பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த நான்காம் அனுபவம் - 1

இறையருள் இருந்தால் வரும் நெடும் பயணம்.
நிறைவாய் மனத்திற்கு மகிழ்வையும் பயக்கும்!

நம் வாரிசுகள் சிறுவராய் இருக்கும் பொழுதில்,
நமக்கு வேலையின் பளு அதிகமாய் இருக்கும்!

அவர்களிடம் விளையாடும் நேரத்திலும் வரம்பு!
அவர்களின் வாரிசுகளுக்கு இல்லை இவ்வரம்பு!

பாச மகனின் இல்லத்தில் அடுத்த வரவு வந்ததும்,
ஆசை பெருகியது செல்லக் குழந்தையைக் காண!

மழை நீர் புகாதிருக்க, வீட்டைச் சுற்றிலும் மேடை
அமைக்கும் பணியும் நிறைவேறியது, விரைவாக!

மத்திய அரசு செய்த சின்ன மாற்றங்களால், எமக்கு
மனக் கவலை குறைந்தது ஏற்பாடுகள் செய்திட!

செல்லுலாப் பேசியும், சமையல் எரி வாயுவும்,
உள்ளபடி இருக்கும்; ஓராண்டு கவலையில்லை!

டிக்கட் வாங்கியாச்சு; இன்ஷூரன்ஸ் எடுத்தாச்சு!
திக்கெட்டும் வியாபிக்கும் சுற்றத்திடம் கூறியாச்சு!

பதினைந்து கிலோவுக்கு மேல் அசைக்க முடியாது!
அதனால் தொப்பைப் பெட்டிகள் என்றும் கிடையாது!

சங்கீத வகுப்பிற்கு டாடா காட்டிவிட்டு, புறப்பட்டோம்
எங்களின் அடுத்த அமெரிக்க விஜயம் செய்வதற்கு!

தொடரும்............ :plane:
 
Nandri

கடல் கடந்த நான்காம் அனுபவம் - 1

இறையருள் இருந்தால் வரும் நெடும் பயணம்.
நிறைவாய் மனத்திற்கு மகிழ்வையும் பயக்கும்!

நம் வாரிசுகள் சிறுவராய் இருக்கும் பொழுதில்,
நமக்கு வேலையின் பளு அதிகமாய் இருக்கும்!

அவர்களிடம் விளையாடும் நேரத்திலும் வரம்பு!
அவர்களின் வாரிசுகளுக்கு இல்லை இவ்வரம்பு!

பாச மகனின் இல்லத்தில் அடுத்த வரவு வந்ததும்,
ஆசை பெருகியது செல்லக் குழந்தையைக் காண!

மழை நீர் புகாதிருக்க, வீட்டைச் சுற்றிலும் மேடை
அமைக்கும் பணியும் நிறைவேறியது, விரைவாக!

மத்திய அரசு செய்த சின்ன மாற்றங்களால், எமக்கு
மனக் கவலை குறைந்தது ஏற்பாடுகள் செய்திட!

செல்லுலாப் பேசியும், சமையல் எரி வாயுவும்,
உள்ளபடி இருக்கும்; ஓராண்டு கவலையில்லை!

டிக்கட் வாங்கியாச்சு; இன்ஷூரன்ஸ் எடுத்தாச்சு!
திக்கெட்டும் வியாபிக்கும் சுற்றத்திடம் கூறியாச்சு!

பதினைந்து கிலோவுக்கு மேல் அசைக்க முடியாது!
அதனால் தொப்பைப் பெட்டிகள் என்றும் கிடையாது!

சங்கீத வகுப்பிற்கு டாடா காட்டிவிட்டு, புறப்பட்டோம்
எங்களின் அடுத்த அமெரிக்க விஜயம் செய்வதற்கு!

தொடரும்............ :plane:

Nandri raji ram
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 2

விடியலுக்குப் பின் விமானம் புறப்படும்; ஆனால்
விடியலுக்குச் சில மணி முன் இனிய இல்லத்தை

விட்டுப் புறப்பட்டோம். அப்போதுதான் நம்மை
விட்டுச் சென்றுவிடாது அந்த ஆகாயப் பறவை!

சப்பைப் பெட்டிகளைச் செக்-இன் செய்த பின்னர்,
சற்று நேரம் எம் அழைப்புக்குக் காத்திருந்தோம்.

இப்போது செய்த பல மாற்றங்களால் - நாங்கள்
அப்போது பார்த்தபடி விமான நிலயம் இல்லை!

எம் விமானம் ஏற அழைப்பு வராததால், சந்தேகம்
எம் மனத்தில் பரவ, என்னவர் சென்று விசாரிக்க,

நாங்கள் அமர்ந்த இடமே தவறானதாம்! பின்னர்
எங்களுடன் பயணிக்கும் மற்றவருடன் அமர்ந்து,

சரியான நேரத்தில் விமானம் ஏறியாச்சு - எமது

சரியாக இருக்கைகளையும் தேடி அமர்ந்தாச்சு!

இள வயதில் அழகான பணிப்பெண்கள் இல்லை!
தளரும் வயதை எட்டும் மங்கையர்தான் அங்கே!

உண்ண முடியாத உணவைத் தராதவரை சரியே!
உள்ளம் மகிழ்விக்க அழகிகள் தேவை இலையே!

காலை நேரப் பயணம் என்றும் இனிதே - நாமும்
கதிரவன் செல்லும் திசையிலே பயணிப்பதால்!

தொடரும்............
6IrPOVA21YdJJq5TSDucOwNHXAyCpbkpPEUoluC5N27CzOSVsW_MbqMjr7ual_y6EQ-Py_NLFP9h7Eis3_AO6AL59ZxFCmpMG7ch=s0-d-e1-ft
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 3

எப்படித்தான் சுவையே இல்லாத சமையலை
எப்போதும் B. A. செய்கின்றதோ, நானறியேன்!

எண்ணையில் ஊறும் காய்கள்; சிவப்பு வண்ண
எண்ணை வழியும் சாம்பார்; வறண்ட தோசை!

ருசித்து உண்ண இயலாத வகைகளே - எனினும்
பசித்து மயங்காதிருக்கச் சிறிதளவு உண்டோம்!

பதினோரு மணி பயணித்தாலும் - அந்த நாட்டு
மதிய நேரத்தில் லண்டனை எட்டிவிட்டோம்!

விமானத்திலிருந்து இறங்கிக் காலாற நடந்து,
விரைவு ஷெட்டிலில் பயணித்து, மீண்டும் ஒரு

செக்யூரிடி செக் முடித்து, அடுத்த விமானத்தில்
சென்று ஏறப் பொறுமையாய்க் காத்திருந்தோம்.

இங்கு ஒரு விஷயத்தை பகிர வேண்டும் - நமது
தங்க நகைகள் செக்யூரிடியில் படும் பாட்டினை!

நம்ம ஊர்ப் பெண்கள் அணிகலன்கள் இல்லாது
நம் நாட்டிலிருந்து செல்லார்! தாலிக் கொடியை

எடுத்து அங்குள்ள ப்ளாஸ்டிக் ட்ரேயில் வைக்க
எப்போது கூறினாலும் நான் மறுப்பதே வழக்கம்!

'எங்கள் கலாச்சாரப்படி எப்போதும் அணியணும்',
என்று உரைத்தால், யோசித்த பின் சம்மதிப்பார்!

தொடரும் .........
6IrPOVA21YdJJq5TSDucOwNHXAyCpbkpPEUoluC5N27CzOSVsW_MbqMjr7ual_y6EQ-Py_NLFP9h7Eis3_AO6AL59ZxFCmpMG7ch=s0-d-e1-ft
 
hi

not much problem in Dubai airport....i used to BA via Heathrow,,,,,but now i hate BA/Heathrow,...emirates are best

many indians in dubai airport with nice indian restaurant in dubai airport....nice day time departure in USA....

nice time arrival/departure from chennai.....rates are very cheap....half price of BA...even nice service with nice

veg food too...
 
Last edited:
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 4

ஆறடி உயரக் கணவருடன் நடந்தால் - வெறும்
ஐந்து இரண்டு உயரத்தில் எப்படிச் செல்வதாம்?

இரு இஞ்சு அதிகம் காட்டும் காலணியை - நான்
விரும்பி அணிவதும் இதனால்தான்! அதனால்

சில முறை எனது காலணி மட்டுமே, சிறப்பான
சின்ன சோதனைக்குச் சென்று வருவதுமுண்டு!

மாசில்லாத சுற்றம் நட்புக்குப் பரிசாக வெள்ளிக்
காசுகளை நான் ஒரு முறை கொண்டு சென்றிட,

நீலக் கண் அதிகாரி, கைப்பையைக் கவிழ்து, ஒரு
நீண்ட தடியால் ஆராய ஆரம்பித்தார்! அதனால்

அதன் பின் இது போல் அசட்டுத்தனத்தை, நான்
அடியோடு விட்டேன்! அதனால் பிழைக்கிறேன்!

அடுத்த விமானம் ஏற அழைப்பு வந்தது; எமக்குக்
கொடுத்த இருக்கைகளில் ஜன்னல் ஓரம் ஒன்று!

ஆதவன் செல்லும் திசையில் பயணம் - அதனால்
ஆதவன் ஒளியில் மேகங்கள் அழகாய் மிளிரும்!

பஞ்சுப் பொதிகளாக, நெட்டுக் குத்தாக, பந்தாக,
நெஞ்சு நிறையக் குதூகலம் அளிக்கும் காட்சிகள்!

சிட்டாகத் திரிய இங்கு இல்லை பணிப்பெண்கள்;
சிரிப்பு அதிகமில்லா நடு வயதினர் இப் பெண்கள்!

தொடரும்............
6IrPOVA21YdJJq5TSDucOwNHXAyCpbkpPEUoluC5N27CzOSVsW_MbqMjr7ual_y6EQ-Py_NLFP9h7Eis3_AO6AL59ZxFCmpMG7ch=s0-d-e1-ft
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 5

செங்கதிரைக் கதிரவன் பரப்ப, மேற்கு திசை
செவ்வண்ணமாய் மாறி மனதினை மயக்க,

கடவுளின் சொந்த நாட்டை, பெருங்கடலைக்
கடந்து நெருங்கியது எமது ஆகாயப் பறவை!

பழகிவிட்டது எமக்கு, இமிக்ரேஷன் சமயம்
வழக்கமாகக் கேட்பதற்குப் பதில் உரைக்க!

'எத்தனை நாட்கள் இந்த நாட்டில் வசித்திட
எண்ணம்?' என்று கேட்ட கேள்விக்கு, எமது

இருவரின் ஒருமித்த குரலில் வந்தது பதில்,
'ஆறு மாதங்கள்!' எப்போதும் இப்படித்தான்!

'உம்மிடம் எத்தனை டாலர்கள் இருக்கிறது?'
எம்மிடம் வந்த கேள்விக் கணைக்கு, சுமார்

நூறு டாலர்கள் இருக்குமென என்னவர் கூற,
'நூறு டாலரில் எப்படி ஆறு மாதம் வாழ்வீர்?'

என்று நக்கலாக அந்தச் சிடுமூஞ்சி அதிகாரி
எங்களை வினவ, வந்த கோபத்தை அடக்கி,

'எங்கள் மகன் வீட்டில் வசிக்கும் சமயத்தில்
எங்களுக்கு என்ன செலவு?' என்று சின்னப்

புன்னகையுடன் கூறிட, அவர் முகத்திலும்
சின்னக் கீற்றாய் ஒரு புன்னகை படர்ந்தது!

தொடரும்............ :car:
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 6

புன்னகை ஒன்றுதான் கோபக்காரனையும்
புன்னகை செய்யத் தூண்டிவிடும் மந்திரம்!

ஆறு மாதங்கள் அந்த நாட்டிலே யாம் தங்க
ஆபீசர் முத்திரையும் கையெழுத்தும் போட,

விரைவில் எம் பாஸ்போர்ட்களை எடுத்து,
விரைந்தோம் பெட்டிகள் வரும் பெல்டுக்கு!

தொப்பைப் பெட்டிகளாய் விழும்போது, எம்
சப்பைப் பெட்டிகளைக் கண்டறிவது எளிது!

சக்கரங்கள் பெயர்ந்து விடாமல், நான்கும்
சடுதியில் வந்து சேர்ந்ததே மிக அதிசயம்!

பாஸ்டனில் ட்ராலிகள், கட்டணம் இல்லாது
பயணிகளுக்குக் கிடைப்பது, நல்ல ஏற்பாடு!

எங்கள் பெட்டிகளை ட்ராலிகளில் அடுக்கி,
எங்கள் மகனைக் காணும் ஆவலுடன் வந்து,

Exit கதவருகில் உள்ள இருக்கைகளில், ஒரு
Excitement மனதை நிறைக்க அமர்ந்தோம்!

பங்குனி பின் பனிக் காலம் இந்தியாவிலே;
பாஸ்டனில் குளிரைக் கேட்க வேண்டுமோ?

ஒரு நிமிடத்தில் இரு ஜாக்கெட்டுகளுடன்
வருகை தந்தான் செல்ல மகன் சிரித்தபடி!

தொடரும்............ :car:
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 7

இனிய வரவேற்பை எமக்கு அளித்துத் தனது
இனிய இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.

புதிய வரவான சின்னச் சிட்டு, தனை மறந்து
இனிய உறக்கத்தில் இருந்தாள், அக்காவுடன்!

அவர்களைக் காணும் ஆவலை மறு நாளுக்கு
அன்று ஒத்திவைத்தோம். பெண்ணரசி நல்ல

சூடான உணவைத் தயாரித்து வைத்திருக்க,
சூடான நீரில் குளித்து, உணவு உண்ட பின்பு

பரிசுப் பொருட்களைப் பிறகு தரலாம் என்று
பழகிய பெட் ரூமில் கண்ணயர்ந்தோம் அன்று.

குளிருக்கு அடக்கமாகக் Comforter இருந்தால்
குளிரே தெரியாத ஆழ்ந்த உறக்கம் வந்திடும்!

நான்கு மணி நேர உறக்கத்தின் பின், வந்தது
நல்ல விழிப்பு; கூடவே காபி குடிக்கும் ஆசை!

அர்த்த ராத்திரி இதைப் போல் பழகிவிட்டால்,
அதுவே Jet lag ஐத் தொடர்கதை ஆக்கிவிடும்!

கொஞ்சம் நீர் அருந்தி வந்த பின்னர், இன்னும்
கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தேன், உறங்காமல்!

மார்ச் மாதக் கடைசி வாரத்தில், சூரிய தேவன்
ஆறரை மணிக்குத்தான், எழுவான் இந் நகரில்!

தொடரும் ..........
 
hi

this nice time to visit boston....last week end NFL game....the new england team PATRIOTS won the final...i heard that

nice celebration in boston...
 
திருமணம் ஒன்றில் பங்கேற்க
ஒரு பயணம் வந்துவிட்டதால்,

அடுத்த இடுகைகள் தொடரும்
அடுத்த வாரத் துவக்கத்தில்! :)
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 8

ஆதவன் உதிப்பதும் மறைவதும் என்றும் என்
ஆவலைத் தூண்டும், காமராவில் பதித்துவிட!

பெரிய ஹாலின் கண்ணடி ஜன்னல் வழியாக
சூரிய உதயத்தைப் படம் எடுத்தேன், அழகாக!

இளம் சிட்டுக்கள் எழுந்து வந்து எமைக் கண்டு
மனம் மகிழ்ந்து சிரிக்க, எம் உச்சி குளிர்ந்தது!

பெட்டியில் இருந்த பொம்மைகளை எடுத்துச்
சுட்டித்தனத்துடன் விளையாடத் துவங்கினர்.

வாரிசுகளைக் காணும் மகிழ்ச்சி, அவர்களின்
வாரிசுகளைக் காணும்போது, இரட்டிப்பாகும்!

குளிர் தேசத்தில் பிறந்ததால் அவர்களுக்குக்
குளிர் அதிகம் உறைப்பதே இல்லை! ஆனால்,

சிங்காரச் சென்னையில் வெந்து பழகியதால்,
அங்குள்ள குளிரின் தாக்கம் எமக்கு அதிகம்!

நடைப் பயிற்சியை மிக விரும்பும் என்னவர்
உடையில், ஜாக்கெட்டும் இருக்கச் செய்தேன்!

எங்கள் காலனிக்குள்தான் சுற்றி வரணும் என
என்னவருக்கு உபதேசமும் செய்துவிட்டேன்!

சென்ற முறை Hit and run விபத்திலே சிக்கிய
என்னவரின் அனுபவம் பசுமையாய் உள்ளதே!

தொடரும் ...

 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 9

'பனி மழையில் அளைய விழையும் என் ஆசை
இனி நிறைவேறுமா?' என எண்ணிய பொழுது,

பனிப் பொழிவு பற்றிய செய்தி வந்து, மனதில்
இனிமை பரப்பியது நிஜம்! ஏப்ரல் துவக்கத்தில்

சின்ன ஒரு பனிப் பொழிவும் வந்தது; ஆனால்
என்னால் பனி மனிதனைச் செய்ய இயலாதே!

இறை அருள் இருந்துவிட்டால், நம் ஆசைகள்
நிறைவேறும் அல்லவா? வந்தது ஒரு செய்தி!

மீண்டும் ஒரு பனிப் புயல் பாஸ்டன் நகரினில்
கொண்டு வரும் மிகுந்த பனிப் பொழிவினை!

நான்தான்ஆவலுடன் காத்திருந்தேன்! ஆனால்
தான் சுத்தம் செய்ய வேண்டியதை நினைத்து

என் மகன் புலம்பினான்! ஒருவரின் மகிழ்ச்சி
எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்திடுமா, என்ன?

தெர்மல் உள்ளாடைகள் அணிந்து அதன் மேல்
நார்மல் உடைகளும் அணிந்துகொண்டு, நான்

பனி மழையிலே நனைந்து மகிழ்ந்தேன்! அந்த
பனி நிறைந்தது நிலத்திலும், மரங்களின் மீதும்!

வெண்மைப் போர்வையாகப் பனி கூரைகளில்;
மென்மைப் பஞ்சாக ஆறங்குலம் முற்றங்களில்!

தொடரும் .......... :smow:

 
Back
Top