• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Jokes in Thamizh

Status
Not open for further replies.
இன்டெர்நெட்ல படிச்சது... எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல் இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது.
தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?
தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.
தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.
தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
தீவிரவாதி 1: எனக்கென்னமோ, ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி இருக்குது.
தீவிரவாதி 2: என்ன?
தீவிரவாதி 1: ஏதோ, தகவல் பரிமாறிக்கணும்'ன்னு நம்ம பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்ததும், அவர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும். மாட்டிக்க கூடாது.
தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு?
தீவிரவாதி 1 (யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளிய வந்திடலாம். அதானே? சரியா?
தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி, அடுத்த முறை இந்தியாவுல கொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.
தீவிரவாதி 1: ஏன்?
தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க, நிறைய டிவி சானல்கள் இருக்காங்க. நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா, பேச மட்டும்தான் முடியுது. ஆனா, அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட்'யே பண்றாங்க. அது மட்டும் இல்லாம, கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும் சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.
தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம்? சவுத் இந்தியாவுல பண்ணிரலாமா? சென்னை எப்படி?
தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.
தீவிரவாதி 1: ஏன்?
தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குற அரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சொல்லுவாங்க. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மள மறந்திடுவாங்க.
தீவிரவாதி 1: ஒ!
தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும், இந்த அளவுக்கு உதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும், சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.
தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளே இன்னொன்னு பண்ண முடியுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே?
தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல்'ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா திருப்பி அடிப்போம்?
தீவிரவாதி 1: அதானே? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேல நம்பிக்கையே போயிடுச்சி.
தீவிரவாதி 2: ஏன்?
தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா.. நாமளே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.
 
136. அவர் ரொம்ப கலரா இருந்தார். இப்பக் கருப்பாய்ட்டார்.
காக்கா பிடிக்கறதே வேலையாய் இருந்தா இப்படித்தான்.

137. ஏங்காணும், நாமெல்லாம் விபூதி இட்டுக்கறச்சே தலயை ஸ்திரமா வெச்சிண்டு விரலலால இழுத்து இட்டுப்போம். உங்க ஷெட்டஹர் என்னடான்னா விரலை ஸ்திரமா வெச்சுண்டு தலை ஆட்டி இட்டுக்கறாரே? ஏன்?
யார் கண்டா? ஆத்துக்காரிக்குத் தலயாட்டியே பழக்கமோ என்னவோ?

138. அவ்வளவு பெரிய வண்டியில அடிபட்டும் எப்படிங்க கத்தாம அமைதியா இருந்தீங்க?
அது நடமாடும் நூலக வண்டிங்க. கத்தினா அவராதம் விதிப்பாங்களோன்னு பயந்துட்டேன்.

139. எங்கப்பாக்கு இன்டர்நெட்னா என்னனு தெரியலைடா?
எப்படி சொல்றே?
அது வாங்கினா கொசு கடிக்காம இருக்குமான்னு கேக்கறார்.

140. டாக்டர், என்னோட வீட்டுக்காரர் சாகப் பிழைக்க இருக்கார். நான் உங்களைத்தான் நம்பியிருக்கேன்.
எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சும்மா.

141. குரைக்கிற நாய் கடிக்காது.
எப்படிடா அவ்ளோ உறுதியாச் சொல்றே?
ஒரே சமயத்தில அதால ரெண்டு வேலையை செய்யமுடியாது, அதான்.

142. எங்கப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடியிலே அழிச்சிட்டார்.
அடப்பாவமே, உனக்கு ஒண்ணும் விட்டுவைக்கலையா?
ஒரு சொட்டுகூட வைக்கலை.

143. எனக்கு ஒரு சந்தேகம்டா.
என்னடா, கேளு.
பைக் இருந்தா ஓட்டத்தோணுது, டி.வி. இருந்தா பாக்கத்தோணுது...
இதில் என்ன சந்தேகம்?
ஆனா புக் இருந்தாமட்டும் படிக்கத்தோணலையே!

144. ஏங்க இப்படியே நான் சமச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க.
இப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம் கிடைச்சிடும்.

145. உன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா?
ஓ இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது.
நெஜமாவா?
எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.

*****
 
146. என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது?
ஒண்ணும் செய்யவேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.

147. அந்த விமன்ஸ் கிரிக்கேட் டீம்ல இருக்காளே ஸ்பின் பௌலர், அவள் பேர் என்ன தெரியுமா?
தெரியாதே?
திருப்புற சுந்தரி.
அவளைவிட பெட்டரா டாப் ஸ்பின் பௌலிங் போடறவ எதிர்த்த டீம்ல இருக்கா, அவள் பெயர் தெரியுமா உனக்கு?
என்ன?
பால திருப்புற சுந்தரி.

148. என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே கிளினிக்கைத் திறந்து வெச்சிகிட்டு இருக்கீங்க?
தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் எவனாவது வருவான்னுதான்.

149. கணவன்: என்னது இதூ, தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது?
மனைவி: நீங்தான் எந்தப் பேப்பரும் வாங்கறது இல்லை. அப்புறம் என்ன கவலை?
கணவன்: நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சன். இப்படி விலை ஏறினா பேப்பர் வாங்கறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்.

150. என்ன சார் நீங்க இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடறீங்க?
நான் உங்க சொந்தக்காரன் சார்.
எப்படி?
என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்து சொந்தம்.

151. ஜக்கு: என்ன மக்கு, வேலைக்கு சேர்ந்தியே என்ன கொடுக்கறாங்க?
மக்கு: சம்பளந்தான்.
ஜக்கு: அது சரிடா, என்ன கொடுக்கறாங்க?
மக்கு: பணம்தான்.

152. சென்சஸ் அதிகாரி: உங்ககூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?
மக்கு: இருங்க சார், அம்மாகிட்ட கேட்டுக்கிட்டு வரேன்.
சென்சஸ் அதிகாரி: ?!?!?!
மக்கு: அன்னிக்கு மருத்துவமனையில மொத்தம் இருவது குழந்தைங்க பொறந்தாங்களாம் சார்!

153. டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு நாலு தடவை சாப்பிடணும்.
மக்கு: அது எப்படி டாக்டர் முடியும்?
டாக்டர்: ஏன் முடியாது?
மக்கு: ஒரு தடவை முழுங்கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இன்னொரு முறை முழுங்கமுடியும்?

154. முதியோர் இல்லத்துக்கு அந்தப் பெரிய மனுஷன்கிட்ட நன்கொடை கேட்டது தப்பாப் போச்சு.
ஏன்?
அவரோட மாமியாரை நன்கொடையா எடுத்துக்கச் சொல்றார்.

155. ஹலோ யார் பேசறது?
நான்தான் பேசறேன் நீங்க?
இங்கேயும் நான்தான் பேசறேன்.
 
26. ''நம்ம தலைவருக்கு படிப்பை பற்றி ஒண்ணுமே தெரியலை.''
''ஏன்...?''
''பின்ன! ஓப்பன் யுனிவர்சிட்டிக்கு மேல் கூரை போட்டு தரப்போறேன்னு சொல்றாரே.''
27. ''உங்க கூந்தல் ரொம்ப நீளமா, அடர்த்தியாய் இருக்கே, எப்படி?''
''அதுவா, காலையில் ஷாம்பூ, சாய்ந்திரம் சோப்பு போடுவேன்.''
''அப்போ ராத்திரிக்கு?''
''கழற்றி ஆணியில் மாட்டிடுவேன்.''
28. ''உங்க தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப் போனப்ப கண்டிஷன் போட்டாரா?''
''ஆமாம்... அவரோட சின்ன வீட்டுக்கு நர்ஸ் பட்டம் கொடுக்கணுமாம்.!''
29. ''போலி மார்க் ஷீட்டுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க....?''
''மார்க்கை கூட்டிப்பார்த்தா 1200க்கு 1280 வந்துதான்.''
30. ''கல்யாணத்துக்கு அப்புறம் நானும், என் கணவரும் சேர்ந்து நின்னு ஒரு
போட்டோகூட எடுக்கக்கலை.''
''ஏன்...?''
''அவருதான் என் பக்கத்துல நிற்கவே பயப்படறாரே, எப்படி போட்டோ எடுக்கமுடியும்.''
 
31. உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே...
32 . நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???
தெரியலயே...
ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...
33 . மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???
தின்னுடும்...
இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....
34 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...
35 . நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க????
ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...
 
கணவன்: என்னது இதூ, தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது?
மனைவி: நீங்தான் எந்தப் பேப்பரும் வாங்கறது இல்லை. அப்புறம் என்ன கவலை?
கணவன்: நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சன். இப்படி விலை ஏறினா பேப்பர் வாங்கறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்.
தீபாவளித் திருநாளில், தெருவில் கம்பிகளைப் பொறுக்கியபடி வி. கே. ராமசாமி கூறுவார்,

'கஞ்சப் பசங்க! முந்தின வருஷம் எத்தினி கம்பி பொறுக்கினேன்! அதுல பாதிகூட இந்தவாட்டி இல்லையே!!' :blah:
 
டேய் ராமு, என் பாடம் நடக்கும்போது வகுப்புல குறும்பு பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?
இன்னிக்கு இதுவரை மூணு தடவையும், இந்த வாரத்தில முப்பத்தஞ்சு தடவையும் இந்த மாசத்தில நூத்தி அஞ்சு தடையும் சொல்லியிருக்கீங்க சார்!

ஒரே சமயத்துல அவனோட எல்லாப் பல்லும் கீழே விழுந்திடிச்சு.
நிஜமாவா? நம்பவே முடியலையே? எப்படி?
அட அவன் வச்சிருந்தது பல்செட்.

ஒரு புலி தன் காதல் வெற்றி அடைந்ததற்கு விருந்து வைத்தது. எல்லாப் புலிகளும் வந்திருந்தன.
அந்த விருந்துக்கு ஒரு பூனையும் வந்தது.
அந்தப் பூனையைப் பார்த்து ஒரு புலி கேட்டது: ஆமாம், நீ யார்? நீ எப்படி இங்கே வந்தே?
பூனை சொன்னது: லவ் பண்ணறதுக்கு முன்னாடி நானும் ஒரு புலியாகத்தான் இருந்தேன்.

நான் மேலே மேலே உயரும்போது நான் யாருன்னு நீங்க தெரிஞ்சுக்குவீங்கடா.
நீ கீழே விழும்போது உன் நண்பர்கள் யார்னு நீ தெரிஞ்சுக்குவடா.

என் சப்ஜக்ட்ல எப்படிடா நூத்துக்கு நூறு மார்க் எடுத்தே?
சொன்னா நீங்க வருத்தப் படுவீங்க சார்.
பரவாயில்லை சொல்லுடா.
ஒரு நல்ல ஆசிரியர்கிட்ட ட்யூஷன் போனேன் சார்.

எங்க சலூன்கடையில கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்.
இதென்ன பெருசு? எங்க ஃபைனான்ஸ் கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.

பர்ஸ் தொலைச்ச நேரமே சரியில்லடா.
ஏன்? என்ன ஆச்சு?
பர்ஸ்ல இருந்த என் அட்ரஸை வச்சு திருடன் வீட்டுக்கும்வந்து திருடிட்டுப் போய்ட்டாண்டா!

மனைவி: ஏங்க, உங்க ஃப்ரெண்டுக்குப் பார்த்திருக்கற பொண்ணு நல்லாவே இல்லையே! நீங்களாவது சொல்லக்கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்?
மனைவி: நீங்க அவர் ஃப்ரெண்டுதானே?
கனவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?

நம்ம தமிழ் ஆசிரியருக்கு ரொம்பத்தான் குசும்புடா.
ஏண்டா?
பரீட்சை அறை பிளாக்போர்டுல, ’படையில்லா மன்னர்போலக் கெடுமே விடையில்லா மாணவன் தாள்’னு எழுதி வச்சிருக்கார்டா.

சார் எங்க கடையில துணி வாங்கினா அது லேசுல கிழியாது.
சும்மா பொய் சொல்லாதீங்க.
பொய் இல்லீங்க, உண்மைதான்.
இப்பகூட அவர் ரெண்டு மீட்டர் கேட்டபோது கிழ்ச்சித்தானே கொடுத்தீங்க?

*****
 
36 . என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்...
சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....

37 . உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்???
வாயாலதான்....

38 . கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???
முதல்ல பாவம் பண்ணனும்...

39 . சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....

40 . ஆனாலும் இவர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையானவர்....ட்ரைவர் கிட்ட “மெதுவா போ..மெதுவா போ”ன்னு சொல்லுறார்...
ஏன் அதுல என்ன தப்பு???
ட்ரைவர் நடந்து போய்கிட்டிருக்கார் சார்...
 
156. டீச்சர்: நான் முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?
சிறுமி: ஏழு.
டீச்சர்: கவனமா கேளு. முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?
சிறுமி: ஏழு.
டீச்சர்: சரி வேறு மாதிரி சொல்றேன். முதல்ல ரெண்டு ஆப்பிள் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு மொத்தம் எவ்வளவு?
சிறுமி: ஆறு.
டீச்சர்: வெரிகுட். இப்ப மறுபடியும் முயல் கணக்கு பாரு. மொத்தம் எவ்வளவு?
சிறுமி: ஏழு.
டீச்சர்: எப்படி?
சிறுமி: எங்கிட்ட வீட்ல ஒரு முயல் இருக்கே!

157. மார்த்தாண்டத்துக்கு கடைசி பஸ் எப்ப?
ராத்திரி 11 மணிக்கு.
அதுக்கு முன்னால?
அதுக்கு முன்னால பல்பு இருக்கும்.

158. என் தம்பி சரியான புத்தகப் புழு டி.
ஏன் எப்பவும் புத்தகமும் கையுமா இருப்பானா?
நீ வேற. அவன் புத்தகத்தை வெச்சுக்கிட்டு என்ன நெளி நெளியறான் தெரியுமா?

159. இந்த மாணவன்தான் எங்கள் பள்ளியில் நடந்த கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவன்.
எதைப் பற்றி கட்டுரை எழுதினான்?
தண்ணீரின் பயன்கள் எ‍ன்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கான்.
அப்படியா, நல்லது. உங்கப்பா என்ன பண்றாருப்பா?
பால் வியாபாரம்.

160. வாத்தியார்: இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்.
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வாத்தியார்: அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே: நீ முட்டாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?
மாணவன்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்க தனியா நிக்கறதைப் பார்க்கப் பாவமா இருந்தது. அதனால்தான் நானும் எழுந்து நின்றேன்.

*****
 
161. செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
என்ன?
மனிதனுக்குக் கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ணமுடியாது, செல்போனில் பேலன்ஸ் இல்லைன்னா கால் பண்ணமுடியாது.

162. மாணவன் (தோழமையுடன் வேடிக்கையாகப் பேசும் தலைமை ஆசிரியரிடம்: ஏன் சார் நீங்க மண்டையைப் போடமாட்டேங்கிறீங்க?
தலைமை ஆசிரியர்: கொழுப்புடா உனக்கு! எண்டா அப்படிக் கேட்டே? சரியான பதில் சொல்லலைன்னா இப்ப உன் மண்டைல போடப்போறேன்.
மாணவன்: பின்ன என்ன சார்? டீ மாஸ்டர் டீ போடறாரு. பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு. மேத்ஸ் மாஸ்டர் மேத்ஸ் போடறாரு. நீங்க ஹெட் மாஸ்டர்தானே? பின்ன ஏன் மண்டையைப் போடமாட்டேங்கிறீங்க?

163. ஆசிரியர்: என்ன ஆச்சரியமா இருக்கு? நான் எப்ப வெளியேபோயிட்டு வந்தாலும் தொணதொணன்னு சத்தம் போடுவீங்க. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கீங்களே, வெரி குட்!
மாணவன்: நீங்க வெளியேபோயிட்டு வரும்போது நாங்க அமைதியா இருந்தா வேலையை விட்டுடறேன்னு நேத்து சொன்னீங்களே, மறந்துட்டீங்களா ஸார்?

164. ஆசிரியர்: வான்கோழி முட்டை போடும் பறவை இனம்.
மாணவன்: அப்படீன்னா அது உங்க இனம் சார்.
ஆசிரியர்: என்னடா உளர்றே?
மாணவன்: நீங்களும் முட்டைதானே போடுறீங்க சார்.

165. நான் எழுதின கதை எப்படி இருக்கு?
ரொம்ப சுமாராத்தான் இருக்கு, உப்புச்சப்பே இல்ல!
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது?

166. உன் பையனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்ப என்ன பண்றான் அவன்?
தொலைதூரக் கல்வி வழியா பி.ஏ. படிக்கிறான்!

167. கணக்கு ஆசிரியை: மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்குள்ள இருக்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?
சிறுவன்: ஒண்ணுமே இருக்காது டீச்சர்.
ஆசிரியை: உனக்கு கணக்கே தெரியலை
சிறுவன்: டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டைப் பத்தித் தெரியலை. ஒண்ணு போச்சுன்னா எல்லாம் போயிடும்.

168. பையனை வக்கீலுக்குப் படிக்க வச்சது ரொம்பத் தப்பாப்போச்சு
ஏண்ணே அப்படிச் சொல்றீங்க?
படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.

169. எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு, இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

170. மக்கு: வாழை மரம் தார் போடும்..
ஜக்கு: அதுக்கு என்ன இப்ப?
மக்கு: ஆனா அத வச்சி நாம ரோடு போட முடியுமா?

*****
 
171. ஆசிரியர்: அரசாங்கத்துக்கும் ராபின்ஹுட்டுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்: பணக்காரங்ககிட்ட புடுங்கி ஏழைக்கு கொடுக்கறவன் ராபின்ஹுட். ஏழைங்க கிட்ட புடுங்கி பணக்காரங்க கிட்ட கொடுத்தா அது அரசாங்கம்.
ஆசிரியர்: ????

172. ஏன் சார் வெறும் பேப்பரைப் போய் ஜெராக்ஸ் போடறீங்க?
ஒரு பேப்பர் விலை எட்டணா ஆனா ஜெராக்ஸ் காபி முப்பது பைசா தானே?

173. ஒரே தன்மை கொண்ட ரெண்டு பொருள் சொல்லு பார்ப்போம்?
பசியும் பஞ்சும் ஒண்ணுதான் சார்.
எப்படி டா?
ரெண்டுமே காதை அதைக்கும்!

174. ஆசிரியர்: ஆலும் வேலும்
மாணவன்: பல்லுக்குறுதி
ஆசிரியர்: நாலும் ரெண்டும்
மாணவன்: சொல்லுக்குறுதி
ஆசிரியர்: ஒரு பானை சோற்றுக்கு
மாணவன்: ஒரு சட்டிக் குழம்பு!

175. நீங்க கணக்கு வாத்தியாரா?
எப்படி கண்டுபிடிச்சீங்க?
வீட்டு நம்பர் 10/12 அப்படீங்கறத 5/6-ன்னு அடிச்சு போட்டிருக்கீங்களே அதவச்சுதான்.

176. ஒரு பொண்ணு தல குணிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்டா மச்சான்?
தெரியலையே?
அவ செல்லுல எஸ்.எம்.எஸ். ஃப்ரீன்னு அர்த்தம்.

177. மகன்: பல ரோஜாக்களைப் பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.
அப்பா: இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?
மகன்: அஞ்சு பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்.

178. பையன் பார்க்கிற வேலையைத் தரகர் சொன்னதும், உங்க பொண்ணு கல்யாணத்துக்கு உடனே சம்மதிச்சுட்டாளாமே? அப்படி என்ன வேலை பார்க்கிறார்?
பையன் ஓட்டல்ல சமையல்காரரா இருக்கார்.

179. என் பையனுக்கு சந்திரய்யான்னு பேர் வச்சது தப்பாப் போச்சு.
ஏன் நல்ல பேருதானே?
நீ வேற, எதிர் வீட்டு நிலாவை சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருக்கான்.

180. நேத்து என் காதலியோட பீச்சுக்கு போனப்ப... எக்க அம்மா பார்த்துட்டாங்க.
அப்புறம் என்ன ஆச்சு?
அங்கேயே ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க!
அப்போ உங்க அம்மா அவள மருமகளா ஏத்துக்கிட்டாங்கன்னு சொல்லு.

*****
 
181. அலுவலகத்தில் மேனேஜரின் டேபிளில் இருக்கும் தொலைபேசி அடிக்கிறது...
உதவியாளர்: ஸார், உங்க மனைவிகிட்டேயிருந்து போன்...
மேலாளர்: பெரிசா நான் என்ன பேசிடப் போறேன்...? நீயே அட்டென்ட் பண்ணி, ’ம்...ம்...ம்...ம்...’னு செல்லிடு!

182. குட்டிப் பாம்பு தாய்ப் பாம்பிடம்: நம்ம உடம்புல பயங்கரமா விஷம் இருக்குன்னு சொல்றாங்களே உண்மையாம்மா?
தாய்ப் பாம்பு: ஏன் கேக்கற?
குட்டிப் பாம்பு: இல்ல என் நாக்கை நானே கடிச்சுக்கிட்டேன்.

183. டாக்டர் கொஞ்ச நாளா கண் சரியா தெரியல!
அதோ அந்த போர்டுல உள்ள எழுத்த ஒவ்வொண்ணா படிங்க பாப்போம்.
போர்டா? எங்க இருக்கு டாக்டர்?

184. என்ன அநியாயமா இருக்கு எதிர்கட்சித் தலைவர் பற்றி புத்தகம் எழுதினேன்னுட்டு என்னை கட்சியை விட்டே வெளியே அனுப்பறதா?
நீயாவது பரவாயில்லை புத்தகம் எழுதினேன்னு வெளியே துரத்தப்பட்டுருக்க, என் கட்சித் தலைவர் எனக்கு எழுதத் தெரியும்னு சொன்னவுடனேயே வெளியே அனுப்பிச்சிட்டாரு.

185. ஆசிரியர்: மேசை என்பது ஆண்பாலா பெண்பாலா?
மாணவன்: ஆண் பால் சார்! ஏன்னா அதுலதான் டிராயர் இருக்கே!

186. மனைவி: எங்க வச்சேன்னே தெரியல்ல, இந்த பாழாப்போன ஞாபக மறதியால பெரிய தொல்லையாப்போச்சு!
கணவன்: என்னத்த தா‌ன் அப்படி தொலச்ச?
மனைவி: நம்ம கைக்குழந்தையத்தான் எங்க வச்சேன்னே தெரியல.

187. ஆசிரியர்: சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி.
மாணவன்: நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்னு நேத்துதான் சொன்னீங்க சார்!

188. மேலதிகாரி ஏன் அப்படி பியூன திட்டித் தீத்துக்கிட்டு இருக்காரு?
அவரோட நாய் தொலஞ்சு போனத நோட்டீஸ் போர்டுல போடச்சொன்னார்.
அவன் என்னத்தப் போட்டானாம்?
அவன் என்னடான்னா, காணாமல் போன மேனேஜர் நாயை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுன்னு போட்டுட்டானாம்!

189. கணவன்: நீயும் நானும் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா இதெல்லாம் சுத்திப்பாக்கற மாதிரி நேத்திக்கு கனவு கண்டேன்!
மனைவி: அப்படியா எந்தெந்த இடத்துக்கெல்லாம் போனோம்?
கணவன்: நீயுந்தான வந்த அப்பறம் என்கிட்ட கேக்கற?

190. டாக்டர் ஏன் அன்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி இவ்ளோ பதட்டமா அலையறாரு?
சாவுக்குக் காரணம்ங்கிற இடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

*****
 
191. நிர்வாகி: எதையும் குழுவா செய்யுங்கன்னு சொன்னது ரொம்பத் தப்பாப் போச்சு.
ஏன் சார்?
ஒரு டேபிளை இன்னொரொரு இடத்திலே வைக்கிறதுக்கு அஞ்சுபேர் குழு அமைச்சு ரெண்டு நாளா பேசிக்கிட்டே இருக்காங்க. இன்னும் வேலை ஆகல.

192. ஒரு நண்பன்: பாவம் அந்த பிச்சைக்காரன் விளம்பர பேனர்ல டிரெஸ் தச்சு போட்டிருக்கான் பாத்தியா?
இன்னொரு நண்பன்: நீ வேறடா, அவர் பிரபலமான பிச்சைக்காரர்னு சொல்லி அந்தக் கம்பெனி அவரை விளம்பர தூதரா நியமிச்சிருக்கு.

193. ஆசிரியர்: சூரியன் மேற்கே மறையும். இது என்ன காலம்?
மானவன்: சாயங்காலம் சார்!

194. இளைஞன் பாடுகிறான்: கலக்கப் போவது யாரு?
அவன் அப்பா: நீ தின்ன தீனிக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில உன் வயிறுதான்.

195. ஏண்டா நான் பாட்டுக்கு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கம்ப்யூட்டரை விட்டு எழுந்திக்க மாட்டேங்கற?
நீங்கதானே தாத்தா சொன்னீங்க, மவுசோடு வாழணும்னு, அதான்.

196. காதலன்: நேத்து தைரியமா உங்க அப்பாகிட்டபோய் நான் உங்க பொண்ணை லவ்பண்றேன்னு சொல்லிட்டேன்.
காதலி: ரொம்ப கோபப்பட்டாரா?
காதலன்: இல்லை. என்ன ரொம்ப பரிதாபமா பாத்தாரு.

197. அந்தப் பொண்ணைப்பாத்து மத்தாப்பூ மாதிரி சிரிக்கிறேன்னு சொன்னது ஒரு தப்பா?
ஏண்டா, என்ன ஆச்சு?
அவளோட அண்ணன் சாட்டையோட வந்து வெளுத்துட்டான் முதுகை.

198. ஏண்டா தம்பி, உங்கப்பா உன்னை இந்த அடி அடிச்சாரு, அப்பக்கூட நீ அழலையே?
அழுதா மட்டும் என்ன பிரயோஜனம்? எங்கப்பாவுக்குக் காது கேக்காதே?

199. என் லவர் சிரிச்சா அழகா கன்னத்தில குழி விழும்.
இதென்ன பெரிசு, என் லவர் சிரிச்சா பல்லே விழும்.

200. கண் டாக்டருக்குக் கால் இல்லைனா என்ன ஆவாரு?
தெரியலையே?
கண்டக்டர் ஆவாரு.

*****
 
இன்று காலை என்னை ஈ-மெய்ல்லில் கடித்த ஜோக்

இரண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top