Do you know about the Gomati Chakra, which increases one's income?

தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம் பற்றி தெரியுமா?

ஆன்மிக சக்தியை தாங்கி அதிக பலன்களைத் தரக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது.

இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது.

வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வருவதுதான்.

பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம்.

இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது.

அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம்.

கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.

இராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது இரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.

ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம்.

லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன.

பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன் உட்பொருள், சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது.

வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.

கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப் படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப் படவேண்டும்.

அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும்.

முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.

இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.

கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடம் இருந்தோ அல்லது உறவினர்களிடம் இருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது.

விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.

1766832699428.webp
 
Back
Top