*எனக்கு வந்ததை தங்களுக்கு அனுப்பி உள்ளேன்.* அனைவருக்கும் அநேக நமஸ்காரம்! அடியேன்
அ. சம்பத்குமார் ஐயர் (புரோகிதம்)
காரைக்கால் - 609605.நிகழும் சாருவாரி வருடம் புரட்டாசி மஹாளய அமாவாசை திதி புரட்டாசி முதல் தேதியும் புரட்டாசி கடை தேதியும் அமாவாசை வருகிறது. நீ. 28 (பாம்பு பஞ்சாங்கத்தில்) புரட்டாசி முதல் தேதி ( 17/09/2020) வியாழக்கிழமை அமாவாசை என்று குறிப்பிட்டு உள்ளது. ஆனால் சிரார்த்த காலத்தில் சூன்யம் என்று இருக்கிறது. புரட்டாசி 30 ஆம் தேதி(16/10/2020) வெள்ளிக்கிழமை அன்று சிரார்த்த திதி அமாவாசை சர்வ அமாவாசை என்று இருக்கிறது. பொதுவாக நானறிந்த வரையில் சிரார்த்த திதியில் சூன்யம் என்று வருமாயின் அவற்றில் பிதுர்கர்மா செய்யக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று பிதுர்கர்மா என்பது அமாவாசை தர்ப்பணமும் அவற்றில் அடக்கம். ஆனால் மஹாளய பட்ஷம் தொடக்கம் ஆவணி 17 ஆம் தேதி (02/09/2020) செவ்வாய்கிழமை என்று இருப்பதால் அன்றிலிருந்து பிதுர் கர்மாவை அனுஷ்டிப்பவர்கள் தொடந்து பதினைந்து நாள் ஆவணி மாதத்தில் இருக்கலாமா? அல்லது புரட்டாசி மாத பௌர்ணமியிலிருந்து மஹாளய பஷத்தை அனுஷ்டிக்கலாமா என்பது எனது வினா.? அந்தணர் பெரியவர்கள் இதனை சரியாக சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.