• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை

Status
Not open for further replies.
(இறுதிப் பகுதி)

வேத னாடலை வேழ மைந்தனில்
பாத கிண்கிணி யாக மாடவே ... [ஆகம் = உடல்]
ஊதும் கோபத் தூர்வ மாமுனி ... [ஊதும் = பெருத்திடும்]
காத மூர்ந்தே கண்ட தில்லையே. ... 9

[தூர்வாச முனிக்காகத் தில்லைக் கற்பக விநாயகர் தன் தந்தையின் நடனத்தை
ஆடிக் காட்டியதாக வரலாறு.
NATARAJA DEEKSHIDHAR: ??????? ??????????? ??? (??)??????

போதன் கூறெனும் பூவன் வாழையும்
மாத வன்புகழ் வாழை மொந்தையும்
பேத மில்சிவன் பேயன் வாழையும்
வேத நாயகர் மேவும் பேரிலே. ... 10

[பிரம்மனின் அம்சமாகப் பூவன் வாழையும், விஷ்ணுவின் அம்சமாக மொந்தை (முகுந்த) வாழையும்,
சிவனின் அம்சமாகப் பேயன் வாழையும் கருதப்படுவதன் பின்னுள்ள கதை இங்கே:
http://natarajadeekshidhar.blogspot.in/2010/09/blog-post_20.html]

பஞ்ச பூதமும் அஞ்சு மன்றமும்
அஞ்சு சுற்றென அஞ்சு கோசமும்
அஞ்செ ழுத்தினன் ஆகும் தில்லையைத்
தஞ்ச மாக்கொள அஞ்சை வெல்லலாம். ... 11

விளக்கம்:
பஞ்ச பூதங்களின் தில்லை ஆகாயத் தலம்; கோவிலின் ஐந்து பிரகாரங்கள்
உயிரின் ஐந்து கோசங்களைக் குறிப்பன (அன்ன, மனோ, பிராண, விஞ்ஞான ஆனந்த கோசங்கள்);
அஞ்சை வெல்லுதல் = ஐந்து புலன்களை அடக்கியாளுதல்.

--ரமணி, 05/05/2014

*****
 
திருமழபாடி
(கலித்துறை: விளம் தேமா விளம் தேமா புளிமாங்காய்)
(’நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே(று)’--சம்பந்தர் தேவாரம் - 1.98.1)

கோயில்:
Vaidyanathaswami Temple : Vaidyanathaswami Temple Details | Vaidyanathaswami - Thirumazhapadi | Tamilnadu Temple | ????????????
??????????????? ??????, ?????????? - Vajrathampanathar Temple, Thirumazhapadi
temple for getting married Archives - Temples of Tamilnadu

நந்திகல் யாணம் செய்தவோர் கோவில் நலம்பாடச்
சுந்தரர் பாடல் விரும்பிய ஈசன் துதிபாட
வந்தருள் செய்தே விந்தையோர் கோவில் மழபாடிச்
சுந்தரப் பிள்ளை யார்துணை நிற்க விழைவேனே. ... 1

நரமுக மாவும் அயனுறை லோகத் தரன்லிங்கம் ... [நரமுக மா = புருடாமிருகம்]
உரமுடன் நன்றாய்த் தாபனம் செய்ய உறைந்தானே
மருத்துவன் ஈசன் கொள்ளிடம் பாயும் மழபாடி
உருவினில் வைரத் தூணென அப்பர் பதிகத்தே. ... 2
 
மழவரின் பாடி யாயுறப் பேராம் மழபாடி
வழுத்திய மார்க்கண் டேயருக் காடல் மழுவாடி
அழலுறும் மேனிப் பற்றினை நீக்க மழபாடி
எழுலுற மேவி அருள்செயும் ஈசன் இடமாமே. ... 3

பொன்னுறு மேனிப் புலியதள் ஆடைப் பரஞ்சோதி
அன்னையைப் பக்கல் கொண்டருள் ஈசன் அழலாடி
மன்னுற நின்றே மன்பதை காக்கும் மழபாடி
இன்னல கற்றி இன்புறச் செய்யும் இறையாமே. ... 4
 
இந்திரன் காளி இலக்குமி தேவர் திருமாலும்
சந்திரன் வீமன் அகத்தியர் செட்டி சவிதாவும் ... [செட்டி = முருகன்; சவிதா = சூரியன்]
வந்தனை செய்த திருத்தலம் இந்த மழபாடி
வந்துறும் பாவ வினையெலாம் போக வழுத்தோமோ? ... 5

இடமுறு அன்னை இருவுரு தாங்கும் எழிற்கோலம்
விடையவன் முன்னே இருவராய் நந்தித் திருமேனி
மடமகள் தம்மை மணங்கொளும் நந்தி மழபாடி
படைப்பவன் வேதம் நால்வகை நந்திப் படையாமே. ... 6 ... [படைப்பவன் = பிரம்மன்]
 
அரிவரன் முன்னே அழலென நின்றான் அழலாடி ... [அரிவரன் = திருமால், பிரம்மன்]
எரியுணச் செய்தே முப்புரம் செற்றான் எருதேறி
வரைகொளும் தீய அரக்கனை வீழ்த்தும் மழபாடி
அரனுருக் காண அடியவர் வாழ்வில் அலம்போமே. ... 7

மலரவன் நேரே நந்தியர் நால்வர் மறைநான்காம் ... [மலரவன் = பிரம்மன்]
நலம்விளை நாதன் நேர்குழி மூன்றும் நவக்கோளாம்
வலமிடம் எங்கும் நந்தியைக் காண மழபாடித்
தலமதில் பாவம் குன்றிட ஈசன் அருட்சேர்வே. ... 8 ... [சேர்வு = திரட்சி, ஒன்றுசேர்கை]

(இறுதிப் பகுதி)

கறையணிக் கண்டன் காச்சிலாப் பொன்னன் மறைகொள்வான்
பிறையணிக் கேசம் இரைநதித் தாங்க மலர்கொள்வான்
அறைபொருள் காணாச் சதுரனாய் ஊராம் மழபாடி
உறைபொருள் சம்பந் தர்சொலில் போற்ற உயிரேறே. ... 9 ... [ஏறு = உயர்வு]

நீறுடை மேனிக் கூறுறும் மாதொ டெருதேறி
ஆறுறும் கேசன் அலைகடல் நஞ்சை அமுதுண்டான்
வாறுறும் அர்த்தச் சாறுடை அத்தன் மழபாடி ... [வாறு = அடையத்தக்க பேறு]
வேறறக் கொண்டே அப்பராய் வேண்ட வினைபோமே. ... 10

மாறுசொல் தர்மத் துழல்பவர் வேடம் இனங்காண்பார்
பேறெனக் கூத்தன் அருள்செயும் மேன்மை யறங்கொள்வார்
மாறிலி மெய்யன் மேவிடும் கோவில் மழபாடி
நீறனைப் போற்றி ஊறற வாழ்வர் நலமோடே. ... 11

--ரமணி, 17/05/2014, கலி. 03/02/5115

*****
 
கருவூர் அமர் கல்யாண பசுபதி
(கலிவிருத்தம்: மாங்கனி கூவிளம் கூவிளம் தேமா)
(முதல் மூன்று சீர்களின் ஈற்றில் குறில்/குறிலொற்று)

(’நீறார்தரு மேனியன்’--சம்பந்தர் தேவாரம் 2.35.5)

கோவில்
Kalyana pasupatheeswarar Temple : Kalyana pasupatheeswarar Temple Details | Kalyana pasupatheeswarar- Karur | Tamilnadu Temple | ??????????????????

பதிகம்
??????? ???????? ???????? ????????

கணபதி வாழ்த்து
வானர்பசு பால்பொழி வாலரன் போற்றத்
தானாபதி யென்றபே ராலுறை தேவன்
கோன்சீர்த்தியைப் பாவினில் கொள்ளவ ருள்வாய்
கானார்கரு வூரமர் கண்ணுதல் மைந்த!

[கான் = காடு, பூ; தானாபதி = தான்+ஆபதி = தான் பசுபதி;
’வெள்ளி மலையம ராபதி’--திருமூலர் திருமந்திரம் 353]

கண்ணான்நுதல் மான்கரன் தண்மதிக் கேசன்
பெண்ணாலிடம் சீர்த்தவன்* பித்தனின் தாளை
நண்ணாதவர் எங்ஙனம் நன்மைகள் கொள்வர்
அண்ணாகரு வூரமர் ஆலமர்ந் தானே. ... 1

[* தொழில் ஏதுமற்ற சிவன் சக்தியின் அருளால்தான்
ஐந்தொழில் புரிவதால் அவன் ’பெண்ணாலிடம் சீர்த்தவன்’.]

பேயோடவன் ஆடுவன் பிஞ்ஞகன் சன்ம
நோய்தீர்க்கவன் ஞானியின் நோன்பினில் வைப்பன்
பாய்வீழ்ந்திடும் மேனியின் பற்பமும் கொள்ளும்
காயன்கரு வூரமர் கண்ணுத லானே. ... 2

[பிஞ்ஞகன் = அழிப்பவனாகிய சிவன்;
பற்பம் = பஸ்பம் = சாம்பல்; காயன் = உடலினன்]
 
பனியார்வரைப் பார்வதி பங்கினன் ஞானக்
கனியாயொரு சேயவன் காதலன் மேகக் ... [காதலன் = மகன்]
கனியாய்மழை பெய்பவன் காரணன் மோனத்
தனியாய்க்கரு வூரமர் தத்துவன் தானே. ... 3

பஞ்சாட்சர மந்திரப் பால்வணன் வாழ்வில்
எஞ்சும்வினை தீர்த்திடும் எண்குணன் தன்னைத்
தஞ்சம்கொளும் மாந்தரைத் தாயெனப் பேணும்
மஞ்சன்கரு வூரமர் மானிடன் தானே. ... 4

[மஞ்சன் = மைந்தன் (வலியவன்/வீரன்;
மானிடன் = மானை இடக்கையில் கொண்டவன்)]
 
வண்டார்குழல் பத்தினி வாழ்முதல் ஞானச்
செண்டாய்மனம் ஈர்த்திடும் செம்பொருள் மோனத்
தண்டாயொரு ஆலமர்த் தத்துவன் நஞ்சை
உண்டான்கரு வூரமர் உத்தமன் தானே. ... 5

[வாழ்முதல் = வாழ்வுக்கு முதற்காரணனான கடவுள்]

அழலாயெழு சோதியின் கால்சிரம் தேடிக்
கழல்வீழ்ந்தயன் மாலுடன் கண்ணுறச் செய்தான்
குழல்சூடுவன் மத்தமும் கொன்றையும் சாந்தக்
குழகன்கரு வூரமர் கூத்தபி ரானே. ... 6 ... [குழகன் = இணங்குபவன்]
 
தாளாலவன் காலனைத் தள்ளினன் ஆழிக்
காளந்தனை யுண்டவன் காளையன் நெற்றி
வாள்கொண்டவன் மன்மதன் மாய்த்தனன் ஞான
வேளன்கரு வூரமர் வேதியன் தானே. ... 7 ...

[காளம் = நஞ்சு; வேளன் = குயவன், வேளாளன்]

தலையால்மலை பேர்த்தவன் தானவன் தாளாங்
குலியாலவன் சென்னிகள் குன்னிடச் செய்தான்
பலிகொண்டவன் பத்தரின் பாவினில் உள்ளக்
கலிகொள்கரு வூரமர் உத்தமன் தாளே. ... 8

[தானவன் = அரக்கன், இங்கு இராவணன்;
தாளங்குலி = தாள்+அங்குலி = கால்விரல்; குன்னுதல் = சிறுத்தல்]
 
(இறுதிப் பகுதி)

புரமூன்றவர் தானவர் ஊறுகள் மேரு
சரபேச்வரர் கொண்டவன் சாய்த்தனன் மத்தச்
சிரமீதினில் கங்கையும் இந்துவும் சூடும் ... [இந்து = சந்திரன்]
அரனேகரு வூரமர் ஆரணன் தானே. ... 9

வேதந்தரு வாழ்வது வீணென மிச்சை ... [மிச்சை = அஞ்ஞானம்]
வாதந்தரு வோரது வாய்மொழி தள்ளிப்
பாதந்தனைப் பற்றிடும் பத்தரைப் பேணும்
சீதன்கரு வூரமர் சேட்சியன் தானே. ... 10

[சீதன் = குளிர்ந்தவன்; சேட்சியன் = மனம் எட்டாத் தொலைவில் உள்ளவன்]

தணலார்நுதல் ஈசனின் தண்ணொளித் தாளே
புணையென்றுசம் பந்தரும் போற்றினர் நல்ல
குணமார்ந்திட வேணியன் கோவருள் வானே
திணமாய்க்கரு வூரமர் தில்லையன் தானே. ... 11

--ரமணி, 30/05/2014, கலி.16/02/5115

*****
 
திருக்கானூர்
(கலிவிருத்தம், திருக்குறுந்தொகை அமைப்பில்)

[முதற்சீர் மாச்சீர்; இரண்டின் முதலில் நேரசை;
அதன்பின் வரிக்குள் வெண்டளை; பொழிப்பு மோனை;
முதற்சீர் நேரெனில் வரிக்கு 11 எழுத்துகள்; தந்தேஇயெனில் வரிக்கு 12 எழுத்துகள்.]

கோவில்:
Semmeninathar Karumbeswarar Temple : Semmeninathar Karumbeswarar Temple Details | Semmeninathar Karumbeswarar- Thirukanur | Tamilnadu Temple | ?????????????

பதிகம்
சம்பந்தர்: 1.73: ??????? ???????? ???????? ????????
அப்பர்: 5.76: ??????? ???????? ???????? ????????

அழலாய் நின்றவன் அன்னைக் கருள்செய்தான்
தழற்செம் மேனியன் தண்ணார் பிறைசூடி
கழல்மின் பாதம் கடிதே வினைகொள்ள
உழல்தல் நீங்க உறைபவன் கானூரே. ... 1

வேதத் தீர்த்தமாம் வில்வம் தலமரம்
பேதம் தீர்ப்பவள் அன்னை சவுந்தரி
பாதம் தீர்த்திடும் பாவம் பவரோகம்
நாதன் வாழ நலந்தரும் கானூரே. ... 2
 
கரிகாற் சோழற் கரிமலர்த் தார்சூட
பரசு ராமரின் பாவ மகன்றிட
அருத்த நாரியன் அத்தன் அருள்செய்தே
கரும்பாய் மேவினன் கான்நிறை கானூரே. ... 3

அரசர் பிள்ளையின் பாடற் றலமாகும்
உரியோன் நாயகி ஒற்றுமை சீராகும்
திரும ணம்பெற்றோ ராகும் தகவுறும்
கரும்பீ சன்கடைக் கண்ணருட் கானூரே. ... 4

[அரசர் = திருநாவுக்கரசர்; பிள்ளை = ஆளுடைப் பிள்ளையாம் சம்பந்தர்.]
 
வானார் சோதியர் மானேர் உமையுடன்
தானார் வானதி தேனார் மலருடன்
மானார்ந் தில்லா மணல்மே டுகந்தவர்
தானாய் மேவும் தலமது கானூரே. ... 5

[மானேர் = மான் நிகர்த்த; தானார் வானதி = தானே வந்து தங்கிய கங்கை;
வானார், மானேர், தானார், தேனார் சொற்கள் சம்பந்தர் பதிகத்தவை.
மானார்ந்தில்லா = மனிதர் நிறைந்து இல்லாத.]

பாற்கோள் நஞ்சுணக் கார்மிட றாயினன் ... [கோள் = கடல்]
கூற்றைச் சாய்த்தே குமரனைக் காத்தனன்
காற்றாம் மூச்சுறும் கூற்றாம் மொழிவகை
ஏற்றம் கொள்ள வெழுந்தனன் கானூரே. ... 6
 
கூனற் கீற்றினன் கூறொரு மாதினன்
வேனல் நீறணி வெண்வரை வேந்தனாய்க்
கானில் ஆடியே காத்தருள் காரணன்
தேனர் என்றே திளையுரு கானூரே. ... 7

தசகண் டன்மலை தூக்கிய தோள்களை
விசையாய்ச் சாய்த்த விரலுறும் தாளிணை
உசவ லொன்றே உயர்வழி யென்றவன்
இசையாய் நின்ற இடமது கானூரே. ... 8
 
(இறுதிப் பகுதி)
அயனரி தாடலைக் காணா அழலன் ... [தாடலை = தாள், தலை]
வயமாக் கால்முனி அங்கத முனியும்
இயக்கம் காணவே தில்லையில் ஆடுவன்
நயந்தே நன்மை யருட்டலம் கானூரே. ... 9

இற்றை நாளில் இயல்பினை யீர்த்திடும்
மற்றை நெறிகளின் மாயை யுணர்ந்தே
புற்ற றாவணி புகழ்பர வோரின்
சுற்றம் என்றவன் சூழ்தலம் கானூரே.... 10

கானூ ரீசனை வானவர் வேந்தனை
ஊனு ருக்கியே உள்ளொளி தந்துநற்
றேனாய்ப் பெய்வோன் திருவருள் நாடவே
தான்வீ ழன்பில் தழைக்கும் அகமே. ... 11

--ரமணி, 15/06/2014

*****
 
திருப்பழனம்
(வஞ்சித்துறை: திருவிருக்குறள் அமைப்பில்: மா புளிமாங்காய்)

கோவில்:
http://temple.dinamalar.com5/New.php?id=959

பதிகம்
சம்பந்தர்: வேதமோதி, 1.67
அப்பர்: சொன்மாலைபயில் 4.12; ஆடினார் ஒருவர் 4.36;
மேவித்துநின்று 4.87; அருவனாய் 5.37; அலையார் 6.36.

விழிமேல் விழிகொண்டான்
சுழிமேல் நதிகொண்டான்
மொழிமே லிசைகொண்டான்
பழமேற் பழனத்தே. ... 1

[சுழி = உச்சி; பழமேல் = பழமை இயலுகின்ற]

சித்தம் தெளிவாகும்
வித்தும் புலனாகும்
நித்தம் வழிபட்டால்
அத்தன் பழன்த்தே. ... 2

நீரார் சடையோனைப்
பாரோர் புகழ்வோனைச்
சேரா தவர்யாரோ
சீரார் பழனத்தே. ... 3

அழலாய் மலரோன்மால்
கழல்மேற் றலைகாணார்
கழுவாய்க் கனலேந்தி
உழியாம் பழனத்தே. ... 4

[கழுவாய் = தீர்வு, பிராயச்சித்தம்; உழி = இடம்]

மலையைப் பெயர்த்தானின்
தலையை அயர்த்தானே
கலையை யணிந்தானே
நிலையாய்ப் பழனத்தே. ... 5

ஒளியின் நிறமானான்
வளியின் வலுவானான்
களியின் உருவானான்
அளியன் பழனத்தே. ... 6

[அளியன் = அன்புடையான், அருளுடையான்]

இந்தீ வரநீராழ்
செந்தீக் கரத்தானே
நந்தீச் வரர்மேலா
டுந்தேன் பழனத்தே. ... 7

[இந்தீவர நீராழ்: இந்தீவரம் = கருங்குவளை:
ஈசன் விடமுண்டதும், தட்சனிடம் அவமானப்பட்டதும், பிரம்ம கபாலத்துடன்
பிட்சாடனராக அலைந்ததும், ஒரு சமயம் கருங்குவளைக் குளத்துள்
ஏழரை நாழிகை மறைந்திருக்க நேர்ந்ததும் சனியின் தாக்கம் என்று சொல்லுவர்:
http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=11895]

புரந்தீய்ப் பெருமானே
மருந்தீச் வரனாவான்
கரந்தே அருள்செய்வான்
இருந்தே பழனத்தே. ... 8

மங்கை யொருகூறன்
கங்கை நதிசூடன்
சங்கை யறுத்தாள
இங்கே பழனத்தே. ... 9

[சங்கை = ஐயம், அச்சம்]

கடிவோர்க் கடினன்தான்
அடியார்க் கடியன்தான்
விடமார்க் கருங்கண்டன்
தடமார் பழனத்தே. ... 10

[தடம் = பெருமை; நீர்நிலை]

அப்பர் திருநாவும்
ஒப்பி லிசேய்நாவும்
செப்பும் பதிகத்தி
ருப்பான் பழனத்தே. ... 11

[ஒப்பிலி = சிவபிரான்]

--ரமணி, 02/07/2014

*****
 
திருவைகாவூர்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் 2.46.1, ’பாலூறு மலைப்பாம்பும் ப்௭அனிமதியு மத்தமும்’)

கோயில்:
Vilvavaneswarar Temple : Vilvavaneswarar Temple Details | Vilvavaneswarar- Tiruvaikaavoor | Tamilnadu Temple | ??????????????

பதிகம்:
சம்பந்தர்: கோழைமிட றாககவி, தேவாரம் 3.07.1

கல்லுருவாய் வாசலிலே கனிசித்தி கணபதியே!
பல்வகையில் சிறப்புறுமிப் பாழியைநான் பரவுதற்கே
ஒல்லுநராய் அருள்செய்ய உள்நிற்கும் உனைக்கேட்டேன்
வில்வவனம் வைகாவூர் வீற்றிருக்கும் கணபதியே. ... 1

[ஒல்லுநர் = நண்பர், ஆற்றலுடையவர்]

நெடுமால யன்காவல் நின்றருளும் தலமிதுவே
பிடிகோலைத் தாங்கிநிற்கும் பிஞ்ஞகன்தெக் கணமூர்த்தி
விடையோன்முன் வால்காட்டி வீற்றிருக்கும் நந்திகேசன்
வடிவேலன் சிலையுருவில் வைகாவூர் அற்புதமே. ... 2
 
அன்னைவளைக் கரத்தாளின் அற்புதமோ வேறுவிதம்!
இன்னதென்று வேண்டிநின்றால் பேசியவள் அருள்செய்வாள்!
பின்னைவரும் பிரளயத்தில் பிழைத்துநிற்க வேதமெலாம்
மன்னிநிற்கும் வில்வமரம் வைகாவூர்த் தலத்தினிலே. ... 3

வேடனவன் உணர்விலாது வில்வத்தால் அர்ச்சிக்க
வேடனுக்கே அருள்செய்து வேங்கையிடம் தப்புவித்தே
வேடனையும் இறையாக்கும் வேணியலங் காரசிவன்
வேடமொரு லிங்கமென வைகாவூர் மேவுவரே. ... 4
 
ஒரேகல்லில் திருவாசி ஒகரம்மேல் ஆறுமுகன்
இரேகைக்கை நகமெல்லாம் விழியுறவே நுண்சிற்பம்!
சுரேசன்சேய் அருணகிரிச் சுனைசந்தம் புகழ்தலமாம்
வரூதம்கொள் இறையெனவே வைகாவூர் எழுந்தாரே. ... 5

[திருவாசி = இறையுருவைச் சுற்றியுள்ள வட்டக் கட்டு;
ஒகரம் = மயில்; சுரேசன் = முருகனின் ஒரு பெயர்;
வரூதம் = வசிக்குமிடம்]

திருவிழாவாஞ் சமயத்தில் தீர்த்தவாரி யாடியபின்
திருமூர்த்தி அன்னையுடன் திருவோலை உருக்கொண்டு
திருவோலைச் சப்பரத்தில் இரவினிலே வீதியுலா
வருவோர்க்கு வளம்நல்கும் வைகாவூர்த் திருத்தலமே. ... 6
 
நந்தியவர் தடைசெய்ய நமனவனும் வேடனுயிர்
வந்துகொள முடியாதே வாவிதோண்டி வழிபட்டான்
அந்தவேழு கன்னியரும் சாபநீங்கப் பெற்றனரே
வந்துகாண வளம்சேரும் வைகாவூர்த் தலத்தினிலே. ... 7

ஆழிவரும் நஞ்செல்லாம் அவன்கழுத்தில் கயிலைமலை
ஆழமுயல் வல்லரக்கன் தலைவிதிர்த்தான் அயனரியும்
தாழைமலர் சூடுதலைத் தாள்காணார் பரமனருள்
வாழையெனத் தழைத்திருக்கும் வைகாவூர் திருத்தலமே. ... 8
 
(இறுதிப் பகுதி)

முப்புரமும் மேருவில்லால் மொத்திநின்றான் ஔவையவள்
எப்புறமும் கால்திருப்ப எந்தைநின்றான் நாள்தோறும்
ஒப்புரவு கொள்வோர்க்கே ஒளிதருவான் வினைகளெலாம்
அப்புறப்ப டுத்திடவே வைகாவூர் மேவுவனே. ... 9

வேதநெறி விதிவத்தாய் விளங்குவதில் வேறுசிலர்
பேதமுற்றே மாற்றுநெறி என்போரின் பொய்யுரையைக்
காதுறாதே கயிலைநாதன் காப்பினிலே கட்டுண்டோர்
மேதகத்தில் வாழ்வதற்கே வைகாவூர்த் தரிசனமே. ... 10

சிரபுரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்
தருபதிகம் தினந்தோறும் சாதனையா யோதுபவர்
வருவினையும் இருவினையும் வல்வினையா யாகாதே
மருள்நீக்கி யருள்செயவே வைகாவூர் மேவினனே. ... 11

--ரமணி, 12/07/2014, கலி.28/03/5115

*****
 
015. திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி)
(கட்டளைக் கலிவிருத்தம்)

[முதற்சீர் மா/விளச் சீர்; இரண்டின் முதலில் நேரசை;
அதன்பின் வரிக்குள் வெண்டளை; பொழிப்பு மோனை;
முதற்சீர் நேரெனில் வரிக்கு 11 எழுத்துகள்; நிரையெனில் வரிக்கு 12 எழுத்துகள்.]

கோவில்:
Magudeswarar Temple : Magudeswarar Temple Details | Magudeswarar- Kodumudi | Tamilnadu Temple | ???????????
??????????????? ??????, ?????????????????????? ( ???????? ) - Magudeswarar temple, Kodumudi
???????: ???????? ???????????
Arulmigu Magudeshwarar & Veeranarayanapperumaal Temple, Kodumudi (This Is Only Official Website by TNHRCE)
welcome to magudeshwarar - kodumudi, thrimoorty, thirumangi nachiar, namashivaya pathigani, arumagirinathar,sthala puranam, swaambalinga,sivasthalas, ardhajama pooja, bharadhwaja theertham, brahma theertham, deva theertham, three thousand year old va
?????????????? ????????

பதிகம்
சம்பந்தர்: 2.69: பெண்ணமர் மேனியி னாரும்:
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20690
அப்பர்: 5.81: சிட்டனைச்சிவ னைச்செழுஞ் சோதியை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50810
அப்பர்: 7.48: மற்றுப் பற்றெனக் கின்றி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70480

காவிரி கண்ட கணபதி யென்றன்
ஆவிரித் தேயித் தலம்புகழ் போற்றும்
பாவிரி வையருள் பார்வதி மைந்த
கோவிரிப் பாண்டிக் கொடுமுடி யானே. ... 1

[ஆவிரித்தே = ஆன்மாமை விரியச் செய்தே;
கோவிரி = நீர்/மேன்மை/கதிர்/வானம்/பூமி விரியும்]

காவிரி யெல்லையில் சக்தி மகனாம்
கோவிலுள் நர்த்தனக் கோலம் பெருமாள்
கோவிலில் கால்புலிக் கோலம் எனவே
கோவலம் கொள்வர் கொடுமுடி தானே. ... 2

[எல்லை = கரை; கால்புலிக் கோலம் = வியாக்ரபாத விநாயகர்;
கோவலம் = இறைமேன்மை]
 
அயன்நெடு மாலும் அரியும் இணைந்தே
பயன்நெடு மேவும் பதியுள் உறைந்தே
நயந்திடும் பத்தர் நலம்கொளச் செய்தே
உயர்நெடு கோவில் கொடுமுடி தானே. ... 3

பாரதி யில்லா அந்தணன் மும்முகம்
நீர்நலம் காக்கும் இலையுடன் வன்னி
கோரப் பல்லுறும் கோலம் அனுமனாம்
கோருதல் நேரும் கொடுமுடி தானே. ... 4
 
திருப்பு கழ்ச்சேய்த் திருவுரு இங்கே
திருமால் வீரர் திருமங்கை நாச்சி
திரிபுர மங்கை யிறைவி யின்பேர்
ஒருமை காக்கும் கொடுமுடி தானே. ... 5

கறைசை யானதாம் கண்மாடன் நோயற
அரியின் பேரால் அரிகா புரமென
கருடன் போற்ற அமுத புரியென
பிரமனும் போற்றும் கொடுமுடி தானே. ... 6
 
ஆதி சேடனும் வாயுக் கடவுளும்
மோதிய போதிலே மேருவின் உச்சிக்
காத மாயிரம் ஐந்தாய்ச் சிதறவே
கோதுகத் தோன்றல் கொடுமுடி யாமே. ... 7

[கோதுகம் = உள்ளக்களிப்பு]

நெடுவரை கொள்வோன் நிலத்தில் பதித்தார்
நெடுமால் வேதன் நெருப்பாய் மயக்கினார்
நெடியோ டோங்கிய நஞ்சினை யுண்டவர்
கொடுமுடி யீசராம் குட்டை உருவே. ... 8

(இறுதிப் பகுதி)

காவிரி கீழ்த்திசை மாறும் தலத்தில்
மூவகைத் தீர்த்தமாம் முத்தி தரவே
பாவினில் மூவர் பதிகம் புகழும்
கோவணன் மேவும் கொடுமுடி தானே. ... 9

இற்றை நாளதில் ஈர்க்கும் நெறிகளாம்
மற்றைப் பற்றின் மயலுளம் புக்கிலர்
புற்ற ராவணி பூந்தாள் பணிந்திடில்
குற்றமும் கொள்ளான் கொடுமுடி யோனே. ... 10

மறப்பினும் நாமம் மனமுறும் என்றும்
அறமெனும் தத்துவ நட்டன் எனவும்
கறைவளர் மாமிடற் றாரவ ரென்றும்
குறையறச் சொல்லக் கொடுமுடிக் காப்பே. ... 11

--ரமணி, 19/07/2014, கலி.04/04/5115

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top