கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 109
பாஸ்டன் நகரில் செய்தது போன்று, X Ray எதிரிலே,
பாதுக்காப்பு சோதனையில் நாட்டிய Pose இல்லை!
கோட்டு, ஸ்வெட்டர், வாட்ச், காலணிகள் இன்ன பிற
போட்டு, அந்தப் பெட்டியைத் தள்ளச் சொன்னார்கள்!
கெடுபிடி அதிகம் இல்லாது சோதனைகள் முடிய, ஒரு
விடுதலை கிடைத்தாற்போல Gate அருகே வந்தோம்.
அடுத்த விமானம் ஏற இன்னும் ஒரு மணி நேரம்தான்;
கிடைத்த வசதியான இருக்கைகளிலே அமர்ந்தோம்.
விமானம் ஏற அழைப்பு வர, வரிசையில் சென்று நின்று,
விமானம் ஏறச் செல்லும் வழியில், ஒரு அதிகாரி வந்து
வழிமறித்தார்! வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க, மனதில்
வழிந்த பயத்தை மறைத்துச் சிரித்தேன்! முறைத்தவாறு,
'தங்களுடன் எத்தனை டாலர்கள் கொண்டு செல்கின்றீர்?'
எங்களிடம் கேட்க, 'இருநூறுக்குள் இருக்கும்' என்றேன்.
செல்லலாம் என்று வழிவிட்டார்; விரைவில் நகர்ந்தோம்!
உள்ளே மூவர் அமரும் வரிசை; எனது, ஜன்னல் இருக்கை.
இடப்புறம் அமைந்ததால், வட திசை கண்களில் காணும்!
எடுத்தேன் காமராவை; என் படப்பிடிப்புத் தொடங்கணும்!
விமானங்கள் நிமிடத்திற்குப் பல இறங்கி ஏறுவதால், எம்
விமானம் நகர்ந்து, மேலேற, வரிசையில் காத்து நின்றது;
தூரத்தில் சென்ற விமானம், இந்த விமான இறக்கையின்
ஓரத்தில் ஒட்டியது போல ஒரு கோணத்திலே தெரிந்தது!
தொடரும்....................