• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Guru’s corner

1620259261250.jpeg
 
Diseases are said to be visitations of God;
I have no hesitations to accept it and give it my nod.
Diseases are said to be the after effects of our sin,
That makes one take medicines like erythromycin.
Many diseases are the results of our action;
Many others are the results of our inaction;

Diseases are said to be visitations of God;
I have no hesitations to accept it and give it my nod.
Some diseases are offsprings of insanitation,
Resulting from solid waste and dirty water stagnation;
Some are the causes of uncontrolled pollution,
that we see around us; It is true and is no illusion;

Diseases are said to be visitations of God;
I have no hesitations to accept it and give it my nod.
They are the cause for grief and poverty,
They suck our energy and our property;
There is a need to maintain cleanliness,
Which is said to be next to Godliness;

Diseases are said to be visitations of God;
I have no hesitations to accept it and give it my nod.
Sans diseases, we may forget all about Almighty,
We may think that we humans are very mighty,
It is the disease that reminds us of Him;
Not the mere prayers, songs and the hymns.

Diseases are said to be visitations of God;
I have no hesitations to accept it and give it my nod.
Diseases are warnings given to us by the Lord,
to mend our ways and to be above board,
To focus on the right things in our everyday life;
To lead a life free from needless worry and strife.
 
Diseases are said to be visitations of God;
I have no hesitations to accept it and give it my nod.
Sans diseases, we may forget all about Almighty,
We may think that we humans are very mighty,
It is the disease that reminds us of Him;
Not the mere prayers, songs and the hymns.

Diseases are said to be visitations of God;
I have no hesitations to accept it and give it my nod.
Diseases are warnings given to us by the Lord,
to mend our ways and to be above board,
To focus on the right things in our everyday life;
To lead a life free from needless worry and strife.
 
சொன்னது சங்கி இல்லை. உலகப புகழ் பெற ற Astronomer
1620436689897.png
 
These days
Most people have lost the pleasure of holidays. In our normal days when we were performing our routine duties and functions, and when schools and colleges were functioning as per schedule, everyone of us was most eagerly looking forward to the holidays, may be the week ends, religious holidays or the vacations that we utilised as a matter of right.

Today with restrictions to all sorts of movements outside our houses, the pleasure of staying in the house and enjoying holidays is lost. The pleasure of a happy stroll, the pleasure of a visit to our friends and relatives, the pleasure of going to a drama or a picture, the pleasure of going to a restaurant or a hotel occasionally to satisfy our taste buds and similar other small pleasures are totally lost.
With so much of a time at our disposal inside the house and with many other restrictions, people find tempted to satisfy their taste buds and in the process improve their waist line which invariably works against their health. Everyone feels that they are caged within the four walls of their houses, in other words under “house arrest”
Even children are looking eagerly for their schools reopening and meeting their friends there. Those who work in government offices enjoying the official perks, a free fan, an unnoticed nap, gossiping with friends and frequenting canteens are all bored to the core with their wives watching, correcting and directing them every minute at home . So all these people seem to be waiting for the D day when normalcy will be restored. The small relaxations the home makers were enjoying till recently are also lost. But still the quarantine has its own plus points. It has made many a husband expert in the art of culinary and many wives have learnt to tolerate their husbands.

It is easily said that one should work from home, but it means every employee in addition to his or her office job has also to attend to the domestic chores which they cannot escape. Most of the extracurricular or extraneous activities have abruptly come to and with more and more people getting frustrated and with more and more women in charge of houses also feeling their time being usurped by the men of the house, days are getting longer and killiing time has become an ordeal.But there are many ways of using the unexpected extra time most beneficially that will help to improve ones future and that of the familys overall upliftment. The one danger is that if one succumbs to the 24x7 use of phones and computers, videos and video games and TV , you are isolating yourself from the society so much, that living itself loses its meaning and pleasure. It is entirely in your hands as to how you utilise this opportunity.
The most pitiabe part of the story is of those who work on daily wages. Their life gets shattered in spite of the government extending its support to them by way of cash and ration. Everyone of us, from the just born to the one with one foot in the grave are all scared of “any time death”. Let us all pray for the return of normalcy in the country with people free from the fear of random death. Let us put up with the inconveniences caused and help each other and the government in its fight against the killer Covid-19
 
திமுக ஆட்சி இதுநாள் வரையிலும் நன்றாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் அதில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அபஸ்வரங்கள் ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன. அதிலுள்ள கீழ்மட்ட தொண்டர்கள் தங்களுக்கே நிறைய அதிகாரம் வந்து விட்டாற்போல் பேசவும் நடக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். போலீசை மிரட்டுவது, வியாபாரிகளை மிரட்டி நிதி திரட்டுவது போன்ற வேலைகள் வெற்றிகரமாகத் துவங்கிவிட்டனர்
.
சென்ற அதிமுக அரசையும், நடந்து கொண்டு இருக்கும் மோடி அரசையும் தங்கள் இயலாமைக்கு காரணம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். நமது வாக்சினைப் பற்றி எதிர்மறை விமர்சனம் செய்து மக்கள் பலர் குழப்பமும் மரணமும் அடையக் காரணமாகிவிட்டார்கள். ஆரம்பத்தில் இவர்கள் செய்த துஷ்பிரசாரமே கோவிட் 2ம் அலை பெரிய அளவில் வீசுவதற்குக் காரணம் ஆகிவிட்டது.

இவர்கள் தங்களால் சாதிக்கமுடியாததற்கு மோடியின் பெயரைச்சொல்லி தப்பிவிடலம் என்றே திட்டம் இட்டு அனைத்தையும் செய்கிறார்கள். எதிர் கட்சியாக இருந்தபோது எப்படி பொறுப்பற்ற முறையில் அதிமுகவையும் மோடியையும் சாடினார்களோ அதேபோல் இப்பொழுதும் அந்த வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

புதுக்கல்வித்திட்டத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அதற்கு குலக்கல்வி திட்டம் என்று பெயர் சூட்டி அதை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டைத்தவிர வேறு எங்கும் அதற்கு எதிர்ப்பு இல்லை. இதனால் ஏற்படும் இழப்பு தமிழக குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும்தான்.

12 ம் வகுப்பு மார்க் இருக்கும்போது மெடிக்கல் காலேஜில் சேர இடையில் இன்னொரு பரீட்சை எதற்கு என்று கேட்டவர்கள், அனீதாவுக்குத் தவறாக வழிகாட்டி அவர் மரணத்துக்குக் காரணமானவர்கள் இப்போது நீட்டுக்குப் பதிலாக நீட் அல்லாத வேறு ஒரு பரீட்சையை நடத்தப் போகிறார்களாம். இது வேடிக்கையாக இருக்கிறது.
பரீட்சை தடத்தினாலும் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம் என்று ஒளிவு மறைவு இன்றி கூறியவர்கள் பரீட்சையை எப்படி நடத்துவார்கள் என்ற உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

பிறகு ஒரு நிதி அமைச்சர் தேவை இன்றி மத விஷயத்தில் தன் ஆக்ரோஷத்தைக் காண்பிக்கிறார்.

இன்று PSBB பள்ளியில் நடந்த பாலியல் சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுத்ததை நாம் பாராட்டுவோம். ஆனால் அதே நேரத்தில் இந்த பாலியல் சம்பந்தப்பட்ட மற்ற வழக்குகளை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கித்தருவார்களா? இந்தப் பள்ளி விவகாரத்தை மாத்திரம் இவ்வளவு ஊதிப் பெரிது படுத்துவது ஏன் என்று சிறு குழந்தைக்குக்கூட தெரியும். ஒரு நல்ல அரசுக்கு இது தேவையா?

விவசாயிகள் சட்டம் பார்லிமெண்டில் பாசான போது அதை திமுக எம்பிக்கள எதிர்க்காமல் இருந்தது ஏன்? பிறகு சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல், சும்மா இருந்த இங்குள்ள விவசாயிகளைத் தூண்டிவிட்டு விவசாயிகளின் சட்டத்தை எதிர்க்கச் சொல்வதன் நோக்கம் என்ன?

தேவை இல்லாது சாதி சாயமோ மத சாயமோ பூசுவதை நிறுத்தி யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பீர்களா? தேவையற்ற பிராமண வெறுப்பில் குளிர் காய்வதை நிறுத்துவீர்களா?

கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் இந்துக்களை சிறுமைப்படுத்துவதை நிறுத்தி, எல்லா மதத்தினருக்கும் ஒரே மாதிரி நீதி வழங்குமா இந்த அரசு? மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர்கள் செய்யும் வேலை அறிவு உள்ள எவரையும் சிரிக்கச்செய்யும், நெஞ்சம் வெடிக்கச்செய்யும். ஸ்டாலின் முதல்வராக இருந்துகொண்டு இந்துக்களை பழிப்பதையும் இந்துமத பழக்க வழக்கங்களையைம் குறை சொல்வதையும் இனியாவது நிறுத்துவாரா?
மத்திய அரசுடன் மோதல் போக்கை அனுசரித்தால் அதனால் இழப்பு தமிழ்நாட்டுக்குத்தான். அதை தேவை இல்லாது தொடர்ந்தால் தமிழ் நாட்டில எந்தவிதமான தொழில் வளர்ச்சியோ, பொருளாதார மேம்பாடோ ஏற்படாது போய் விடும். திமுக வின் அர்த்தமற்ற எதிர்ப்பு, எட்டு வழிச்சாலையாக இருந்தாலும் சரி, ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி, அவை யாவும் தமிழ் நாட்டை பின்னோக்கியே இழுத்துச்செல்லும். நிலம் கையகப்படுத்தப்படாமல் எந்த ஒரு தொழிற்சாலையையும் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வர முடியாது. இவர்கள் இதுவரை எல்லாத்திட்டங்களையும் வராமல் தடுக்கக் கையாண்ட முறைகள் அனைத்தும் நாளை இவர்கள் கொண்டு வர நினைக்கும் திட்டங்களுக்கு இடையூறாகவே அமையும்.
இது நாள்வரை எதிர்கட்சியாகவே இருந்த நீங்கள், இப்போது பதவியில் இருக்கும்போது எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும். தன் கட்சியிலுள்ள சில முரடர்களை ஸ்டாலின் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும். தனக்கு ஓட்டுப் போட்ட, மற்றும் ஓட்டுப்போடாத அனைவருக்கும் வெறுப்பற்ற, பொறுப்புள்ள நல்லாட்சி தரவேண்டும். அவ்வாறானால் அனைவரும் வரவேற்போம். செய்வாரா?
 
உண்மையில் நடந்த ஒரு சோக தமாஷ்.
என்மனைவி இறந்த ஒரு வாரத்திற்குள் நான் அவளுடைய இன்ஷ்யூரன்ஸ் பாலிசி, ரசீது இவைகளுடன், பிராட்வேயில் இருக்கும் அந்த LIC ஆபீசுக்குப்போனேன். அங்கு அந்த பாலிசியைப்பரிசீலிக்கும் அதிகாரியைப்பார்த்து விஷயத்தை கூறினேன். அவர் நான் காண்பித்த அந்த பாலிசியை பார்த்தார். ரசீதுகளையும்பார்த்தார். பிறகு இறந்தவரின் Death certificate எங்கே என்று கேட்டார். அதற்கு நான் அப்ளை செய்து இருக்கிறேன் என்றேன். அப்படியனால் “அந்த டெத் சர்டிபிகேட் கிடைத்தவுடன் அத்தோடு அந்த LIC பாலிசியையும், கடைசியில் கட்டிய ரசீதையும் கொண்டு வாருங்கள். பாலிசிக்கான தொகையை கொடுப்பதற்கான ஏற்பாட்டை செய்து விடலாம்” என்றார்.

ஒருவாரத்தில் எனக்கு என் மனைவியின் டெத் சர்டிபிகேட் கிடைத்தது. எனவே அதையும் மற்றும் பாலிசி, ரசீதுகள் , கவரிங் லெட்டர் எல்லாவற்றையும் ரெடி செய்து அதே ஆபீசுக்கு அதே ஆபீசரைப் பார்க்கப்போனேன். அவர் சீட்டை நோக்கிப்போகும்போதே அவர் என்னைப்பார்த்து, அடையாளம் கண்டு கொண்டு,
“வாங்க சார், வாங்க, என்ன உங்க டெத் சர்டிபிகேட்டைக் கொண்டுவந்துட்டீங்களா?”
என்று கேட்க அங்கு அருகில் இருந்தவர்களில் சிலர் நமுட்டுச்சிரிப்பும், வேறு பலர் வாய்திறந்தும் சிரித்தனர்.
நான் நிலைமையை சமாளித்தபடி,
“ நீங்க சொல்ற செர்டிபிகேட்டுக்கு இன்னும் எவ்வளவு நாளாகுமோ எனக்குத்தெரியாது. ஆனா அதை என்னாலே கொண்டு வரமுடியாது. இது வந்து என்மனைவியோட டெத்செர்டுபிகேட் “
என்று சொல்லி அவரிடம் கொடுத்தேன். அந்த ஆபீசரும் “சாரி, நான் உங்க டெத்செர்டிபிகேட் என்று சொன்னது நீங்க கொண்டுவரவேண்டிய உங்க மனைவியின் டெத் செர்டிபிகேட் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். தப்பாக நெனச்சிக்காதீங்க. excuse me” என்று சொல்லி நான் கொடுத்த பேப்பர்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டார்.
என் டெத்செர்டிபிகேட்டை என்கிட்டேயே கேட்ட ஒரே மனிதர் அவர்தான்
 
.

It is quite true. The Avvaiyar padal using four ‘Koti‘s is a famous one.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்;

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
என்பதே அப்பாடல்.

Besides we have names in Tamil for very large numbers and their references to such numbers in Mahabharata and Ramayana. A small example is given here. westerners were very much prejudiced against us that they under rated us and refused to recognise our skills in mathematics and astronomy and they wrongly nsmed the Indian numerals such as 1,2,3,4 etc as Arab numerals. They are out and out without doubt Indian numerals. If we look at vedic mathematics, we will know how very advanced we were in mathematics.
ஆயிரம்
(āyiram)
௱௲ (100,000)நூறாயிரம் (TS)
இலட்சம் (SS)
(nūraiyiram
lațcam)
௲௲ (1 million)மெய்யிரம் (TS)
பத்து இலட்சம் (SS)
(meiyyiram
pattu lațcam)
௲௲௲ (1 trillion)தொள்ளுண் (TS)
நிகர்ப்புதம் (SS)
(tollun
nikarputam)
 
1636432159483.jpeg

As one who had most of my schooling (and therefore) all of my college education in the period of DMK rule I share some of your apprehensions about the future of the community. Our family moved out of the Agraharam (from a village 500 km away) to the city during my grandfather's time and we (from the time of my father) have had a complete city upbringing and I therefore have no knowledge about the situation prevailing in villages which may be as bad as you describe.

What follows is mostly from information gathered from older relatives and from friends in my age group (within our community) who also got it from family small talk.

When missionaries opened their educational institutions to locals, many young Brahmins enrolled and used the western education to their advantage and hogged a high percentage of the jobs (in the British Raj) and some of them were even able to secure high level administrative posts. They gave up the traditional priest profession and moved out of their (squalid) Agraharams and moved up financially in life on par with the people at whose doors their forefathers had been begging for centuries. Traditionally, Brahmins subsisted on alms. For many people of other (other than Brahmin) castes especially those who were affluent, these upstart neo rich Brahmins became objects of instant hatred. You do not like your subordinates' children doing better than your own - till yesterday these Paappans had been beggars.

If we had continued in Agraharams maintaining our traditional practices including social distancing and claiming social superiority as our birthright but remained paupers, no EVR Naicker or AR Mudaliar or Karunakara Menon or TM Nair or Varadarajulu Naidu or Theagaraya Chettiar et al would have bothered about us. The mention of people of different castes is deliberate and none of these persons belonged to the socially oppressed Dalit communities. Many of the above mentioned persons carried titles like 'Rao Bahadur', 'Dewan Bahadur' and even 'Sir' (knighted) and they were founders/ active members of the Justice Party. Were they really fighting for social justice or were they in fact angry that Brahmins had usurped their place in society which they fiercely believed was (hereditarily) theirs and theirs alone? There is one thing I am convinced about - we are not being targeted for several centuries/ millennia of social distancing from other communities out of perceived feeling of superiority by birth. We are being targeted for reaping the benefits of modern western education in the last 200 years.


Many years back, there was a centre page article in a popular and reputed newspaper (based in a metro city in North India) that the Christian Missionaries generally encouraged pagan priests to enroll in their schools where they could impart (the superiority of) their religion even while imparting education. Once the pagan priests and aspiring pagan priests converted, the others would follow. This approach had worked for the missionaries in many other cultures. Not surprisingly, in India these missionary schools encouraged and even gave preference to Brahmin children and there was good response particularly from the Brahmins in Bengal and Tamilnadu (as per the article). This article was primarily about the role and methods of missionaries in India in spreading their religion and also mentioned the opening of good hospitals and orphanages. The point about bringing Brahmins into mainstream education was not the focus of the article. The common propaganda is that Brahmins rose to high positions because they reserved all education for themselves and kept others illiterate. It is true that Brahmins claimed sole rights to learn Sanskrit scriptures but the stone tablets/ inscriptions in temples and other sites are proof that artisans were not illiterate. The accountants (Kanakku Pillai) employed by business communities were generally family members. Probably this traditional system of maintaining accounts is much closer to anything that modern education has to offer than memorisation and recitation of Sanskrit Shlokas or consulting the almanac for auspicious days. The point is that our forefathers got here using the same education system that the Justice Party members had access to and not by learning the Sanskrit scriptures that they had selfishly guarded.

If the social environment in villages is hostile, Brahmins should try and move to larger cities where people are too busy to learn anything about their neighbours. And as for job aspirants there are MNCs. As for the even better option of leaving the state, DK/ DMK need not be the only reason to move out of Tamilnadu. Bangalore and Hyderabad are today comercially more important than Chennai and very soon Ahmedabad will push this city further down and possibly Pune will do the same in 10 years and all this due to the retrograde policies initiated by the DMK particularly in the area of education. Google, Oracle, Microsoft and many other international giants will open offices only in cities where skilled manpower is available on a large scale and these large offices will in turn spawn many more work centres locally - more job opportunities and revenue and greater widening of the gap between Tamilnadu and these progressive states. There was a program on smart cities on TV some months back. Students in middle school (classes 5 to 8) from Vishakapatnam speak far better English than college students in Chennai and the students (from Chennai) I refer to are not from socially deprived families. Point this out to the DK/ DMK and they will insist that Tamil is the greatest language in the world and Thirukkural holds all the wisdom the world needs. I do not know if you watched this on TV - some time after the first corona wave last year, M K Stalin while criticising the state and centre for their inability to tackle Corona, said that Thirukkural had already shown the way and he quoted the verse "Gunam Naadi Kutramum Naadi ..." as if this generic saying from the Kural was a silver bullet to deal with corona.

It is a fact that the low standard of education here should be a greater concern for Brahmins as their children are already facing an uncertain future in the state. If they wish to compete with aspirants from other states for opportunities elsewhere, then they need to think beyond the course content and university exams and put in a lot of extra effort to equip themselves. Quality books published by NCERT for the Delhi Higher Secondary schools are legally downloadable for free - they can get a good grounding even while in school. There is a wealth of free high quality learning material on the internet. Rather than worrying, parents can play a more active role in the development of their children and guide them. 'Sweet are the uses of adversity' is a well known and inspiring proverb.

To conclude, though we voice our feelings differently, we are certainly on the same side in the matter of concern for our community.

(Sorry, if my response is a bit too long!)
What you have said is true. Today, most of the villages have been deserted by Brahmins not only for better education but also for safety purposes. Many villages are not safe particularly for Brahmin girls. That is another reason why Brahmins are heading towards towns.
we were about 20 families in our village those days. Now there is just only one family there while all others have migrated to cities like Chennai and Bombay, while a major stock of them have gone to States. ( This is the case with most of the Brahmin families in Tamil Nadu) I had my education in Board High School in my village, where the medium of instruction was Tamil. Because of my profession, I had to move out of my native place and ultimately settle down at Chennai for better education of my children.
The reason for the deterioration in quality of education is quite obvious and doesn’t need any elaborate explanation, We have seen how the NEET issue is handled by the Tamil Nadu government on some very spurious arguments and reasoning. We are as you say going through a period of adversity and I am sure in the coming years, things may change for better. At least let us hope so.
 
அதென்னமோ தெரியல்லே, எனக்கு ஞாபக மறதின்னா ஞாபகம் வரது absent minded professor தான். ஞாபக மறதி குறித்து ஏகப்பட்ட ஜோக்குகள் நமக்கெல்லாம் தெரியும்.
ஆனா இதெல்லாம் சமயத்துலே ஞாபகம் வராது..

ஞாபக சக்திங்கிறது ஒரு வரம்தான். சில பேருக்குத்தான் அந்த வரம் வாய்ச்சிருக்கு. எனக்குத்தெரிஞ்ச ஒரு அம்மாவுக்கு 1945 லே அவங்க செஞ்ச அவியல், அதை சாப்பிட்டவங்க எத்தனைபேர், யார்யார் அந்த அவியலைப்பத்தி என்ன என்ன சொன்னாங்க, எப்படி ஒருத்தர் அதிலே ஒரு முத்தலான கொத்தவரங்காய் கிடைச்சது போன்ற விவரங்களை நேத்து நடந்த மாதிரி சொல்வாங்க, நீங்க கேட்கலாம் அவங்க சொல்றது நிஜங்கிறதை எப்படி நம்பறதுன்னு, உங்களுக்கு அவங்களைப் பத்தித்தெரியாது. அதனாலேதான் அப்படிப்பேசறீங்க. நான் எப்படி நம்பறேன்னா ஒரு 5 வருஷத்துக்கு முன்னாடியும் இதையே கரெக்டா சொன்னாங்க. தப்பா சொல்லியிருந்தா அதே மாதிரி மறுபடியம் அத்தனை வருஷம் கழிச்சி அப்படியே சொல்லி இருக்க முடியுமா?



என் அப்பாவுக்கு என்ஸ்கூல் பேர், அதாவது ஸ்கூல்லே என்பேரு, அஃபிஷியல் பேரு மறந்தது உண்மையிலேயே ஒரு ஆச்சரியம்தான். அப்படித்தான் ஒரு நாள் என் ஸ்கூல் கிளாஸ் மேட் என் வீட்டுக்கு வந்து என்பேரைச்சொல்லி நான் இருக்கேனான்னு கேட்ட போது, அங்கே இருந்த என் அப்பா, அப்படி யாரும் இந்த வீட்டிலே கிடையாதுன்னு சொன்னார்.( என்க்கு வீட்டிலே ஒரு பேர், வெளியிலே, அதாவது ஸ்கூல், ஆபீசு மாதிரி வெளி இடங்களிலே முதல் பேருக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இன்னொரு பேரு- அது என்னன்னு தெரிஞ்சிக்கணுமா? தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணப்போறீங்க? ) நான் அப்போ வீட்டுக்குள்ளேதான் இருந்தேன். நான் வெளியே ஓடி வந்து “நான் இருக்கேன்” னு சொல்லி என்ஃப்ரெண்டோட பேச ஆரம்பித்தேன். அப்போ அப்பா என் அம்மாவிடம் இவனுக்கு இந்தப்பெயர் யார் வைத்தது என்று கேட்டார். இத்தனைக்கும் அப்போதைய என் S.S.L.C. புத்தகத்துலே முதல் பக்கத்துலே அந்த என்பெயர் கொட்டை கொட்டையாக எழுதியிருந்த அந்தப்பக்கத்ததிலே கையெழுத்துப்போட்டவர் என் அப்பாதான். என் அப்பாவின் ஞாபக சக்தியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். அதைப் பத்தி அதிகம் விளக்கத் தேவையில்லை என்று நம்புகிறேன்.



சாதாரணமா பல பேருக்கு பழைய விஷயங்களெல்லாம் நல்லா நினைவு இருக்கும். ஆனா நேத்து நடந்தது நினைவு இருக்காது. நான் தினமும் டைரி எழுதற வழக்கம் உண்டு. அது ஒரு மாதிரியான ஞாபக சக்திப் பயிற்சி, எக்சசைஸ். எனக்கு நேத்து காலையிலே என்ன பிரேக்.ஃபாஸ்ட் சாப்பிட்டேங்கறது நினைவுக்கே வராது. அவ்வளவு தூரம் போவானேன். இன்னிக்கு மத்தியானம் என்ன சாப்பிட்டேன்னு தெரியாது. அப்படி ஒரு ஞாபக சக்தி. யார்கிட்டேயாவது சொன்னா, உங்க வயசுக்கு நீங்க உங்க பேரை ஞாபகம் வெச்சிக்கிட்டு இருக்கிறதே பெரிய விஷயம்னு கிண்டலடிக்கிறாங்க.

ஆனால் இதை எல்லாம் தூக்கி அடிக்கிற அளவுக்கு ஒரு மறதி மன்னனை எனக்குத்தெரியும். அவர் எனக்குத் தெரிஞ்ச புரொபசர்,பேர் என்னன்னு மறந்து போச்சு, அவருக்கு ஞாபகமறதி ரொம்பவே அதிகம். அப்படி இருக்கும் போது காலேஜூலே பெரிய படிப்பெல்லாம் படிச்சி, டாக்டர் பட்டம் வாங்கி இத்தனை வருஷம் டீச்சிங்கிலே இருந்து புரொபசராகி ரிட்டையரும் ஆயிட்டார்னா எனக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு. இவருக்கு எப்பவுமே ஞாபக மறதி இருந்து இருக்க முடியாது. படிப்பெல்லாம் முடிச்சி வேலையிலே சேந்தப்புறம்தான் இவருக்கு ஞாபக மறதி வர ஆரம்பிச்சி இருக்கணும். அல்லது இவருக்குக்கல்யாணம் ஆன பிற்பாடு பெண்டாட்டி கிட்டே இருந்து தப்பிக்க மறதியை பிராக்டிஸ் பண்ணி இருக்கணும்.

இவர்பேரு மறந்து போச்சுன்னு சொன்னேனா? மகாதேவன்னு வெச்சிப்போம். ஏன்னா அவரை எல்லாரும் இப்ப மறதி மகாதேவன்னுதான் கூப்பிடறாங்க. இவரோட மனைவி இவ்வளவு மறதி மன்னனோடே எப்படி வாழ்ந்து குப்பை கொட்டினாங்கன்னே தெரியல்லே.அதைப்பத்தி நாம தெரிஞ்சிகிட்டா. நாளைக்கு நம்மளையும் பாத்து நாலு பேர் சிரிக்காத மாதிரி நாம நடந்துக்கலாம் பாருங்க. நல்லவங்க கிட்டே இருந்து நாலு கத்துகிட்டா, முட்டாள் கிட்டே இருந்து 30 கத்துக்கலாம்.

இவர் , யார் இந்த இவர், மறந்து போச்சே, ஓ இப்ப ஞாபகம் வந்துடுச்சு, இவர்தான் மறதி மகாதேவன். அவங்க வீட்டு அம்மா, அதாவது இவரோட வொய்ஃப், வெளியிலே போய் ஏதாவது பொருள் வாங்கணும்னா, இவருக்கு ஒரு துண்டுக்கடுதாசியில் தனக்கு வேண்டியதை எழுதிக் கொடுத்து விடுவார். ஒரு சமயம் அரை கிலோ வெல்லத்தையும், கால்கிலோ மிளகாயையும், 100 கிராம் கடுகையும் வாங்கி வரச்சொன்னா, இவர் அத்திரிபாக் கதையா வழியிலே யாரோ ஃப்ரண்டை மீட் பண்ணி பேசினதுலே என்ன வாங்கணுங்கிறதையே மறந்து போய் கடுகு 1 கிலோ, மிளகு ஒரு கிலோ, வெள்ளரிக்காய் ஒரு கிலோன்னு என்ன தோணிச்சோ அதை வாங்கிட்டு வந்துட்டார்.

ஒரு கிலோ கடுகைப் பாத்த உடனே அந்த அம்மா கடுகு வெடிக்கிற மாதிரி வெடிச்சித்தள்ளிட்டாங்க.
“இவ்வளவு கடுகை வெச்சி நான் என்ன பண்றதுன்னு நெனச்சீங்க? நான் கடுகு வியாபாரமா பண்ணப்போறேன். இனிமேல் இது தீரற வரையிலும் உங்களுக்குக் கடுகு சாதந்தான்” னு சொல்லிட்டாங்க. இவர் வெடிச்ச கடகு அடங்கற மாதிரி கப்புனு அடங்கிட்டார்.எழுதிக்கொடுத்தும் அந்த சீட்டு தன் பையிலே இருந்ததை மறந்து தொலைச்சதனாலே.

இந்த மாதிரி தப்புத்தப்பா வாங்கறது இது முதல்தரம் இல்லை. அஞ்சாந்தரம். அதுலே இருந்து ஒரு ஐடெமா இருந்தாலும் இவர்வொய்ஃப் இவரை கடைக்கு அனுப்பறதுக்கு முன்னாடி ஒரு சிட்லே என்ன வேணுங்கறதை எழுதிக் கொடுத்துடுவாங்க.
ராஜா ராணிங்கிற பழைய படத்துலை N.S.கிருஷ்ணன் மேடையிலை பேசப்பயந்து பேசவேண்டிய பேச்சை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு அப்படி எழுதி பையிலே வெச்சிருந்த சீட்டை எடுத்துப் படிக்க ஆரம்பிச்ச உடனே கூடியிருந்த ஜனங்கள் எல்லாம் ஒரேயடியா சிரிக்க ஆரம பிச்சுடுவாங்க. ஏன்னா அவர் மேடையிலே பேசறதுக்கான சீட்டை மாத்தி பையிலே இருந்த லாண்டரிச்சீட்டைப்படிச்சதுதான் காரணம்.
அதே மாதிரி மகாதேவனும் அவங்க எழுதித்தந்த சீட்டை மறந்து, தன்பையிலிருந்த வேறே ஒரு சீட்டைஎடுத்துப் பாத்து, மளிகைக் கடைக் குப்பதிலா லாண்டரிக்கடைக்குப்போய், லாண்டரிவாலா கிட்டே போய்க்கேக்க , அந்த லாண்டரி ஓணர்
“ சீட்டை சரியாப் பாரு சார். இது அடுத்த வாரம்தான் கிடைக்கும். டேட் போட்டிருக்கில்லே. அதைப் பாக்காம என்கிட்டே வந்து ஏன் என் உசுரை வாங்கறே?சாவு கிராக்கி” அப்படின்னு மெர்ராஸுக்கே ்ஸ்பெஷலான வார்த்தையால அவரை அர்ச்சனை பண்ணி ஒரு வாங்கு வாங்கின உடனே இவருக்கு ஒண்ணும் புரியல்லை.

வீட்டுக்குப போய் பெண்டாட்டி கிட்டே கம்ப்ளெயின் பண்ண அவர்
“நான் சொன்னது என்ன, நீங்க செஞ்சது என்ன? மளிகைக் கடைக்குப் போகாம லாண்டரிக்கடைக்கு உங்களை யார் போகச்சொன்னது?”
என்று எகிற இவர் பேந்தப்பேந்த விழிக்க அந்த அம்மா இவர் சட்டைப்பையைத் துழாவி தான் எழுதிக்கொடுத்த சீட்டைக்காண்பிச்சி,
“ இது தான் நான் எழுதிக்கொடுத்த சீட். இதை மறந்துட்டு லாண்டரி ரசீதை உங்களை யார் உங்க பையிலே வெச்சிக்கச்சொன்னா?” என்று கூறி
அன்று முதல் தான் சீட் எழுதிக்கொடுத்து அவர் சட்டைப்பையில் இருக்கிற வேறே சீட்டுகளை எல்லாம் வெளியே எடுத்து, ஒண்ணுக்கு ரெண்டு தரமா விஷயத்தை விளக்கி அவரை கடைக்கு அனுப்பற வழக்கம் வந்தது.
********
அதேபோல ஒரு நாள் இவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயி இவரோட வொய்ஃப். ஒரு துண்டுச்சீட்டிலே எழுதிக் கொடுத்த ஐடத்தையெல்லாம் ஒரு ட்ராலியிலை எடுத்துப் போட்டுக்கொண்டு அதுக்கான கௌண்டர்லே போய் பில்லை எல்லாம் பேயோ, பிசாசோ பண்ணிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போனார். போனா அந்த சாமான்களைப்பாத்த அவர் மனைவி, பேர் தெரியல்லே, சரோஜான்னு வெச்சிப்போமே, அவங்க ஆடின ஆட்டம் இருக்கே அதை என்னாலேயே மறக்க முடியாதுன்னா பாத்துக்குங்களேன். ஏன்னா, அவர் கொண்டு வந்த ஐடம்ஸ் ஒண்ணு கூட ரோஜா அம்மா எழுதிக்கொடுத்தது கிடையாது. வேறே யாரோ வாங்கின ஐடங்களா இருக்கு, டாய்லட் பேப்பர், சானிடரி நாப்கின், பேஸ் பௌடர் இப்படி இவருக்கு சம்பந்தமில்லாத இவர்வொய்ஃப் எழுதித்தராத விஷயங்கள் அத்தனையும்.

உடனே மேடம் அதை எல்லாம் கொண்டுபோய் கடையிலே திருப்பிக்கொடுத்துட்டு வரச்சொல்ல, வேறே வழியில்லாம லொங்கு லொங்குன்னு மறுபடியும் கடைக்குக்கொண்டு போய் ரிடர்ன் பண்ண அந்த மார்க்கெட்சேல்ஸ் மேனேஜர் இவரைக் காய்ச்சு காய்ச்சுன்னு காச்சி,
“நீங்க பாட்ட யாரோ எடுத்து வெச்சிருந்த சாமான்கள் டிராலியை எல்லாம் எடுத்துட்டுப் போயிட்டீங்கன்னு சொன்னா பரவா இல்லையே, கடத்திகிட்டு போயிட்டீங்க”ன்னு ஒரு குண்டைத்தூக்கி இவர் தலையில் போட்டார், பிறகு தொடர்ந்து “ . அந்த கஸ்டமர் அவரோட ட்ராலியைத்தேடோ தேடுன்னு தேடி மறுபடியும் அவருக்கு வேண்டியதை எல்லாம் பொறுக்கிப்போட்டுக்கிட்டு, “எந்த யூஸ்லெஸ் ஃபெலோவோ நான் முக்கால்மணிநேரமா தேடித்தேடி எடுத்து வெச்சிருந்த என் ட்ராலி சாமானையும் தூக்கிக்கிட்டு போயிட்டானே. இதனாலே எனக்கு எவ்வளவு டைம் வேஸ்ட் ஆயிட்டுது தெரியுமா”ன்னு உங்களை அரைமணி நேரம் திட்டித்தீர்த்தார். அவர் ஒரு கம்பெனி மானேஜராம். அவர் கம்பெனியிலே யாராவது கொஞ்சம் லேட்டா வந்தா கூட அவர் லேடஸ்ட் துர்வாசரா மாறிடுவாராம். அப்படி ஒரு டைம்கான்சியஸ் அதிகாரி அவர். அவரோட ப்ரஷஸ் டைம் வேஸ்ட் ஆச்சுன்னா விட்டுடுவாரா? அவர் சூப்பர் மார்க்கெட் மானேஜரை காச்சு காச்சுன்னு காச்சி நஷ்ட ஈடு வழக்கு போடப்போறதாக மிரட்டிட்டுப் போறார்.

“தென்ன மரத்துலே தேள் கொட்டினா பனமரத்துக்கு நெறி ஏறுற சமாச்சாரமா, நீங்க செஞ்ச தப்புக்கு நான் பதில் சொல்ல வேண்டியதா ஆயிட்டுது. ஏன்சார் நீங்க கவனமா பாத்து உங்க பொருள்களை எடுத்துட்டுப் போகமாட்டீங்களா? உங்களாலே அந்த கஸ்டமருக்கு எவ்வளவு கஷ்டம், ஏன் சார் இப்படி செய்யறீங்க? அவர் வழக்குப்போட்டு கோர்ட் நஷ்ட ஈடு கட்டணும்னு தீர்ப்பு கொடுத்ததுன்னாஅந்த நஷ்ட ஈட்டை நீங்கதான் தரணும்” என்று அவர் கத்த, அப்போது அங்கு வந்தவர் ஒருவர்
“சார், இவர் ஆர்ட்ஸ்காலேஜுலே புரபசர். அவருக்கு ஞாபக மறதி ஜாஸ்தி. அவரை மன்னிச்சுடுங்க” என்று சொல்லி அவருக்கு சப்போர்டுக்கு வரவே மேனேஜரும்
“ “சாரி. சார் இவர் புரபசரா? அது தெரியாம பேசிட்டேன். மன்னிச்சுடுங்க. இருந்தாலும் இன்னொரு கஸ்டமருக்கு சங்கடம் வரக்கூடாதில்லையா? புரொபசர்னாலே இப்படித்தான் இருப்பாங்களா? ” என்று எங்கேயோ அக்கடான்னு இருக்கிற அத்தனை புரொபசர்களையும் சதாய்ச்சார்.

அவருக்குத்தெரியல்லே. இந்த மாதிரி சில புரொபசர்கள் ரோடுலே நடந்து போய்க்கிட்டு இருக்கும்போதே ஸ்டூடன்ட கேட்ட கேள்விக்கு என்ன பதில சொல்லலாங்கிறதை எதிரிலை வர பஸ்ஸைக்கூடக் கவனிக்காம யோசிச்சிக்கிட்டு இருக்கும்போது அந்த பஸ் டிரைவர் “சாவு கிராக்கி. உன் உசிர விட வேறு இடம் கெட்க்கலையா?”ன்னு திட்டறவரையிலும் போய்க்கிட்டே இருப்பாங்க டிரைவர் சொன்னதை காதுலே வாங்கிக்காமலே.
புரபசரும் தனக்காகப்பரிந்து பேசியவரிடம்
“ ரொம்ப தேங்ஸ், உங்களை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே” என்று சொல்ல, அந்த மனிதர்
“ நான்தான் பத்து வருஷமா உங்க பக்கத்துவீட்டுலே இருக்கிற பரசுராமன்” என்றார்.
மேனேஜரும் விஷயத்தைப புரிந்துகொண்டு
“சரி சார், இனி மேலாவது கொஞ்சம்ஜாக்கிரதையா இருங்க சார். எதுக்கும் உங்க மறதிக்கு நீங்க ஒரு நல்ல டாக்டரைப் பாருங்க” என்று சொல்லி, அவரை அனுப்பினார்.

இவரைப் பற்றித்தெரிந்தவர் சொன்ன விஷயங்களைக்கேட்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள் .
ஒருநாள் இவர் புரபசர் ஆறதுக்குமுன்னாடியே இவர் பையன் LKG படிக்கும் போது அவனை ஸ்கூலிலிருந்து இவர் போய் அழைத்து வரவேண்டி இருந்தது. அப்போது இவர் ஸ்கூலுக்குப்போய் அங்கிருந்த ஒரு பையனைத் தூக்க, அவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண, “கட்டாயம் இவ்வளவு ஆர்பாட்டம் பண்றவன் என்பையனாகத்தான் இருக்கணும்”னு உறுதியா தீர்மானிச்சி , அவனை அப்படியே ஆட்டோவில் அலாக்காக தூக்கி போட்டு வீட்டிற்கு தூக்கி வந்தார். அவன் வீட்டுக்குள் வராமல் அடம்பிடித்து அழ, அங்கு வந்த அவர்மனைவியிடம் இவர் கம்ப்ளெயிண்ட் செய்தார்.

“நீ வளத்தது சரியா இல்லே. இவன் ஏன் இப்படி அடம் பிடிக்கிறான்னே தெரியல்லே. அப்பவே பிடிச்சி ஒரே அழுகையா அழுது அடம் பிடிச்சி வரமாட்டேன்னு கத்திகிட்டு இருக்கான். ரெண்டு வெச்சேன்” என்றார்.
அவர் மனைவியோ “ என்னங்க நீங்க யார் குழந்தையையோ கடத்திக்கிட்டு வந்துட்டதும் இல்லாம அந்தக்குழந்தையை அடிச்சி வேறே அடிச்சி இருக்கீங்க. இவன்நம்ம பையனே இல்லை. இந்த லட்சணத்துலே நான் வளத்தது சரியா இல்லேன்னு எங்கிட்டேயே புகார்வேறே. இந்த குழந்தையோட அப்பா, அம்மாவுக்கு நீங்க அடிச்சது மாத்திரம் தெரிஞ்சா பெரிய ரகளையாயிடும்” என்று சொல்லி
“சரி நீங்கள் இவனை அழாமல்(!) பார்த்துக்கொள்ளுங்கள். முதல்லே நம்ம பையன் ஸ்கூல்லே எனக்காக காத்து காத்து, நான் வராம அழுதிட்டு இருப்பான். நான் உடனே ஸ்கூலுக்குப்போய் அவனை அழைச்சுகிட்டு வரேன்”
என்று ஸ்கூலுக்குப்போய் ரொம்ப நேரமாக அழுதுகொண்டிருந்த தன்மகனை சமாதானப்படுத்த, ஸ்கூல் வாட்ச்மேன்
“ஏம்மா இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க. பாவம். உங்க பையன் துடியா துடிச்சிப்போயிட்டான். இனிமேல் இவ்வளவு டிலே பண்ணாம காலாகாலத்துலே வந்து அழச்சுட்டுப்போங்க” என்ற அவன் அட்வைசை கேட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து ஓவென்று அலறிக் கொண்டிருந்த அப்பா கண்காணிப்பில இருந்த அந்த இன்னொரு வீட்டுப் பையனிடம் சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்தி விவரம் கேட்டு “ வீட்டிலே சொல்லாதே. அவர் அடிச்சதா. அப்படின்னா, உனக்கு நான் ரெண்டு கேட்பரீஸ் சாக்லேட் வாங்கித்தருவேன்னு சொன்னதுதான்தாமதம, கையிலே நாறு ரூபாய் திணிக்கப்பட்ட ஆபீஸ் பாய்போல அவன் அடங்கிட்டான், ஒரு விதமாக அவன்சமாதானம் ஆக அவனை அவன் ஒரிஜினல் அம்மாவிடம் இந்த டூப்ளிகேட் அம்மா ஒப்படைத்தாள்.

வீட்டுக்கு வந்து “உங்க கிட்டே சொன்ன பாவத்துக்கு ஒருவேலைக்கு எனக்கு ரெண்டு வேலையா வெச்சுட்டீங்க. பாவம். உங்க கிட்டே படிக்கிற பசங்க”.என்று பரிதாபப்பட்ட அனுபவத்தை அந்தத்தெருவே மறந்து இருக்காது.

ஒரு நாள் இவர் மறந்துபோய்தன் காலேஜூக்குப்போறதுக்குப்பதிலா வேறே காலேஜுக்குப்போய் எல்லாம் மாறி இருக்கே என்று பேந்தப்பேந்த விழித்தார். அங்கே ஒரு லேடி இவரைப்பார்த்து என்ன வேண்டும் என்று கேட்க இவர் “என்ன காலேஜே ரொம்பவும் மாறிப்போச்சே?” என்று நிற்க, அதற்குள் இவருக்குத் தெரிந்த வேறு ஒரு லேடி இவரைப்பார்த்து “சார், எங்கே இந்தக் காலேஜுக்கு வந்தீங்க?” என்று கேட்க
“இவர் இது எந்தக்காலேஜ்” என்று விசாரித்தார்.
“இது விமன்ஸ் ஆர்ட்ஸ் காலேஜ்” என்று அந்த அம்மையார் சொல்ல
“சாரி, சாரி” என்று அசடு வழிய இது தன் மனைவிக்குத்தெரிஞ்சா கடுகு சாதம்தான் இன்னிக்குக்கிடைக்கும்னு மனசுக்குள்ளே நெனச்சுகிட்டு தன்காலேஜைத் தேடிக்கிட்டு கிளம்பினார்.


இவர்காலேஜூலேயே ஒரு நாள் இவர் தப்பான கிளாசுக்குள் நுழஞ்சி ட்ரிகனாமெட்ரி டீச் பண்ண ஆரம்பிக்க, அங்கிருந்த மாணவர்களெல்லாம் “சார் இப்ப எங்களுக்கு இங்கிலீஷ் கிளாஸ் சார்” என கோரசாக சொல்ல இவருக்கு நிலைமை புரிய கொஞ்ச நேரம் ஆச்சு. அதனாலென்ன? டுரிகினாமெட்ரியையும் இங்கிலீஷ்லே தானே டீச் பண்ணப் போறேன் என்று மேடையிலே நிக்க, மாணவர்கள் பரீட்சையன்று முழிப்பதைப்போல என்ன செய்வதென்று தெரியாமல் திரு திரு வென்று முழிக்க, நல்லவேளையாக அந்த இங்கிலீஷ் லெக்சரர் வந்துவிடவே, மாணவர்,இங்கிலீஷ், ட்ரிகனோமெட்ரி எல்லாம் தப்பியது. “ஐ ஆம் சாரின்னு” சொல்லி அடுத்த ரூமுக்குப்போய் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார். தர்மத்தின்தலைவன் ரஜினி ஞாபக மறதி ஆசிரியரா நடிப்பார் பாருங்க, அவர்கூட இவரைப்பார்த்துத்தான் நடிக்கக்கத்துக்கிட்டாரோ என்னவோ?

ஒரு சமயம் இவர் நண்பரைப் பார்க்க சைதாப்பேட்ட போனவர் அவருடைய நண்பனின் அட்ரஸை எங்கேயோ கோட்டை விட்டு விட்டார். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. நண்பனின் போன் நம்பரும் அட்ரஸோடு காணாமற் போய்விட்டது. எப்படித்தான் அவனைக்கண்டுபிடிப்பது? காரணீசுவரர் கோயில் அருகில் வீடு என்று நண்பன் சொன்ன ஞாபகம். அங்கே போனால் முதல் தெருவா, ரெண்டாவது தெருவா என்று யாரைப்பார்த்தாலும் கேட்கிறார்கள். சரி என்று அந்தக் கோவிலைச் சுற்றியிருந்த அத்தனை தெருக்களிலும் இருந்த அத்தனை வீடுகளிலும் வீடு வீடாய் ஏறி இறங்கி விசாரிக்க ஆரம்பித்தார். “வீட்டு நம்பர் சொல்லுங்க” என்று பார்த்தவர்கள் எல்லோரும் சொன்னார்களே ஒழிய யாரும் வேறு எந்தத்தகவலையும் தரவில்லை.

இவர் வீடுவீடாக ஏறி இறங்குவதைக்கவனித்த ஒரு அந்த ஏரியா உண்மை விளம்பி இதற்கு வழக்கம்போல் கண்காது மூக்கு எல்லாம் வைத்து தனக்குத்தெரிந்தவர்களிடமெல்லாம் ஒரு இன்கம் டாக்ஸ் ஆபீசர் ரகசியமாக வீடு வீடா ஏறி ஏதோ தகவல் தயாரிக்கிறார். “இந்த ஏரியாவிலே யாரோ கள்ளப்பணம் அடிப்பதாக புகார் வந்ததாம். ஜாக்கிரதை” என்று கிளப்பி விட்டார். எனவே பல வீடுகள் இவர் வருகையைப்பார்த்து கதவை மூடிக்கொண்டன. கதவைத்தட்டிப் பார்த்தும் திறப்பாரில்லை. இவர் நல்ல நேரம் அந்த நேரம் பார்த்து இவர் நண்பர் இவரை எதிர்பாராத விதமாக பார்த்து தன்வீட்டிற்குக் கூப்பிட்டுக் கொண்டு போனாரோ இவர் தப்பினார். அந்தத் தெருவில் இருந்த மற்றவர்களும் தப்பினார்கள்.

ஒருநாள் இவர் காலேஜில் தன்தனி அறையில் இருந்த போது இவருக்குக்கீழ் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவருடன் பாட சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தார். ஒரு கால்மணி நேரம்ஆனது. அவர் அறைக்கதவை யாரோ மெல்லத்தட்டினார்கள். இவர் அசைந்து கொடுக்கவில்லை. கதவைத்தட்டியவர் கதவை இலேசாக திறந்து பார்த்து மறுபடியும் மூடினார். புரபசர் இதை்க் கவனித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. மறுபடியும் கதவை லேசாகத் திறந்து பார்த்து வெளியே இருந்தவர் மூடினார். இப்படி நாலைந்து தரம் அவர் செய்தும் புரபசர் கண்டு கொள்ளவே இல்லை. “யாரோ ஒருவர் உங்களைப்பார்க்க விரும்புகிறார் போலும், இதுவரையில் மூன்று நான்கு முறை கதவைத்திறதந்து மூடி இருக்கிறார்கள்” என்று அங்கிருந்த ஆசிரியர் சொல்லவும், புரபசரோ “ வெயிட் பண்ணட்டும். “ஆபீஸ் நேரத்துலே யார், வந்து நம்மை இப்படி டிஸ்டர்ப் பண்றது?” என்று சொன்னார். இப்படி அரை மணிக்குமேலாக இது தொடர்ந்தது. வந்தவரும் பொறுமை இழந்து கதவை பெரிதாகத்திறந்து “ சாரி ஃபார் டிஸ்டர்பிங் யூ” என்ற படியே உள்ளே நுழைந்தார்

புரொபசர் மகாதேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. “அடேடே, வாங்க மாமா, வாங்க மாமா, நீங்களா இத்தனை நேரமும் வெளியிலே காத்திருந்தது. நீங்க உடனே உள்ளே வந்திருக்கலாமே “ என்று அவரை உள்ளே கூப்பிட்டு அவரை ஒரு சேரில் உக்காரச்சொல்லி “ சாரி அங்கிள், சாரி” என்று அந்த சாரியை அரை டஜன் தடவை சொல்லி அவரை உட்கார வைத்துவிட்டு புறப்பட இருந்த பேசிக்கொண்டிருந்த ஆசிரியரையும்( அதாவது என்னையும்) உட்காரச்சொல்லி அவரிடம்” இவர்தான் என் அங்கிள்” என்று இன்ட்ரொட்யூஸ் பண்ணினார். வந்த அங்கிளும் நெளி நெளிந்து என்னவோ சொல்ல வந்தார். ஆனால் நம்ம பரொபசர் அவரை பேசவிடவில்லை.
புரபசர் “ நான் அங்கிளைப் பார்த்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதனால் சட்டென்று அடையாளம் தெரியவில்லை” என்று கூறி மறுபடியும் “சாரி, சாரி” என்று கூற, வந்த அங்கிள் சும்மா இருக்கக்கூடாதா?
”. என்பையன் அட்மிஷன் விஷயமாக உங்களைப்பார்க்கலாம் என்று வந்தேன்” என்றார்“ “என்ன அங்கிள்? . உங்களுக்குக்காலேஜுலே படிக்கிற வயசுலே பையன் இருக்கிறானா? எனக்குத்தெரியாதே. .நம்ம சொந்தக்காரங்க யாரும் இதை இதுவரையில் என்னிடம் இதை சொல்லவில்லையே. ஆமாம் பெரிய அங்கிள் ராமசாமி போன மாசம் தவறிட்டதாக கேள்விப்பட்டேன். இங்கே அட்மிஷன் டயம் ஆனதால் என்னால் போகமுடியலை.” என்றுசொன்னார். அதற்கு அந்த அங்கிள் உடலை நெளித்து முகத்தை சுளித்து பரிதாபமாக “ நான் உங்க அங்கிள் இல்லை” என்று சொல்லவே புரொபசர் முகம் ஒரு மாதிரி ஆகி எதிரில் இருந்த என்னிடம் “ நான் என் அங்கிளைப்பார்த்து பத்து வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. அதனால் அவர் முகம் மறந்து விட்டது. ஆனால் இவர் என் அங்கிள் ஜாடையிலேயே இருக்கார்” என்று ஒரு விதமாக சமாளிக்க,நானும, “சரி நீங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருங்கள். நான் புறப்படுகிறேன்” என்று வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்தேன்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இவர் நண்பர்கள் இவரை ஒரு ஞாபக மறதியைப் போக்க நல்ல டாக்டராகப் பார்க்கச்சொன்னார்கள். இவர் மனைவியோ
“நானும் இதை எத்தனை நாளாக உங்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீங்க கேக்க மாட்டேங்கிறீங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் இத்தனை பேரும் சொன்ன பிறகாவது நீங்க நல்ல டாக்டராப்போய்ப்பாருங்க.” என்றார்.


இவர் டாக்டர்ரைப் பார்ப்பது என்று தீர்மானித்து அடுத்த தெருவில் இருந்த ஒரு பாலிகிளினிக்கில் டாக்டரைப் பார்க்கப்போனார். அங்கு வெகு நேரம் காத்திருந்து இவர் டர்ன் வரவே டாக்டரின் சேம்பருக்குள் நுழைந்தார்.
“என்ன உங்க ப்ராப்ளம்?” என்று கேட்டார் டாக்டர்
எந்த ப்ராப்ளம்? என்றார் இவர் கணக்கு புரொபசர் ஆனதால்.
உங்களுக்கு என்ன கோளாறு? என்று கேட்டார் டாக்டர்.
என்று கொஞ்சம் யோசித்து “டாக்டர் எனக்கு எனக்கு எனக்கு என்ன கோளாறு? என்றார் புரொபசர்
“எதற்காக என்னைப் பாக்க வந்தீங்க? “
“ஓ! அதுவா, அது என்ன சொல்வாங்க, ஊம், ஞாபக மறதி ஜாஸ்தி”
அதுக்கு நீங்க டாக்டர் ரமணனைப்பாக்கணும். நான் ENT ஸ்பெஷலிஸ்டு. அடுத்த சேம்பர்லே அவர் இருக்கார் அவரைப் போய்ப்பாருங்க என்றார்.

மறுபடியும் அந்த சேம்பரில் அரை மணி நேரத்துக்குமேல் வெயிட்டிங். பிறகு
டாக்டர் ரமணனைப்பார்த்தார். அவர் அவருடைய நாடி, இதயத்துடிப்பு, BP எல்லாவற்றையும் செக் செய்து விட்டு உங்கள் தலையில் பலமாக அடி கிடி ஏதாவது பட்டதா என்று கேட்டார். ஞாபகம் இல்லை என்றார். கூட யார் வந்திருக்கிறார்கள்? என்றார். யாரும் இல்லை என்றவுடன் “நீங்கள் கல்யாணம் ஆனவர்தானே”. என்றார். ஆமாம் என்றார் புரொபசர். “இதையாவது மறக்காமல் இருக்கீங்களே. அப்படியானால் உங்க வொய்ஃபை கூட்டிக்கிட்டு வாங்க நாளைக்கு” என்றார்.

மறுநாள் புரொபசர் தன் மனைவியுடன் வந்தார்.
டாக்டர்சார், இவருக்கு ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தியாப்போச்சு. பெரிய காம்ப்ளிகேட்ட் ஈக்வேஷனை எல்லாம் ஞாபகம்பிசகாம சொல்ற இவர் என்பர்த் டேயை இந்தப்பத்து வருஷத்துலே ஒரு நாளாவது ஞாபகம் வச்சிருப்பாரா? கிடையாது

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மறக்கறதுலே இவரை அடிச்சிக்க ஆளே கிடையாது. அதே பத்து வருஷத்துக்கு முன்னே செத்த இவர் பிரண்டுக்கு, வருஷா வருஷம் பிறந்த நாள் வாழ்த்து சொல்றதை மறக்கிறதே கிடையாது, எவ்வளவு சொன்னாலும் எனக்கு ஞாபகம் இருக்கு என்பார்.

மூக்குக்கண்ணாடியை தலைக்குமேலே தூக்கி வச்சிக்கிட்டு மூக்குக்கண்ணடியைத் தேடறது பழைய ஜோக். இவர் கண்ணாடியை சரியாப்போட்டுக்கிட்டே அதைத்தேடிக்கிட்டு இருப்பாரு. நல்ல வேளையா ரஜினி தர்மத்தின் தலைவன்லே செஞ்ச மாதிரி வேறே எந்த வீட்டுலேயும் இவர் இது வரையிலும் நுழையல்லேன்னு நெனக்கிறேன்.

மாடிப்படியிலே ஏறும்போது பாதி வழியிலே சந்தேகம் வந்து தான் ஏறறேனா இல்லை இறங்கறேனான்னு சந்தேகம் வந்துடும். வேகவேகமா வருவார் என்னன்னு கேட்டா இப்ப நான் எதுக்காக இங்கே வந்தேன்னு என்னையே திரும்பிக் கேப்பார்.
ஒரு கல்யாணத்துக்குப் போய் அங்கே அந்த மண்டபத்துலே யாரும் இல்லாத போது அங்கிருந்த வாட்ச்மேனை விசாரிச்சா அவர் விசாரிச்ச அந்த கல்யாணம் நேத்தே நடந்து முடிஞ்சி போச்சுன்னு சொன்னார்.

இன்னொரு சமயம் எங்க சொந்தக்காரப்பையன் கல்யாணத்துக்குப்போறேன்னு சொல்லி பையனோட பேரையும் பெண்ணோட பேரையும் மறந்து போய், வேறு ஒரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணி அங்கே பிரேக்.ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு பையனுக்கு ஓதியிட்டுட்டு வெளியே வந்த பத்திரிகையைப் பார்த்த பிற்பாடுதான் தான் வேறே ஒரு அழைக்காத கல்யாணத்துக்குப் போனது தெரிஞ்சது. இப்படி ஒண்ணா ரெண்டா,
ஏதாவது நல்ல மருந்தாக கொடுங்க டாக்டர். என்றார். அவர் மனைவிக்கு அவர் கவலை. டாக்டரும் அவருடைய ஸ்கேன் ரிப்போர்டைப் பாரத்து விட்டு “இவருக்குத் தலையில் எதுவுமில்லை..”
“என்ன டாக்டர் சொல்றீங்க?”
“பிரச்சினை எதுவுமில்லைன்னு சொல்ல வந்தேன்”.
ஆயுர்வேதத்துலே இதுக்கு வல்லாரை சாப்பிட்டா ஞாபக சக்திக்கு நல்லதுன்னு சொல்றாங்களே.
“எனக்கு அதுபத்தி எதுவும் தெரியாது. நீங்க நான் கொடுக்கிற மருந்து மாத்திரையோட நீங்க அதை டிரை பண்றதனாலே பிராப்ளம் எதுவும் வராது. நான் கொடுக்கிற மருந்து மாத்தரைகளை தவிர யோகாசனம், த்யானம் எல்லாம் கூடவே செஞ்சிட்டு வந்தா பலன் கிடைக்கும்.நீங்க எவ்வளவு நம்பிக்கையோட செஞ்சிகிட்டு வரீங்கங்கறதைப் பொறுத்து இருக்கு இம்ப்ரூவ்மெண்ட்” என்றார்.
அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு இருவரும் புறப்பட்டனர். அவரை அவர் மனைவி மறக்காமல் மருந்து மாத்திரைகளை சாப்பிட வைக்க அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.

இவர் ஞாபக மறதிக்காக ஒரு டாக்டரைப் பார்த்த விஷயம் அவருடைய நண்பர்கள் எல்லோருக்கும்தெரிந்தது.
ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வந்தார். வந்தவர் தானும் தன் அப்பாவின் ஞாபக மறதிக்கு ஒரு டாக்டரிடம் தன் அப்பாவை அழைத்துச் செல்லலாம என்றிருந்தார். அதைப்பற்றித்தெரிந்து கொள்ளவே இந்த புரொபசரைப்பார்க்க வந்தார். “என்ன மகாதேவன், நீங்க இப்ப ஒரு டாக்டரை உங்க ஞாபக மறதிக்காக பார்க்கப்போனீங்கன்னு கேள்விப்பட்டேன். எங்க அப்பாவின் ஞாபகமறதியால் நாங்க படற அவஸ்தை சொல்லி முடியாது. ஒருநாள் அவர் ரோட்டிலை ஒரு ஓல்ட் பிரண்டைமீட் பண்ணி ஒரே சிரிப்பும் சந்தோஷமுமா ஒருத்தரை ஒருத்தர் ஹக் பண்ணிக்கிட்டு தங்களோட ஸ்கூல்டேஸ், காலேஜ் டேஸைப் பத்தி எல்லாம் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் பேசிட்டு
“சேஷூ, உன்னை இத்னை வருஷம் கழிச்சி மீட் பண்ணினதில் ரொம்ப சந்தோஷம்”னு சொல்லி கிளம்பும்போது “ என்னடா கோகுல்? என் பேரையே மாத்திட்டயேடா” என்று அவர்சொல்ல,இவர் “என்பேர் ராகவ்” என்று சொல்ல மறு விசாரணை ஆரம்பம் ஆச்சுன்னா இன்னுக்கு இந்த விவகாரம் முடியாதுன்னு, என் அப்பாவை அவரோட பிரண்ட் கிட்டே இருந்து பிரிச்சி வீட்டுக்குக கூட்டிககிட்டு போறதுக்குள்ளே நான் பட்ட பாடு ஒரு நாய்கூட பட்டு இருக்காது. போதும் போதும்னு ஆயிட்டுது.

அதனாலே இவர் ஞாபக மறதிக்கு ஏதான உடனடியா செய்யல்லேன்னா இது எங்கே போய் முடியுமோன்னு பயந்துகிட்டு உங்களைப்பாக்க வந்தேன். அவரை உங்க டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப்போகலாம்னு இருக்கேன்.அது சம்பந்தமாத்தான் நான் உங்களைப்பார்க்க வந்தேன்.
“அப்படியா? சந்தோஷம். என்ன வேணும்உங்களுக்கு?”
“நீங்க போய்ப் பாத்தீங்களே அந்த டாக்டர் பேரும் அட்ரஸும் வேணும்”.
“டாக்டர் பேரும், அட்ரசுமா?”
யோசிக்கிறார், யோசிக்கிறார். யோசித்துக் கொண்டே இருக்கிறார்.
“அந்த டாக்டர் பேரு ரனாவுலே ஆரம்பிக்கும்”
“ரனாவா ராவன்னாவா?”
“இதுவோ, அதுவோதான்”.
“ஒரு செடி, அதுலே கூட முள்ளு நிறைய இருக்குமே?”
“கருவேலஞ்செடியா?”
“இல்லே. அதோட பூகூட செகப்பா இருக்கும், நல்ல வாசனையாவும் இருக்குமே”
“ரோஜாவா? ”
“ஆம் அதேதான். ரோஜா. ரோஜா”
“யாரு இந்த ரோஜா?”
“அவ என் ஒய்ப்தான்”
அவர்உள்ளிருந்து வருகிறார். “என்பேர்சரோஜா. பேர்நீளமா இருக்குன்னு இவர் ஃபீல் பண்ணி அதை சுருக்கி ரோஜான்னு கூப்பிடுவார்.அதையும் சில சமயம் மறந்து உன்னைத்தானேன்னு கத்துவார். அடியேன்னு எல்லாம் கூப்பிட மாட்டார். சரி எதுக்கு என்னை இப்ப கூப்பிட்டீங்க?”
“நான் உன்னைக்கூப்பிட்டேனா?”
“என்ன சார்? இப்பத்தான் கூப்பிட்டீங்க ரோஜான்னு, அதுக்குள்ளே மறந்துட்டீங்களா?”
“இல்லை. இல்லை. இவளை எதுக்குக் கூப்பிட்டேன்?”.
“நான் நீங்க போன டாக்டர் பேரைக்கேட்டேன். அப்பத்தான் இவரைக்கூப்பிட்டீங்க.”
“இப்ப ஞாபகம் வந்துடுத்து. என்ன ரோஜா நாம் அன்னிக்கு ஒரு டாக்டர் கிட்டே போனோமே நம்ம ஞாபக மறதிக்கு”
“உங்க ஞாபக மறதிக்கு”
“அதுக்குத்தான். அந்த டாக்டர் பேர் , அட்ரஸ் இவங்க கேக்கறாங்க”.
“அதுவா?”, என்று டாக்டர்பேரும் அட்ரசும் கொடுக்கிறார் ரோஜா.
“என்ன இவர் ஞாபக சக்தியே இம்ப்ரூவ் ஆகல்லே போல இருக்கே.டாக்டர் சுமார்தானா?”
“இப்பத்தானே ஒரு வாரம் ஆயிருக்கு. போகப்போக இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்னு டாக்டர் சொல்லி இருக்கார். ஆனால் இவர் மருந்து சாப்பிடறதை மறந்தது மாத்திரம் இல்லே. டாக்டர் சொன்ன மத்த விஷயங்களையும் பண்றதே இல்லை.மறந்துடறார்” .
“என்ன விஷயம் நான் பண்றதே இல்லை?”.
“அதான், யோகாசனம், தியானம்.”
“டாக்டர் எப்ப சொன்னார்?”
“இவராலே எனக்கே இப்ப ஞாபக மறதி ஜாஸ்தி ஆயிட்டுது”.
“சரி. நான் நம்பிக்கையோட வந்தேன்”.
“இவரை வெச்சி நீங்க அந்த டாக்டரை எடை போடாதீங்க.”
“சரி நான் போயிட்டு வரேன்”( புறப்படுகிறார்)
அவர் போனவுடன்
“இப்ப வந்துட்டுப்போறவர் உங்க ஃப்ரெண்டுன்னாரே?”
“இருக்கலாம். எங்கேயோ பாத்து இருக்கேன்”.
“அவர்பேர் என்ன? “
“நானும் அவன் வந்த நேரத்துலே இருந்து அதைத்தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். மறந்து போச்சு”
“ஐயையோ. நான் பாலை எரியற ஸ்டவ்மேலே வெச்சிட்டு நீங்க கூப்பிட்டீங்கன்னு வந்தேன். பால்பூராவும் பொங்கி அடுப்புலே போற தீஞ்ச வாசனை. உங்களோட பேசினா எனக்கும் உங்க ஞாபக மறதி ஒட்டினுட்டுதுன்னு நெனக்கிறேன்.”


ஒருநாள் பக்கத்து வீட்டுப் பரசுராமன் ஆபீஸிலிருந்து தன்வீடு திரும்பிய உடன் மறதி மகாதேவன் தன் வீட்டு வாசற்படியில் அமர்ந்துகொண்டு திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருப்பதைப்பார்த்தார்.
என்னவென்று விசாரிக்க இவர் வீட்டு லாக் நம்பரை மறந்து விட்டதாகவும் கதவை எப்படி திறப்பது என்று தெரியாமல் தவிப்பதாகவும் இவர் மனைவி தன் அம்மா ஊருக்குப் போயிருப்பதாகவும் அவளும் வீட்டு லாக் நம்பரை கிச்சன் அஞ்சறைப்பெட்டியில் பத்திரமாக வைத்து இருப்பதாகவும் அதை அவரிடம் கொடுக்க மறந்து விட்டதாகவும் போனில் சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த கதையை சொல்லி முடித்தார். பிறகு மனைவி வரும் வரையில் தன் நண்பர்வீட்டில் தங்கி இருப்பதாக ப்ளான் பண்ணினார்..
பிறகு மனைவி வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற நிலையில் அவ்வளவு நாட்கள் தங்கி தன் நண்பனின் நட்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் மறுநாள் பூட்டை உடைப்பதில் கெட்டிக்காரனான முத்துவைக் கூப்பிட்டு உடைத்ததில் கதவு டேமேஜ் ஆகிவிட, வேறு புது கதவு போடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முத்துவின் கூலி நூறு ரூபாய்உட்பட புதுக்கதவை செய்து பொருத்த 1765 ரூபாய் சொச்சம்செலவாகவே ரோ்ஜா போனில் எனக்கு 100 ரூபாய்செலவு செய்ய நூறு கணக்குப்பார்ப்பீர்களே இப்ப உங்க மறதியாலே எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டு விட்டது பார்த்தீர்களா என்று தன் ஞாபக மறதியை மறைத்து இவரை கேட்க இவர் அந்தக் கதவு உடைந்தது போல் மனம் உடைந்து போனார்,

இவர் மறதியைப்பத்தி எழுத ஆரம்பிச்சா அது மகாபாரதம் மாதிரி போய்க்கிட்டே இருக்கும் நாம எல்லோருமேே மறதி மன்னர்களாக இல்லாவிட்டாலும் மறதிக்குடிமகன்கள்தான். குடிமகன் எற்றால் நான் அந்தக குடிமகன்களைப் பத்தி சொல்லல்லே.

இதற்கு இடையில் மறதி மகா தேவன் வயதான காலத்தில் அனாவசிய நடை குறைக்க இது வசதியாக இருக்குமே என்று கார் வாங்கினார், மனைவியின் முழுச்சம்மத,த்துடன். அவர் மனைவிக்கும் டிரைவிங் கற்றுக்கொடுத்தார்.ஒரு நாள் இவர் ஒரு மாலுக்குப் போனார். அங்கு அவர் மனைவி எழுதிக்கொடுத்த லிஸ்ட் பிரகாரம் பொருட்களை வாங்கிக்கொண்டு தான் கார் பார்க் செய்த இடத்துக்கு வந்தார்.

வந்தவர் அதிர்ச்சி அடைந்தார், தன் காரைக்காணவில்லை. இவர் காரைப் பார்க் செய்யும்போது காரின்கீயை காரின் இஞ்சினிலேயே விட்டு விடுவது வழக்கம். இதை அவர் மனைவி பல முறை கண்டித்தும் இவர்தான் மறதி மகாதேவன் ஆயிற்றே, காரிலேயே சாவியை விட்டுவிடுவதை வழக்கமாக க்கொண்டார். . எனவே இன்றைக்கும் அப்படித்தான் காரிலேயே காரின் சாவியை விட்டு விட்டபடியால் தன் காரை யாரோ அபேஸ் பண்ணி இருக்க வேண்டும். இது தன் மனைவிக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவாள் என்று உடனடியாக போலீசுக்கு புகார் செய்து விட்டார்.
எதற்கும் தான் வீட்டுக்கு வர தாமதமாகும் என்பதால் தைரியத்தை வரவழைத்துக கொண்டு தன் மனைவியை போனில் கூப்பிட்டு “ ஹலோ, கமலா நான் தான் பேசுகிறேன்” என்று சொல்ல அது மறதி மகாதேவனிடமிருந்து வரும் போன்தான் என்பதை அறிந்து கொண்டு
“:நான்தான் ரோஜா பேசறேன். அதுக்குள்ளே என் பேர் மறந்து போச்சா?” என “ சரி அதை விடு. அதைவிட முக்கிய சமாசாரம். என்காரை இங்கே மாலில் பார்க் செஞ்சு வெச்சிருந்தேன். எவனோ திருட்டுப்பய காரை லவட்டிக்கிட்டு போயிட்டான். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து இருக்கேன்” என்றார்,
“என்னங்க இப்படிப்பண்ணிட்டீங்க?. இன்னிக்கு நான்தானே கார் டிரைவ் பண்ணி அந்த மால்லே உங்களை இறக்கிவிட்டு உடனே காரை எடுத்துக்கிட்டு வீட்டுக்குக்கிளம்பிட்டேன். இருங்க ஒரு நிமிஷம் லைன்லேயே இங்கே காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்குது என்று சொல்லி அந்த அம்மா கதவைத்தட்டுயது யார் என்று பார்க்க கதவைத் திறந்தபோது இரு ்போலீஸ்கார்ர்கள் நின்று கொண்டி இருந்தனர்.

இவர் என்ன என்று கேட்க.
“இங்க வாசல்லே நிக்கறதே அது யார் காருன்னு கேட்க,
“ஏன் எங்களது தான்” என்று சொல்ல ,
“இந்தக்கார் எப்படி இங்கே வந்தது?” என்று கேட்க,
“நான்தான் ஓட்டி வந்தேன்” என்றார்
“எங்களுக்கு ஒரு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு இந்தக கார் திருட்டுப் போயிட்டதாக. கம்ப்ளேயிண்ட் பண்ணினவர்பேர் prof மகாதேவன் . காரை நீஙகதான் அந்த மாலில் இருந்து ஓட்டி வந்ததாக சொல்றீங்க. எனவே உங்களை நாங்க அரெஸ்டு பண்ண வேண்டி இருக்கும்” என்று சொல்ல
“சார், அவர்வேறே யாரும் இல்லே. என்னோட ஹஸ்பெண்ட்தான்” என்றார்.
“ஒருநிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் அவரோட தான், இப்ப பேசிக்கிட்டு இருந்தேன். அவர் இன்னும் லைன்லே வெயிட்பண்ணிக்கிட்டு இருக்காரு” ன்னு சொல்லி
“ என்னங்க? லைன்ல தானே இருக்கீங்க?. நீங்க கம்ப்ளையிண்ட் கொடுத்ததை வெச்சி ரெண்டு போலீஸ்காரங்க நம்ம வீட்டு வாசல்லே அந்த கார் நிக்கறதைப்பாத்துட்டு என்னை அரெஸ்ட் பண்ண வந்து இருக்காங்க. இதனாலே காரை எடுத்துக்கிட்டு அங்கே வந்து உங்களை பிக் அப் பண்றதுக்கு இவங்க அல்லவ் பண்ண மாட்டேங்கறாங்க. நீங்க சட்டுனு ஒரு ஆட்டோவோ டாக்ஸியோ புடிச்சி வீட்டுக்கு வாங்க.” என்று கூறி, போலீசிடம்.
“ அவர் இன்றும் 20 நிமிஷத்துலே வந்துடுவாரு”ன னு சொல்லி ஒரு விதமா நிலைமையை சமாளிச்சாங்க. மகாதேவனும் ஒரு ஆட்டோவிலே அவசர அவசரமா வந்து இறங்கி போலீசிடம் விவரமா நடந்ததைச்சொல்லி, கொடுத்த கம்ப்ளயிண்டை வாபஸ் வாங்கி நிலைமையை சமாளிச்சார்.
அடுத்த வாரமே காரும்வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்னு, அதை தொலைக்காம வித்துதொலைச்சாருன்னு நான் சொல்லணுமா என்ன?

இவரைப் பத்தி ரொம்ப முக்கியமான விஷயத்தை சொல்லணும்னு நெனச்சேன். மறந்துட்டுது. மன்னிச்சிடுங்க. எனக்கு ஞாபகம் வந்தால் அப்போ உங்க கிட்டே அந்த கதையை சொல்றேன். என்ன ஓகேயா? ( ஞாபக மறதி முற்றும். என்ன சொல்றீங்க?. நீங்க எழுதின இந்தக்கதையை படிச்சா, பிஞ்சா இருக்கிற எங்க ஞாபக மறதி முத்தும்னு சொல்றீகளா? அட பாவமே)
 
தகைச்சுவை துணுக்குகள்
ஒரு அமெரிக்கன் நியூயார்க் பாங்கில் தன் விலை உயர்ந்த காரை ஈடாக வைத்து 100 டாலர் கடன் வாங்கினான். ஒருமாதம் கழித்து அவன் வாங்கின லோனுக்கு 10% வட்டி கட்டி அந்தக்காரை மீட்டான். அந்த பாங்க் மானேஜர் அவனிடம் “ என்ன சார், அற்ப 100 டாலர் கடனுக்காக உங்கள் விலை உயர்ந்த காரை ஏன் ஈடாக வைத்தீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த பெரிய மனிதர் சொன்னார்: “நியூ யார்க்கில்100 டாலர் செலவில் ஒரு மாதம் பார்க் செய்ய இதைவிட சீப்பாக எங்கேயாவது இடம் கிடைக்குமா?
***************
*அந்தக்காலத்துலே நான் 1 ரூபா எடுத்துட்டு கடைக்குப் போனேன்னா, ஒரு பை நிறைய சாமான்களை ரொப்பிக்கிட்டு வருவேன் . ஆனா இப்போ?
ஏன்தாத்தா, அந்தக்காலத்துலே கடைகளிலே CCTV காமிராக்கள் பொருத்தி இருக்க மாட்டாங்களா?
***************
*அந்த நடிகை எடை பார்க்கும்மெஷினில் ஏறி எடை பார்த்தார். அதிலிருந்து ஒரு எடையைக்குறிக்கும் சீட்டு வந்தது. அதன் பின்னால் சேர்ந்தாற்போல் இருவர் ஒரே சமயத்தில் எடை பார்க்க வேண்டாம் என்று எழுதி இருந்தது.
******************
*குழந்தை: ஏம்பா, மழை பெய்யறது? கடவுள்அழறதால்தானே.

அப்பா: சே, சே, அப்படி இல்லைடா கண்ணா, மழை பெஞ்சாத்தான் செடி, கொடிகள் எல்லாம் வளரும். அதுக்காகத்தான் மழை பெய்யறது

குழந்தை: அப்படின்னா? ஏம்பா ஏன் நம்ம வீட்டு ஓட்டு மேலேயும், நாம நடக்கிற ரோட்டு மேலேயும் மழை பெய்யறது?
*********************
நியூயார்க் பாங்கில் தன் விலை உயர்ந்த காரை ஈடாக வைத்து 100 டாலர் கடன் வாங்கினான். ஒருமாதம் கழித்து அவன் வாங்கின லோனுக்கு 10% வட்டி கட்டி அந்தக்காரை மீட்டான். அந்த பாங்க் மானேஜர் அவனிடம் “ என்ன சார், அற்ப 100 டாலர் கடனுக்காக உங்கள் விலை உயர்ந்த காரை ஏன் ஈடாக வைத்தீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த பெரிய மனிதர் சொன்னார்: “நியூ யார்க்கில்100 டாலர் செலவில் ஒரு மாதம் பார்க் செய்ய இதைவிட சீப்பாக எங்கேயாவது இடம் கிடைக்குமா?
***************
*அந்தக்காலத்துலே நான் 1 ரூபா எடுத்துட்டு கடைக்குப் போனேன்னா, ஒரு பை நிறைய சாமான்களை ரொப்பிக்கிட்டு வருவேன் . ஆனா இப்போ?
ஏன்தாத்தா, அந்தக்காலத்துலே கடைகளிலே CCTV காமிராக்கள் பொருத்தி இருக்க மாட்டாங்களா? T
***************
*அந்த நடிகை எடை பார்க்கும்மெஷினில் ஏறி எடை பார்த்தார். அதிலிருந்து ஒரு எடையைக்குறிக்கும் சீட்டு வந்தது. அதன் பின்னால் சேர்ந்தாற்போல் இருவர் ஒரே சமயத்தில் எடை பார்க்க வேண்டாம் என்று எழுதி இருந்தது.
******************
*குழந்தை: ஏம்பா, மழை பெய்யறது? கடவுள்அழறதால்தானே.

அப்பா: சே, சே, அப்படி இல்லைடா கண்ணா, மழை பெஞ்சாத்தான் செடி, கொடிகள் எல்லாம் வளரும். அதுக்காகத்தான் மழை பெய்யறது

குழந்தை: அப்படின்னா? ஏம்பா ஏன் நம்ம வீட்டு ஓட்டு மேலேயும், நாம நடக்கிற ரோட்டு மேலேயும் மழை பெய்யறது?
 
பஜ்ஜி மகாத்மீயம்!!
நான் மாலை ஏதாவது ஹோட்டலுக்குப்போனால் ம்முதலில் பஜ்ஐஜியைத்தான் கேட்பேன். லைட் ஸ்நாக்குகளில் முதல் இடம் பஜ்ஜிக்குத்தான்.
பஜ்ஐஇ சாப்பிட ஹோட்டலுக்குப்போவது வேஸ்ட். அதற்காகவே கையேந்தி பவன்கள் மைலாப்பூரிலும் வேறு இடங்களிலும் உள்ளன. பொன்னம்பல வாத்தியார் தெருவில் ஒரு ஜன்னல் பஜ்ஜிக் கடை ரொம்ப ஃஅபேபஸ். நான் கபாலீசுவர ர் கோவிலுக்்குப்போகும்போதெல்லம் அந்த பஜ்ஜஇக்கடைக்ககுப் போகாமல் இருந்ததில்லை. அதேபோல் அந் த பஜ்ஜிக்கடைசாக்கில் கோவிலைக்குப் போவதுண்டு. ( இப்போது அந்தக்கடை அங்கு இருக்கிறதா, தெரியவில்லை) பக்கத்து கட்டிங்கில் ஒரு மாமி கடை திண்ணைக்கடையாக இருந்தது. அதில் பஜ்ஜி , போண்டோ போன்ற சமாசாரங்களும் கிடைக்கும். அந்தக்கடை என் போன றவர்களின் உபயத்தால் இன்று பல்கிப் பெருகி ஓரளவு உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்குப் பெருத்து விட்டது.
இங்கெல்லாம் நான் முதலில் சாப்பிட்ட போது ஒரு பஜ்ஜி ஒரு ரூபாய்தான். ஆனால் இன்ஃப்ளேஷன் ஏற ஏற, பஜ்ஜி சற்று சிறுத்து விலை ஒரு பஜ்ஜி 5 ரூபாய் வரையில் பெருத்துவிட்டது. பிறகு மைலாப்பூரிலிருந்து திருவான்மியூர் சென்ற பிறகு அங்குள்ள கையேந்தி பவன்கள் எனக்கு திருப்தியாக இல்லாததால் ரெகுலர் ஹோட்டலுக்குச்செல்ல வேண்டியதாகிவிட்டது.
ஆனால் யாரிட்ட சாபமோ நான்ஹோட்டலுக்குப்போன பெரும்பாலான நாட்களில் நான் பஜ்ஜி கேட்டபோதெல்லாம் பஜ்ஜி நஹீம் என்ற பதில் தான் வரும். பிறகு தான் தெரிந்தது ப.ஜ்ஜி, போண்டா வகையறாக்கள் ஐந்து அல்லது ஐந்தரை மணுக்குள் காலி ஆகிவிடும் என்று. பத்தாண்டுகளுக்கு முன்பு சில ஹோட்டல்களில் 3 பஜ்ஜி 55 ரூபாய் என்பதைப்பார்த்து கணக்குப்போட்டதில் இந்த 55 ரூபாய்க்கு வீட்டில் ப.ஜ்ஜி செய்வதாக இருந்தால் ஒரு கும்பமே ஆளுக்கு ஆறு பஜ்ஜி சாப்பிடலாம் என்று தெரிந்தது. இது பஜ்ஜிநாமிக்ஸ்.
மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி!
மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு!

அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்!
அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வாழ்நாள் முழுவதும் ஆடிய தலையுடனேயே இருப்பது பஜ்ஜியின் நீண்ட கால வெற்றி ரகசியம்!

மாலை மூணு மணியளவில் கடலை மாவு கரைபடும்போதே களைகட்டி விடும் கிச்சன் – உருளை, வாழை, கத்தரி, வெங்காயம், செள செள எனப்படும் பெங். கத்தரிக்காய், எல்லாம் சில்லு சில்லாய் வெட்டப்பட்டு (வெங்காயம் ரிங்கு ரிங்காய் பிரியாமல், தின் ஸ்லைசுகளாய் சீவுவது ஒரு தனீக் கலை – பஜ்ஜிக் கலை), பஜ்ஜி மாவில் முக்கி எடுக்கப் பட்டு, பதமாய்க் கொதிக்கும் புது எண்ணையில் (முதல் நாள் சுட்ட எண்ணை உதவாது – சில கடைகளில் பஜ்ஜி வாய்க்கு வந்தவுடன் காட்டிக் கொடுத்துவிடும்!), மெதுவாய் விடப்படும் - சிறு குமிழிகளுடன் பொறிந்து, பொன்னிறம் ஆனவுடன் சட்டுவத்தில் ( அதாங்க, ஓட்டைகள் நிறைந்த கரண்டி) எடுத்து பாத்திரத்தில் போட்டு விட்டால் – பஜ்ஜி ரெடி!

கொஞ்சம் கரகரப்பாகவும், அதிகம் உப்பாமலும், உள்ளிருக்கும் காயின் வடிவத்தில் சூடாக வந்து விழும் பஜ்ஜியே, உன்னை ஆராதிக்கிறேன்! அப்படியே சூடாகக் கடித்துவிட, முழுங்கவும் முடியாமல், துப்பவும் மனமில்லாமல் வாய் வழியே புஸ் புஸ் என்று அனல் காற்று வெளியே விட, தின்னும் பஜ்ஜி ஜோர்! பஜ்ஜியைப் பிய்த்து, காயையும், பஜ்ஜி உறையையும் தனித் தனியே ஊதி ஊதித் தின்பவர்கள் பஜ்ஜியால் சபிக்கப் பட்டவர்கள்!

காரம் கம்மியாக, திப்பி திப்பியாக தேங்காய்ச் சட்னியும், கொஞ்சூண்டு வெங்காய சாம்பாரும் கூட இருந்தால் கோடி சுகம். சாஸோ, கெச்சப்போ ஆபத்துக்குப் பாவமில்லேன்னாலும், இரண்டாம் பட்சம்தான்!
(யாரு, டாக்டரா? எண்ணை கூடாதாமா? .. தண்ணீலெ பொறியாதே – சரி, சரி சாயந்திரம் கிளினிக்குலெ வந்து பார்க்கிறேன்னு சொல்லு –ரெண்டு பஜ்ஜியோட!)
ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் கிடைக்கிறது – கொஞ்சம் இட்லி/தோசை மாவைச் சேர்த்துக் கொண்டால் பஜ்ஜி கரகரப்பாக இருக்கும் - ஓரிரண்டு மிமி தடிமனில் சிம்ரன் மாதிரி ஸ்லிம்மா சீவின காய்கள், நல்ல பஜ்ஜிக்கு நளபாகத் தரம் தரக்கூடியவை! – ரொம்ப நேரம் எண்ணையில் விடக் கூடாது; ஆரஞ்சுக்கும், சிவப்புக்கும் நடுவான கலர் உசிதம் – அதிகம் சூளையில் சுட்ட கருஞ்செங்கல் நிறம் காசிக்குப் போகாமலேயே பஜ்ஜியை ஒதுக்கி வைத்துவிடும்! மேற்படி ’டிப்ஸ்’ அகில உலக ’பஜ்ஜி ரிசர்ச் கமிட்டி’ யினால் பொது மக்கள் நலம் கருதி பரிந்துரைக்கப் படுகின்றன.
‘மானசரோவரி’ல் கிராமத்து சாலையோர டீக்கடையில் பஜ்ஜி பொறித்துப் போடுவதை சுவையாக எழுதியிருப்பார் அசோகமித்திரன்! வாழைக்காயை நீளவாட்டில் சீவிப் போடும் பஜ்ஜி – சின்ன நியூஸ் பேப்பர் தாளில் வைத்துக் கொடுப்பார்கள் – அதில் அழுத்தி எண்ணையை உறிஞ்சிய பிறகு கொஞ்சம் உலர்ந்த பஜ்ஜி – டீயுடன் அதற்கு மக்களிடையே கிராக்கி அதிகம்!

கேரளாவின் நேந்திரம் பழ பஜ்ஜி – ‘பழம்புழுங்கி' ('பழம்பொறி' ?) – ஓர் அசட்டுத் தித்திப்புடன் ரொம்பவும் பிரபலம். ஒன்று தின்றாலே, ஒரு நாள் முழுக்க பசிக்காது!.

காரம் கம்மியான ஸ்பெசல் மிளகாய் பஜ்ஜி – கடற்கரையில் மிகவும் பிரசித்தம்.
’ஸ்டார்டர்’ வகையில் தட்டு நிறைய வெங்காயம், கொத்தமல்லியெல்லாம் தூவிக் கொடுக்கப் படுகின்ற “கோபி 65” பஜ்ஜியின் இக்காலப் பரிணாம வளர்ச்சி! பிரட் பஜ்ஜி கூட கிடைக்கிறது –

‘தூள்பஜ்ஜி’ என்ற சொல்வழக்கு காரைக்குடி பக்கங்களில் உண்டு – பஜ்ஜிக்கும், பக்கோடாவுக்கும் இடைப்பட்ட ஒரு வஸ்து – பொட்டலமாகக் கட்டி விற்பார்கள் – செட்டிநாட்டு சுவையுடன்!
எண்பதுகளில் பாண்டிபசார் சாந்தா பவனில் அறுபது பைசாவுக்கு ஒரு ப்ளேட் ஆனியன் பஜ்ஜியும் (மூன்று), நாற்பது பைசாவுக்கு ஒரு ஸ்ட்ராங் காபியும் குடித்த நினைவு – இன்று ஒரு ரூபாய்க்கு சின்ன வெங்காயம் ஒன்று கிடைக்குமா என்பதே சந்தேகம்!
இன்று ‘நொந்து நூடுல்ஸ்’ ஆவதின் அன்றையப் பிரயோகம் ‘பஜ்ஜியாய்ட்டேம்பா!’!
வாழ்க ப.நே.ம.க.!!
(பஜ்ஜி நேசிக்கும் மனிதக் கட்சி!).
நான் பநேமகவின் தீவிர ஆதரவாளன். ஒருகாலத்தில் இந்தக்கட்சியை கடுமையாக எதிர்த்தவன். அதை எதிர்த்து தகாத வார்த்தைகளை உதிர்த்தவன். என் இருபதாவது வயதில் ஒரு மாலை மயக்கத்தில் ஒரு தட்டு பஜ்ஜியையும் விழுங்கியவன். அதற்குப்பிறகு இரண்டு நாட்கள் என்ன ஆயின, எப்படிப் போயின என்பது என் வாழ்நாள் சரித்திரத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பகுதிகள். அன்றிலிருந்து 50 வயது வரை பஜ்ஜிக்கு கருப்புக்கொடி காட்டியவன். அதற்குப்பிறகு என் நாக்கும் மூக்கும் என்னுடைய சபதத்துக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டன. பிறகு வேறு வழியின்றி பநேமகவின் தீவிர மெம்பராகி பஜ்ஜியின் தாசானுதாசன் ஆனேன்.
 
பஜ்ஜி மகாத்மியம்!!
நான் மாலை ஏதாவது ஹோட்டலுக்குப்போனால் முதலில் பஜ்ஐஜியைத்தான் கேட்பேன். லைட் ஸ்நாக்குகளில் முதல் இடம் பஜ்ஜிக்குத்தான்.
பஜ்ஜி சாப்பிட ஹோட்டலுக்குப்போவது வேஸ்ட். அதற்காகவே கையேந்தி பவன்கள் மைலாப்பூரிலும் வேறு இடங்களிலும் உள்ளன.

பொன்னம்பல வாத்தியார் தெருவில் ஒரு ஜன்னல் பஜ்ஜிக் கடை ரொம்ப ஃபேமஸ். நான் கபாலீசுவரர் கோவிலுக்குப்போகும்போதெல்லாம் அந்த பஜ்ஜிக்கடைக்குப் போகாமல் இருந்ததில்லை. அதேபோல் அந்த பஜ்ஜிக்கடைசாக்கில் கோவிலைக்குப் போவதுமுண்டு. ( இப்போது அந்தக்கடை அங்கு இருக்கிறதா, தெரியவில்லை)

பக்கத்து கட்டிங்கில் ஒரு மாமி கடை திண்ணைக்கடையாக இருந்தது. அதில் பஜ்ஜி , போண்டோ போன்ற சமாசாரங்களும் கிடைக்கும். அந்தக்கடை என் போன றவர்களின் உபயத்தால் இன்று பல்கிப் பெருகி ஓரளவு உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்குப் பெருத்து விட்டது.

இங்கெல்லாம் நான் முதலில் சாப்பிட்ட போது ஒரு பஜ்ஜி ஒரு ரூபாய்தான். ஆனால் இன்ஃப்ளேஷன் ஏற ஏற, பஜ்ஜி சற்று சிறுத்து விலை ஒரு பஜ்ஜி 5 ரூபாய் வரையில் பெருத்துவிட்டது.

பிறகு மைலாப்பூரிலிருந்து திருவான்மியூர் நான் சென்ற பிறகு அங்குள்ள கையேந்தி பவன்கள் எனக்கு திருப்தியாக இல்லாததால் ரெகுலர் ஹோட்டலுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.

ஆனால் யாரிட்ட சாபமோ நான்ஹோட்டலுக்குப்போன பெரும்பாலான நாட்களில் நான் பஜ்ஜி கேட்டபோதெல்லாம் பஜ்ஜி நஹீம் என்ற பதில் தான் வரும். பிறகு தான் தெரிந்தது பஜ்ஜி, போண்டா வகையறாக்கள் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்குள் காலி ஆகிவிடும் என்று. பத்தாண்டுகளுக்கு முன்பு சில ஹோட்டல்களில் 3 பஜ்ஜி 55 ரூபாய் என்பதைப்பார்த்து கணக்குப்போட்டதில் இந்த 55 ரூபாய்க்கு வீட்டில் பஜ்ஜி செய்வதாக இருந்தால் ஒரு குடும்பமே ஆளுக்கு ஆறு பஜ்ஜி சாப்பிடலாம் என்று தெரிந்தது. இது பஜ்ஜிநாமிக்ஸ்.

மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், ( நான்காபி சாப்பிடுவதில்லை, அதென்ன காபி சாப்பிடுவது- காபி குடிக்கிறது என்று ஏன் பலரும் சொல்வதில்லை-சரி இதைப்பற்றி காபி குடிக்காதவனுக்கு என்ன கவலை என்று கேட்கிறீர்களா? சாமி கும்பிடாதவன் கோவிலில் யார் பூஜை பண்ணவேண்டும் என்று தன் மூக்கை நீட்டுவதில்லையா?) அதைப்போலத்தான் இதுவும்

முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி!
மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு!

அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு அடிமையோ, அடிமை.
அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!என்ன ஒரு ரைம்). இதோடு நல்ல கும்பகோணம் டிகிரி காபியும் ( இது வெறும் பேசிலர்ஸ் டிகிரின்னு அதை மட்டம் தட்ட வேண்டாம். அது காபிகளிலே அந்தக் காலத்து Ph.D ஆக்கும்)
சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வாழ்நாள் முழுவதும் ஆடிய தலையுடனேயே இருப்பது பஜ்ஜியின் நீண்ட கால வெற்றி ரகசியம்!

மாலை மூணு மணியளவில் கடலை மாவு கரைபடும்போதே களைகட்டி விடும் கிச்சன் – உருளை, வாழை, கத்தரி, வெங்காயம், செள செள எனப்படும் பெங். கத்தரிக்காய், எல்லாம் சில்லு சில்லாய் வெட்டப்பட்டு (வெங்காயம் ரிங்கு ரிங்காய் பிரியாமல், தின் ஸ்லைசுகளாய் சீவுவது ஒரு தனீக் கலை – பஜ்ஜிக் கலை), பஜ்ஜி மாவில் முக்கி எடுக்கப் பட்டு, பதமாய்க் கொதிக்கும் புது எண்ணையில் (முதல் நாள் சுட்ட எண்ணை உதவாது – சில கடைகளில் பஜ்ஜி வாய்க்கு வந்தவுடன் காட்டிக் கொடுத்துவிடும்!), மெதுவாய் விடப்படும் - சிறு குமிழிகளுடன் பொறிந்து, பொன்னிறம் ஆனவுடன் சட்டுவத்தில் ( அதாங்க, ஓட்டைகள் நிறைந்த கரண்டி) எடுத்து பாத்திரத்தில் போட்டு விட்டால் – பஜ்ஜி ரெடி! குடமிளகாய்பஜ்ஜி போடுவது என்பது ஒரு தனி ஸ்பெஷாலிட்டி.

கொஞ்சம் கரகரப்பாகவும், அதிகம் உப்பாமலும், உள்ளிருக்கும் காயின் வடிவத்தில் சூடாக வந்து விழும் பஜ்ஜியே, உன்னை ஆராதிக்கிறேன்! அப்படியே சூடாகக் கடித்துவிட, முழுங்கவும் முடியாமல், துப்பவும் மனமில்லாமல் வாய் வழியே புஸ் புஸ் என்று அனல் காற்று வெளியே விட, தின்னும் பஜ்ஜி ஜோர்! பஜ்ஜியைப் பிய்த்து, காயையும், பஜ்ஜி உறையையும் தனித் தனியே ஊதி ஊதித் தின்பவர்கள் பஜ்ஜியால் சபிக்கப் பட்டவர்கள்!

காரம் கம்மியாக, திப்பி திப்பியாக தேங்காய்ச் சட்னியும், கொஞ்சூண்டு வெங்காய சாம்பாரும் கூட இருந்தால் கோடி சுகம். சாஸோ, கெச்சப்போ ஆபத்துக்குப் பாவமில்லேன்னாலும், இரண்டாம் பட்சம்தான்! என்னைப் பொறுத்த வரையில் பஜ்ஜிக்கு பக்க வாத்தியம் தேவை இல்லை. தனி பஜ்ஜியே சுகம், சுகம். பஜ்ஜியை விரும்பாத பேர்களுண்டோ என்று பாடத் தோன்றுகிறது
டாக்டர்களின் முதல் நண்பன் இந்த பஜ்ஜிகள்தான். பஜ்ஜிக்காக உயிர் வாழ்பவர்கள், டாக்டர்களுக்கு உயிர் கொடுப்பவர்கள்.

ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் கிடைக்கிறது – கொஞ்சம் இட்லி/தோசை மாவைச் சேர்த்துக் கொண்டால் பஜ்ஜி கரகரப்பாக இருக்கும் - ஓரிரண்டு மினி தடிமனில் ஸ்லிம்மா சீவின காய்கள், நல்ல பஜ்ஜிக்கு நளபாகத் தரம் தரக்கூடியவை! – ரொம்ப நேரம் எண்ணையில் விடக் கூடாது; ஆரஞ்சுக்கும், சிவப்புக்கும் நடுவான கலர் உசிதம் – அதிகம் சூளையில் சுட்ட கருஞ்செங்கல் நிறம் காசிக்குப் போகாமலேயே பஜ்ஜியை ஒதுக்கி வைத்துவிடும்! மேற்படி ’டிப்ஸ்’ அகில உலக ’பஜ்ஜி ரிசர்ச் கமிட்டி’ யினால் பொது மக்கள் நலம் கருதி பரிந்துரைக்கப் படுகின்றன!

‘மானசரோவரி’ல் கிராமத்து சாலையோர டீக்கடையில் பஜ்ஜி பொறித்துப் போடுவதை சுவையாக எழுதியிருப்பார் அசோகமித்திரன்! வாழைக்காயை நீளவாட்டில் சீவிப் போடும் பஜ்ஜி – சின்ன நியூஸ் பேப்பர் தாளில் வைத்துக் கொடுப்பார்கள் – அதில் அழுத்தி எண்ணையை உறிஞ்சிய பிறகு கொஞ்சம் உலர்ந்த பஜ்ஜி – டீயுடன் அதற்கு மக்களிடையே கிராக்கி அதிகம்!
ஒரு சிலர் பஜ்ஜியைப் பேப்பரில்போட்டு ஒரு அழுத்து அழுத்தி அதன் எண்ணைப்பசையைப் பிழிந்து எடுத்து சாப்பிடுவார்கள். இது பஜ்ஜியை கொலை செய்து சாப்பிடுவதற்கு சமம். இந்த பஜ்ஜி ஹத்தி பாவம் எனக்கு வேண்டாம்.

கேரளாவின் நேந்திரம் பழ பஜ்ஜி – ‘பழம்புழுங்கி' ('பழம்பொறி' ?) – ஓர் அசட்டுத் தித்திப்புடன் ரொம்பவும் பிரபலம். ஒன்று தின்றாலே, ஒரு நாள் முழுக்க பசிக்காது!.

காரம் கம்மியான ஸ்பெசல் மிளகாய் பஜ்ஜி – கடற்கரையில் மிகவும் பிரசித்தம். எக்ஸிபிஷனிலும் இதற்கு அசாத்திய மவுசு.
’ஸ்டார்டர்’ வகையில் தட்டு நிறைய வெங்காயம், கொத்தமல்லியெல்லாம் தூவிக் கொடுக்கப் படுகின்ற “கோபி 65” பஜ்ஜியின் இக்காலப் பரிணாம வளர்ச்சி! பிரட் பஜ்ஜி கூட .

‘தூள்பஜ்ஜி’ என்ற சொல்வழக்கு காரைக்குடி பக்கங்களில் உண்டு – பஜ்ஜிக்கும், பக்கோடாவுக்கும் இடைப்பட்ட ஒரு வஸ்து – பொட்டலமாகக் கட்டி விற்பார்கள் – செட்டிநாட்டு சுவையுடன்!
குடை மிளகாய் பஜ்ஜியை முதன் முறையாக பெங்களூரில் சாப்பிட்டேன். இன்னும் கர்நாடகா பார்டர் தாண்டி அது தமிழ் நாட்டுக்குள் நுழைய யோசித்துக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
எண்பதுகளில் பாண்டிபசார் சாந்தா பவனில் அறுபது பைசாவுக்கு ஒரு ப்ளேட் ஆனியன் பஜ்ஜியும் (மூன்று), நாற்பது பைசாவுக்கு ஒரு ஸ்ட்ராங் காபியும் குடித்த நினைவு – இன்று ஒரு ரூபாய்க்கு சின்ன வெங்காயம் ஒன்று கிடைக்குமா என்பதே சந்தேகம்!
இன்று ‘நொந்து நூடுல்ஸ்’ ஆவதின் அன்றையப் பிரயோகம் ‘பஜ்ஜியாய்ட்டேம்பா!’!
வாழ்க ப.நே.ம.க.!!
(பஜ்ஜி நேசிக்கும் மனிதக் கட்சி!).
நான் பநேமகவின் தீவிர ஆதரவாளன். ஒருகாலத்தில் இந்தக்கட்சியை கடுமையாக எதிர்த்தவன். அதை எதிர்த்து தகாத வார்த்தைகளை உதிர்த்தவன். என் இருபதாவது வயதில் ஒரு மாலை மயக்கத்தில் ஒரு தட்டு பஜ்ஜியையும் விழுங்கியவன். அதற்குப்பிறகு இரண்டு நாட்கள் என்ன ஆயின, எப்படிப் போயின என்பது என் வாழ்நாள் சரித்திரத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பகுதிகள். அன்றிலிருந்து 50 வயது வரை பஜ்ஜிக்கு கருப்புக்கொடி காட்டியவன். அதற்குப்பிறகு என் நாக்கும் மூக்கும் என்னுடைய சபதத்துக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டன.

பிறகு வேறு வழியின்றி பநேமகவின் தீவிர மெம்பராகி பஜ்ஜியின் தாசானுதாசன் ஆனேன்.
இந்த பஜ்ஜிக்கு ஒரே ஜன்ம விரோதி பாழய்ப் போன நம் வயறுதான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே விஷமாகும்போது அது மட்டும் பஜ்ஜிக்குப் பொருந்தாதா என்ன?
 
வடை மகாத்மியம்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றி மூத்த தமிழ் என்பதற்கேற்ப, பக்கவடா தோன்றி , போண்டா தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றி மூத்தது வடை என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. இருந்தாலும் வடை தமிழ்நாட்டின் ஒரு புராதனமான தின் பண்டங்களில் ஒன்று என்பதில் எள்ளளவோ அல்லது கடுகளவோஅல்லது ஒரு , உளுத்தம்பருப்பளவோ எனக்கு சந்தேகம் கிடையாது.

வடை என்று சொல்லும்போதே நாக்கில் ஜலம் ஊறுகிறதா? ஊறவில்லை என்றால் உங்கள் வாய் வரட்சிக்கு ( அல்லது வறட்சிக்கு) உடனே ஒரு நல்ல டாக்டராகப் பார்க்கவும். அது கிடக்கட்டும். நாக்கில் எச்சில் ஊறுவதற்கு அடுத்தபடியாக உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? வடை சுட்ட கிழவியும், ஏமாந்த காக்கையும் என்று நாம் LKG, UKG இல்லாத காலத்தில் ஒண்ணாம் கிளாஸிலா, அரையாம் கிளாஸிலோ படித்த, அல்லது நம்ம வீட்டுப் பாட்டி சொல்லக்கேட்ட கதை ஞாபகத்துக்கு வருகிறதா? அப்படி இல்லை என்றால் நீங்கள் அல்ஸமீர் வியாதியினால் அவதிப்படுகிறீர்கள் என்பது உறுதி ஆகிறது. இப்படி வடை என்பது தமிழ்ப் பண்பாட்டிலே ஊறிய ஒரு தின்பண்டமாக இருப்பதை மறுப்பீர்களா?

ஆனால் இன்று அந்த கதையில் வரும் காகம் பழைய காகம் போல் இல்லாமல் மனிதனைப் போல புத்திசாலித்தனமாக வடையை திருடி கொத்தி எடுத்துக்கொண்டு போய் ஒரு மரக்கிளையின் மீதமர்ந்து நரி பாடச் சொன்னவுடன் வடையை பத்திரமாக தன் கால்களின் அடியில் கெட்டியாகப பிடித்துக்கொண்டு ‘காகா’ என்ற நாராச குரலில் பாடி தன்னை ஏமாற்ற நினைத்த நரியை ஓடச் செய்தது. இது இன்றைய பகுத்தறிவுக் காகமும் வடையும் என்ற கதை. இந்தக் கதை இன்றைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களோ இல்லையோ, இன்று பல அரசியல் வாதிகளும் வெறும் வாயில் வடை சுடுவதில் வல்லுனர்களாக இருக்கின்றனர்.

சரி. வடையின் கதையை இப்போது பார்ப்போம். இது சிந்து நதி நாகரிகத்துக்கும் முற்பட்டது என்பது என் அபிப்பிராயம். வடை பிடிக்காதவர்கள் ( அப்படி யாராவது இருப்பார்கள் என்று என்னால் சிந்தித்துக் கூட பார்க்க இயலவில்லை) . ஜீரண கோளாறு உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் அதை வந்தேறி, புகுந்தேறி என்று பலவாறாகப் பழிக்கலாம். ஆனால் அதை இன்று விரும்பாத தமிழர்களே இல்லை. அப்படி விரும்பாதவர்கள் தமிழர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வடை நம் வாழ்வில் ஒன்றற அல்லது இரண்டறக் கலந்து விட்டது. பருப்பில்லாக் கல்யாணங்கள் இருக்கலாம். ஆனால் இன்று வடையில்லா விசேஷங்கள் எதுவும் கிடையாது.

வடைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். மெதுவடை என்று சொன்னால் கெட்டி வடை என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? ஏன் இல்லை? ஒரு வேளை மற்ற வடைகள் எல்லாம் கெட்டி வடைகளா? அப்படிச்சொல்ல முடியாது. ஆமவடையா, ஆமைவடையா தெரியல்லே. வெஜிடேரியன்களா இருந்துகொண்டு ஏன் இந்தப்பெயர் வைத்தார்கள்? யார் வைத்தார்கள்? பிறகு தவல வடை, தவல வடையா, தவளை வடையா? தவளை வடையா இருக்க முடியாது என்பது என்ஊகம். ஒருவேளை சீமான் இந்தப்பெயரை வைத்தாரா? அவருக்குத்தன் இந்த ஆமை, தவளை எல்லாம் ரொம்பவும் பரிச்சயம்.ஆனால் அவர்பிறப்பதற்கு முன்பே இந்தப்பெயரை வைத்துவிட்டார்கள். எனவே அவராக இருக்கமுடியாது.


கீரை வடை, மெந்தய வடை, மசால் வடை, மிளகு வடை இப்படி வடைகளிலே நம்நாக்கை சுழட்டும் பல வித வடைகள் உண்டு. ஆனால் எந்த வடையாக இருந்தாலும் என் முதல் ஓட்டு மெதுவடைக்குத்தான் . அதுவும் சுடச்சுட வாணலியில் மூழ்கித் திணறிக்கொண்டு இருக்கும்போது எடுக்கப்படும் பொன்முறுவல் கலரில் மேலுறை கரகரவன்றும் உட்புறம் மிக மிக மிருதுவாகவும் இருக்கும் அந்த “ஹாட் ஃப்ரம் த ஸ்டவ்” வடைக்கு என் டபிள் வோட்ஸ்.

இப்படிப்பட்ட என் உயிருக்கு உயிரான வடையுடன் நான் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் டூ விட்டிருந்தேன் என்றால் ஆச்சரியமாக இல்லை ? எந்த டாக்டரிடம் போனாலும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் கொடுக்கும் முதல் அட்வைசே எண்ணைப் பதார்த்தங்களைத்தொடாதே என்பதுதான். இதை நம்பி நான் என் வாழ்க்கையின் 35 வருட பொன்னான வருடங்களை வடையில்லா வாழ்வு வாழ்ந்து பாழடித்து விட்டேன்.
ஒரு நாள் துணிந்து நாம் வாழ்வது எதற்காக என்று ஆராய்ந்த பொழுது ஒரு மகான் சொன்ன “ருசியான சாப்பாட்டை சுவை பண்ணா நாவென்ன நாவே” என்ற மகத்தான தத்துவத்தைக் கேட்டதிலிருந்து நான் அந்த மகானுக்கும் மெது வடைக்கும் அடிமையானேன். ( அந்த மகான், வேறு யாரும் இல்லை. அத்தனை காலம் என்னுள் உறங்கிக்கிடந்த என் உள் உணர்வு தான்)

சிலர் “வடையில் எண்ணை சொட்டச்சொட்ட சாப்பிடாதீர்கள். அதை ஒரு அமுக்கு அமுக்கி அதிலுள்ள எண்ணையைப் பிழிந்து எடுத்து சாப்பிடலாம்” என்றார்கள். என்னே அவர்களது அறியாமை. வடையை அந்தப் பிழி பிழிந்தால் அந்த வடையின் சாபத்திற்கும் என் சாபத்துக்கும் நிச்சயம் நீங்கள் ஆளாவீர்கள். வடை ஒரு இளம் குழந்தை மாதிரி. அதை அந்த நசுக்கு நசுக்கினால் உங்களுக்கு நரகத்தில் கட்டாயம் ஓர் இடம் ரிசர்வ் செய்து விட வேண்டியதுதான். எனவே கையில் எண்ணை அதிகமாக ஒட்டாமல் வடை யின் ஷேப் மாறி சப்பையாகாமல் இருக்கும் அளவிற்கு பதமாக அதைக்கையாள வேண்டும். அப்படி நீங்கள் எண்ணையின் தீவிர விரோதியானால் வடையை பேப்பர் கொண்டு ( நியூஸ் பேப்பரையோ, வேறு எந்த பிரிண்டட் பேப்பரையோ பயன் படுத்தக்கூடாது) மெதுவாக பிரஸ் செய்து எக்ஸ்ட்ரா எண்ணையைப் பிழிந்து வீட்டுக்கம்பத்தில் யாரும்பார்க்காத போது பூசலாம்.

மேலும் வடைக்கு எந்த எண்ணையை பயன்படுத்துவது நல்லது என்பது அடுத்த கேள்வி. என்னைப்பொறுத்தவரையில் செக்கில் அரைத்த கலப்படமில்லாத பெயரிலேயே நல்ல என்ற க்வாலிட்டியை சுமந்து இருக்கும் நல்லெண்ணையைத்தான் நான் செலக்ட் செய்வேன்.. என்பர்ஸ்ட் பிரிபரன்ஸ் அதுதான். தேங்காய் எண்ணையெல்லாம் அடுத்தபடிதான். தேங்காய் எண்ணைக்கு ஒரு கெட்ட குணம். தன் வாசனையை அளவுக்குமீறி அது செய்யும் பண்டங்களின் மீது ஏற்றிவிடும் என்பதுதான்.

காலங்கார்த்தாலே இட்டிலி சட்னி, சாம்பாரை விழுங்கியவுடன், அடுத்து எல்லோரும் விரும்பி சாப்பிடுவது மெதுவடையைத்தான். இந்தக் கதை வீட்டிலே செல்லுபடியாகாது. ஓட்டலில் மட்டும்தான். வீட்டில் கேட்டால் என்ன ஆகும் என்பது உங்களுக்கே தெரியும்.

கர கரவென்ற மெதுவடை தேங்காய்சட்டினியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடுபவர்கள், இருக்கும்போதே இந்த உலகத்தில் சொர்க்கானுபவத்தை அடைந்தவர்கள்.
சட்டினிகளிலும்பல வகைச்சட்னிகள் இருந்தாலும் தேங்காய் சட்னிக்கு வேறு எவையும் ஈடாகாது. மெது வடையும் தேங்காய சட்டினியும்போல என்பது உபமான உபமேய மேற்கோளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

சாம்பாரும் வடைக்கு ஒரு நல்ல தோழன். சிலர் வடையை ஒரு பிளேட் நிறைய சாம்பாரில் மூழ்கடித்து சாப்பிடுவதை தங்கள் பிறப்பின் பயனாகவே கருதுகிறார்கள். அந்தக,காலத்தில் இட்லி, வடை கேட்டாலே எங்கள் ஊரில் எல்லாம் ஒரு வாளி நிறைய சட்னியையும், இன்னொரு வாளி நிறைய இட்லியையும் வைப்பார்கள். சட்னி சாம்பார் அன்லிமிடெட். சிலர் உள்ளங்கையில் அடங்கும் இட்லிக்கும், வடைக்கும், அரை வாளி சாம்பார் போட்டுக்கொண்டு அதை உர்ரென்று அடுத்த ஊருக்கு கேட்குமளவுக்கு சத்தமாக உறிஞ்சி சாப்பிடுவது பார்த்த போது என் சிறு வயிற்றைப் பார்த்து நொந்து கொள்ளாத நாளே இல்லை. அந்த ஆசை சென்னையில் ஒரு இடத்தில் நிறைவேறியது வேறு கதை.

இதற்கு சாம்பார் சூப்பராக இருக்கவேண்டும் அந்தக்காலத்து சாந்தி விகார் சாம்பார்போல. சிலருக்கு ரச வடைமீது அலாதி பிரியம் ( அந்த சிலரில் நானும் ஒருவன்) நம்மனிதர்களைப்போலவே சாம்பார், ரசம், மோர் என்று வடைக்கும் இந்த மூன்று வகை சேர்க்கையும் பிடிக்கும். என்ன, மோருக்குப்பதில் அதற்கு தயிர் என்றால் ரொம்ப இஷ்டம். வெயில்நேரமா, உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறதா? அப்போது இருக்கவே இருக்கு தயிர் வடை . நம்ம ஊர் சம்மருக்குன்னே பொறந்தது அது. எலியைப் பிடிக்க வேண்டுமா, மசால்வடை இருக்கவே இருக்கு. இப்படி ஒவ்வொரு காரணத்திற்கும் காரியத்துக்கும் ஒவ்வொரு வகை வடை சிறந்தது.

மிளகு வடை அதை செய்யும் பதத்தில் செய்தால், நான் மிளகு வடைக்கும் அடிமை. இதைத்தான் தட்டை என்று சொல்கிறார்களோ?. ஆனால் இந்த தட்டையைத்தான் அனுமாரும், பிள்ளையாரும், ஏன் நானும் விரும்புகின்றோம். அனால் தட்டைக்கும் அனுமார் வடைக்கும் நிரம்பவே வித்தியாசம் இருக்கிறது.

அனுமாருக்கு வடைமாலை சாத்துவதென்றால் யாராவது மெது வடையையோ, ஆமவடையையோ, கீரை வடையையோ சாத்துவார்களா?. இந்த அனுமார் வடைபோல் வீட்டில் எவ்வளவு சிரமப்பட்டாலும் செய்ய முடிவதில்லையை . ஏன்? ஏன்? ஏன்? என்று சிவாஜி போலவோ, சுந்தர்ராஜன் போலவோ கதறவேண்டும் என்று தோன்றுகிறது. அது தெய்வ ரகசியம்.

வடைமாலை என்று சொன்னவுடன் என் வாயில் உமிழ்நீர் ஊறும் அதே நேரத்தில் நான் வடைகளில் ராயப்பைட்டை அனுமார் வடையை ‘ஏ கிளாஸ்’ என்பேன். நங்க நல்லூர் அனுமார் வடை, நாமக்கல் ஆஞ்சனேயர் அனுமார் வடை, சுசீந்திரம் அனுமார் வடை இதை சுவைக்காதவர்கள் பிறந்ததே சுத்த வேஸ்ட். ( அந்த வேஸ்டில் நானும் ஒருவன்)

நான் டிவி சமையல் நிகழ்ச்சியில் வடை குறித்துப் பெரும்பாலானோர் கேட்கும்கேள்வி “ஏன், எங்களால் வீட்டில் ஓட்டல் வடை மாதிரி மெது வடையோ, அனுமார் வடையோ செய்ய முடிவதில்லை. அப்படி ஒரு பதம் வர என்ன செய்யவேண்டும், எப்படிச்செய்ய வேண்டும் என்று விளக்கமுடியுமா?” என்பதுதான்.

ஓட்டல் மெது வடைகளுள் சிறந்த மெது வடை செய்ததற்கான பரிசைப்பெற்ற பெருமை ஹாட்சிப்ஸ் என்ற ஓட்டலுக்கு உண்டு. இதைப்போல பெருமை வேறு வடைகளுக்குக்கிடையாது என்று அறியும்போது மற்ற வடைகள் கண்ணீர் விடுத்து மெத்தென்று ஆகிவிடுகின்றன போலும். சரி. வடையைப்பொறுத்த வரையிலும் நம் நாட்டை, குறிப்பாக தமிழ் நாட்டை பீட் பண்ணுபவர்கள் யாரும் இல்லை என்று தோன்றுகிறது. வேறு எந்த தேசத்துலேயாவது ஏதாவது வடை கிடைக்குமா என்று நான் ஆராய்ந்ததில் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஃபலாஃபல் என்ற கிட்டத்தட்ட நம்ஊர் ஆமவடையைப்போன்ற ஒன்று மிகவும் பிரபலம். சூடான மெது வடைக்கு 100க்கு 100, ஆம வடைக்கு 100க்கு 90 மார்க் என்றால் அதற்கு 100க்கு 60 தரலாம். உங்கள் ரசனைக்கு ஏற்ப மற்ற வடைகளுக்கு நீங்கள் மார்க் போட்டுக்கொள்ளலாம்.

இன்னும் என் சிற்றறிவுக்கும், சிறு நாக்குக்கும் தெரியாத வடை வகைகள் எத்தனை உள்ளனவோ? உளுந்து வடை, பருப்பு வடை, மக்காச்சோள, பக்காச்சோள வடை, புடலங்காய்வடை, வெஜிடபிள் வடை, கடலைப்பருப்பு வடை, ரவா குனுக்கு வடை என்று பல. இந்த மாடர்ன் யுகத்தில் தானியங்களுக்கு மவுசு ஏற்பட்டு இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இட்டிலியிலே இருபது வகை, தோசையிலே தொண்ணூறு வகை என்பது போல வடையிலே எதிர்காலத்தில் கொள்ளு வடை, எள்ளு வடை போன்ற நூற்றுக்கணக்கான வடைகள் வரலாம்.

கேட்டரிங் டெக்னாலஜியில் படிப்பவர்கள் வடை பற்றிய ஆராய்ச்சி செய்து
வடாலஜி என்ற பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் Ph.D வரை படிக்க ஏற்பாடு செய்யலாம். . உலகில் அதை முதலில் கண்டு பிடித்தவர்கள் யார், எதற்காக, அதன் தோற்றம், வளர்ச்சி, அது உலக சரித்திரத்தையும் பூகோளத்தையும் எவ்வாறு மாற்றியது, இதனால் வீட்டுக்குள்ளும், உலக அளவிலும் தோன்றிய சிறிய, பெரிய யுத்தங்கள் போன்றவற்றை விலாவாரியாக ஆராய்ந்து இன்றைய சரித்திரப்பாடங்கள் எழுதப்பட்டிருப்பவை போல அவரவர் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப உலக மகா வடை சரித்திரம் எழுதலாம்.

எந்தெந்த வடையில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன. அவற்றை எப்போது எப்படி சாப்பிடவேண்டும். எந்தெந்த வடைகளை நம் பண்டிகைகளுக்கு நம் ரெகமண்ட் பண்ணலாம் போன்ற ஆராய்ச்சிகளும் செய்யலாம். அது தவிர இந்திய கார்ப்பரேட்டில் ஒருவரோ பலரோ இந்த வடைகளை உலக அரங்கில் அரங்கேற்றி மெக்டனால்டு போன்ற செயின் ஸ்டோர்ஸ்களை மண்டியிடச்செய்யலாம்.

Flight மெனுக்களில் கூட இவை இடம் பெறலாம் . ஆக வடைக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது .
வடை மகாத்மியம் வாழ்க. பொங்கலுக்கு என்று ஒரு பண்டிகை இருப்பதுபோல, எங்களுக்கு என்று பண்டிகை கிடையாதா என்று வடையும் வடைப்பிரியர்களும் கேட்கும் கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை.


சரி. வடை ஊசிப்போகுமுன் உங்களிடமிருந்து வடை, மன்னிக்கவும், விடை பெருகிறேன்
 
*வத்தகுழம்பு:* 😇

வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?

வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை. பூண்டு உண்பவர்கள் அதையும் வெங்காயத்துடன் சேர்த்து கொள்ளலாம். ஆனால் இவை எல்லாம் பஞ்சாங்கத்தை ஐபோனில் பார்ப்பது போன்ற உணர்வு. வத்தல் மட்டுமே ஓரிஜினல். மத்தபடி காய்கறி கூட நோ நோ தான்.

வத்தலுக்கு அடுத்தபடியாக முக்கியம் நல்லெண்ணை. மீதி எண்ணை எதற்குமே கட்டாயம் தடா. புது புளியும் வேண்டாம் பழைய புளியும் வேண்டாம். ஒரு டீன் ஏஜ் புளி அசத்தும். வத்தகுழம்பிற்கு கை பக்குவம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை வைக்கும் சட்டி.

கும்பகோணம் கல்சட்டி பெஸ்ட். மங்களகரமாக வைக்கலாம் கமகம வத்தக்குழம்பு. கும்பேஸ்வரர் கோவில் கடைகளில் கட்டாயம் கிடைக்கும்.

குழம்பிற்கு வறுக்கப்படும் வத்தலை முதலில் வறுத்து அதிலேயே புளியிடாமல், தனியாக எடுத்து வைத்து கொண்டு கடைசியாக சேர்ப்பது குழம்பிற்கே புது அவதாரத்தை தரும். குழம்பு கொதிக்கும் பொழுது சேர்க்கப்படும் கறிவேப்பில்லை ஜன்ம சாபல்யம் பெறும். மூட கூடாது, அடுப்பை சிம்மில் வைத்து கொதித்து கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும். எண்ணெய் பிரிந்த பின் இறக்கி வைக்கப்பட்ட வத்தகுழம்பு இங்கிலாந்து வரை இழுக்கும். பின்னர் அதில் வறுத்த வத்தலை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் ஒரே ஒரு ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் சேர்த்தால் அந்த மணத்திற்கு எந்த மலரும் ஈடாகாது.

வத்தகுழம்பு வைக்க தெரிந்து இருப்பதை விட முக்கியம் அதை சாப்பிட தெரிவது. சாதத்தை அழுத்தி பிசைந்து, வத்தக்குழம்பு சாதம் சாப்பிடுபவன் அடுத்த ஜன்மத்தில் பல பாவத்திற்கு ஆளாவான். இன்று பிறந்த குழந்தையை தூக்குவதை போல் மிகவும் அழுத்தம் கொடுக்காமல், சாதத்தை பிசைய வேண்டும். பிசைய என்று வார்த்தையை கூட அழுத்தாமல் படிக்க வேண்டும். என்ன தான் சாப்பாட்டிற்கு நெய் என்பது மன்னனின் மகுடம் போல என்றாலும் இங்கே அதற்கு வேலை இல்லை. இது நல்லைண்ணை ராஜாங்கம். சுடச்சுட சாத்தத்தோடு ஒரு தாராளமான ஸ்பூன் நல்லெண்ணை விட்டு சாதத்தை உதிர்த்த பின் அதன் மேலே வத்தகுழம்பை விட்டு நிற்க, சாம்பார் சாதம் மாதிரி மொத்தமாக பிசைய வேண்டாம். அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக பிசிறி பிசிறி சாப்பிட, நல்ல மழையில் SPB குரலில் இளையராஜா Melodies கேட்பது போல், Sidedish க்கு இங்கே வேலை இல்லை. இல்லாமல் முடியாது என்போர்க்கு அப்பளம் 0K. சுட்டது இன்னும் சூப்பர்.

இன்னும் சிறப்பு தயிர் சாதத்தை மையாய் மசித்து, கையில் சிறிது சாதம் எடுத்து கொண்டு நடுவிலே சிறு பள்ளமிட்டு அதை வத்த குழம்பால் நிரப்பி, அடடா சூப்பர் ஸ்டார் படத்தை அவருடனேயே உட்கார்ந்து பார்த்த பரவசம்.

சாதத்திற்கு மட்டுமல்ல, அடைக்கு கூட வத்தகுழம்பு நல்ல combination.
வெங்கட்பிரபுவும் பிரேம்ஜியும் போல.

முடித்த பின் கடைசியாக தட்டில் ஒரே ஒரு கரண்டி மட்டும் விட்டு வழித்து நக்கப்படும் ஒரு நல்ல வத்தக்குழம்பின் மணமும், ருசியும், worldcupல் தோனி அடித்த சிக்ஸர் போலே என்றுமே நினைவில் நிலைத்திருக்கும்.
*படித்ததில் பிடித்தது*
*பகிர்வு*
*எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களை தவிர வேறு யாரால் இவ்வாறு யோசிக்க முடியும்? 🌷🕉️🚩
 

Latest ads

Back
Top