Guru's thread; Tamil jokes

Status
Not open for further replies.
பெரியவர்: (பையனைப் பார்த்து) இப்ப நீ கையில வெச்சிருக்கியே இந்த செல்ஃபோனைக் கண்டு பிடிச்சவர் யார்? சொல்லு பார்க்கலாம்.
பையன்: எங்க அப்பா.
பெரியவர்: என்ன உளர்ரே.
பையன்: ஆமாம் சார். நான் இதை போன வாரம் தொலைச்சுட்டேன். ஒரு வாரமா தேடு தேடுன்னு தேடினேன். கடைசியிலே நேத்து சாயந்திரம் பீரோவுக்கு அடியில் இருந்த இந்த செல்ஃபோனைக் கண்டு பிடிச்சது எங்க அப்பாதான்.
 
நம்ம தலைவர் முதல்முறையா பிளேன்லே டில்லிக்குப் போகப்போறாரு. அவருக்கு ஜன்னல் ஓர ஸீட் தான் வேணுமாம். எங்கிட்டே சொல்லி புக் பண்ணச்சொல்லியிருக்காரு.
ஜன்னல் ஓர ஸீட்னா வேடிக்கை பார்த்துக்கிட்டே போகலாம் இல்லியா? அதுக்குத்தான் சொல்லியிருப்பாரு.
அதெல்லாமில்லை. அவர் வெத்திலைபாக்கு போட்டு சதா மென்னு துப்பிக்கிட்டேயிருப்பார். அதனாலே எச்சில் துப்புறதுக்கு சௌகரியமா இருக்கும்கறாரு.
 
அந்த டாக்டர் முந்தி எனக்கு ஒரு பல்லைப் பிடுங்கணும்னு சொன்னார். அந்த ஒரு பல் பிடுங்க அப்ப 50 ரூபாய் வாங்கினார். இப்ப எனக்கு எல்லாப் பல்லையும் பிடுங்க வேண்டியிருக்கு. அந்த டாக்டர் இப்ப ஒரு பல்லுக்கு 400 ரூபாய் கேட்கிறார்.
ஏண்டா, நீ அப்பவே எல்லாப் பல்லையும் பிடுங்கிக் கொண்டிருக்க வேண்டியது தானே?
 
அந்த விஞ்ஞானி ஏன் ரொம்பவும் வருத்தமா இருக்கார்?
அவர் ஒரு மனித ரோபோட் செய்தாரில்லே. அது அவருடைய பொண்ணைக் ௧டத்திக்கிட்டு போயிட்டுதாம்
 
TV வெடித்தது.--------------------------செய்தி
அதெப்படி சார் TVவெடிக்கும்?
அதுவா? மெகா சீரியல்லே அழுத மெகாஅழுகையிலே short circuit ஆகி TV வெடிச்சிருக்கும்.
 
போ லிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.........ஒரு கம்பெனியின் ஒரிஜினல் விளம்பரம்.

ஒரிஜினலைக் கண்டே ஏமாறுங்கள்...........ஒரு விஷமியின் விமரிசனம்.
 
'முக்கிய' செய்திகள்
மத்திய மந்திரி எதிர் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் 'முக்கு' முக்கென்று 'முக்கி'னார்
150 வினாயகர் சிலைகளை பக்தர்கள் கடலுக்குள் 'முக்கினர்'
கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் 'முக்கி' முனகின மாணவனின் தலையை ஆசிரியர் நீரில் 'முக்கினார்'
 
இப்ப எல்லாம் தொலைக் காட்சியிலே எந்த சேனலுக்குப் போனாலும் ஒரே கொலை மயமா
இருக்கு.
ஆமாமாம். தொலைக்காட்சி பூராவும் இப்ப கொலைக்காட்சியா மாறிட்டுது.
 
அவன்: நீ எங்கே படிச்சே?
இவன்: நான் எங்கே படிச்சேன்!
 
பாட்டி: தலைவிரிகோலமா இருக்கா. நெத்தியிலே பொட்டு இல்லே. தலையிலே பூ இல்லே. கழுத்து மூளியா இருக்கு. ஐயோ பாவம். அந்த சின்ன பொண்ணுக்கு இந்த சின்ன வயசுலே இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்க வேண்டாம்.
பேத்தி: என்ன பாட்டி சொல்றீங்க? நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. இந்த மாதிரி இருக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.
பாட்டி: துக்கம் வந்த மாதிரி இருக்கிறது ஒரு ஃபேஷனா? காலமே அலங்கோலமாய்ப் போயிடுத்து.
 
நீங்க முப்பது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ அப்படியே இப்பவும் இருக்கீங்க.
அதாவது நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடியே இப்ப என் எழுபதாவது வயசுலே எப்படி இருக்கேனோ அப்படி இருந்தேன்னு சொல்ல வரீங்க, இல்லியா?
 
எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்
என் கிட்டே இத்தனை நாளா சொல்லவேயில்லையே. யாருடீ அந்த அவர்?
அட சீ, நான் அவரைக்காயைச் சொன்னேன்
 
உண்மையில் நடந்ததைக்கேட்டு எழுதியது
அந்த ஊர் கோவிலுக்கு அன்று கும்பாபிஷேகம். ஊர் பெரியவர்கள் பல பேர் கூடியிருந்தார்கள். பஞ்ச௧ச்சம் கட்டிய சாஸ்திர விற்பன்னர்கள் பலரும் வேத மந்திரத்தை கோஷித்தபடி கும்பாபிஷேக தீர்த்தத்தை கோபுர கலசத்தின் மீது அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.
அதையெல்லாம் பார்த்தபடி கீழே பக்த கோடிகள் பரவசத்தில் லயித்திருந்தார்கள்.அப்போது அமெரிக்காவிலிருந்து ஊருக்கு புதிதாக வந்த ஒரு சிறுவன் இதையெல்லாம் கண்கொட்டாமல் பார்த்தபடி தன் தாயைப்பார்த்துக் கேட்டான்: அம்மா கோபுர உச்சியில் டயாபர் அணிந்த அங்கிள்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று.
 
என் புருஷன் தமிழ் news கேட்டவுடனே மயக்கமா விழுந்துடுவாரு
ஏன்?
தமிழ் செய்தி 'கள்' ளாச்சே
 
தொண்டர்1: நம்ம தலைவர் மொடாக்குடியர் ஆச்சே. அவர் எப்படி இப்ப மதுவிலக்குக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறாரு?
தொண்டர் 2: மதுவிலக்கு வந்ததுன்னா, அவர் பழையபடி கள்ளச்சாராயம் காய்ச்சற தொழிலை ஆரம்பிக்கலாமில்லே. அதான்.
 
Really, "கள்ளச்சாராயம் காய்ச்சற தொழில்" is one of the basic and essential qualification to have an entry into politics.
 
அப்பா: இப்ப நம்ம நாட்டினுடைய ஜனத்தொகை 60 கோடி.
அசட்டுப்பிச்சு: நான்பிறந்தது எவ்வளவு நல்லதாப்போச்சு பாத்தீங்களா?
அப்பா: என்னடா நல்லதாப்போச்சு?
அ. பிச்சு: நான்மட்டும் பிறக்காம இருந்திருந்தா நம்மநாட்டோட ஜனத்தொகை இப்ப 59,99,99,999 ஆ ஆயிருக்கும். சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்வளவு கஷ்டமாப் போயிருக்கும்?
 

ஜோசியர் :மூணாம் வீட்டிலிருந்து கேது பார்வை படறதாலே உங்களுக்கு ஆபத்து காத்துக்கிட்டு இருக்கு.
அவர்: உண்மைதாங்க. ஆனா அது மூணாம் வீட்டிலிருந்து இல்லீங்க.எதிர்த்த வீட்டுலே இருக்கிற சேதுவாலே தாங்க. அவன் என் பொண்ணை பார்க்கிற பார்வையே சரியில்லீங்க.
 
வீடு வாடகைக்குக் கேட்க வந்தவர்: இந்த வீட்டிலே எலிகளோடே தொந்திரவு ஜாஸ்தியா இருக்குமோ?
வீட்டுக்காரர்: எதனாலே அப்படிக் கேட்கறீங்க?
வந்தவர்: வீடு வயற்காட்டிற்குப் பக்கமா இருக்கறதாலே கேட்கிறேன்
வீட்டுக்காரர்: அந்தக்கவலையே வேண்டாம். இங்கே பாம்புகள் நிறைய இருக்கிறதாலே எலிகளே கிடையாது
 
அவங்க என்ன போராட்டம் நடத்தறாங்க?
அவங்க எல்லாம் தமிழ் நாட்டுலே யாரும் கர்நாடக சங்கீதம் பாடக்கூடாதுன்னு போராடறாங்க.
ஏன்?
கர்னாடகா நமக்குத் தண்ணீர் தராத போது நாம மட்டும் ஏன் கர்னாடக சங்கீதத்தைப் பாடணும்னு கேட்கிறாங்க. என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க.
 
அப்பா: இப்ப நம்ம நாட்டினுடைய ஜனத்தொகை 60 கோடி.
அசட்டுப்பிச்சு: நான்பிறந்தது எவ்வளவு நல்லதாப்போச்சு பாத்தீங்களா?
அப்பா: என்னடா நல்லதாப்போச்சு?
அ. பிச்சு: நான்மட்டும் பிறக்காம இருந்திருந்தா நம்மநாட்டோட ஜனத்தொகை இப்ப 59,99,99,999 ஆ ஆயிருக்கும். சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்வளவு கஷ்டமாப் போயிருக்கும்?
 
Status
Not open for further replies.
Back
Top