மஹாளய பக்ஷம் ஒரு விளக்கம்

மகாளயம்_என்றால் கூட்டமாக வருதல்
மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக
கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும்.

பட்சம் என்றால் 15 நாட்கள்
( சில சமயங்களில் 16 ஆக மாறுபடும் )

பித்ருக்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்
இது புரட்டாசி மாத பெளர்ணமிக்கு மறுநாள்
பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும்.

புரட்டாசியில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும்.

தை அமாவாசை ; ஆடி அமாவாசையை விட உயர்ந்தது மகாளய அமாவாசை.

மறந்து போனவர்களுக்கு மகாளய பட்சம் என்பார்கள்.

அதாவது பித்ருக்களுக்கு ( முன்னோர்களுக்கு )
ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுக்க மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் கொடுத்தால் அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுத்த பலன் வந்து சேரும்.

மகாளயபட்ச காலத்தில் என்ன செய்ய வேண்டும் :

மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்வோம்.

முன்னோர்கள் மறைந்த தமிழ் மாத திதியில்
ஸ்ரார்த்தம் ( தெவசம் ) கொடுப்போம்.

ஆனால் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி முதல் அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒட்டு மொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும்.

தீர்த்த கரைகளுக்கு ( கடல் ; ஆறு ) சென்று
புனித நீராடி முன்னோர்கள் ஆத்ம சாந்திக்கு
பிரார்த்தனை செய்து வர வேண்டும்.

அந்தணர்களுக்கு வஸ்திரதானமும் ; ஏழைகளுக்கு அன்னதானமும் ;
படிக்க சிரமப்படும் ( பொருளாதார நிலையில் ) மாணவ ; மாணவியர்க்கு வித்யாதானமும் அளிக்க வேண்டும்.

நமது பாரத தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும்
முந்தைய வரலாறை கூட தெரிந்து வைத்திருக்கும் பலர் தங்கள் மூதாதையரின் ( முன்னோர்கள் ) மூன்று தலைமுறைகளுக்கு
முன்பு உள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.

அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது
குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர்
பெயர்களை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும்.

அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் ஸ்ரார்த்தம் ; தர்ப்பணம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

பித்ருக்கள் ( முன்னோர்கள் ) பெயர்கள் :

தந்தை - பிதா
தாய் - மாதா

தாத்தா ( அப்பாவின் அப்பா ) - பிதாமஹர்
பாட்டி ( அப்பாவின் அம்மா ) - பிதாமஹி

அப்பாவின் தாத்தா - பிர பிதாமஹர்
அப்பாவின் பாட்டி - பிர பிதாமஹி

தாத்தா ( அம்மாவின் அப்பா ) - மாதாமஹர்
பாட்டி ( அம்மாவின் அம்மா ) - மாதாமஹி

அம்மாவின் தாத்தா - மாது பிதாமஹர்
அம்மாவின் பாட்டி - மாது பிதாமஹி

அப்பாவின் தாத்தாவின் அப்பா - பிதா பிர பிதாமஹர்
அப்பாவின் தாத்தாவின் அம்மா - பிதா பிர பிதாமஹி

அம்மாவின் தாத்தாவின் அப்பா - மாது பிர பிதாமஹர்
அம்மாவின் தாத்தாவின் அம்மா - மாது பிர பிதாமஹி
 
Back
Top