என்று. ஏன்? அந்தப் புத்தகம் ஹாங்காங் நகரின்

டெலிபோன் டிரெக்டரி 2 வது பாகம்.
 
[FONT=&quot]ஒரு குடியானவர் மரணப்படுக்கையில் இருந்தார். தன் மனைவி மங்கையர்க்கரசியை விளித்து


" மங்கா, நீயும்
[/FONT]
நானும் 40 வருஷமாக குடும்பம் நடத்தி விட்டோம். நாட்டில் பஞ்சம் வந்தபோது


நீ என் பக்கத்தில் இருந்தாய். போர்
நடந்த போதும் என் அருகே இருந்தாய். பூகம்பம், புயல்,


மதக்கலவரம் எல்லாம் நிகழ்ந்த போதும் என் அருகே நீ
தான். இப்போது நான் சாகும்


தறுவாயில் இருக்கும் போது என் அருகே இருக்கிறாய். நான் நினைக்கிறேன் நீ ஒரு

[FONT=&quot][/FONT]
[FONT=&quot][/FONT]
[FONT=&quot]

துரதிர்ஷ்டக் கட்டை என்று".


Now there is music playing, "en arugE nee irundhaal eppOdhum thunbamadi........."
[/FONT]
 
பிள்ளையின் தாயார்: பொண்ணுக்கு நல்லா பாட தெரியுமா ?

பெண்ணின் தகப்பனார்: தெரியும், உங்களுக்கு நல்லா ஓட தெரியுமா ?
 
தாய்: ஏண்டா உனக்கு மருந்தை எப்பவும் பாட்டியே கொடுக்கணும்னு சொல்றே?
சிறுவன்: பாட்டிக்குத்தான் கை நடுங்கும், அதனால பாதி மருந்து கீழேயே போயிடும்!

அவர்: எங்கிட்ட எவ்வளவு பெரிய்ய நிலம் இருக்கு தெரியுமா? காலைல கிழக்கு எல்லைலேர்ந்து கார்ல கிளம்பினா, மேற்கு எல்லையைத்தொட சாயங்காலமாயிடும்!
நண்பர்: கொஞ்சநாளைக்கு முன்னாடி என்கிட்டகூட அந்தமாதிரி கார் இருந்தது!

மனைவி: ரோஸிங்கறது யாருங்க?
கணவன்: ஏன், நான் தூக்கத்தில் ஏதாவது உளறினேனா? அது பந்தயத்தில் நான் பணம்கட்டப்போகும் குதிரையின் பெயர். சரி எதுக்குக் கேக்கறே?
மனைவி: அப்படியா, அந்தக் குதிரை இன்னிக்கு மத்தியானம் உங்களுக்கு ஃபோன் பண்ணித்து.

கணவன்: நமக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷத்தில ஒரு விஷயத்துக்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே எப்பவுமே எதிர்க்கருத்து சொல்லிடுவே.
மனைவி: நீங்க சொல்றது தப்புங்க. நமக்குக் கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு.

அம்மா: எதுக்குடா அழுதுகிட்டே வரே?
சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும்போது சுத்தியல் தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா.
அம்மா: இதுக்குப்போய் அழலாமா? நானா இருந்தா சிரிச்சிருப்பேன்.
சிறுவன்: நானும் அதைத்தான்மா செஞ்சேன்!

சிறுவன்: ஏம்பா என் மார்க் ஷீட்ல கையெழுத்துபோடாம கைநாட்டு வைக்கிறீங்க?
தந்தை: நீ வாங்கின மார்க்குக்கு உன் அப்பா எழுதப்படிக்கத் தெரிஞ்சவர்னு உங்க டீச்சருக்குத் தெரியவேண்டாம்.

தாய்: எதுக்குடீ எப்பவும் எங்கயும் கார்லேயே வெளியே போறே? கடவுள் நமக்கு எதுக்கு ரெண்டு கால் கொடுத்திருக்கார் தெரியுமா?
மகள்: தெரியுமே, ஒண்ணு பிரேக்குக்கு, இன்னொண்ணு ஆக்ஸிலேட்டருக்கு!

குரங்கு ஒண்ணு வரையணும், பார்த்து வரையப் படம்தான் கிடைக்கலே!
பேசாம கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து வரை, சரியா இருக்கும்!

அமைச்சருக்கு வேண்டியவரா இருக்கலாம், அதுக்காக இப்படியா?
ஏன், என்னாச்சு?
கள்ளநோட்டு அடிக்க லோன் கேட்கிறார்!

நேத்து எங்கப்பாவும் அம்மாவும் சண்டை போடறப்போ நம்ம காதலைச் சொன்னது நல்லதாப்போச்சு!
எப்படி கல்பனா சொல்றே?
எங்கேயாவது ஓடிப்போய்த்தொலைனு சொலிட்டாங்களே!

*****
 
இவ்வளவு நேரம் கரடியாக் கத்தறேனே! காதுல விழலியா உங்களுக்கு?
கரடிபாஷையெல்லாம் எனக்குத் தெரியாது சரசு.

அந்த ஜோசியர் கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லா தோஷமும் போயிடும்னு சொல்றார்.
நம்பாதே. அவர் சொல்ற தோஷம் சந்தோஷம்.

எங்கள் பத்திரிகைக்குமட்டும் எப்போதும் மனம்திறந்து பேட்டி கொடுக்கிறீர்கள். அதற்கு ஏதாவது விசேஷ காரணம் உண்டா?
யார் படிக்கப்போகிறார்கள் என்ற தைரியம்தான்.

என்னடா உங்க வாத்தியாருக்கு மக்கு வாத்தியார்னு பேர் வெச்சிருக்கீங்க?
பின்ன என்னப்பா, எல்லா பசங்களையும் மக்கு மக்குன்னு திட்டறாரு, அதான்!

நீங்க வெஜிடேரியனா, நான் வெஜிடேரியனா?
நான் வெஜிடேரியன்தான், நீங்க என்னன்னு எனக்கு எப்படித்தெரியும்?

*****
 
Last edited:

குப்பு: திருப்பதிக்குக் கால்நடையாப் போகலாம்ன்னு இருக்கேன்!

சுப்பு: ஏன் கால்நடையாப் போறீங்க? மனுஷனாவே போகலாமே!
:heh:
 
தமிழில் நகைசசுவை

பிரபல வித்வான் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் வாக் ஜாலத்தில் கில்லாடி . இதோ அவருடைய சொற்கள் விளையாடும் நகைசசுவை ஒன்று.

பாலமுரளி கச்சேரிக்கு சென்று திரும்பிய சிஷ்யன் ஒரு ராக ஆலாபனை செய்துகொண்டிருந்தான்.இதை கேட்டுக்கொண்டிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் சிஷ்யனிடம் "என்னராகம்டா இது புதுசா இருக்கே " என்றார். சிஷ்யன் "அண்ணா இது இன்று கச்சேரியில் முரளி சார் பாடினார் ராகத்தின் பெயர் சுநாத வினோதினி". மகாராஜபுரம் சிரித்துக்கொண்டே " அவர் நன்னாத்தான் பாடியிருப்பார் ஆனா நீ பாடியதில் சுனாதம் இல்லை விநோதமாகத்தான் இருக்கு" என்றார்.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு .
 
பாட்டி: நீ பாட்டு படிக்கிறியாமே, கொஞ்சம் படி பார்க்கலாம்.பேத்தி: ஐயோ பாட்டி, பாட்டெல்லாம் படிக்கமாட்டா; நான் கத்துக்கறேன்.
பாட்டி: சரி, கத்து.
 
16. ''தங்களுக்கு ஆறிலும் சாவில்லை... நூறிலும் சாவில்லை மன்னா!''
''சபாஷ்! மேலே சொல்லும் ஜோதிடரே...''
''போரிலேதான் சாவு மன்னா!''

17. ''கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?''
''பின்னே... 'கபாலி சென்னைக்குப் போயிருக்கான்'கிறதை 'களவாணி மதராசபட்டினம்
போயிருக்கு'ன்னு சொல்றாளே!''

18. ''என்னது... 'லைட்ஸ் ஆஃப்'னு சொல்லிட்டுப் படம் எடுக்கிறாங்க?''
''சாமியார் படமாம்!''

19. ''போலி மார்க் ஷீட் விவகாரம் வெளிவந்ததும் தலைவர் சோகமாயிட்டாரே, ஏன்?''
''20 வருஷங்களுக்கு முன்னாடி இது நடந்திருந்தா, தலைவர் ஒரு டாக்டராவோ,
இன்ஜினீயராவோ ஆகியிருப்பாராம்!''

20. ''உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குன்னு எப்படிச் சொல்றே?''
''என்னைப் பார்த்ததும் அவரோட கண்கள்ல பயம் தெரிஞ்சுதுப்பா!''
 
அம்மா மற்றும் பிள்ள இடையே பேச்சு
அம்மா : கண்ணா ! நீ சமத்தா சொன்ன பேச்சு கேட்டால் உனக்கு பரிசு தருவேன் .
சமத்த இரு
பிள்ளை : போம்மா இந்த விளையாட்டுக்கு நான் வரலை
அம்மா : ஏன்டா செல்லம் அப்படி சொல்றே
பிள்ளை : ஏன் என்றால் அப்பாதான் எப்பவுமே ஜெயிப்பார்
அம்மா :ஏன் அப்படி ?
பிள்ளை :அப்பாதான் எப்பவும் உன் சொல்படி எப்பவும் நடக்கிறாரே
 
Last edited:
116. பக்கத்துல பொண்டாட்டிய வெச்சிக்கிட்டு எப்படி சார் உங்களால ஃபோட்டோவுல சிரிக்க முடிஞ்சது?
ஹி ஹி... அது கிராஃபிக்ஸ்மூலம் டச்பண்ண ஃபோட்டோ சார்!

117. இவர் கம்ப்யூட்டர் துறையில வேலைபார்க்கிறார் போல.
இதயத்துடிப்பைவெச்சே எப்படி சொல்றீங்க டாக்டர்?
பொதுவா இதயம் ’லப்-டப்’ என்று துடிக்கும். இவர் இதயம் ’லேப்-டாப்’னு துடிக்குதே?

118. அடிக்கடி உன் மனைவியைக் கூட்டிட்டு ஹோட்டலுக்கு சாப்பிடப்போறியே, ஏன்?
அப்பத்தான் அவளுக்கு என்னோட சமையலின் அருமை தெரியும்.

119. டேய் வரியா என்வீட்டுல புதுநாய் வாங்கியிருக்கோம், அதோட விளையாடலாம்.
புதுநாயாச்சே... கடிக்குமா?
அதைத் தெரிஞ்சிக்கத்தான் உன்னை கூப்பிடறேன்.

120. முரளி (போனில்): முரளிக்கு உடம்பு சரியில்லை, இன்னிக்கு ஒரு நாள் அவனுக்கு லீவு தரணும்.
ஆசிரியர்: சரி, யார் பேசறது?
முரளி: என்னுடைய அப்பா பேசறேன்.

121. என்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா?
அப்படியா, யார்டா அவங்க?
வேற யாரு, என் அம்மாவும் ஆயாவும்தான்!

122. எங்க மாதர் சங்கத்தில எல்லோருக்கும் குழந்தை பிறந்தாச்சு. அதனாலே...
அதனாலே?
பெயரை மதர் சங்கம்னு மாத்திட்டோம்.

123. தண்ணீரைப் பனிக்கட்டியாக்கினால் என்ன மாற்றம் உண்டாகும்?
விலை அதிகமாகும், வேற என்ன?

124. தந்தை: டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?
மகன்: ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

125. ஆசிரியர்: திருக்குறளை எழுதியவர் யார்?
மாணவன்: எங்கப்பா சார்.
ஆசிரியர்: என்ன உளர்றே, யார் அவர்?
மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்.
 
126. ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?
வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!

127. மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

128. அவன்தான் அவங்கவீட்டுல கதவுமாதிரி.
வீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.
அவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!

129. அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே, களவு, குடில்லாம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?
இல்லைங்க, நான் கோவில்பட்டி.

130. ஒரு விசேஷத்துக்காக வீட்டில் உறவினர்கள் கூடுகிறார்கள். அப்போது கேள்விப்பட்டது:
கிட்டாமணி எப்போ வரான்?
கலைல எட்டாம்மணிக்கு டாண்னு வந்துட்டான்.
குஞ்சுமணி?
சாயங்காலம் அஞ்சுமணிக்கு வருவான்.
ஆப்த சிநேகிதர்களா ரமணி ரமணின்னு ரெண்டு ரமணி இருக்காங்களே, அவாளும் வராளோன்னோ?
அந்த ரெண்டு ரமணியும் வர ட்ரெய்ன் ரெண்டரைமணிக்கு வருது.
ஏண்டா எடக்காப் பேசறதா நெனப்போ? அப்ப சூடாமணி, ராஜாமணி, பிச்சுமணிலாம்கூட வர்றாளே, அவாளுக்கும் பேருக்கேத்தமாதிரி டைம் சொல்லேன்?
நான் சொல்றது நெஜம்தான். அவாள்ளாம் எற்கனவே வந்தாச்சுண்ணா!

131. என்ன டாக்டர், அந்த பேஷண்டுக்கு ஆஸ்பத்திரில குடுத்த உடைமுழுக்க ஏதேதோ கம்பெனி விளம்பரமா இருக்கு?
அந்தக் கம்பெனிகள் எல்லாம் சேர்ந்துதான் அவரோட அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் பண்றாங்க.
சரியாப் போச்சு.

132. இவங்க ரெண்டும் எனக்குப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்.
ரொம்ப சந்தோஷம். அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?

133. அவனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்புடா?
எப்படி சொல்றே?
உங்க வீட்டுத் திண்ணையில உக்காந்திருக்கறது உங்க பாட்டியாடான்னு கேட்டா, அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனிஸ்ட்டுங்கறான்!

134. டேய் மச்சான், தலைக்கு ஷாம்பூபோட்டுக் குளிப்பது நல்லதா, சீயக்காய்போட்டுக் குளிப்பது நல்லதா?
மொதல்ல நீ பாத்ரூமுக்குத் தாழ்ப்பாள்போட்டுக் குளி, அதுதான் எங்களுக்கு நல்லது.

135. நீ செய்த குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்?
 
21. ''உங்க கணவரை டைவர்ஸ் பண்ண என்ன காரணம் சொல்லப்போறீங்க மேடம்!''
''போலி கணவர்னு''

22. டாக்டர்: ''உங்களுக்கு என்ன பிரச்னை?''
நோயாளி: ''லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் போடுறப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?''

23. ''மன்னா, இளவரசருக்கு மன்னராகும் தகுதி கிடைத்துவிட்டது?''
''அப்படியா, எப்படிச் சொல்கிறீர்?''
''எல்லா வகையான ஓட்டங்களையும் கற்று சிறந்த ரன்னராக தேர்வு பெற்றுவிட்டார், அதான்.''

24. ''போர்க்களத்திலிருந்து ஓடிய சிப்பாயை மன்னர் சிறையில் அடைத்துவிட்டார்!''
''ஏன் பயந்து ஓடுவது அவருக்குப் பிடிக்காதா?''
''ம்ஹும்... அவரைவிட வேகமாக ஓடுவது அவருக்குப் பிடிக்காது.''

25. ''எங்க தலைவர் கோடு போட்டா ரோடு போடுவாரு.''
''எங்க தலைவர் கோடு போட்டு ரோடு போட்டதா பில் போடுவாரு....''
 
எதுக்கு இப்படி திருப்பி திருப்பி என்கிட்டே வந்து சார் என் பேரு பட்டு நான் காஞ்சி லேந்து வரேன்னு சொல்லறீங்க !! பெண்: நீங்கதானே வெளியே போஸ்டர்லே காஞ்சி பட்டுக்கு 50 % தள்ளுபடின்னு போட்டுஇருகீங்க!!
 
மனைவி: இதோ பாருங்க சொல்லிட்டேன்.இனிமே பாட்டிலை உங்க உதடு தொட்டுதன நீங்க என்தை தொடக்கூடாது..
என்ன யோசிக்கறீங்க ...
கணவன்; இல்லே 42 வயசு உதடா 18 வருஷ பழைய ஸ்காட்ச ன்னு யோசிக்கறேன் !!!
 
மனைவி : ( கண்ணாடியில் பார்த்தவாறு ) என்னங்க நான் இன்னும் கோலா பாட்டில் ஷேப்ப் அப்படியே வச்சிருக்கேன் இல்லே!!
கணவன்: மேடம் நீங்க 200 மி லி லேந்து 2 லிட்டர் பாட்டிலுக்கு மாறி ரொம்ப நாளாச்சு!!!!

சர்தார்ஜி ஒரு குள்ளமான பெண்ணை மணந்து கொண்டான். எல்லோரும் ஏன் இப்படி செய்து கொண்டாய் என்று கேட்டபோது " எங்கள் குருஜி சொல்லியிருக்கார் கஷ்டம் எவ்வளவு சின்னதா இருக்கோ அவ்வளவு நல்லதுன்னு "

சர்தார்ஜி ஒரு கிலோ ஜிலேபி சாப்பிட்ட உடனே கடைக்காரனிடம்: "சார் கொஞ்சம் சக்கரை இருந்தா கொடுங்கோ!"
கடைக்காரன் : எதுக்குப்பா சக்கரை.
சதார்ஜி: எங்கம்மா சொன்னங்க எப்ப சாப்பிட்டாலும் அதுக்கு அப்பறம் கொஞ்சம் இனிப்பு சாப்டனும்:

சர்தார்ஜி: (பாங்கில்) சார் என்னோட செக் புக் தொலைஞ்சு போச்சு..
மேனேஜர் : சீக்கிரமா உங்க அக்கௌன்ட் செக் பண்ணுங்க யாராவது உங்க கையெழுத்து போட்டுட போறாங்க !!
சர்தார்ஜி: நன் என்ன முட்டாள எல்லா செக்கையும் மொதல்லேயே கையெழுத்து போட்டு வச்சிடுட்டேனே!!
 
Status
Not open for further replies.
Back
Top