பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை

Status
Not open for further replies.
(இறுதிப் பகுதி)
வெண்டலை யேந்தியே வேல்விழி யாரிடம் வேண்டினனே
பண்டொரு நாள்தனில் பார்த்தனுக் கீந்தனன் பாசுபதம்
தண்டலை யார்மலர் தாங்குத லைதனில் ஆறிழிய
வெண்பொடி கொண்டருள் மேனியன் வெண்ணியில் மேவினனே. ... 9

[வெண்டலையேந்தியே = பிச்சாடனார் கோலத்தில் பிரமனின் தலையோட்டை ஏந்தியே; தண்டலை = சோலை]

சுருதியைத் தள்ளியே சூனியம் பேசிடும் சூதுநெறி
தருவது வாழ்வினில் தக்கதி லையெனத் தள்ளுவராய்
வருவினை வீட்டிடும் வள்ளலின் பூங்கழல் வாழ்த்திடுவோர்
வெருவினை நீக்கவே வெண்ணியில் மேவினன் வித்தகனே. ... 10

[வீட்டுதல் = அழித்தல்; நீக்குதல்]

நினைவுறின் வல்வினை நீங்கிடும் இல்லையேல் நீளுமென
வினவுசம் பந்தரின் விண்டுரை யுள்வரின் வீழலிலை
அனலுறும் கண்ணனை அப்பரும் பாடிய தார்ந்துளத்தில்
வினயமாய் வாழ்த்திட வெண்ணியின் வேந்தனாய் மேவினனே. ... 11

--ரமணி, 09/10/2014

*****
 
விரிஞ்சிபுரம் (கரபுரம், வேலூர் அருகே)
(வஞ்சி விருத்தம்: விளம் விளம் காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.112.1 இன்குர லிசைகெழும் யாழ்முரலத்)

கோவில்
Margabandeeswarar Temple : Margabandeeswarar Margabandeeswarar Temple Details | Margabandeeswarar - Virinjipuram | Tamilnadu Temple | ??????????????????
http://www.kamakoti.org/tamil/Vrinji.htm
கரபுரம் கோயில் தலபுராணம்-Karapuram Temple Sthala Puranam
Bala Jothidar: ??????? ??? ?????? ?????? ????????????? - Virinjeepuram
Visit to Virinchipuram Margabandeeswarar Temple | Raju's Temple Visits

பதிகம்
அப்பர்: 6.007.07 தெண்ணீர்ப் புனற்கெடில
??????? ???????? ???????? ????????

காப்பு
விரிமுடி காண்கிலா விரிஞ்சனுக்கே
திருமுடி காட்டிய திருத்தனமர்
விரிஞ்சையை வரிகளில் விரித்திடவுன்
கருணையை வேண்டினேன் கணபதியே.

[விரிஞ்சன் = பிரம்மா; திருத்தன் = தூய்மையானவன், கடவுள்;
விரிஞ்சை = விரிஞ்சிபுரம்]

பதிகம்
திருமுடி காண்கிலாத் திசைமுகனே
அரியதோர் சிறுவனாய் அவதரித்தே
விரிஞ்சையில் பூசைனை மேவிடவே
திருமுடி சாய்த்தருள் செய்பரமே. ... 1

வணிகருக் கருளினன் வழித்துணையாய்
அணங்கவள் மரகத அம்பிகையாம்
இணையிலி ஆயிரத் தெண்லிங்கம்
வணங்கியே விரிஞ்சையில் வாழ்த்துவமே. ... 2
 
ஆளிமு கத்தொரு நடபாவி
கோளறு தீர்த்தமாய்க் குழவிதரும்
தாளியே கோவிலின் தலவிருட்சம்
மேளனப் பண்ணொலி விரிஞ்சையிலே. ... 3

[ஆளி = சிங்கம்; நடபாவி = படியுள்ள கிணறு;
தாளி = பனைமரம்; மேளனம் = இசைக்கருவிகளின் சுருதியியைபு]

கல்லணைச் சிற்பமும் கலையழகே
மெல்லணை மாவுரி மேனியனாய்ச்
சொல்லணைத் துதிசெயும் சோதியனே
வில்லணைக் காப்பென விரிஞ்சையிலே. ... 4

[மெல்லணை = சட்டை; மாவுரி = யானையின் தோல்]
 
நப்புணர் பாவலர் நால்வருடன்
அப்பைய தீட்சிதர் அருணகிரி
மப்பற வழிசொலும் வாரியரும்
மெய்ப்புரும் தரிசனம் விரிஞ்சையிலே. ... 5

[நப்புணர் = நைப்பு + புணர் = நம்மைப் புணரும்;
மப்பு = மயக்கம், செருக்கு; மெய்ப்பு = நிரூபணம்]

விரிசடை விடையவன் விழிநுதலான்
திரிபுரம் தீய்த்தவன் திருமிடற்றன்
அரிவையி டம்கொளும் அஞ்செழுத்தன்
விரிஞ்சையில் வீற்றருள் வீரணனே. ... 6
 
காமனைக் கரந்தனன் கண்ணழலான்
பாமரன் பரவிடும் பாம்பரையன்
சோமனை உச்சியிற் சூடிநின்றான்
வீமரு தண்பொழில் விரிஞ்சையிலே. ... 7

[வீமரு = மலர் மணம்]

விலங்கலை யிலங்கையின் வேந்தனுமை
கலங்கிடப் பெயர்க்கவே கால்விரலால்
உலங்கென நசுக்கிய உமைகூறன்
விலங்கினை நீக்குவன் விரிஞ்சையிலே. ... 8

[விலங்கல் = மலை; உலங்கு = கொசு, புழு]
 
(இறுதிப் பகுதி)
தன்றலை அயனரி தாள்காணா
வன்னியாய் நின்றனன் வான்தொட்டே
கொன்றைய ணிந்திடும் குழற்சடையன்
வென்றிய ருள்வனே விரிஞ்சையிலே. ... 9

[தன்றலை = தன்+தலை; வன்னி = நெருப்பு; வென்றி = வெற்றி]

பிறையணிப் பிஞ்ஞகன் பேரொளியாய்ப்
புறச்சம யங்களிற் புக்குழலா
தறநெறி மறைவழி தாங்குவரின்
வெறுமையை நீக்குவன் விரிஞ்சையிலே. ... 10

இம்மையும் மறுமையும் ஈர்த்திடவே
மும்மலம் முக்குணம் மூழ்குமுயிர்
அம்மையப் பன்கழல் அண்ணிநின்றால்
வெம்மையும் விரிஞ்சையில் விலகிடுமே. ... 11

[வெம்மை = கோபம், ஆசை]

--ரமணி, 17-22/10/2014

*****
 
திருக்குறும்பலா (குற்றாலம்)
(வஞ்சித்துறை: திருவிருக்குறள் அமைப்பில்: மா காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.93.1 நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
??????? ???????? ???????? ????????)

கோவில்
Kuttralanathar Temple : Kuttralanathar Kuttralanathar Temple Details | Kuttralanathar - Kuttralam | Tamilnadu Temple | ????????????
http://ta.wikipedia.org/wiki/குற்றாலம்_குற்றாலநாதர்_கோயில்
???? ??????????????!: ???????????? - ???????????????.

பதிகம்
சம்பந்தர்: 2.71 திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
??????? ???????? ???????? ????????

காப்பு
வல்லப கணபதியே
நல்விதம் பாடவருள்
வல்வினை தீர்ப்பவனின்
கல்லுறும் குறும்பலவை. ... [கல் = மலை]

பதிகம்
திரிகூ டமலைமேல்
குறுமா முனியாலே
பெருமாள் சிவனானார்
அருள்வார் குறும்பலவே. ... 1

குழல்வாய் மொழியாளே
குழகன் மனையாளாம்
அழகே பராசக்தி
பொழில்சூழ் குறும்பலவே. ... 2

லிங்கப் பலாச்சுளையாய்த்
தொங்கும் தருவடியில்
கங்கைச் சடையோனே
தங்கும் குறும்பலவே. ... 3

அருவித் தீர்த்தத்தில்
சரும நோய்போமே
சிரநோ வும்தைலம்
சரியாம் குறும்பலவே. ... 4

வல்லன் கணபதியாம்
வில்லன் வேலவனாம் ... [வல்லன் = வல்லவன்; வில்லன் = வில்லேந்தியவன்]
நல்லோர் நலம்சேர
எல்லைக் குறும்பலவே. ... 5

சங்கு வடிவத்தில்
அங்க ணன்கோவில்
பொங்கும் நீர்வீழ்ச்சி
தங்கும் குறும்பலவே. ... 6

சித்ர சபைதன்னில்
தத்ரூ பம்காணில்
சத்ரு பயமில்லை
அத்தன் குறும்பலவே. ... 7

தசமு கன்சாய
அசுரர் புரமெரியப்
புசகம் அணிதேவன் ... [புசகம் = பாம்பு]
இசையும் குறும்பலவே. ... 8

அயன்மால் அறியாதே
வியன்கொள் அழலானான்
இயமன் காலுதைத்தான்
பயம்போம் குறும்பலவே. ... 9

மற்றை நெறியாவும்
சற்றும் கொள்ளாதே
சுற்றம் எனநாட
வெற்றிக் குறும்பலவே. ... 10

பெம்மான் புகழ்பாடும்
சம்பந் தர்பதிகம்
தம்முள் கொள்வார்க்கே
இம்மை வினைதீர்வே. ... 11

--ரமணி, 28/10/2014, கலி.11/07/5115

*****
 
களக்காடு (திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ள தலம்)
(அறுசீர் விருத்தம்: காய் காய் காய் காய் மா தேமா)

கோவில்
Kalakad (Thenkalakkudi) Temple - களக்காடு (தென்களக்குடி) கோயில் தலபுராணம்
Sri Sathya Vageeswarar Temple, Kalakkad
Kalakad village improvement, temple rennovation and educational promotion service
Welcome to our Kalakkad: ???????? ????? ????????? ?????????????
https://www.youtube.com/watch?v=H5KO3uXKBLo

காப்பு
களக்கா டுறையும் அனிக்கைவிக் னேச!
வளம்பல கொண்ட வயல்சூழ் தலத்தின்
நலம்பல பாட்டில் நவிலற் கருள்வாய்
வலம்வந்தே வேண்டு வனே.

பதிகம்
உருதோன்றி லிங்கமென சத்தியவா கேசுவரர்
. ஊரின் தந்தை
மருதோன்றி யிலைச்செம்மை மேனியள்கோ மதியம்மன்
. மாந்தர் தாயாம்
கரிதோன்றி உதவிடவே குறமகளை மணம்செய்த
. கந்தன் சேயாம்
கரிமுகனும் அனிக்கைவிநா யகனென்றே அருள்செய்யும்
. களக்கா டாமே. ... 1

நம்மனதைக் கவர்பவனாய் நவநீதக் கண்ணனென
. நாமம் இங்கே
தம்மனதே சிவமான அறுபத்து மூவரையும்
. தாங்கும் கோவில்
எம்மனதும் எட்டாதே எருதேறி எம்பெருமான்
. மேவும் ஊராம்
கம்மெனவே மணம்சூழும் பொழிலாரும் மலைசூழும்
. களக்கா டாமே. ... 2
 
வான்சூழும் கோபுரமாம் வயல்சூழும் மலைசூழும்
. வளமே சூழும்
தேன்சூழும் வண்ணமலர் தினம்சூடி யருள்செய்யும்
. தெய்வப் பெற்றோர்
நானென்றே வாழுயிர்க்கு நமன்சூழா நலம்தந்தே
. நம்மைக் காக்கக்
கான்சூழும் மாவினமும் புள்ளினமும் ஆர்ப்பரிக்கும்
. களக்கா டாமே. ... 3

சிற்பமெலாம் கலையழகில் சொக்கவைக்கும் தலமெனவே
. சிந்தை யாரும்!
அற்பலெமாலாம் அகந்தனிலே அணுகாதே அனுதினமும்
. அரனை யண்ண
தற்பமெலாம் தீயெரித்தே அற்புதமாய் அகம்நிறையும்
. தையல் பாகன்
கற்பகமாம் அன்னையுடன் அருள்செய்யும் ஊற்றென்றே
. களக்கா டாமே. ... 4

[தற்பம் = கருவம், பாவம்]
 
சோரார ணியமொருபேர் சோழகுல வல்லிபுரம்
. ஓர்தொல் பேராம்
போராரும் களமெனவே புகழ்மலியக் கல்வெட்டில்
. புகலும் செய்தி
நீராருங் கடலெழுந்து நிலைகொண்ட நஞ்சுண்ட
. நிமலன் மேவும்
காராரும் மலைசூழக் கழனியெலாம் நெல்விளையும்
. களக்கா டாமே. ... 5

பச்சையாறு தீர்த்தமாகப் பசிதீர்க்கும் நெல்வயலில்
. பசுமை தங்கும்
பிச்சையாறு கொண்டவராய்ப் பிச்சாண்டிக் கோலத்தில்
. பிணியைத் தீர்க்க
இச்சையாற இமயவதி இடம்கொண்டே இகபரத்தில்
. இனிதே ஈயும்
கச்சையகிக் கருமிடற்றான் கண்ணுதலில் கருணைமேவும்
. களக்கா டாமே. ... 6

[கச்சையகி = அரைப்பட்டிகையாகப் பாம்பை அணிந்தவர்]
 
தூணெல்லாம் இசையேழு சுரம்வரவே கலையழகில்
. துய்மை வாழும்
ஊணெல்லாம் துய்க்குமுயிர்க் குய்வுதரும் பரம்பொருளே
. உருவம் தாங்கிப்
பூணெல்லாம் மாவுரியும் புலியதளும் அரவுமென்றே
. புனித னாகக்
காணெல்லாம் திரண்டுவந்து கலிதீர்க்கும் தலமெனவே
. களக்கா டாமே. ... 7

[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு; காண் = காட்சி, அழகு]

சயிலமதைக் கொளமுயன்ற தானவனைத் தாள்சடையன்
. தரைய ழுத்த
மயலறவே யாழிசைத்தே மாவரக்கன் போற்றிடவே
. வாள்-நாள் தந்தான்
மயிலியவள் இடமிருக்க மலமறுத்தே மைதிகழும்
. மாமி டற்றன்
கயிலையினில் வீற்றருளும் கண்ணுதலான் கண்ணுறவே
. களக்கா டாமே. ... 8

[சயிலம் = மலை; வாள்நாள் = வாளும், வாழ்நாளும்; மயிலி = மயில் போன்ற பெண்]
 
(இறுதிப் பகுதி)

மாலவனும் தாள்தேட மலரவனும் முடிதேட
. அழலாய் நின்றான்
மூலவனின் நகையோட முப்புரமமும் எரியோட
. மூளி யாமே
பாலவனாய்ப் பசுபதியாய்ப் பாசமறச் செய்வோனின்
. பாதம் பற்ற
காலனவன் தாளுதைத்தே காத்தருள மேவுதலம்
. களக்கா டாமே. ... 9

[பாலவன் = பால்வண்ணமான சிவன்]

ஆரணத்தை யொப்பாத அறநெறியாய்ப் பலவுள்ள
. இற்றை நாளில்
காரணத்தே வாழுநெறிக் கவர்ச்சியிலே கண்மூடிக்
. கலியில் வீழ்வோர்
மாரணத்தை வென்றிடவே மறைபோற்றும் மருந்தீசன்
. மனதில் கொள்ளக்
காரணத்தைக் காரியத்தைக் காட்டியருள் கடவுளுறைக்
. களக்கா டாமே. ... 10

[ஆரணம் = வேதம்; காரணத்தே = கார் + அணத்தே = இருள் மேலோங்கவே;
மாரணம் = மரணம்]

அஞ்செழுத்தன் அருட்கூத்தன் அவிர்சடையன் அயிற்சூலன்
. ஆழி யார்ந்த
நஞ்சழுத்தும் நீலகண்டன் நாரியிடம் கொண்டவனாய்
. நன்மை செய்தே
நெஞ்சழுத்தும் நீள்வினைகள் நீங்கிடவே பிறவியறும்
. நெறிதந் தானை
கஞ்சனத்தின் ஒலியழுத்தக் காதாரும் பண்வழுத்தும்
. களக்கா டாமே. ... 11

[கஞ்சனம் = கைத்தாளம்]

--ரமணி, 08-15/11/2014, கலி.29/07/5115

*****
 
கச்சித் திருவேகம்பம் (காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில்)
(கலிவிருத்தம், திருக்குறுந்தொகை அமைப்பில்)

[முதற்சீர் மாச்சீர்; இரண்டின் முதலில் நேரசை;
அதன்பின் வரிக்குள் வெண்டளை; பொழிப்பு மோனை;
முதற்சீர் நேரெனில் அடிக்கு 11 எழுத்துகள்; நிரையெனில் அடிக்கு 12 எழுத்துகள்.]

கோவில்:
Ekambara Nathar Temple : Ekambara Nathar Ekambara Nathar Temple Details | Ekambara Nathar- Kanchipuram | Tamilnadu Temple | ???????????? (??????????????)
??????????? ??????? - ???????????? ???????????? : ( ?????????? - ????????????????? ) : kamakoti.org:

பதிகம்
சம்பந்தர்: 3.41: கருவார் கச்சித் திருவே கம்ப
??????? ???????? ???????? ????????

ஒற்றை மாமரம் ஓங்கத் தலைமிசை
கற்றைக் கூந்தல் கனலாய் விரிவனின்
புற்றுப் பாம்பணிப் பொற்கழல் ஏத்துவர்
கற்றார் பாமரர் கச்சியே கம்பனே. ... 1

ஒருமா வின்கீழ் உறையும் அரையனின்
உருமா லென்பதோ ஒண்மதி யோர்நதி
கருமாக் கல்லாய்க் கழுத்தினுற் காளமாம்
கரிமாத் தோலணி கச்சியே கம்பனே. ... 2

[அரையன் = அரசன்; உருமால் = தலைப்பாகை; கருமாக்கல் = கரிய, அழகிய இரத்தினம்
கரிமா = யானையின் பெரிய தோல்]
 
கைலா யத்தினில் கண்ணுத லான்தவம்
காலா தீதனின் கண்மறை நாயகி
ஏலா தென்றவன் ஈசன் விதிக்கவே
பாலாற் றுத்தலம் பற்றினாள் கம்பமே. ... 3

மாந்தி யின்கீழ் மணலுரு செய்தவள்
ஏந்தும் நோன்பினை ஏற்றருள் ஈசனும்
காந்தல் தீரவே கங்கைய னுப்பவே
காந்த ளாள்-அணை கச்சியே கம்பனே. ... 4

[மாந்தி = மாமரம்; காந்தல் = வெம்மை; காந்தளாள் = காந்தள் மலர் போலிருப்பவள்]
 
வளைத்த ழும்புறும் மண்ணுரு லிங்கமாய்
வளைதிங் கள்முடி வாய்த்திடும் ஈசனார்
முளைக்கும் தீவினை முற்றுமுன் தீய்த்தருள்
களைகண் கண்ணுதல் கச்சியே கம்பனே. ... 5

[களைகண் = பற்றுக்கோடு]

முலைத்த ழும்புறும் முக்கணன் லிங்கமே
குலையா தாயின் குழைந்தருள் செய்திடும்
சிலையைத் தன்னுடல் சேர்த்தவன் செங்கணன்
கலவும் ஊரெனக் கச்சியே கம்பமே. ... 6
 
அலையார் கேசம் அழலார் விழியனாய்
நிலையார் உள்ளம் நிறைந்தருள் செயவே
தொலையாக் கேடும் தொலைந்திடும் வாழ்வருள்
கலையார் சேகரன் கச்சியே கம்பனே. ... 7

[நிலையார் உள்ளம் = உறுதி நிறைந்த மனம்]

அரக்கன் மாமலை யாட்டத் திருவிரல்
நெருக்கிச் சாய்த்த நிமலன் கழலிணை
உரத்துப் பற்றுவோர்க் குற்றான் எனவரும்
கருத்தன் மேவிடும் கச்சியே கம்பமே. ... 8

[உரத்து = இறுக; கருத்தன் = தலைவன், கடவுள்]
 
(இறுதிப் பகுதி)

அன்ன மாகியே அந்தணன் சேகரம்
பன்றி யாகிப் பரந்தா மனும்கழல்
என்றும் காணா எரியென் றெழுந்தவன்
கன்மம் தீர்த்தருள் கச்சியே கம்பனே. ... 9

வேதம் ஒப்பிலா வேறுவ கைநெறி
யாதும் ஒப்பிலா யாரும் அரன்புகழ்
ஓதும் மந்திரம் உள்வரின் காணுவர்
காதல் மேவிடக் கச்சியே கம்பனை. ... 10

நால்வர் பாடிய நான்மறை யாளனே
பால்வெண் ணீறன் பகவன் பரமனாம்
சூல்கொள் ஆவிச் சுடராம் வியோமமாம்
கால்மண் தீயெனும் கச்சியே கம்பனே. ... 11

[வியோமம் = ஆகாயப் பெருவெளி; கால் = காற்று]

--ரமணி, 07-13/12/2014

*****
 
திருவீங்கோய்மலை
(அறுசீர் விருத்தம்: தேமா கூவிளங்காய் கூவிளம் கூவிளம் தேமா புளிமாங்காய்
நட்டபாடைப் பண் கட்டளை: தான தானதன தானன தானன தானா தனதானா
தோடு டையசெவி யன்விடை யேறியொர் தூவெண் மதிசூடி -- சம்பந்தர்)

கோவில்
Maragadachaleswarar Temple : Maragadachaleswarar Maragadachaleswarar Temple Details | Maragadachaleswarar- Eengoimalai | Tamilnadu Temple | ??????????????
?????????????? ??????, ?????????????? - Maragathaleswarar Temple, Tiruveengoimalai

பதிகம்
சம்பந்தர்: 1.70 வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் மத்த மலர்சூடி
??????? ???????? ???????? ????????

காப்பு:
வல்லபவி நாயகநின் வண்ணமுளம் வந்தேயென்
சொல்லுடன் ஓசையும் தொய்வின்றி - வல்லாள்
இடம்வைத் தருளிய ஈங்கோய் மலையான்
நடம்பாடச் செய்வாய் நலம்.

பதிகம்
ஈசன் மேவியருள் சன்னிதி மூடிட .. ஈயாய் உருமாறி
ஏச றும்முனிய கத்தியர் ஏத்திட .. ஈங்கோய் மலையாகும் ... ... [ஏசறும் = வருத்தமுறும்; ஆசைப்படும்]
வாச மாமலரி னையணி அன்னையை .. வாமத் திருமேனி
வாசம் வைத்தருளும் ஏழுல காள்பவன் .. வாழும் தலமாமே. ... 1

ஆதி சேடனொடு வாயுவும் போட்டியில் .. ஆடும் விளைவாக ... ... [வாயுவரன் = வாயுதேவன்; ஞாட்பு = போர்]
ஈது தேவனது பைம்மணி லிங்கமென் .. றீங்கோய் மலையாகும்
ஆதி தேவியுரு பைம்மணி வல்லியென் .. றாமோர் பெயராகும் ... ... [பைம்மணிவல்லி = மரகதவல்லி]
பாதி மேனியுருப் பெண்ணென வானவன் .. பாதம் பணிநெஞ்சே. ... 2
 
சத்தி பீடமிது முப்பதி னேழினில் .. சாயா தலமாகும் ... ... [முப்பதினேழு = 3x17 = 51]
இத்த லத்துமரம் சுந்தரர் ஏசிய .. இந்தத் தருவாகும் ... ... [இந்தத்தரு = புளியமரம்]
எத்த னத்திலுயர் சாதனை யோங்கிட .. ஈங்கோய் மலைவாழும் ... ... [எத்தனம் = யத்தனம் = முயற்சி]
செத்த மேனியெரி வெண்பொடி பூசிய .. சீலன் கொளுநெஞ்சே. ... 3

கொற்ற வையிருவர் சாந்தமும் கோபமும் .. கொள்ளும் உருவென்றே
சுற்றில் ஆறுமுகன் ஐங்கரன் மாலவன் .. சூழ்ந்தே அருள்செய்ய
இற்றென் றாருமனம் எண்ணிட வொண்ணலன் .. ஈங்கோய் மலைவாழும் ... ... [இற்றென்று = இன்ன தன்மையது என்று]
சிற்ப ரன்கழலி ணைதினம் நாடியே .. சேர்வாய் உளைநெஞ்சே. ... 4
 
வெற்பு மீதிலுறை வெண்மதி யன்தலம் .. வேண்டில் சிலவென்றே
இற்று வீழவினை இல்லறம் ஓங்கிட .. ஈங்கோய் மலைவாழும்
சிற்ப மாவுருவில் அம்மையும் அப்பனும் .. சிந்தை தனில்வாழ
அற்ப வாழ்விதனை விண்ணுல கென்றிடும் .. ஆசை விடுநெஞ்சே. ... 5

தானு வந்தகணம் ஆடக நாணயம் .. தாதன் தரவேதான்
ஈனல் வேண்டியதை சுந்தரர் இத்தலம் .. ஈங்கோய் மலைநாட
ஈனல் இன்றியரன் இந்தம ரந்தனில் .. இங்கே மறைந்தாட
ஆன நேர்வதனில் சுந்தரர் வெய்துற .. யாதும் மரமில்லை. ... 6
 
சீறும் பாம்பணியன் செஞ்சடை யாறுளன் .. செம்பொற் கழலேதான்
ஊறு நாடிசெலும் மேனியும் உள்ளமும் .. உய்யும் வழியென்றே
ஏறு மீதுசெலும் ஏழுல கேத்திடும் .. ஈங்கோய் மலைமேவும்
நீறு பூசியருள் நெற்றியிற் கண்ணுறும் .. நித்தன் நினைநெஞ்சே. ... 7

வெள்ளி மாமலையை வேட்டவ ரக்கனின் .. வீங்கு தலைபத்தும்
தள்ளி பூமிதனில் தாள்விர லாலவன் .. தாடை கொளும்தாளை
எள்ளி டையெனினும் எண்ணும னந்தனில் .. ஈங்கோய் மலைமேவும்
கள்ள னென்றுகொளும் காவலில் உள்ளுறும் .. கள்ளம் பறிபோமே! ... 8
 
(இறுதிப் பகுதி)

மாலும் நான்முகனும் மாறிலி தாள்தலை .. வான்கொள் அழல்தன்னில்
காலும் கையுமுளை நாடலிற் கண்ணுற .. லாகா துருவென்றே
ஏல முன்னனென இன்னருள் செய்தவன் .. ஈங்கோய் மலைமேவும் ... ... [ஏல முன்னன் = மிகவும் முற்பட்டவன்]
நீல கண்டனவன் நெஞ்சகம் நின்றிட .. நீங்கும் வினைதானே. ... 9

தேரர் சைனருடன் மேலைம தம்பல .. தீர்வா மிதுநாளில்
வேரின் காட்சியுறும் நேர்வழி சொல்வது .. வேதன் மதமென்றே
ஈரி தழ்மலரும் கொன்றைய ணிந்தவன் .. ஈங்கோய் மலையானே
காரி ருள்மயலின் மும்மலம் நீக்கிடும் காப்பாய் நினைநெஞ்சே. ... 10

காழி யன்னைதரு பாலமு துண்டுகங் .. காளன் புகழ்பாடும்
ஏழை நந்தனனை ஞானியென் றாக்கிய .. ஈங்கோய் மலையானே
ஆழி யாம்பிறவி நீந்துபு ணையெனும் .. ஆன்றோர் நெறிகொண்டே
வாழும் நாளதனில் புண்ணியம் சேர்த்திடும் .. வண்மை பெறுநெஞ்சே. ... 11

--ரமணி, 01-07/01/2015, கலி.22/09/5115

*****
 
10341994_1528181797441738_8505716857955871325_n.jpg
 
திருவேட்களம் (சிதம்பரம் அடுத்து)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

கோவில்
Pasupatheswarar Temple : Pasupatheswarar Pasupatheswarar Temple Details | Pasupatheswarar- Tiruvetkalam ? Chidambaram Town | Tamilnadu Temple | ?????????????
????????????? ??????, ???????????? - Paasupatheswararr Temple, Thiruvetkalam

பதிகம்
சம்பந்தர்: அந்தமுமாதியு மாகியவண்ணல்
??????? ???????? ???????? ????????
அப்பர்: நன்று நாடொறும் நம்வினை போயறும்
??????? ???????? ???????? ????????

காப்பு
வேட்களம் நின்றருள் வேழ விநாயக!
பாட்டினில் பாசுபதப் பட்டனைப் பாடிட
நாட்டம் கொளுமென்சொல் நல்வித மாகவே
ஆட்கொண் டருள்தரு வாய்.

[பட்டன் = சுவாமி, கடவுள்]

பதிகம்
பாசுபதம் விழைந்தவனாய்ப் பார்த்தனவன் தவம்செய்ய
ஆசுபதம் வேடனென அவதரிக்க, வனத்தில்மூ
காசுரனின் பன்றியுரு கணையால்பார்த் தனும்கொல்லப்
பூசலினை மேற்கொண்ட புண்ணியனூர் வேட்களமே. ... 1

[ஆசுபதம் = பற்றுக்கோடாய் விளங்கும் பாதம்]

தற்பரையும் சினங்கொண்டாள் தனஞ்சயன்வில் லாலடிக்கச்
சற்குணாநீ சினமறுத்தே தள்ளிநிற்பாய் என்றவீசன்
பொற்பதத்தால் அருச்சுனனைப் பொய்கையிலே எறிந்துபின்னர்
பற்குணனுக் கருள்செய்த பரமன்வாழ் வேட்களமே. ... 2

[தற்பரை = உமாதேவி; சற்குணா = இத்தலத்தில் அம்பாள் பெயர்]
 
Status
Not open for further replies.
Back
Top