Budhan Bhagawan worship

புதன்பகவான் வழிபாடு பற்றிய பதிவுகள் :

'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்ற பழமொழிக்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது.

புதன்கிழமை புதன் கிரகத்திற்குரிய நாள். புதன் கிரகம் அறிவு, விவேகம், பேச்சு திறன், வியாபாரம், லாபம் போன்றவற்றிற்கு காரகமாகும். எனவே, புதன்கிழமை இந்த விஷயங்களில் முன்னேற விரும்புபவர்களுக்கு சிறந்த நாளாகும்.

புதன் கிரகம் மகாலட்சுமியுடன் தொடர்புடையது. எனவே, புதன்கிழமை செல்வம், செழிப்பு பெற விரும்புபவர்களுக்கு சிறந்த நாளாகும். புதன் பகவான் வழிபாடு பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

புதன்கிழமை புதன் பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம் போன்ற விஷயங்களில் முன்னேற விரும்புபவர்கள் புதன் பகவானை வழிபடலாம்.

பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து, புதன் பகவானுடைய படத்திற்கு முன்பு தாமரை கோலம் போட்டு கொள்ளுங்கள்.

அதன்பின் ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அதன்மேல் மாவிலை வைக்கவும். புதன் பகவானுக்கு பச்சை துணியை அணிவித்து, பூக்களால் அலங்கரித்து கொள்ளுங்கள்.

புதன் பகவானுக்கு பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்பு பண்டங்களை நைவேத்தியமாக படைத்து இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, தூபம், கற்பூரம் காட்டி வழிபடுங்கள்.

காலை மற்றும் மாலை வேளைகளில் இதேபோல் வழிபாடு செய்யவும். விரதம் இருக்க முடிந்தால், முழு நாள் விரதம் இருக்கவும். இல்லையெனில், பால், பழங்கள் போன்ற எளிய உணவுகளை உட்கொள்ளலாம்.
 
Back
Top