Guru's thread; Tamil jokes

Status
Not open for further replies.
பெரியவர்: (பையனைப் பார்த்து) இப்ப நீ கையில வெச்சிருக்கியே இந்த செல்ஃபோனைக் கண்டு பிடிச்சவர் யார்? சொல்லு பார்க்கலாம்.
பையன்: எங்க அப்பா.
பெரியவர்: என்ன உளர்ரே.
பையன்: ஆமாம் சார். நான் இதை போன வாரம் தொலைச்சுட்டேன். ஒரு வாரமா தேடு தேடுன்னு தேடினேன். கடைசியிலே நேத்து சாயந்திரம் பீரோவுக்கு அடியில் இருந்த இந்த செல்ஃபோனைக் கண்டு பிடிச்சது எங்க அப்பாதான்.
சிரி நானூறு

 
Last edited:
அவன்: அந்த சோமு இருக்கானே அவன் அண்டப்புளுகன்.
இவன்: அவன் இறந்துட்டதாக யாரோ நேத்து சொன்னாங்கடா
மற்றவன்: இல்லைடா. நேத்து சாயந்திரம் அவனைப் பார்த்தேன். 'என்னடா நீ செத்துப்போயிட்டதாகச் சொன்னாங்களே'ன்னு அவனைக்கேட்ட போது அவன் 'நான் உயிரோடதாண்டா இருக்கேன்' னு சொன்னான்.
அவன்: இருந்தாலும் அவன் பேச்சை நம்ப முடியாதுடா.
சிரி நானூறு

 
Last edited:
அசட்டுப்பிச்சு: ஒரு வாரமா ஒரே வயத்து வலி, டாக்டர்.
டாக்டர்: இத்தனை நாளா என்ன பண்ணிக்கிட்டு இருந்தே? முன்னாலேயே வர வேண்டியது தானே.
அ. பிச்சு: அதெப்படி டாக்டர் வயத்துவலி வரத்துக்கு முன்னாலேயே நான் வரமுடியும்?
சிரி நானூறு

 
Last edited:
என்ன சார் உங்க உடம்பு பூராவும் ஒரே காயம்?
என் மனைவி என்னை நேத்து நிஜமாவே தூக்கி எறிஞ்சு பேசிட்டா.
சிரி நானூறு

 
Last edited:
நம்ம தலைவர் முதல்முறையா பிளேன்லே டில்லிக்குப் போகப்போறாரு. அவருக்கு ஜன்னல் ஓர ஸீட் தான் வேணுமாம். எங்கிட்டே சொல்லி புக் பண்ணச்சொல்லியிருக்காரு.
ஜன்னல் ஓர ஸீட்னா வேடிக்கை பார்த்துக்கிட்டே போகலாம் இல்லியா? அதுக்குத்தான் சொல்லியிருப்பாரு.
அதெல்லாமில்லை. அவர் வெத்திலைபாக்கு போட்டு சதா மென்னு துப்பிக்கிட்டேயிருப்பார். அதனாலே எச்சில் துப்புறதுக்கு சௌகரியமா இருக்கும்கறாரு.
சிரி நானூறு

 
Last edited:
அந்த டாக்டர் முந்தி எனக்கு ஒரு பல்லைப் பிடுங்கணும்னு சொன்னார். அந்த ஒரு பல் பிடுங்க அப்ப 50 ரூபாய் வாங்கினார். இப்ப எனக்கு எல்லாப் பல்லையும் பிடுங்க வேண்டியிருக்கு. அந்த டாக்டர் இப்ப ஒரு பல்லுக்கு 400 ரூபாய் கேட்கிறார்.
ஏண்டா, நீ அப்பவே எல்லாப் பல்லையும் பிடுங்கிக் கொண்டிருக்க வேண்டியது தானே?
சிரி நானூறு
 
Under General Discussions Guru's thread My political views,pl see my கற்பனைக் குதிரை
 
ஜோசியர் :மூணாம் வீட்டிலிருந்து கேது பார்வை படறதாலே உங்களுக்கு ஆபத்து காத்துக்கிட்டு இருக்கு.
அவர்: உண்மைதாங்க. ஆனா அது மூணாம் வீட்டிலிருந்து இல்லீங்க.எதிர்த்த வீட்டுலே இருக்கிற சேதுவாலே தாங்க. அவன் என் பொண்ணை பார்க்கிற பார்வையே சரியில்லீங்க.
சிரி நானூறு


 
Last edited:
ஆயுர்வேத டாக்டர் பசுபதியைப் பார்த்தேன்.ஒண்ணும் பிரயோசனமில்லை. அல்லோபதி டாக்டர் கஜபதியைப்பார்த்தேன். ஊஹூம். ஒரு பிரயோசனமும் இல்லை. ஹோமியோபதி டாக்டர் உமாபதியைப்பார்த்தேன்.அதுவும் பிரயோசனமில்லை. நேசுரோபதி டாக்டர் சீதாபதியைப்பார்த்தேன். அப்பவும் வியாதி குணமாகல்லை. இன்னும் யாரைத்தான் பார்க்கிறதுன்னு புரியல்லே.
அப்படியா? சரி. இப்ப நான் ஒருத்தரை சொல்றேன். அவரைப்போய் பாருங்க
யார் அவர் ?
அவர் தான் திருப்பதி வெங்கடாஜலபதி!
சிரி நானூறு
 
Last edited:
அந்த நோயாளி ரொம்ப பக்திமான் போல இருக்கே?
எப்படிச்சொல்றே?
அடிக்கடி நரசிம்மா, நரசிம்மான்னு சொல்லிக்கிட்டு இருக்காரே.
அவர் கூப்பிடறது நரசிம்மசாமியை இல்லே. இங்க இருக்கிற நரசு அம்மாவை.
சிரி நானூறு
 
உங்க கால்வலி இப்ப எப்படி இருக்கு?
பரவாயில்லை. முக்கால் வலி போயிடுத்து. இன்னும் கால்வலி இருக்கு.
சிரி நானூறு
 
under politial discussiond under Guru's thread 'My Political Outlook' கற்பனைக் குதிரை can be seen
 
பையன் என்ன பண்றான்?
அவன் எம்பியே படிக்கிறான்.
ஏன்? உட்கார்ந்தே படிக்கலாமே. எதுக்காக எம்பணும்?
சிரி நானூறு
 
சேவகன்: நம்ம ராஜாவுக்கு நாளைக்கு அறுபதாம் கல்யாணம்
குடிமகன்: என்னண்ணே சொல்றே? அவருக்கு இப்ப 45 வயசுதானே ஆகுது.
சேவகன்: இருந்தா என்ன? நாளைக்கு ராஜா கல்யாணம் பண்ணிக்கப்போறது 60வது பொண்ணை. அதைச்சொல்றேன்.
சிரி நானூறு
 
ஒரு சோகமான ஜோக்!
ஒருவர்: எங்கள் குறைகளைத் தீர்க்காவிட்டால் புரட்சி வெடிக்கும்னு பட்டாசுத்தொழிலாளர்கள் மிரட்டியிருந்தாங்களே, என்ன ஆச்சு?
மற்றவர்: அவங்க வேலை செஞ்ச பட்டாசுத் தொழிற்சாலையே வெடிச்சிடுச்சு!
சிரி நானூறு
 
ஒருவர்: அவர் ஏன் இறக்கணும், இறக்கணும்னு கத்திக்கிட்டு இருக்கார்?அவருக்கு அப்படி என்ன கஷ்டம் வந்துட்டுது?
மற்றவர்: அதெல்லாம் ஒண்ணுமில்லே.அவர் பரண்லே இருக்கிற சாமான்களையெல்லாம் கீழே இறக்கணும்னு கத்தறாரு.அவ்வளவுதான்.
சிரி நானூறு
 
வீடு வாடகைக்குக் கேட்க வந்தவர்: இந்த வீட்டிலே எலிகளோடே தொந்திரவு ஜாஸ்தியா இருக்குமோ?
வீட்டுக்காரர்: எதனாலே அப்படிக் கேட்கறீங்க?
வந்தவர்: வீடு வயற்காட்டிற்குப் பக்கமா இருக்கறதாலே கேட்கிறேன்
வீட்டுக்காரர்: அந்தக்கவலையே வேண்டாம். இங்கே பாம்புகள் நிறைய இருக்கிறதாலே எலிகளே கிடையாது
 
அவங்க என்ன போராட்டம் நடத்தறாங்க?
அவங்க எல்லாம் தமிழ் நாட்டுலே யாரும் கர்நாடக சங்கீதம் பாடக்கூடாதுன்னு போராடறாங்க.
ஏன்?
கர்னாடகா நமக்குத் தண்ணீர் தராத போது நாம மட்டும் ஏன் கர்னாடக சங்கீதத்தைப் பாடணும்னு கேட்கிறாங்க. என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க.
 
திருடன் 1:இந்த பாங்க்லே போயி கொள்ளையடிப்போமா?
திருடன் 2: ஊஹூம். வேணாம். நேத்து முனுசாமி எனக்கு கொடுத்த
இந்த பாங்க்செக் பாங்க்லே பணமில்லேன்னு திரும்பி வந்துட்டுது
திருடன் 1: சரி!அப்படீன்னா அடுத்த தெருவுலே இருக்கிற பாங்க்லே கொள்ளையடிப்போமா?
திருடன் 2: வேணாம்.அந்த பாங்க்லேதான் நான் திருடின நகைகளை யெல்லாம் லாக்கர்லே போட்டு வச்சிருக்கேன்
 
ஆயுர்வேத வைத்தியர்: நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கா? சொல்ல மறந்துட்டேனே. அப்புறம் நீங்க துளசியை மறக்காம தவறாமல் சேர்த்துக்கணும்

நோயாளி: நான் கல்யாணம் ஆன ஆரம்பகாலத்துலே துளசியைத் தள்ளி வெச்சது என்னவோ வாஸ்தவம் தான்.ஆனா நான் அப்புறம் அவளை சேத்துக்கிட்டு பத்து வருஷமா அவளோடே தான் இருக்கேன்
நண்பர்: அட நீங்க வேறே. அவர் துளசி இலையைச்சொல்றாரு
 
என் புருஷன் திருடன்கறதுக்காக அவரை என்னோட கள்ள புருஷன்னு சொல்றது நல்லா இல்லை
 
பாமான்னா எனக்கு பயம்
அவ என்ன ஆடம்பாமா, இல்லை. ஹைட்ரஜன் பாமா, பயப்படறதுக்கு.
 
tv நிகழ்ச்சி தொகுப்பாளர்: இன்றைய சமையல் நிகழ்ச்சிக்கு கணவன் மனைவி இரண்டுபேர் வந்திருக்கீங்க. சரி.
(கணவனைப்பார்த்து) சார் நீங்க இப்ப என்ன பண்ணப்பேறீங்க?
கணவர்: இப்ப நான் வேப்பங்காயையும் அத்திக்காயையும் கலந்து ஒரு புது மாதிரியான சென்னை பீட்ஸா டிஷ் பண்ணப்போறேன்
தொகுப்பாளர்: அதுக்கு ஏன் சென்னை பீட்ஸான்னு பேர் வெச்சிருக்கீங்க?
கணவர்: இந்தக்காலத்துப் பசங்களெல்லாம் நம்ம ஊர் இட்லி, தோசை, உப்புமா மாதிரி பேரை வச்சா சாப்பிடவே மாட்டாங்க. அதனாலே அதுக்கு இந்த மாதிரி மாடர்ணா வெளிநாட்டுப் பேர் வச்சா அது எப்படி இருந்தாலும் சந்தோஷமா சாப்பிட்டு விட்டுப் போவாங்க.
தொகுப்பாளர்: ஆமாம், மேடம் நீங்க என்ன பண்ணப்போறீங்க?
மனைவி: அவர் செஞ்சுத்தர டிஷ்ஷை எப்படி சாப்பிடறதுன்னு சொல்லித்தரப்போறேன்
 
பையன்: புது தமிழ் வாத்தியார் எப்பப்பார்த்தாலும் என்கிட்டே ஏதாவது செய்யுளைச்சொல்லி அதை விளக்குமாறு கேட்டுத்தொந்திரவு பண்ணிக்கிட்டே இருக்கார்
அம்மா : ஒரு விளக்குமாறு வாங்கறதுக்குக்கூட துப்பு இல்லாத வாத்தியார் உன் கிட்டே போய் விளக்குமாறு கேக்கறாரே. அசிங்கமாயிருக்கு கேக்கறதுக்கே
 
Status
Not open for further replies.
Back
Top