ஐயா அது தான் எனது கேள்வியும் ஆதங்கமும்.1955க்குப்பின், பெருந்தலைவர் காமராசர் அவர்களது பெருமுயற்சியால் ஐ.சி.எப் மற்றும் திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் போன்ற அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் மத்திய அரசின் பெரிய தொழிற்ச்சாலைகள் எதுவும் தமிழகத்தில் முதலீடு செய்யப்படவில்லை.
அப்பொழுது அங்கும் காங்கிரஸ் ஆட்சி இங்கும் காங்கிரஸ் ஆட்சி. திரு வெங்கடராமன் ஐ மறந்துவிட்டீர்கள். பொதுவாக இந்திய முழுதும் காங்கிரஸ் ஆட்சி அன்று இருந்தது. சில மாநிலங்களில் எல்லோருமே திருடராக இருக்க திருட்டு வெளிவராது. காமராஜர் நேஹ்ருவின் நெருங்கிய அரசியல் நண்பர். நல்லகார்யங்களில் விஷமம் செய்பவர்கள் இருப்பார்கள். நீங்கள் கூறுவதை பார்த்தால் விஷமிகளுக்காவே நல்லகார்யங்கள் செய்யப்பட்டதாக ஆகிறது. சிந்திக்கவேண்டியதுதான். கொள்ளை யார்வேண்டுமானாலும் அடிக்கலாம்.
உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது நல்ல திட்டம் தான். ஆனால் அதில் கொள்ளையடிப்பதும், பலனை அனுபவிப்பதும் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே என்பதை நினைக்கும்போதுதான் மனசுக்கு நெருடலாக இருக்கின்றது.
சாமானிய மனிதனுக்கு வங்கி கடனென்பது எட்டாத கனியாக அல்லவா இருக்கின்றது.
இன்று வசதியாக வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் அன்று சாதாரணமாக இருந்தவர்கள்தான்.
சரி மொழிவாரியாக மானிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டது. பலன் என்ன? காந்தி படுகொலைக்குப்பின் மராட்டிய மானிலத்தில் பிராமணர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். கேரளத்திலிருந்து தமிழன் விரட்டி அடிக்கப்படுகின்றான் . மராட்டியத்திலிருந்து உ.பி.க்காரன் விரட்டியடிக்கப்படுகின்றான்.கர்நாடகத்தில் தமிழன் காலூன்றமுடியவில்லை. இந்திரா படுகொலை நிகழ்ந்தபோது சீக்கியர் சீவப்பட்டனர். ஒன்றுபட்ட இந்தியாவை எங்கு காணமுடிகின்றது?
.இதுனாளடைவில் தீரும் வியாதி. மொழிவாரி மாகாணங்களை நீங்கள் குழப்பிவிட்டீர்கள்.அரசியல் பேசவேண்டாம் என்று தோன்றுகிறது எனக்கு.
பாகிஸ்தானுக்க்கு பயந்து காஷ்மீரம் தானகவே இந்தியாவிடம் ஒட்டிக்கொண்டது. அதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்? ஆர்டிக்கிள் 370 படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளித்து வருகின்றோம்.இன்றுவரை தொடர்கின்றது. அங்காவது அமைதி தவழ்கின்றதா?
அமெரிக்காவில் எத்தனையோ ஜனாதிபதிகள் ஆண்டுவிட்டனர். ஆனால் ஜார்ஜ் வாஷிங்க்டனும், ஆபிரகாம் லிங்கனும் பெயரெடுத்ததுபோல் மற்றவர் ஜொலிக்கமுடியவில்லயே ஏன்? அவர்களை விட மற்ற அனைவரின் பங்களிப்பும் குறைவுதான் என்பதே அமெரிக்கர்களின் கருத்து.
காந்திஜி, நேரு, இந்திரா, போன்றவர்களை மக்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் விதவிதமாக. குல்சாரிலால் நந்தா, சந்திரசேகர், கௌடா, வாஜ்பாய் போன்றவர்களை யாரும் அதிகமாக பேசமாட்டார்கள். ஒன்றுமே செய்யாதவர்களை பற்றி எப்படி விமர்சனம் செய்வது.
நேருவின் குடும்பம் புகழப்படுமளவிற்கு இந்தியாவில் எதயும் சாதிக்கவிலை என்பதே எனது முடிவு.
முடிவு உங்களை சார்ந்தது.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்தவேண்டும் வெளினாட்டில்...இந்த நாட்டின் வளத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.?
அரசை மாற்றும் திறன் வேட்பாளர்களுக்கு உண்டு.
சுதந்திரம்பெற்று இன்றுவரை ஜாதியை ஒழிக்க முடியவில்லை ஏன்?
ஜாதியை ஒழிக்கும் மந்திரக்கோல் யாரிடம் உள்ளது?
குருகிய பிராந்திய வெறியை களைய முடியவில்லையே ஏன்?
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கின்றது கேரளமும் கர்நாடகமும் . அப்படியென்றால் உச்சநீதிமன்றம் மக்களுக்கு மட்டும் தானா?
இவையெல்லாம் அதிக காலம் மத்தியில் ஆட்சிப்பொறுப்பிலிருந்த காங்கிரஸின் கையாலாகாத்தனம் தானே...
மாற்றுக்கட்சிகாரர்கள் இருந்த சில நாட்களில் எதாவது செய்திருக்கலாமே.
திட்டங்களுக்கு மட்டும் இவர்கள் பெயர் போட்டுக்கொண்டு விளாம்பரப்படுத்திக்கொள்வதற்காகவா ஆட்சியில் அமரவைத்தோம்?